Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. காலக்கெடு நிறைவு: கண்ணீருடன் விடைபெற்று அட்டாரி வழியாக நாடு திரும்பிய பாகிஸ்தானியர்கள்! 28 Apr, 2025 | 10:45 AM புதுடெல்லி: இந்தியாவில் தங்கியிருக்கும் பாகிஸ்தானியர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதற்கான காலக்கெடு நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் அட்டாரி வழியாக பாகிஸ்தானியர்கள் சொந்த நாட்டிற்குதிரும்பி சென்றனர். கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்.22) பஹல்காமில் நடந்த கொடூரத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட நிலையில் இந்தியாஇ பாகிஸ்தானியர்களுக்கான விசாக்களை ரத்து செய்வது உள்ளிட்ட முக்கிய முடிவுகளை எடுத்தது. அதன்படி சார்க் விசாக்கள் ஏப்.26ம் தேதி நிறைவடைந்தது. மற்ற விசாக்கள் . நேற்றுடன் முடிவடைந்தன.மருத்துவ விசாக்கள் மட்டும் ஏப்.29 ம் தேதி வரை செல்லுபடியாகும். இந்த முடிவுகளால் இரு நாடுகள…

  2. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மசூத் அசார் கட்டுரை தகவல் எழுதியவர்,ரெஹான் ஃபசல் பதவி,பிபிசி 9 மே 2025 ஐக்கிய நாடுகள் சபையால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட மசூத் அசார், முதன்முதலில் ஜனவரி 29, 1994 அன்று வங்கதேச விமானத்தில் டாக்காவிலிருந்து டெல்லிக்கு வந்தார். அவரிடம் போர்த்துகீசிய பாஸ்போர்ட் இருந்தது. இந்திரா காந்தி விமான நிலையத்தில் பணியில் இருந்த அதிகாரி ஒருவர் அவரைப் பார்த்து, "நீங்கள் பார்க்க ஒரு போர்த்துகீசியர் போல இல்லை" என்றார். மசூத் உடனே, "நான் குஜராத்தி பூர்வீகம் கொண்டவன்" என்றார். அதைக் கேட்ட பிறகு, அவரை மீண்டும் ஏறெடுத்துப் பார்க்காமல், பாஸ்போர்ட்டில் சீல் வைத்தார் அந்த அதிகாரி. இந்தியா வந்த சில நாட்களுக்குள், ஸ்ரீநகரின் தெருக்களில் உலாவத் தொடங்கினார் மச…

  3. கொரோனா வைரஸ்: ஊரடங்கை மீறி கோயில் தேர் இழுக்க கூடிய கூட்டம் இம்ரான் குரேஷி பிபிசி ANI கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க இந்தியா முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவை மீறி கர்நாடகாவின் கலபுரகி மாவட்டத்தில் உள்ள கோயில் ஒன்றின் தேர் திருவிழாவில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். கோவிட்-19 தொற்றுக்கு இந்தியாவில் நிகழ்ந்த முதல் மரணம் கலபுரகி மாவட்டத்தில்தான். அந்த மாவட்ட நிர்வாகம் தற்போது திருவிழா நடத்தப்பட்ட ரெவூர் கிராமத்தின் எல்லைகளை மூடி அதை தனிமைப்படுத்திவிட்டது. மேலும் சித்தபுர் தாலுகாவின் வட்டாச்சியர் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர், சமூக விலகளை மீறும் வகையில், தேர் திருவிழாவை தடுக்காமல் இருந்ததற்காக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். …

  4. நிரவ் மோடி, விஜய் மல்லையா உள்ளிட்ட 50 தொழில் அதிபர்களின் ரூ.68 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி - ரிசர்வ் வங்கி தகவல் பெங்களூருவைச் சேர்ந்த தொழில் அதிபர் விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றுவிட்டார். இதேபோல் வைர வியாபாரி நிரவ் மோடி, அவரது உறவினர் மெகுல் சோக்சி ஆகியோரும் பல வங்கிகளில் பணம் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிவிட்டனர். இது தவிர மேலும் பல தொழில் அதிபர்களும் பல்லாயிரம் கோடி ரூபாய் வங்கி கடனை திருப்பி செலுத்தாமல் உள்ளனர். இந்த வங்கி கடன் மோசடிகள் தொடர்பாக சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவும் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்து விசாரணை ந…

