தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10294 topics in this forum
-
விளம்பரத்தில் நடித்ததன் மூலம் கிடைத்த 50 லட்சம் ரூபாய்யை அனிதாவின் நினைவாக அரியலூர் மாவட்டத்திற்கு கல்வி முன்னேற்றத்திற்காக வழங்கினார் மதிப்பிற்குரிய.அண்ணன்.திரு.#விஜய்_சேதுபதி அவர்கள்
-
- 0 replies
- 332 views
-
-
சசிகலா சிறை முறைகேடு – லஞ்ச முறைப்பாடு குறித்து விசாரிக்காதது ஏன்? ரூபா கேள்வி:- பெங்களூர் சிறையில் சசிகலா சிறப்பு சலுகை பெற்ற விவகாரத்தில், லஞ்ச முறைப்பாடு குறித்து விசாரணைக் குழு ஏன் விசாரிக்கவில்லை என கர்நாடக சிறைத் துறை முன்னாள் டிஐஜி ரூபா கேள்வி எழுப்பியுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் பரப்பனஅக்ரஹாரா மத்திய சிறையில் சிறை வைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் சிறைத்துறை டிஐஜி ரூபா, “சசிகலா, அப்துல் கரீம் தெல்கி உள்ளிட்ட கைதிகள் சிறையில் சிறப்பு சலுகைகளை அனுபவித்து வருகின்றனர். இதற்காக சிறைத் துறை டிஜிபி சத்தியநாராயண ராவ் உள்ளிட்ட அதிகாரிகள…
-
- 0 replies
- 337 views
-
-
"மேகதாது அணை" திட்ட அறிக்கை குறித்து... விவாதிக்க கூடாது – முதலமைச்சர் பிரதமரிடம் கோரிக்கை! மேகதாது அணை திட்ட அறிக்கை குறித்து விவாதிக்க கூடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு; இன்று கடிதம் எழுதியுள்ளார். குறித்த கடிதத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே, மேகதாது அணையைக் கட்டுவதற்கு கர்நாடக அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை எதிர்த்து தமிழ்நாடு அரசால் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் நிலுவையில் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலையில், மேகதாது அணைத் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை குறித்து எந்த விவாதத்தையும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மேற்கொள்ளக்கூடாது என அவர் த…
-
- 0 replies
- 236 views
-
-
இந்தியாவில் உள்ள இலங்கையர்கள் தாயகம் திரும்ப தயக்கம் - கள நிலவரம் பிரபுராவ் ஆனந்தன் பிபிசி தமிழுக்காக 5 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, கோப்புப்படம் இலங்கை இறுதி கட்ட போரின்போது இந்தியாவில் அகதியாக தஞ்சம் அடைந்த இலங்கை அகதிகளை மீண்டும் அவர்களின் தாயகத்துக்கே அழைத்து வர இலங்கை ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க குழு ஒன்றை நியமித்துள்ளார். ஆனால், தங்களுடைய இலங்கைக்கு திரும்ப பெரும்பாலான இலங்கை தமிழர்கள் விரும்பவில்லை என்று தமிழ்நாட்டில் வாழும் இலங்கை தமிழர்கள் தெரிவிக்கின்றனர். இலங்கையில் ஏற்பட்ட இறுதி கட்ட போரின் போது இந்தியாவுக்கு அகதிகளாக இடம்பெ…
-
- 1 reply
- 374 views
- 1 follower
-
-
தமிழ் மொழிக்கு ஒரு வரலாற்று நெருக்கடி எழுந்திருக்கிறது – வைரமுத்து ஹிந்தி திணிப்புக்கு எதிராக தமிழ் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கவிஞர் வைரமுத்து தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு 30 இற்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மத்திய அரசாங்கத்தின் ஹிந்தி திணிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் கண்டன முழக்கம் எழுப்பப்பட்டது. இதில் பேசிய கவிஞர் வைரமுத்து, “தமிழ் மொழிக்கு ஒரு வரலாற்று நெருக்கடி எழுந்திருக்கிறது. தமிழ் மொழிக்கு இது ஒன்றும் புதியதில்லை. தமிழை மதத்தால், அந்நிய படையெடுப்பால் அழிக்க பார்த்தார்கள் இப்போது சட்டத்தால் அழிக்க பார்க்கிறார்கள். இப்போது திணிக்கப…
-
- 0 replies
- 710 views
-
-
