Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இந்தியர் உள்ளிட்ட மூவருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு! இந்தியாவினைச் சேர்ந்த அபிஜித் பேனர்ஜி உள்ளிட்ட மூவருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அபிஜித் பேனர்ஜி, எஸ்தர் டுஃப்லோ, மைக்கேல் கிரமெர் உள்ளிட்ட மூவரே இவ்வாறு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசினை பகிர்ந்து கொள்கின்றனர். உலக அளவில் வறுமை ஒழிப்பிற்கான அணுகுமுறைகளை வழங்கியதற்காகவே இந்த நோபல் பரிசு வழங்கப்படவுள்ளது. அபிஜித் பேனர்ஜி கொல்கத்தாவில் பிறந்து அமெரிக்காவில் குடியுரிமை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/இந்தியர்-உள்ளிட்ட-மூவருக/

  2. முல்லைப் பெரியாறு அணை தமிழக அரசின் கட்டுப்பாட்டிலே இருக்கும் – மத்திய நீர்வளத் துறை அமைச்சர் அணைகள் பாதுகாப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டாலும் கேரளாவில் உள்ள முல்லைப் பெரியாறு அணை தமிழக அரசின் கட்டுப்பாட்டிலே இருக்கும் என மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தமிழக அரசுக்கு உறுதி அளித்துள்ளார். அணைகள் பாதுகாப்புக்கென தனி அமைப்பு உருவாக்குவதற்கான சட்டமூலத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த சட்டமூலம் தமிழக நலனுக்கு எதிராக இருக்கும் என தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. குறிப்பாக முல்லைப் பெரியாறு உட்பட ஐந்து அணைகள் ஏனைய மாநிலங்களில் உள்ளன. ஆனால் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. புதிய சட்டமூலத்தால் தமிழகத்தின் உரிமை பறிபோ…

  3. மத்திய பிரதேசை உலுக்கிய பாலியல் வன்புணர்வு; உயிருக்கு போராடும் 5 வயது சிறுமி! மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் 5 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட கொடூரமான உடல் ரீதியான தாக்குதலுக்கு உள்ளாகி உயிருக்கு போராடி வருகிறார். உடலில் பல காயங்கள், அந்தரங்க உறுப்புகளில் காயங்களுடன் சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுமியின் சுற்றுப்புறத்தில் வசிக்கும் 17 வயது சிறுவன் குறித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார், பொலிஸாரின் கூற்றுப்படி, சிறுவன் சிறுமியை தனது வீட்டிலிருந்து அருகிலுள்ள கைவிடப்பட்ட கட்டிடத்திற்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது, அங்கு அவர் பாலியல் வன்புணர்வு செய்ததாகக் கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர், வன…

  4. பாகிஸ்தான் பிரஜைகளை உடனடியாக வெளியேறுமாறு இந்திய அரசாங்கம் அறிவிப்பு! இந்தியாவிலுள்ள பாகிஸ்தான் பிரஜைகளை உடனடியாக வெளியேறுமாறு இந்திய அரசாங்கம் இன்று உத்தியோகபூர்வாக அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து இந்திய விமானங்கள் தமது வான் வெளியை பயன்படுத்துவதற்கு பாகிஸ்தான் அரசாங்கம் இன்று தடை விதித்துள்ளது. காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் உடனான இராஜதந்திர உறவுகளை இந்தியா நிறுத்திக்கொண்டுள்ள நிலையில் பாகிஸ்தானும் இந்தியாவிற்கு எதிரான தீர்மானங்களை அறிவித்து வருகின்றது. இதேவேளை பிரபல சமூக ஊடக தளமான எக்ஸ் இல், இந்திய மத்திய அரசின் அறிவுறுத்தலுக்கமைய, பாகிஸ்தான் அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் …

  5. அமெரிக்க ஜனாதிபதிக்கான ஏற்பாடுகள் இந்தியர்களின் அடிமை மனநிலையைக் காட்டுகிறது – சிவசேனா அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இந்திய வருகைக்கான ஏற்பாடுகள் அடிமை மனநிலையைக் காட்டுகிறது என சிவசேனா விமர்சித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 2 நாட்கள் அரசு பயணமாக இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். அதற்கமைய அவர் எதிர்வரும் 24 மற்றும் 25ஆம் திகதிகளில் அவர், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். குஜராத்தில் உள்ள சபர்மதி ஆசிரமம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்வதால் ட்ரம்ப் பயணிக்கும் வழிகளில் சாலைகள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. ஆமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் உள்ள குடிசை பகுதிகளை மறைக்கும் வகையில் 7 அடி…

