Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. 2013ல் தமிழகத்தில் அதிகம் பேசப்பட்ட அரசியல்வாதி யார். thatsTamil - Oneindia.in மேற்கொள்ளும் வாக்கெடுப்பு. கருணாநிதி ஜெயலலிதா வைகோ விஜயகாந்த் தா. பாண்டியன் வாக்களிக்க இந்த இணைப்பிற்கு செல்லுங்கள். http://polls.oneindia.in/view/7/4753/poll-statistics.html

  2. இலங்கை அமைச்சகத்துக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் மூலமாக கண்டன அறிக்கையும், இலங்கை அதிபருக்கு பிரதமர் நேரடியாக தொடர்பு கொண்டு கடும் கண்டனத்தையும் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்று தமிழக மீனவர்கள் பிரச்னை குறித்து பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழக மீனவர்களின் நிலை குறித்தும், இலங்கை கடற்படையினர் செய்து வரும் அட்டூழியம் குறித்தும், உங்களுக்கு பல முறை வலியுறுத்தி கடிதங்களை எழுதியுள்ளேன். தமிழக அப்பாவி மீனவர்களை இலங்கை கடற்படையினரிடம் இருந்து பாதுகாக்கவும், தமிழக மீனவர்களுக்கு இந்திய கடல் எல்லையில் இருக்கும் மீன்பிடி உரிமையை நிலைநாட்டவும் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளேன்…

  3. சென்னை: லோக்சபா தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி இல்லை என்று திமுக திட்டவட்டமாக அறிவித்துவிட்டதால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியினர் பீதியில் உறைந்து போயுள்ளனர். லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் பாஜக தலைமையில் மதிமுக, பாமகவை இணைவது உறுதியாகி இருக்கிறது. அதே நேரத்தில் திமுகவோ அதிரடியாக காங்கிரஸை கழற்றிவிட்டு பரபரபை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே திமுக, பாஜகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் கதவுகளை திறந்து வைத்து காத்திருந்தது. இந்த நிலையில் தற்போது காங்கிரஸுக்கான கதவை அடைத்துவிட்டது திமுக. பாஜகவுடன் கூட்டணி அமைப்பதும் சந்தேகம் என்ற தொனியையும் திமுக உருவாக்கியிருக்கிறது.இதேபோல் திமுக அல்லது அதிமுகவின் தோளில் சவாரி ஏறலாம் என்று காத்திருந்த காங்கிரஸ் கட்சிக்கு இப்போது திமுகவின் கதவு மூடப…

  4. குடிக்கிறது பெரிய தப்பா... அப்புறம் எதுக்கு தமிழ்நாடு முழுக்க டாஸ்மாக் கடைகள்? - விஜயகாந்த் - சென்னை: குடிக்கிறேன் குடிக்கிறேன் என்று சொல்கிறார்கள். யாருமே இங்கு குடிக்கவில்லையா? குடிக்கிறது பெரிய தப்பா என்ன? அப்புறம் எதுக்கு தமிழ்நாடு முழுவதும் கடையை திறந்து வச்சிருக்கீங்க", என்று கேள்வி எழுப்பினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் அறிமுகமாகும் சகாப்தம் படத்தின் தொடக்க விழா இன்று சென்னையில் விஜயகாந்த் வீட்டில் நடந்தது. இந்த விழாவில் மகனை அறிமுகப்படுத்திவிட்டு விஜயகாந்த் பேசியதாவது: இது அரசியல் விழா அல்ல; இருந்தாலும் சொல்கிறேன், சில பேர் ஜெயலலிதாவுக்கு பயந்துகொண்டு இங்கு வராமல் இருக்கிறார்கள். வாழ்த்தியவர்களுக்கு என் நன்றியை த…

