அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3269 topics in this forum
-
பெண்களின் திருமண வயது உயர்வு! மின்னம்பலம்2021-12-16 பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயதை 18லிருந்து 21 ஆக உயர்த்தும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் 1978ஆம் ஆண்டு வரை பெண்களின் திருமண வயது 15 ஆக இருந்தது. இதை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்ததையடுத்து, சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு பெண்களின் திருமண வயது 18 ஆக நிர்ணயிக்கப்பட்டு தற்போதுவரை நடைமுறையில் இருந்து வருகிறது. கடந்தாண்டு சுதந்திர தினத்தன்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி ”நாட்டில் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 21 ஆக உயர்த்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. பரிசீலனையில் உள்ள அத்திட்டம் விரைவில் நடைமுற…
-
- 3 replies
- 397 views
-
-
இந்திய இராணுவ முக்கிய அதிகாரிகள் பயணித்த கெலிக்கொப்டர் விபத்து : 7 பேர் உயிரிழப்பு ? இந்திய இராணுவ முக்கிய அதிகாரிகள் பயணித்த கெலிக்கொப்டர் ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. குறித்த விபத்து இந்தியாவின் தமிழ்நாடு குன்னூர் நீலகிரி மாவட்டம் காட்டேரி பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்தி இராணுவ உயர் அதிகாரிகள் சென்றதாகக் கூறப்படும் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான கெலிக்கொப்டரே இவ்வாறு இன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. வெலிங்டன் இராணுவ கல்லூரி ஆய்வுக்காக கோவையிலிருந்து இரு ஹெலிகொப்டர்கள் புறப்பட்டுச் சென்றன. இந்த கெலிகொப்டரில் ஒன்று குன்னூர் அருகே விபத்தில் சிக்கியது. விபத்தில் சிக்கிய இந்த ஹெலிகாப்டரில் முப்படைத் த…
-
- 105 replies
- 6.3k views
- 1 follower
-
-
நீர் மூழ்கி கப்பலை தாக்கி அழிக்கும் ஏவுகணை பரிசோதனை வெற்றிபெற்றதாக அறிவிப்பு! ஒலியைவிட அதிக விரைவாக சென்று நீர் மூழ்கி கப்பலை தாக்கி அழிக்கும் ஸ்மார்ட் என்ற ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஏவுகணை சோதனை ஒடிசாவின் பாலாசூரில் நடைபெற்றது. இந்திய கடற்படைக்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு உருவாகியுள்ள இந்த ஏவுகணை ஒலியை விட அதி விரைவாக சென்று இலக்கை தாக்கும் திறன் கொண்டது என கூறப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை போர்கப்பலில் இருந்து ஏவப்பட்டால் அதிகப்பட்சமாக 650 கிலோமீற்றர் தொலைவுக்குச் செல்லும் திறன் பெற்றவை என அறிவிக்கப்பட்டுள்ளது. https://…
-
- 0 replies
- 270 views
-
-
பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதாக 19 வயது பெண் அளித்த போலி புகார்: கண்டுபிடிக்க அலை மோதிய 1000 போலீசார் 22 நிமிடங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, சித்தரிக்கும் படம் தனது காதலரை மணக்கும் நோக்கத்தில், தான் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக நாக்பூரைச் சேர்ந்த 19 வயதான பெண் ஒருவர் போலியாக புகார் அளித்துள்ளார் என்கிறது பிடிஐ செய்தி முகமை. இந்தப் புகாரால் நாக்பூர் காவல் ஆணையர் அமிதேஷ் குமார் உட்பட காவலர்கள் 1000 பேர் இந்த வழக்கு விசாரணையில் ஈடுபட்டிருந்தனர். எனினும் போலி புகார் அளிப்பதன் மூலம் அப்பெண் தமது காதலரை மணக்க எப்படி திட்டமிட்டிருந்தார் என்ற தகவலை காவல்துறை முழுவதுமாக வெளிய…
