தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10293 topics in this forum
-
கோவை : கோவையில் தி.மு.க. மகளிரணிச் செயலாளர் கனிமொழி நடுரோட்டில் நின்று பேசும்போது நோயாளியுடன் சென்ற ஆம்புலன்ஸ்க்கு தி.மு.க.வினர் வழிவிட மறுத்தனர். அவர்களை வழிகொடுக்கச் சொல்ல வேண்டிய கனிமொழி மாற்று வழியில் போகச் சொல்லி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். எம்.பி. கனிமொழி 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று மாலை கோவை - மருதமலை ரோட்டிலுள்ள பாப்பநாயக்கன் புதுார் என்ற பகுதியில் தி.மு.க. சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றார். தி.மு.க. கொடியை ஏற்றி வைத்து கருணாநிதி படத்துக்கு மாலையணிவித்த அவர் வேனில் ஏறி சிறிது நேரம் பேசினார். மருதமலையிலிருந்து கோவை செல்லும் ரோட்டை மறித்து அவரது வாகனம் நிறுத்…
-
- 0 replies
- 650 views
-
-
கோவை: வணிக வளாகம் கட்ட ரூ20 லட்சம் செலவில் 35 அடி தூரம் செயற்கையாக நகர்த்தப்பட்ட வீடு. கோவை: கோவையில் பெரிய பங்களா வீட்டை பாதியாக பிரித்து, அதில் ஒரு பாதியை 35 அடி தூரத்திற்கு நகர்த்தி தனியார் நிறுவனம் சாதனை படைத்துள்ளது. கோவை, சாய்பாபா காலனியில் உள்ள மூன்று தலைமுறை பழமையான மாடி வீடொன்று அதன் உள்ளே உள்ள அனைத்து பொருட்களுடனும் 35 அடி தூரம் நகர்த்தி வைக்கப்பட்டது. வீட்டை நகர்த்தும் இம்முயற்சியை ஹரியானாவைச் சேர்ந்த கட்டுமானக் கம்பெனி ஒன்று வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது. இது குறித்து அவ்வீட்டின் உரிமையாளரின் தந்தை ஆறுச்சாமி கூறியதாவது, ‘ கோவை மேட்டுப்பாளையம் சாலையில் எனது மகன் தங்கவேலுக்கு சொந்தமாக 2400 சதுர அடி பரப்பளவில் முதல் தளத்துடன் கூடிய வீடு உள்ளது. கடந…
-
- 1 reply
- 680 views
-
-
மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசனை குறிவைத்து வருமான வரித்துறை சோதனை பட மூலாதாரம், GETTY IMAGES தி.மு.க தலைவர் ஸ்டாலின் மருமகன் சபரீசன், அண்ணா நகர் எம்.எல்.ஏ மோகன் மகன் கார்த்திக் உள்பட தி.மு.க தலைமைக்கு வேண்டியவர்களின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. என்ன காரணம்? சென்னை நீலாங்கரையில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் மகள் செந்தாமரையின் வீடு இருக்கிறது. இன்று காலை செந்தாமரையின் வீட்டுக்குள் நுழைந்த வருமான வரித்துறை அதிகாரிகள், கணக்கு விவரங்களை சோதனை செய்து வருகின்றனர். அதேபோல், சபரீசனின் நட்பு வளையத்தில் இருக்கும் கார்த்திக், `ஜீ ஸ்கொயர்' பாலா ஆகியோரும் வருமான வரித்துறையின் வளையத்தில் சிக்கியுள்ளனர். …
-
- 4 replies
- 815 views
-
-
கருணாசின் கார் மீது அடையாளம் தெரியாத நபர்கள் செருப்பு வீசியுள்ளனர். நடிகரும் அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான கருணாசின் கார் மீது அடையாளம் தெரியாத நபர்கள் செருப்பை வீசியுள்ளனர். இன்று கருணாஸ் தனது தொகுதியான திருவாடனைக்கு சென்றுவிட்டு அங்கிருந்து திரும்பிய போது மறைந்திருந்த சில நபர்கள் அவரது கார் மீது செருப்புகளை வீசி எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். இது தொடர்பில் கருணாஸ் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார். http://globaltamilnews.net/archives/19078
-
- 3 replies
- 398 views
-
-