  6. பிராந்திய நலனுக்கான தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பு ஆங்கிலத்தில் சுருக்கமாக சார்க் என்று அழைக்கப்படுகிறது. இதில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூடான், இந்தியா, மாலத்தீவுகள், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகியவை உறுப்பினர்களாக உள்ளனர். சார்க் நாடுகள் ஒன்றிணைந்து கொரோனா வைரஸ் பாதிப்புக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க வேண்டும் என்றும், கொரோனாவை எதிர்கொள்வது தொடர்பாக திட்டங்களை வகுக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது- சார்க் நாடுகள் தங்களது குடிமக்களின் உடல்நிலை குறித்து வீடியோ கான்பரன்சிங் மூலமாக ஆலோசனை நடத்தலாம். ஒட்டுமொத்த உலகமே கொரோனா வைரசுக்கு எதிராக போராடி வருகிறது. பல்…

    • 5 replies
    • 465 views
  7. டெல்லியின் பொருளாதாரத்தை உலுக்கிய இண்டிகோ விமான நெருக்கடி! இண்டிகோவில் நடந்து வரும் செயல்பாட்டு நெருக்கடி விமான நிலைய முனையங்களுக்கு அப்பால் அலைமோதத் தொடங்கியுள்ளது. குறிப்பாக இது டெல்லியின் பொருளாதாரத்தில் பெரும் அடியை ஏற்படுத்தியுள்ளது. விமான நிறுவனத்தின் பெரிய அளவிலான விமான இரத்துகள் ஏற்கனவே தலைநகரின் வர்த்தகம், தொழில், சுற்றுலா மற்றும் கண்காட்சித் துறைகளுக்கு சுமார் 1,000 கோடி இந்திய ரூபா வரையிலான வணிக இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக வர்த்தக மற்றும் தொழில்துறை சபை மதிப்பிட்டுள்ளது. தினசரி விமானப் போக்குவரத்து இடையூறுகள் வர்த்தகர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வணிகப் பயணிகளின் இயக்கத்தை கடுமையாகப் பாதித்துள்ளது. இதனால், நகரம் முழுவதும் சந்தை நடவடிக்கைகளில் கூர்மையான சரிவு …

  8. இந்தியாவில்... இறங்கு முகத்தில், கொரோனா! இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக அதிகரித்து சென்ற நிலையில், தற்போது இறங்கு முகத்தில் செல்கிறது. இதன்படி நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் புதிதாக 1 இலட்சத்து 95 ஆயிரத்து 815 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 69 இலட்சத்து 47 ஆயிரத்தை கடந்துள்ளது. இவர்களில் 2 கோடியே 40 இலட்சத்து 47 ஆயிரத்திற்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 25 இலட்சத்து 92 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவ்வாறு சிகிச்சைப் பெறுபவர்களில் 8 ஆயிரத்திற்கும் அதிகமானோரின் நிலை கவலைக்கிடமாக உள்…

  9. விர்ச்சுவல் ப்ரைவேட் நெட்வொர்க் எனப்படும் விபிஎன் சேவைகள் இந்தியாவில் தடை செய்யப்படலாம் என ஊகங்கள் எழுந்துள்ளன. உள்துறைக்கான இந்திய நாடாளுமன்ற நிலைக்குழு, சமீபத்தில் விபிஎன் சேவைகளுக்கு இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறது. வி.பி.என் சேவை என்றால் என்ன, அதனால் என்ன பயன், இந்திய அரசு அதை ஏன் தடை செய்ய விரும்புகிறது என சில தகவல்களை இங்கே பார்ப்போம். வி.பி.என் சேவை என்றால் என்ன? விர்ச்சுவல் ப்ரைவேட் நெட்வொர்க் என்பது ஒரு பொது இணையதள இணைப்புக்குள் இருக்கும் தனிப்பட்ட வலையமைப்பு ஆகும். இணையத்துக்குள் ஒரு சிறிய இணைய அமைப்பு போன்றது இது. இந்த தனி அமைப்புக்குள் இருக்கும் அனைத்தும் மறையாக்கம் செய்யப்படும். வேறு ச…

  10. லெப்டினன்ட் ஜெனரல் அனில் சௌகான் இந்திய பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி ஆகிறார் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ANI இந்திய பாதுகாப்பு படைகளின் புதிய தலைமை தளபதியாக ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் அனில் சௌகானை நியமிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. பாதுகாப்பு அமைச்சகத்தின் ராணுவ விவகாரங்களுக்கான துறைக்கும் இவர் செயலராக பொறுப்பு வகிப்பார் என்று இந்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. ஜம்மு காஷ்மீர் மற்றும் வட கிழக்கு இந்திய மாநிலங்களில் ஆயுத போராட்டக் குழுக்களுக்கு எதிரான நடவடிக்கைள் பலவற்றில் விரிவான அனுபவம் பெற்றவர் இவர் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இ…

