அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3273 topics in this forum
-
பட மூலாதாரம்,ROOP SINGH MEENA எழுதியவர், மோகர் சிங் மீனா பதவி, பிபிசி ஹிந்தி, ஜெய்பூர் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ரந்தம்பூர் புலிகள் காப்பகத்தில் 77 புலிகள் இருந்தன. அதில் காணாமல் போன 25 புலிகளைக் கண்டுபிடிப்பதற்காக விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த விசாரணைக் குழு அமைப்பதற்கான உத்தரவு, ராஜஸ்தானில் உள்ள அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. குறிப்பாக, இந்தக் காப்பகத்தில் இருந்து 25 புலிகள் எப்போது, எப்படிக் காணாமல் போயின என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. விசாரணைக் குழு அமைக்கப்பட்ட மறுநாளே, வனத்துறையினர் பத்து புலிகளைக் கண்டுபிடித்துள்ளனர். ராஜஸ்தானின் முதன்மை உயர் வனப் பாதுகாவலரும், தலைமை வனவிலங்கு காப்பாள…
-
- 0 replies
- 124 views
- 1 follower
-
-
சீனாவின் அறிவிப்புக்கு எதிர்ப்பை வெளியிட்ட இந்தியா. சீனாவின் ஹோட்டன் பகுதியில் புதிதாக 2 நிர்வாக அலகுகளை உருவாக்கும் அறிவிப்புக்கு இந்தியா கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. குறித்த நிர்வாக அலகுகளில் சில இடங்கள் இந்திய – லடாக்கின் அதிகார வரம்புக்குட்டவை என இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. சீனாவின் ஹோட்டன் பகுதியில் புதிதாக 2 நிர்வாக அலகுகளை உருவாக்கும் அறிவிப்பை அண்மையில் சீனா வெளியிட்டது. இதற்குச் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு ஒப்புதல் அளித்தது. இது தொடர்பில் டெல்லியில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரண்தீர் ஜெய்ஸ்வால், சீனாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்பை இந்தியா ஏற்கப் போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்…
-
- 3 replies
- 242 views
-
-
குடியுரிமை மசோதாவில் இலங்கை தமிழ் அகதிகளுக்கு மட்டும் ஏன் இடமில்லை? ராஜ்நாத் விளக்கம் இலங்கையில் இருந்து வந்த தமிழ் அகதிகளுக்கு மட்டும் இந்திய குடியுரிமை வழங்கும் திருத்தம் மசோதாவில் சேர்க்கப்படாதது ஏன் என்பது குறித்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்துள்ளார். அண்டை இஸ்லாமிய நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்காஸ்தான் ஆகிய நாடுகளில் மத துன்புறுத்தலுக்கு உள்ளான இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், சமணர்கள், புத்தர்கள் மற்றும் பார்சிகள் ஆகிய ஆறு மதத்தினருக்கு இந்திய குடியுரிமை வழங்குவதை நோக்கமாக கொண்டு குடியுரிமை (திருத்த) மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்கிறது, இந்நிலையில் இலங்கையில் இருந்து வந்த தமிழ் …
-
- 23 replies
- 2.7k views
-
-
இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான உறவு இதர நாடுகளைப் போன்றது அல்ல – மோடி இரண்டு நாள் விஜயமாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இதன்போது இருநாட்டு தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டு நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. இதனை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி ட்ரம்பினை வரவேற்று உரையாற்றினார். இதன்போது கருத்து தெரிவித்த மோடி, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா உங்களை மனதார வரவேற்பதாக தெரிவித்தார். அத்துடன் இந்தியாவின் பன்முகத் தன்மையை எடுத்துக்காட்டுவதாக அகமதாபாத் திகழ்வதாகவும் குறிப்பிட்டார். மேலும் இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான உறவு இதர நாடுகளைப் போன்றது அல்ல எனவ…
