Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. வாக்குச்சாவடிகளை பா.ஜ.கவினர் வலுக்கட்டாயமாக கைப்பற்றியுள்ளனர் – மம்தா பானர்ஜி வாக்குச்சாவடிகளை பா.ஜ.கவினர் வலுக்கட்டாயமாக கைப்பற்றி, திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்களை தாக்கி வருவதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். அலிபூர்துவார் மாவட்டத்தில் இடம்பெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘ காணாகுல் தொகுதி வேட்பாளர் தாக்கப்பட்டுள்ளார். இதேபோல் மாநிலம் முழுவதும் திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்கள் மீது ஏராளமான தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. திரிணாமூல் வேட்பாளர் வாக்குச்சாவடிக்குகள் நுழைய பாதுகாப்பு தரப்பினர் அனுமதிக்கவில்லை. வாக்குப்பதிவ…

  2. சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளுடனான மோதலின் பின்னர் காணாமல்போன 18 இந்திய பாதுகாப்பு படையினர் சத்தீஸ்கா் மாநிலம் பிஜாபூா் மாவட்ட வனப் பகுதியில் மாவோயிஸ்டுகளுடன் சனிக்கிழமை நடைபெற்ற மோதலையடுத்து குறைந்தது 18 பாதுகாப்பு படையினரை காணவில்லை என்று இந்திய அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளனர். மாவோயிஸ்டுகளுடனான மோதலின் போது ஐந்து பாதுகாப்பு வீரர்கள் இறந்தனர் மற்றும் 30 பேர் காயமடைந்தனர் என்று சத்தீஸ்கர் பொலிஸார் நேற்று தெரிவித்தனர். அதேநேரம் இந்த மோதலில் பெண் மாவோயிஸ்ட் ஒருவரின் சடலமும் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டது. இது குறித்து சத்தீஸ்கர் காவல்துறை பணிப்பாளர் ஜெனரல் டி.எம். அவஸ்தி கூறுகையில், சில பாதுகாப்புப் பணியாளர்கள் காணவில்லை, தேடுதல் ந…

  3. நிர்வாகி ஒருவரின் வீட்டிலிருந்து நான்கு மின்னணு வாக்கு இயந்திரங்கள் கைப்பற்றல்- அதிர்ச்சியில் மக்கள்! மேற்கு வங்காளத்தில் சட்டமன்றத் தேர்தலின் மூன்றாம் கட்டத் தேர்தல் இன்று நடைபெற்றுவரும் நிலையில், திரிணாமூல் காங்கிரஸ் நிர்வாகி ஒருவரின் வீட்டிலிருந்து நான்கு மின்னணு வாக்கு இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன், ஒரு வாக்குப்பதிவு தணிக்கை இயந்திரமான விவிபாட் இயந்திரமும் தேர்தல் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்காளம், ஹவுரா மாவட்டத்திலுள்ள துள்சிபேரியா என்ற கிராமத்தில் வைத்தே இந்த பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த கிராமத்தில் நேற்றுமுன்தினம் இரவு திரிணாமூல் காங்கிரஸ் நிர்வாகி வீட்டின் முன்பு தேர்தல் ஆணையகத்தின் அடையாள…

  4. பங்களாதேஷில் பொதுமுடக்கத்துக்கு எதிரான போராட்டத்தில் மூவர் மீது துப்பாக்கி சூடு! பங்களாதேஷில் அமுல்படுத்தப்பட்டுள்ள தேசிய பொதுமுடக்கத்துக்கு எதிராக, முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது பொலிஸார் மூவர் மீது துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பங்களாதேஷில் அமுல்படுத்தப்பட்டுள்ள தேசிய பொதுமுடக்கத்துக்கு எதிராக, நேற்று (திங்கட்கிழமை) பிற்பகுதியில் ஃபரித்பூர் மாவட்டத்தின் மத்திய நகரமான சால்தாவில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. சிறு வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற இந்த போராட்டம், சிறிது நேரத்தின் பின்னர் வன்முறையாக மாறியது. இதன்போது குறைந்தது மூவர் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸ் நிலையத்தை போராட்டக்காரர்க…

