Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஜெயலலிதா என்னை அர்ச்சித்திருக்கிற வார்த்தைகளை எம்.ஜி.ஆர். கேட்டிருந்தால் கவலைப்பட்டிருப்பார் : கலைஞர். பல்நோக்கு சிறப்பு உயர் மருத்துவமனை மருத்துவர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீடு கிடையாதா? என்பது குறித்து, சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற சமூக நீதி பாதுகாப்பு சிறப்பு பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் கலைஞர், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தொல்.திருமாவளவன், சுப.வீரபாண்டியன், ஜவாகிருல்லா எம்.எல்.ஏ., பேராயர் எஸ்ரா. சற்குணம் உட்பட பலர் பங்கேற்று உரையாற்றினர். கலைஞர் பேசும்போது, ’’காமராஜர் முதலமைச்சராக இருந்த போது அப்போது எதிர்க்கட்சியாக இருந்த எங்களை எப்படி நடத்தினார்? பக்தவச்சலம் கூட எப்படி நடத்தினார்? அவ்வளவு ஏன், என்னுடைய அருமை நண்பர் எம்.ஜி.ஆர். முதலமை…

  2. தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கு பிப்ரவரி 7-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. நாடு முழுவதும் 16 மாநிலங்களின் மாநிலங்களவையில் காலியாகும் 55 இடங்களுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தல் வரும் பிப்ரவரி 7-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இம்மாதம் 21-ம் தேதி தொடங்கி 28-ம் தேதி முடிவடையும். வேட்பு மனுக்கள் பரீசிலனை 29 ஆம் தேதி நடைபெறும். மனுவை வாபஸ் பெற கடைசி தேதி ஜனவரி 31 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெயந்தி நடராஜன் மற்றும் ஜி.கே.வாசன், திமுகவைச் சேர்ந்த ஜின்னா மற்றும் வசந்தி ஸ்டான்லி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் க…

  3. ஈழத் தமிழர்களின் கண்ணீரைத் துடைக்க சுதந்திரத் தமிழ் ஈழம் ஒன்றே தீர்வாகும் என்பதால், அந்த இலக்கை அடைவதற்கு உலகெங்கும் உள்ள தன்மானத் தமிழர்கள் பொங்கல் திருநாளில் சபதம் ஏற்போம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பொங்கல் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்: உலகத்தில் மனித குலத்தின் பசி போக்கிடும் உணவு தானியங்களை உற்பத்தி செய்யும் விவசாயிகள், இயற்கையின் அருட்கொடையான நிலத்துக்கும் பயிர் செழிக்கப் பயன்படும் உழவு மாடுகளுக்கும் நன்றி தெரிவிக்கின்ற விழாதான் தைப் பொங்கல் திருவிழாவாகும். பண்டைக்காலம் முதல் தமிழர்கள் கொண்டாடும் தேசியத் திருவிழாவாகும். அண்மைக் காலமாக விவசாயிகள் வாழ்வு கண்ணீர்க் களமாகிவிட்டது. தமிழகத்தின் வாழ்வாதரங்களான நதி…

  4. தி.மு.க. தலைவர் கருணாநிதி மீண்டும் தமது கூட்டணிக்கு வந்து சேருவார் என காங்கிரஸ் கட்சி காத்துக்கொண்டிருக்கிறது என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். உயர் சிறப்பு மருத்துவமனைக்கான மருத்துவர்கள் நியமனத்தில் இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என கருணாநிதி கூறியதற்குப் பதிலளித்து ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் ஜெயலலிதா இதைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியுள்ளது: காங்கிரஸ் தலைமையிலான மத்திய கூட்டணி அமைச்சரவையில் ஒன்பதரை ஆண்டு காலம் தி.மு.க. பங்கு வகித்தது. மத்திய அமைச்சரவையிலிருந்து விலகியும் காங்கிரஸ் கட்சியுடன் ஒட்டி உறவாடியவர் கருணாநிதி. அந்தக் கட்சியின் தயவுமூலம் தன் மகள் கனிமொழிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை மீண்டும் பெற்றுத்தந்தார். தி.மு.க. பொத…