-
- 1 reply
- 460 views
-
-
என்ன பேச வேண்டும் என் பிரதமர்?- இந்தியாவுக்குத் தேவை அதிகாரப் பரவலாக்கல் அன்புக்குரிய சகோதரர்களே, வணக்கம்! ஒரு பேரிடரை எதிர்கொள்ளும்போது நமக்குக் கிடைக்கும் பெரிய படிப்பினை, ‘உண்மையில் நாம் யாராக, என்னவாக இருக்கிறோம்?’ என்பதை நாமே புரிந்துகொள்வதுதான். நம்முடைய எல்லா பலங்கள், பலவீனங்களையும் ஒரு பேரிடர் அம்பலமாக்கிவிடுகிறது. கரோனா கிருமிக்காக ஒட்டுமொத்த நாடும் போராடிவரும் இந்நாட்களில், சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு இந்த நாட்டைப் பீடித்திருக்கும் மோசமான ஒரு கிருமி நம் கவனத்தைக் கோருகிறது - அதிகாரக்குவிப்பு; இனியேனும் அதற்கு எதிரான சிகிச்சையை நாம் உடனடியாகத் தொடங்கிட வேண்டும். உலகம் முழுக்க கரோனா பரவியிருப்பதாலேயே உலகத்தின் ஒவ்வொரு நாடும் அதை எப்படி எதிர்கொள…
-
- 1 reply
- 448 views
-
-
கொரோனா பாதிப்பு: மும்பை அரசு மருத்துவமனையில் ஒரே படுக்கையில் 2 நோயாளிகளுக்கு சிகிச்சை மும்பை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரி்ன் எண்ணிக்கை 1,65,799 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 71,105 ஆக உயர்ந்துள்ளது. 89,987 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். கொரோனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,706 ஆக அதிகரித்துள்ளது. ''மராட்டிய மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,982 ஆக அதிகரித்துள்ளது. அடுத்த இடத்தில் உள்ள குஜராத்தில் உயிரிழப்பு 960 ஆகவும், மத்தியப் பிரதேசத்தில் உயிரிழப்பு 321 ஆகவும் அதிகரித்துள்ளது. மராட்டிய மாநிலத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 59,546 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 18,616 ஆக உயர்ந்துள…
-
- 0 replies
- 681 views
-
-
இம்ரான் குரேஷி பிபிசி இந்தி படத்தின் காப்புரிமை MOHAN KRISHNAN / FACEBOOK Image caption மிகுந்த வலியில் இருந்த அந்த யானை, அது உயிருடன் இருந்த கடைசி மூன்று நாட்களில், வெள்ளையாறு நதியை விட்டு வெளியே வரவில்லை கேரளாவில் அன்னாசி பழத்துக்குள் வெடிபொருட்களை வைத்து, அதை கர்ப்பமாக இருந்த யானைக்கு சிலர் கொடுத்ததில், அதை உண்ட பெண் யானை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. அடையாளம் அறியப்படாத நபர்களின் இந்தக் கொடூரச் செயலுக்கு உள்ளான, அந்த யானைக்கு சுமார் 14-15 வயது இருக்கும் என கேரள வனத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். மிகுந்த வலியில் இருந்த அந்த யானை, அது உயிருடன் இருந்த கடைசி மூன்று நாட்களில், வெள்ளையாறு நதியை விட்டு வெளியே வரவில்லை என்றும் பிறகு மருத்துவ உதவிக்…
-
- 24 replies
- 2.6k views
-
-
இறந்தவர்களின் உடல்களை கயிறு கட்டி இழுத்து சென்ற கொடூரம்; கவர்னர் கண்டனம் மேற்குவங்காள மாநிலத்தில் இறந்தவர்களின் உடல்களை அலட்சியமாக இழுத்துச் செல்லும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கவர்னர் கண்டனம் தெரிவித்து உள்ளார். பதிவு: ஜூன் 13, 2020 08:34 AM கொல்கத்தா: டெல்லியில் கொரோனாவால் உயிரிழந்தவரின் உடல், குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட நிலையில், தற்போது மேற்குவங்காள மாநிலத்தில் மற்றொரு அவலம் அரங்கேறியுள்ளது. தெற்கு கொல்கத்தாவில் 13 சடலங்களுடன் ஒரு நகராட்சி வேனுக்கு உள்ளூர்வாசிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். உடல்கள் வேனில் இருந்து தகனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போது கயிறு கட்டி இழுத்து செல்லப்பட்டது. அப்போது துர்நாற்றம் வந்ததாக கூறப்…