  5. இந்தியாவில் ஒரே நாளில் 103,558 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 103,558 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 478 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. இது நாட்டின் மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையை 12,589,067 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 165,101 ஆகவும் உயர்த்தியுள்ளதாக இந்திய மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் திங்கள்கிழமை காலை தெரிவித்துள்ளது. இதனிடையே நேற்யை தினம் கொரோனா தொற்றுக்குள்ளான 52,847 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,16,82,136 ஆக உள்ளதுடன், சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களின் எண்ணிக்கையும் 7,41,830 ஆக காணப்படு…

  6. கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 118 வயது மூதாட்டி போபால், மத்தியப் பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் 118 வயதுள்ள மூதாட்டி முதல் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார். இதுதொடர்பாக மாவட்ட நீதிபதி தீபக் சிங் பதிவிட்டுள்ள டிவிட்டர் பதிவில், சாகர் மாவட்டத்தில் சதர்பூர் கிராமத்தில் வசிக்கும் 118 வயது பெண் துல்சபாய் இன்று தனது முதல் கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டுள்ளார். இதையடுத்து நாட்டில் மிகவும் வயதுள்ள மூதாட்டி முதல்முறையாக தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து மூதாட்டி கூறுகையில், நான் கொ…

  7. நான் தமிழ் மக்களுக்கு எதிரானவன் அல்லன்; மாகாண சபை முறைமையையே எதிர்க்கிறேன் : அமைச்சர் சரத் வீரசேகர நான் தமிழ் மக்களுக்கு எதிரானவன் அல்லன். ஆனால், மாகாண சபை முறைமையை எதிர்க்கின்றேன் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். யாழ்.,வடமராட்சி கிழக்கு, மருதங்கேணியில் புதிதாகஅமைக்கப்பட்ட பொலிஸ் நிலையத்தை நேற்று திறந்து வைத்த பின் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதேஅவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- வடக்கில் இரண்டு பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்காக நான் வந்துள்ளேன். மல்லாவி மற்றும் மருதங்கேணிப் பகுதிகளில் பொதுமக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் முகமாக இரண்டு ப…

    • 0 replies
    • 193 views
  8. வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்த விடுதலைப்புலி உறுப்பினர்களே இலங்கை மீது சர்வதேச விசாரணையைக் கோருகின்றனர் என்று பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் ஏ.கே.அப்துல் மொமென் தெரிவித்துள்ளார். இம்மாதம் 5 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஜி - 8 மாநாடு தொடர்பில் இன்று நடைபெற்ற இணையவழி ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது, போர் தொடர்பான சுய விசாரணைகளை இலங்கை மேற்கொண்டுள்ளது.இலங்கை மீதான ஐ.நா. தீர்மானத்துக்கு எதிராக பங்களாதேஷ் வாக்களித்தமைக்குப் பல நியாயப்படுத்தல்கள் உள்ளன. அயல் நாடுகளுக்கு ஆதரவு வழங்குவதோடு, அரசியல் ரீதியான தீர்மானங்களுக்கு ஆதரவு வழங்காமல் இருக்கும் வெளியுறவுக் கொள்கையையே பங்களாதே…

  9. 15 வருடங்களுக்கு மேல் பழமையான... மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட மாட்டாது – தேர்தல் ஆணையம் சட்டப்பேரவை தேர்தலில் 15 வருடங்களுக்கு மேல் பழமையான மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட மாட்டாது என தேர்தல் ஆணையம் நீதிமன்றில் தெரிவித்துள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்திருந்தது. இதற்கு தேர்தல் ஆணையம் பதில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தது. குறித்த மனுவிலேயே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மனுவில் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முழுமையாக சோதிக்கப்பட்ட பிறகே வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படும். குறித்த வாக்கு…

