தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10242 topics in this forum
-
நீட் விலக்கு: பிரதமரிடம் வலியுறுத்திய முதல்வர்! மின்னம்பலம்2022-01-13 நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார். தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளையும், சென்னையில் உள்ள செம்மொழி தமிழாய்வு மையத்தின் மத்திய நிறுவன கட்டடத்தையும் பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் தலைமைச் செயலகத்திலிருந்து முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது தமிழக அரசின் திட்டங்களைப் பட்டியலிட்ட முதல்வர் ஸ்டாலின், “மருத்துவத் துறையில் நமது நாட்டிற்கே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. இதற்கான அனுமதியையும், ஒத்துழைப்பையும், நிதி ஒதுக்கீடுகளையும் வழங்கி …
-
- 0 replies
- 397 views
-
-
ஸ்டாலினின் ’ஜனவரி 26’ திட்டம்!: தேதி கொடுத்த அமித் ஷா மின்னம்பலம்2022-01-11 நீட் விவகாரம் தொடர்பாக தமிழக எம்பிக்கள் குழுவை சந்திப்பதற்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா இசைவு தெரிவித்துவிட்டார். வரும் ஜனவரி 17 ஆம் தேதியன்று தமிழக எம்பிக்கள் குழுவை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா சந்திக்கிறார். கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட நீட் விலக்கு சட்ட மசோதா உடனடியாக தமிழக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால் இன்றுவரை அந்த மசோதா ஆளுநர் மாளிகையில் இருந்து குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அனுப்பப்படவில்லை. இதுகுறித்து மாநில மூத்த அமைச்சர் துரைமுருகன் ஆளுநரை கடந்த டிசம்பர் 17 ஆம் தேதியன்று நேரிலேயே சந்தித்து வலியுறுத்தினார்.…
-
- 0 replies
- 505 views
-
-
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி : என்னென்ன கட்டுப்பாடுகள்? மின்னம்பலம்2022-01-10 இந்தாண்டு கொரோனா காரணமாக தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடக்குமா என்ற சந்தேகம் அனைவரிடமும் இருந்தது. மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி, பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நிச்சயம் நடைபெறும். போட்டியை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை இன்று மாலைக்குள் முதல்வர் வெளியிடுவார் என்று கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் இன்றுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவடைய உள்ள நிலையில், சுகாதாரத் துறை மருத்துவத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இதில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு என்னென்ன கட்ட…
-
- 1 reply
- 432 views
-
-
வீரப்பனின் இறுதி காலத்தில் வன்னிக்கு அவரை அழைத்து பாதுகாப்பாக வைத்திருக்க புலிகள் முடிவு செய்திருந்தார்களாம், பின்னர் தமிழகத்தில் காவல்துறை வீரப்பனை நெருங்கியதால் வேண்டாம் அங்கேயே இருங்கள் என்றார்களாம். வீரப்பன் இறந்ததும் தலைவர் பிரபாகரன் மிகவும் கவலையடைந்தாராம், இப்படியெல்லாம் இயக்குனர் கெளதமன் சொல்லிக்கொண்டே போகிறார். ராஜீவ் கொலைக்குபிறகு இந்தியாவுடன் ஏற்பட்ட பகைமையை தணிக்க புலிகள் எவ்வளவோ முயற்சித்தார்கள், அப்படியிருக்க வீரப்பனை ஈழத்திற்கு அழைத்து மீண்டும் ஒரு தடவை இந்திய தமிழக அரசுகளின் கோபத்திற்கு ஆளாக புலிகள் முயற்சித்திருப்பார்களா என்பது கெளதமனுக்கே வெளிச்சம். புலிகள் ஆதரவு எனும் பேரில் இவர்கள் சொல்வது எல்லாம் கடந்துபோன போராட்டத்துக்கு நெருக்கமான ஆதரவா அ…
-
- 37 replies
- 2.6k views
- 1 follower
-
-
தமிழகத்தில் முழு ஊரடங்கு அமுல்! தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 11 ஆயிரத்தை நெருங்கியது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 5 ஆயிரம் பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, நாளாந்தம் இரவுநேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என தமிழக அரசு கடந்த வாரம் அறிவித்தது. அதன்படி, இன்று முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதால், பொதுப் போக்குவரத்தும் இயங்காததால், வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எனினும் தமிழகம் முழுவதும் 1.20 இலட்சம் பொலிஸார் கடு…
