தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10260 topics in this forum
-
சீராய்வு மனுவில் நீதி கிடைக்கும், சசிகலா மீண்டு வருவார்: கணவர் நடராஜன் பேட்டி சொத்து குவிப்பு வழக்கின் சீராய்வு மனுவில் நீதி கிடைக்கும். எனது மனைவி சசிகலா சிறையில் இருந்து மீண்டு வருவார் என அவரது கணவர் நடராஜன் தெரிவித்துள்ளார். சென்னை: அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலாவின் கணவர் நடராஜன் டி.வி. சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- ஜெயலலிதா அ.தி.மு.க.வின் தலைவராக வருவதற்கு நாங்கள்தான் பின்னணியில் இருந்தோம். 1980-ம் ஆண்டுவாக்கில் ஜெயலலிதா அரசியலுக்கு வந்த காலத்தில் நாங்கள் அவருக்கு உதவியாக செயல்பட்டோம். எம்.ஜி.ஆர். இறந்த போது, அந்த தக…
-
- 0 replies
- 697 views
-
-
வைகை அணையின் நீர் மட்டம் உயர்வு : வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு! தேனி மாவட்டம் வைகை அணையின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதை அடுத்து மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வைகை ஆற்றின் கரையோரத்தில் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மேலும் அணைக்கு வரும் உபரிநீரான ஆயிரம் கன அடி நீர் வைகை ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அணையில் உள்ள 7 மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் அனைத்தும் ஆறு வழியாக செல்வதால் பொதுமக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என பொதுப்பணித்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். https://athavannews.com/2021/1249037
-
- 0 replies
- 246 views
-
-
டெல்லி போராட்டத்தில் மீண்டும் தமிழக விவசாயிகள் டெல்லியில் 41 நாட்கள் போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகள் தற்போது மீண்டும் தங்கள் போராட்டத்தை தொடங்க டெல்லி வந்தடைந்துள்ளனர். நதிநீர் இணைப்பு, விவசாயக் கடன் ரத்து, விவசாயிகளுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர்மந்தரில் 41 நாட்கள் தேசிய - தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். எலிக்கறி உண்ணுதல், சாலையில் உருளுதல், சாட்டையடி போராட்டம் என பல்வேறு விதமாக போராட்டம் நடத்திய விவசாயிகளுக்கு பஞ்சாப், ஹரியான போன்ற பிற மாநில விவசாயிகளும், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் ஆதரவளித்தனர். பின்னர்…
-
- 0 replies
- 345 views
-
-
"ஜெய்பீம் படத்தை முழுவதுமாக பார்க்க முடியவில்லை; மனம் வெறுத்துவிட்டது" - பார்வதி அம்மாள் பேட்டி ச. ஆனந்தப்பிரியா பிபிசி தமிழுக்காக 44 நிமிடங்களுக்கு முன்னர் நடிகர் சூர்யாவின் 'ஜெய்பீம்' திரைப்படம் பல கோணங்களிலும் ஆக்கபூர்வமான விவாதங்களையும் அதே சமயம் குறிப்பிட்ட சாதி சார்ந்த நெருக்கடிகளையும் சந்தித்து வருகிறது. படத்தின் கதைநாயகியான நிஜ பார்வதியின் தற்போதைய பொருளாதர நிலையை கருத்தில் கொண்டு உதவ வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் பாலகிருஷ்ணன் நடிகர் சூர்யாவுக்கு வேண்டுகோள் விடுத்தார். அவரது வேண்டுகோளை ஏற்று, பார்வதி அம்மாளுக்கும் அவருக்கு பிறகு அவரது குடும்பத்திற்கும் 10 லட்ச ரூபாய் தொகையை வங்…
-
- 1 reply