  5. இலங்கை நெருக்கடி நிலை இந்தியாவில் வருமா? கவலையில் கட்சிகள் - என்ன சொன்னார் ஜெய்சங்கர்? 19 ஜூலை 2022 இலங்கையில் தற்போது நீடித்து வரும் பொருளாதார நெருக்கடி இந்தியாவிலும் பிரதிபலிக்குமா என்று ஒப்பிடுவது தேவையற்றது என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இலங்கை விவகாரம் தொடர்பாக இந்திய நாடாளுமன்ற அனைத்து கட்சி தலைவர்களுடன் விவாதிப்பதற்காக சிறப்புக் கூட்டம் டெல்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த…

  6. பெண்கள் சந்திக்கும் பாலியல் அச்சுறுத்தல்கள்: பரிந்துரைகளை ஆராய புதிய குழு நியமனம்! பணியிடங்களில் பெண்கள் சந்திக்கும் பாலியல் அச்சுறுத்தல்களை களைவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளை வழங்க, மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவொன்று அமையப்பெறவுள்ளது என்னும் தகவல்கள் அண்மையில் வெளியாகியிருந்த நிலையில், நேற்று (புதன்கிழமை) இக் குழு அமைக்கப்பட்டு நடைமுறைக்கு வந்தது. இந்த குழுவில் பெண் அமைச்சர்களான நிர்மலா சீதாராமன், மேனகா காந்தி ஆகியோருடன், மத்திய போக்குவரத்துதுறை அமைச்சர் நிதின் கட்ஹரி இடம்பிடித்துள்ளார். முக்கிய அமைச்சர்களை உள்ளடக்கிய இக்குழு, ஏற்கனவே உள்ள பணியிடங்களில் பெண்களுக்கான ப…

  7. குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்றங்கள் புரிபவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கும் சட்ட திருத்தத்துக்கு ஒப்புதல் December 29, 2018 குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் புரிபவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கும் வகையில் போக்சோ சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்களுக்கு நேற்று வெள்ளிக்கிழமை மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பாலியல் வன்கொடுமைகளிலிருந்து குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்த மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்கொடுமைச் செயல்களில் ஈடுபடுவோருக்குக் கடுமையான தண்டனை விதிக்கும் வகையில் போக்சோ சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது எனத் தெரிவித்துள்ள…

  8. விமானியைத் தாக்கிய பயணி: டெல்லியில் பரபரப்பு. பனிமூட்டம் காரணமாக விமானம் தாமதமாக புறப்படும் என அறிவித்த விமானியை பயணியொருவர் தாக்கிய சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுடெல்லி, டெல்லி உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் கடுமையான பனிமூட்டம் நிலவி வருகின்றது. இதன் காரணமாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுவது மற்றும் தரையிறக்குவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் இருந்து கோவாவுக்கு புறப்பட இருந்த இண்டிகோ விமானம் பனிமூட்டம் காரணமாக தாமதம் ஆனது. பல மணி நேரம் விமானம் தாமதம் ஆனதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதற்கிடையே, விமானம் தாமதமாக புறப்படும் எ…

  9. சூடுபிடித்துள்ள நாடாளுமன்ற தேர்தல் களம் – தற்போதைய நிலைவரம்! இந்தியவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 542 பேரை தெரிவு செய்வதற்கான தேர்தல் நிறைவடைந்த நிலையில், தற்போது வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. இந்நிலையில், தற்போதைய நிலைவரப்படி 17 தொகுதிகளில் பா.ஜ.க 9 தொகுதிகளிலும், காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் முன்னிலை வகிப்பதுடன், மதசார்பற்ற ஜனதா தளம் ஒரு தொகுதியிலும் முன்னணி வகிக்கிறது. அத்துடன் சிவ சேனா ஒரு தொகுதியிலும், தேசியவாத காங்கிரஸ் ஒரு தொகுதியிலும், மிசோ தேசிய முன்னணி ஒரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கின்றன. http://athavannews.com/சூடுபிடித்துள்ள-நாடாளு-6/

  10. படத்தின் காப்புரிமை Getty Images முத்தலாக் மசோதா குறித்த விவாதம் இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் நடந்து முடிந்து வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 99 பேரும், எதிராக 84 பேரும் வாக்களித்த நிலையில் மசோதா நிறைவேறியது. இந்த மசோதா கடந்த வாரம் மக்களவையில் நிறைவேறிய நிலையில் மாநிலங்களவையில் இன்று வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் மசோதாவை வாக்கெடுப்புக்கு விடுவதாக முறைப்படி அறிவித்தார். இதையடுத்து அவைத் தலைவராக உள்ள துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு எதிர்தக் கட்சித் தலைவர் குலாம் நபி ஆச…