  10. அசாம், மேற்குவங்க தேர்தல்: ஒரு பருந்துப் பார்வை! மின்னம்பலம் ஐந்து சட்டப்பேரவைகளுக்கு அறிவிக்கப்பட்ட தேர்தலில், முதலில் அசாம் மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் இன்று முதல்கட்டத் தேர்தல் நடைபெறுகிறது. அசாமில் மொத்தமுள்ள 126 தொகுதிகளில் 47 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது. முதலமைச்சர் சர்பானந்தா சோனாவால், சட்டப்பேரவைத் தலைவர் ஹிதேந்திர கோஸ்வாமி, மாநில காங்கிரஸ் தலைவர் ரிபுன் போரா மற்றும் பல அமைச்சர்கள் இன்றைய போட்டியில் இடம்பெற்றுள்ளனர். இந்த தொகுதிகளில் பெரும்பாலும் ஆளும் பாஜக- அசாம் கண பரிசத் கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான 10 கட்சி கூட்டணி, புதிய அசாம் ஜாதிய பரிசத் ஆகிய மூன்று தரப்புகளுக்கும் இடையேதான் முதன்மைப் போட்டி ஏற்பட்டுள்ள…

  11. டெல்லி விவசாயிகள் போராட்டம்: ஆதரவாக களத்தில் குதித்த உத்தரப்பிரதேச விவசாயிகள் 29 நவம்பர் 2020, 07:07 GMT பட மூலாதாரம், GETTY IMAGES சமீபத்தில் மத்திய அரசு கொண்டுவந்த மூன்று விவசாயம் தொடர்பான சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடி வரும் பஞ்சாப், ஹரியாணா மாநில விவசாயிகளுக்கு ஆதரவாக தற்போது உத்தரப்பிரதேச விவசாயிகளும் மாநில எல்லையில் போராட்டம் நடத்தத் தொடங்கிவிட்டார்கள். டெல்லி சலோ என்ற பெயரில் பேரணியாகத் தொடங்கிய இந்த விவசாயிகள் போராட்டம் டெல்லி எல்லைக்குள் நுழைய விடாமல் தடுப்பதற்கு போலீசார் ஆரம்பத்தில் கடுமையான முயற்சிகளை எடுத்தார்கள். சாலைகளில் உறுதியான தடுப்புகள் அமைக்கப்பட்டன. ஆனால், பல இடங்களி…

  12. இந்தியா அதிரடி: தடுப்பூசி ஏற்றுமதியை நிறுத்தியது இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ஒக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கொவிட் -19 தடுப்பூசியின் அனைத்து ஏற்றுமதிகளையும் இந்திய தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது. உள்ளூர் தேவை அதிகரித்ததன் காரணமாகவே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ன. இந்நிலையில், இந்தியாவிடம் 1 மில்லியன் தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கான முன்பதிவை இலங்கை செய்திருந்தது. திட்டமிட்டதன் பிரகாரம் அந்த தடுப்பூசி இன்னும் இரண்டு மாதங்களுக்குள் கிடைக்குமென நம்பிக்கைத் தெரிவித்த இராஜாங்க அமைச்சரான பேராசிரியர் சன்ன ஜயசுமான, இந்தியாவின் தற்காலிக இடைநிறுத்தம் இலங்கைக்கு எவ்விதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றார். …

  13. பெங்களூர் சம்பவம் - சமூக வலைத்தள பயன்பாட்டின் மறுபக்கம். சமூக வலைத்தளங்களில் என்ன விடயங்களை பகிர்கின்றோம் என்பதில் கவனமா இருக்காவிடில், முதலுக்கே மோசமாகிவிடும் என்பதற்கு இது ஒரு உதாரணம். ஹிதேசா என்பவர், வட இந்திய பெண். ஒரு மாடல் அழகியான இவர், பெங்களூரில் வசிக்கிறார். இன்ஸ்டாகிராம் மூலம், மேக்கப் சம்பந்தமான விடயங்களை சொல்லி, யாவாரம் செய்பவர். ஒரு 12,000 பேர் வாடிக்கையாக தொடர்பவர்கள். இவர் அண்மையில் ஒரு நிறுவனத்தில் உணவு ஆர்டர் செய்தார். அதனை கொண்டு வந்தவர் சோமாட்டோ எனும் நிறுவனத்தின், ஊழியர் காமராஜ், ஒரு தமிழர். உணவை கொண்டு வருவதில் தாமதமாகி விட்டது. என்ன நடந்ததோ தெரியவில்லை, உணவு கொண்டு வந்தவர் தன்னை தாக்கியதால், மூக்கில் ரத்தம் ஓடுகிறது. எனத…

