Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல்-டி-குன்கா வரலாறு போற்றும் ஒரு தீர்ப்பை வழங்கி இருக்கின்றார். தண்டனை பெற்றவர் மேல்நீதிமன்றத்தில் முறையீடு செய்து கொள்ளலாம். ஆனால், நேற்றைய தினம் தமிழகம் முழுவதும் ஆளும்கட்சியான அண்ணா தி.மு.க.வினர் அராஜக வன்முறையில் இறங்கினர், கடைகளை உடைத்து நொறுக்கினர், பேருந்துகள்- வாகனங்களைத் தாக்கித் தீவைத்துக் கொளுத்தினர். வணிக நிறுவனங்கள் கற்களை வீசிப் பொருள் சேதம் ஏற்படுத்தினர். ஒரு பாவமும் அறியாத பொதுமக்கள் மிகுந்த துன்பத்துக்கு ஆளாகினர். இவை அனைத்தையும் காவல்துறையினர் கைகட்டி வேடிக்கை பார்த்த அநீதியும் நிகழ்ந்தது. குற்றங்களுக்குத் துணைபோனது. முதல் அமைச்சர்தான் …

  2. ரூ130 கோடி அபராதத்துக்காக போயஸ் தோட்டம் வீடு, கோடநாடு எஸ்டேட் உட்பட 211 சொத்துகள் முடக்கம்! சென்னை: ஜெயலலிதாவின் சென்னை போயஸ் தோட்டம் வீடு, கோடநாடு தேயிலைத் தோட்டம் உட்பட மொத்தம் 211 சொத்துகளை ரூ130 கோடி அபராதத்துக்காக முடக்கி வைக்க பெங்களூரு தனிநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையுடன் ரூ100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கும் 4 ஆண்டு சிறைத் தண்டனையுடன் தலா ரூ10 கோடி (ரூ30) அபராதம் விதிக்கப்பட்டது. இத்தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்: அரசுத் தரப்பில் வருமானத்துக்கு அதிகமாக ரூ66.65 கோடி சொத்து குவித்ததாக கூறப்பட்டது. ஆனால் ரூ53 க…

  3. விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்க கோரியும். தமிழக தமிழர்களை “Tamil Chauvinist groups” என குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் மொழி இன உணர்வுடன் செயல்படும் தமிழர்களை “தமிழின வெறியர்கள்” என்ற பொருள்படும்படி இந்த அரசாணை கண்டித்தும். நீதிபதி திரு.மிட்டல் அவர்களே திரும்பிப்போ என முழங்கும் உரிமை எழுச்சி போராட்டம் ஒன்று நேற்று நடை பெற்றது. பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் தடை நீட்டிப்பு தொடர்பான அரசாணை தீயிட்டு எரிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட தமிழ்த்தேச மக்கள் கட்சி செந்தமிழ்க்குமரன் தலைமையிலான தமிழ்த்தேச மக்கள் கட்சியினர் 35 பேர் சென்னையில் கைது செய்யப்பட்டனர். http://www.pathivu.com/news/34155/57/35/d,article_full.aspx

  4. தியாக தீபம்' தீலீபன் அவர்களின் நினைவு நாளான இன்று தமிழ் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கூட்டமைப்பை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் ஹரிஷ் ,ராகவன், மதன் ஆகியோர் கல்லூரி வளாக விடுதியில் ஒரு நாள் உண்ணாவிரதத்தை இன்று மேற்கொண்டனர். http://www.pathivu.com/news/34137/57//d,article_full.aspx

  5. அனைத்துலக ரீதியிலான தியாகதீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 27வது நினைவு வணக்கம் இன்று நடை பெறுகிறது. அந்தவைகையில் இன்று (26-09-2014) கலை 9.00 மணிமுதல் மாலை 5.00 மணி வரை சென்னை செங்கொடி அரங்கம் கோயம்பேட்டில் தமிழக மாணவர்களால் அடையாள உண்ணா நோன்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை 8 மணிக்கு சென்னை செங்கொடி அரங்கதிற்கு மாணவர்கள் மற்றும் உணர்வாளர்கள் உண்ணா நோன்பு இருபதற்க சென்று இருந்தனர். மாணவர்கள் நினைவு வீரவணக்க நிகழ்விற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்த வேளை காலை 8.30 மணியளவில் அரங்கத்திற்குள் நுழைந்த தமிழக காவல்துறையினர் அங்கிருந்த மாணவர்களையும் அவர்களுக்கு ஆதரவாக இருந்த தமிழுணர்வாளர்களையும் கைது செய்து அருகில் உள்ளவெங்கடேசுவரா திருமண மண்…