-
- 0 replies
- 476 views
-
-
இந்திய முதல்வர் இலங்கைக்கு விடுத்துள்ள கோரிக்கை! இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 56 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கைச் சிறைகளிலிருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொண்டமைக்காக மத்திய அரசுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டதுடன், கடந்த 2021 டிசம்பர் 19 மற்றும் 20 ஆம் நாளிலிருந்து இலங்கை சிறைகளில் வாடிக் கொண்டிருக்கும் 56 மீனவர்களை விடுவித்து, பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்துவர தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், இலங்…
-
- 1 reply
- 421 views
-
-
மீனவர்களை விடுக்க கோரி இலங்கை அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தெரிவிப்பு! தமிழக மீனவர்களை விரைவில் விடுவிக்கக்கோரி இலங்கை அரசுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 68 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இதில் 12 மீனவர்கள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர். கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையிலேயே அவர்கள் விடுதலை செய்யப்பட்டதாகவும், விடுவிக்கப்பட்டவர்கள் விரைவில் இந்தியா திரும்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதகாவும், மத்திய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறியுள்ளார். மீதமுள்ள மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக இலங்கை…
-
- 0 replies
- 257 views
-
-
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை, கர்நாடகாவில் தனிப்படை போலீஸார் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் 18 நாள்களாக நடந்து வந்த தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்துள்ளது. அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, ஆவின் நிறுவனத்தில் பணி வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3 கோடியே பத்து லட்சத்தை ஏமாற்றியதாக புகார் கூறப்பட்டது. இதன் பின்னணியில் அ.தி.மு.க நிர்வாகிகள் சிலரும் செயல்பட்டதாகவும் தகவல் வெளியானது. இந்தப் புகாரின் அடிப்டையில் கடந்த நவம்பர் மாதம் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக மேலும் ஒன்பது புகார்கள் அவர் மீது கூறப்…
-
- 3 replies
- 469 views
- 1 follower
-
-
புதுக்கோட்டை சிறுவன் தலையில் இருந்த தோட்டா அகற்றம் - உடல்நிலை எப்படி உள்ளது? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தமலை அருகே பசுமலைப்பட்டியில் உள்ள காவல்துறை துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது சிறுவன் புகழேந்தி தலையில் பாய்ந்த துப்பாக்கி தோட்டா, நான்கு மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு அகற்றப்பட்டுள்ளது. தஞ்சாவூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் அந்த சிறுவனுக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து தோட்டாவை அகற்றினர். இருப்பினும் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள சிறுவன் புகழேந்தியின் உடல்நிலை குறித்து அடுத்த 24 மணி நேரத்துகுப் பிறகே தெரிவிக்க முடியும் என்று மருத்துவர்கள் கூறிய…
-
- 2 replies
- 474 views
- 1 follower
-
-
பூசாரிகள், அர்ச்சகர்களும் பொங்கல்முதல் சீருடையில்..! மின்னம்பலம்2022-01-04 தமிழ்நாட்டு அறநிலையத் துறை கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள், ஓதுவார்கள் முதலிய பணியாளர்களுக்கு தனித்தனியான சீருடை வழங்கப்படுகிறது. வரும் பொங்கல் முதல் அனைத்து கோயில் பணியாளர்களும் புதிய சீருடையில் பணியாற்றத் தொடங்குவார்கள். மாநிலத்தில் இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் 36,684 திருக்கோயில்கள் உள்ளன. இந்தக் கோயில்களில் சுமார் 52,803 பணியாளர்கள் பணியாற்றிவருகிறார்கள். இந்தக் கோயில்களில் பத்தாயிரக்கணக்கான அதிகாரிகள், பணியாளர்கள் பணியாற்றிவருகின்றனர். ஏராளமான பக்தர்கள் வருகைபுரியும் கோயில்களில் கூடுதலான பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். அரசுத் துறை ஊழியர்களைத்…
-
- 1 reply
