Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தமிழ் நாட்டில் திமுக பதவியேற்று 7 மாதங்கள் முடிவு அடைந்துள்ளது. திமுகவினரும், மேலோட்டமாக முற்போக்குவாதம் பேசுவோரும் திராவிட புரட்சி நடைபெறுவதாகக் கூறி கம்பு சுற்றிக்கொண்டிருக்கும் வேளையில் நடைமுறை நிதர்சனம் உழைக்கும் வர்க்கத்திற்கு எதிரானதாகவே உள்ளது. தமிழகத்தை 2030 க்குள் டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்பது தான் திமுகவின் திட்டமாக உள்ளது. மே மாதம் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததிலிருந்து முதலீட்டாளர்கள் மாநாடு உள்ளிட்ட பல கூட்டங்களில் இந்த எண்ணத்தை முதல்வர் வெளிப்படுத்தியுள்ளார். இது முதலீட்டாளர்களுக்குச் சாதகமாகவும் தொழிலாளர்களுக்குப் பாதகமாகவும் தான் இருக்கும் என்று ஆரம்பத்தில் இருந்தே புதிய சோசியலிச இயக்கம் கூறி வந்தது. தற்போது இதனை நிரூபிக்கும் வ…

  2. தமிழ்த் தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க மறுத்த அதிகாரிகள்: சென்னையில் போராட்டம்! இந்திய குடியரசு தினமான நேற்று சென்னை ரிசர்வ் வங்கி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பாடப்பட்ட தமிழ்த் தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்க அதிகாரிகள் மறுத்த நிலையில் அவர்களுக்கு எதிராக பொலிஸ் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதேவேளை பல்வேறு கட்சிகள் சென்னையில் போராட்டங்களையும் முன்னெடுத்துள்ளன. குடியரசு தின விழாவின் நிறைவாக தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது. ஆனால் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது அங்கிருந்த பலர் எழுந்து நின்று மரியாதை செலுத்தவில்லை என்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதன்போது ச…

  3. மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்த நீங்கள் தேசபக்தி பாடம் எடுக்க வேண்டாம்

    • 0 replies
    • 540 views
  4. இலங்கை காவலில் உள்ள 128 இயந்திர மீன்பிடி படகு உரிமையாளர்களுக்கு தலா 5 இலட்சமும், நாட்டுப்படகுகளின் உரிமையாளர்கள் 17 பேருக்கு தலா 1.5 இலட்சமும் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழையின் போது 105 மீன்பிடி படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களால் ஏற்பட்ட சேதத்திற்கு ரூபாய் 5.66 கோடி இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். பல்வேறு மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் தலைமைச் செயலகத்தில் மு.க. ஸ்டாலினை சந்தித்து, இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர். 20 ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் மீன்பிடி மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ண…

  5. மனோன்மணீயம் சுந்தரனார் எழுதிய, `தமிழ்த் தெய்வ வணக்கம்' என்ற பாடலின் ஒரு பகுதியையே தமிழ்த்தாய் வாழ்த்து பாடலாக தமிழக அரசு கொண்டுள்ளது. ஆனால், இந்த தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மனோன்மணீயம் சுந்தரனார் எழுதிய முழுப் பாடல் அல்ல, 1970-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் மு.கருணாநிதியால் சில வரிகளை நீக்கி திருத்தம் செய்யப்பட்ட பாடலாகும். இந்த திருத்தம் செய்யப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசின் மாநிலத் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கும் என்று கடந்த ஆண்டு அறிவித்திருந்தார். இந்த நிலையில், கடந்த 2007-ம் ஆண்டு மோகன்ராஜ் என்பவரால், மு.கருணாநிதி திருத்திய தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து, தமிழ்த்தாய் வாழ்த்துப் ப…