  14. சாகும்போது முட்டாளாகச் சாக எனக்கு விருப்பமில்லை”- புரட்சி நாயகன் பகத் சிங் 3 Views “சாகும்போது முட்டாளாகச் சாக எனக்கு விருப்பமில்லை. எதையோ கற்றுக்கொண்டோம் என்ற திருப்தி இருக்க வேண்டும்” என்று கூறிய புத்தகப்பிரியர் புரட்சி நாயகன் பகத்சிங். தூக்கு மேடைக்குப் போவதற்கு முன் படிப்பதற்காக பத்து நிமிடம் தாருங்கள் என்று வேண்டியவரும் அவரே. இந்த புரட்சியின் நாயகனை இந்திய வரலாறு மறப்பதற்கில்லை…. இந்தியாவின் விடுதலைப் போராட்டம் வெளிப்படையாகப் பார்க்கின்ற போது அது அகிம்சை வழி ஏற்பட்டதென்பது உண்மை தான். ஆனால் வெள்ளையர்களுக்கு அச்சத்தை தந்தது அகிம்சை போராட்டத்தைக் கண்டு அல்ல, ஆயுதப் போராட்டத்தைக் கண்டு தான். அந்தளவிற்கு இந்த…

  15. கும்பமேளாவால் கொரோனா தொற்று அதிகரிக்கும் – மத்திய அரசு உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெறவுள்ள கும்பமேளா திருவிழாவின் காரணமாக கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில், இது குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். குறித்த கடிதத்திலேயே மேற்படி அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கடித்தில் ”ஹரித்வாரில் தற்போது நாள் ஒன்றுக்கு 10 முதல் 20 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் கும்பமேளா திருவிழாவிற்கு 15 ஆயிரம் கோடி பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் இந்த விழாவிற்கு …

  16. மும்பை காங்கிரஸ் கட்சி துணை தலைவராக.... நடிகை, நக்மா நியமனம்! மும்பை காங்கிரஸ் புதிய நிர்வாகிகளை கட்சி தலைவர் சோனியா காந்தி நியமித்து உள்ளாா். இதன்படி மும்பை காங்கிரஸ் கட்சி துணை தலைவராக நடிகை நக்மா நியமிக்கப்பட்டுள்ளார். மும்பை காங்கிரஸ் தலைவராக பாய் ஜக்தாப் கடந்த டிசம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் மும்பை காங்கிரஸ் புதிய நிர்வாகிகளை கட்சி தலைவர் சோனியா காந்தி நியமித்து உள்ளாா். இதன்படி மும்பை காங்கிரசுக்கு 6 மூத்த துணை தலைவர்கள், 15 துணை தலைவர்கள், 42 பொது செயலாளர்கள், 76 செயலாளர்கள், 30 நிர்வாக உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் முன்னாள்அமைச்சர் பாபா சித்திக், முன்னாள் எம்.எல்.ஏ.மதுசவான், கணேஷ் யாதவ், வீரேந்திர பாக்சி, ஜெனட் டிசோசா…

    • 5 replies
    • 574 views
  17. மனித மிருகம் ஒன்று ராஜஸ்தான் மாநிலத்தில் பெண் ஒருவருக்கு அறுவைசிகிச்சை நிகழ்ந்து, ஒக்சியன் வழக்கப்பட்ட நிலையில் icu ல் இருந்த நிலையில், கணவர், இரவு தங்க முடியாது என்று சொல்லப்பட்டதால் வீடு சென்ற நிலையில், அங்கிருந்த வார்டு பாய் அந்த பெண் மீது பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். யாருக்காவது சொன்னால், அனைத்தையுமே பிடுங்கி எறிந்து, கொலை செய்து விடுவேன் என்று வேறு சொல்லி இருக்கிறான். இரவு முழுவதும் அழுத படியே இருந்த பெண், காலையில் வந்த கணவருக்கு, தனக்கு நிகழ்ந்ததை சொல்ல, அந்த கயவன், கைதாகி உள்ளான். Source: thatstamil.com