யார் இந்த ஸ்ராலின்.? ரஷ்யா முழுவதும் ஒரே தேடலாம் .! சென்னை: தேசிய தலைவராக ஸ்டாலின் உருவெடுப்பார் என்று பார்த்தால் உலக தலைவராகவே உருவெடுத்துவிடுவார் போல தெரிகிறது.. யார் இந்த ஸ்டாலின் என்று ரஷ்ய தூதரக அதிகாரிகள் போனை போட்டு நம் பத்திரிகையாளர்களிடம் விசாரித்துள்ளனராம். "தான் திராவிட சிந்தனையால் ஈர்க்கப்படாமல் இருந்தால் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்திருப்பேன்" என்று ஒரு முறை மறைந்த கருணாநிதி சொல்லி இருந்தார்.. அந்த அளவுக்கு கம்யூனிஸம் மீது பற்று வைத்திருந்தவர் கருணாநிதி.. ஸ்டாலின் பிறக்கும் முன், அவருக்கு அய்யாதுரை என்றுதான் பெயர் வைக்க ஆசைப்பட்டாராம் கருணாநிதி. காரணம், திராவிட இயக்கத்தின் தலைவர் தந்த பெரியாரை, பெரும்பாலானோர் அய்யா என்றுதான் அழைப்பார்கள்.. அதே…
-
- 14 replies
- 2.1k views
-
-
சென்னை: ஆந்திராவில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் சித்தூர், நகரி, விஜயபுரம் உள்ளிட்டவற்றை தமிழகத்துடன் இணைக்கக் கோரி தமிழர் எழுச்சி இயக்கத்தின் சார்பில் சென்னையில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பில் இடம்பெற்றுள்ள தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் சித்தூர், நகரி, விஜயபுரம் உள்ளிட்ட பல பகுதிகள், 1956ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலப் பிரிவினையின் போது தமிழகத்தின் சற்றொப்ப 32,000 சதுர மீட்டர் நிலப்பரப்பிலான பகுதிகள், ஆந்திரப் பிரதேசத்துடன் இணைக்கப்பட்டன. தற்போது, ஆந்திராவிலிருந்து தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்படுகின்ற சூழலில், சித்தூர், நகரி, விஜயபுரம், நாகலாபுரம் உள்ளிட்ட தமிழர்கள் பெரும்பான்மையா…
-
- 9 replies
- 1.1k views
-
-
டெல்லி: வாசன் கோஷ்டிக்கு 15 சீட், ப.சிதம்பரம் கோஷ்டிக்கு 8, தங்கபாலுவுக்கு 5, இளங்கோவனுக்கு 3, நாராயணசாமி சொல்லும் நபருக்கு 1, குலாம் நபி ஆசாத் கோட்டாவுக்கு 2... இப்படித்தான் தேர்தல்களில் தமிழக காங்கிரஸ் கட்சியில் சீட் ஒதுக்குவார்கள். ஆனால், இந்த கோட்டை சிஸ்டத்துக்கு முடிவு கட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி முடிவு செய்துள்ளாராம். ஒழுங்கான வேட்பாளர்களை தேர்வு செய்ய ஏதுவாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் ராகுல் காந்தி, சட்டமன்ற- நாடாளுமன்றத் தேர்தலுக்குப் போட்டியிட விண்ணப்பிக்கும் காங்கிரஸ்காரர்களுக்கு 5 பக்க கொஸ்டீன் பேப்பரைத் தரச் சொல்லியிருக்கிறாராம். அதில், போட்டியிட விரும்புவோரின் சுய அறிவு, தொகுதி குறித்த அறிவு, பொது அறிவு ஆகியவற்றை சோதிக்கும் கேள்விகளு…
-
- 1 reply
- 577 views
-
-
அ.தி.மு.க-வின் அடுத்த இளவரசி! அ.தி.மு.க-வில் உங்களுக்கு இளவரசியைத் தெரியும். சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவோடு கைதாகி, பெங்களூரு சிறையில் இருக்கிறார். அடுத்த இளவரசியைத் தெரியுமா? அவர், கிருஷ்ணபிரியா. இளவரசியின் மூத்த மகள். ‘‘போயஸ் ராணியாக இவர்தான் வரப்போகிறார்’’ என ஆளும்கட்சியின் அதிகார மையத்தில் வலம் வருபவர்கள் இப்போது சொல்ல ஆரம்பித்துள் ளார்கள். ஆட்சியிலும் கட்சியிலும் மிகமிக மேல் மட்டத்தில் இருக்கும் ஒரு சிலர் மட்டுமே அறிந்த முகம் இவர். அதிகம் அறியப்படாத முகமான இவருக்கு, அ.தி.மு.க-வின் இளவரசியாக மகுடம் சூட்டிக்கொள்ள ஆசை பிறந்துவிட்டது என்ற தகவலால் ஒட்டுமொத்த சசிகலா உறவுகளும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். அடுத்த தலைவர்! அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக ந…
-
- 0 replies
- 3.3k views
-
-