  6. “பல்வேறு தருணங்களில் இந்தியாவுக்கு துரோகம் செய்த இலங்கை அரசு, இம்முறையாவது இந்திய அரசின் கடனுதவி வசதியைப் பெற்றுக் கொண்டு ஆதரவாக இருக்குமா என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை” என்று என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “வரலாறு காணாத கடன் மற்றும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு உணவு மற்றும் எரிபொருள் வாங்குவதற்காக ரூ.18,090 கோடி கடன் வசதியை இந்திய அரசு வழங்கியிருக்கிறது. மத்திய அரசின் இம்முடிவு இராஜதந்திர நடவடிக்கை என்றாலும் கூட, இலங்கை அளித்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்றச் செய்வதற்கான சிறந்த வாய்ப்பாக இதை இந்திய அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சீனா உள்ளிட்ட நாடுக…

  7. முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் தமிழ்நாட்டில் 2022ஆம் ஆண்டில் ஏழு இடங்களில் அகழாய்வும் சங்க கால கொற்கைத் துறைமுகத்தை அடையாளம் காண்பதற்கான முன்கள ஆய்வும் நடைபெறும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தத் தகவல்களைத் தெரிவித்துள்ளார். "அண்மைக் காலத்தில் கீழடி, அழகன்குளம், கொற்கை, சிவகளை, ஆதிச்சநல்லூர், கொடுமணல், மயிலாடும்பாறை, கங்கைகொண்ட சோழபுரம் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் தமிழகத்தின் தொன்மையைப் புதிய காலக்கணிப்பு மூலம் பல நூற்றாண்டு காலத்திற்கு முன்னோக்கி எடுத்துச் சென்றுள்ளது. கீழடி அகழாய்வு மற்ற அகழாய்வு…

  8. பி.ஆண்டனிராஜ் நடமாடும் நகைக்கடையாக வலம் வருபவர், ஹரிகோபால கிருஷ்ணன் என்ற ஹரி நாடார். நெல்லை மாவட்டம் இலந்தைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த இவர் சிறு வயதிலேயே மும்பைக்குச் சென்று பின்னர் அங்கிருந்து சென்னைக்கு வந்து செட்டில் ஆகிவிட்டார். ராக்கெட் ராஜாவின் `பனங்காட்டுப் படை’ கட்சியில் முக்கியப் பொறுப்பு வகித்த அவர், கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளைப் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார். வட்டித் தொழில் செய்டுவந்த ஹரி நாடார் பின்னர் திரைப்படத் தயாரிப்பில் ஈடுபடப் போவதாக அறிவித்தார். புதிய திரைப்படங்களுக்கு பூஜை போட்டிருந்த நிலையில், பெங்களூருவைச் சேர்ந்த வெங்கட்ராமன் சாஸ்திரி என்பவ…

  9. விண்ணுக்கு அனுப்பப்படும் இளையராஜாவின் இசை! தமிழ், தெலுங்கு, மலையாளம் என பன்மொழிகளில் இசையமைத்து வரும் இசைஞானி இளையராஜாவின் இசை விண்வெளியில் ஒலிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதன்படி உலகிலேயே எடை குறைவான சாட்டிலைட் தயாரிக்கும் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் குழு இந்த ஆண்டு இன்னும் அதிக எடையை குறைத்து ஒரு புதிய சாட்டிலைட்டை வடிவமைத்துள்ளது. குறித்த சாட்டிலைட்டில் இளையராஜாவின் இசை இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரோவின் உதவியுடன் இளையராஜாவின் பாடல் இடம்பெற்றுள்ள குறித்த சாட்டிலைட் விண்வெளிக்கு அனுப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2022/1262607