  11. பட மூலாதாரம்,V BHATI / GETTY படக்குறிப்பு, இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் லப்சங்கர் மகேஸ்வரி கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுரை தகவல் எழுதியவர், பார்கவ் பாரிக் பதவி, பிபிசிக்காக 28 அக்டோபர் 2023, 12:15 GMT புதுப்பிக்கப்பட்டது 32 நிமிடங்களுக்கு முன்னர் பாகிஸ்தான் உளவாளியாகச் செயல்பட்டு வந்த ஒருவர் குஜராத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வந்து குஜராத்தில் குடியேறிய அவர், குடியுரிமையும் பெற்றார். தற்போது உளவு பார்த்த வழக்கில் தீவிரவாத தடுப்புப் பிரிவினரால் (ஏடிஎஸ்) கைது செய்யப்பட்டுள்ளார். குஜராத் மாநிலம் தாராபூரைச் சே…

  12. எந்தெந்த மாநிலங்களில் எத்தனை கட்டங்களாக தேர்தல்..? முழு விவரம் இதோ..!! 18- வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் தொடர்பாக செய்தியாளிடம் பேசிய, தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார், ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுவதாக தெரிவித்தார். ஒரே கட்டமாக 22 மாநிலங்களில் தேர்தல் நடத்தப்படவுள்ளது என்றும் உத்தரப்பிரதேசம், பீகார் மற்றும் மேற்கு வங்கத்தில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது என்றும் அவர் கூறினார். …

  13. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், டாக்டர் அதிதி நாராயணி பாஸ்வான் பதவி, பிபிசி இந்திக்காக 22 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஏப்ரல் மாதம் 'தலித் வரலாற்று மாதமாக' கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தலித்துகள் தங்களது அடையாளத்தை கொண்டாடவும், தலித் வரலாற்றில் நடந்த போராட்டங்கள் மற்றும் நினைவுகளின் சின்னமாகவும் இந்த மாதம் உள்ளது. கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் அல்லது அமெரிக்கா என எங்கு வசித்தாலும், உலகம் முழுவதும் வாழும் தலித்துகளின் ஒற்றுமைக்கு ஒரு சிறந்த உதாரணமாக இந்த மாதம் கருதப்படுகிறது. பாபா சாகேப் ஏப்ரல் மாதத்தில் பிறந்தார் என்பதால் மட்டு…

  14. மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலியில், போலிஸ் வாகனத்தின்மீது மாவோயிஸ்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த 16 பேர் உயிரிழந்துள்ளனர். பாதுகாப்பு படையை சேர்ந்த 15 பேர் அந்த வாகனத்தில் பயணம் செய்தனர் என்று கூறப்படுகிறது. பாதுகாப்பு படையை சேராத ஓட்டுநர் ஒருவரும் இதில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இது சக்தி வாய்ந்த கன்னிவெடி தாக்குல் என்றும் கூறப்படுகிறது. கொல்லப்பட்ட வீரர்கள் அனைவரும் மகாராஷ்டிரா …

  15. சத்தீஸ்கர் மாநிலத்தில் துப்பாக்கிச் சண்டை: 7 நக்சலைட்டுகளை உயிரிழப்பு சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 7 நக்சலைட்டுகளை படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். சத்தீஸ்கர் மாநிலத்தின் ராஜ்நந்தகான் பகுதியிலுள்ள சிதகோட்டா வனப்பகுதியில் சிறப்பு அதிரடிப் படையினர் இன்று (சனிக்கிழமை) தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது அப்பகுதியில் பதுங்கியிருந்த நக்சலைட்கள் தப்பியோட முயன்றபோது, அதிரடிப்படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதில் 7 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டதுடன் அவர்களிடமிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தொடர்ந்தும் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்…

  16. மூன்று மாநிலங்களில் இருந்து கோழி, முட்டை வாங்க தடை. ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான கோழிகள் பாதிக்கப்பட்டு இறந்து விடுகிறது. இதனை தொடர்ந்து தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து கோழி, முட்டை வாங்க இறைச்சி, முட்டை வர்த்தகர்களுக்கு கர்நாடக அரசு தற்காலிகமாக தடை விதித்துள்ளது. பறவை காய்ச்சல் பரவலை தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1422447

