Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சென்னை விமான நிலையம் திறக்கப்பட்டது வர்தா புயல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த சென்னை விமான நிலையம் மீண்டும் இன்று திறக்கப்பட்டுள்ளது. ‘வார்தா’ புயல் காரணமாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய பகுதிகளில் பலமான காற்று வீசியது. மேலும், பலத்த மழை பெய்ததால் ஓடுபாதையில் தண்ணீர் தேங்கியது. இதனால் மும்பை, டெல்லி உள்பட பல்வேறு நகரங்களில் இருந்து சென்னைக்கு வந்த 13 விமானங்களால் ஓடுபாதையில் தரையிறங்க முடியவில்லை. இதையடுத்து அந்த விமானங்கள் ஐதராபாத் மற்றும் பெங்களூரு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. இதனை தொடர்ந்து நேற்று காலை 10 மணி முதல் மறு உத்தரவு வரும் வரை ஓடுபாதையை மூடவும், விமான போக்குவரத்தை இரத்து செய்யவும் அதிகாரிகள் உத்தர…

  2. அரக்கோணம் அருகே சித்தேரியில் ரயில் தடம்புரண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். முப்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை அடுத்துள்ள சித்தேரி என்ற பகுதியில் இன்று காலை முஸராப்பூர் - யஷ்வந்த்பூர் ரயிலின் 9 பெட்டிகள் தடம்புரண்டன. அதிகாலை 5.50 மணியளவில் விபத்து நடந்ததால், ரயிலில் உறங்கிக் கொண்டிருந்த பயணிகள் தூக்கி வீசப்பட்டனர். நிலைமையின் விபரீதத்தை உணரும்முன் ஏராளமானோர், இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர், காயமடைந்த 30க்கும் மேற்பட்டோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தடம்புரண்ட ரயில் பெட்டிகளின் இடிபாடுகளில் சிக்கி பீகாரைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். ரயில் தடம்புரண்டதன் காரணமா…

  3. தமிழகத்தின் புதிய ஆளுநர் இவர்தானா? முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழகத்தில் நடந்து வரும் நிகழ்வுகள் மற்றும் மாற்றங்கள் ஒரு அசாதாரணமான சூழலை உருவாக்கி வருகிறது. இதனிடையே, தற்போது தமிழகத்தின் ஆளுநர் பொறுப்பு குறித்த தகவல் ஒன்று கசிந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தின் ஆளுநர் வித்யாசாகர் ராவ் தற்போது தமிழகத்தின் பொறுப்பு ஆளுநாராகத்தான் இருக்கிறார். வித்யாசாகர் ராவ் தலைமையில்தான் ஜெயலலிதா இறந்த டிசம்பர் 5-ம் தேதி நள்ளிரவில் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். மத்திய அரசின் வழிநடத்துதலின் பேரில் வித்யாசாகர் ராவ் தமிழக ஆட்சியில் முக்கிய முடிவுகளையும் எடுத்துள்ளார். இந்த நிலையில் புதிய ஆளுநர் நியமனத்திற்கான முடிவுகள் எடு…

  4. சசிகலா எனும் alpha male ஆர். அபிலாஷ் ஜெயலலிதாவின் இடம் யாருக்கு எனும் கேள்வி எழுந்த போது ஒரு நண்பர் சொன்னார்: “அதிமுக முழுக்க பா.ஜ.கவின் கையில் போய் விட்டது. அவர்கள் அதிமுகவை டம்மியாக பயன்படுத்தி ஆளப் போகிறார்கள். அடுத்த தேர்தலில் பா.ஜ.கவின் முதல்வர் வேட்பாளராக ஒரு பிரபலத்தை முன்வைப்பார்கள். அதற்குள் அதிமுகவின் தலைமையை முடிந்தவரை நிர்மூலமாக்கி விடுவார்கள். அதிமுகவின் கட்டமைப்பை, வாக்கு வங்கியை தமக்கு சாதகமாய் பயன்படுத்தி தமிழகத்தை கவர்வதே பா.ஜ.கவின் திட்டம்”. இது நாம் பலரும் அறிந்ததே. ஆனால் அடுத்த தேர்தல் வரையிலான கட்டத்தில் அதிமுகவுக்கு என்றொரு தலைவர் வேண்டுமே? அது யார்? அது சசிகலாவாகத் தான் இருக்கும் என்றார் நண்பர். “ஏனென்றால் சசிகலா உ…