- 458 views
- 1 follower
-
-
14/12/2013 சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு, அனைத்திந்திய முஸ்லீம் முன்னேற்றக் கழகம் ஆதரவு தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்பதற்காக அனைத்து கட்சிகளும் தயாராகி வருகிறது. இந்நிலையில், பா.ஜ.க.வின் தேர்தல் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டதில் இருந்து, அவர் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி வைக்கலாம் என ஒவ்வொரு கட்சி தலைமையும் ஆலோசித்து வருகிறது. இதேபோன்று தமிழ்நாட்டில் பா.ஜ.க. தலைமையில் பல்வேறு கட்சிகளை சேர்த்து கூட்டணி அமைக்கும் முயற்சிகளும் நடந்து வருகின்றன. பா.ஜ.க. கூட்டணியில் ம.தி.மு.க. சேர்வது உ…
-
- 1 reply
- 609 views
-
-
2 ஜி வழக்கில் செப்டம்பர் 20-ம் தேதி தீர்ப்பு! சிறப்பு சி.பி.ஐ நீதிமன்றம் அறிவிப்பு 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் தீர்ப்பு, வரும் செப்டம்பர் மாதம் 20-ம் தேதி வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2007-ல், மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக ஆ.ராசா பொறுப்பேற்ற பிறகு, 'முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை' என்ற அடிப்படையில், 2008-ம் ஆண்டு 2ஜி அலைக்கற்றை விற்கப்பட்டது. அதில், பெருமளவு முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. 1.76 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்திவிட்டதாக மத்திய கணக்காயம் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, சி.பி.ஐ 2009-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி, முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்து வழக்கு விசாரணையைத் தொட…
-
- 0 replies
- 307 views
-
-
'ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் பணியில் இறங்கிவிட்டேன்' - பொதுக்குழுவுக்கு எதிராக கொந்தளித்த தினகரன் அ.தி.மு.க பொதுக்குழு குறித்து தினகரன் இன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “ பொதுக்குழு என்ற பெயரில் அவர்கள் நிறைவேற்றிய தீர்மானங்களைப் பார்த்தேன். நான் ஏற்கெனவே சொன்னதுபோல, கட்சியின் பொதுக்குழுவை பொதுச் செயலாளர்தான் கூட்ட முடியும். அவர் பணியாற்ற முடியாததால், துணை பொதுச் செயலாளர் நான்தான் கூட்ட முடியும். அவர்கள் கூட்டி இருப்பது பொதுக்குழுவே அல்ல. அவர்கள் எந்தத் தீர்மானம் நிறைவேற்றினாலும் அது சட்டப்படி செல்லாது என நேற்றே நீதிமன்றம் சொல்லிவிட்டது. நீதிமன்றம் உத்தரவிட்டால்தான் இவர்கள் தீர்மானம் செல்லும். இவர்களைப் பதவியில் வைத்…
-
- 0 replies
- 495 views
-
-
பேரறிவாளனுக்கு மனக்கஷ்டத்தை கொடுத்திருக்கும் பரோல்: மத்திய, மாநில அரசுகள் ஒரு நிரபராதியை விடுவிக்குமா? வீட்டின் பெயர் ‘செங்கொடி இல்லம்’ என மாற்றப்பட்டுள்ளது. வேலூர் மத்திய சிறையில் இருந்த சீமானைப் பார்க்க ஒருமுறை நண்பர் அமீர் அப்பாஸ், இயக்குநர் மீரா கதிரவன், கீற்று ரமேஷ் மற்றும் என் உதவி இயக்குநர்களோடு சென்றேன். அப்போது, பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரையும் சீமான் அறிமுகம் செய்துவைத்தார். அரசு சம்பந்தப்பட்ட முக்கியமான வழக்கில் தொடர்பு உடையவர்களாயிற்றே.. சந்திப்பதா, வேண்டாமா? என்ற தயக்கம் இருந்தது. ஆனாலும், அறிமுகப்படுத்திக் கொள்வதில் என்ன தவறு என்று பேசத் தொடங்கினோம். எங்களைப் …