-
- 0 replies
- 337 views
-
-
எல்லைப் பிரச்சினை:சீனா நிறுவனங்களுடனான ரூ.5 ஆயிரம் கோடி ஒப்பந்தங்களை நிறுத்திய மராட்டிய அரசு எல்லைப் பிரச்சினையில் சீனா நிறுவனங்களுடனான ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பிலான 3 ஒப்பந்தங்களை மராட்டிய அரசு நிறுத்தி வைத்துள்ளது. பதிவு: ஜூன் 22, 2020 12:04 PM மும்பை சமீபத்தில் மராட்டிய மாநிலத்தில் 2.0 என்ற முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது. இதில் சீனா நிறுவனங்களுடன் ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பிலான 3 ஒப்பந்தங்கள் கைய்யெழுத்தானது. இந்த நிலையில் எல்லைப் பிரச்சினைகளில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றங்களை தொடர்ந்து இந்த 3 ஒப்பந்தங்களை மாநில அரசு நிறுத்தி வைத்துள்ளது. இது குறித்து தொழில்துறை அமைச்சர் சுபாஷ் தேசாய் கூறியதாவது:- மத்திய அரசுட…
-
- 0 replies
- 350 views
-
-
டெல்லியில், கடந்த 21ம் திகதி , ஒரு நாலு வயது பெண் குழந்தையினை கடத்த நடந்த முயல்வு பெரும் அதிர்சியினை உண்டாக்கி உள்ளது. ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், ஒரு வீட்டினை தட்டி, கதவை திறந்த பெண்ணிடம், தாம் சேல்ஸ் ரெப்கள் என்றும், தாகம் தீர்க்க கொஞ்சம் தண்ணீர் தர முடியுமா என்று கேட்க, மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள், கொஞ்சம் தள்ளி போய் கடையில் வாங்கி குடிக்காமல் ஏன் இங்கே கேட்க்கிறார்கள் என்ற சந்தேகத்துடன் தண்ணி எடுக்க, உள்ளே செல்ல, கண நேரத்தில், தாயார் பின்னால் சென்ற 4 வயது பெண் குழந்தையினை தூக்கிக் கொண்டு ஓட முயன்று இருக்கிறார்கள். பிள்ளையின் சத்தம் கேட்டு ஓடி வந்த தாய், அலறிக்கொண்டே பிள்ளையினை, பயத்தில் ஒருவர் ஓட, வண்டியினை ஓட்டி வந்தவர் இழுபறியில் விழுந்து, எழ…
-
- 1 reply
- 889 views
-
-
இந்தியாவின் இறையாண்மையில் அண்டை நாடுகள் தலையிட கூடாது - ஜெய்சங்கர். இந்தியாவின் இறையாண்மையில் அண்டை நாடுகள் தலையிட கூடாது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர ஜெய்சங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார். எல்லைப் பகுதியில் பதற்றங்கள் நீடித்து வரும் நிலையில், புளூம்பர்க் பொருளாதார அமைப்பின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், இந்தியா – சீனாவிற்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் தொடரும் நிலையில் சீனா இதுவரை ஒப்புக்கொண்டபடி படைகளை விலக்கிக் கொள்ள மறுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் லடாக் எல்லையில் சீனா படைகளைக் குவிப்பதால் பதற்றம் நீடித்து வருகின்ற நிலையில், இருநாட்டு இராணுவ அதிகாரிகள் மட்டத்தில…
-
- 0 replies
- 369 views
-
-
இந்தியாவில் ஒரே நாளில் 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலி இந்தியாவில் கொரோனா வரைஸ் தொற்றால் ஒரேநாளில் 4,529 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோரின் மொத்த எண்ணிக்கை 2,83,248 ஆக உயர்ந்துள்ளது. இதுவே கொரோனாவால் அதிகமாக உயிரிழப்பு பதிவான முதல் நாளாகும். இந்நிலையில், ஒரே நாளில் 2,67,334 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை மூன்றாவது நாளாகவும் 3 இலட்சத்தையும் விட குறைவாக பதிவாகியுள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 2,54,96,330 ஆகும். இந்தியாவில் தொற்றாளர்களின் எண்ணிக்கை வரும் நிலையில், உயிரிழப்பு அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா (5,433,506),…