  5. வருகின்ற மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்தால் தேமுதிக காணாமல் போய்விடும் என்று காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்தார். சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் சொற்பொழிவுகள், எழுத்துகள் அடங்கிய "வெல்லும் சொல்', "என் அண்ணா', "புரட்சிக் கதிர்கள்' ஆகிய 3 நூல்கள் வெளியிடப்பட்டன. இவ்விழாவில் தமிழருவி மணியன் பேசியதாவது: தமிழக அரசியலில் மாற்றம் ஏற்பட வேண்டுமானால் வரும் மக்களவைத் தேர்தலில் நல்ல அணி அமைய வேண்டும். அந்த அணியில் பாஜக, மதிமுக, தேமுதிக போன்ற கட்சிகள் இணைய வேண்டும். அப்படி இணைந்தால் அந்த அணிதான் வெற்றி பெறும். வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக அணிக்கும், பாஜக தலைமையிலான அணிக்கும் இடையே போட்டி இருக்கு…

  6. தி.மு.க. தலைவர் கருணாநிதியை கோபாலபுரம் வீட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று காலை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பிற்கு பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்து தெரிவித்தேன். இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை பேச்சுவார்த்தைக்கு முன்பாக விடுவிக்க முடியாது என்று கூறிய இலங்கை மந்திரியின் பேச்சு இந்திய அரசுக்கு விடுக்கும் சவாலாகும். இந்த கருத்தால் தமிழக மீனவர்களிடையே கருத்து மோதல் ஏற்படும் சூழல் ஏற்படும். மதவாத சக்திகள் வென்றுவிட கூடாது என்பதற்காக பா.ஜனதா கூட்டணியில் சேரக்கூடாது என்று விஜயகாந்திடம் கூறியிருந்தேன். அவர் தனது நிலைப்பாட்டை பிப்ரவர…

  7. தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:– தமிழ்நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறை, சிறைத் துறைகளில் பணியாற்றும் பணியாளர்கள் தமது பணியில் வெளிப்படுத்தும் நிகரற்ற செயல்பாட்டினை அங்கீகரித்து ஊக்குவிக்கும் வண்ணம் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளன்று தமிழக முதல்–அமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு, காவல் துறையில் காவலர் மற்றும் தலைமைக் காவலர் நிலைகளில் 1500 பணியாளர்களுக்கு “தமிழக முதல்–அமைச்சரின் காவல் பதக்கங்கள்” வழங்க முதல்–அமைச்சர் ஆணையிட்டுள்ளார். மேலும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் முன்னணி தீயணைப்போர், ஓட்டுநர் கம்மியர், ஓட்டுநர் தீயணைப்போர் மற்றும் தீயணைப்போர் ஆகிய நிலைகள…

  8. திமுக 25, தேமுதிக 8 ப்ளஸ் ராஜ்யசபா, காங்கிரஸ் 7 தொகுதிகள் ஒதுக்கீடு? சென்னை: லோக்சபா தேர்தலில் திமுக 25 தொகுதிகள், தேமுதிக 8 , காங்கிரஸ் 7 தொகுதிகளில் போட்டியிடுவது என்ற உடன்பாடு உருவாகும் நிலை ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது. காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்று தி.மு.க. பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து விஜயகாந்தின் தே.மு.தி.க.வை தி.மு.க. கூட்டணியில் சேர்க்க முயற்சிகள் நடை பெற்றன. பின்னர் அழகிரியின் எதிர்ப்பால் தேமுதிக பிரேக் போட்டது. இந்நிலையில் திடீரென மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத், கருணாநிதியை சந்தித்து பேச களநிலைமை மாறியது. திருமா சந்திப்பு இதைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், விஜயகாந்தை சந்தித்தார். அப்போது …