  5. 14/12/2013 சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு, அனைத்திந்திய முஸ்லீம் முன்னேற்றக் கழகம் ஆதரவு தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்பதற்காக அனைத்து கட்சிகளும் தயாராகி வருகிறது. இந்நிலையில், பா.ஜ.க.வின் தேர்தல் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டதில் இருந்து, அவர் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி வைக்கலாம் என ஒவ்வொரு கட்சி தலைமையும் ஆலோசித்து வருகிறது. இதேபோன்று தமிழ்நாட்டில் பா.ஜ.க. தலைமையில் பல்வேறு கட்சிகளை சேர்த்து கூட்டணி அமைக்கும் முயற்சிகளும் நடந்து வருகின்றன. பா.ஜ.க. கூட்டணியில் ம.தி.மு.க. சேர்வது உ…

  6. இலங்கையின் போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மீது நம்பகமானதும், சுதந்திரமானதுமான சர்வதேச விசாரணை நடத்தவும் மத்திய அரசு, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று திமுக வலியுறுத்தியுள்ளது. மேலும், விலைவாசி உயர்வுக்கு மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனம், மீனவர் பிரச்சினையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள், திமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. சென்னையில் இன்று திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நடந்த அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில், தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்தும், மத்திய அரசும், மாநில அரசும், இதுவரையிலும் உரிய நடவடிக்கை எதையும் மேற்கொள்ளவில்லை. இரு நாட்டு மீனவப் பி…

  7. பாஜக தலைமையில் புதிய கூட்டணி- திமுக, அதிமுகவுக்கு இடம் கிடையாது: இல.கணேசன். சென்னை: திமுக, அதிமுக இல்லாத புதிய கூட்டணி பாஜக தலைமையில் அமைக்கப்படும் என்று பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் தெரிவித்துள்ளார். இல்லம்தோறும் மோடி உள்ளம் தோறும் தாமரை என்ற வாசகத்துடன் கூடிய கிராம யாத்திரை பாஜக சார்பில் நடத்தப்பட்டது. சென்னை மேடவாக்கத்தில் பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் கடந்த 1ம் தேதி யாத்திரையை துவக்கினார். இந்நிலையில் நேற்று யாத்திரையின் நிறைவு நாள் நிகழ்ச்சி நடந்தது. அப்போது நடந்த பொதுக் கூட்டத்தில் இல. கணேசன் பேசுகையில், தமிழகத்தில் திமுக, அதிமுக இல்லாத புதிய கூட்டணியை பாஜக தலைமையில் உருவாக்க நாங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். இந்த புதிய கூட்டணியில் மதிமுக உள்ள…

  8. இராஜிவ் கொலைவழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடம் வாக்குமூலம் வாங்கிய அதிகாரியான தியாகராஜன். அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தை நான் சரியாக பதியவில்லை என்று தான் தவறு செய்துவிட்டேன் என்று சொல்கிறார். இவர்களுக்கு தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளில் ஒருவரான K.T.தாமஸ் இந்த தீர்ப்பை தவறு என உணர்கிறேன் என்று சொல்கிறார். இந்த வழக்கை தடா சட்டத்தின் படி விசாரித்த போலிஸ் அதிகாரிகளில் ஒருவரான ஜெபமணி மோகன்ராஜ் தவறு செய்தவர்கள் பெரிய பெரிய பதவிகளில் இருப்பவர்கள் ஆனால் அநியாயமாக இவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள் என்று தொடர்ந்து சொல்லி வருகிறார். இவ் மூவருக்கும் தூக்கு தண்டணை கொடுத்தது தவறு என முன்னாள் நீதிபதிளே பல முறை சொன்ன பின்னும் 22ஆண்டுகள் தனிமை சிறைக்கு பின்னும் இவர்களை தூக்கில் க…