  11. பங்களாதேஷில் பாரிய தீ விபத்து: 15 ஆயிரம் வீடுகள் எரிந்து நாசம் – 50 ஆயிரம் மக்கள் பாதிப்பு! பங்களாதேஷில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 15 ஆயிரம் வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளன. பங்களாதேஷ் தலைநகர் டாக்காவிலுள்ள சாலண்டிகா குடிசைப் பகுதி ஒன்றிலேயே கடந்த வெள்ளிக்கிழமை இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பிளாஸ்டிக்கினால் வீடுகளின் கூரைகள் அமைக்கப்பட்டமை காரணமாக தீயினை கட்டுப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த பாரிய தீ விபத்து காரணமாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்களது வீடுகளை இழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு வீடுகளை இழந்தவர்கள் தற்போது வீதிகளில் தஞ்சமடைந்துள்ளதாகவும் பங்களாதேஷ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…

  12. காஷ்மீர் விவகாரம்: இந்திய அரசாங்கத்துக்கு எதிராக பாகிஸ்தானில் பேரணி காஷ்மீர் விவகாரத்தில் இந்திய அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாகிஸ்தானில் பேரணியொன்று நடத்தப்பட்டுள்ளது. ஜமாத், இஸ்லாமி என்ற கட்சியின் ஏற்பாட்டில் கராச்சி நகரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தப் பேரணி நடத்தப்பட்டுள்ளது. பேரணியில் பங்கேற்றவர்கள் காஷ்மீரை இந்தியாவில் இருந்து விடுவிக்க வேண்டும் எனவும், காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும் இந்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியுள்ளனர். குறித்த பேரணியில் 1000க்கும் மேற்கொண்டோர் பங்பேற்றிருந்தனர். காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அதிகாரத்தை கடந்த மாதம் 5ஆம் திகதி மத்திய அரசு இரத்து செய்தது. இதற்கு …

  13. இந்திய எதிர்ப்பை மீறி பாகிஸ்தானுக்கு கடன் வழங்க உலக வாங்கி தீர்மானம்! காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் பாகிஸ்தான் மோசமான சேதத்தை சந்தித்துள்ளமையினால் உலக வங்கியிடம் கூடுதல் கடன் தொகையை கோர பாகிஸ்தான் ஆலோசித்துள்ள நிலையில் பாகிஸ்தானுக்கு நிதி உதவி அளிப்பதை நிறுத்த வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தை இந்தியா அணுகியுள்ளது. இதனையடுத்து பாகிஸ்தானுக்கு கடன் உதவி வழங்குதல் தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் வாக்கெடுப்பு நடத்தியதுடன் இந்த வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியா, பாகிஸ்தானுக்கு நிதி அளிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தது. வழங்கப்படும் நிதியை பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்குதான் பயன்படுத்தும் எனவும் இந்தியா கண்டனம் தெரி…

  14. மகாராஷ்டிராவில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள எண்ணிக்கை 490 ஆக உயர்ந்துள்ளது. கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில் கரோனா தொற்று அச்சம் காரணமாக கடைகளுக்கு மருந்து உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக வந்த மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து வருகின்றனர். கடைகளுக்கு முன்பு உரிய வகையி்ல் மக்கள் இடைவெளி விட்டு நிற்கும் வகையில் வட்டங்கள் வரையப்ப…

  15. ஆப்கானிஸ்தான் எல்லை அருகே தற்கொலைத் தாக்குதல்; 7 பாகிஸ்தான் வீரர்கள் மரணம்! ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகே வெள்ளிக்கிழமை (17) நடந்த தற்கொலைத் தாக்குதலில் ஏழு பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக இஸ்லாமபாத் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். இஸ்லாமாபாத் – காபூல் இடையேயான பலவீனமான போர்நிறுத்தம் முன்னாள் நட்பு நாடுகளுக்கு இடையேயான கடுமையான மோதலை நிறுத்திய நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) உடன் தொடர்புடைய ஒரு தற்கொலை கார் குண்டுதாரி வடக்கு வசிரிஸ்தானின் மிர் அலியில் உள்ள பாதுகாப்புப் படை வளாகத்தில் மோதியதாகவும், துப்பாக்கிச் சண்டையில் மூன்று போராளிகள் கொல்லப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இந்த மிகப்பெரிய குண்டுவெடிப்பு அருகிலுள்ள வீ…