  6. அனைத்துலக ரீதியிலான தியாகதீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 27வது நினைவு வணக்கம் இன்று நடை பெறுகிறது. அந்தவைகையில் இன்று (26-09-2014) கலை 9.00 மணிமுதல் மாலை 5.00 மணி வரை சென்னை செங்கொடி அரங்கம் கோயம்பேட்டில் தமிழக மாணவர்களால் அடையாள உண்ணா நோன்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை 8 மணிக்கு சென்னை செங்கொடி அரங்கதிற்கு மாணவர்கள் மற்றும் உணர்வாளர்கள் உண்ணா நோன்பு இருபதற்க சென்று இருந்தனர். மாணவர்கள் நினைவு வீரவணக்க நிகழ்விற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்த வேளை காலை 8.30 மணியளவில் அரங்கத்திற்குள் நுழைந்த தமிழக காவல்துறையினர் அங்கிருந்த மாணவர்களையும் அவர்களுக்கு ஆதரவாக இருந்த தமிழுணர்வாளர்களையும் கைது செய்தனர். கைது செய்து தற்போது சென்னை கோயம…

  7. நேற்று மாலை பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா கிளம்பி சென்றுள்ள நிலையில் அவருக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. நாளை ஐநா சபையில் மோடி உரையாற்ற உள்ளார். இன்று ஜெர்மனில் தங்கி அங்கு ஓய்வெடுத்தப் பின்னர் நியூயார்க் புறப்படுகிறார். இந்நிலையில் குஜராத்தில் அவர் முதல்வராக இருந்த போது நடைப்பெற்ற கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் தொடர்பான வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அமெரிக்க நீதிமன்றம் மோடிக்கு சம்மன் அனுப்பியுள்ளது. கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் 59 இஸ்லாமியர்கள் கொலை செய்யப்பட்டனர். இதுத் தொடர்பாக நடைப்பெற்ற கலவரத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பலியானார்கள். இது நடைபெற்றபோது குஜராத் முதல்வராக மோடி இருந்தார் என்பதால், கலவரத்துக்கு காரணம் மோடிதான் என்று கு…

  8. 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் பல்லாயிரகணக்கான தமிழர்கள் திரண்டு மாபெரும் தமிழர் நீதிப் பேரணி தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு ஏற்பாட்டில் நடை பெற்றுக்கொண்டு இருக்கிறது. நீதிப் பேரணிக்கு மக்கள் திரளாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இருந்து மக்கள் வந்து கொண்டுள்ளனர் .மேலதிக தகவல் விரைவில் தொடரும் .... (facebook)

  9. அனைத்துலக ரீதியிலான தியாகதீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 27வது நினைவு வணக்கம் நாளை நடை பெறுகிறது. அந்தவைகையில் நாளை (26-09-2014) கலை 9.00 மணிமுதல் மாலை 5.00 மணி வரை சென்னை செங்கொடி அரங்கம் கோயம்பேட்டில் தமிழக மாணவர்களால் அடையாள உண்ணா நோன்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. http://www.pathivu.com/news/34094/57//d,article_full.aspx

  10. 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் தமிழர் பேரணி! நாள்: செப்டம்பர் 24, 2014 பேரணி தொடங்கும் இடம்: இராஜரத்தினம் விளையாட்டரங்கம் எதிரில், எழும்பூர், சென்னை நேரம்: மாலை சரியாக 3 மணி பேரணி நிறைவடையும் இடம்: மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து, நடராசன் மாளிகை எதிரில், எழும்பூர், சென்னை. மத்திய அரசை வலியுறுத்தும் 5 அம்ச கோரிக்கைகள்; 1. இனப்படுகொலையாளன் ராஜபக்சேவை ஐ.நா. மன்றத்தில் பேச அனுமதிக்காதே! : 2. இந்திய அரசே! ஐ.நா. மனித உரிமை ஆணைய புலனாய்வு விசாரணைக் குழுவை இங்குள்ள ஈழத் தமிழரிடம் விசாரணை செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்! 3. சிங்களப் படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்து!. வங்கக் கடலில் பாரம்பரிய மீன்பிடியை மீட்டுக் கொடு! …