  17. புதுடில்லி: காஸியாபாத் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட, டில்லியில் மத பிரசங்க கூட்டத்தில் பங்கேற்ற, தப்லிக் - இ - ஜமாத் உறுப்பினர்கள், மருத்துவமனைக்குள் நிர்வாணமாக சுற்றித்திரிவதாகவும், அநாகரிகமாக நடந்து கொள்வதாக புகார் எழுந்துள்ளது. கடந்த மார்ச், 8 - 10ம் தேதிகளில், டில்லியில், நிஜாமுதீன் பகுதியில், தப்லிக் - இ - ஜமாத் அமைப்பின் தலைமை அலுவலகத்தில், மத பிரசங்க கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தை முடித்து அவர்கள் தங்கள் சொந்த ஊர் திரும்பி உள்ளதால், நாடு முழுவதும் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், காஸியாபாத் மருத்துவமனை சார்பில், போலீசுக்கு புகார் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.…

  18. பசிக்கொடுமை; நிர்கதியான தொழிலாளர்கள்’ - குப்பையிலிருந்து உணவு தேடும் அவலம் முறையான உணவு இல்லாததால் குப்பைகளில் இருக்கும் பழங்களைப் பொறுக்கி உண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள். ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கும் தற்போது பெரும் எதிரியாக மாறியுள்ளது கொரோனா வைரஸ். கண்ணுக்கே தெரியாத உயிரினத்துக்கு எதிராகக் கடந்த மூன்று மாதங்களாக உலகமே போர் நடத்தி வருகிறது. வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள், ஏழை நாடுகள் என யாருக்கும் எந்த வித்தியாசமும் காட்டாமல் அனைவருக்கும் ஒரே மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது இந்த வைரஸ். கொரோனா என்ற வார்த்தை காதுகளில் கேட்காத விடியலுக்காகப் புவியே தவம் கிடந்துகொண்டிருக்கிறது. …

  19. மூக்கு வழியே செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கு அனுமதி மூக்கு வழியே செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. முதற்கட்டமாக தனியார் மருத்துவமனைகளில் இந்த மருந்துகளை செலுத்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1316896

  20. புதிய நாடாளுமன்றத்தின் கட்டுமான பணிகள் இம்மாத இறுதிக்குள் நிறைவுபெறுமென மத்திய அரசு தகவல்! புதிய நாடாளுமன்றத்தின் கட்டுமான பணிகள் இம்மாத இறுதிக்குள் நிறைவுபெறுமென மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. திறப்பு விழாவை எப்போது நடத்துவது என்று ஆலோசித்துவரும் மத்திய அரசாங்கம், வரவு-செலவுத் திட்ட கூட்டத்தொடரை தற்போதைய கட்டடத்திலேயே நடத்துவதா அல்லது புதிய கட்டடத்தில் நடத்துவதா என்று விவாதித்து வருகின்றது. ராஜபாதை சீரமைப்பு, பொதுவான மத்திய செயலகம், பிரதமருக்கான புதிய இல்லம் மற்றும் அலுவலகம், துணை ஜனாதிபதிக்கான புதிய மாளிகை ஆகிய புதிய கட்டுமானங்களின் ஒரு அங்கமாக நாடாளுமன்றம் கட்டப்படுகிறது. புதிய நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில், இந்தியாவி…

  21. ஓணம் பண்டிகை: களையிழந்து காணப்படும் கேரளா கேரளா மக்களால் சிறப்பிக்கப்படும் ஓணம் பண்டிகை நாளான இன்று, அம்மாநிலம் களையிழந்து காணப்படுகிறது. கேரளாவில் கடந்த 8 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரையில் கொட்டித்தீர்த்த மழை, அம்மாநில மக்களின் வாழ்வை சீழ்குழைத்துள்ளது. இதனால் இன்று (சனிக்கிழமை) ஓணம் பண்டிகையின்றி கேரளா வெறிச்சோடி காணப்படுகிறது. கடந்த காலங்களில் ஓணம் பண்டிகை என்றால் கேரளாவே களை கட்டி பிரகாசிக்கும். குறிப்பாக கேரளாவின் பிரசித்திபெற்ற ஆனச்சல் ஐயப்பன் ஆலயம் மற்றும் பத்மநாபபுரம் மாளிகை என்பனவே ஓணம் நாளில் பிரகாசிக்கும் இடங்கள். ஆனால் இந்த ஆண்டு குறித்த இரண்டு இடங்களுமே வெறிச்சோடி காணப்படுகின்றன. பலமாநிலங்களை…

