தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10250 topics in this forum
-
கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு எதிராக அமெரிக்க தாக்கல் செய்த (ஐ.நா.மனித உரிமை அமர்வு) கண்துடைப்பு தீர்மானத்தை எதிர்த்து தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். மாணவர்களின் விதவிதமான போராட்ட வடிவங்கள் இந்திய அளவில் பெரும் கவனத்தை ஈர்த்தது. மத்திய அரசின் கூட்டணியில் இருந்து தி.மு.க. வெளியேறியது; ஐ.நா.அவையில் கொண்டு வந்த தீர்மானம் இந்தியாவின் ஒப்புதலோடுதான் கொண்டு வரப்பட்டது என்று அமெரிக்காவை ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கச் செய்தது; தமிழக சட்டப் பேரவையில் தனி ஈழத்துக்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேறச் செய்தது என என மாணவர் போராட்டம் சாதித்தவை ஏராளம். இந்த மாணவர் போராட்டத்தை கருவாகக் கொண்டு, அறப்போர் என்கிற ஆவணப்படம் உருவாகி இருக்கிறது…
-
- 3 replies
- 769 views
-
-
சென்னை: மாநிலங்களவை தேர்தலில் அதிமுகவுக்குதான் வாக்களிப்போம் என்று தேமுதிக அதிருப்தி எம்எல்ஏக்கள் அறிவித்திருப்பது தேமுதிக தலைவர் விஜயகாந்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு 6 எம்.பி.க்களை தேர்வு செய்ய வரும் 27ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. அ.தி.மு.க. சார்பில் மைத்ரேயன், அர்ஜூனன், ரத்னவேல், லட்சுமணனும், அ.தி.மு.க. ஆதரவுடன் இந்திய கம்யூனிஸ்டு சார்பில் டி.ராஜாவும் போட்டியிடுகின்றனர். தி.மு.க. சார்பில் கனிமொழி, தே.மு.தி.க. சார்பில் இளங்கோவன் நிறுத்தப்பட்டுள்ளனர். அ.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு சார்பில் போட்டியிடும் 5 வேட்பாளர்களும் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்ட நிலையில் 6வது எம்.பி.யாக தேர்வாவது கனிமொழியா?, இளங்கோவனா? என்ற எதிர்பார்ப்பு …
-
- 0 replies
- 457 views
-
-
மத்திய மந்திரி சுதர்சன நாச்சியப்பன் இன்று கோவை வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- ஊட்டியில் உள்ள இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலையை திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இலங்கையில் 49 லட்சம் தமிழ் குடும்பங்கள் உள்ளன. அவர்களை காப்பாற்றும் பொறுப்பு இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் உள்ளது. எனவே இலங்கை தமிழர் பிரச்சினையில் நாம் சமரசமாகத்தான் செல்ல வேண்டும். இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு குன்னூர் வெலிங்டன் ராணுவ முகாமில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு நாம் பயிற்சி அளிக்க மறுத்தால் அவர்கள் சீனா சென்று விடுவார்கள். இலங்கை மற்றொரு பாகிஸ்தானாக உருவெடுக்கும் நிலை உருவாகும். இதை தடுக்…
-
- 5 replies
- 923 views
-
-
சென்னை: இந்திய அளவில், சாலை விபத்துக்களில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக தேசிய குற்றவியல் தகவல் கழகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டில் மட்டும், இந்தியாவில் மொத்தம் 4,40,042 சாலை விபத்துக்கள் நிகழ்ந்திருக்கின்றன. இதில், 1,39,091 பேர் உயிரிழந்துள்ளனர்.இவர்களில் 1,18,533 பேர் ஆண்களாவர். இதில், தமிழகத்தில் மட்டும் 67,757 சாலை விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. இதில் 16,175 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்த இடத்தில் உத்தரப்பிரதேச மாநிலம் உள்ளது. இங்கு கடந்த 24,478 சாலை விபத்துக்களில், 15,109 பேர் உயிரிழந்துள்ளனர். மூன்றாவது இடத்தில் உள்ள ஆந்திரத்தில், 39,344 சாலை விபத்துக்களில், 14,966 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்தடுத்த இடங்களில் மகார…