  5. சிம்மக் குரலோன் டி.எம்.செளந்தரராஜன் உடலுக்கு இசைஞானி இளையராஜா மலர் அஞ்சலி செலுத்தினார். நேற்று மாலை டிஎம்எஸ்மரணமடைந்தார். அவருக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள், பல்துறையினர், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். எம்.ஜி.ஆர்., சிவாஜியின் மறைவுக்குப் பின்னர் டி.எம்.எஸ்ஸின் மரணம் உலகத் தமிழர்களை ஒட்டுமொத்தமாக பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. டி.எம்.எஸ்ஸின் வீட்டுக்கு இசையமைப்பாளர் இளையராஜா சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், டி.எம்.சவுந்தரராஜன் குரல் மாதிரி இன்னொருத்தர் வரமுடியாது. தமிழகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய குரல். அவர் பாடலை கேட்காத கிராமங்கள் கிடையாது. எவ்வளவு புதியதாக பாடல்கள் வந்தாலும், அவருடைய பாடல்களை கேட்டு, ரசிக…

  6. சசிகலாவால் நேரடியாக பாதிக்கப்பட்டேன் - கங்கை அமரன் திருப்பூர் : சசிகலாவால் நான் நேரடியாக பாதிக்கப்பட்டேன் என்று கங்கை அமரன் கூறியுள்ளார். அதிமுக., பொதுச் செயலாளராக உள்ள சசிகலா விரைவில் முதல்வராகவும் பொறுப்பேற்க உள்ளார். ஆனால் நேற்று முதல்வர் பன்னீர் செல்வம் கொடுத்த அதிரடி பேட்டியை தொடர்ந்து தமிழக அரசியலில் பரபரப்பு காணப்படுகிறது. சசிகலாவிற்கு எதிர்ப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் இசையமைப்பாளரும், இயக்குநருமான கங்கை அமரன், சசிகலாவால் தான் நேரடியாக பாதிக்கப்ட்டதாக கூறியுள்ளார். பன்னீருக்கே ஆதரவு: திருப்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த கங்கை அமரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது, சசிகலாவால் நான் நேரடியாக பா…

  7. வானதி சீனிவாசன் பாஜக- சிறப்பு பேட்டி

    • 0 replies
    • 560 views
  8. சசிகலா புஷ்பா மீதான புகாரை வாபஸ் பெற்ற இளம்பெண் கடத்தல்? அதிமுக சேர்மன் மீது சகோதரி புகார் சசிகலா புஷ்பா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தொடரப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ள நிலையில், புகாரை வாபஸ் பெற்ற பெண்ணைக் காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் போலீஸாரிடம் புகார் அளித்தனர். அ.தி.மு.க பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மீது பரபரப்புப் புகார்களைத் தெரிவித்து அரசியல் அரங்கில் சூட்டைக் கிளப்பியவர், சசிகலா புஷ்பா. அ.தி.மு.க சார்பாக மாநிலங்களவை உறுப்பினரான இவர், ஜெயலலிதாவின் மரணத்தில் சதி இருக்கிறது எனத் தெரிவித்ததுடன், இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி சர்ச்சையை உருவாக்கினார். அத்துடன், அ.தி.மு.க.வின் பொதுச…

  9. ஜெயலலிதா போல் போராடி இரட்டை இலை சின்னத்தை பெறுவோம் - டி.டி.வி. தினகரன் தேர்தல் ஆணையத்தால் இரட்டை இலை சின்னம் தற்காலிகமாக தான் முடக்கப்பட்டுள்ளதாகவும், ஜெயலலிதா போல் போராடி சின்னத்தை மீட்போம் எனவும் அ.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை: தேர்தல் ஆணையத்தால் இரட்டை இலை சின்னம் தற்காலிகமாக தான் முடக்கப்பட்டுள்ளதாகவும், ஜெயலலிதா போல் போராடி சின்னத்தை மீட்போம் எனவும் அ.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மரணத்தைத் தொ…

  10. தமிழகம்: இன்று முதல் கடுமையான முழு ஊரடங்கு! மின்னம்பலம் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்த முதல்வர் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மே 24ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், மக்கள் ஊரடங்கு விதிகளை மீறி வெளியே சுற்றுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் நேற்று (மே 13) மாலை முதல்வர் ஸ்டாலின் தலைமையில், சட்டப்பேரவை அனைத்துக் கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய முதல்வர், தொழில் மற்றும் வர்த்தகம் பாதிக்கக் கூடாது என்பதற்காக சில தளர்வுகள் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மக்கள் ஊரடங்கு விதிகள…