  16. சீனாவில் இருந்து மட்டும் வரவில்லை.. இந்தியாவில் பரவும் கொரோனா 3 வகையான கொரோனா சென்னை: இந்தியாவில் பரவும் கொரோனா வைரஸ் மொத்தம் 3 வகையை சேர்ந்தது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்கா, சீனா, ஈரானில் பரவும் கொரோனா வகை வைரஸ்கள் இந்தியாவிலும் பரவி வருகிறது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக மருத்துவர்கள் கூறுகிறார்கள். பொதுவாக இரண்டு வகையான வைரஸ்கள் உலகில் உள்ளது. ஒன்று டிஎன்ஏ வகை வைரஸ்கள், இன்னொன்று ஆர்என்ஏ வகை வைரஸ்கள் உள்ளது. இதில் டிஎன்ஏ வகை வைரஸ்கள் தன்னை உருமாற்றி தகவமைத்துக் கொள்ளாது. அதாவது ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவும் போது டிஎன்ஏ வகை வைரஸ்களில் எந்த விதமான மாற்றமும் இருக்காது. இதனால் டிஎன்ஏ வகை வைரஸ்களுக்கு எளித…

  17. பெங்களூருவின்`காட்பாதர்' மரணம்.. இறுதிச்சடங்கில் துப்பாக்கிச் சூடு சர்ச்சை -யார் இந்த முத்தப்பா ராய்?! ரியல் எஸ்டேட் பிசினஸில் இன்றைய தேதியில் கர்நாடகா மாநிலத்தையே கன்ட்ரோலில் வைத்திருப்பது முத்தப்பா ராய் தான். மனைவி ரேகா இறந்தபிறகு இன்னும் சாதுவாகி மகன்கள் ராக்கி மற்றும் ரிக்கியை இயக்கத்தில் வளர்த்துவிட்டு அந்திமக் காலத்தில் வள்ளல் அவதாரம் எடுத்தார். பெங்களூருவின் `காட்பாதர்' என்று அழைக்கப்பட்ட முத்தப்பா ராய் புற்றுநோய் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவருக்கு 68 வயது ஆகிறது. இவரது இறுதிச் சடங்களிலும் சர்ச்சை எழுந்துள்ளது. யார் இந்த முத்தப்…

  18. இந்திய ராணுவத்தில் பெண்களுக்கு சமநிலை உறுதியாகுமா? - நீதித்துறை தலையீடும் வழக்குகளும் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய ராணுவத்தில் நிரந்தர கட்டளை பணியில் சேர ஏதுவாக பெண்கள் தேசிய ராணுவ கல்லூரி மூலம் நிரந்தர கமிஷனில் சேர அனுமதிக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் இந்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கில் இன்று ஆஜரான இந்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டீ, "ஒரு நற்செய்தியை தெரிவிக்க விரும்புகிறேன். இந்திய முப்படை தளபதிகளும் அரசாங்கமும் நிரந்தர கட்டளை பணியில் பெண்களை நியமிக்க ஒப்புக் கொண்டுள்ளனர். தேசிய பாதுகாப்பு கல்லூரி மற்றும் கடற்படை …

  19. 1971 ஆம் ஆண்டு இந்திய - பாகிஸ்தான் போர் : இந்தியாவுக்கு சாதகமாக அதிகார சமநிலையை சாய்த்தது - சிவசங்கர் மேனன் 1971 ஆம் ஆண்டு இந்திய - பாகிஸ்தான் போர், பங்காளதேசத்தை உருவாக்கியது. துணைக் கண்டத்தில் இந்தியாவுக்கு ஆதரவாக அதிகார சமநிலையை சாய்த்தது. இவ்வாறான புறசூழலுக்கு மத்தியில் இருமுனைப் போரின் மூலம் இந்தியாவை அச்சுறுத்தும் திறனை பாகிஸ்தான் இழந்து விட்டதாக முன்னாள் வெளியுறவு செயலாளர் சிவசங்கர் மேனன் தெரிவித்துள்ளார். தனிநபர் வருமானம் மற்றும் மனித வளர்ச்சிக் குறிகாட்டிகளின் அடிப்படையில் இந்தியா மற்றும் பாகிஸ்தானை முந்தியதால் பங்களதேசம் இன்று வளர்ச்சி நாடாக உள்ளது. இந்திய துணைக் கண்டத்தில், இருமுனைப் போரின் மூலம் இந்தியாவை அச்சுறுத்தும் திறனை பாகிஸ்தா…

  20. நீட்: ராகுல், டி.ஆர். பாலு எழுப்பிய 'ஒன்றிய' பிரச்னை - "தமிழர்களை ஒருபோதும் ஆள முடியாது" 31 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SANSAD TV தமிழ்நாட்டில் கூட்டாட்சியை மதிக்காமல் மன்னர் போல மோதி அரசு செயல்படுவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். நீட் விவகாரத்தில் திரும்பத்திரும்ப வந்தும் தமிழ்நாட்டின் குரலை கேட்காமல் மத்திய அரசு அவமதிப்பதாக நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர். பாலு புகார் தெரிவித்தார். மக்களவையில் குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் உரை மீது ராகுல் காந்தி, டி.ஆர். பாலு இன்று இரவு பேசினார்கள். அப்போது ராகுல் காந்தி, தமிழ்நாட்டில் நீட் விவகாரம் …