சசிகலா, தினகரனை கட்சியிலிருந்து நீக்க முடிவு? முதல்வர் பழனிசாமி அடுத்த 'மூவ்' முதல்வர் பழனிசாமியும், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும், இன்று டில்லி செல்வதால், இரு அணிகள் இணைப்பு பேச்சில் நீடிக்கும் இழுபறி, முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு, தொண்டர்கள் மத்தியில் எழுந்து உள்ளது. அதற்கு வசதியாக, சசிகலா மற்றும் தினகரனை, கட்சியில் இருந்து நீக்க, முதல்வர் முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், இன்று தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என, தகவல் வெளியாகி உள்ளது. அ.தி.மு.க., பழனிசாமி அணியும், பன்னீர் அணியும் இணைய வேண்டும் என, பா.ஜ., மேலிடம்…
-
- 0 replies
- 375 views
-
-
இதுதான் என் லட்சியம்: திருச்சியில் முதல்வர் உறுதி! மின்னம்பலம்2021-12-31 தமிழகத்தில் எந்தவொரு தனிமனிதருக்கும், அரசிடம் கோரிக்கை வைக்க மனு இல்லாத ஒருநிலையை உருவாக்குவோம். இதுதான் என் லட்சியம் என்று திருச்சியில் முதல்வர் கூறியுள்ளார். முதல்வர் ஸ்டாலின் நேற்று தஞ்சை மற்றும் திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி, முடிவுற்ற திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார். தஞ்சையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நலத்திட்ட உதவிகள், அடிக்கல் நாட்டப்பட்ட பணிகள் என மொத்தம் ரூ.1,231 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் முதல்வரால் தொடங்கப்பட்டன. அதுபோன்று திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 1,084 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகளைத் தொட…
-
- 0 replies
- 334 views
-
-
தெற்கு ரயில்வே புது வழித் தடங்களுக்கு ரூ.308 கோடி, வடக்கு ரயில்வேவுக்கு ரூ.31 ஆயிரம் கோடி: சு.வெ. புகார் 6 பிப்ரவரி 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய ரயில்வே: வடக்கு, தெற்கு பாகுபாடு? கடந்த நான்கு ஆண்டுகளில் தெற்கு ரயில்வேயில் புதிய வழித்தடத் திட்டங்களுக்கு 308 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், ஆனால், இதே காலகட்டத்தில் வடக்கு ரயில்வேயில் புதிய வழித் தடத்திட்டங்களுக்கு சுமார் 31 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் மதுரை நாடாளுமன்றத் தொகுதியின் எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். தென்னக ரயில்வேவைவிட வடக்கு ரயில்வே மண்டலத்துக்கு அதிக நிதி ஒதுக…
-
- 0 replies
- 270 views
- 1 follower
-
-
சென்னை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடம் பெற்றுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். முதல்வர் ஜெயலலிதாவை போயஸ்கார்டன் இல்லத்தில் இன்று பிற்பலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் சந்தித்தார். அவருடன் தமிழக மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் இருந்தார். சுமார் அரை மணி நேரம் நடந்த இந்த சந்திப்பில் அ.தி.மு.க.வின் முக்கிய தலைவர்களும் கலந்துகொண்டனர். சந்திப்புக்கு பின் ஜெயலலிதா மற்றும் பிரகாஷ் காரத் இருவரும் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது ஜெயலலிதா, "வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இணைந்து தேர்தலை சந்திக்க ஒருமித்த முடிவெடுத்துள்ளோம். இருக…
-
- 0 replies
- 464 views
-
-