-
- 4 replies
- 533 views
-
-
கொரோனா தொற்றால்... இறந்தவரின் உடல் மூலம், தொற்று பரவுவதில்லை – எய்ம்ஸ் மருத்துவமனை கொரோனா தொற்றால் இறந்த ஒருவரது உடல் மூலம் மற்றவர்களுக்கு வைரஸ் தொற்று பரவ வாய்ப்பில்லை என எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் தடயவியல் துறைத் தலைவர் சுதீர் குப்தா மேற்படி குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவித்துள்ள அவர், ‘ கடந்த ஓராண்டு காலமாக கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் உடல்களை வைத்து ஆய்வு நடத்தி வந்தோம். ஏறக்குறைய 100 உடல்களை கொரோனா வைரஸ் தொற்று இருக்கிறதா என்பதை மறு ஆய்வு செய்தோம். உயிர் பிரிந்த 12 – 24 மணி நேரத்தில் இதைச்செய்தோம். இதன் முடிவுகளின்படி இறந்து 24 மணிநேரத்திற்கு பின்னர் ஒருவரது உடலில் க…
-
- 0 replies
- 193 views
-
-
உத்தர பிரதேச தேர்தல்: நரேந்திர மோதி, யோகியின் பாஜகவில் அதிகரிக்கும் அதிருப்தி தலைவர்கள் - மவுசு குறைகிறதா? தில்நவாஸ் பாஷா பிபிசி செய்தியாளர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,@YADAVAKHILESH படக்குறிப்பு, சுவாமி பிரசாத் மெளரியா ராஜிநாமா செய்தவுடன், அகிலேஷ் அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டார். மௌரியா இன்னும் அதிகாரபூர்வமாக சமாஜ்வாதி கட்சியில் சேரவில்லை. கடந்த 48 மணி நேரத்தில் உத்தர பிரதேச மாநிலத்தில் யோகி அரசின் இரண்டு பெரிய தலைவர்கள் ராஜிநாமா செய்துள்ளனர். முதலில் சுவாமி பிரசாத் மௌரியா, பிறகு தாரா சிங் செளஹான். விவசாய…
-
- 0 replies
- 248 views
- 1 follower
-
-
ராகுல் Vs மோடி - இதயச்சந்திரன் அண்மையில் நடக்கும் சம்பவங்களை தொகுத்துப் பார்த்தால், இந்த இருதுருவ அரசியல் மோதல் இந்திய நாடாளுமன்ற அதிகாரத்திற்கான போட்டி போலத் தோற்றமளித்தாலும், இதன் பின்னணியில் மாறிவரும் பூகோள அரசியலின் இருமுனைவாக்க அரசியல் என்பது ஆழமான பங்கினை வகிப்பது போலுள்ளது. மோடியின் நெருங்கிய சகாவாகக் கருதப்படும் அதானியின் மீதும், அவர் உருவாக்கிய அதானி குழும சாம்ராஜியத்தின் மீதும், மேற்குலக ஹின்டன்பேர்க் நிகழ்த்திய தாக்குதலும், கிடப்பில் போடப்பட்டிருந்த குஜராத் படுகொலை ஆவணங்களைத் தூசிதட்டி வெளியிட்ட மேற்குலகின் பழம்பெரும் பிபிசி ஊடகத்தின் நகர்வும், அடுத்து வரப்போகும் பூகோள அரசியலின் இராஜதந்திர மோதல்களுக்கு அடித்தளம…
-
- 1 reply
- 220 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,செளதிக் பிஸ்வாஸ் பதவி,பிபிசி நியூஸ் 25 ஏப்ரல் 2023, 07:11 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலகம் முழுவதும் ஒவ்வொரு சமுதாயத்திலும் காணப்படும் சில பழக்கங்கள், சடங்குகள் போன்றவை பிற சமுதாயங்களுக்கு வியப்பை அல்லது அதிர்ச்சியை ஏற்படுத்தக்கூடியவையாக இன்றும் உள்ளன. இந்தியாவில் கடந்த காலங்களில் நடைமுறையில் இருந்த சதி எனப்படும் உடன்கட்டை ஏறுதலும் இது போல் அதிர்ச்சி ஏற்படுத்தக்கூடிய நடைமுறையாகவே இருந்தது. கணவன் உயிரிழந்தால், அவனது உடலை எரிக்கும் போது, மனைவியும் அத்தீயில் எரிந்து தன்னை மாய்த்துக்கொள்ளவேண்டும் என்பதே சதி…
-
- 0 replies
- 138 views
- 1 follower
-
-