-
- 0 replies
- 347 views
-
-
சென்னை மாவட்ட செசன்சு கோர்ட்டில் 3 பேர் சார்பில் தி.மு.க. தலைவர் கருணாநிதி மிது அவதூறு வழக்கு தாக்கல்: தி.மு.க. தலைவர் கருணாநிதி முரசொலி பத்திரிகையில் 23.8.2012 அன்று கேள்வி- பதில் கட்டுரை வெளியிட்டார். அதில் அப்போதைய அமைச்சர் கோகுல இந்திரா, சிவபதி, பச்சைமால் ஆகியோர் பற்றி அவதூறாக குறிப்பிட்டதாக கூறி சென்னை மாவட்ட செசன்சு கோர்ட்டில் 3 பேர் சார்பில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு நீதிபதி சொக்கலிங்கம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கருணாநிதி தரப்பில் வக்கீல் குமரேசன் ஆஜராகி மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில் இந்த 3 வழக்குகளின் விசா ரணைக்காக கருணாநிதி நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார…
-
- 0 replies
- 429 views
-
-
வெலிங்டன் ராணுவ முகாம் முற்றுகை: நாம் தமிழர் கட்சியினர் கைது. வெலிங்டன் ராணுவ முகாமை முற்றுகையிட முயன்ற நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 150 பேரை போலீசார் கைது செய்தனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வெலிங்டனில் ராணுவ பயிற்சி கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் வெளிநாடுகளை சேர்ந்த ராணுவ அதிகாரிகள் பயிற்சி பெறுகிறார்கள். இலங்கை ராணுவ அதிகாரிகள் 2 பேருக்கு கடந்த மே மாதம் முதல் இங்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதனை கண்டித்து வெலிங்டன் ராணுவ முகாமை நாம் தமிழர் கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயராகவன் தலைமையில் முற்றுகையிட போவதாக தகவல் வந்தது. இதனால் பிளாக் பிரிட்ஜ் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். வெலிங்டன் ராணுவ கல்லூரிக்கு நேரிடைய…
-
- 0 replies
- 633 views
-
-
கடந்த சில நாட்களாக ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி ஆகிய பகுதியில் பயங்கர காற்றும், கடல் கொந்தளிப்பும் ஏற்பட்டுள்ளது. மேலும் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாலும் கடந்த 5 நாட்களாக ராமேசுவரம் பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. நேற்று மீனவர்கள் மீன்பிடிக்க செல்வதற்கு டோக்கன் வழங்கப்பட்டது. நேற்று மதியம் 752 விசைப் படகுகளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். சில மீனவர்கள் கச்சத்தீவு அருகே கடலில் வலைகளை விரித்து மீன்பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது இலங்கை கடற்படையினர் 15 ரோந்து படகுகளில் அங்கு வந்தனர். அங்கு மீன்பிடித்து கொண்டு இருந்த மீனவர்களை பார்த்து எத்தனை முறைதான் சொல்வது இங்கு மீன்பிடிக்க வரக்கூடாது எ…
-
- 1 reply
- 499 views
-
-
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை மந்திரி சுதர்சன நாச்சியப்பன். இவர் இன்று கோவையில் நடைபெறும் தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மதுரையில் இருந்து காரில் புறப்பட்டார். சுதர்சன நாச்சியப்பன் பொள்ளாச்சி வழியாக வருவதை அறிந்ததும் தந்தைபெரியார் திராவிடர் கழகத்தினர் பொள்ளாச்சி காந்தி சிலைமுன்பு நகரசெயலாளர் நாகராஜ் தலைமையில் கையில் கருப்புக்கொடியுடன் திரண்டனர். இலங்கை தமிழர்களை கொன்று குவித்த ராணுவ அதிகாரிகளுக்கு குன்னூர் வெலிங்டன் ராணுவமுகாமில் பயிற்சி அளிக்க அனுமதியளித்த மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதை அறிந்ததும் காங்கிரசாரும் அங்கு திரண்டனர். எதிர்புறத்தில் நின்ற அவர்கள் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரை கண்டித்து கோஷம் எழுப்பின…
