தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10331 topics in this forum
-
பிரதமர் மன்மோகன் சிங்கின் தமிழக வருகையைக் கண்டித்து திருச்சியில் வெள்ளிக்கிழமை மதிமுக நடத்தும் கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்துக்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், ஈழத் தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் எதிராக செயல்படுவதாலும், காவிரி, முல்லைப் பெரியாறு போன்ற பிரச்னைகளில் ஓரவஞ்சமாக நடந்து கொள்வதாலும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கருப்புக் கொடி காட்டும் மதிமுகவின் போராட்டத்தை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார். அதேவேளை, தேசிய நீர்வளக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தி பிரதமருக்கு எதிராக திருமயத்தில் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு…
-
- 0 replies
- 409 views
-
-
நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பெருமாள் பேட்டை மீனவர் கிராமத்தை சேர்ந்த 5 பேர் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று காலை கடலில் மீன்பிடிக்க சென்றனர். அப்போது அவர்களை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்து அரிவாள் மற்றும் ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர். மேலும் நாகை மீனவர்களின் படகில் பெட்ரோல் குண்டுகளையும் வீசினர். இதில் மீன்பிடி வலைகள் எரிந்து சேதம் அடைந்தது. இதையடுத்து காயம் அடைந்த 5 மீனவர்களும் தற்போது நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது நாகை மற்றும் காரைக்கால் பகுதியிலிருந்து கடலுக்கு சென்று நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த போது மீனவர்கள் 34 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இலங்கை கடற்படைய…
-
- 1 reply
- 501 views
-
-
மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் அவர்கள்Â விடுத்துள்ள அறிக்கை : ஈழத் தமிழர்களுக்கும் தமிழக மீனவர்களுக்கும் தொடர்ந்து துரோகம் இழைத்து வருவதாலும் காவிரி, முல்லைப் பெரியாறு போன்ற தமிழ்த் தேசியப் பிரச்னைகளில் ஓரவஞ்சகமாக நடந்துக் கொள்வதாலும் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு கருப்புக் கொடி காட்டுவது என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ அறிவித்திருப்பதை பாராட்டி வரவேற்கிறேன். ஆகஸ்டு 2-ஆம் திகதி திருச்சியில் வைகோ தலைமையில் நடைபெறவிருக்கும் கருப்புக் கொடி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் திரளாக கலந்துக் கொள்ளும்படி தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் அனைவரையும் வேண்டிக் கொள்கிறேன். என்று தெரிவித்துள்ளார். http://www.dinaithal.com/tamilnadu/17999-manmohan-singh-m…
-
- 0 replies
- 523 views
-
-
மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை ஈழத் தமிழர்களுக்கும் தமிழக மீனவர்களுக்கும் தொடர்ந்து துரோகம் இழைத்து வருவதாலும் காவிரி, முல்லைப் பெரியாறு போன்ற தமிழ்த் தேசியப் பிரச்னைகளில் ஓரவஞ்சகமாக நடந்துக் கொள்வதாலும் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு கருப்புக் கொடி காட்டுவது என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ அறிவித்திருப்பதை பாராட்டி வரவேற்கிறேன். ஆகஸ்டு 2-ஆம் திகதி திருச்சியில் வைகோ தலைமையில் நடைபெறவிருக்கும் கருப்புக் கொடி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் திரளாக கலந்துக் கொள்ளும்படி தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் அனைவரையும் வேண்டிக் கொள்கிறேன். http://www.sankathi24.com/news/31954/64//d,fullart.aspx