  10. தமிழ்நாடு: வேலு நாச்சியார் அலங்கார ஊர்திக்கு மறுப்பா? குடியரசு தின அணிவகுப்பு தேர்வில் நடந்தது என்ன, எது உண்மை? 18 ஜனவரி 2022, 01:45 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, 2020ஆம் ஆண்டில் டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் இடம்பெற்ற தமிழக அலங்கார ஊர்தி இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்கும் மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் தமிழ்நாடு முன்மொழிந்த சுதந்திர போராட்ட தியாகிகளின் உருவமாதிரிகளுக்கு இந்திய பாதுகாப்புத்துறையின் உயர்நிலைக்குழு அனுமதி மறுத்ததாக வெளியான தகவல், நேற்று ஒரே நாளில் பரவலான கவனத்தை ஈர்த்தது. என்ன நடந்தது இந்த விவகாரத்தில்? எது உண்மை? …

  11. சேலத்தில் மாற்றுத்திறனாளி சந்தேக மரணம்: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு - என்ன நடந்தது? 17 ஜனவரி 2022 படக்குறிப்பு, அமலா ராணி, ஹம்சலா சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்ற்றுத்திறனாளி பிரபாகரன் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவர் சந்தேக மரணம் அடைந்த சம்பவத்தை மாநில குற்றப்புலனாய்வுத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். என்ன நடந்தது இந்த விவகாரத்தில்? சேலம் மாவட்டம் கருப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி பிரபாகரன். இவரது மனைவி ஹம்சலா. இவர்கள் இருவரையும் கடந்த 8ஆம் தேதி திருட்டு வழக்கு ஒன்றில் விசாரணைக்காக நாமக்கல் மாவட்டம், சேந…

  12. மீன் பண்ணை -நெடுஞ்சாலையில் ஒருங்கிணைந்த பண்ணை

  13. மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: வரிசை கட்டிய காளைகள் vs அடக்கத் துடிக்கும் இளைஞர்கள் - கள படங்கள் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, மதுரை அவனியாபுர ஜல்லிக்கட்டு 2022 தமிழ்நாட்டின் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கு உட்பட்டு 700 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ஜல்லிக்கட்டில் 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காளை உரிமையாளர் மற்றும் ஒரு உதவியாளருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்கு ஒரு சுற்று என்று சுற்றுக்கு 30 மாடுபிடி வீரர்கள் க…

  14. நீட் விலக்கு: பிரதமரிடம் வலியுறுத்திய முதல்வர்! மின்னம்பலம்2022-01-13 நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார். தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளையும், சென்னையில் உள்ள செம்மொழி தமிழாய்வு மையத்தின் மத்திய நிறுவன கட்டடத்தையும் பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் தலைமைச் செயலகத்திலிருந்து முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது தமிழக அரசின் திட்டங்களைப் பட்டியலிட்ட முதல்வர் ஸ்டாலின், “மருத்துவத் துறையில் நமது நாட்டிற்கே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. இதற்கான அனுமதியையும், ஒத்துழைப்பையும், நிதி ஒதுக்கீடுகளையும் வழங்கி …

  15. ஸ்டாலினின் ’ஜனவரி 26’ திட்டம்!: தேதி கொடுத்த அமித் ஷா மின்னம்பலம்2022-01-11 நீட் விவகாரம் தொடர்பாக தமிழக எம்பிக்கள் குழுவை சந்திப்பதற்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா இசைவு தெரிவித்துவிட்டார். வரும் ஜனவரி 17 ஆம் தேதியன்று தமிழக எம்பிக்கள் குழுவை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா சந்திக்கிறார். கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட நீட் விலக்கு சட்ட மசோதா உடனடியாக தமிழக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால் இன்றுவரை அந்த மசோதா ஆளுநர் மாளிகையில் இருந்து குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அனுப்பப்படவில்லை. இதுகுறித்து மாநில மூத்த அமைச்சர் துரைமுருகன் ஆளுநரை கடந்த டிசம்பர் 17 ஆம் தேதியன்று நேரிலேயே சந்தித்து வலியுறுத்தினார்.…

