Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தேர்தலை முன்னிட்டு இந்தியா தாக்குதல் நடத்தலாம்: இம்ரான் கான் தேர்தலை முன்னிட்டு இந்தியா மற்றுமொரு தாக்குதலை நடத்தலாம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். மேலும், தம்மை சூழ்ந்திருக்கும் ஆபத்து இன்னும் நீங்கவில்லை என்றும் இந்தியாவில் தேர்தல் முடியும்வரை தம்மை சூழ்ந்துள்ள நெருக்கடி அப்படியேதான் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தலுக்கு முன்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி நிர்வாகம் தம்மீது தாக்குதல் நடத்தலாம் என தெரிவித்தார். அந்தவகையில், இதனை எதிர்கொள்வதற்கு அனைத்து வகையிலும் தாம் தயாராக இருக்கின்றோம் எனக் கூறினார். புல்வாமா தாக்குதலை முன்னிட்டு இந்தியா – பாகிஸ்தான் இடையேயான பதற்றம் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றமை …

  2. மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க ஐரோப்பிய யூனியன் தீர்மானம் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை, சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கக் கோரும் தீர்மானத்தை ஐரோப்பிய யூனியனில் ஜெர்மனி தாக்கல் செய்துள்ளது. இந்த தீர்மானத்தை, 28 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய யூனியனில் ஜெர்மனி தாக்கல் செய்துள்ளது. மேலும், இதனை நிறைவேற்ற ஐரோப்பிய யூனியனின் ஏனைய நாடுகளுடன் ஒன்றிணைந்து ஜெர்மனி செயல்பட்டு வருகின்றது. இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு மசூத் அசார் பயணம் மேற்கொள்ள தடை விதிக்கப்படும். அதேநேரம் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் உள்ள அவருக்குச் சொந்தமான சொத்துகள் அனைத்தும் முடக்கப்படும். எனினும், தற்போது வரை இத்தீர்மானம் மீது ஐரோப்பி…

  3. Published By: DIGITAL DESK 3 30 AUG, 2024 | 09:03 AM புதுடெல்லி: இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானியை கௌதம் அதானி முந்தினார். ஹுருன் இந்தியாவின் நிறுவனம் 2024 ஜூலை மாத கணக்குப்படி இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர் பட்டியலை வியாழக்கிழமை (29) வெளியிட்டது. இந்த பட்டியலில் 2020ல் 4வது இடத்தில் இருந்த கௌதம் அதானி முதல் இடத்தை பிடித்துள்ளார். அவர் ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானியை முந்தினார். அதானி மற்றும் அவரது குடும்பத்தினர் ரூ. 11.60 இலட்சம் கோடி சொத்துக்களுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளனர். அதானியின் சொத்து கடந்த ஓராண்டில் 95 சதவீதம் உயர்ந்துள்ளது. ஹிண்டன்பர்க் அறிக்கையால் ஏற்பட்ட சரிவுக்கு பிறகு அவரது சொத்த…

  4. அ.தா.பாலசுப்ரமணியன் பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை Getty Images சிவன் வழிபாடு ஒன்றுதான். ஆனால், ஒரு கோயிலில் சிவனுக்குப் பெயர் அண்ணாமலையார் என்றால் மற்றொரு ஊரில் பெயர் நடராஜர். …

  5. உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் – சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இந்தியா கடும் எச்சரிக்கை உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்று சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இந்தியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் முகமது குரேஷி, பீஜிங் சென்று சீன வெளிவிவகார அமைச்சர் யாங்-யீயுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து காஷ்மீர் விவகாரம் தொடர்பாக சீனாவும் பாகிஸ்தானும் விடுத்த கூட்டறிக்கையில், இந்தியா ஒருதலைப் பட்சமான நடவடிக்கைகள் எடுக்கக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த அறிக்கையை கண்டித்துள்ள மத்திய வெளிவிவகார அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாத்சவா, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் இந்தியாவின் ஒ…

