Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. நாம் தமிழர் நிர்வாகிக்கு சிங்கப்பூர் அரசு வாழ்நாள் தடை.. திருப்பி அனுப்பப்பட்ட 400 பேர்- என்ன காரணம்? சென்னை: சிங்கப்பூரில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகி ஒருவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் தற்போது வெளியாகி உள்ளது. இந்தியாவை சேர்ந்த பலர் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் பணியாற்றி வருகிறார்கள். அதிலும் சிங்கப்பூர், மலேசியாவில் தமிழர்கள் அதிக அளவில் பணியாற்றி வருகிறார்கள். தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த தமிழர்களின் முதல் தேர்வாக இருக்கும் வெளிநாடு சிங்கப்பூர் அல்லது மலேசியாதான். தமிழர்கள் பலர் சிங்கப்பூரில் அமைச்சர்களாக உள்ளனர். கலாச்சார ரீதியாகவும் மொழி ரீதியாகவும் சிங்கப்பூர் - தமிழ்நாடு நெருங்கிய தொடர்புடையது. கட…

  2. தமிழ் மொழி பேசும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் பிரதிநிதிகள் நேற்று கொழும்பில் ஒன்றுகூடினார்கள். அடுத்த 21ஆம் திகதி மீண்டும் ஒன்றுகூடுவதென தீர்மானித்துள்ளனர். இந்த கட்சிகள் விரைவில் இந்திய பயணம் செய்யவும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்கவும் வாய்ப்பிருப்பதாக நேற்று தெரிவித்திருந்தோம். மிக விரைவில் அந்த ஏற்பாடுகள் நடக்குமென தெரிகிறது. இந்த கட்சிகளிற்கு மேலதிக, தமிழ் தரப்பில் இன்னொரு முயற்சியும் நடப்பதாக நேற்று தெரிவித்திருந்தோம். புலம்பெயர் தமிழரான கோடீஸ்வரர் ஒருவரின் பின்னணியில் இந்த முயற்சி நடக்கிறது. புலம்பெயர் தேசத்திலும், இலங்கையிலும் ஊடகங்களை இயக்கும் அந்த வர்த்தகரின் பின்னணியில், இந்த முயற்சி நடக…

  3. விழுப்புரத்தில் தள்ளு வண்டியில் இறந்துகிடந்த 5 வயது குழந்தை: பட்டினியால் இறந்ததாக தகவல் நடராஜன் சுந்தர் பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES விழுப்புரம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் துணி சலவை செய்யும் தள்ளுவண்டியில் சடலமாக மீட்கப்பட்ட ஐந்து வயது குழந்தை தண்ணீர் இல்லாமல் பட்டினியால் உயிரிழந்ததாக உடற் கூறாய்வில் தெரியவந்தது. பெற்றோர் மற்றும் உறவினரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் மேலத் தெரு அருகே, சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், சிவகுரு என்பவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சாலையோரத்தில் தள்ளுவண்டி மூலமாக சலவை தொழில் …

  4. மேல்மருவத்தூர் பங்காரு அடிகள் - மு.க.ஸ்டாலின் சந்திப்பு: அரசியல் பின்னணி என்ன? ஆ. விஜயானந்த் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் மேல்மருவத்தூரில் `நம்மை காக்கும் 48' என்ற திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பங்காரு அடிகளாரை சந்தித்துப் பேசியது விவாதப் பொருளாக மாறியுள்ளது. ` பிராமணர் அல்லாத சமயத் தலைவர்களை தன்பக்கம் வைத்துக் கொள்ள தி.மு.க முயல்வதாக இதனைப் பார்க்கலாம். பெரியார் காலத்தில் இருந்தே இது நடந்து வருகிறது' என்கின்றன பெரியாரிய இயக்கங்கள். `நம்மைக் காக்கும் 48' திட்டம் செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரில் `நம்மைக் காக்கும் 48' என்ற கட்டணமில்லா உ…