முருகன் - நளினி... சிறைப் பறவைகளின் காதல் கதை! டி.அருள் எழிலன், ஓவியங்கள்: ஸ்யாம் முருகன்-நளினி காதலுக்கு வயது 23 வருடங்கள். இதில் சிறையில் பிரிக்கப்பட்டு இருவரும் தனித்திருந்த காலம்... கிட்டத்தட்ட அதே 23 வருடங்கள்! ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முருகன்-நளினி ஜோடி, தங்கள் காதலுக்குக் கொடுத்த விலை மிக மிக அதிகம்! 1991 பிப்ரவரி மாதம் இருவருக்கும் இடையிலான முதல் சந்திப்பு. மே மாதம் ராஜீவ் காந்தி கொலை. ஜூன் மாதம் இருவரும் கைதாகிறார்கள். அன்று முதல் இன்று வரை சிறைச் சுவர்களுக்கு இடையில் கிளைத்துக் கிடக்கிறது இவர்களின் காதல்! ''முதல் சந்திப்பு முதல் உங்கள் காதல் கதையை விரிவாகச் சொல்லுங்கள்!'' என்று வழக்கறிஞர் மூலம…
-
- 2 replies
- 1.3k views
-
-
எடப்பாடி Vs பன்னீர்... தர்மயுத்தம் 2.0 ஆகஸ்ட் 21-ம் தேதி அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில், இணைந்த கைகளாக பழனிசாமியும் பன்னீரும் காட்சி கொடுத்தனர். அக்டோபர் 14-ம் தேதி புதுக்கோட்டையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் இருவரும் முகத்தைத் திருப்பிக்கொண்டு மேடையில் உட்கார்ந்திருந்தனர். ‘இணைந்து செயல்படுவோம் என்று சொன்னவர்களிடையே இடைவெளி அப்பட்டமாகத் தெரிகிறது’ என்று செய்திகள் கசிய... என்ன நடக்கிறது என்று அ.தி.மு.க வட்டாரத்தில் விசாரித்தோம். இணைப்புக்கு முன் எழுந்த நெருக்கடி! ‘அணிகள் இணையவேண்டும்’ என பன்னீருக்கு டெல்லி மேலிடத்திலிருந்து அழுத்தம் வந்தாலும், அதைத் தாண்டி அவருடைய குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடியும் ஒரு காரணம் என்கிறார்கள். தர்மயுத்தம் ஆரம்பித்தபி…
-
- 0 replies
- 1.2k views
-
-
திறந்தவெளியில் மலம் கழித்தல்: 6-வது இடத்தில் இருக்கும் தமிழ்நாட்டு ஊரகப் பகுதி மோகன் பிபிசி தமிழ் 27 மே 2022, 05:57 GMT பட மூலாதாரம்,GETTY IMAGES தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் 28% வீடுகளில் கழிப்பிட வசதியில்லை என்பது சமீபத்தில் வெளியான அரசாங்க தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது. இந்தியாவில் 5 மாநிலங்கள் மட்டுமே தமிழ்நாட்டைவிட மோசமான நிலையில் உள்ளன. இந்திய அரசு திறந்தவெளியில் மலம் கழிப்பதை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்கிற நோக்கில் 1999-ம் ஆண்டு இந்திய அரசு முழு சுகாதாரத் திட்டம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி செயல்படுத்திவந்தது. 2014-ம் ஆண்டு முதல் இது 'தூய்மை இந்தியா…
-
- 1 reply
- 509 views
- 1 follower
-
-
தர்மயுத்தம் பார்ட் டூ-வுக்கு தயாராகும் ஓ.பி.எஸ் அணி! - பதற்றத்தின் உச்சத்தில் ஈ.பி.எஸ் அணி ஓ.பன்னீர்செல்வம் அணி, எடப்பாடி பழனிசாமி அணி, தீபா, டி.டி.வி.தினகரன் ஆகியோர் இரட்டை இலைக்கு சொந்தம் கொண்டாடி நடத்திய தர்ம யுத்தத்தில் (!) ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் அணி வெற்றி பெற்று இரட்டை இலைச் சின்னத்தையும் கட்சியையும் கைப்பற்றிவிட்டது. எடப்பாடி பழனிசாமி அணியும் பன்னீர்செல்வம் அணியும் ஒன்றிணைந்திருந்தாலும், எடப்பாடி அணியால் பன்னீர்செல்வம் ஓரம்கட்டப்படுவதாகப் பேச்சு அடிபட்டது. இரு அணிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதாகச் செய்திகள் கசிந்தன. இதனிடையே கடந்த அக்டோபர் 12-ம் தேதி துணை முதல்வர் பன்னீர்செல்வம் பிரதமரை சந்த…
-
- 1 reply
- 601 views
-
-