-
- 4 replies
- 651 views
-
-
நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டனில் உள்ள ராணுவ மையத்தில் இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா உள்பட தமிழ்ஈழ ஆதரவு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும் ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் வெலிங்டன் ராணுவ முகாமை முற்றுகையிட்டு பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் இலங்கை ராணுவ அதிகாரிகளை வெலிங்டன் முகாமில் இருந்து வெளியேற்றக்கோரியும் அவர்களுக்கு ராணுவ பயிற்சி அளித்து வரும் மத்திய அரசை கண்டித்தும் கூடலூர்-பந்தலூர் தாலுகாக்களில் நாளை (திங்கட்கிழமை) வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுகிறது. விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சி, ம.தி…
-
- 0 replies
- 566 views
-
-
நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் வெலிங்டன் கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரியில் இலங்கையை சேர்ந்த ராணுவ அதிகாரிகள் விங் கமாண்டர் எம்.எஸ். பந்தாரா தசநாயகே, மேஜர் சி.எஸ்.ஹரிஷ் சந்திரா ஹெட்டி யாராச்சிகே ஆகியோருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களை இலங்கை அரசு நிறுத்தும் வரையும், தமிழக மீனவர்களை தாக்குவதை நிறுத்தும் வரையும் இலங்கையை சேர்ந்த அதிகாரிகளுக்கு இங்கு எவ்வித பயிற்சியும் அளிக்கக் கூடாது என்றும் அவர்களை உடனே வெளியேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி மதிமுக, விடுதலை சிறுத்தைகள், பெரியார் தி.க., பல்வேறு அமைப்புகள் சார்பில் கடந்த 18ம் தேதி முற்றுகை போராட்டம் நடந்தது. வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் இ…
-
- 0 replies
- 402 views
-
-
கேரள முதல் அமைச்சர் உம்மன் சாண்டியின் அலுவலகத்தில், தொலைபேசி அழைப்புகளை பெறும் பிரிவில் ஊழியராக பணியாற்றி வந்தவர் கே.பி.கிரீஷ் குமார். தனது குறையை தெரிவிப்பதற்காக முதல்-மந்திரி அலுவலகத்தை தொடர்பு கொண்டு பேசிய ஒரு பெண்ணிடம் கே.பி.கிரீஷ் குமார் பாலியல் ரீதியாக ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை அறிக்கை வந்ததை தொடர்ந்து கே.பி.கிரீஷ் குமார் வேலையில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டார். சோலார் பேனல் மோசடி விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சரிதா நாயர் என்ற பெண்ணுடன் அடிக்கடி தொலைபேசியில் பேசியதாக உம்மன்சாண்டியின் உதவியாளர் மற்றும் பாதுகாவலர் ஆகியோர் சமீபத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலைய…
-
- 0 replies
- 494 views
-
-
வரும் தேர்தல்களில் தொடர்ந்து தனித்துப் போட்டியிட்டால் எதிர்காலத்தில் காங்கிரஸ் கட்சியால் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்று, அந்தக் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே.வீ.தங்கபாலு கூறியுள்ளார். சேலத்தில் நடந்த காங்கிரஸ் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசுகையில், கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஒவ்வொரு தேர்தலிலும் தொடர்ந்து சொந்தப் பலத்தில் போட்டியிட்டதாலேயே இப்போது ஆட்சியைக் கைப்பற்ற முடிந்தது. அதேபோல, தமிழகத்தில் நடைபெறும் தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டால், எதிர்காலத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும். தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசல் இல்லை. கோஷ்டியே இருக்கக் கூடாது. எந்தக் கட்சியில் கோஷ்டி பூசல் இல்லை. அரசியல் கட்சி என்றால் அதில், கோஷ்டி பூசல் தவிர்க்க முடி…