  6. சபரிமலை கோவில் திருவிழா இந்த ஆண்டு ஒத்தி வைப்பு; கேரள அரசு முடிவு திருவனந்தபுரம், நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் எதிரொலியாக அனைத்து மத வழிபாட்டுத்தலங்களும் மூடப்பட்டன. எனினும், கோவில்களில் பூஜைகள் செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. பக்தர்களின் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஊரடங்கு உத்தரவின் தளர்வுகளில் ஒரு பகுதியாக, ஜூன் 8ந்தேதி முதல் கோவில்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இதனால், வருகிற 14ந்தேதி சபரிமலை கோவில் நடை திறக்கப்படும்போது பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்தது. தினமும் காலை 4 மணி முதல் மதியம் 1 மணி வரையு…

  7. 30 வினாடிகளில் கொரோனாவை கண்டறிய புதிய பரிசோதனை இந்தியாவுடன் கூட்டாக உருவாக்க இஸ்ரேல் குழு வருகிறது கொரோனா வைரஸ் தொற்றை கண்டுபிடிக்க இந்தியாவில் ‘ஆர்டிபிசிஆர்’ முறை பின்பற்றப்படுகிறது. இதில் முடிவு வர சில மணி நேரம் காத்திருக்க வேண்டியதிருக்கிறது. இந்த நிலையில் 30 வினாடிகளில் கொரோனாவை கண்டறியும் அதிவிரைவு கருவி ஒன்றை இந்தியாவும், இஸ்ரேலும் இணைந்து கூட்டாக உருவாக்குகின்றன. இதற்கான ஆராய்ச்சியில் இந்தியாவின் டி.ஆர்.டி.ஓ. என்னும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புடன், இஸ்ரேல் விஞ்ஞானிகள் குழுவும் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், டி.ஆர்.டி.ஓ. மூத்த விஞ்ஞானி கே. விஜயராகவனுடன் இணைந்து செயல்படும் இஸ்ரேல் விஞ்ஞானிகள் குழு, ஒரு தனி விமானத்தில் இந்…

  8. இருமுனைப் போருக்கு தயாராகும் சீன – பாகிஸ்தான் கூட்டணி – கேர்னல் ஆர் ஹரிஹரன் கேர்னல் ஆர் ஹரிஹரன் சீன-பாகிஸ்தான் உறவை, இரு நாட்டு தலைவர்களும் வழக்கமாக “இமயத்தை விட உயரமானது, கடலை விட ஆழமானது“ என்று வர்ணிப்பார்கள். தற்போது, சீன-பாகிஸ்தான் உறவுகள் வளரும் வேகத்தைப் பார்த்தால், அவை, மேலும் புதிய இமய உச்சியையும், கடல் ஆழத்தையும் எட்டிவிடும் சூழ்நிலையை நெருங்குவது தெரிகிறது. சீன அதிபர் ஷீ ஜின்பிங் 2013ல், சீனாவை ஆசிய, ஐரோப்பிய, ஆப்பிரிக்க நாடுகளுடன் இணைக்கும் “21ம் நூற்றாண்டின் சில்க் ரோடு” என்று கூறப்படும் பல்முனை கட்டமைப்பு திட்டத்தை துவக்கிய பின்பு, அதன் வெற்றிக்கு பாகிஸ்தான் இன்றியமையாத அங்கமாக மாறியுள்ளது. ஆகவே, இரு தரப…

  9. ஜம்மு காஷ்மீரில் வளர்ச்சியில், பாகிஸ்தானின் 70 ஆண்டு திட்டங்கள் தவிடுபொடியாகும்… October 2, 2019 ஜம்மு காஷ்மீரில் ஒருமுறை வளர்ச்சி தொடங்கினால் பாகிஸ்தானின் 70 ஆண்டு திட்டங்கள் தவிடுபொடியாகும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்கா சென்று திரும்பிய நிலையில், வெளியுறவு அமைச்சர் ஜெயசங்கர் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். வாஷிங்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை குறித்த கேள்விகளுக்கு பதிலளித்து உரையாற்றினார். அதன்போது, காஷ்மீரில் தற்போது இணையதளம் மற்றும் சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்தி இந்திய எதிர்ப்பு சக்திகளை அணிதிரட்டும் முயற்ச…