அக்னிபத் திட்டம்: சென்னையில் வெடித்த போராட்டம்! மின்னம்பலம்2022-06-18 அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து சென்னையிலும் ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ள அக்னிபத் திட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகளுக்கு மட்டுமே வேலை, அதன்பிறகு தகுதியுடைய 25 சதவிகிதம் பேர் மட்டும் முப்படைகளில் வேலைக்கு எடுத்துக்கொள்ளப்படுவர், மீதமுள்ளவர்கள் வெளியேற்றப்படுவார்கள். குறிப்பாக 17.5 முதல் 21 வயதுடைய இளைஞர்கள் அக்னிபத் திட்டத்தின் படி பணியில் சேர தகுதியானவர்கள் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இது பல்வேறு கேள்விகளை எழுப்புவதாகவும், இளைஞர்களின் உயர் கல்வி பாதிக்கப்படும் என்றும் அரசியல் கட்…
-
- 0 replies
- 914 views
-
-
சென்னை: குற்றாலம் சொகுசு பங்களாவில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த, சசிகலாவின் கணவர் நடராஜனை, சிற்ப வல்லுனருக்கு பேசிய பணத்தை தராமல், கொலை மிரட்டல் விடுத்ததாக, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து, சென்னை அழைத்து வந்தனர். அவரை சைதாப்பேட்டை நீதிமன்றம்உத்தரவுப்படி புழல் சிறையில் அடைத்தனர். முதல்வர் ஜெயலலிதாவின், நெருங்கிய தோழி சசிகலாவின் கணவர் நடராஜன் மீது, கராத்தே மாஸ்டரும், சிற்ப வல்லுனருமான ஹூசைனி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், புகார் மனு அளித்து இருந்தார். அதில், அவர் கூறியிருப்பதாவது:தஞ்சை மாவட்டம், விளாரில், முள்ளி வாய்க்கால் முற்றத்தில், 98 லட்சம் ரூபாய் செலவில், 'மறுமலர்ச்சி கரங்கள்' அமைக்க, சசிகலாவின் கணவர் நடராஜன், அவரது நெருங்கிய நண்பர் இளவழகன், 'ஏர்போர்…
-
- 0 replies
- 341 views
-
-
அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைத்தது செல்லும்: உச்ச நீதிமன்றம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எடப்பாடி கே. பழனிசாமி , ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு எதிராக ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை இந்திய உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இன்று உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய் சந்திர சூட், ஹீமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் தொடரப்பட்ட முறையீட்டு வழக்கின் விசாரணை நடைபெற்றது. …
-
- 0 replies
- 304 views
- 1 follower
-
-
சென்னை: நாட்டில் லஞ்சத்தையும், ஊழலையும் ஒழிக்க முழு ஒத்துழைப்பு வழங்கிடுவோம் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் பிரதமருக்கு இன்று எழுதியுள்ள கடிதத்தில், "ஒரு நாடு முன்னேற வேண்டுமானால், அந்த நாட்டில் லஞ்சத்தையும், ஊழலையும் ஒழித்தாலே முன்னேறிவிடும். அதனால்தான், தே.மு.தி.க.வை, நான் துவக்கியபோதே லஞ்சத்தையும், ஊழலையும் ஒழிப்போம், அதன் மூலம் வறுமையை ஒழிப்போம் என்ற கொள்கை முழக்கத்தை வெளியிட்டு அந்த கொள்கையில் இன்றுவரை உறுதியாக இருக்கின்றோம். பிரதமர் நரேந்திர மோடி ஹரியானா மாநிலத்தில் பேசிய போது, ஊழல் அபாயகரமானது, புற்றுநோயை விட ஊழல் மிக வேகமாக பரவி வருகிறது. ஊழல் நாட்டை அழித்துக்கொண்டு வருகிறது. அ…
-
- 1 reply
- 473 views
-
-
Published : 14 Jun 2018 16:47 IST Updated : 14 Jun 2018 17:06 IST உதகையிலிருந்து குன்னூர் நோக்கி சென்ற அரசு பேருந்து 50 அடி பள்ளத்தில் உருண்டது. இதில் 2 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். 26 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. நீலகிரி மாவட்டம் உதகையிலிருந்து இன்று (வியாழக்கிழமை) காலை சுமார் 11.30 மணிக்கு அரசு பேருந்து குன்னூர் நோக்கி சென்றது. இந்த பேருந்த ஓட்டுநர் ராஜ்குமார் (42) என்பவர் ஒட்டிச் சென்றார். பேருந்து மந்தாடா பகுதியில் சென்றுக்கொண்டிருந்த போது திடீரென சாலையோரத்திலிருந்து 50 அடி பள்ளத்தில் உருண்டது. இதில், பயணித்தவர்கள் படுகாய…