  9. 11 ஜனவரி, 2014 எதிர்வரும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு தேமுதிக வரவேண்டும் என்று அந்த கட்சியின் தலைவர் விஜயகாந்தை தாம் நேரில் சென்று சனிக்கிழமையன்று அழைத்ததாக தெரிவித்தார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன். தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சென்னை கோயம்பேட்டில் இருக்கும் அந்த கட்சியின் தலைமை அலுவலகத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சனிக்கிழமை மாலை சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து பிபிசி தமிழோசைக்கு செவ்வியளித்த திருமாவளவன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இருக்கும் திமுக தலைமையிலான அணியில் தேமுதிகவும் இடம்பெற வேண்டும் என்று தொடர்ந்து தான் ஏற்கெனவே விடுத்து வந்த வேண…

  10. தமிழக, இலங்கை மீனவர்கள் இடையே யான பேச்சுவார்த்தை தொடர்பான விவகாரத்தில் என் மீது கருணாநிதி பழி போடுவது, காங்கிரஸுடனான உறவை புதுப்பிக்க உதவுமே தவிர, பிரச்சினைக்கு தீர்வு காண உதவாது என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: "தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்படும்போது, பிரதமருக்கு உடனுக்குடன் கடிதம் எழுதி தூதரக நடவடிக்கைகள் மூலம் அவர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த இரண்டரை ஆண்டுகளில் 1,111 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டபோதும், 836 மீனவர்கள் துரிதமாக விடுவிக்கப்பட்டுள்ளனர். இன்னமும் 275 மீனவர்கள் இலங்கை சிறைகளில் வாடிக் கொண்டிருக்கின்றனர். அவர…

  11. வரும் நாடாளுமன்றத் தேர்தலில், திமுக உள்ளிட்ட எந்தக் கட்சியுடன் கூட்டணி சேருவது நல்லதோ அதன்படி, கட்சி மேலிடம் முடிவெடுக்கும் என்று, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் கூறியுள்ளார். மத்திய சுகாதாரத்துறை அமைச்சரும், தமிழக காங்கிரஸ் மேலிட வேட்பாளர் தேர்வுக்குழுத் தலைவருமான குலாம் நபி ஆசாத் வியாழக்கிழமை இரவு திடீரென, திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார். இந்நிலையில் மீண்டும் திமுகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி சேருமா என்பது குறித்து, தமிழக காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் கூறியதாவது: திமுக தலைவர் கருணாநிதியை குலாம் நபி ஆசாத் சந்தித்து பேசியது என்ன? குலாம் நபி ஆசாத் சென்னையில் வந்து தங்குவது எனக்குத் தெரியும். ஆனால், அவர் கருணாநிதியை சந்தித்…

  12. மதிமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் ஆட்சி மன்றக் குழு கூட்டத்தில் பேசிய வைகோ, ‘இனி ஒருபோதும் தோற்க மாட்டேன். இனி நமக்கு அனைத்திலும் வெற்றி தான்’ என்று கூறி நிர்வாகிகளை உற்சாகப்படுத்தி உள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவோம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அண்மையில் அறிவித்தார். இந் நிலையில், தேர்தல் வியூகம், தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிப் பதற்காக மாவட்டச் செயலாளர்கள், ஆட்சி மன்றக் குழு, அரசியல் ஆலோசனைக் குழுக் கூட்டத்தைக் சனிக்கிழமை சென்னையில் கூட்டி னார் வைகோ. தொகுதிப் பங்கீடு குறித்து பேசுவதற்காக குழு ஒன்று அமைக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மதிமுக பொருளாளர் மாசிலா மணி, ஆட்சி மன்றக் குழு செயல…