-
- 0 replies
- 606 views
-
-
தனி தெலுங்கானா மாநிலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திராவில் ஒருங்கிணைந்த கூட்டுக் குழுவினர் இன்று பந்த் போராட்டம் நடத்தினர். இதனால் பஸ், லாரி, ஆட்டோ போன்ற எந்த வாகனமும் ஓடவில்லை. பள்ளி, கல்லூரிகள், சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. பல இடங்களில் மறியல் உள்ளிட்ட போராட்டங்களால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தை இரண்டாக பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்க ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. காங்கிரஸ் காரிய கமிட்டியும் நேற்று மாலை கூடி, தெலுங்கானாவுக்கு ஒப்புதல் அளித்தது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இன்று நடக்கும் மத்திய அமைச்சரவை கூட்டத்திலும் இதற்கு ஒப்புதல் பெறப்படுகிறது. தனி தெலுங்கானா மாநிலம் அறிவிக்கப்பட்டதை த…
-
- 4 replies
- 518 views
-
-
திரைப்பட இயக்குனரும், நாம் தமிழர் கட்சி தலைவருமான சீமான் அதிமுக முன்னாள் அமைச்சர் காளிமுத்துவின் மகளை வரும் செப்டம்பர் மாதம் 8ம் தேதி அன்று மணக்கிறார். திரைப்பட இயக்குனரும், நாம் தமிழர் கட்சி தலைவருமான சீமானுக்கும், மறைந்த முன்னாள் சட்டசபை சபாநாயகரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான காளிமுத்துவின் மகள் கயல்விழிக்கும் திருமணம் நிச்சயமாகி உள்ளது. நேற்று நிச்சயம் நடந்ததாகக் கூறப்படுகிறது. அவர்களின் திருமணம் வரும் செப்டம்பர் மாதம் 8ம் தேதி சென்னை ஒய்.எம்.சி.ஏ. மெமோரியல் அரங்கில் தமிழர் தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் தலைமையில் நடக்கிறது. இந்த திருமணத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லக்கண்ணு முன்னிலை வகிக்கிறார். திருமண நிகழ்ச்சியில் …
-
- 4 replies
- 2.4k views
-
-
கூடங்குளம் அணு உலையை இழுத்து முடக்கோரியும், அணு ஒப்பந்தத்தை இந்திய அரசு இரத்து செய்ய கோரியும் இந்தியாவில் தனியார்மயத்தை எதிர்த்தும் கூடங்குளம் அணு உலையை எதிர்த்து அறவழியில் போராடும் போராட்டகாரர்களின் மீதான பொய் வழக்குகளை திரும்ப பெற வேண்டும் எனவும் இன்று ( 24/07/2013 ) காலை மத்திய அரசு அலுவலகம் இருக்கும் நுங்கபாக்கம் சாஸ்திரி பவனை மே 17 இயக்க தோழர்கள் முற்றுகை இட்டோம். இதில் திராவிட விடுதலை கழகத்தை சேர்ந்த தோழர் தபசிகுமரன் மற்றும் மே 17 இயக்க தோழர்கள் உட்பட நுற்றுக்கும் அதிகமான தோழர்கள் கலந்து கொண்டனர். முற்றுகை போராட்டத்தில் கலந்து கொண்ட சுமார் 90க்கும் அதிகமான தோழர்கள் கைது காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். நன்றி முகனூல் May17 Movement
-
- 2 replies
- 474 views
-
-
இலங்கை அரசமைப்புச் சட்டத்தின், 13வது திருத்தத்தை, முழுமையாக நிறைவேற்ற வலியுறுத்தி, வரும் ஆக., 8ம் தேதி, டெசோ சார்பில் மாவட்ட வாரியாக நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கும் பட்டியலில், தென் மண்டல அமைப்புச் செயலர் அழகிரி இடம் பெறவில்லை. கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட நடிகை குஷ்புக்கு, முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அவரது பெயர் இடம் பெற்றுள்ளது. 13வது திருத்தத்தை, முழுமையாக நிறைவேற்ற வேண்டும்; இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில், இந்தியா கலந்து கொள்ளக் கூடாது; தமிழக மீனவர்களை பாதுகாக்க வேண்டும்; இலங்கையில் தமிழர் பகுதிகளில், சிங்கள குடியேற்றத்தைத் தடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களை வலியுறுத்தி, மாவட்ட தலைநகரங்களில், டெசோ சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுக…