- 483 views
- 1 follower
-
-
நீட் விலக்கு மசோதா: நேரம் ஒதுக்காத அமித் ஷா - ஆளுநர் பதவி விலக கோரும் டி.ஆர். பாலு 4 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, டெல்லியில் தமிழக அனைத்து கட்சி எம்.பிக்கள் குழுவுடன் செய்தியாளர்களை சந்திக்கும் டி.ஆர். பாலு தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா சட்டம் ஆகாமல் இருக்க மாநில ஆளுநர் ஆர்.என். ரவியே காரணம் என்பதால் அவர் பதவி விலக வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்துக் கட்சி எம்.பிக்கள் குழு தெரிவித்துள்ளது.தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க மாநில ஆளுநருககு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திப்பதற்க…
-
- 0 replies
- 291 views
- 1 follower
-
-
தை புத்தாண்டா? இல்லையா? பொங்கல் பை சொல்லும் செய்தி! மின்னம்பலம்2022-01-04 தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜனவரி 4) பொங்கல் திருநாளை ஒட்டி தமிழக அரசு அறிவித்த பரிசுத் தொகுப்பை பயனாளிகளுக்கு வழங்கித் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுதும் இன்று முதல் இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. முதல்வர் வழங்கிய இந்த பொங்கல் பையில், திமுகவின் கொள்கையான, ‘தமிழ்ப் புத்தாண்டு’ என்ற வாசகம் இடம்பெறவில்லை. பொங்கல் என்ற வார்த்தை கூட இடம்பெறவில்லை. பொங்கல் பையின் ஒரு பக்கத்தில், ’தமிழர் திருநாள் நல் வாழ்த்துகள்’ என்று அச்சிடப்பட்டு, அதன் கீழே, ’மண் செழிக்கட்டும், மக்கள் மகிழட்டும், வீடு நிறையட்டும், நாடு சிறக்கட்டும்- மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சர்’…
-
- 2 replies
- 658 views
-
-
என்னதான் செய்ய...? - புத்தகக் காட்சி ரத்து! மின்னம்பலம்2022-01-02 தலைநகர் சென்னையில் இன்னும் நான்கு நாள்களில் 45ஆவது புத்தகக்காட்சியை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கிவைப்பதாக இருந்தது. ஒமிக்ரான் கட்டுப்பாடுகளில் புத்தகக்காட்சிகளுக்கு 10ஆம் தேதிவரை அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டிருப்பதால், அதிர்ச்சியில் உறைந்துபோய் இருக்கிறார்கள், புத்தகப் பதிப்பாளர்கள். என்னதான் டிஜிட்டல் உலகம் என்றாலும் தாளைக் கைவைத்துப் புரட்டிப் படிக்கும் மனநிலை கொண்ட தீராத புத்தக ஆர்வலர்களும் ஆழ்ந்த வருத்தம் அடைந்துள்ளனர். ஜனவரி 6ஆம் தேதி தொடங்கி இந்த மாதம் 23ஆம் தேதிவரை இந்தப் புத்தகக் காட்சியை நடத்துவதற்கான ஏற்பாடுகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன என்று கூறலாம். மொத்தம் 800 புத…
-
- 2 replies
- 514 views
-
-
ஓ.டி.எஃப். கிராமங்கள் : 2ஆம் இடத்தில் தமிழகம்! மின்னம்பலம்2022-01-03 தூய்மை இந்தியா திட்டத்தின்படி கிராமப்புறத்தில் தூய்மையையும் சுகாதாரத்தையும் மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன. இதில், ஊரக தூய்மை இந்தியா திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதக் கடைசிவரை அதாவது 2021 டிசம்பர் 31ஆம் தேதிவரை, நாட்டில் திறந்தவெளி மலம் கழிப்பு (ஓடிஎஃப்) ஒழிக்கப்பட்ட கிராமங்களின் எண்ணிக்கையில், தெலங்கானா மாநிலம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 14, 200 கிராமங்களில் 13 ஆயிரத்து 737 கிராமங்களில் திறந்தவெளி மலம் கழிப்பு முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 9…
-
- 0 replies
- 409 views
-
-
எழுத்தாளர் அம்பைக்கு 2021 இற்கானஆண்டுக்கான இந்திய சாகித்ய அகாடமி விருது ஜனவரி 1, 2022 2021-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர் அம்பைக்கு வழங்கப்படுகிறது. ‘சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை’ சிறுகதைத் தொகுப்புக்காக அம்பை இந்த விருதைப் பெறுகிறார். காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட இந்நூல், அம்பையின் ஏழாவது சிறுகதைத் தொகுப்பு ஆகும். 13 கதைகள் கொண்ட இத்தொகுப்பின் பல கதைகள் பிரசுரம் ஆகாதவை. சி.எஸ்.லட்சுமி எனும் இயற்பெயர் கொண்ட அம்பை, புனைவெழுத்தில் பெண் இருப்பைக் காத்திரமாகப் பதிவுசெய்த எழுத்துக்குச் சொந்தக்காரர். ‘சிறகுகள் முறியும்’, ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ போன்ற சிறுகதைத் தொகுப்புகளின் வழியே இலக்கிய உலக…