-
- 0 replies
- 580 views
-
-
சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஆ.ராசா, தயாநிதி மாறன் ஆகியோருக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி தனது வேட்பாளர்களை நிறுத்த உள்ளது. வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான திமுக வேடட்பாளர்கள் பட்டியலில், 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட திமுக முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஆ.ராசா, தயாநிதி மாறன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் ஆ. ராசா நீலகிரி தொகுதியிலும், தயாநிதி மாறன் மத்திய சென்னை தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இந்த இரண்டு பேரையும் எதிர்த்து தங்கள் கட்சி வேட்பாளரை நிறுத்தப்போவதாக ஆம் ஆத்மி கட்சியின் தமிழக நிறுவனத் தலைவரான டேவிட் பருன்குமார் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்துள்ள கூடங்கு…
-
- 0 replies
- 493 views
-
-
புதிய அரசாங்கம் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும்: - தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு [saturday, 2014-03-29 14:02:01] புதிய அரசாங்கம் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி இந்தியாவின் புதிய அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இனச்சுத்திகரிப்பில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக தண்டனை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். ஆட்சி அமைக்கப்பட்டதன் பின்னர் தமிழக மீனவர்கள் எந்தவிதமான பிரச்சினையும் இன்றி தமது வாழ்வாதாரத்தை முன்னெடுக்க முடியும் என அவர் …
-
- 1 reply
- 614 views
-
-
சென்னை சுங்கத்துறையின் இணையதளம் தீவிரவாதிகளால் முடக்கம் சென்னை மண்டல சுங்கத்துறைக்கு சொந்தமான ‘இணையதளத்தை பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் முடக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. சென்னை மண்டல சுங்கத்துறையினரால் செயற்படுத்தப்ட்டு வரும் ‘www.chennaicustoms.gov.in’ என்னும் இணையதளமே இன்றைய தினம் இணையத்திருடர்களினால் முடக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘டீன் பாக் சைபர் ஸ்கல்ஸ்’ என்னும் பாகிஸ்தானை சேர்ந்த இணையத்திருடர்கள் இணையத்தினை முடக்கி அதில் சுதந்திர காஷ்மீருக்கு ஆதரவான வாக்கியங்களை பதிவு செய்ததுடன் இந்தியபிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் விமர்சனம் செய்திருந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சிறிது நேர…
-
- 0 replies
- 272 views
-
-
குமரியில் ஜாமீன் கையெழுத்திட சென்ற இளைஞர் மர்ம மரணம்: காவல்துறையினர் மீது குற்றம் சுமத்தும் பெற்றோர் பிரபுராவ் ஆனந்தன் பிபிசி தமிழுக்காக 5 மணி நேரங்களுக்கு முன்னர் கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே காவல் நிலையத்தில் கையெழுத்திட சென்ற இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். காவல் நிலையத்தில் வைத்து சித்திரவதை செய்து கொலை செய்ததாக உயிரிழந்த இளைஞரின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் பொன்மனை அருகே முல்லைசேரிவிளை சேர்ந்தவர் சசிகுமார். அவரது மகன் அஜித் (22). அஜித் தொழில் கல்வி முடித்துவிட்டு சரக்கு வாகன ஓட்டுனராக வேலை செய்து வருகிறார். க…