-
- 2 replies
- 244 views
- 1 follower
-
-
மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றார் ஹர்னாஸ்! 2021 ஆம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை பஞ்சாபை சேர்ந்த ஹர்னாஸ் சாந்து பெற்றுள்ளார். இந்த ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் போட்டி இஸ்ரேலில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட 21 வயதான ஹர்னாஸ் சாந்து குறித்த பட்டத்தை 21 வருடங்களுக்குப்பின் வென்று சாதனை படைத்துள்ளார். பொது நிர்வாகத்தில் எம்.ஏ பட்டம் பெற்ற இவர் பஞ்சாப்பில் ஒருசில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அதேநேரம் இதற்கு முன் கடந்த 2000 மாவது ஆண்டில் இந்தியாவின் லாரா தத்தா மிஸ் யுனிவர்ஸ் ஆக தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1256316
-
- 5 replies
- 697 views
- 1 follower
-
-
இந்தியா ஹிந்துத்வவாதிகளின் நாடு அல்ல – ராகுல் காந்தி இந்தியா ஹிந்துக்களின் நாடு, ஹிந்துத்வவாதிகளின் நாடு அல்ல என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அதிகரித்து வரும் பணவீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெய்ப்பூரில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘இந்திய அரசியலில் இன்று ஹிந்து மற்றும் ஹிந்துத்வவாதி என்ற இரண்டு உலகங்களுக்கு இடையே போட்டி உள்ளது. நான் ஹிந்து. ஆனால் ஹிந்துத்வவாதி இல்லை. மஹாத்மா காந்தி ஹிந்து. ஆனால் கோட்சே ஹிந்துத்வவாதி. இந்தியா ஹிந்துக்களின் நாடு. ஹிந்துத்வவாதிகளின் நாடல்ல எனத் தெரிவித்துள்ளார். https://atha…
-
- 0 replies
- 213 views
-
-
ஒமைக்ரானை 2 மணி நேரத்தில் கண்டு பிடிக்கும் பரிசோதனை கருவி Posted on December 12, 2021 by தென்னவள் 17 0 ஒமைக்ரான் வைரஸ் தொற்று இருப்பதை 2 மணி நேரத்தில் கண்டுபிடிக்கும் பரிசோதனை கருவியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக நிபுணர்கள் உருவாக்கி உள்ளனர். தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவிலும் பரவி உள்ளது. மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது என்று விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளதால் ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு விமான நிலையத்திலேயே பரிசோதனை செ…
-
- 0 replies
- 184 views
-
-
ஓராண்டாக போராட்டம் நடத்தி வந்த விவசாயிகள் சொந்த ஊருக்கு திரும்பினர் டெல்லியில் ஓராண்டாக நடத்தி வந்த போராட்டத்தைக் கைவிட்ட விவசாயிகள் கூடாரங்களை அகற்றிவிட்டுத் தங்கள் டிரக்டர்களில் சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளனர். புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றுக்கொண்டதுடன், கோரிக்கைகளைப் பரிசீலிப்பதாக உறுதியளித்துள்ளது. இதையடுத்துத் தற்காலிகமாக அமைத்திருந்த கூடாரங்களைப் பிரித்த விவசாயிகள், தங்கள் பொருட்களை டிரக்டர்களில் ஏற்றியதுடன், புறப்படுவதற்கு முன்னர் பஜனைப் பாடல்களைப் பாடினர் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1255945
-
- 1 reply
- 343 views
-
-