-
- 5 replies
- 1.9k views
-
-
லோக்சபா தேர்தல் தொடர்பாக தி ஹிந்து நாளிதழும் சி.என்.என். தொலைக்காட்சியும் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் தமிழகத்தில் அதிமுக கூடுதல் இடங்களையும் திமுகவுக்கு பெரும் பின்னடைவும் இருக்கும் என்று தெரியவந்துள்ளது. அதேபோல் 1977ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் முறையாக தேசிய கட்சிகளுக்கு தமிழகத்தில் இரட்டை இலக்க வாக்கு சதவீதம் கிடைக்குமாம். லோக்சபா தேர்தலுக்கு நாளையே தேர்தல் நடைபெற்றால் முடிவுகள் எப்படி இருக்கும்? ஆளும் மாநில் அரசின் செயல்பாடு எப்படி? என்பது உள்ளிட்ட பல அம்சங்களை முன்வைத்து இந்த கருத்துக் கணிப்பு நாடு முழுவதும் நடத்தப்பட்டது. இதில் தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், 65% பேர் ஆளும் அதிமுக அரசின் செயல்பாட்டில் திருப்தி தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் ம…
-
- 2 replies
- 494 views
-
-
ஈழத் தமிழர் பிரச்சனை, தமிழக மீனவர்கள் படுகொலை, கூடங்குளம் அணு உலை விவகாரத்தில் தமிழர் விரோதப் போக்கைக் கண்டித்து தமிழகம் வரும் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு எதிராக திருச்சியில் ஆகஸ்ட் 2-ந் தேதி கருப்புக் கொடி போராட்டம் நடத்தப்படும் என்று மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலர் வைகோ அறிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை, பச்சிளம் குழந்தைகள், தாய்மார்கள் உள்ளிட்ட, தமிழ்க் குலத்தை ஈவு இரக்கம் இன்றி, உலகம் தடை செய்த குண்டுகளை விமானப் படை கொண்டு வீசியும், மருத்துவ மனைகள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் இராணுவத் தாக்குதல் நடத்தியும், கொடூரமாகப் படுகொலை செய்த சிங்கள இனவாத இராஜபக்சே அரசுக்கு, முப்படைத் தளவாடங்களைத் தந்தும், தமிழர் இன அழிப…
-
- 1 reply
- 348 views
-
-
அனைத்து சாதியினரும் அர்ச்சகராக்க கோரி சென்னையில் திராவிடர் கழரக தலைவர் கி.வீரமணி தலைமையில் ஆகஸ்ட் 1ல் போராட்டம் நடைபெற உள்ளது. இது குறித்து சைதைப்பேட்டை செயலாளர் மு. மகேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது திமுக தலைவர் கருணாநிதி ஆதரவோடு வரும் ஆகஸ்டு 1ம் தேதி அன்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெறும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகிட உரிமைப்போர் மற்றும் அறப்போராட்டம் நடை பெற உள்ளது. இந்த அறப் போராட்டத்தில் தலைமைக்கழக செயற் குழு உறுப்பினர், பொதுக் குழு உறுப்பினர், பகுதிக் கழக நிர்வாகிகள், வட்டச்செயலாளர்கள், மாவட்டக்கழகப்பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், சார்புமன்ற நிர்வாகிகள், வட்டக்கிளை நிர்வாகிகள், பகுதிப்பிரதி …
-
- 2 replies
- 442 views
-
-
30 இலட்ச ரூபாய் இருந்தால் போதும் தமிழீழச் சிக்கல் குறித்து படமெடுப்போம் - இயக்குனர் வெற்றிவேல் 2013 மார்ச் மாதத்தில் நடந்த தமிழக மாணவர்களின் ஈழ அதரவுப் போராட்டத்தைப் பற்றி, பத்திரிகையாளர் வெற்றிவேல் சந்திரசேகர் இயக்கிய 'அறப்போர்' என்ற ஆவணப்படம், ஜூலை 28 ஞாயிறு அன்று மாலை சென்னை அண்ணாசாலை புக் பாய்ண்ட் அரங்கில் வெளியிடப்பட்டது. உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன், மே பதினேழு இயக்கத் தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, இயக்குநர்கள் அமீர், ம.செந்தமிழன் ஆகியோர் பேசினர். தலைமையுரையாற்றிய, த.தே.பொ.க. பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன்: அண்மையில் அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் மெடலின் ஆல்பிரைட் மற்றும் சூடானுக்கான அமெரிக்க முன்னாள் வெளியுறவுத் தனித்தூதர…