புலவாமா தாக்குதல் – பாகிஸ்தானிடம் ஆதாரத்தை வழங்கியது இந்தியா…. February 28, 2019 புலவாமா தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்துக்கு உள்ள தொடர்பையும், அந்த இயக்கம் பாகிஸ்தானில் இயங்கி வருவதையும் ஆதாரத்துடன் இந்தியா பாகிஸ்தானிடம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலம் புலவாமாவில் துணை ராணுவ படை வீரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இயங்கும் ஜெய்ஷ் இ முகமது இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இது குறித்து இந்தியா தெரிவித்துவரும் குற்றச்சாட்டை பாகிஸ்தான் மறுத்து வருகின்ற நிலையில் இந்தியாவுக்கான பாகிஸ்தான் பொறுப்பு தூதரை இந்தியா அழைத்து புலவாமா தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்துக்கு உள்ள தொடர்பையும், அந்த இயக்கம் பாகிஸ்தா…
-
- 2 replies
- 727 views
-
-
பிரியங்கா கணவர் வதேராவின் லண்டன் சொத்துகள் முடக்கம்? பிரியங்கா கண்வர் வதேராவின் லண்டன் சொத்துகளை முடக்க அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ராபர்ட் வதேரா மீது ஏராளமான நில அபகரிப்பு புகார்கள் நிலுவையில் உள்ளன. மேலும் வெளிநாடுகளில் சட்டவிரோதமாக சொத்துகளை வாங்கி குவித்திருக்கிறார் வதேரா என்பது குற்றச்சாட்டு.இது தொடர்பாக அமலாக்கப் பிரிவு தொடர்ந்து வதேராவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது வதேரா பெற்றிருக்கும் முன்ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்றும் அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் மனுவும் தாக்கல் செய்துள்ளது. இதனிடையே வெளிநாடுகளுக்கு வதேரா செல்ல நீதிமன்றம் அனுமதித்திருக்கிறது. இதற்கும் அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் லண்ட…
-
- 0 replies
- 265 views
-
-
பாகிஸ்தானை ஒழுங்கா இருக்க சொல்லுங்க.. இல்லைனா பேச மாட்டோம்.. சீன அதிபரிடம் நேரில் சொன்ன மோடி தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதை பாகிஸ்தான் கைவிட்டால்தான், அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம், இந்திய பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கிர்கிஸ்தான் நாட்டில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு, அமைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, அந்த நாட்டு தலைநகர், பிஷ்கேக் சென்றுள்ளார். அங்கு என்று சீன அதிபர் ஜி ஜின்பிங்-கை சந்தித்து பேசினார் மோடி. சுமார் 20 நிமிடங்கள் இந்த உரையாடல் நீடித்தது.இப்போதுள்ள, தீவிரவாத சூழ்நிலையில் இருந்து பாகிஸ்தான் வெளியே வரவேண்டும். ஆனால் இப்போதைய நிலையில், அப்படி எந்த ஒ…
-
- 0 replies
- 438 views
-
-
ஆந்திராவின் கிழக்கு கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்து 61 பேர் நீரில் மூழ்கினர்…. September 15, 2019 ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்து 61 பேர் நீரில் மூழ்கியதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டம் தேவிப்பட்டினத்தில் உள்ள கோதவரி ஆற்றுக்கு இன்று ஏராளமானோர் சுற்றுலா சென்றுள்ளனர். அவ்வாறு சென்றவர்களில் 60க்கும் மேற்பட்டோர் படகில் ஏறி காந்திபோச்சசமா கோயிலில் இருந்து அற்புதமான பாபி கொண்டலு மலைகளை சுற்றி பார்க்க புறப்பட்டு சென்றுள்ளனர். ஆற்றின் நடுவில் படகு சென்று கொண்டிருந்த போது எடை தாங்காமல் திடீரென படகு கவிழ்ந்துள்ளது. இந்தக் கோரவிபத்தில் படகில் இருந்த 61க்கு மேற்பட்ட…
-
- 0 replies
- 266 views
-
-
இலங்கை – மாலைதீவு பாராளுமன்றங்களை ஒருங்கிணைத்து செயற்படுவதன் மூலம் ஆலோசனை மற்றும் பங்களிப்பை பகிர்ந்துகொள்வது தொடர்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கும் மாலைதீவு சபாநாயகர் முஹம்மட் நசீட்டுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இன்று (09) மாலைதீவு பாராளுமன்றத்தில் நடைபெற்றது. சார்க் உயர்கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அங்கு பல்வேறு உயர்மட்ட கலந்துரையாடல்களில் கலந்துகொண்டார். நேற்று (08) மாலைதீவை சென்றடைந்த அமைச்சர் ரவூப் ஹக்கீமை அந்நாட்டுக்கான இலங்கைத் தூதுவர் ஏ.பி. தோரதென…