தலைமைத் தளபதி பிபின் ராவத்தின் இறுதி சடங்கு இன்று! மறைந்த தலைமைத் தளபதி பிபின் ராவத்தின் இறுதி சடங்கு இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது. இதன்படி இன்று காலை 9.15 மணியளிவில் பரிகேடியர் லக்வீந்தர் சிங் லிடரின் இறுதி சடங்கு கன்டோன்மென்டில் நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து டெல்லி கராஜ்மார்க்கில் உள்ள பிபின் ராவத்தின் இல்லத்தில் அவரது உடலும், மனைவி மதுலிகா ராவத்தின் உடலும் காலை 11 மணி முதல் 12.30 மணிவரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகின்றன. இதனையடுத்து மதியம் 12.30 மணி முதல் 1.30 மணிவரை இராணுவத்தினர் அஞ்சலி செலுத்தவுள்ளனர். அதன் பின் அலங்கிரிக்கப்பட்ட பீரங்கி வண்டியில் பிபின்ராவத்தின் உடல் டெல்லி கன்டோன்மென்டிற்கு கொண்டு செல்லப்பட்டு முழு இராணுவ மரிய…
-
- 0 replies
- 227 views
-
-
விளாடிமிர் புதின் இந்தியா வருகை! ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் இன்று (திங்கட்கிழமை) இந்தியாவிற்கு வருகைத் தரவுள்ளார். டெல்லியில் நடைபெறும் 21ஆவது வருடாந்திர உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியுடன் அவர் கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது இருநாட்டு உறவுகளை பலப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த உச்சிமாநாட்டிற்கு முன்னதாக தங்கள் நாட்டு உயர்மட்ட குழுவினருடன் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும், இதில் இருநாட்டு வெளியுறவு, மற்றும் இராணுவ அமைச்சர்கள் கலந்துகொள்ளவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1254680
-
- 5 replies
- 468 views
-
-
ஒரே நாளில் ஒரு கோடி தடுப்பூசி டோஸ்களை செலுத்தி 6ஆவது முறையாக இந்தியா சாதனை! இந்தியாவில் 6ஆவது முறையாக மீண்டும் ஒரே நாளில் ஒரு கோடி டோஸ்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள. இந்தியா முதன்முதலில் கடந்த ஓகஸ்ட் மாதம் ஒரு கோடி தடுப்பூசி டோஸ்களை செலுத்திய சாதனையை எட்டியது. அதன்பின்னர், செப்டம்பர் 27ஆம் திகதி வரை இதேபோல் 5 முறை இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளான செப்டம்பர் 17ஆம் திகதி ஒரே நாளில் இரண்டரைக் கோடிக்கும் அதிகமான டோஸ் தடுப்பூசிகளை செலுத்தி இந்தியா உலக சாதனை படைத்தது. இந்த நிலையில், 6ஆவது முறையாக மீண்டும் ஒரே நாளில் ஒரு கோடி டோஸ் சாதனை படைக்கப்பட்டுள்ள நிலையில், உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இ…
-
- 0 replies
- 163 views
-
-
நாகாலாந்து: பயங்கரவாதிகள் என சந்தேகம்- பாதுகாப்பு படையினரால் 13 பேர் சுட்டுக் கொலை- பெரும் பதற்றம் கோஹிமா: நாகாலாந்து மாநிலத்தில் பயங்கரவாதிகள் என சந்தேகித்து பாதுகாப்புப் படையினரால் 13 பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த ஒரு வீரர் கொல்லப்பட்டதாகவும் பாதுகாப்பு படையினரின் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாகாலாந்து மாநிலத்தின் மோன் மாவட்டம் மியான்மர் எல்லையை ஒட்டி உள்ளது. நாகாலாந்தின் கோன்யாக் பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி இது. இம்மாவட்டத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக அஸ்ஸாம் ரைபில்ஸ் பாதுகா…
-
- 1 reply
- 256 views
-
-