  11. கள்ளை போதைப் பொருள் என நிரூபித்தால், ரூ.10 கோடி பரிசு வழங்குவதாக உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்களுக்கு தமிழ்நாடு கள் இயக்கம் சவால் விடுத்துள்ளது. தமிழ்நாடு கள் இயக்க அமைப்பின் ஆலோசனைக் கூட்டம், தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எம்.மாரப்பன் தலைமையில் கரூரில் நேற்று நடந்தது. தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்ல சாமி முன்னிலை வகித்தார். பின்னர், கள் இயக்க ஒருங்கி ணைப்பாளர் செ.நல்லசாமி செய்தியாளர்களிடம் கூறியது: கேரள அரசு படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த முடிவெடுத்தது. இதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த வழக்கில், கள்ளுக்கு ஏன் தடை விதிக்கவில்லை என்று உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மதுவிலக்கு மற்றும் மதுக் கொள்கையை ஆய்வ…

  12. சென்னையில் நடைபெறவிருக்கும் தியாகதீபம் திலீபனின் நினைவு வணக்கம் மற்றும் உண்ணாநோன்பு காலம்: செப்டெம்பர் 26 நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இடம்: மெமோரியல் ஹோல், பாரிமுனை சென்னை -01 தொடர்புகளுக்கு: தியாகதீபம் திலீபன் நினைவு உண்ணாநோன்பு நிகழ்வுக்குழு 9003170934, 9092391484 (Facebook: loyolahungerstrike)

  13. கொட்டும் மழையில், சுழன்றடிக்கும் காற்றில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழாவை பூந்தமல்லியில் நடத்தி அரசியல் சூறாவளியில் பெருத்த சலனத்தை ஏற்படுத்தி இருக்கிறார் வைகோ! பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15-ம் தேதி தமிழகத்தின் ஏதாவது ஓர் ஊரில் மாநாடாக நடத்தும் வழக்கத்தை ம.தி.மு.க வைத்துள்ளது. இந்த ஆண்டுக்கான விழா திருவள்ளூர் மாவட்டத்துக்கு உட்பட்ட பூந்தமல்லியில் ஏற்பாடு செய்யப்பட்டது. அக்கட்சியின் மாவட்டச் செயலாளரான டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் பிரமாண்ட ஏற்பாடுகளைச் செய்திருந்தார். தேர்தல் தோல்விக்குப் பிறகு நடக்கும் மாநாடு என்பதால் கட்சிக்காரர்கள் இதனை உன்னிப்பாக எதிர்பார்த்து இருந்தார்கள். அதேநேரத்தில், வைகோ உடல்நலக் குறைவு காரணமாக இரண்டு முறை மருத்துவமனைக்குச் சென்…

  14. உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை. சுந்தரபாண்டியபுரம் பேருராட்சி தலைவர் தேர்தல்அதிமுக வேட்பாளர் பண்டாரம் முன்னிலை ராமநாதபுரம் நகர்மன்றத்தலைவர் தேர்தல் அதிமுக வேட்பாளர் வெற்றி உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிமுக முன்னிலை: தொண்டர்கள் கொண்டாட்டம் ராமநாதபுரம், விருத்தாசலம், அரக்கோணம், கடலூர் நகர்மன்ற தேர்தல் - அதிமுக வேட்பாளர்கள் முன்னிலை சென்னை 35 வது வார்டு அதிமுக வேட்பாளர் வெற்றி திருச்சி 15 வது வார்டு அதிமுக வேட்பாளர் 5269 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி அதிமுக வேட்பாளர் முன்னிலை - 15,657 பாஜக ஜெயலட்சுமி பெற்ற வாக்குகள் - 6533 தூத்துக்குடி மாநகராட்சி- அதிமுக அந்தோணி கிரேஸி 22,700 வாக்குகள் அதிமுக வேட்பாளர் 12,790 வாக்குகள் முன்னிலை பாஜக வேட்பாளர் நந்தகுமார் பெற…

  15. துடில்லி: முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மனைவியிடம் சி.பி.ஐ,. ரகசிய விசாரணை நடத்தியுள்ளது. சென்னையில் பிரபல வக்கீலான இவர் பலரை ஏமாற்றிய நிதி நிறுவனம் சாரதா சிட்பண்ட் நிறுவன அதிபரிடம் ரூ. ஒரு கோடி வாங்கியதாகவும், மேலும் இவரை காப்பாற்ற தான் துணை இருப்பதாகவும் கூறியதாக உறுதி செய்யப்படாத தகவல் தெரிவிக்கிறது என்றாலும், இந்த விவகாரம் குறித்து சி.பி.ஐ.,க்கு கிடைத்த கடிதம் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. மேற்கு வங்கம் கோல்கட்டாவை மையமாக கொண்டு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் சாரதா சிட்பண்ட் நிறுவனம் கொடி கட்டி பறந்தது. இந்த நிறுவனத்தில் பணம் போட்ட அப்பாவி மக்களுக்கு முதிர்வு தொகை தராமல் அந்த நிறுவனம் இழுத்து மூடியது. இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுத…