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் போராட்டங்களை நடத்தி வருவதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆகியோர் கண்டனம் தெவித்துள்ளனர். இது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது... சரஸ்வதி பூஜை, விஜயதசமி, பக்ரீத், தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் அதிமுக வினரின் போராட்டங்களால் பொதுமக்களும், வணிகர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளொன்றுக்கு சுமார் ஐந்தாயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருவதாக வணிகர் சங்கங்கள் தெரிவிக்கின்றன. எதற்கெடுத்தாலும் 144 தடை உத்தரவு போடும் அதிமுக அரசு மிகப்பெரிய அளவில் அசம்பாவிதங்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றும், தமிழ்நாட்டில் 144 தடை உத்தரவை அமல்படுத்தா…
-
- 0 replies
- 474 views
-
-
திருச்சியில் காலை 8 மணி முதல் பகல் 2 மணி வரை மட்டுமே ஜல்லிக்கட்டு! திருச்சியில் காலை 8 மணி முதல் பகல் 2 மணி வரை மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு போட்டியின்போது மாவட்ட நிர்வாகம் நேரடியாக 500 டோக்கன்களை மட்டுமே வழங்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இதேவேளை ஜல்லிக்கட்டு போட்டி நடத்தும் ஏற்பாட்டாளர்கள் டோக்கன்களை வழங்க முடியாது என மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல இடங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1319117
-
- 2 replies
- 286 views
-
-
சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த காடுவெட்டி குரு சிகிச்சைப் பலனில்லாமல் உயிர் இழந்தார். கடந்த மாதம் 12-ம் தேதி நுரையீரல் சம்பந்தமான நோயால் பாதிக்கப்பட்டு, சென்னை கிரீம்ஸ் ரோட்டில் அப்போலோ மருத்துவமனையில் காடுவெட்டி குரு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு, சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து அப்போலோ மருத்துவர்களுடன் அன்புமணி நடத்திய ஆலோசனையின்படி, காடுவெட்டி குருவுக்கு ஏற்பட்டுள்ள சுவாசப் பிரச்னையைத் தீர்க்க, மூச்சுக்குழலில் அறுவைசிகிச்சை செய்து சுவாசிக்கச்செய்யும் டிரக்கியாஸ்டமி(Tracheostomy) அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. மருத்துவர் பாபு மனோகர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் இந்தச் சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்தனர். இந்தப்பின் பா.ம.க இளைஞர…
-
- 4 replies
- 1.5k views
-
-
பெண்கள் விடுதியில் ரகசிய கேமராக்கள் பொருத்தியதாக விடுதி காப்பாளர் கைது செய்யப்பட்டார். சென்னை ஆதம்பாக்கத்தில் ஒரு தனியார் மகளிர் விடுதியில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்ததை விடுதியில் தங்கியிருந்த பெண்கள் கண்டறிந்துள்ளனர். பெண்கள் விடுதி சென்னை ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகரில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வீடுகளை வாடகைக்கு எடுத்து மகளிர் விடுதி நடத்துபவர் சம்பத்குமார் என்ற சஞ்சய் (45). வேலைக்குச் செல்லும் பெண்கள் அந்த விடுதியில் தங்கி இருந்தனர். …
-
- 1 reply
- 977 views
-
-
முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை Getty Images இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தமிழ்நாட்டிற்கு வரும்போதெல்லாம் அவருக்கு எதிராக ஒவ்வொரு முறையும் சமூக வலைதளங்களில் #GobackModi டிரெண்டாகிறது. ஆங்காங்கே கறுப்புக் கொடி போராட்டங்கள் நடைபெறுகின்றன. …
-
- 0 replies
- 594 views
-
-