-
- 8 replies
- 1k views
-
-
இலங்கை அதிகாரிகளுக்கு வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் பயிற்சி அளிப்பதை கண்டித்து ஜூன் 25ம் தேதி வைகோ தலைமையில் குன்னூரில் முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழ் இனத்தையே இலங்கைத் தீவில் பூண்டோடு அழிக்க திட்டமிட்டு சிங்களப் பேரினவாத அரசு நடத்திய கோரமான இனப்படுகொலைக்கு அனைத்து விதத்திலும் உடந்தையாக இருந்து செயல்பட்ட காங்கிரஸ் தலைமை தாங்கும் மத்திய அரசு, தாய்த் தமிழகத்துத் தமிழ் மக்கள் நெஞ்சில் ஓங்கி மிதிப்பதுபோல், சிங்கள இராணுவத்தினருக்கு தமிழ்நாட்டில் திரும்பத் திரும்ப அழைத்துக்கொண்டுவந்து பயிற்சி கொடுக்கிறது. கோடிக்கணக்கான தமிழர்களின் நெஞ்சில் நெருப்பு மூண்டதை மத்த…
-
- 0 replies
- 368 views
-
-
சிங்கள இராணுவத்தினருக்கு குன்னூர் வெலிங்டனில் பயிற்சியைத் தொடரும் இந்திய அரசின் துரோகம்! ஜூன் 25 செவ்வாய்கிழமை: குன்னூரில் இராணுவப் பயிற்சிக் கல்லூரி முற்றுகை இது தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழ் இனத்தையே இலங்கைத் தீவில் பூண்டோடு அழிக்க திட்டமிட்டு சிங்களப் பேரினவாத அரசு நடத்திய கோரமான இனப்படுகொலைக்கு அனைத்து விதத்திலும் உடந்தையாக இருந்து செயல்பட்ட காங்கிரஸ் தலைமை தாங்கும் மத்திய அரசு, தாய்த் தமிழகத்துத் தமிழ் மக்கள் நெஞ்சில் ஓங்கி மிதிப்பதுபோல், சிங்கள இராணுவத்தினருக்கு தமிழ்நாட்டில் திரும்பத் திரும்ப அழைத்துக்கொண்டுவந்து பயிற்சி கொடுக்கிறது. கோடிக்கணக்கான தமிழர்களின் நெஞ்சில் நெருப்பு மூண்டதை மத்திய அரசு துச்சமாகக்…
-
- 0 replies
- 292 views
-
-
6-வது எம்.பி.யை தேர்வு செய்வதில் தி.மு.க.வுக்கும், தே.மு.தி.க.வுக்கும் இடையே கடும் இழுபறி ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து டெல்லி மேல்-சபைக்கு 6 எம்.பி.க்கள் தேர்வு செய்ய 27-ந் தேதி தேர்தல் நடக்கிறது. ஒரு எம்.பி. வெற்றி பெற 34 எம்.எல்.ஏக்களின் ஓட்டு தேவை. அ.தி.மு.க. - கம்யூனிஸ்டு அணியில் 170 எம்.எல்.ஏக்கள் பலம் உள்ளது. இவர்கள் ஓட்டு போட்டு அ.தி.மு.க.வின் 4 வேட்பாளர்களையும், இந்திய கம்யூனிஸ்டு சார்பில் போட்டியிடும் டி.ராஜாவையும் தேர்வு செய்து விடுவார்கள். 6-வது எம்.பி.யை தேர்வு செய்வதில் தி.மு.க.வுக்கும், தே.மு.தி.க.வுக்கும் இடையே கடும் இழுபறி ஏற்பட்டுள்ளது. தி.மு.க.வுக்கு 23 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். மனித நேய மக்கள் கட்சியின் எம்.எல்.ஏக்கள் 2 பேரும், புதிய தமிழகம் …
-
- 0 replies
- 486 views
-
-
மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை, நிதிக் கொள்கை ஆகியவற்றின் காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியுற்று, பெட்ரோலியப் பொருட்கள் உட்பட அனைத்துப் பொருட்களின் விலைகளும் ஏறிக் கொண்டே செல்வதன் விளைவாக ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அனைவரும் செய்வதறியாது விழி பிதுங்கி, இதனை எதிர்கொள்ள வழி தெரியாத சூழ்நிலையில், விலைவாசி என்னும் கொடூரத்திலிருந்து மக்களை காக்கும் வகையில், தமிழக மக்களை வாழவைக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு எடுத்து வருகிறது. பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மாதம் ஒன்றுக்கு 20 கிலோ விலையில்லா அரிசி; அமுதம் அங்காடிகள், கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் சிறப்பு அங்காடிகள் மூலமாக வெளிச்சந்தையில் 20 ரூபாய் விலையில் ஒரு கிலோ அரிசி; சிறப்பு பொது விந…
-
- 0 replies
- 457 views
-
-