  16. இலங்கையின் வடபகுதியை தமிழகத்தின் ஓர் அங்கமாக எம்.ஜீ.ஆர். கருதினார் – நட்வர் சிங் - தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:- இலங்கையில் சதிப்புரட்சி இடம்பெறலாம் என அஞ்சிய முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தன இந்தியாவின் உதவியை நாடினார் என முன்னாள் இந்திய வெளிவிவகார அமைச்சர் நட்வர்சிங் தெரிவித்துள்ளார். சென்னையில் நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் காணப்படும் குழப்பங்களை தவிர்த்திருக்க முடியுமா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள அவர்-ஆரம்பத்திலிருந்தே பல தவறுகள் இடம்பெற்றுள்ளன, புதுடில்லிக்கென ஒரு கொள்கை காணப்பட்டது அதேவேளை முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜி இராமச்சந்திரன் வடஇலங்கை தமிழ்நாட்டின் ஒரு பகுதி என்ற கொள்கையை பின்பற்றினார். …

  17. தமிழக எதிர்ப்பு எதிரொலி: இந்தியை முதன்மை மொழியாக கற்பிக்கும், யுஜிசி அறிவிப்பு வாபஸ். டெல்லி: இந்தியை முதன்மை மொழியாக கற்பிக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) வெளியிட்ட அறிவிப்பை வாபஸ் பெற்றுள்ளது. பல்கலைக்கழகங்களில் ஆங்கிலத்துடன் இந்தியை முதன்மை மொழியாக்க கற்பிக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு சுற்றறிக்கை வெளியிட்டிருந்தது. தமிழ்நாட்டில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு பல்கலைக்கழக மானிய குழு (யு.ஜி.சி.) அனுப்பிய சுற்றறிக்கையில், இளங்கலை பட்டப்படிப்புகளில் ஆங்கிலத்துடன் இந்தி மொழியையும் முதன்மை பாடமாக அறிமுகப்படுத்தும் படியும், சட்டம் மற்றும் வணிகவியல் படிப்புகளில் இந்தி கட்டாயமாக கற்பிக்கப்பட வேண்டும் எ…

  18. திருப்பூர் ஆயத்த ஆடை தொழிற்சாலை (ஆவணப்படம்) இந்தியாவில் பனியன் போன்ற உள்ளாடைகளைத் தயாரிப்பதில் முன்னணியில் இருக்கும் தமிழக மாவட்டமான திருப்பூரில், நைஜீரியாவைச் சேர்ந்தவர்களும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வசிக்கின்றனர். இவர்கள் அனைவருமே பனியன் ஏற்றுமதி தொழிலிலும், வர்த்தகத்திலும் ஈடுபட்டிருக்கின்றனர். ஆனால், சமீபகாலமாக திருப்பூரில் இருக்கும் வர்த்தக சங்கங்கள் இவர்களை திருப்பூரை விட்டு வெளியேற்ற வேண்டுமெனக் கோரிவருகின்றன. இந்த நிலையில் திருப்பூரில் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் நைஜீரியர்களை வெளியேற்ற வேண்டுமெனக்கோரி திருப்பூர் காதர்பேட்டிலிருக்கும் திருப்பூர் இரண்டாம் தர பனியன் ஏற்றுமதி முதலாளிகள் சங்கம் போராட்டம் ஒன்றையும் செவ்வாய்க்கிழமையன்று நடத்தியது. இதுபோன்ற …

    • 5 replies
    • 1.1k views
  19. ஐ.ஏ.எஸ். அதிகாரி உ.சகாயம்| கோப்புப் படம். கிரானைட், மணல் குவாரிகள் தொடர்பாக ஆய்வு நடத்த அமைக்கப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி உ.சகாயம் தலைமையிலான குழுவுக்கு தடை கோரிய தமிழக அரசு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தமிழகத்தில் செயல்படும் கிரானைட், மணல் குவாரிகள் உள்ளிட்ட கனிம குவாரிகள் தொடர்பாக ஆய்வு நடத்துவதற்காக ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்தை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 11-ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 16-ம் தேதி) மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. தமிழக அரசின் மனுவில்: "தமிழ்நாட்டில் நடந்த கிரானைட், மணல் கொள்ளை தொடர்பாக தமிழக அரசு வழக்குகள் பதி…