  18. தனியார் மயமாக்கப்பட்ட விமான நிலையங்களின் மீதமுள்ள பங்குகளையும் விற்பனை செய்ய மத்திய அரசு திட்டம்! இந்தியாவில் ஏற்கெனவே தனியார்மயமாக்கப்பட்ட விமான நிலையங்களின் மீதமுள்ள பங்குகளையும் விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி டெல்லி, மும்பை, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய விமான நிலையங்களின் பங்குகள் விற்பனை செய்யப்படவுள்ளன. 2021-2022 நிதி ஆண்டில் 13 விமான நிலையங்கள் தனியார் மயமாக்கலுக்கு அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் இந்த நான்கு விமான நிலையங்களின் பங்குகளையும் இந்திய விமான நிலைய ஒழுங்காற்று ஆணையம் விற்கவுள்ளது. இதேவேளை மும்பை பன்னாட்டு விமான நிலையத்தின் 74 சதவீத பங்குகளை அதானி குழுமம் வைத்திருக்கும் நிலையில் மீதம் 26 பங்குகளை ஏஏஐ வைத்திருக்கிற…

  19. மூக்கு வழியே செலுத்தும் புதிய தடுப்பு மருந்து- ஆய்வைத் தொடங்கியது இந்திய நிறுவனம்! கொரோனாவைத் தடுக்க மூக்கு வழியே செலுத்தும் புதிய தடுப்பு மருந்து பரிசோதனையை இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் ஆரம்பித்துள்ளது. மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு இந்தப் பரிசோதனைக்கு அனுமதியளித்துள்ளதுடன் சென்னை மற்றும் ஹைதராபாத்தில் பரிசோதனை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. தடுப்பு மருந்தை ஊசியால் எடுத்துக்கொள்ளும்போது ஏற்படும் வலியைத் தவிர்க்கலாம் என்றும், 0.1 மில்லி அளவிலான மருந்தை மூக்குக்குள் செலுத்திக்கொண்டாலே நோய் எதிர்ப்புத்திறன் உருவாகிவிடும் என்றும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. http://athavannews.com/மூக்கு-வழியே-செலுத்தும்/

  20. பாரதிய ஜனதா கட்சி அடிமை போல் பணிந்துபோவதை ஏற்கமுடியவில்லை – சுப்ரமணியன் சுவாமி அகில இந்திய கட்சியான பாரதிய ஜனதா கட்சி அடிமை போல் பணிந்து கூட்டணி கட்சியிடம் சீட்டுக்காக மன்றாடுவதை ஏற்க முடியவில்லை என பாஜக எம்.பி. சுப்ரமணியன் சுவாமி தெரிவித்தார். திருப்பதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த வருடம் தமிழக தேர்தல் குறித்து வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். “நான் இம்முறை தமிழக தேர்தலில் அதிக முனைப்பு காட்டவில்லை. அதனால் தமிழ்நாட்டு பக்கம் செல்லவில்லை. கூட்டணிகள் குறித்தும் கவலை கொள்ளவில்லை. பாஜக தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி தன்னந்தனியாக யாருடைய கூட்டணியும் இல்லாமல் போட்டியிடும் போது பல இடங்களில் டிபாசிட் இழந்தாலும் 2 அல்லது …

  21. உட்கட்சி குழப்பம்: பதவி விலகிய பாஜக முதல்வர்! மின்னம்பலம் தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு இருக்கும்நிலையில், உத்தராகண்ட் முதலமைச்சரான பாஜகவின் திரிவேந்திரசிங் ராவத் பதவிவிலகினார். பொதுவெளிக்கு புதிதாக இருந்தாலும் அந்த மாநிலத்தைப் பொறுத்தவரை கடந்த சில நாள்களாகவே இது எதிர்பார்க்கப்பட்டதுதான்! ஆளுநர் பேபி ராணி மௌர்யாவிடம் நேற்று (மார்ச் 9) மாலை 4 மணிக்கு ராவத் தன் விலகல்கடிதத்தை அளித்துவிட்டார். கடந்த ஞாயிறன்று தொடங்கிய உத்தராகண்ட் பாஜக பஞ்சாயத்து, இதன் மூலம் ஒரு முடிவுக்கு வந்தது. ஆளுநரைச் சந்தித்த கையோடு, செய்தியாளர் சந்திப்புக்கும் ராவத் ஏற்பாடு செய்திருந்தார். கட்சி மேலிடம் சொன்னதால் பதவியிலிருந்து விலகியதாக அவர் கூறினார். உண்மைதான்..! உள்…