  16. ஜல்லிக்கட்டுக்கு அனுமதி : என்னென்ன கட்டுப்பாடுகள்? மின்னம்பலம்2022-01-10 இந்தாண்டு கொரோனா காரணமாக தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடக்குமா என்ற சந்தேகம் அனைவரிடமும் இருந்தது. மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி, பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நிச்சயம் நடைபெறும். போட்டியை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை இன்று மாலைக்குள் முதல்வர் வெளியிடுவார் என்று கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் இன்றுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவடைய உள்ள நிலையில், சுகாதாரத் துறை மருத்துவத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இதில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு என்னென்ன கட்ட…

  17. தமிழகத்தில் முழு ஊரடங்கு அமுல்! தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 11 ஆயிரத்தை நெருங்கியது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 5 ஆயிரம் பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, நாளாந்தம் இரவுநேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என தமிழக அரசு கடந்த வாரம் அறிவித்தது. அதன்படி, இன்று முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதால், பொதுப் போக்குவரத்தும் இயங்காததால், வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எனினும் தமிழகம் முழுவதும் 1.20 இலட்சம் பொலிஸார் கடு…

  18. வீரப்பனின் இறுதி காலத்தில் வன்னிக்கு அவரை அழைத்து பாதுகாப்பாக வைத்திருக்க புலிகள் முடிவு செய்திருந்தார்களாம், பின்னர் தமிழகத்தில் காவல்துறை வீரப்பனை நெருங்கியதால் வேண்டாம் அங்கேயே இருங்கள் என்றார்களாம். வீரப்பன் இறந்ததும் தலைவர் பிரபாகரன் மிகவும் கவலையடைந்தாராம், இப்படியெல்லாம் இயக்குனர் கெளதமன் சொல்லிக்கொண்டே போகிறார். ராஜீவ் கொலைக்குபிறகு இந்தியாவுடன் ஏற்பட்ட பகைமையை தணிக்க புலிகள் எவ்வளவோ முயற்சித்தார்கள், அப்படியிருக்க வீரப்பனை ஈழத்திற்கு அழைத்து மீண்டும் ஒரு தடவை இந்திய தமிழக அரசுகளின் கோபத்திற்கு ஆளாக புலிகள் முயற்சித்திருப்பார்களா என்பது கெளதமனுக்கே வெளிச்சம். புலிகள் ஆதரவு எனும் பேரில் இவர்கள் சொல்வது எல்லாம் கடந்துபோன போராட்டத்துக்கு நெருக்கமான ஆதரவா அ…

  19. இந்திய முதல்வர் இலங்கைக்கு விடுத்துள்ள கோரிக்கை! இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 56 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கைச் சிறைகளிலிருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொண்டமைக்காக மத்திய அரசுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டதுடன், கடந்த 2021 டிசம்பர் 19 மற்றும் 20 ஆம் நாளிலிருந்து இலங்கை சிறைகளில் வாடிக் கொண்டிருக்கும் 56 மீனவர்களை விடுவித்து, பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்துவர தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், இலங்…

  20. மீனவர்களை விடுக்க கோரி இலங்கை அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தெரிவிப்பு! தமிழக மீனவர்களை விரைவில் விடுவிக்கக்கோரி இலங்கை அரசுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 68 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இதில் 12 மீனவர்கள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர். கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையிலேயே அவர்கள் விடுதலை செய்யப்பட்டதாகவும், விடுவிக்கப்பட்டவர்கள் விரைவில் இந்தியா திரும்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதகாவும், மத்திய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறியுள்ளார். மீதமுள்ள மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக இலங்கை…

  21. நீட் விலக்கு மசோதா: நேரம் ஒதுக்காத அமித் ஷா - ஆளுநர் பதவி விலக கோரும் டி.ஆர். பாலு 4 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, டெல்லியில் தமிழக அனைத்து கட்சி எம்.பிக்கள் குழுவுடன் செய்தியாளர்களை சந்திக்கும் டி.ஆர். பாலு தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா சட்டம் ஆகாமல் இருக்க மாநில ஆளுநர் ஆர்.என். ரவியே காரணம் என்பதால் அவர் பதவி விலக வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்துக் கட்சி எம்.பிக்கள் குழு தெரிவித்துள்ளது.தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க மாநில ஆளுநருககு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திப்பதற்க…