பாம்பன் ரயில் பாலத்திலிருந்து முதல் ரயில் போக்குவரத்து ஆரம்பம் பாம்பன் ரயில் பாலத்திலிருந்து முதல் ரயில் போக்குவரத்து நாளை (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாம்பன் ரயில்வே தூக்குப்பாலத்தை நேற்று தெற்கு ரயில்வேயின் உதவி தலைமை பொறியாளர் ஸ்ரீகுமார் தலைமையிலான அதிகாரிகள் குழு ஆய்வு செய்தது. இதையடுத்த கருத்து தெரிவித்த அதிகாரிகள், பாம்பன் ரயில்வே தூக்குப்பாலத்தில் நடைபெற்று வந்த பராமரிப்பு பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ளன. ரயில் பாலம் அமைக்கப்பட்டு 100 ஆண்டுகளை கடந்துவிட்டதால் தொடர்ந்து கண்காணிப்பில் இருக்க வேண்டிய பாலமாகும். அதில் பொருத்தப்பட்டுள்ள இரும்புகளில் துருப்பிடிக்காமல் இருக்க 6 மாதங்களுக்கு ஒரு முறை அலுமினிய பூச்சு அடிக்கப்…
-
- 0 replies
- 535 views
-
-
ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலையான முருகன் என்ற ஸ்ரீஹரன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயகுமார் ஆகியோர் இலங்கை துணை உயர்ஸ்தானிகராலயத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மூவரும் நாளைய தினம்(13) இலங்கை துணை உயர்ஸ்தானிகராலயத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் சென்னை மேல்நீதிமன்றில் இதனை தெரிவித்துள்ளார். முருகன், ஜெயகுமார், ரொபர்ட் பயஸ் சகல நாடுகளுக்குமான கடவுச்சீட்டை பெறுவதற்காக இலங்கை உயர்ஸ்தானிகரகத்தினால் நடத்தப்படும் நேர்முகத் தேர்வில் பங்கேற்பதற்கு தமது கணவரை அனுமதிக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடக் கோரி முருகனின் மனைவியான நளினி சென்னை மேல் நீதிமன்றில் நீதிப்பேராணை மனுவொன்றை தாக்கல் செய்த…
-
-
- 11 replies
- 1.2k views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 36 நிமிடங்களுக்கு முன்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் விவிபேட் - VVPAT (Voter-Verified Paper Audit Trail) இயந்திரங்கள் மூலம் பெறப்பட்ட ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்க முடியுமா என்று அரசாங்கம் மற்றும் தேர்தல் ஆணையத்திடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தற்போது இருக்கும் நடைமுறையில், ஒவ்வொரு தொகுதியிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட தலா ஐந்து வாக்குப்பதிவு இயந்திரங்களின் ஒப்புகைச் சீட்டுகள் மட்டுமே எண்ணப்படுகின்றன. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீது அரசு மற்றும் தேர்தல் ஆணையத்திடம் நீதிமன்றம் பதில் கோரியுள்ளது. அருண்குமார் அகர்வால் தாக்கல் செய்த மனுவைத் தொடர்ந்து நீதிபதிகள் பி.ஆர்.கவ…
-
- 1 reply
- 238 views
- 1 follower
-
-
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:– ’’தமிழ்நாடு அரசு, சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள நீர் நிலைகளை சீரமைத்திட அனைத்து சார் துறைகளுடன் ஒருங்கிணைந்து செயலாற்றும் பணியை சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மூலம் மேற்கொண்டு வருகிறது. கூவம் நதியை முழுமையாகச் சீரமைத்து மீட்டெடுப்பதற்கான ஒரு பெரும் திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தை, ‘சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை’ ஒருங்கிணைப்பு அமைப்பாக இருந்து செயல்படுத்தும் என்று 2014–2015 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது. அதன்படி கூவம் நதியை முழுமையாகச் சீரமைத்திட ஒருங்கிணைந்த கூவம் நதிசுற்றுச் சூழல் சீரமைப்புத் திட்டப் பணிகள் மூன்று கட்டங்களாக செயல்படு…
-
- 1 reply
- 288 views
-
-
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி – ஸ்டாலின் தமிழகத்தில் அ.தி.மு.கவின் ஆட்சி கவிழப்போவது உறுதி எனவும் விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் எனவும், தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “அ.தி.மு.கவின் ஆட்சிக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகாலம் மட்டுமே ஆயுள் இருக்கிறது. ஆயுள் முடிந்து ஆட்சி மாற்றமா? அல்லது ஆயுள் முடிவதற்கு முன்பே ஆட்சி மாற்றமா? என்ற கேள்வி தொடர்ந்து நிலவிவருகின்றது. இருப்பினும் விரைவில் இந்த ஆட்சி கவிழப்போகிறது என்பதை யாரும் மறுத்துவிட முடியாது” என குறிப்பிட்டுள்ளார…