-
- 0 replies
- 538 views
-
-
சேலம் - சென்னை எட்டு வழி பசுமைச் சாலை திட்டம் போன்ற பெரிய திட்டங்கள் வர வேண்டும். அவ்வாறு வந்தால்தான் நாடு முன்னேறும் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். இதுகுறித்து சென்னை போயஸ் கார்டன் இல்லத்தின் முன்பு செய்தியாளர்களிடம் ரஜினி கூறியதாவது: ''காமராஜர் பிறந்த நாளான இன்று அவரை நினைவுபடுத்திக்கொண்டு, அவரைப் போன்ற தலைசிறந்த அரசியல்வாதி மீண்டும் தமிழ்நாட்டில் உருவாக வேண்டும் என்பது தமிழக மக்களின் ஆசை. என்னுடைய ஆசையும் கூட. மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் கல்வி வளர்ச்சி சிறப்பாக உள்ளது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அவரது வேலையை நன்றாகச் செய்து கொண்டிருக்கிறார். காந்தி, காமராஜர் கொள்கைகளுக்காகவே வ…
-
- 0 replies
- 346 views
-
-
யூ-டியூப் உதவியுடன் பிரசவம் பார்க்கப்பட்ட திருப்பூர் பெண் பலி! இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க திருப்பூர் மாவட்டம் புதுப்பாளையம் பகுதியில் இயற்கை மருத்துவம் என்ற பெயரில் யூ-டியூப் வீடியோக்கள் பார்த்து பெண் ஒருவருக்கு பிரசவம் பார்த்ததில் அவர் உயிரிழந்தார். கணவன், மனைவி இருவரும் சேர்ந்து எடுத்த முடிவின்படி, கணவர் கார்த்திகேயன் அவரது நண்பருடன் பிரசவம் பார்த்ததில் மனைவி கிர…
-
- 1 reply
- 936 views
- 1 follower
-
-
மத்திய மந்திரியாக நான் செய்த சாதனைகள் என்ன? எடப்பாடி பழனிசாமியுடன் விவாதிக்க தயார் அன்புமணி ராமதாஸ் சவால் மத்திய மந்திரியாக நான் செய்த சாதனைகள் என்ன? எடப்பாடி பழனிசாமியுடன் விவாதிக்க தயார் அன்புமணி ராமதாஸ் சவால் பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சேலத்தில் அரசுப் பொருட்காட்சியைத் தொடங்கி வைத்துப் பேசிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ‘டாக்டர் அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதார மந்திரியாக இருந்த போது தமிழக மக்களுக்காக என்ன செய்தார்?’ என்று வினா எழுப்பியுள்ளார். உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டம் என்றால் அது தேசிய ஊரக சுகாதார இயக்கம் தான். இந்த திட்டத்தை 2005-ம் ஆண்டில் நான் தான் தொடங்கினேன். இந்…
-
- 0 replies
- 314 views
-
-
கருணாநிதி ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டார்: துரைமுருகன் காவேரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் தி.மு.க.தலைவர் கருணாநிதி, ஆபத்தான காலக்கட்டத்தை கடந்து விட்டாரென தி.மு.க.முதன்மை செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். நேற்று (சனிக்கிழமை) கருணாநிதியின் உடல்நிலை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில், “கடந்த வாரங்களுடன் ஒப்பிடுகையில் கருணாநிதியின் உடல்நிலையில் சிறந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் நாம் கூறுவதை அவரால் கேட்க முடிகிறது. இந்தவகையில் அவர் ஆபத்தான காலகட்டத்தை தற்போது கடந்து விட்டார் . இதனால் இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் நிச்சயம் வீடு திரும்புவார…
-
- 1 reply
- 1k views
-