  22. அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை, கர்நாடகாவில் தனிப்படை போலீஸார் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் 18 நாள்களாக நடந்து வந்த தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்துள்ளது. அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, ஆவின் நிறுவனத்தில் பணி வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3 கோடியே பத்து லட்சத்தை ஏமாற்றியதாக புகார் கூறப்பட்டது. இதன் பின்னணியில் அ.தி.மு.க நிர்வாகிகள் சிலரும் செயல்பட்டதாகவும் தகவல் வெளியானது. இந்தப் புகாரின் அடிப்டையில் கடந்த நவம்பர் மாதம் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக மேலும் ஒன்பது புகார்கள் அவர் மீது கூறப்…

  23. தை புத்தாண்டா? இல்லையா? பொங்கல் பை சொல்லும் செய்தி! மின்னம்பலம்2022-01-04 தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜனவரி 4) பொங்கல் திருநாளை ஒட்டி தமிழக அரசு அறிவித்த பரிசுத் தொகுப்பை பயனாளிகளுக்கு வழங்கித் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுதும் இன்று முதல் இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. முதல்வர் வழங்கிய இந்த பொங்கல் பையில், திமுகவின் கொள்கையான, ‘தமிழ்ப் புத்தாண்டு’ என்ற வாசகம் இடம்பெறவில்லை. பொங்கல் என்ற வார்த்தை கூட இடம்பெறவில்லை. பொங்கல் பையின் ஒரு பக்கத்தில், ’தமிழர் திருநாள் நல் வாழ்த்துகள்’ என்று அச்சிடப்பட்டு, அதன் கீழே, ’மண் செழிக்கட்டும், மக்கள் மகிழட்டும், வீடு நிறையட்டும், நாடு சிறக்கட்டும்- மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சர்’…

  24. பூசாரிகள், அர்ச்சகர்களும் பொங்கல்முதல் சீருடையில்..! மின்னம்பலம்2022-01-04 தமிழ்நாட்டு அறநிலையத் துறை கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள், ஓதுவார்கள் முதலிய பணியாளர்களுக்கு தனித்தனியான சீருடை வழங்கப்படுகிறது. வரும் பொங்கல் முதல் அனைத்து கோயில் பணியாளர்களும் புதிய சீருடையில் பணியாற்றத் தொடங்குவார்கள். மாநிலத்தில் இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் 36,684 திருக்கோயில்கள் உள்ளன. இந்தக் கோயில்களில் சுமார் 52,803 பணியாளர்கள் பணியாற்றிவருகிறார்கள். இந்தக் கோயில்களில் பத்தாயிரக்கணக்கான அதிகாரிகள், பணியாளர்கள் பணியாற்றிவருகின்றனர். ஏராளமான பக்தர்கள் வருகைபுரியும் கோயில்களில் கூடுதலான பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். அரசுத் துறை ஊழியர்களைத்…

  25. ஓ.டி.எஃப். கிராமங்கள் : 2ஆம் இடத்தில் தமிழகம்! மின்னம்பலம்2022-01-03 தூய்மை இந்தியா திட்டத்தின்படி கிராமப்புறத்தில் தூய்மையையும் சுகாதாரத்தையும் மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன. இதில், ஊரக தூய்மை இந்தியா திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதக் கடைசிவரை அதாவது 2021 டிசம்பர் 31ஆம் தேதிவரை, நாட்டில் திறந்தவெளி மலம் கழிப்பு (ஓடிஎஃப்) ஒழிக்கப்பட்ட கிராமங்களின் எண்ணிக்கையில், தெலங்கானா மாநிலம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 14, 200 கிராமங்களில் 13 ஆயிரத்து 737 கிராமங்களில் திறந்தவெளி மலம் கழிப்பு முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 9…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.