  11. இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில், 37 பேருக்கு கொரோனா! இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், குறித்த பகுதிக்குள் வேறு நபர்கள் உள்நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணைப்பகுதியில் உள்ள முகாமிலே மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த முகாமில் 145 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இதில் 528 பேர் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 37 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், அதில் 5 பேர் மாத்திரமே ஓசூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஏனையவர்கள் அகதிகள் முகாமிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்தே வ…

  12. ஆந்திராவில் தமிழர் வாழும் பகுதிகளை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆந்திரத்தை இரண்டாக பிரித்து தெலுங்கானா தனி மாநிலத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், சித்தூர் மாவட்டத்தில் தமிழர் பெரும்பான்மையினராக வாழும் பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. ஆந்திரத்தில் உரிமை இழந்து வாடும் நமது தமிழ் சொந்தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக மக்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் உள்ளது. 70 ஆயிரம் ச.கிமீ இழப்பு 1956-ஆம் ஆண்டில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, அதனால் பெரிதும் பாதிக…

    • 3 replies
    • 557 views
  13. ஆடிய ஆட்டம் என்ன? பேசிய வார்த்தை என்ன? தேடிய செல்வம் என்ன? திரண்டதோர் சுற்றம் என்ன? அதிமுகவை கால்நூற்றாண்டுகாலமாக குத்தகைக்கு எடுத்தவர்களாக ஆட்டம் போட்ட சசிகலா கோஷ்டிக்கு குட் பை சொல்லப்பட்டுவிட்டது. சென்னை: கவியரசர் கண்ணதாசனின் ஆடிய ஆட்டம் என்ன? பேசிய வார்த்தை என்ன? தேடிய செல்வம் என்ன? திரண்டதோர் சுற்றம் என்ன? என்ற பாடல் வரிகள் அப்படியே சசிகலா கோஷ்டிக்குத்தான் கனகச்சிதமாக பொருந்துகிறது. எம்ஜிஆர் எனும் மக்களால் நேசிக்கப்பட்ட தலைவரால் உருவாக்கப்பட்டது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். நாவலர் நெடுஞ்செழியன், ஆர்.எம். வீரப்பன், எஸ்.டி. சோமசுந்தரம், ராகவானந்தம், ஹண்டே என பழுத்த அரசியல்வாதிகள் பலரும் நிறைந்து இருந்த இயக்கம்.. இளைய தலைமுறை அரசியல்வாதிக…

  14. தமிழகத்தை இரண்டாக பிரிக்கும் எண்ணம் இல்லை – மத்திய அரசு தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிக்கும் எந்த கோரிக்கையும் பரிசீலனையில் இல்லை என மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர் உள்ளிட்ட கொங்கு மண்டலத்தை பிரித்து தனி மாநிலம் அமைக்க பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் எதிர்ப்பினை வெளியிட்டு வந்த நிலையில், இதுவரை உத்தியோகப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை. இந்நிலையில், இது குறித்து மக்களவையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) கேள்வி எழுப்பப்பட்டது. குறித்த கேள்விக்கு எழுத்து பூர்வமாக பதில் வழங்கிய மத்திய உள்துறை அமைச்சர் தமிழகத்தை பிரிக்கும் எந்த கோர…

  15. தமிழ்நாட்டை... அணுக்கழிவு குப்பைத் தொட்டியாக்கும் முயற்சியை, மத்திய அரசு கைவிட வேண்டும்- வைகோ தமிழ்நாட்டை அணுக்கழிவு குப்பைத் தொட்டியாக்கும் முயற்சியை மத்திய பா.ஜ.க அரசு கைவிட வேண்டும் என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு வைகோ வலியுறுத்தியுள்ளார். குறித்த அறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, கூடங்குளம் அணுஉலைகளையே நிரந்தரமாக மூடிவிட வேண்டும் என்று கூடங்குளம், இடிந்தகரை வட்டார மக்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலையில், அங்கேயே அணுக்கழிவு மையத்தை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. அத்துடன் தற்போது…