  13. திருச்சி அருகே தா.பேட்டையில் ஒன்றிய, நகர திமுக சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், திமுக மாவட்ட செயலாளர் கே.என்.நேரு கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசுகையில், திருச்சியில் நடைபெற உள்ள திமுக மாநில மாநாட்டை வெற்றி மாநாடாக நடத்தி காட்ட வேண்டும், தேமுதிக கட்சி திமுகவுடன் கூட்டணி அமைக்க அதிக வாய்ப்புள்ளது, பாராளுமன்ற தேர்தலில் கலைஞர் தலைமை யில் பலமான கூட்டணி அமையும். பெரம்பலூர், திருச்சி தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெறும் என்றார். http://nakkheeran.in/Users/frmNews.aspx?N=114598

  14. 11, ஜனவரி 2014 இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் சனிக்கிழமை விழுப்புரத்தல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, நாங்கள் அ.தி.மு.க. கூட்டணியில் தான் இருக்கிறோம். நாங்கள் கேட்பது என்ன? என்று அவர்களுக்கு தெரியும். எங்களுக்கு என்ன கொடுக்கலாம் என்றும் அவர்களுக்கு தெரியும். தேர்தல் ஆணையம் தேதி அறிவித்த பிறகு தான் பேச்சுவார்த்தையில் இறங்குவோம். இப்போது மக்கள் பிரச்சினையை பார்த்து வருகிறோம். சட்டமன்ற தேர்தல் போலவே வரக் கூடிய பாராளுமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. கூட்டணியில் நீடிப்போம். நாங்கள் மட்டுமல்ல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, பார்வர்டு பிளாக் கட்சிகளும் கூட்டணியில் இருக்கிறோம். எங்களது நோக்கம் மத்தியில் பா.ஜனதாவும், காங்கிரசு…

  15. 11, ஜனவரி 2014 திருச்சியில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஆர்.சி.பாபு தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், கட்சியில் வட்டார மற்றும் வட்ட கமிட்டியை அமைக்க வேண்டும். கட்சிப் பற்றுள்ள இளைஞர்களுக்கு பிரதிநிதித்துவம் தர வேண்டும். இளைஞர்களை நிர்வாகிகளாக நியமிக்க வேண்டும். தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்காளர் பட்டியலின்படி, தமிழகத்தில் 23 லட்சம் புதிய வாக்காளர்கள் உள்ளனர். ஒவ்வொரு தொகுதிக்கும் சராசரியாக 70,000 வாக்காளர்கள் புதியவர்கள். அவர்கள் 18 முதல் 22 வயதுக்குள்பட்டவர்கள். காங்கிரஸ் கட்சிக்கு நீண்ட வரலாறும், பாரம்பரியமும் உண்டு. ஆனால் இதை இளைஞர்கள் தெரிந்திருக்…

  16. திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டள்ள அறிக்கையில், நடைபெறவிருக்கும் நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்பப் படிவங்கள் வருகிற 20-1-2014 முதல் அண்ணா அறிவாலயத்திலுள்ள தலைமைக் கழகத்தில் கிடைக்கும். போட்டியிட விரும்புகின்ற கழகத் தோழர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி முறையாக செய்து, 30-1-2014 அன்று மாலை 6 மணிக்குள் தலைமைக் கழகத்தில் சேர்ப்பித்திட வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பொதுத் தொகுதி வேட்பாளர் விண்ணப்பக் கட்டணம் - ரூ.25,000/- தனித் தொகுதி மற்றும் மகளிர் விண்ணப்பக் கட்டணம் - ரூ.10,000/- விண்ணப்ப படிவத்தை தலைமைக் கழகத்தில் ரூ.1000/-வீதம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு கூற…

  17. சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் பேசும்போது, ‘’ஊழலை ஒழிக்க முன்னோடியாக திகழ்பவன் நான். தமிழ்நாட்டில் போதிய சாலை வசதி உட்பட எந்த அடிப்படை வசதியையும் அரசு செய்து கொடுக்க வில்லை. எந்தக் கட்சியிலும் ஆரோக்கியமான போட்டியை பார்க்க முடியாது. ஆனால், தேமுதிகவில் தான் ஆரோக்கியமான போட்டியை பார்க்க முடியும். மத்தியில் யார் ஆளப்போகிறார்கள் என்பதை பார்ப்போம். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தேமுதிகவின் முடிவை பிப்ரவரி 2-ம் தேதி நடைபெற உள்ள மாநாட்டில் அறிவிப்பேன்’’ என்று தெரிவித்தார். http://nakkheeran.in/Users/frmNews.aspx?N=114645