  5. ஈழத்தில் சீனா- பின்னணிக் கணக்குகள்: எச்சரிக்கும் ராமதாஸ் மின்னம்பலம்2021-12-19 கடந்த டிசம்பர் 15, 16, 17 தேதிகளில் இலங்கைக்கான சீன தூதர் கி சென்ஹாங் அந்நாட்டின் தமிழர் பகுதியான வடக்கு மாகாணத்தில் சுற்றுப் பயணம் செய்திருக்கிறார். மேலும் ராமேஸ்வரத்தில் இருந்து 32 கிலோ மீட்டர் அருகே இருக்கும் இலங்கைக்குச் சொந்தமான ராமர் பாலத் திட்டிலும் ஆய்வு செய்திருக்கிறார். இதுபற்றி மின்னம்பலம் இதழில் இன்று (டிசம்பர் 19) காலை பதிப்பில், இலங்கையின் தமிழர் பகுதிகளில் சீன தூதர்: இந்தியாவுக்கான எச்சரிக்கை! என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த நிலையில் இன்று (டிசம்பர் 19) இதே விவகாரத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஓர் முக்கியமான அறிக்கையை வெளியிட…

  6. வேலூர்: திமுகவினரே உண்மையான சங்கி என்று விமர்சித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பொதுமேடையில் காலணியை கழற்றி காண்பித்து எச்சரித்தார். திமுகவினரை காலணியால் அடிப்பேன் என்கிற வகையில் பேசியதால் சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி வேலூர் போலீசில் திமுகவினர் புகார் கொடுத்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பேசிய சீமான், சாட்டை துரைமுருகனுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்பதை எதிர்த்து குரல் கொடுக்கும் திமுக வழக்கறிஞர்கள், யூடியூபர் மாரிதாஸ் ஒரு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யாதது ஏன்? என கேள்வி எழுப்பினார். மேலும் திமுகவினரே உண்மையான சங்கிக…

  7. பாக்ஸ்கான் தொழிற்சாலை விடுதியில் தரமற்ற உணவு: விடுதி வார்டன் மீது வழக்குப்பதிவு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாக்ஸ்கான் தொழிற்சாலை தொழிலாளர்கள். பாக்ஸ்கான் தொழிற்சாலைக்கு சொந்தமான விடுதியில் தொழிலாளர்களுக்கு தரமற்ற உணவு வழங்கியது தொடர்பாக விடுதி வார்டன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூா்-பூந்தமல்லி சாலையில் ஜமீன் கொரட்டூரில் தனியாா் கப்பல் கட்டும் பொறியாளா் கல்லூரி விடுதியில் தங்கியிருந்து, ஸ்ரீபெரும்புதூா் தனியாா் கைப்பேசி உதிரி பாக தொழிற்சாலையில் 2,000-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளா்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில், கடந்த புதன்கிழமை மதியம் உணவு உட்கொண்டபோது, சிலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பூந்…

  8. வேலூர் நகைக்கடையில் 16.5 கிலோ நகை கொள்ளை: திருச்சி கொள்ளை போலவே நடந்ததா? 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,DIBYANGSHU SARKAR/GETTY வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை சுவற்றில் துளையிட்டு 16 கிலோ தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி நகைக்கடை ஒன்றில் நடந்த இதைப் போன்ற துணிகரக் கொள்ளை நடந்த விதத்தைப் போலவே இதுவும் அமைந்துள்ளது. திருச்சி கொள்ளையில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்ட கும்பலுக்கு வேலூர் கொள்ளையிலும் தொடர்பு இருக்குமா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையர்களை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. வேலூர் மாநகரில் தோட்டப்பாளைய…

  9. தமிழ்த்தாய் வாழ்த்து தமிழக அரசின் மாநில பாடலாக அறிவிப்பு! தமிழ்த்தாய் வாழ்த்தை தமிழ்நாட்டு அரசின் மாநில பாடலாக அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மனோண்மணியம் சுந்தரனார் இயற்றிய தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடல் தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக அறிவிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும், நிகழ்வு துவங்குவதற்கு முன்பும் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம். தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது அனைவரும் எழுந்து நிற்கவேண்டியது கட்டாயம். மாற்றுத்திறனாளிகள் எழ…

  10. புலிகள் அமைப்பை மீள் உருவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டதாக 15 இலங்கையர்கள் மீது இந்தியாவில் குற்றப்பத்திரம் தாக்கல் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை மீள் உருவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்பட்டு 15 இலங்கையர்கள் மீது இந்திய தேசிய புலனாய்வு முகவரகம் குற்றப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது.குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலர் இந்த கடந்த மார்ச் 25ஆம் திகதி அரபிக்கடலில் மீன்பிடிக் கப்பலில் வைத்து கைது செய்யப்பட்டனர்.இதன்போது, அவர்களிடமிருந்து போதைப்பொருள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.அத்துடன் சென்னையில் அகதியாக வசித்து வந்த மற்றொரு பிரதிவாதியான சற்குணம் இலங்கையில் விடுதலைப் பு…