  9. மணலும் மண்ணும் வரும் தலைமுறைக்கும் வேணும் அள்ளிய மணலால் ஆறெல்லாம் மலடாக தீர்த்தவாரிக்கென வந்த கடவுள் திகைத்து நின்றார் தீர்த்தமற்ற ஆற்றைக் கண்டு. கொண்டுவந்த தண்ணீரால் குளித்துக் கரையேறி கருவறை புகுந்தார் அழிக்கும் மனித சக்தியின் அளவில்லா மகத்துவம் அறிந்து! ● கே. ஸ்டாலின் சித்திரை மாத வெயில் உக்கிரமாக இருக்கும் வேளையில், வேப்பமரத்து நிழல்போர்த்துள்ள ஓடையில் கையை தலைக்கு வைத்து மேலாடை இல்லாவெற்றுடம்பில் உறங்கிய அனுபவம் இருக்கிறதா? மணலின் சிறு துகள்உடம்பை மெதுவாக அக்குபிரசர் செய்யும். அந்தச் சுகத்தில் உறக்கம் கிறக்கம்கொள்ளும். குளு குளு அறைகள் கொடுக்காத சுகத்தை கிராமத்து ஓடைகள்கொடுத்தன. இன்றைய நவீன யுகம் அந்த ஓடைகளையெல்லாம் கெடுத்தன…

  10. மதுரைக்காரங்க பாசக்காரப் பயலுகய்யா... நெதர்லாந்து நாட்டுக்காரரின் சந்தோஷ வியப்பு! மானாமதுரை: இந்தியாவிலேயே தமிழகம்தான் மிகவும் பாதுகாப்பான மாநிலம், அதிலும் மதுரைக்காரரர்கள் மிகவும் பாசக்காரர்கள் என சைக்கிளிலேயே உலக சுற்றுப்பயணம் செய்யும் நெதர்லாந்து சுற்றுலா பயணி தெரிவித்துள்ளார். நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் ராபர்ட் ஜான். 53 வயதாகும் ராபர்ட் ஜானிற்கு சைக்கிளில் உலகை வலம் வருவது மிகவும் பிடித்தமான ஒன்று. இதுதவிர நீச்சல், பனிச்சறுக்கு உள்ளிட்ட விஷயங்களில் ஆர்வம் உள்ளவர். கடந்த நவம்பர் மாதம் இந்தியா வந்துள்ளார். நாட்டின் முக்கிய இடங்களை சைக்கிளிலேயே வலம் வந்துள்ளார். கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் வழியே சைக்கிளில் சென்று வழிபாட்டுத் தலங்க…

  11. 15/12/2013 திருப்பூர்: மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு தமிழர்கள் மீது துளி கூட அக்கறை இல்லை என்று சீமான் குற்றம்சாட்டியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திருப்பூரில் நிருபர்களை சந்தித்தார். அப்போது, ''பகை நாடாக உள்ள பாகிஸ்தான் கூட மீனவர்களை சுட்டுக் கொல்வது இல்லை. ஆனால் நட்பு நாடு என்று பெயர் கொண்ட இலங்கை, தமிழக மீனவர்களை சிறைபிடித்து செல்வது, சுட்டுக்கொல்வது போன்ற சம்பவங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது. தமிழர்களை வஞ்சித்து வரும் இலங்கை அரசுக்கு போர்க்கப்பல்களை பரிசாக இந்தியா வழங்குகிறது. மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு தமிழர்களை பற்றி துளி கூட அக்கறை இல்லை. வருகிற தேர்தலில் தமிழர்களாகிய நாம் ஒன்றுபட்டு காங்கிரசின் அதிகாரத்த…