  16. சென்னை: இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலைதான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார். இலங்கைத் தமிழரின் வாழ்வுரிமையும், இந்திய அரசின் நிலையும் என்ற தலைப்பிலான கருத்தரங்கம் சென்னையில் இன்று (30ஆம் தேதி) நடந்தது. இதில் கலந்து கொண்டு, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசும்போது, ''இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலைதான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. 13வது அரசியல் சட்டத் திருத்தத்தில் உள்ள ஷரத்துக்களை சீர்குலைக்க இலங்கை அரசு முயற்சி எடுத்து வருகிறது. அதேவேளையில், 13வது அரசியல் சட்டத் திருத்தத்தை அமல்படுத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. 13வது சட்டத் திருத்தத்தையும், இலங்கைத் தமிழர்களையும் மத்திய அரசு என்றுமே கைவிடாத…

  17. ஜீவ சமாதி அடைய உண்ணாவிரதம் ஆரம்பிப்பு ஜீவசமாதி அடைய அனுமதிக்கக் கோரி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளி முருகன், வேலூர் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார். துறவி ஆடைகளுடன் வேலூர் ஆண்கள் மத்திய சிறைச்சாலையில் தண்டனைக் கைதியாக இருக்கும் முருகன். சிறைத்துறை தலைவருக்கு, கடந்த மாதம் மனுவொன்றை, வேலூர் சிறை அதிகாரிகள் மூலம் அனுப்பியிருந்தார். அம்மனுவில், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக, சிறைத் தண்டனை அனுபவித்துவரும் நிலையில், தனது விடுதலை கேள்விக்குறியாகியுள்ளது. சிறை வாழ்க்கையை வெறுப்பதாகவும் ஜீவசமாதி அடைய அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். இக்கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த மாதம் 17ஆம…

  18. மீண்டும் ரிசார்ட்டுக்கு படையெடுத்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள்! புதுச்சேரி நட்சத்திர சொகுசு விடுதியில் தங்கியிருந்த தினகரன் ஆதரவு அதிமுக எம்.எல்.ஏக்கள் மீண்டும் அதே ரிசார்ட்டுக்கு கூடாரத்தை மாற்றியிருக்கின்றனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியும், முன்னால் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியும் இணைந்தது தமிழக அரசியலில் பல்வேறு திருப்பங்களை ஏற்படுத்தி வருகின்றது. இந்நிலையில் டிடிவி தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேரையும் எதிரணியினர் வளைத்துவிடக் கூடாது என்பதற்காக கூவத்தூர் பாணியில் புதுச்சேரியில் தனியார் ”பீச் ரிசார்ட்டில்” தங்க வைக்கப்பட்டனர். அங்கு ஆன்லைன் மூலம் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, புதுச்சேரி 100 அடி சாலைய…

  19. இலங்கையில் இருந்து ஒரு வயது குழந்தையுடன் படகு மூலம் தமிழகத்திற்கு அகதிகளாக சென்ற 4 பேர் இந்திய கடற்படையினரிடம் பிடிபட்டனர். இராமேஸ்வரம் முகாமில் இருந்து இந்திய கடற்படையினர் இன்று அதிகாலை ரோந்து சென்றனர். இராமேஸ்வரம் சேரான்கோட்டை கடல் பகுதியில் ரோந்து சென்ற போது அப்பகுதியில் பிளாஸ்டிக் படகு ஒன்றை கண்டனர். அந்த படகின் அருகில் சென்று பார்த்த போது அதில் இலங்கையை சேர்ந்த ஒரு வயது குழந்தை உட்பட 4 பேர் இருந்துள்ளனர். இதையடுத்து அவர்களை கடற்படை முகாமிற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இலங்கை யாழ்ப்பாணம் பகுதியை சேர்ந்த நிர்மலன் (24), இவரது மனைவி நிஷாந்தினி (23), இவர்களது ஒரு வயது குழந்தை மற்றும் நிர்மலனின் நண்பர் கலையரசன் (31) என தெரியவந்தது. மேலும் …