  22. கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS பாகிஸ்தான் நாடாளுமன்றம் இன்று (பிப்ரவரி 06, சனிக்கிழமை) இம்ரான் கான் பிரதமராக தொடர்வதற்கான நம்பிக்கையை வெளிப்படுத்தி இருக்கிறது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 178 வாக்குகளைப் பெற்று வெற்றியைப் பதிவு செய்திருக்கிறார் இம்ரான் கான். இதில் தாங்கள் பங்கு பெறப் போவதில்லை என நேற்றே (பிப்ரவரி 05, வெள்ளிக்கிழமை) எதிர்கட்சியினர் இந்த வாக்கெடுப்பை புறக்கணிப்பதாகக் கூறினார்கள். பாகிஸ்தானின் செனட் அவையில், ஒரு முக்கியமான இடத்துக்கு நடந்த தேர்தலில் ஆளுங்கட்சி தோல்வியுற்ற பின், இம்ரான் கானே முன் வந்து நாடாளுமன்றத்தின் …

  23. இந்திய படையினர் தயாராக இருக்க வேண்டும் – பிபின் ராவத் அறிவுறுத்தல்! சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள நம் படையினர் தயாராக இருக்க வேண்டும்’ என முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் அறிவுறுத்தியுள்ளார். எல்லைப் பிரச்சினைகள் குறித்து கருத்து தெரிவத்த அவர் மேற்படி தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், “ நாடு சுதந்திரம் பெற்ற பின் அளவான போர் திறன்களை உடைய சிறிய படையாக இருந்த நம் இராணுவம் இன்றைக்கு நவீன போர் கருவிகளை உடைய மிக வலுவான படையாக மாறியுள்ளது. போர்களின் தன்மைகளில் 20ம் நுாற்றாண்டில் பல்வேறு மாற்றங்களை சந்தித்துள்ளோம். பாதுகாப்பு விவகாரங்களில் பல சவால்களை சந்தித்து வருகிறோம். உலகின் பிற நாடுகளைச் சேர்ந்த இராணுவம்…

  24. டிஷா ரவி: இந்திய அரசின் சுற்றுச்சூழல் கொள்கைகளை எதிர்த்த இளைய காலநிலைச் செயற்பாட்டாளர் – தமிழில் ஜெயந்திரன் 2 Views பெங்களூரின் வீதிகளில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று கூடினார்கள். மாணவர்களுடனும் மனித உரிமை ஆர்வலர்களுடனும் இணைந்து அந்த நகரத்தில் வாழும் மக்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தம்மை இணைத்துக்கொண்டார்கள். “விவசாயிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பது கிளர்ச்சியாகாது” “அநீதி சட்டபூர்வமாக்கப்படும் போது அதனை எதிர்ப்பது எமது கடமை” போன்ற சுலோகங்களைத் தாங்கிய அட்டைகளை அவர்கள் வைத்திருந்தார்கள். முகத்தில் புன்சிரிப்புடன் காணப்பட்ட 22 வயது நிரம்பிய டிஷா ரவியின் (Disha Ravi) படத்தை அவர்களில் பெரும்பாலானோர் தூக்கி வைத்திருந்தார்கள். …

  25. ராமர் கோவில் நிர்மாணிப்பு பணிகளுக்காக 2 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக நிதி கிடைத்துள்ளதாக அறிவிப்பு! அயோத்தியில் ராமர் கோவில் நிர்மாணிப்பு பணிகளுக்காக 2 ஆயிரத்து 100 கோடிக்கும் அதிகமாக நிதி கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அயோத்தியாவில் ராமருக்கு பிரம்மாண்ட கோவில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அதற்கு ஆயிரத்து 100 கோடி ரூபாய் செலவாகும் என கோவில் கட்டுவதற்கான அறக்கட்டளை கணக்கிட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த ஜனவரி 15 ஆம் திகதி முதல் பொதுமக்களிடம் நன்கொடை திரட்டும் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. அதில் எதிர்பார்க்கப்பட்டதை விடவும் ஆயிரம் கோடி ரூபாய் அதிகமாக கிடைத்துள்ளது. ராமர் கோயில் வளாக மொத்த கட்டுமானத்திற்கு 1100 கோடி ரூபாயும், அதில் கோவிலுக்கு மட்டும் 3…

    • 1 reply
    • 339 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.