-
- 0 replies
- 546 views
-
-
சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பியதாக கைது செய்யப்பட்ட யூ டியூபர் சாட்டை துரைமுருகன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை பாய்ந்துள்ளது. ஃபாக்ஸ்கான் நிறுவன பெண் ஊழியர்கள், கடந்த மாதம் அவர்கள் தங்கியிருந்த தனியார் விடுதி உணவை சாப்பிட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர்கள், பின்னர் குணமடைந்தனர். இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களைப் பரப்பியதாக, யூ டியூபர் சாட்டை துரைமுருகன் கடந்த 19 ஆம் தேதியன்று திருச்சியில் கைது செய்யப்பட்டார். 8 பிரிவுகளில் அவர் மீது திருவள்ளூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்த நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி சாட்டை துரைமுருகன் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் அவரை குண்டர் தடுப்…
-
- 0 replies
- 378 views
- 1 follower
-
-
திருவண்ணாமலை வேளாண் கிராமத்தில் புயலாக வீசும் சிப்காட் தொழிற்பேட்டை யோசனை அ.தா.பாலசுப்ரமணியன் பிபிசி தமிழ் 2 ஜனவரி 2022, 03:54 GMT படக்குறிப்பு, சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க தங்கள், வீடுகள், நிலங்கள் கையகப்படுத்தக்கூடாது என்று வலியுறுத்தி பாலியப்பட்டு கிராமத்தில் போராட்டம் நடத்தும் ஊர் மக்கள். திருவண்ணாமலை அருகே, நெடுஞ்சாலையில் இருந்து விலகி, இரண்டு மலைகளுக்கு இடையே அமைந்துள்ள பாலியப்பட்டு கிராமத்தில் தமிழ்நாடு அரசு சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க உள்ளதாகவும், இதற்காக பல நூறு ஏக்கர் வேளாண் நிலங்களும், ஏராளமான வீடுகளும் கையகப்படுத்தப்பட உள்ளதாகவும் கிடைத்த தகவலை அடுத்…
-
- 1 reply
- 777 views
- 1 follower
-
-
``சீமான், பாஜக-வுக்கு ஆதரவாக இருந்ததில்லை; இருக்கப்போவதும் இல்லை!" - சொல்கிறார் நாராயணன் திருப்பதி News பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி ``ராஜீவ்காந்தியைக் கொன்றவர்கள் நாங்கள்தான் என்று சீமான் சொன்னால், அவர் மீது நடவடிக்கை எடுக்காத தி.மு.க அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கூட்டணியிலிருந்து வெளியேறிவிட வேண்டியதுதானே'' என்கிறார் நாராயணன் திருப்பதி. 'தி.மு.க வெர்சஸ் அ.தி.மு.க' என்ற அரசியல் அரிச்சுவடியை 'தி.மு.க வெர்சஸ் பா.ஜ.க'-வாக மாற்றத் துடிக்கும் முயற்சியாக, தி.மு.க அரசுக்கு எதிராக அறிக்கை, போராட்டம், விமர்சனம் என தொடர்ச்சியாக தம் கட்டிவருகிறது தமிழக பா.ஜ.க! …
-
- 25 replies
- 1.6k views
- 3 followers
-
-
சென்னையில் உள்ள கடற்கரைகளுக்கு செல்ல இன்று முதல் தடை ஒமிக்ரோன் பரவல் காரணமாக சென்னையில் உள்ள கடற்கரைகளுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் மறு அறிவிப்பு வரும் வரை பொதுமக்கள் செல்வதற்கு தடை விதித்து மாநகராட்சி அறிவித்துள்ளது. நடைபயிற்சி செல்வோர் நடைபயிற்சி பாதையில் மட்டும் செல்வதற்கு அனுமதி உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது. மணல்பரப்பில் செல்வதற்கு அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், பிரத்யேக நடைபாதையில் மாற்றுத்திறனாளிகள் செல்வதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் ஒமிக்ரோன் தொற்று பரவி வருவதை தொடர்ந்து புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்துவதற்கும் திருமணம் உள்ளிட்ட சமு…
-
- 0 replies
- 269 views
-
-
அமித்ஷாவுக்கு ஸ்டாலின் கடிதம்! மின்னம்பலம்2022-01-01 தமிழ்நாட்டில் அடிக்கடி வெள்ளம், பெருமழை போன்ற இயற்கை இடர்பாடுகளால் பாதிப்பு ஏற்படும் நிலையில், தக்க நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க, சென்னை வானிலை ஆய்வு மையத்தை மேம்படுத்தவேண்டும் என்றும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மைய அரசை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து மைய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு அவர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “பெருமழைக் கால சூழலில் மாநில அரசு அதை எதிர்கொள்வது குறித்த ஒரு முக்கியமான விஷயத்தை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். பெருமழை, கடும் புயல் போன்ற இயற்கை இடர்பாடுகளை எதிர்கொள்ள மாநில அரசு …