  20. பிரச்சனை ஆரம்பித்த இடத்திலேயே தானே அந்தப் பிரச்சனைக்கும் தீர்வு இருக்கும். அப்படித்தான் தீர்வுக்காக லண்டனிலிருந்து மெனக்கிட்டு வந்திருந்தார் ‘கத்தி’ படத்தின் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் அல்லிராஜா. பிரஸ்மீட் நடந்த ஹோட்டலுக்கு உள்ளேயும், வெளியேயும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. குறிப்பாக சுபாஸ்கரன் அல்லிராஜா உள்ளிட்ட லைகா தலைவர்களை பவுன்சர்கள் பாதுகாத்தனர். அவர் ஒரு ஈழத்தமிழர் என்பதையும் தாண்டி இலங்கை அதிபர் ராஜபக்‌ஷேவின் நெருங்கிய தொழில் கூட்டாளி என்பது தான் அவர்மீது தமிழ் ஆர்வலர்களால் வைக்கப்பட்ட குற்றச்சாட்டு. அதற்கு பதிலளித்த அவர் “எங்களுக்கு எதிராக சில விஷமிகள் வேண்டுமென்றே ஆதாரமற்ற தகவல்களை பரப்பியதால், அதை தெளிவுபடுத்த வேண்டியது எங்கள் கடமை ஆகிறது. எனக்…

  21. சென்னை வந்துள்ள ஹொலிவூட் நடிகர் ஆனல்ட், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார். தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வரின் அலுவலகத்தில் இன்று பிற்பகல் 2.45 மணிக்கு இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ஷங்கர் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், விக்ரம் - எமி ஜக்ஸன் நடித்துள்ள ஐ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக வந்துள்ளார். ஆனல்ட் ஷ்வார்ஸ்நெகர் ஒரு நடிகர் மட்டுமல்ல. கலிபோர்னியா மாகாணத்தின் ஆளுநராக இரு முறை (2003 - 2011) பதவி வகித்தவர். சர்வதேச அளவில் புகழ்பெற்ற பிரமுகர். அந்த வகையில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இன்று அவர் சந்தித்தார். பிற்பகல் 2.45 மணிக்கு இந்தச் சந்திப்பு நடந்தது. தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த…

  22. “எனக்கும், கருணாநிதிக்கும் மோதலா?” என்பதற்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பாக பதில் அளித்துள்ளார். தி.மு.க. முப்பெரும் விழாவில், அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- தகராறா? பேரறிஞர் அண்ணாவுக்கு பிறகு, இந்த இயக்கத்தை அழிக்க பலர் சூழ்ச்சி வலை பின்னினார்கள். ஆனால், வலை பின்னியவர்கள்தான் அதில் சிக்கி அழிந்துபோனார்கள். அப்போது சிலர் சம்பத்தை பிரித்து தனி கூடாரம் அமைத்தார்கள். அதனால் தி.மு.க. அழிந்துபோய்விடவில்லை. அதன்பிறகு கலைஞரிடம் இருந்து நாவலரையும், எம்.ஜி.ஆரையும் பிரித்தார்கள். அப்போதும் தி.மு.க. அழிந்துவிடவில்லை. அதன்பிறகு வைகோவை பிரித்தார்கள். அப்போதும் அழிந்துபோய்விடவில்லை. என்றைக்கும் தி.மு.க. கம்பீரமாக நிற்பதற்கு தலைவர் கலைஞர்தான் காரணம். சில பத்திரிகைகள் தொட…

  23. மீனவர் பிரச்னையில் நிரந்தரத் தீர்வுக்காக பாஜக போராடி வருகிறது: தமிழிசை செளந்தரராஜன் தமிழக மீனவர் பிரச்னையில் நிரந்தரத் தீர்வு காண்பதற்காக பாஜக தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக, அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறினார். தூத்துக்குடியில் திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் ஆளுங்கட்சியினரால் மிரட்டப்பட்டு வருகின்றனர். மிரட்டலையும் மீறி 80-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தல் ஆணையம் நடுநிலையோடு நடந்துகொள்ள வேண்டும் எனத் தொடர்ந்து நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். பல்வேறு அசாதாரணச் சூழல் உருவாகியுள்ளதால் உள்ளாட்சி இடைத்தேர்தலை ரத்து செய்து, …

  24. பெங்களூரு: விடுதலைப்புலிகள் மற்றும் முல்லைப் பெரியாறு அணை தொடர்பான விவகாரத்தில் அச்சுறுத்தல் இருப்பதால், சொத்துக்குவிப்பு வழக்கு நீதிமன்றத்தை மாற்றக்கோரி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், விசாரணை முடிவடைந்த நிலையில் வரும் வரும் 20 ஆம் தேதி பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா தீர்ப்பளிக்க உள்ளார். இந்த தீர்ப்பையொட்டி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜெயலலிதா உள்பட 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், விடுதலைப்புலிகள் மற்றும் முல்லைப் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.