-
- 0 replies
- 654 views
-
-
அகதிகளாக தமிழகத்தில் தவிப்பவர்களை ஆஸ்திரேலியா செல்ல அனுமதிக்கலாமே: கருணாநிதி யோசனை. சென்னை: தமிழகத்தில் பல ஆண்டுகளாக அகதிகளாக தவிக்கும் இலங்கைத் தமிழர்கள், சுதந்திரமாக வாழ ஆஸ்திரேலியா செல்ல விரும்பினால் மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஆஸ்திரேலியாவுக்குத் தப்ப முயன்ற இலங்கை அகதிகள் 17 பேரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 23 ஆண்டுகள் இந்தியாவில் அகதிகளாக வாழ்வதாகவும், உறவினர்கள் பலர் ஆஸ்திரேலியாவில் சுதந்திரமாகவும் வசதியுடனும் வாழ்வதாகவும், இலங்கை அகதிகளை ஆஸ்திரேலியா திருப்பி அனுப்புவதில்லை என்றும் கைதாகியுள்ள அகதிகள் தெரிவித…
-
- 27 replies
- 1.7k views
-
-
பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவருடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் அனந்த் குமாரும் சென்றுள்ளார். நியூயார்க்கில் பேட்டியளித்த அனந்த் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- இலங்கையில் மனித உரிமைகள் பாதுக்காக்கப்பட வேண்டும். எல்லா குடிமக்களுக்கும் சமஉரிமை வழங்கப்பட வேண்டும். எந்த பிரிவினரும் வஞ்சிக்கப்படக் கூடாது. நமது உணர்வுகளை ராஜாங்க ரீதியாக இலங்கை அரசிடம் வெளிப்படுத்த நாம் தயக்கம் காட்டக் கூடாது. பா.ஜ.க. மீண்டும் மத்தியில் ஆட்சி அமைந்தால் இவற்றை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும். எடுப்போம். இலங்கையின் சமூக அரசியல்-பொருளாதார அமைப்பில் தமிழர்களுக்கு முன்னுரிமை தரும் புதிய வழிமுறையை இலங்கை அரசு ஏற்படுத்தி தர வேண்டு…
-
- 1 reply
- 401 views
-
-
'தமிழக மாணவர்கள், 13ஆவது சட்டத் திருத்தத்தை எரித்துப் போராட வேண்டும்' என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன், தமிழக மாணவர் போராட்டம் குறித்தான 'அறப்போர்' ஆவணப்பட வெளியீட்டு நிகழ்வில் பேசினார். 2013 மார்ச் மாதத்தில், ஐ.நா. மனித உரிமைகள் அவையில் அமெரிக்கா தாக்கல் செய்த மோசடியானத் தீர்மானத்தை எதிர்த்து நடைபெற்ற தமிழக மாணவர்களின் எழுச்சியை ஆவணப்படுத்தும் விதமாக, 'அறப்போர்' ஆவணப்படம் உருவாக்கப்பட்டது. மரணதண்டனைக்கு எதிரான ஆவணப்படமான 'இப்படிக்கு தோழர் செங்கொடி' படத்தை இயக்கிய பத்திரிக்கையாளர் திரு. வெற்றிவேல் சந்திரசேகர், 'அறப்போர்' படத்தை இயக்கியுள்ளார். செங்கொடி மீடியா ஒர்க்ஸ் சார்பில், திரு. சி.கபிலன் படத்தைத் தயாரித்துள்ளார். இப்படத்…
-
- 0 replies
- 386 views
-
-
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்கில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர் ஆகுமாறு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தயாளு அம்மாளின் மகள் செல்வி செல்வம் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், 82 வயதாகும் தயாளு அம்மாளின் உடல்நிலை சென்னையில் இருந்து டெல்லிக்கு பயணம் செய்யும் நிலையில் இல்லை. அவரது உடல் நிலையை மருத்துவ குழு ஆய்வு செய்து முடிவு செய்ய வேண்டும். கடந்த ஆண்டு முதல் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். ஞாபக மறதி நோய் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, கே.எஸ்.ராதா கிருஷ்ணன் கொண்ட பெஞ்ச், ‘‘தயாளு அம்மாள் உடல் நிலை குறித்து டெல்லி ‘எய்ம்ஸ்’ மருத்துவமன…
-
- 5 replies
- 847 views
-
-
https://www.youtube.com/watch?v=TNyUdkMAhHQ&feature=youtube_gdata_player
-
- 7 replies
- 1.2k views
-
-