-
- 0 replies
- 274 views
-
-
மதமாவது ? மொழியாவது ? இந்தியாவில் உள்ள 130 கோடி மக்களும் இந்துக்கள் தான் !! அதிரடி ஆர்.எஸ்.எஸ். !! தெலுங்கானா மாநிலம் இப்ராகிம்பட்டினத்தில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் இரண்டு நாள் ‘விஜய சங்கல்ப சிபிரம்’ நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் , . “இந்தியா பாரம்பரியமாகவே ‘இந்துத்துவா’ நாடுதான்; அதனடிப்படையில் நாட்டின் 130 கோடி மக்களையும், அவர்களின் மதம் மற்றும் கலாச்சாரத்தைப் பொருட்படுத்தாமல் ‘இந்து சமூகம்’ என்றே ஆர்எஸ்எஸ் கருதுகிறது” என்று கூறினார். “ஆர்எஸ்எஸ் அமைப்பு ஒருவரை, ‘இந்து’ என்று அழைக்கும் போது, இந்தியாவை தங்கள் தாய்நாடாக கருதி அதை நேசிப்பவர்கள் என்றே அர்த்தம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். “பாரதத்…
-
- 0 replies
- 545 views
-
-
இஸ்லாமிய பயங்கரவாதமே உலகின் மிகப்பெரிய அச்சுறுத்தல் – ட்ரம்ப் இஸ்லாமிய பயங்கரவாதம்தான் உலகின் மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. இதில் இருந்து நாடுகளை பாதுகாக்க இணைந்து பணியாற்றுவோம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். இரண்டு நாள் விஜயமாக இன்று (திங்கட்கிழமை) இந்தியா வருகை தந்துள்ள ட்ரம்ப் அகமதாபாத் கிரிகெட் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், இந்தியாவிற்கு எப்போதும் உண்மையான நட்பு நாடாக அமெரிக்க விளங்கும் என உறுதியளித்தார். இந்தியாவை அமெரிக்க நேசிக்கிறது எனவும், இந்தியா மீது அமெரிக்க மதிப்புகொள்வதாகவும் தெரிவித்த ட…
-
- 0 replies
- 520 views
-
-
பங்களாதேஷ் விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக உயர்வு! டாக்காவின் மைல்ஸ்டோன் கல்லூரி மற்றும் பாடசாலை வளாகத்தில் பங்களாதேஷ் விமானப்படை பயிற்சி விமானம் மோதி இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் 25 பேர் சிறுவர்கள் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், விபத்தில் காயமடைந்த சிறுவர்கள் உட்பட 78 பேர் டாக்காவின் பல்வேறு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் ஐந்து பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்று தேசிய தீக்காயங்கள் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிறுவனத்தில் செவ்வாய்க்கிழமை (22) காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தலைமை சுகாதார ஆலோசகரின் சிறப்பு உதவியாளர் பேராசிரியர்…
-
- 1 reply
- 97 views
-
-
சத்தீஸ்கரில் எஸ்.பி.ஐ. பெயரில் போலி வங்கிக் கிளை நடத்திய கும்பல் - உண்மை வெளிப்பட்டது எப்படி? சத்தீஸ்கரில் உள்ள பன்பராஸ் கிராமத்தைச் சேர்ந்த ஜோதி யாதவ் கடந்த வாரம் வரை 'ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா - சப்போரா கிளை' என்றழைக்கப்பட்ட ஒரு வங்கிக் கிளையில் பணியாற்றி வந்தார். ஆனால், அது உண்மையில் வங்கியே இல்லை என்பதை அவரால் இன்னும் நம்ப முடியவில்லை. ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் அதிகாரிகள் சிலர் போலீஸாருடன் அந்த வங்கிக் கிளைக்கு வந்தபோதுதான், ஜோதிக்கு அந்த வங்கியின் நிர்வாகக் குழுவில் இருந்து, வங்கி ஊழியர்கள், தனது பணி நியமனக் கடிதம் என அனைத்தும் போலி என்பது தெரிய வந்தது. சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் இருந்து சுமார் 200கி.மீ. தொலைவில் உள்ள சக்தி மாவட்டத்தில் உள்ள சப்போரா கிராமத…
-
- 0 replies
- 83 views
-