  20. தமிழகத்தில் ஒரு மாற்று அணி உருவாகுமா? கடந்த பல மாதங்களாக தமிழகத்தின் தேர்தல் களத்தில் ஒரு மாற்று அணி உருவாகவேண்டுமென்று முயன்ற பலரில் நாங்களும் ஒருவர். ஆனால் இன்று அந்த கனவு கனவாகவே போய்விடுமோ என்கிற நிலைதான் இருக்கிறது. தேசிய கட்சிகள் காங்கிரஸ்-பாஜக-மார்க்சிஸ்ட் போன்றவை, மற்றும் மாநில அளவில் தமிழர்கள் நலனை பின்னுக்குத் தள்ளி மக்களின் வாழ்வுரிமைப் பிரச்சனைகளில் கூட நேர்மையான நிலைப்பாட்டினை எடுக்காத அதிமுக , திமுக, தேமுதிக போன்றவைகள் அல்லாத ஒரு கூட்டமைப்பு ஏற்படுத்துதல் அவசியம் என்று பலரும் விரும்பினோம். தேர்தல் பாதை திருடர் பாதை என்று ஒதுக்குவதை காட்டிலும், அதில் செயல்படும் கட்சிகள் மூலமாக தமிழர்களின் வாழ்வுரிமை, சமூக கோரிக்கைகளை பிற தளத்தில் பிரதிபலிப்பது அவசியம…

    • 4 replies
    • 574 views
  21. ’அவர் அரசியலுக்கு வந்தால் நல்லது செய்வார்!’ - லதா ரஜினிகாந்த் ’ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் நல்லது செய்வார்’ என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் லதா ரஜினிகாந்த். சென்னையில் ஸ்ரீதயா அறக்கட்டளை நிகழ்ச்சியில் பேசிய லதா ரஜினிகாந்த், ‘ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து விரைவில் அறிவிப்பார். ரஜினி அரசியலுக்கு வந்தால் பல மாற்றங்களை எதிர்பார்க்கலாம். அவர் அரசியலுக்கு வந்தால் நல்லது நடக்கும். அவர் அரசியலுக்கு வருவது எப்போது என்பது அவருக்குதான் தெரியும். நல்லது செய்வதற்கான 100 திட்டங்கள் ரஜினியின் மனதில் இருக்கும்’ என்று பேசியுள்ளார். சில நாள்களுக்கு முன்னர் ரஜினி புதிய கட்சித் தொடங்க உள்ளதாக வதந்தி பரவியது. இணையத்தில் விவாதப் பொருளா…

  22. `என் பிரதமரை கேள்வி கேட்க எனக்கு உரிமையில்லையா?': பிரகாஷ் ராஜ் பிரத்யேக பேட்டி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைFACEBOOK நடிகரும், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான பிரகாஷ் ராஜ் கடந்த சில மாதங்களாக சமூகவலைதளங்களிலும் பேட்டிகளிலும் தெரிவித்துவரும் கருத்துகள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. மிகப் பரபரப்பான சூழலில் தற்போதைய மத…

  23. நீண்ட இடைவேளைக்குப் பிறகு அறிவாலயம் வந்தார் கருணாநிதி! சென்னை: உடல் நலக்குறைவின் காரணமாக ஓய்வில் இருக்கும் திமுக தலைவர் கருணாநிதி நீண்ட இடைவேளைக்குப் பிறகு வெள்ளி இரவு 9 மணியளவில் அறிவாலயத்திற்கு வருகை தந்தார். திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவின் காரணமாக தொடர் ஓய்வில் இருக்கிறார். நடுவில் முரசொலி பவழ விழா சமயத்தில் அவர் முரசொலி அலுவலகத்திற்கு வருகை தந்தார். அதன்பிறகு வெள்ளி இரவு 9 மணியளவில் அறிவாலயத்திற்கு வருகை தந்தார்.அவருடன் திமுக செயல் தலைவர் ஸ்டாலின், துணை பொதுச் செயலாளர் துரைமுருகன் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ராசா உள்ளிட்டோர் உடன் இருந்தனர். …

  24. யூடியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்த 17 வயது புதுவை சிறுவன் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES புதுச்சேரியில் தாயைத் தவறாக பேசிய நபரை மிரட்டும் நோக்கில் யூடியூப் காணொளியைப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்து, அந்த நபரின் வீட்டில் வீசிய சிறுவனிடம் விசாரணை நடந்துவருகிறது. புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம். இவருக்கு வயது 50. புதுச்சேரி நகர பகுதியில் சாலையோரத்தில் உள்ளாடைகள் விற்பனை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். இதனிடையே இவரது வீட்டில் கடந்த ஜூலை மாதம் 20ஆம் தேதி அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் நாட்டு வெடிகுண்டு வீசி சென்றுள்ள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.