  10. ஆபிரிக்க நாடுகளுடன் இராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்க தயார்!- இந்தியா ஆபிரிக்க நாடுகளுடன் இராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்க இந்தியா தயாராக இருப்பதாக பாதுகாப்புத்துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இந்திய-ஆப்பிரிக்க நாடுகளின் பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த மாநாட்டில் மேலும் கூறியுள்ளதாவது, “ஆளில்லா விமானங்கள், அதிவேக ரோந்து படகுகள், இராணுவ போா் விமானங்கள், ஆயுதங்கள் உள்ளிட்டவற்றின் விநியோகத்தை அதிகரிக்க இந்தியா தயாராக இருக்கிறது. இதனூடாக ஆப்பிரிக்க நாடுகளுடன் இந்தியாவின் நட்பு மேலும் வலுப்படும். இணையவழி குற்றங்களைத் தடுப்பதற்கும் ஒத்துழைப்பு அளிக்கப்படும். பயங்கரவாதத்தை ஒடுக்கி அம…

  11. இந்தியாவில் இணைய ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் அமைச்சின் கீழ் வந்தன! இணைய ஊடகங்களை ஒழுங்குபடுத்தும் முதற்கட்டமாக தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இணையத் தளங்களைக் கொண்டுவருவதற்கான உத்தரவை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது. இதன்படி, நெற்பிளிக்ஸ், சமூக ஊடகத் தளங்களான பேஸ்புக், ருவிற்றர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றவையும் அமைச்சின் கீழ் கொண்டுவரப்படுகின்றன. இதேவேளை, உள்ளூர் ஊடகங்கள் போல் இணைய ஊடகங்களின் ஒழுங்குமுறையை விவரிக்கும் சட்டத்தை அரசாங்கம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றும் என இணைய சுதந்திர அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் அபர் குப்தா தெரிவித்துள்ளார். இந்தியாவில் மின்னணு ஊடகங்கள் 1995 ஆம் ஆண்டின் கேபிள் தொலைக்காட்சி அலைவரிசைகள் ஒழுங்குமுறை சட்டத…

  12. கர்நாடக அரசியல் குழப்பம் : சுயேட்சை உறுப்பினர்களை தகுதிநீக்கம் செய்தார் சபாநாயகர்! கர்நாடகாவில் முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியின் ஆட்சி கவிழ்ந்துள்ள நிலையில், சுயேட்சை உறுப்பினர்களை கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமார் தகுதிநீக்கம் செய்துள்ளார். இதன்படி முதலாவதாக சுயேட்சை உறுப்பினரான சங்கர் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரமேஷ் எல் ஜார்கிகோலியும், மகேஷ் குமதல்லி ஆகியோரும் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் இராஜினாமா கடிதத்தை சமர்பித்ததை அடுத்து அங்கு காங்கிரஸ், ஜனதா தளம் கூட்டணி ஆட்சி ஸ்திரமற்ற நிலையை எதிர்நோக்கியது. இதனையடுத்து இடம்பெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாம…

  13. சரண்ஜித் சன்னி: பஞ்சாப் முதல்வராகப் போகும் இவரது பின்னணி என்ன? 19 செப்டெம்பர் 2021 பட மூலாதாரம்,TS_SINGH DEO படக்குறிப்பு, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியுடன் சரண்ஜித் சிங் சன்னி பஞ்சாப் காங்கிரஸ் சட்டப்பேரவை குழு தலைவராக தேர்வாகியிருக்கும் சரண்ஜித் சன்னி (49) திங்கட்கிழமை காலை 11 மணிக்கு அம்மாநில முதல்வராக பதவியேற்கவிருக்கிறார். அந்த மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் மாநில தொழில்நுட்ப கல்வி மற்றும் தொழிலக பயிற்சித்துறை அமைச்சராக இருந்த அவர், இதற்கு முன்பு பஞ்சாப் சட்டப்பேரவையில் எதிர்கட்சி தலைவராக ஓராண்டுக்கு இருந்திருக்கிறார். பஞ்சாப் மாநிலத்தின் ர…