  22. படக்குறிப்பு, குருகிராமில் தீ வைத்து எரிக்கப்பட்ட மசூதி மற்றும் கொல்லப்பட்ட இமாம் முகமது சாத். கட்டுரை தகவல் எழுதியவர், தில்நவாஸ் பாஷா பதவி, பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஹரியானாவின் மேவாத்தில் திங்களன்று நடந்த வகுப்புவாத வன்முறையைத் தொடர்ந்து, குருகிராமின் 57 வது செக்டரில் உள்ள ஒரு மசூதிக்கு நள்ளிரவில் தீவைக்கப்பட்டது. இந்த தாக்குதலில் மசூதியின் இமாம் உயிரிழந்துள்ளார். ஒருவர் படுகாயமடைந்துள்ளார். "இந்த தாக்குதலில் மசூதியின் இமாம் முகமது சாத் உயிரிழந்துவிட்டார்," என்று மசூதியின் நிர்வாகக் குழுவின் தலைவர் அஸ்லம் கான் பிபிசியிடம் கூறினார். குருகிராமின் டிசி…

  23. ரபேல் போர் விமான விவகாரம்: பிரதமர் மோடி ஒப்புக் கொண்டுள்ளார்- ராகுல்காந்தி தெரிவிப்பு! ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் திருட்டு நடந்திருப்பதை பிரதமர் மோடி உயர் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டு இருக்கின்றார் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார். ரபேல் போர் விமானங்கள் கொள்வனவு தொடர்பாக பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்துடன் மோடி அரசு 2016ஆம் ஆண்டு செய்து கொண்ட ஒப்பந்தம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம் மத்திய அரசு ரபேல் ஒப்பந்தம் குறித்த நடைமுறைகளை அறிக்கையாக தாக்கல் செய்யவேண்டுமெனவும், விமானத்தின் விலைப்பட்டியல் குறித்த விவரங்களை மூடி முத்திரையிட்ட உறையில் வைத்து தாக்கல் செய்ய வேண்டும் என…

  24. ஒடிசா ஐஏஎஸ் அதிகாரியை மணந்ததால் தலைகீழாக மாறிய விகே பாண்டியன் வாழ்க்கை.. புவனேஸ்வர்: ஒடிசா மாநில ஐஏஎஸ் அதிகாரி சுஜாதாவை மணந்த தமிழனான விகே பாண்டியனை ஒடிசா அரசியலுக்கு முதல்வர் நவீன் பட்நாயக் எப்படி தேர்வு செய்தார் என்தை பார்ப்போம். அக்டோபர் மாதம் ஐஏஏஸ் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற விகே பண்டியன், திருகார்த்திகை நன்னாளில், நேரடியாக ஒடிசா முதல்வரின் வீட்டிற்கு சென்று, முதல்வர் நவீன் பட்நாயக்கின் பாதங்களைத் தொட்டு வணங்கி, "ஜெய் ஜகநாத்" என்று முழக்கமிட்டு, பிஜு ஜனதா தளம் கட்சியில் இணைந்தார். தமிழகத்தின் மதுரையை சேர்ந்த வி.கார்த்திகேய பாண்டியன் எனப்படும் விகே பாண்டியன், 2000 ஆம் ஆண்டு பேட்ஜ் ஐஏஎஸ் அதிகாரியாவார். இவர் பஞ்சாப் மாநிலப் பிரிவின் ஐஏஎஸ் அதி…

  25. சீனாவின் ஷியாங் யாங் ஹோங் 3 என்ற சர்ச்சைக்குரிய ஆய்வு கப்பலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும் அது எந்த ஆராய்ச்சியையும் மேற்கொள்ளாது என மாலைத்தீவு வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த கப்பலுக்கான அனுமதியை முன்னதாக இலங்கை நிராகரித்திருந்தது. இதனையடுத்து மாலைத்தீவு அதற்கு அனுமதி வழங்கியதுடன் எதிர்வரும் பெப்ரவரி மாதத்தின் ஆரம்பத்தில் குறித்த கப்பல் அங்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பணியாளர்களின் சுழற்சி மற்றும் எரிபொருள் நிரப்புதல் உள்ளிட்ட செயற்பாடுகளுக்காக மாத்திரமே ஷியாங் யாங் ஹோங் 3 என்ற சீன கப்பல் தங்களது கடற்பகுதியில் நங்கூரமிடவுள்ளதாகவும், இது எந்த ஆய்வுகளையும் மேற்கொள்ளாது எனவும் மாலைத்தீவு வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்ட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.