    • 13 replies
    • 1.4k views
  11. திருநெல்வேலியில் பள்ளி கழிவறை சுவர் இடிந்துவிழுந்து 3 மாணவர்கள் பலி 17 டிசம்பர் 2021, 08:36 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் திருநெல்வேலியில் கழிவறை சுவர் இடிந்துவிழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்தனர். திருநெல்வியில் டவுன் செல்லும் சாலையில் உள்ளது ஷாப்ஃடர் மேல்நிலைப்பள்ளி. இந்த பள்ளியில் இன்று காலை 11 மணி அளவில் இடைவேளை விடப்பட்ட நேரத்தில் மாணவர்கள் கழிப்பறை சென்றுள்ளனர். அப்போது பள்ளி கட்டிடத்தின் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதில் மூன்று மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்த நிலையில் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி…

  12. உரத் தட்டுப்பாடு: பொட்டாஷ் உரத்துக்கு மாற்றாக நுண்ணுயிர் உரம் - ஆர்வம் காட்டாத விவசாயிகள் ஜோ. மகேஸ்வரன் பிபிசி தமிழ் 15 டிசம்பர் 2021, 11:23 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் பொட்டாஷ் உரத் தட்டுப்பாடும் விலை ஏற்றமும் ஏற்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக நுண்ணுயிர் உரங்கள் பயன்பாட்டில் விவசாயிகள் ஆர்வம் காட்ட வேண்டும் என வேளாண் அதிகாரிகள் கூறுகின்றனர். தமிழகத்தில் கடந்த மாதம் பெய்த கன மழையில் டெல்டா மாவட்டங்களில் நெல் உள்ளிட்ட பயிர்கள் மூழ்கின. வெள்ளம் வடிந்து, பயிர்கள் தண்டு வலுவாகவும், மணிகள் ஊக்கம் பெற பொட்டாஷ் உரம் தேவையாக உள்ளது. ஆனால், பொட்டாஷ் தட்டுப்பாடு மற்ற…

  13. ``அம்மையார் சசிகலா மீது எனக்கு மிகுந்த மதிப்பு உண்டு. எங்களுக்கு குடும்ப ரீதியான உறவு உண்டு. நான் அவரை சந்தித்தபோது... ஏன் சந்தித்தீர்கள் / எதற்காக சந்தித்தீர்கள் என கடும் விமர்சனங்கள் எழுந்தன, இது எனது விருப்பம்” என்கிறார் சீமான் நகராட்சி, மாநாகராட்சி தேர்தல்களை எதிர்கொள்வது தொடர்பாக நாம் தமிழர் கட்சியினரின் ஆலோசனை கூட்டம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அதிமுக-வின் ஒருங்கிணைப்பாளர் ஒ,பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து கடும் விமர்சனங்களை முன் வைத்ததோடு, சசிகலாவுக்கு ஆதரவாகவும் சில கருத்துகளை தெரிவித்தார். சசிகலா குடும்பத்தி…

  14. ஸ்ரீநகரில் போலீஸ் வாகனம் மீது பயங்கரவாத தாக்குதல்- மு.க.ஸ்டாலின் கண்டனம் Posted on December 14, 2021 by தென்னவள் 13 0 ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகரில் போலீஸ் வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இதுவரை மூன்று வீரர்கள் உயிரிழந்துள்ளனர். ஜம்மு-காஷ்மீர், ஸ்ரீநகர் புறநகரில் உள்ள செவான் என்ற இடத்தில் போலீஸ் முகாம் அருகே நேற்று மாலை போலீஸ் பேருந்து மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், 2 ஆயுதம் ஏந்திய போலீசார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் கவலைக்கிடமாக இருந்த வீரர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. …

    • 0 replies
    • 256 views
  15. தமிழகத்தில் எதிர்வரும் 31ஆம் திகதி வரை ஊரடங்கு நீடிப்பு தமிழகத்தில் எதிர்வரும் 31ஆம் திகதி வரை கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமுதாய, கலாசார, அரசியல் கூட்டங்களுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்றும் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி முதலாம் திகதிகளில் அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்கள் கூட அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேநேரம், இதற்கு முன்னர் அனுமதிக்கப்பட்ட செயற்பாடுகள் அனைத்தும் அனுமதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி 3ஆம் திகதி முதல், 6 தொடக்கம் 12 ஆம் வகுப்பு வரை பாடசாலைகள், அனைத்து கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனங்கள் சுழற்சி முறையின்றி செயற்படும் எனவும் அறிவிக்கப்பட…