இந்தியாவில் முதல் முறையாக இரண்டு நோயாளிகளிடம் ஒமிக்ரான் கொரோனா திரிபு கண்டறியப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் இரண்டு கொரோனா நோயாளிகளுக்கு இருப்பது ஒமிக்ரான் திரிபு என்பது ஜெனோம் சீக்வன்சீங் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் தலைமை இயக்குநர் பல்ராம் பார்கவா கூறியுள்ளதாக ஏ.என்.ஐ. செய்தி முகமை ட்வீட் செய்துள்ளது. கொரோனா வைரசில் ஏற்படும் மரபணுத் திரிபுகளை ஆராய்வதற்காக இந்திய அரசு கடந்த ஆண்டு ஏற்படுத்திய இன்சாகாக் கன்சார்ட்டியம் (INSACOG consortium) மூலம் செயல்படுத்தப்படும் ஆய்வகம் இந்த ஜெனோம் சீக்வன்சீங் பணியை மேற்கொண்டது என்றும் அவர் கூறியுள்ளார். ஜெனோம் சீக்வன்சிங் என்பது ஓர் உயிரியின் மரபணுக் குறிப்புகள் முழு…
-
- 0 replies
- 153 views
-
-
வெளிநாட்டினருக்கான விதிமுறைகளை கடுமையாக்கியது இந்திய மத்திய அரசு! புதிய வகை ஒமிக்ரோன் பாதிப்பு கண்டறியப்பட்ட நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ள மத்திய அரசாங்கம், திருத்தியமைக்கப்பட்ட பயண வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, வழக்கமான சர்வதேச விமான சேவைகளை மீண்டும் இயக்கும் முடிவை ஆய்வு செய்துவரும் மத்திய அரசு, வெளிநாட்டினருக்கான விதிமுறைகளை கடுமையாக்கியது. மேலும், ஒமிக்ரோன் கண்டறியப்பட்ட நாடுகளை ‘ஆபத்தில் உள்ள’ நாடுகளாக பட்டியலிட்டுள்ள மத்திய அரசு, தடுப்பூசி செலுத்தியவர்களுக்கான தளர்வுகளையும் நீக்கியது. பிரித்தானியா, ஐரோப்பிய நாடுகள், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளை ஆபத்தில்…
-
- 0 replies
- 347 views
-
-
இசையைப் பெயராகச் சூட்டும் மேகாலயா பழங்குடி கிராமம் கோங்தாங் - ஓர் அதிசய வரலாறு சத்ருபா பால் பிபிசி ஃயூச்சர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,SATARUPA PAUL மேகாலயாவில் உள்ள ஒரு குக்கிராமத்தில் வசிக்கும் எல்லாருக்கும் மூன்று பெயர்கள் உண்ட. வழக்கமான பெயர், ஒரு தனி இசை, செல்லப்பெயரை ஒத்த ஒரு சிறு ஒலி. உயரமான மலைப்பாதையில் உள்ள குறுகலான சாலை வழியே என் கார் சென்றுகொண்டிருந்தது. வெப்பக்காடுகளிலிருந்து பூச்சிகளின் ஒலி காதைத் துளைத்தது. ஒரு வளைவில் திரும்பியதும் பள்ளத்தாக்கிலிருந்து வேறொரு ஒலி வந்தது. இது கொஞ்சம் மென்மையாக, இசையைப் போல, கிட்டத்தட்ட அமானுஷ்யமானதாக இர…
-
- 4 replies
- 358 views
- 1 follower
-
-
இந்தியாவின் ஜனநாயகத்துக்கு வாரிசு அரசியலினால் அச்சுறுத்தல்- பிரதமர் மோடி இந்தியாவின் ஜனநாயகத்துக்கு வாரிசு அரசியலினால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நிகழ்ந்த அரசியலமைப்பு தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஒரே குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாக அரசியல் கட்சிகளின் தலைமை கைமாற்றப்படுகின்றமையினால் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்த வாரிசு அரசியல் கொடி கட்டிப் பறக்கின்றது எனவும் அவர் விமர்சித்துள்ளார். இதேவேளை இக்கூட்டத்தை காங்கிரஸ், …
-
- 0 replies
- 189 views
-
-
இந்தியா-மியன்மார் எல்லை பகுதியில் வலுவான நிலநடுக்கம் மியன்மார் -இந்திய எல்லைப் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை 6.1 ரிச்டெர் அளவில் ஆழமற்ற மற்றும் வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மிசோரத்தில் தென்கிழக்கில் இருந்து 73 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக இந்திய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் பங்களாதேஷில் உள்ள சிட்டகாங்கிலும், கிழக்கு இந்தியாவின் கொல்கத்தா வரையிலும் உணரப்பட்டதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையத்தின் (EMSC) இணையதளத்திலும் கூறியுள்ளது. நிலநடுக்கம் தொடர்பிலான உயிர் அல்லது உடைமை சேதம் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வரவில்லை. https://www.virakesari.lk/article/117892