-
- 0 replies
- 197 views
- 1 follower
-
-
ஆளுநர் ஆர். என். ரவி: தீரன் சின்னமலைக்கு மரியாதை செலுத்த ஈரோடு சென்றது ஏன்? முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 17 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,@RAJBHAVAN_TN/TWITTER தீரன் சின்னமலையின் நினைவு நாளை ஒட்டி, தமிழ்நாடு ஆளுநர் ஈரோடு மாவட்டம் ஓடாநிலை சென்று தனது அஞ்சலியைச் செலுத்தியிருக்கிறார். தீரன் சின்னமலையின் வாரிசுகளையும் சந்தித்துப் பேசியிருக்கிறார். அவரது நோக்கம் என்ன? பதினெட்டாம் நூற்றாண்டின் மத்தியப் பகுதியில் தற்போதைய திருப்பூர் மாவட்டப் பகுதியில் பிறந்த தீரன் சின்னமலை, பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிரான திப்பு சுல்தானின் போரில் துணை நின்றார். இதற்காக அந்தப…
-
- 2 replies
- 554 views
- 1 follower
-
-
எபோலா வைரஸ் ஏதோ ஆப்பிரிக்க நாட்டில் பரவும் நோய் என்று அலட்சியமாக நாம் இருந்துவிடக் கூடாது என்று எச்சரிக்கும் கட்டுரை. எபோலா காய்ச்சல்பற்றி பீதி கிளம்பியிருக்கும் வேளையில், முதலில் நம்மில் பலர் நினைப்பது: “அதெல்லாம் ஆப்பிரிக்காவுலேர்ந்து இங்க வராது, வந்தாலும் நாம சமாளிக்க முடியாதா?” இவை இரண்டுமே தவறான கருத்துகள். முதலாவது, கொடிய தொற்றுநோய்கள் ஆப்பிரிக்கா விலிருந்துதான் வர வேண்டும் என்பதில்லை. ஈரான், உக்ரைன், கஜகஸ்தான் போன்ற மருத்துவ உள்கட்டமைப்புகள் குறைந்த நாடுகளிலும் எபோலா போன்ற நோய்கள் தோன்றிப் பரவியுள்ளன. இரண்டா வது, நமது மருத்துவ வசதியெல்லாம் இதுபோன்ற தொற்றுநோய்களை வென்றுவிட முடியாது. எபோலா, கிரிமீயன் காங்கோ ரத்தப்போக்குக் காய்ச்சல் (சி.சிஹெச்.எஃப்), லஸ்ஸா போன்ற …
-
- 0 replies
- 504 views
-
-
டாஸ்மாக் கடைகளை மூட ஆவியாக வருவேன்: தற்கொலை செய்த மாணவன் கடிதம் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோயிலைச் சேர்ந்த தினேஷ் (17) என்ற பள்ளி மாணவன் தனது மரணத்திற்கு பிறகாவது தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை பிரதமர் மோதி மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மூடவேண்டும் என்று கோரி கடிதம் எழுதிவைத்துவிட்டு, புதன் அன்று (மே2) தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நெல்லை வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள ரெயில் மேம்பாலத்தில் தூக்கிட்டு தற்கொலைசெய்து கொண்ட மாணவனின் பையில் இருந்து எடுக்கப்பட்ட கடிதத்தில் தனது தந்தை குடிப்பழக்கத்தில் இர…
-
- 1 reply
- 661 views
-
-
சென்னை: தி.மு.க.வில் இருந்து விலகிய நடிகை குஷ்பு, விரைவில் நல்ல முடிவு எடுக்கப் போகிறேன் என்று அறிவித்துள்ளார். அ.தி.மு.க.வில் குஷ்பு சேரப் போகிறார் என்றும் கூறப்படுகிறது. நடிகை குஷ்பு தி.மு.க.வில் இருந்தபோது கட்சித் தலைவர் பதவி தொடர்பாக மு.க.ஸ்டாலின் மீது விமர்சனம் செய்ததாக கூறிய திமுகவினர் அரை கடுமையாக விமர்சித்து பேசியதோடு, அவர் மீது செருப்பு வீச்சும் நடந்தது. அதோடு, கட்சி கூட்டம், போராட்டம் உள்ளிட்டவற்றில் குஷ்பு ஓரம் கட்டப்பட்டார். இதனால், கடும் அதிருப்தியில் இருந்தார். இதனிடையே, திடீரென திமுகவில் இருந்து விலகுவதாக கூறிய கட்சித் தலைவர் கருணாநிதிக்கு கடிதம் எழுதினார். இதனையும் கருணாநிதி ஏற்றுக் கொண்டார். இந்நிலையில், அதிமுகவில் குஷ்பு சேரப்போவதாக தகவல…