  16. 2031க்குள் குடிசையில்லா தமிழகம்! மின்னம்பலம்2021-12-13 ரியல் எஸ்டேட் டெவலப்பர்களின் கூட்டமைப்பான CREDAI சார்பில், சென்னையில் இன்று (டிசம்பர் 13) மாநாடு நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின், வீட்டுவசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், “வேளாண் துறைக்கு அடுத்தபடியாக மிக அதிகமான மக்களுக்கு வேலைவாய்ப்பு தருகிற தொழிலாக இந்த கட்டுமான தொழில் உள்ளது” என்று குறிப்பிட்டார். ஒரு உதாரணத்தைச் சொல்ல வேண்டும் என்று சொன்னால் கீழடியில் கிடைத்துள்ள கட்டடங்களின் இடிபாடுகளின் மூலமாக மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நகர்ப்புற நாகரீகம் கொண்டதாகத் தமிழ்ச் சமூகம் வளர்ந்து இ…

  17. மேற்குத் தொடர்ச்சி மலை: மாதவ் காட்கில் பரிந்துரைகளை நீர்த்துப் போகச் செய்கிறதா கஸ்தூரி ரங்கன் அறிக்கை? க. சுபகுணம் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அதிரப்பள்ளி சமீபத்தில், இந்திய சுற்றுச்சூழல், காடு மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், இணையவழிக் கூட்டம் ஒன்றை நடத்தியது. அந்தச் சந்திப்பில், மேற்குத்தொடர்ச்சி மலையின் சூழலியல் பாதுகாப்பிற்காக, கஸ்தூரி ரங்கன் குழு சமர்ப்பித்த அறிக்கையின் பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்துப் பேசப்பட்டது. ஆனால், கூட்டத்தில் கலந்துகொண்ட கர்நாடக முதலமைச்சர், அந்தப் பரிந்து…

  18. பாம்புகளை பார்த்தவுடன் அடித்துக் கொன்றவர், இன்று பாம்புகளின் பாதுகாவலர் க சுபகுணம் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ALWIN STEPHEN KUMAR படக்குறிப்பு, சாம்சன் கிருபாகரன் அன்றிரவு, களக்காடு முண்டந்துரை புலிகள் காப்பகத்தின் காட்டுக்குள் ஓடிக்கொண்டிருந்த காட்டாற்றுக்கு நடுவே, ஒரு பெரிய பாறைக் குவியலில் இரவைக் கழித்தோம். ஓய்வெடுப்பதற்காக பாறையின் ஒருபுறத்தில் போர்வையை விரிக்கச் சென்றேன். அருகிலிருந்த சாம்சன், "அண்ணே! போர்வையை விரிக்காதீங்க," என்று கையில் டார்ச் லைட்டோடு வந்து தடுத்தார். அவர் வெளிச்சம் காட்டிய பிறகுதான் தெரிந்தத…

  19. ஜெயலலிதா மரண மர்மத்தை சசிகலா வெளியிட வேண்டும்- தீபா பரபரப்பு பேட்டி Posted on December 12, 2021 by தென்னவள் 19 0 வீட்டில் தங்குவதற்கு ஏற்ற சூழ்நிலை இப்போது இல்லை. மோசமான நிலையில் இந்த வீடு உள்ளது. அது வேதனை அளிக்கிறது. அழகாக இருந்த அந்த வீடு பாழடைந்து உள்ளது. பராமரிப்பு பணிகள் அதிகளவில் செய்ய வேண்டி உள்ளது. மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லம் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நினைவு இல்லமாக மாற்றப்பட்டது. இதையடுத்து போயஸ் கார்டன் வீட்டை நினைவு இல்லமாக மாற்றும் பணிகள் நடைபெற்றன. ஆனால் அதனை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா, அவரது சகோதரர் தீபக் இருவரும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில்…