  12. கேடு, கேடு தவிர வேறில்லை ***************************** மண மேடைக்கு மப்பில் வந்தார் மாப்பிள்ளை: திருமணத்தை நிறுத்தினார் மணப்பெண். வேனில் ரோந்து சென்றபோது போதையில் மட்டையான போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட். போதையில் துப்பாக்கி தூக்கிய தந்தையிடம் இருந்து தாயை மீட்க முயன்ற மகன் கொலை. மூன்றும் நேற்றைய தினகரன் இதழில் இடம்பெற்ற தலைப்புகள். சாத்தான்குளம், பென்னாகரம், செங்கம் ஆகிய சிற்றூர்களில் நடைபெற்ற சம்பவங்கள் தமிழ்நாட்டின் இன்றைய சமூக நிலவரத்தை பட்டவர்த்தனமாக எடுத்துக் காட்டுகின்றன. 10 பவுன் நகை, 25,000 ரொக்கம் வரதட்சணை வாங்கியவர்கள் மாப்பிள்ளையை அழைத்து வருகிறார்கள். சிறுநீர் கழிக்கப் போவதாக சொல்லி மது அருந்தி தாமதமாக வந்தவர் மேடையில் அமர முடியாமல் அப்படியே சர…

  13. எம்.எல்.ஏ. பதவியிலிருந்து விலகுவது தொடர்பான தனது முடிவை சட்டசபை சபாநாயகர் தனபாலுக்கு பண்ருட்டியார் அனுப்பி வைத்துள்ளார். அதில், உடல் நிலை சரியில்லாததாலும், வயதானதாலும் எனது எம்.எல்,ஏ., பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று அவர் கூறியுள்ளார். மேலும், தேமுதிக பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். அதேபோல தீவிர அரசியலை விட்டு விலகுவதாகவும் அவர் அறிவித்துள்ளார். கடந்த சட்டசபைத் தேர்தலில் ஆலந்தூர் தொகுதியிலிருந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பண்ருட்டி ராமச்சந்திரன். சட்டசபைத தேமுதிக துணைத் தலைவராகவும், தேமுதிக அவைத் தலைவராகவும் இருந்து வந்தார் பண்ருட்டியார். பண்ருட்டி தொகுதியிலிருந்து 6 முறை சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அவர். கடைசியாக ஆலந்தூர் தொகுதி…

  14. சென்னை: சென்னையில் நடைபெற்ற உயிர்வலி ஆவணத் திரைப்பட திரையீட்டு விழாவில் பங்கேற்ற அற்புதம்மாளிடம் சரமாரியான கேள்விகளை மாணவர்கள் கேட்டனர். சென்னை லயோலாக் கல்லூரி மாணவர் விடுதி அரங்கத்தில் கடந்த 05.12.2013 வியாழக்கிழமை இரவு 8.30 மணியளவில் "உயிர்வலி" ஆவணத் திரைப்படம் திரையிடப்பட்டது. இந்த விழாவிற்கு, மரண தண்டனை எதிர்ப்பு இயக்கத்தைச் சேர்ந்தவரும் உயிர்வலி ஆவணப்படத்தின் இயக்குனருமான செல்வராஜ் முருகையன், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், சேஷு சபையின் சென்னை மிஷனைச் சேர்ந்த அருட்தந்தை ஜெபமாலை, ஸ்டூடன்ஸ் ஜெராக்ஸ் உரிமையாளர் சௌரிராஜன் மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்கள் பங்கேற்றனர். உயிர்வலி ஆவணப்படம், விழாவில் பங்கேற்ற சுமார் 900க்கும் மேற்பட்ட மாணவர்களையும் அமைதியாக கட்டிப்…

  15. அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸுக்கு எதிரான மனநிலை: ராமதாஸ் அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸுக்கு எதிரான மனநிலையே காணப்படுகிறது என்பதை இந்தத் தேர்தல் காட்டுகிறது என்று கூறியுள்ளார் பாமக நிறுவுனர் ராமதாஸ். 4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்தவாறே அமைந்துள்ளன. ஏற்காடு இடைத்தேர்தல் முடிவும் அப்படியே அமைந்துள்ளன. மத்தியில் 2-ஆம் முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு காங்கிரஸ் கட்சி மக்களை மதிக்காமல் நடந்துகொண்டது. நாட்டைப் பாதிக்கும் வகையில் அலைக்கற்றை ஊழல், நிலக்கரி ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல் ஆகியவற்றைச் செய்த காங்கிரஸ் அரசு, மக்களைப் பாதிக்கும் வகையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வு என்று புதுப்புது பெயர்களில் வரிகள…