-
- 4 replies
- 686 views
-
-
சென்னையில் குடியரசு தினம்: முதலமைச்சர் முன்னிலையில் கொடியேற்றிய ஆளுநர் பட மூலாதாரம்,DIPR 26 ஜனவரி 2023, 03:24 GMT புதுப்பிக்கப்பட்டது 26 ஜனவரி 2023, 04:13 GMT சென்னை மெரினாவில் இந்தியாவின் 74வது குடியரசு தினவிழா கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. தமிழ்நாடு ஆளுநர் ரவி தேசியக் கொடியை ஏற்றிவைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். முதல்வர் ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர்களும் கொடி ஏற்றும் நிகழ்வில் பங்குபெற்றுள்ளனர். குடியரசு தின நிகழ்வின் ஒரு பகுதியாக மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அண்ணா பதக்கம் மற்றும் காந்தியடிகள் விருது உள்ளிட்ட விருதுகள் அளிக்கப்பட்டன. முப்படை வீரர்கள…
-
- 0 replies
- 285 views
- 1 follower
-
-
மிஸ்டர் கழுகு: ஜெ. டாக்டர் மாற்றம் ஏன்? காலா படத்துக்கு முதல் ‘ஷோ’ போகிறேன். படம் பார்த்துவிட்டு வந்து தகவல்களைச் சொல்கிறேன் என்று வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்பியிருந்தார் கழுகார். படத்தைப் பார்த்துவிட்டு வந்த கழுகார், துணுக்குகளாகச் செய்திகளைக் கொட்டினார். முதலில் தடங்கல்! வழக்குகள், எதிர்ப்புகள் என காலா ரிலீஸ் விவகாரம் ரஜினியைப் படு டென்ஷனாக்கியிருந்தது. தியேட்டர்கள் தரப்பிலிருந்து கடைசி நேரம் வரை ஒத்துழைப்பு இல்லாததால், ரஜினி அப்செட். அடுத்த பட ஷூட்டிங்குக்காக டார்ஜிலிங் போயிருந்தாலும், தமிழக நிலவரத்தை விசாரித்துக்கொண்டே இருந்தார். ஆனால், எல்லா எதிர்ப்புகளையும் காலி செய்துவிட்டது படத்தின் ரிசல்ட். எல்லாப் பக்கங்களிலும் படத்தைப் பற்றி பாஸிட்டிவ்…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ‘இரட்டை இலை’ சின்னம் யாருக்கு? அதிமுக-வின் அடுத்த திட்டம்? கட்டுரை தகவல் எழுதியவர்,முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 4 பிப்ரவரி 2023, 03:21 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் அதிமுகவின் சார்பில் வேட்பாளரை நிறுத்த, அவைத் தலைவர் மூலம் பொதுக்குழுவைக் கூட்டி, முடிவு செய்யும்படி உச்ச நீதிமன்றம் கூறியிருக்கும் நிலையில், இரு தரப்பும் என்ன செய்யப் போகின்றன என்ற கேள்வி எழுந்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவு என்ன? …
-
- 2 replies
- 462 views
- 1 follower
-
-
படக்குறிப்பு, மணக் கோலத்தில் சுமதி - சேகர் தம்பதி கட்டுரை தகவல் எழுதியவர்,மாயகிருஷ்ணன் பதவி,பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் வேகமாக மாறி வரும் இன்றைய சமூகச் சூழலில் திருமணம் என்பது ஆண், பெண் இரு பாலருக்குமே பெரும் சவாலான ஒன்றாக மாறி வருகிறது. சாதி, மதம், கல்வி, சமூக அந்தஸ்து, வேலை, ஊதியம் எனப் பல தடைகளைக் கடந்தால்தான் ஆணோ, பெண்ணோ ஒரு திருமண பந்தத்திற்குள் நுழைய முடிகிறது. அதுவே, மாற்றுத்திறனாளிகளாக இருக்கும்பட்சத்தில் அவர்களது உடலில் உள்ள குறைகளே திருமணத்திற்குத் தடையாக நிற்கும். கள்ளக்குறிச்சியில் அத்தகைய மாற்றுத்திறனாளிகளான ஆண், பெண் இருவரும் திருமண பந்தத்திற்குள் நுழை…