  14. நடிகர் மோகன்லால், உள்ளிட்ட 14 பேருக்கு பத்ம பூஷண் விருது அறிவிப்பு… January 26, 2019 கேரளாவை சேர்ந்த நடிகர் மோகன்லால், மறைந்த பத்திரிகையாளர் குல்தீப் நய்யார், இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் உள்பட 14 பேருக்கு இந்த ஆண்டிற்கான பத்ம பூஷண் விருதை இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு இந்திய மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், பத்மபூஷண் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, கேரளாவை சேர்ந்த நடிகர் மோகன்லால், மறைந்த பத்திரிகையாளர் குல்தீப் நய்யார், இஸ்ரோ முன்னாள் விஞ்…

  15. பிர்ஸா முண்டா: பழங்குடிகளால் கடவுளாக போற்றப்படும் இவர் யார்? ஆனந்த் தத் பிபிசி ஹிந்தி 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,RAJYASABHA.NIC.IN படக்குறிப்பு, பிர்ஸா முண்டா பிர்ஸா முண்டா, 1800களில் கடைசி ஆண்டுகளில் பழங்குடி சமூகங்களுக்காக வாழ்ந்தவர். ஜூன் 9ஆம் தேதி அவரது நினைவு தினம். பிபிசியின் இந்த சிறப்புக் கட்டுரை மூலம் அவரது ஆளுமை மற்றும் சமூகத்திற்கு அவரது பங்களிப்பு பற்றி அறிந்து கொள்வோம். பழங்குடி சமூகத்தின் ஒரு நாயகனாகத் திகழ்ந்த பிர்ஸா முண்டாவை, பழங்குடி மக்கள் இன்றும் பெருமையுடன் நினைவில் கொள்கிறார்கள். பழங்குடியினரின் நலன்களுக்காகப் பாடுப…

  16. மலேசிய நாணயத்தால் திருப்பதி தேவஸ்தானத்திற்கு பல கோடி ரூபாய் நஷ்டம் பகிர்க இன்றைய நாளிதழ்களில் வெளியான சில முக்கியச் செய்திகள் சிலவற்றைத் தொகுத்தளிக்கிறோம். தினமணி: 'வீணாகக் குவிக்கப்பட்டுள்ள 40 டன் மலேசிய நாணயங்கள்!' படத்தின் காப்புரிமைGETTY IMAGES அதிகாரிகளின் அலட்சியப் போக்கு காரணமாக, நிலுவையில் உள்ள 40 டன் மலேசிய நாணயங்கள் மாற்றப்படாததால் திருப்பதி தேவஸ்தானத்திற்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்கிறது தினமணி நாளிதழ். "திருப்பதி தேவஸ்தானத்திடம் மலேசியாவைச் சேர்ந்த சில்லறை நாணயங்கள் 40 டன் அளவுக்கு மாற்றப்படாமல் நிலுவையில் இருந்து வருகின்றன. அவற்றை மாற்றிக் கொள்ள தேவஸ்தானம் பல ஆ…

  17. மேற்கு வங்கம்: 8 ஆம் வகுப்பு தகுதிக்கான வன உதவியாளர் பணிக்கு பி.எச்டி மாணவர்கள் விண்ணப்பம் மால்டா மேற்கு வங்கத்தில் 8 ஆம் வகுப்புத் தேர்ச்சியை தகுதியாகக் கொண்ட வன உதவியாளர்கள் பணிக்கு பொறியியல், முதுகலை, பி.எச்.டி ஆராய்ச்சி முடித்த மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக மூத்த வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். வனவிலங்குகளைப் பாதுகாப்பதற்கும் மனித-விலங்கு மோதலைத் தடுப்பதற்கும் ஒப்பந்த அடிப்படையில் வன உதவியாளர்கள் 2000 பேரைப் பணியமர்த்த மேற்கு வங்க அரசு முடிவு செய்தது. மாநிலத்தில் இதற்கான அறிவிப்பு வெளியான உடனே ஏராளமான விண்ணப்பங்கள் குவியத் தொடங்கின. இவற்றில் பெரும்பாலும் உயர்கல்வி படித்தவர்கள் விண்ணப்பித்துள்ளது தெரியவந்துள்ளது. இது…