இந்தியாவில் மொஹாலாய பேரரசை நிறுவிய மன்னர் பாபர் , ஒரு முறை தமது மகனும் அடுத்த பட்டத்துக்கு உரியவருமான ஹூமாயூன் , கொடிய நோயினால் உடல் வெந்து சாவின் நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கும் வேளையில் , அல்லா ! என் உயிரை எடுத்து விட்டு எனது மகனின் உயிரை காப்பாற்றுங்கள் என்று வேண்டினாராம் , அல்லாவின் அதிசயமாக , ஹூமாயூன் உயிர் பிழைத்த அந்த வாரமே , பாபரும் அவர் வேண்டிகொண்டபடிக்கு உடல் நலிவுற்று , நோய்களை எதிர்கொண்டு இறந்தாராம் . மக்காளாட்சி , ஜனநாயக கட்சி நடைமுறைகளில் முந்தைய மன்னர் நடைமுறைகள் தோற்கும் அளவிற்கு தமது குடும்ப நபர்களின் ஆட்சியை நிறுவியது இரு குடும்பங்கள் , ஒன்று நேரு குடும்பம் , மற்றொன்று கருணாநிதி குடும்பம் , இதை தொடர்ந்துதான் பல குடும்பங்கள் வந்தது . அந்த இரு கு…
-
- 0 replies
- 1.6k views
-
-
குமரி:கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடரும் கடல் சீற்றத்தினால் பல மீனவ கிராமங்கள் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடற்கரையோர மணல் கொள்ளை, வளர்ச்சித் திட்டங்களின் பெயரில் கடலைச் சூறையாடியதன் விளைவால் மீனவ கிராமங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடலோர கிராமங்களில் ராட்சத அலைகள் எழுந்து மணற்பரப்புகளை இழுத்துச் செல்கின்றன. அலையின் வேகத்தினால் கடலரிப்பு தடுப்பு சுவரின் கற்கள் பெயர்ந்து கடலில் விழுந்து கிடக்கிறது. ஊருக்குள் கடல் நீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடியப்பட்டணம், வாணியக்குடி, குறும்பனை, இரயுமன் துறை, பூத்துறை, தூத்தூர், சின்னத்துறை, இரவிபுத்தன்துறை, வள்ளவிளை, மார்த்தாண்டன்துறை, நீரோடி உள்ளிட்ட மீனவ கிராமங்கள் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளன. இரவிபுத்த…
-
- 0 replies
- 530 views
-
-
வருகிற 27-ந்தேதி டெல்லி மேல்சபை தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு எம்.பி.யை தேர்ந்து எடுக்க 34 எம்.எல்.ஏ.க்கள் தேவை. சட்டசபையில் அ.தி.மு.க. கூட்டணிக்கு 170 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். எனவே அ.தி.மு.க. சார்பில் நிறுத்தப்பட்டுள்ள டாக்டர் மைத்ரேயன், கே.ஆர்.அர்ஜூனன், த.ரத்தினவேல், இரா.லட்சுமணண் மற்றும் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்டை சேர்ந்த டி.ராஜா ஆகிய 5 பேரும் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. 6-வது எம்.பி. யார் என்பதில் தான் கேள்வி குறி நீடிக்கிறது. அந்த இடத்தை கைப்பற்ற தி.மு.க. சார்பில் கனிமொழியும், தே.மு.தி.க. சார்பில் இங்கோவனும் நிறுத்தப்பட்டுள்ளனர். சட்டசபையில் தி.மு.க.வுக்கு 23 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். தே.மு.தி.க.வுக்கு 29 எம்.எல்.ஏ.க்கள் இ…
-
- 1 reply
- 536 views
-
-
தமிழகத்தில் இருக்கும் ஈழத்தமிழ் அகதிகள் நாடுதிரும்பும் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக ஜ.நா.சபையின் அகதிகள் ஆணைக்குழுவின் புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈழத்தமிழ் அகதிகள் தமது தாயதகத்தில் இருந்து இந்தியா சென்ற 1 600 பேர் கடந்த ஆண்டு நாடு திரும்பியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 30 வருட காலமாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தில் தமது உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக பெரும்பாலானவர்கள் இந்தியாவிற்கு அகதிகளாக சென்றிருந்ததனர். எனினும் 2009ஆம் ஆண்டில் யுத்தம் நிறைவுக்கு வந்ததன் பின்னர் அகதிகள் நாடு திரும்புவதாக ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ளது. இதன்படி கடந்த 2010ஆம் ஆண்டில் 2040 பேர் நாடு திரும்பியுள்ளதுடன் …
-
- 0 replies
- 349 views
-
-