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்துக்கு ஆகஸ்ட் 2-ல் பிரதமர் மன்மோகன் சிங் வருகையையொட்டி இம்மாவட்டத்தில்உள்ள தமிழ் உணர்வாளர்களின் செயல்பாடுகளை உளவுத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகேயுள்ள ஓலைக்குடிப்பட்டியில் பெல் தொழில்சாலையை திறந்துவைக்க பிரதமர் மன்மோகன்சிங் ஆகஸ்ட் 2-ம் தேதி வருகைதரவுள்ளதையடுத்து அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஹெலிகாப்டர் இறங்குதளங்கள், விழா அரங்கம் பகுதிகளை காவல்துறையின் உயர் அதிகாரிகள், மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரிகள் ஒவ்வொரு நாளும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர்களது ஆலோசனைப்படி அப்பகுதியை காவல்துறையினர் தன்வசமாக்கியுள்ளனர். இப்பகுதி சிவகங்கை மக்களவைத் தொகுதிக்குள்பட்டது என்பதால் அத்தொகு…
-
- 0 replies
- 337 views
-
-
பம்மலில் இருந்து பாஸ்டன் வரை! (Student of Pammal school to go to Boston) செவ்வாய் கிரகத்தில் வாழ்வதற்கு யோசனையைக் கூறி அமெரிக்கா செல்லும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் சென்னை மாணவர். எதிர்காலத்தில் மனிதன் பூமியில் வாழ முடியாத சூழல் ஏற்பட்டால் செவ்வாய் கிரகத்தில் வாழ்வதற்கான வழிமுறைகளைக் கூறி, ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ நிறுவனம் மாநில அளவில் நடத்திய ‘யங் சயின்டிஸ்ட் ஆஃப் தமிழ்நாடு’ போட்டியில் முதலிடம் பெற்றுள்ளார், சென்னை அருகே உள்ள பம்மல் ஸ்ரீ சங்கர வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர் ஆர். ரச்சன். செவ்வாய் கிரகமும் நமது பூமியைப் போன்றதுதான் என்றாலும் அங்கு போதிய சூரிய வெளிச்சம் இருக்காது. இதனால் அங்கு தாவரங்களோ, விலங்கினங்களோ இருக்காது. அதை நாம்தான் அங்கு உருவாக்க வே…
-
- 1 reply
- 1.1k views
-
-
தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக முதல் அமைச்சருக்குப் பிரதமர் 16-7-2013 அன்று எழுதிய கடிதத்தில் “இலங்கையில் அரசியல் அதிகாரங்களை ஒருங்கிணைப்பது மற்றும் தன்னாட்சி உரிமை அளிப்பது குறித்த பிரச்சினையில் மத்திய அரசின் நிலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. இலங்கையில் எல்லாச் சமுதாயத்தினரும், குறிப்பாக இலங்கைவாழ் தமிழர்கள் அங்கு ஒருங்கிணைந்து வாழும் வகையில் அவர்களுக்குத் தலைமைப் பொறுப்பை அளித்து ஓர் உகந்த சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்பதே நம்முடைய நாள்பட்ட கோரிக்கையாகும். இலங்கைவாழ் தமிழர்களுக்கு இத்தகைய தன்னாட்சி உரிமை அளிக்கும் வரையில் நம்முடைய பணி தொடரும்” என்று எழுதியிருக்கிறார். பிரதமர் கடிதத்தில் தெரிவித்திருக்கும் செய்திகள் நமக…
-
- 0 replies
- 346 views
-
-
தர்மபுரி இளவரசன் – திவ்யா காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு ஏற்பட்டதை தொடர்ந்து திவ்யாவின் தந்தை தற்கொலை செய்து கொண்டார். இதனால் கடந்த நவம்பர் 7–ந் தேதி கலவரம் நடந்தது. இதில் பல வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதில் பலர் பாதிக்கப்பட்டனர். இதற்கிடையே திவ்யா தாயார் தேன்மொழி சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்து திவ்யா கடத்தப்பட்டிருப்பதாகவும் அவரை மீட்டு தர வேண்டும் என்றும் கூறி இருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் சுந்தரேஸ் முன்பு கடந்த 3–ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது கோர்ட்டில் ஆஜரான திவ்யா தனது தாயாருடன் செல்வதாக கூறினார். இந்த நிலையில் மறுநாள் இளவரசன் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கு…
-
- 0 replies