    • 0 replies
    • 514 views
  16. சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்கு கடந்த 4ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது. மொத்தம் 21 சுற்றுகள் கொண்ட இந்த வாக்கு எண்ணிக்கையில், 15 சுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக 1,08,298 வாக்குகள் பெற்றுள்ளது. திமுக 51,232 வாக்குகள் பெற்றுள்ளது. நோட்டோவுக்கு 3,299 வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிமுக 57 ஆயிரம் வாக்குகள் முன்னிலையில் உள்ளது. செய்தி :nakkiiran.

  17. BT பருத்தியும் தமிழகமும் கடந்த சில வருடங்களாக ஊடகங்களை தொடர்ந்து படித்து வருபவர்களுக்கு மான்சான்டோவின் மரபணு மாற்ற பருத்தியை எதிர்த்து இந்தியாவில் முக்கியமாக தமிழகத்தில் விவசாயிகள் மிக பெரிய அளவில் எதிர்த்து அதை தமிழகத்திலிருந்தே துரத்தி அடித்த செய்தி தெரிந்திருக்கும். இந்த மரபணு மாற்ற பருத்திக்கு எதிராக தினமும் ஊடகங்களிலும் செய்தி வருவது வாடிக்கையாக உள்ளது. இந்த முறை இந்தியா சென்ற போது மரபணு பருத்தியின் எச்சங்கள் எங்காவது தென் படுகிறதா என்று எட்டி பார்க்கலாம் என பருத்தி நிறைய வளரும் ஆத்தூர் பக்கம் போய் பார்த்தேன்ஆத்தூரில் உள்ள பிரபல வேளாண் இடுபொருள் கடைக்கு சென்றிறுந்தேன். அந்த கடை நிறுவனரிடம் இப்பெல்லாம் இந்த பக்கம் எந்த பருத்தி அதிகம் பயிரிடுகிறார்கள் என்…

    • 0 replies
    • 1.1k views
  18. முள்ளி வாய்க்கால் நினைவு முற்றத்திற்கு எதிரான தமிழக அரசின் மனுவை, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ய உத்தரவிட்டுள்ளது. முள்ளி வாய்க்கால் நினைவு முற்றத்திற்கு அனுமதி தரக்கூடாது என்று கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கறிஞர் கிரி தாக்கல் செய்த இந்த மனுவை நீதிபதிகள் சந்திர மௌலி, குரியன் ஜோசப் அடங்கிய குழு விசாரணை செய்தது. தமிழக அரசின் இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், முள்ளி வாய்க்கால் நினைவு முற்றத்திற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். - See more at: http://www.onlineuthayan.com/News_More.php?id=565022492306289846#sthash.OppsIsdJ.dpuf

    • 2 replies
    • 487 views
  19. இலங்கை விவகாரங்கள் குறித்து நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் பிரச்சினையை எழுப்ப தமிழக அரசியல் கட்சிகள் திட்டமிட்டிருக்கின்றன. இலங்கைத் தமிழர் விவகாரம், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சிறைப்பிடிக்கப்படும் நடவடிக்கை, பொதுநலவாய நாடுகள் கூட்டத்தில் இந்தியா பங்கேற்றது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் தீவிரமாக எழுப்ப தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தவிர்த்த அரசியல் கட்சிகள் முடிவு செய்துள்ளன. டி.ஆர். பாலு இது தொடர்பாக திராவிட முன்னேற்ற கழகத்தைச்சேர்ந்த டி.ஆர். பாலு கூறுகையில், இலங்கை படையினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கக் கூடாது, இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகள் கூட்டத்தில் தமிழகக் கட்சிகளின் எதிர்ப்பை மீறி இந்தியா பங்கேற்றது தொடர்பாக விளக்கம் கேட்டும் நோட்டீ…