-
- 0 replies
- 633 views
-
-
தமிழகத்தில் இந்தியை திணிக்கவில்லை - நிர்மலா சீதாராமன் தமிழகத்தில் இந்தி திணிப்பை மோடி அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, “கல்வி, தொழில் என அனைத்து பரிமாணங்களிலும் இந்தியர்கள் முன்னேறி வருகின்றனர். அடுத்த தலைமுறையில் இந்தியர்களே மற்ற நாட்டவர்களுக்கு குருவாக இருப்பார்கள். தொழில்முனைவோரை உருவாக்கிடவும், தொழில்களை பெருகிடவும் அரசு சார்பில் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும். சூட்கேஸ்கள் ஆங்கிலேயரின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தக் கூடியது. நமது கலாச்சாரத்தை பின்பற்றும் நோக்கில் தான் வரவு செலவு திட்டம் சாதாரணமாக தாக்கல் செய்யப்பட்…
-
- 0 replies
- 545 views
-
-
மாட்டிறைச்சி சந்தையை குறி வைத்தே ஜல்லிக்கட்டு தடை செய்யப்படுகின்றதா....? [Sunday 2016-01-17 08:00] கடந்தாண்டு ஜல்லிக்கட்டு நடைபெறாததால் 80 ஆயிரம் காளைகள் விற்கப்பட்டதாக ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், மாட்டிறைச்சி சந்தையை குறி வைத்தே ஜல்லிக்கட்டு தடை செய்யப்படுவதாகவும் குற்றம்சாட்டுகின்றனர்.இந்தத் தடையால் நாட்டு மாடுகள் அடியோடு அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.ஏர் பூட்டி நடத்தப்படும் விவசாயம் முற்றிலுமாகக் கைவிடப்பட்டு, டிராக்டர் மூலம் உழுகிற விவசாயத்துக்குக் காளை மாடுகள் பயன்படுத்தப்படுவது இல்லாமல் ஆகிவிட்டது. அதேபோல காளை மாட்டு வண்டிகளும் அடியோடு மறைந்துவிட்டன.இந்த நிலையில், இன விருத்திக்காக மட்டுமே ஜல்லிக்கட்டு காளைகள் …
-
- 0 replies
- 2.3k views
-
-
பறை இசைத்து மகிழ்ந்த பேரறிவாளன் மின்னம்பலம் ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் கைதியாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் ஒரு மாத பரோலில் கடந்த வாரம் வெளியே வந்தார். ஜோலார்பேட்டையில் தனது இல்லத்தில் தங்கியிருந்த பேரறிவாளன், தனது சகோதரி மகள் செவ்வை திருமணத்தை முன்னிட்டு நேற்று (நவம்பர் 23) மாலை கிருஷ்ணகிரி சென்றார். தனது சகோதரி மகள் திருமணத்தில் கலந்துகொண்டு உற்றார் உறவினர்களைப் பார்த்து மகிழ்ந்த பேரறிவாளன் திருமண மேடையில் பறை இசைக் கருவியை இசைத்து மகிழ்ந்த காட்சி இப்போது சமூக தளங்களில் பலரையும் கவர்ந்து வருகிறது. திருமண மண்டபத்திலும் பேரறிவாளனைச் சுற்றி போலீஸார் நிற்க, அவரது உறவினர்கள், நண்பர்கள், அரசியல் கட்சியினர் பல்வேறு இயக்கத்தினர் பலபேர் வந்து பேரறி…
-
- 3 replies
- 1.4k views
-
-
மீண்டும் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய இளங்கோவன்: வேலூரில் பரபரப்பு! சென்னை: வேலூரில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தமிழக தலைவர் இளங்கோவன், மீண்டும் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டையில் காங்கிரஸ் கட்சியின் 131வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர். குஷ்பு பேசுகையில், ''அம்மா குடிநீர், அம்மா உப்பு என அனைத்திலும் அம்மா ஸ்டிக்கர் ஒட்டி அம்மா புகழ் பாடுகிறார்கள். அதேபோல், ஜட்டியில் போட்டோ ஒட்டியவரை பிடித்து உள்ளே தள்ள தனிப்படை அமைச்சாங்க. மதுவுக்கு எதிராக பாடல் பாடிய …
-
- 0 replies
- 515 views
-
-