  18. பங்களாதேஷுக்கு 4.7 பில்லியன் டொலர் கடன் வழங்க IMF நிறைவேற்றுச் சபை அனுமதி By SETHU 31 JAN, 2023 | 05:26 PM பங்களாதேஷுக்கு 4.7 பில்லியன் கடன் வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்றுச் சபை அனுமதி வழங்கியுள்ளது. எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்கு இது உதவும் என நம்பப்படுகிறது. கடந்த வருடம் பங்களாதேஷில் ஒரு நாளில் 13 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டமை குறிபபிடத்தக்கது. சர்வதேச நாணய நிதியதின் கடனுதவியின் கீழ் பங்களாதேஷ் அரசுக்கு உடனடியாக 476 மில்லியன் டொலர்கள் கிடைக்கவுள்ளது. எனினும், இது வரி அதிகரிப்பு மற்றும் வங்கித்துறையில் மீட்கப்பட முடியாத கடன்…

  19. அயோத்தியில் இராமர் கோயில் கட்ட, ஏப்ரலில் அடிக்கல் அயோத்தியில் இராமர் கோயில் கட்டுவதற்கு வரும் ஏப்ரலில் அடிக்கல் நாட்ட ஆர்.எஸ்.எஸ்.அமைப்பும், விசுவ இந்து பரி‌ஷத்தும் தீவிரம் காட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இராம நவமி தினம் ஏப்ரல் மாதம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அடிக்கல் நாட்ட இந்த இரு அமைப்புகளும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே விசுவ இந்து பரி‌ஷத் அமைப்பின் உறுப்பினர்களால் உருவாக்கப்பட்ட இராமஜென்ம பூமி நிவாஸ் என்ற அறக்கட்டளை சார்பில் இராமர் கோயில் கட்டுவதற்காக ஏற்பாடுகள் நடைப்பெற்று வருகின்ற நிலையில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது பற்றி பணிமனையின் பொறுப்பாளர் அன்னு பாய்சோம்புரா கூறுகையில், “இராமர் கோயிலுக்கான தூண்கள் செதுக்கு…

  20. பட மூலாதாரம்,REUTERS கட்டுரை தகவல் எழுதியவர், ராகவேந்திர ராவ் மற்றும் ஷதாப் நஸ்மி பதவி, பிபிசி செய்தியாளர்கள் 26 மார்ச் 2024 இந்தியாவில் மருந்துகள், சிகிச்சை மற்றும் மருத்துவ சேவைக்கான செலவு அதிகரித்து வருவது அனைவரும் அறிந்தே. இந்நிலையில், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மலேரியா, கோவிட் அல்லது இதய நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் பல பிரபலமான மருந்துகள் மருந்து தரப் பரிசோதனையில் தோல்வியடைந்து வருவது தெரிந்தால் அது சாமானியர்களுக்கு கவலையளிக்கக் கூடும். அதே நேரத்தில் மருந்து தரப் பரிசோதனையில் தோல்வியடைந்த நிறுவனங்கள், கோடிக்கணக்கிலான ரூபாய் மதிப்பிற்கு தேர்தல் பத்திரங்களை வாங்கி அரசியல் கட்சிகளுக்…

  21. ஆண்டுக்கு 40 ஆயிரம் குழந்தைகள் கடத்தப்படுகின்றனர் : அவர்களின் நிலை என்ன? இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் புள்ளிவிபரங்களின் படி ஒவ்வொரு ஆண்டிற்கும் ஏறக்குறைய 40 ஆயிரம் குழந்தைகள் கடத்தப்படுவதாக அறியமுடிகிறது. ஒவ்வொரு 8 நிமடங்களுக்கும் ஒரு குழுந்தை காணாமல்போயுள்ளதாகவும், அவர்களில் 25 சதவீதமானோர் கண்டுப்பிடிக்கப்படாமல் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கடத்தப்படும் குழந்தைகள் மீட்கப்படுகிறார்களா? அப்படியானால் சராசரியாக எந்தனை குழந்தைகள் மீட்கப்படுகிறார்கள்? அப்படி மீட்கப்படும் குழந்தைகளில் எத்தனைபேர் மறுவாழ்வுக்கு உட்படுத்தப்படுகிறார்கள்? இப்படி பல கேள்விகள் எழுந்துகொண்டுதான் இருக்கின்றது. உண்மை நிலைவரங்களின் படி கடத்தப்படுகின்ற குழந்தைகளில…