  20. நிருபர்:இறுதி போரின் போது முன்னாள் முதல்வர் கருணாநிதி தீடிரென்று ஏன் ஒரு உண்ணாவிரத நாடகத்தை நடத்தினார்?அல்லது எந்த அடிப்படையில் போர் நின்றுவிட்டது என்று உலகக்கு அறிவித்தார். மே 17 திருமுருகன் பதில்: கருணாநிதியின் இந்த உண்ணாவிரதத்திற்க்கு பின் மிகப்பெரிய ஒரு நாடகம் நடந்திருக்கிறது.அது என்னவென்றால் ஏப்ரல் 23’ 2009 அன்று போரில் நெருக்கடி அதிகமாகிறது.அதாவது 2009 ஏப்ரல் இராண்டாவது வாரத்தில் தாக்குதல் என்பது மிகக்கொடூரமாக நடக்கிறது பல்லாயிரக்காண மக்கள் கொல்லப்படுகிறார்கள்.இந்த நிலையில் அமெரிக்காவின் தூதர் பெர்லே இந்தியாவின் அதிகாரிகளான சிவசங்கர் மேனன் மற்றும் M.K.நாரயணன் ஆகியோரை கூப்பிட்டு இலங்கையில் உடனே போர் நிறுத்ததை கொண்டு வாருங்கள் என்று கேட்கிறார்.அதற்க்கு இவர்கள் இத…

  21. சென்ற சனியன்று (30/11/13) சென்னையில் உட்லண்ட்ஸ் ஓட்டல் மண்டபத்தில் ‘இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமையும் மத்திய அரசின் நிலையும்’ என்கிற தலைப்பில் பேசும்போது மத்திய அமைச்சர் திரு.ப.சிதம்பரம் அவர்கள் சில விஷயங்களை வலியுறுத்திப் பேசினார். சுருக்கமாக - 1) இலங்கையில் இறுதிப் போரில் 65 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். இலங்கையின் உள்நாட்டுப் போரை நிறுத்த, இந்திய அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டது. ஆனால், இலங்கை அரசும் புலிகள் தரப்பிலும் அதற்கு செவிசாய்க்கவில்லை. இந்திய அரசின் முயற்சிக்கு இரு தரப்பினரும் உடன்பட்டிருந்தால், பிரபாகரன் உயிருடன் இருந்திருப்பார். இனப் படுகொலை நடந்திருக்காது. (குறிப்பு - இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டது என்று திரு ப.சிதம…

  22. மரபணு மஞ்சள் வாழைப்பழம்: ----------------------------------- முன்பெல்லாம் டாக்டர்கள் தினமும் ஓரு வாழைப்பழமாவது சாப்பிடுங்கள், உடம்புக்கு ரொம்ப நல்லது என்பார்கள். ஆனால் தற்போது மரபணு மாற்று பெரிய மஞ்சள் வாழைபழத்தை சாப்பிடவே வேண்டாம் என்று எச்சரிக்கிறார்கள். காரணம் தற்போது சென்னை வாசிகள் பெரும்பாலோர் உடலில்-தொண்டையில் அலர்ஜி, சைனஸ், தும்மல், வயிற்றுக்கோளாறு, வயிற்றுவலி, சிறுநீரக கற்கள், அடிக்கடி தலைவலி, புட் பாய்சன்... என்று கடுமையாக அவதிப்படுகிறார்கள். இவர்களை நோயாளிகளாக மாற்றியது இந்த மரபணு மாற்று மஞ்சள் வாழைப்பழங்கள் தான். இயற்கையான வாழைப்பழம் பழுத்தால் இரண்டொரு நாளில் அழுகிவிடும். இயற்கையான மஞ்சள், பச்சை வாடன், ரஸ்தாளி, மலைபழம், தேன்கதளி, நாட்டுப்பழம், நாட்டு…

    • 7 replies
    • 1.4k views
  23. முள்ளிவாய்க்கால் முற்றத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அண்ணன் சீமான். (facebook)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.