-
- 0 replies
- 160 views
-
-
கிரிப்டோ கரன்சிகளை தடை செய்யும் சட்டமூலத்தை கொண்டுவர நடவடிக்கை! அனைத்து தனியார் கிரிப்டோ கரன்சிகளையும் தடை செய்யும் வகையிலான சட்டமூலத்தை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் இது குறித்த ஒழுங்குமுறை சட்டமூலங்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி அனைத்து தனியார் கிரிப்டோ கரன்சிகளையும் இந்தியாவில் தடை செய்ய வழிவகை செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இதேவேளை இந்திய கிரிப்டோ கரன்சியை ரிசர்வ் வங்கி உருவாக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இந்தியாவில் அதிகாரப்பூர்வ டிஜிக்டல் நாணயத்திற்கான கட்டமைப்பை ரிசர்வ் வங்கி உருவாக்கும் வகையில் சட்டமூலம் தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் அறிவிக்கப…
-
- 1 reply
- 209 views
-
-
பாலியல் குற்றவாளிக்கு தண்டனை குறைத்த நீதிமன்ற தீர்ப்புக்கு கடும் எதிர்வினை கீதா பாண்டே பிபிசி செய்திகள் 3 மணி நேரங்களுக்கு முன்னர் File photo of an Indian boyபட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய அரசாங்கத்தின் ஆய்வு ஒன்று, துஷ்பிரயோகத்திற்கு ஆளாகும் அபாயத்தில் சிறுமிகளுக்கு இணையாக சிறார்களும் சமமாக இருப்பதாகக் கூறுகிறது 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு எதிரான வழக்கில், பாதிக்கப்பட்ட பெண்ணுடன் "தோலுடன் தோல் தொடர்பு ஏற்படவில்லை" என்று கூறி விடுவித்த மும்பை உயர் நீதிமன்றத்தின் சர்ச்சைக்குரிய தீர்ப்பை சமீபத்தில் இந்திய உச்ச நீதிமன்றம் ரத்து செய்த சில நாட்களில், போக்சோ வழக்கில் குற்றவாளியின் சிறை தண்டனையை குறைத்த மற்றொரு உயர் நீதிமன்ற…
-
- 0 replies
- 456 views
- 1 follower
-
-
கேரளாவில் தொலைத்த குழந்தையை மீட்ட தாயின் நீண்ட போராட்டம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,VIVEK NAIR படக்குறிப்பு, தனது அனுமதியின்றி தன் தந்தை தனது குழந்தையை எடுத்துச்சென்றுவிட்டதாக அனுபமா எஸ் சந்திரன் குற்றம் சாட்டியுள்ளார் இந்தியாவின் தென் மாநிலமான கேரளாவில் காணாமல் போன தனது குழந்தையைத் தேடும் ஒரு தாயின் ஒராண்டு கால தேடல் புதன்கிழமை முடிவுக்கு வந்தது. நீதிமன்றம் குழந்தையை அவரிடம் ஒப்படைத்தது. மக்களிடையே கோபத்தையும், அரசியல் புயலையும் கிளப்பிய இந்த சர்ச்சைக்குரிய விஷயம் தொடர்பாக சௌதிக் பிஸ்வாஸ் மற்றும் அஷ்ரப் படானாவும் வெளியிட்ட விவரங்கள் இதோ. காணாமல் போன தங்கள் க…
-
- 0 replies
- 275 views
- 1 follower
-
-
இந்தியாவில் குறையும் கருத்தரிப்பு : மக்கள் தொகையில் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக அறிவிப்பு! இந்தியாவில் கருத்தரிப்பு எண்ணிக்கை குறைவடைந்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் மக்கள் தொகையில் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழகம் மற்றும் கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களைத் தவிர்த்து ஏனைய மாநிலங்களில் குழந்தை பெறும் எண்ணிக்கை இரண்டாக குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண் குழந்தைகளுக்கு ஈடாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து சமனிலை எட்டப்பட்டுள்ளதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன. தமிழ்நாட்டிலும், புதுச்சேரியும் 100 வீதமான பிரசவங்கள் மருத்துவமனையில் நடைபெறுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. …