-
- 1 reply
- 346 views
-
-
இதுதான் என் லட்சியம்: திருச்சியில் முதல்வர் உறுதி! மின்னம்பலம்2021-12-31 தமிழகத்தில் எந்தவொரு தனிமனிதருக்கும், அரசிடம் கோரிக்கை வைக்க மனு இல்லாத ஒருநிலையை உருவாக்குவோம். இதுதான் என் லட்சியம் என்று திருச்சியில் முதல்வர் கூறியுள்ளார். முதல்வர் ஸ்டாலின் நேற்று தஞ்சை மற்றும் திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி, முடிவுற்ற திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார். தஞ்சையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நலத்திட்ட உதவிகள், அடிக்கல் நாட்டப்பட்ட பணிகள் என மொத்தம் ரூ.1,231 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் முதல்வரால் தொடங்கப்பட்டன. அதுபோன்று திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 1,084 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகளைத் தொட…
-
- 0 replies
- 329 views
-
-
தமிழ்த்தாய் வாழ்த்து தமிழக அரசின் மாநில பாடலாக அறிவிப்பு! தமிழ்த்தாய் வாழ்த்தை தமிழ்நாட்டு அரசின் மாநில பாடலாக அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மனோண்மணியம் சுந்தரனார் இயற்றிய தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடல் தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக அறிவிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும், நிகழ்வு துவங்குவதற்கு முன்பும் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம். தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது அனைவரும் எழுந்து நிற்கவேண்டியது கட்டாயம். மாற்றுத்திறனாளிகள் எழ…
-
- 91 replies
- 11.4k views
- 1 follower
-
-
"புழைச்சதே பெரிசு, ஒன்னும் மிஞ்சலை" - அப்பளம் போல நொறுங்கிய திருவொற்றியூர் கட்டடம் - கள நிலவரம் ஆ. விஜயானந்த் பிபிசி தமிழ் 25 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,@KUPPAN_KARTHIK படக்குறிப்பு, திருவொற்றியூர் அரிவாக்குளத்தில் தரைமட்டமான குடியிருப்புக் கட்டடம் சென்னையை அடுத்த திருவொற்றியூரில் உள்ள அரிவாக்குளத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்துக்கு சொந்தமான கட்டடம் முழுமையாக சரிந்து விழுந்துள்ளது. நல்வாய்ப்பாக அந்த சம்பவத்தில் உயிர் சேதம் ஏற்படவில்லை. ஆனால், பல குடும்பங்கள் உடைமைகள், முக்கிய ஆவணங்களை சம்பவ பகுதியில் இழந்தன. அங்கு என்ன நடந்தது என்பதை பிபிசி தமிழின் விஜயான…
-
- 3 replies
- 532 views
- 1 follower
-
-
இது தமிழக வரலாற்றில் ஒரு மைல்கல்’… முதல்வர் ஸ்டாலினுக்கு அற்புதம்மாள் நன்றி தெரிவிப்பு தமிழகம்: நன்னடத்தை அடிப்படையில் ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது பற்றி ஓய்வு பெற்ற நீதிபதி ஆதிநாதன் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று உத்தரவிட்டுள்ளார். மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக சிறைகளில் ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ளவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில், உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் மற்றும் இது தொடர்பாகத் தற்போது நடைமுறையில் உள்ள சட்டம் மற்றும் விதிகளின் அடிப்படையில் இவர்களின் நிகழ்வுகளை ஆராய்ந்தும், அவர்களின் முன்விடுதலைக்கு உ…
-
- 5 replies
- 701 views
-
-
வேலூரில் தொடர்ந்து உணரப்படும் நில அதிர்வுகளுக்கு காரணம் என்ன? நடராஜன் சுந்தர் பிபிசி தமிழுக்காக 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப்படம் தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் நவம்பர் 29, 23 ஆகிய தேதிகளில் நில அதிர்வு ஏற்பட்ட நிலையில் சனிக்கிழமை மீண்டும் நில அதிர்வு உணரப்பட்டது. எனவே ஒரே மாதத்தில் மூன்று முறை நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் கடந்த நவம்பர் 29ஆம் தேதி அதிகாலை 4.17 மணிக்கு நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.6 என்ற அளவில் பதிவாகியது. இந்த நில அதிர்வு வேலூருக்கு தெற்கு - தென்மேற்கில் 59.4 கி…
-
- 0 replies
- 335 views
- 1 follower
-