  22. ஜம்மு காஷ்மீர் பூஞ்ச்சில் பாக். அத்துமீறலில் இந்திய வீரர் பலி: இந்த மாதத்தில் 3வது வீரர் பலி ஸ்ரீநகர் ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தில் கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் பலியானார், 2 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். பூஞ்ச், ரஜவ்ரி மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறலுக்கு இந்த மாதத்தில் 3வது வீரர் பலியாகியுள்ளார். சனிக்கிழமை இரவு ஷாபூர்-கெர்னி செக்டாரில் பாக்.ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடும் ஷெல் தாக்குதலும் நடத்தினர். இதனையடுத்து இந்திய ராணுவமும் வலுவான பதிலடி கொடுத்தது. இந்தத் …

  23. ஆயுதங்கள் இன்றி இந்திய வீரர்களை சீனாவுடன் பேச்சுவார்த்தைக்கு அனுப்பியது யார்? – ராகுல் கேள்வி by : Dhackshala சீனாவுடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு ஆயுதங்கள் இன்றி இந்திய வீரர்களை அனுப்பியது யார்? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். ராகுல் காந்தி இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள காணொலி செய்தியில், இந்திய வீரர்களை கொன்று மிகப்பெரிய குற்றத்தை சீனா செய்துள்ளது என்று கூறியுள்ளார். மேலும் ஆயுதங்கள் இன்றி நிராயுதபாணியாக இந்திய வீரர்களை பேச்சுவார்த்தைக்கு அனுப்பியது யார்? இந்த நிலைமைக்கு யார் பொறுப்பு? என்றும் ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியா-சீன எல்லையில் கடந்த திங்கட்கிழமை இரவு இரு தரப்பு படைகளுக்கு …

  24. காஷ்மீரில் இன்று நள்ளிரவு முதல் ஜனாதிபதி ஆட்சி பிரகடனம் December 19, 2018 ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்று நள்ளிரவில் இருந்து ஜனாதிபதி ஆட்சியை பிரகடனப்படுத்தும் உத்தரவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கையொப்பமிட்டுள்ளார். ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி பா.ஜ.க. ஆதரவுடன் கடந்த கடந்த 2015 மே; ஆண்டு ஆட்சி அமைத்திருந்த நிலையில் ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் முப்தி முகம்மது சயீத் முதலமைச்சராகவும் , பா.ஜ.க.வின் நிர்மல் சிங் துணை முதலமைச்சராகவும் பொறுப்பேற்றனர். இந்தநிலையில் முப்தி முகம்மது சயீத் மறைவுக்கு பின்னர் அவரது மகள், மெகபூபா முப்தி தலைமையில் அம்மாநிலத்தில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்த நிலையில் கூட்டணி கட்சிகளுக்குள் ஏற்பட…

  25. ரஃபேல்: மோடி அரசு அளித்த சலுகைகள்! 7.87 பில்லியன் யூரோ மதிப்புள்ள ரஃபேல் ஒப்பந்தம் 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதியன்று கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்திற்காக பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு அமைச்சரவைக் குழு பல விதிவிலக்குகளையும், சலுகைகளையும் வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த விதிவிலக்குகள் அனைத்தும் முன்னெப்போதும் யாருக்கும் வழங்கப்படாதவை. ராணுவக் கொள்முதல் செயல்முறைகளில் முக்கிய விதிமுறைகளிலிருந்து விலக்கு உட்பட முக்கிய சலுகைகள் டசால்ட் ஏவியேஷன், எம்பிடிஏ ஆகிய இரண்டு பிரெஞ்சு நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. இந்த சலுகைகள் அனைத்தும் இறுதிகட்ட ஆய்வுக்கும், ஒப்புதல் பெறுவதற்கும் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் தலைமையிலான பாதுகாப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.