-
- 0 replies
- 167 views
-
-
பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்க மத்திய அரசு திட்டம்! இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இதற்கான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்தள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த நாடாளுமன்ற கூட்டத்தொரில் சுமார் 26 சட்டமூலங்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது. இதேவேளை வங்கி சீர்த்திருத்தச் சட்டத்தின் கீழ் இரண்டு வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1251934
-
- 0 replies
- 133 views
-
-
குஜராத்தில் கணக்கில் வராத 100 கோடிக்கும் மேற்பட்ட சொத்துக்கள் கண்டுப்பிடிப்பு! குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள குட்கா விநியோகஸ்தரின் வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான 15 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் 100 கோடிக்கும் மேற்பட்ட கணக்கில் வராத சொத்துக்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது சுமார் ஏழரை கோடி ரூபாய் ரொக்கப்பணமும், நான்கு கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை இதுகுறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், குறித்த நிறுவனத்தின் வங்கி லாக்கருக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athava…
-
- 0 replies
- 187 views
-
-
அமேசானில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் விற்கப்பட்டதாக குற்றச்சாட்டு - வழக்கை எதிர்கொள்ளும் அமேசான் ஊழியர்கள் 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமேசான் வலைதளம் அமேசான் வலைதளத்தைப் பயன்படுத்தி இருவர் மரிஜுவானா போதைப்பொருள் கடத்தியதாக கூறப்பட்ட நிலையில், இந்தியாவிலுள்ள அந்நிறுவனத்தின் மூத்த நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்ற வாரம், மத்திய பிரதேசத்திலிருந்து மற்ற மாநிலங்களுக்கு 20 கிலோ போதைப்பொருள் கடத்தியதாகக் கூறி போலீசார் இருவரை கைது செய்தனர். இந்த நபர்கள், அமேசான் வலைதளத்தில், சர்க்கரைக்கு மாற்றாகப்…
-
- 3 replies
- 255 views
- 1 follower
-
-
திரிபுரா வன்முறைக்கு உண்மையில் என்ன காரணம்? களத்தில் பிபிசி - சிறப்புச் செய்தி நிதின் ஸ்ரீவாஸ்தவ் பிபிசி செய்தியாளர், திரிபுராவில் இருந்து ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,PANNA GHOSH/BBC படக்குறிப்பு, ரோவாவில் தீக்கிரையான கடைகள் திரிபுராவில் ஒரு சிறிய மதரசா பள்ளியில் மொத்தம் ஐந்து மாணவர்கள் படிக்க முயற்சி செய்து கொண்டு இருக்கின்றனர். ஆனால், அவர்களின் முகங்களில் அச்சம் தெரிகிறது. சிறிது நேரத்திற்கு பிறகு, ஜன்னல் வழியாக நாம் பார்க்கிறோம். பின், அந்த வயதான ஆசிரியரின் பார்வை நம் மீது விழுகிறது. "எல்லாம் சரியாகத் தானே இருக்கிறது…
-
- 0 replies
- 208 views
- 1 follower
-