    • 0 replies
    • 276 views
  20. “இனி கேப்டன்...”- கண்ணீர் விட்ட பிரேமலதா: தேமுதிகவுக்கு புது தலைமை! மின்னம்பலம்2021-12-12 தேமுதிக நிறுவனரும் பொதுச் செயலாளருமான விஜயகாந்தின் உடல் நலம் எப்படியிருக்கிறது என்பதை மாவட்டச் செயலாளர்களிடம் உள்ளது உள்ளபடி அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா கண்ணீரோடு தெரிவிக்க, மாவட்டச் செயலாளர்கள் அதைக் கேட்டு கண்ணீர் வடித்திருக்கிறார்கள். தேமுதிக கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கடந்த டிசம்பர் 6 ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சென்னை கோயம்பேட்டிலுள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. விஜயகாந்துக்கு சமீப ஆண்டுகளாகவே உடல் நிலை சரியில்லை. அவரால் சரிவர பேச முடியவில்லை. நடக்க முடியவில்லை. அரசியல் ரீதியாக சுறுசுறுப்பாக செய…

  21. மாரிதாஸ் கைது: சீமான் எதிர்ப்பு ஏன்?- சுபவீ விளக்கம்! மின்னம்பலம்2021-12-11 டிசம்பர் 8 ஆம் தேதி, குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் நாட்டின் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் வீரமரணம் அடைந்தனர். இதுகுறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்ட யு ட்யூபர் மாரிதாஸ் டிசம்பர் 9ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்தார்கள். இந்நிலையில் தமிழக பாட நூல் அறிவுரைக் குழு உறுப்பினரும், திராவிட தமிழர் பேரவை தலைவருமான பேராசிரியர் சுபவீரபாண்டியன் இவ்விவகாரம் தொடர்பாக இன்று (டிசம்பர் 11) ஒரு விளக்கம் அளித்துள்ளார். “இந்திய முப்படைகளின் தளபத…

  22. தமிழகத்தின் 50 ஆயிரம் இடங்களில் 14ஆவது மெகா தடுப்பூசி முகாம் இன்று தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் 14ஆவது மெகா தடுப்பூசி முகாம் இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது. அதன்படி, இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த தடுப்பூசி முகாமில் காலக்கெடு முடிந்தும் 2ஆவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றன. சென்னையில் இதுவரை 10 இலட்சத்து 38 ஆயிரத்து 623 பேர் 2ஆவது தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். எனவே தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நபர்கள் இந்த முகாமை பயன்படுத்தி தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துற…

  23. மண்டபத்தில் நகை, பணத்தை கொள்ளையடித்து விட்டு, ரயில்வே பெண் ஊழியர் மற்றும் அவரது மகளை எரித்து கொன்ற வழக்கில் இலங்கை அகதிகள் இருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக மேலும் ஒருவரை தீவிரமாக தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ரயில்வே ஊழியர் காளியம்மாள் 58. அவரது மகள் பிகாம் பட்டதாரி மணிமேகலை 34. இந்த இருவரது உடல்களும் முற்றிலும் கருகிய நிலையில் உள்புறமாக பூட்டிய குடியிருப்பில் டிசம்பர் 7ம் தேதி காலை கண்டுபிடிக்கப்பட்டது. காளியம்மாளின் மூத்த மகள் சண்முகபிரியா அளித்த புகாரின் அடிப்படையில் மண்டபம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இன்னும் சில மாதங்களில் ஓய்வு பெறவிருந்த கா…

  24. அதிர்ச்சியளிக்கும் வேளாண் பல்கலையின் தேர்வு முடிவு : சீமான் வலியுறுத்தல்! மின்னம்பலம்2021-12-09T07:30:01+5:30 வேளாண் பல்கலைக்கழகத் தேர்வு முடிவுகளில் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு தமிழ்நாடு அரசு உடனடியாக தீர்வு கண்டு மாணவர்களின் நலன் காக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். சமீபத்தில் வெளியான தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் தேர்வு முடிவுகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. தேர்வு எழுதியவர்களில் 90% பேர் தோல்வி அடைந்துள்ளனர் என்பதை ஏற்க மறுத்து போராட்டம் நடத்திய மாணவர்கள், அனைத்து மாணவர்களுக்கும் எழுதிய தேர்வின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கி தேர்ச்சி அடையும் வகையில் வழிவகை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின…

    • 1 reply
    • 334 views
  25. பேரறிவாளன் வழக்கு-ஆளுநரின் முடிவு என்ன நீதிமன்றம் கேள்வி பேரறிவாளன் வழக்கு தொடர்பான கோப்புகள் மீது முடிவெடுக்காமல், கவர்னர் காலம் தாழ்த்தியதை எந்த வகையிலும் ஏற்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தன் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்பதால் தன்னை வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் பேரறிவாளன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில், மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வேறு தேதிக்கு வழக்கை ஒத்தி …

    • 0 replies
    • 252 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.