-
- 1 reply
- 493 views
- 1 follower
-
-
6 ஜூன் 2023, 09:59 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES தமிழ்நாட்டின் பரவலான இடங்களில் இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக காணப்பட்டது. சென்னை, வேலூர், திருச்சி, மதுரை என பல நகரங்களில் வெயிலின் அளவு வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது. கத்தரி வெயிலின் தாக்கம் முடிந்த பிறகும் சென்னை போன்ற நகரங்களில் பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். கோடை வெயிலின் தாக்கம் குறையாத நிலையில், பள்ளிகள் திறப்பை தமிழ்நாடு அரசு ஒத்தி வைத்திருக்கிறது. கடந்…
-
- 0 replies
- 233 views
- 1 follower
-
-
நடிகர் ராஜ்குமார் கடத்தல்: வீரப்பன் கூட்டாளிகள் என சந்தேகிக்கப்பட்ட 9 பேரும் விடுதலை செய்யப்பட்டது ஏன்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க 18 ஆண்டுகளுக்கு முன்பாக கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த 9 பேரையும் ஈரோடு மாவட்ட நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. படத்தின் காப்புரிமைAFP/GETTY IMAGES கன்னட திரையுலகின் மிகப் பிரபலமான நடிகராக …
-
- 1 reply
- 1.3k views
-
-
அப்படியென்ன இருக்கிறது செம்மரத்தில்? ஆந்திர மாநிலத்திலிருந்து செம்மரங்கள் வெட்டிக் கடத்தப்படுவது தொடர்கதையாக இருக்கிறது. ஆந்திராவைச் சேர்ந்த மர மாஃபியாக்கள் நடத்தும் இந்தக் கடத்தலுக்கு, கூலியாட்களாக செல்லும் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதும் தொடர்கிறது. சரி, ஏன் இந்த மரத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இந்தக் கேள்விக்கு, தமிழக கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் இருளாண்டி பதில் சொல்கிறார்! "சந்தன மரங்கள் மதிப்பு மிக்கவை. இதற்கு அடுத்த இடத்தில் இருப்பவை செஞ்சந்தனம் என்று அழைக்கப்படும் செம்மரங்களே. இவை, 7லிருந்து 8 மீட்டர் உயரம் வளரக்கூடியது. இது வளர்வதற்கு 30லிருந்து 40 ஆண்டுகள் ஆகும். தமிழ்நாட்டில் ஜவ்வாது மலை உள்ளிட்ட பகுதியிலும், கர்நாடகாவில் …
-
- 2 replies
- 961 views
-
-
மு.நியாஸ் அகமது பிபிசி தமிழ் …
-
- 0 replies
- 1k views
-
-
படக்குறிப்பு, சுமார் 200 ஏக்கருக்கும் மேல் உள்ள பெருங்குடி குப்பைக் கிடங்கை தூய்மைப்படுத்தி, அதில் 93 ஏக்கருக்கு பசுமைப் பூங்கா அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிடப்பட்டது. கட்டுரை தகவல் எழுதியவர், க. சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தென் சென்னையில் அமைந்துள்ள பெருங்குடியைச் சுற்றி வாழும் மக்கள் பல ஆண்டுகளாக அங்கு மலை மலையாகக் குவித்து வைக்கப்பட்டிருக்கும் குப்பைகளால் பல இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், அந்தக் கழிவுகளை முற்றிலுமாக அகற்றி, திடக்கழிவு மறுசுழற்சி செய்வதற்கான பயோமைனிங் திட்டத்தை தமிழ்நாடு அரசு 2022ஆம் ஆண்டு கொண்டு வந்தது. இதன் மூலம் தங்கள் பல ஆண்டுக்…
-
- 0 replies
- 355 views
- 1 follower
-