சென்னை அயனாவரத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட விவகாரத்தில் நான்கு பேருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஒன்பது பேருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் மாற்றுத் திறனாளியான பதினொரு வயது சிறுமி ஒருவர் பல மாதங்களாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானார் என்று குற்றம்சாட்டப்பட்டது. இந்த விவகாரம் 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியானபோது இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. …
-
- 0 replies
- 548 views
-
-
அருணாச்சலம் பெயர் சர்ச்சை: திருவண்ணாமலை கோவில் கல்வெட்டுகள் கூறும் வரலாற்று உண்மை கட்டுரை தகவல் மாயகிருஷ்ணன் கண்ணன் பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் திருவண்ணாமலையை அருணாச்சலம் என்ற பெயரில் குறிப்பிட்டது அண்மையில் சலசலப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக ஆந்திராவுக்கு இயக்கப்பட்ட அரசுப்பேருந்துகளில் அருணாச்சலம் என்று பெயர்ப்பலகை வைக்கப்பட்டிருந்தது சமூக ஊடகங்களில் விவாதங்களை எழுப்பியது. இதற்கான எதிர்வினையைத் தொடர்ந்து அரசு உத்தரவுப்படி, பேருந்துகளில் மீண்டும் திருவண்ணாமலை என்ற பெயரே பயன்படுத்தப்படுகிறது. அரசுப் பேருந்துகளில் திருவண்ணாமலையை அருணாச்சலம் என்ற பெயரில் குறிப்பிட்டது ஏன்? அதன் வரலாற்றுப் பின்னணி என்ன? சர்ச்சையின் பின்னணி என்ன…
-
- 0 replies
- 346 views
- 1 follower
-
-
நான் எதிர்பார்த்த தோல்விதான் இது..! வைகோ தடாலடி 'தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தோல்வியை எதிர்பார்த்து அதை முழுமையாக எதிர்கொள்ள தயாராகவே இருந்தேன்' என மக்கள் நலக்கூட்டணி ஒருங்கிணைப்பாளரும், ம.தி.மு.க. பொதுச்செயலாளருமான வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், மக்கள் நலக்கூட்டணியின் தோல்வியை எதிர்பார்த்தேன். பிரசாரத்தின் கடைசி 3 நாட்களில் சில மாற்றங்கள் தென்பட்டன. பிரசாரத்தின் ஆரம்ப காலத்தில் இருந்த எழுச்சி, ஆர்வம் போன்றவை வாக்காளர்கள் மத்தியில் குறைந்து காணப்பட்டது. நான் கடந்த 1964ம் ஆண்டில் இருந்து பல்வேறு தேர்தல்களை சந்தித்து வருகிறேன். மக்கள் மனநிலையை என்னால் அறிய முடியும். அப்போதே எங்கள் கூட்டணிக்கு ஏற்பட்டுள்ள…
-
- 0 replies
- 443 views
-
-
தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 59 ஆக அதிகரிப்பு.. யார் யாருக்கு பொருந்தும்! தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58ல் இருந்து 59 ஆக அதிகரித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணை உடனடியாக அமலுக்கு வருவதாக முதல்வர் அறிவித்துள்ளார். தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது தற்போது வரை 58 ஆக இருந்து வருகிறது. இந்நிலையில் அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளில் ஒன்றான ஓய்வு பெறும் வயதை 58ல் இருந்து 59 வயதாக அதிகரித்து தமிழக அரசு இன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இந்த உத்தரவு அனைத்து தமிழக அரசு ஊழியர்கள், அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்று …
-
- 1 reply
- 736 views
-
-
ஐ.நா.நல்லெண்ண தூதராக தேர்வானார் மதுரை சலூன் கடைக்காரரின் மகள் ஐ.நா.நல்லெண்ண தூதராக மதுரை சலூன் கடைக்காரரின் மகளான மாணவி நேத்ரா தேர்வாகியுள்ளார். மனைவி மற்றும் மகளுடன் மோகன். மதுரை: மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஊரடங்கு தொடங்கிய நாளில் இருந்து பலர் உதவி செய்து வருகின்றனர். மதுரையில் மேலமடையில் வசித்து வருபவர் மோகன். 47 வயதான மோகன், சலூன் நடத்தி வருகிறார். ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 5 கிலோ அரசி, காய்கறிகள், பலசரக்கு சாமான்கள் மற்றும் சமையல் எண்ணெய் போன்றவற்றை வழங்கி வருகிறார். இதற்காக தனது மகள் நேத்ராவின் பட…
-
- 2 replies
- 849 views
-
-
இரண்டாவது நாளாக தொடரும் தூய்மை பணியாளர்கள் சம்பள உயர்வு போராட்டம்
-
- 0 replies
- 403 views
-