அறப்போர் ஆவணப்படம் படப்பிடிப்பில் உள்ளது... விரைவில் உலகெங்கும் ஜேர்மன், ஆங்கிலம், பிரெஞ் (Subtitle)ஆகிய மொழிகளில் மக்கள் பார்வைக்கு... https://www.facebook.com/Arapoor
-
- 4 replies
- 1.4k views
-
-
தே.மு.தி.க.வை சேர்ந்த மேலும் 4 எம்.எல்.ஏ.க்கள் முதல்வர்வரை இன்று சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது . இதனால் தே.மு.தி.க தலைவர் வியகாந்த் உட்பட தே.மு.தி.க வினர் அதிர்ச்சியில் உள்ளது. சென்ற சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிட்ட தே.மு.தி.க. 29 எம்.எல்.ஏ.க்களை பெற்றது. ஆனால் இந்த கூட்டணி சில மாதங்கள் கூட நீடிக்கவில்லை. இதையடுத்து, தே.மு.தி.க உடைக்கும் முயற்சியில் அ.தி.மு.க ஈடுபட்டது. அதிலும் அ.தி.மு.க வெற்றி பெற்று வருகிறது. தொகுதி வளர்ச்சிக்காக முதல்வர் ஜெயலலிதாவை சந்திப்பதாக இதுவரை தே.மு.தி.க.வை சேர்ந்த 7 எம்.எல்.ஏ.க்கள் அ.தி.மு.க பக்கம் சென்று விட்டனர். இவர்களை போல் மேலும் பல தே.மு.தி.க எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியில் அ.தி.மு.க ஈ…
-
- 0 replies
- 503 views
-
-
தமிழக அரசு இயக்கம் அதிக கிளைகள் கொண்ட விற்பனை நிறுவனம் எதுவென்றால் அது டாஸ்மாக் என்பதை அனைவரும் அறிவோம் . சுகாதார நிலையங்கள் புகாத கிராம இடங்களில் கூட டாஸ்மாக் பார் புகுந்து விளையாடுகிறது. மாலை வேளைகளில் கிட்டத்தட்ட ஐம்பது சதவீத ஆண்களிற்கு அடைகள இடமாக , அல்லது அடையாள இடமாக டாஸ்மாக் மாறி விட்டது . பணக்கார அரசியல்வாதிகளில் பாதி பேர் இப்போது மது உற்பத்தி கூட நிறுவனங்களையே நடத்துகின்றனர் . அந்த கூடத்தில் இருந்தே டாஸ்மாக்கிற்கு விநியோகம் நடைபெறுகிறது. இப்படி சாராயம் எந்த வித தட்டுப்பாடும் இல்லாமல் கிடைக்கையில் , அன்றாடம் பயன்படுத்தும் நீருக்கும் குடி நீருக்கும் தமிழ்நாடு , குறிப்பாக சென்னை கடும் தட்டுப்பாட்டை நோக்கி சென்று கொண்டு வருகிறது. சென்னையில்…
-
- 0 replies
- 650 views
-
-
நீலகிரி மாவட்டம், குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்தில் இலங்கையை சேர்ந்த ராணுவ அதிகாரிகள் இருவருக்கு 10 மாத பயிற்சி கடந்த 27ம் தேதி முதல் நடந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் ராணுவ முகாமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து, வெலிங்டன் பகுதியில் 3 அடுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. நேற்று முன்தினம் மதிமுக, விடுதலை சிறுத்தைகள், பெரியார் தி.க., உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள், இலங்கை அதிகாரிகளை வெளியேற்ற கோரி ராணுவ முகாமை முற்றுகையிட்டன. இதைத்தொடர்ந்து, மாவட்ட எஸ்பி செந்தில்குமார் வெலிங்டன் கன்டோன்மென்ட் பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:குன்னூர்…
-
- 0 replies
- 401 views
-
-
தமிழகத்தில் விவசாய நிலத்தின் பரப்பு, கடந்த 10 ஆண்டுகளில், 17.66 லட்சம் எக்டர் குறைந்துள்ளது. ஆண்டுதோறும் விவசாய பரப்பு மற்றும் விளைபொருட்களின் உற்பத்தி குறைந்து வருவதை தடுக்க, தமிழக அரசு தனி பட்ஜெட் தயாரிக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். பருவமழை பொய்த்து போவதால், பாசன திட்டங்களை நம்பியுள்ள விவசாய நிலங்கள் பாதிக்கின்றன. மழைநீரை சேமிக்கும் குளம், குட்டைகளை தூர்வாரி புனரமைக்காததாலும்; நீர்வழித்தட ஆக்கிரமிப்புகளை அகற்றி, மழை நீரை சேமிக்காததால் நிலத்தடி நீர்மட்டம் பாதித்துள்ளது. இதுமட்டுமின்றி விவசாய பணிகளுக்கான தொழிலாளர் தட்டுப்பாடு, விவசாயிகளுக்கு சென்றடையாத வேளாண் பல்கலை., தொழில்நுட்பங்கள், பெரும் சவாலாக உள்ளன. மழையின்மையால் ஏற்பட்ட வறட்சி, தொழில்நுட்ப பிரச்ன…
-
- 0 replies
- 2.5k views
-