- 534 views
-
-
தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு குறித்து உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார். கடந்த 1ம் தேதி இந்து முன்னணி அமைப்பின் மாநிலச் செயலாளர் வெள்ளையப்பன் வேலூரில் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து கடந்த 19ம் தேதி சேலத்தில் பாஜக பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கொல்லப்பட்டார். இந்த கொடூரங்களுக்கு முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் வன்முறை குற்றங்களை கடும் நடவடிக்கைகள் மூலம் வேரோடு கிள்ளிய எறிய வேண்டும் என்று தெரிவித்தார். இது தவிர இந்த 2 கொலைகள் குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டார். இந்நிலையில் அவர் கொடநாட்டில் உள்ள முகாம் அலுவலகத்தில் வைத்து மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலைமை பற்றியும், அது தொடர்பானவை பற்றியும் உயர் அதிகாரிகளுடன் நேற்று ஆலோச…
-
- 0 replies
- 427 views
-
-
புதுடெல்லி: முல்லைப் பெரியார் அணை நீரில் தமிழகத்திற்கு உரிமை வந்தது எப்படி என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் இன்று சரமாரி கேள்வி விடுத்தது. முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்த உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ஏற்க மறுத்த கேரள அரசு, அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக குறைக்க வேண்டும் என்று சட்டசபையை கூட்டி, சட்டம் நிறைவேற்றியது இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில், எச்.சி.தத்து, சந்திரமவுலி கிருஷ்ண பிரசாத், மதன் பி.லோகுர், எம்.ஒய்.இக்பால் ஆகிய 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் முன்பு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாராணை இரண்டாவது நாளாக இன்று நடைபெ…
-
- 5 replies
- 660 views
-
-
புதுடெல்லி: 2ஜி வழக்கில் தமக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை ரத்து செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் திமுக எம்.பி. கனிமொழி இன்று மனு தாக்கல் செய்துள்ளார். 2ஜி வழக்கில், கலைஞர் டிவிக்கு ரூ. 200 கோடி லஞ்சப் பணம் கைமாறியதாக சிபிஐ தரப்பில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இதனையடுத்து கலைஞர் டி.வி.யின் ஒரு பங்குதாரர் என்ற அடிப்படையில் கனிமொழி கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையிலடைக்கப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் உள்ளார். இவ்வழக்கில் கனிமொழி, முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் சரத்குமார் உள்ளிட்ட 3 பேர் மீதும் நம்பிக்கை மோசடி, கிரிமினல் சதி, ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுக்களை சிபிஐ பதிவு செய்துள்ளது. …
-
- 0 replies
- 311 views
-
-
பாஜக நிர்வாகி ஆடிட்டர் ரமேஷ் கொல்லப்பட்டதை கண்டித்து பாஜக சார்பில் இன்று தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் இல. கணேசன் உள்பட 200 பேர் கைது செய்யப்பட்டனர். சேலத்தில் பாஜக நிர்வாகி ஆடிட்டர் ரமேஷ் கொல்லப்பட்டதை கண்டித்தும், அவரை கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்யக் கோரியும் தமிழகம் மற்றும் புதுவையில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக அறிவித்தது. அதன்படி இன்று தமிழகம் மற்றும் புதுவையில் முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. இதையடுத்து தமிழகம் மற்றும் புதுவையில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். போராட்டத…
-
- 0 replies
- 323 views
-