  18. வகுப்புவாத சக்திகளை ஊக்குவிக்கும் வகையில் பாஜக கூட்டணிக்கு மதிமுக செல்லக் கூடாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளன் கூறியுள்ளார். சென்னையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அவர் மேலும் கூறியதாது, ஈழத்தமிழர் விவகாரத்தில் காங்கிரஸ், பாஜகவின் நிலைப்பாடு ஒன்றாகவே உள்ளது. இலங்கை தமிழக மீனவர்கள் பேசினால் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காது. மீனவர்கள் பிரச்சனைக்கு இந்தியா இலங்கை அரசுகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஐ.நா. சபை கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா கொண்டுவர வேண்டும் என்றார். http://nakkheeran.in/Users/frmNews.aspx?N=114618

  19. பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி சேர்வது என்பது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி முடிவு செய்வார் என்று மத்திய மந்திரி நாராயணசாமி கூறினார். பேட்டி காரைக்காலுக்கு வந்த மத்திய மந்திரி வி.நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– கடந்த 3 ஆண்டுகளாக புதுச்சேரி மாநிலத்தில் எந்தவொரு திட்டங்களும் நிறைவேற்றப்படாதது வருத்தத்திற்குரியது. ஆனால் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் எதற்கெடுத்தாலும் மத்திய அரசையும் பாராளுமன்ற உறுப்பினரையும் குறை கூறி ஆட்சி நடத்த முதல்–அமைச்சர் நினைக்கிறார். ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் அரசு எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை என்பதை மக்கள் தெளிவாக தெரிந்து வைத்துள்ளனர். காங்கிரஸ் அரசில் அனை…

  20. தமிழக- இலங்கை மீனவர்கள் இடையே சென்னையில் வரும் 20-ம் திகதி பேச்சுவார்த்தை நடக்கும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ள போதிலும், அந்தக் கூட்டம் சாத்தியப்படாது என்று இலங்கை மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன பிபிசி தமிழோசையிடம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் 179 பேரை விடுதலை செய்யவுள்ளதாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அதேநேரம் இலங்கைச் சிறைகளில் உள்ள இந்திய மீனவர்கள் 275 பேரையும் இலங்கை அரசு ஓரிரு நாட்களில் விடுவிக்கும் என்றும் ஜெயலலிதா நேற்றிரவு அறிக்கை வெளியிட்டுள்ளார். எனினும், தமிழகத்தில் மட்டுமன்றி ஆந்திராவிலும் இலங்கை மீனவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய இலங்கை அமைச்ச…

  21. திமுகவின் பிரச்சார பீரங்கியாக மாறுவாரா நமீதா....?? சென்னை: திமுகவில் சேர்ந்து லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணிக்காக தமிழகம் முழுவதும் பட்டி தொட்டியெங்கும் நடிகை நமீதா பிரசாரம் செய்யப் போகிறார். விரைவில் இதற்காக அவர் திமுகவில் முறைப்படி சேருவார். இதுதான் இப்போது லேட்டஸ்டாக வலம் வந்து கொண்டிருக்கும் ஒரு பரபரப்பான செய்தி. எந்த அளவுக்கு இதில் உண்மை உள்ளது என்று தெரியவில்லை. ஆனால் ரொம்ப சீரியஸாக இது பரவி வருகிறது. கடந்த சட்டசபைத் தேர்தலின்போது நடிகர் வடிவேலு படு தீவிரமாக திமுக கூட்டணிக்காக வாக்கு சேகரித்தார். போகிற இடமெல்லாம் தேமுதிக தலைவர் விஜயகாந்த்த்தை மிகக் காட்டமாக அவர் விமர்சித்தார். ஆனால் தற்போது நிலைமை மாறி விட்டது. தேமுதிகவை தனது கூட்டணியில் சேர்க்க …

  22. நெல்லை: ஆம் ஆத்மி கட்சியில் இணையுமாறு கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமாரனுக்கு அக்கட்சியின் மூத்த தலைவரும், வழக்கறிஞருமான பிரஷாந்த் பூஷன்அழைப்பு விடுத்துள்ளார். நெல்லை மாவட்டம் இடிந்தகரை கிராமத்தில் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டக்குழுவினர் மீது நூற்றுக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞரான பிரஷாந்த் பூஷன் ஏற்கெனவே போராட்டம் நடைபெறும் இடிந்தகரை கிராமத்துக்கு வந்து போராடும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்தார். அத்துடன், ஆம் ஆத்ம் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று டெல்…

  23. நேற்றைய புகழில் இன்று பதவிசுகம் அனுபவிக்கும் கொள்கை கோட்பாடற்ற அரசியல், சுயநலம், பதவிமோகம், பொதுநல அக்கறையின்மை, மூடநம்பிக்கை வளர்த்தல், பிற்போக்குத்தன்மை, சுயமரியாதை இல்லாத தனி மனித துதி, இயற்கை வளங்களை அழித்து கொள்ளையடித்தல், மக்களின் உரிமைப் போராட்டங்களை ஜனநாயக மரபின்றி ஒடுக்குதல், ஆயிரமாயிரம் வருடங்களாக தாழ்த்தப்பட்ட மக்களின் உயர்விற்கு வழி காணாமல் அவர்களை மேலும் மேலும் ஒடுக்குதல், மக்களைப் பிரிக்கும் சாதிமத வெறி ஊட்டி வளர்த்தல், சிறுபான்மையோரின் நலனைப் பேணாமல் அவர்களை அச்சத்திற்கு உள்ளாக்குதல்... நாளுக்கு நாள் நலிந்து போகும் விவசாயத்தை சர்வதேச தனியார் விதை உரவியாபாரிகளின் கொள்கைக்கு பலியாக்கி இயற்கையை சீரழித்தல், ஈழத்தில் இரண்டு இலட்சம் தமிழ் உயிர்களை இனவெறி கொண்டு…

  24. இந்தியாவுக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் தேவயானி கோபர்கடே -- இந்திய அமெரிக்க உறவுகளில் நெருக்கடி விலகியது ? இந்தியத் துணைத் தூதர் தேவயானி, அமெரிக்காவை விட்டு வெளியேற்றப்பட்டதற்குப் பதிலடியாக, இந்தியா , டில்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திலிருந்து ஒரு அதிகாரியை வெளியேற உத்தரவிட்டிருக்கிறது. இது குறித்த மேலும் தகவல்கள் உடனடியாகத் தெரியவில்லை. தொடர்புடைய பக்கங்கள் தேவயானி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதியக் காலக்கெடுவை நீட்டிக்க நீதிமன்றம் மறுப்பு முன்னதாக , விசா மோசடி வழக்கில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு, இந்திய அமெரிக்க உறவுகளில் பெரும் சர்ச்சை ஏற்படக் காரணமாக இருந்த, இந்தியத் துணைத் தூதர் தேவயானி, அமெரிக்காவை விட்டு வெளியேறி இந்தியா திரும்பிக்கொண்டிருக்கிறா…

  25. பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், பாராளுமன்ற தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து விவாதிக்க தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த மாதம் 15–ந் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கும், பொதுச்செயலாளர் அன்பழகனுக்கும் வழங்கப்பட்டது. இந்த பொதுக்குழுவில் தென்மண்டல தி.மு.க. செயலாளர் மு.க.அழகிரி கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் தி.மு.க. நிர்வாகிகள் பெயருடன் ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. தி.மு.க. பொதுக்குழு மீண்டும் நடக்க இருப்பதாக மு.க.அழகிரி படத்துடன் அந்த போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. இதற்கு தி.மு.…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.