  21. உக்ரைன்.... கீவ்வில், சிக்கியுள்ள மாணவர்களுக்கு இந்திய தூதரகம் வேண்டுகோள்! உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், அங்கிருக்கும் இந்திய மாணவர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு ரயில்களை பயன்படுத்தி மேற்குபகுதிக்கு செல்லுமாறு இந்திய தூதரகம் வலியுறுத்தியுள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ்வில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய தூதரகம் மேற்படி வலியுறுத்தியுள்ளது. மேற்கு பதிகள் பாதுகாப்பான பகுதிகளாக இருப்பதாகவும், அங்கு அத்தியாவசிய தேவைகள் தட்டுப்பாடின்றி கிடைப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. https://athavannews.com/2022/1269696

  22. ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கே சவால் விட்ட கிராமத்து பெண்கள்: பள்ளிக்கே செல்லாமல் வங்கி தொடங்கிய கதை கட்டுரை தகவல் எழுதியவர்,அம்ருதா துர்வே பதவி,பிபிசி மராத்தி 28 ஜனவரி 2023, 09:40 GMT புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் வங்கி என்பது அனைவருக்கும் பொதுவானது. ஆனால், பெண்களாகவே தொடங்கி, பெண்களுக்காகவே நடத்தப்படும், பெண்களுக்கு மட்டுமே கடன் வழங்கும் வங்கியைப் பற்றிக் கேள்விப்பட்டுள்ளீர்களா! அப்படியொரு வங்கி மகாராஷ்டிரா மாநிலத்தில் செயல்பட்டு வருகிறது. மான் தேஷி மகிளா கூட்டுறவு வங்கி என்ற பெயரில் செயல்பட்டு வரும் இந்த வங்கியைத் தொடங்கியது படிப்பறிவில்லாத…

  23. மேகாலயாவில் சுரங்கத்திற்குள் சிக்கியுள்ளவர்களை மீட்க தீயணைப்பு படை வீரர்கள் விரைவு December 29, 2018 மேகாலயாவில் ஏற்பட்ட சுரங்க விபத்தில் சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்பதற்குத் தேவையான 20 தீயணைப்பு படை வீரர்கள் அதிக அழுத்தம் கொண்ட பம்புகளுடன் ஒடிசாவிலிருந்து இந்திய விமானப் படையின் விமானத்தில் மேகாலயாவிற்கு விரைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு;ளளது மேகாலயாவில் ஏற்பட்ட சுரங்க விபத்தில் பதினைந்திற்கும் மேற்பட்ட சுரங்கத் தொழிலாளர்கள் சுரங்கத்தில் சிக்கி இரண்டு வாரத்திற்கும் மேல் ஆகியுள்ள நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை ஒடிசாவைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணிகளுக்காக சென்றுள்ளனர். இவர்கள் மிக உயரழுத்தம் கொண்ட பம்புகளை கொண்டு செல்வதால்,…

  24. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, புதிய ஏவுகணை சோதனையை நிகழ்த்தியுள்ளது பாகிஸ்தான். கட்டுரை தகவல் எழுதியவர், உமர் ஃபரூக், நியாஸ் ஃபரூக்கி பதவி, பிபிசி உருது 4 மணி நேரங்களுக்கு முன்னர் டிசம்பர் 27, 2023 அன்று பாகிஸ்தான் ஒரே சமயத்தில் பல ஏவுகணைகளை ஏவும் "ஃபதா 2" ராக்கெட் சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தி தொடர்புத்துறை (ஐஎஸ்பிஆர்) தகவல்களின்படி, இந்த ஏவுகணை 400 கிலோமீட்டர் வரை சென்று துல்லியமாக தாக்கக்கூடியது என்று கூறப்பட்டுள்ளது. முன்னதாக ஆகஸ்ட் 24, 2021 அன்று, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட "ஃபதா 1" ராக்கெட் பாகிஸ்தானில் சோதனை செய்யப்பட்டது. …

  25. பட மூலாதாரம்,GETTY IMAGES 4 மணி நேரங்களுக்கு முன்னர் அரசியல் கட்சிகளுக்கு பெயர் குறிப்பிடாமல் நிதி வழங்கும் தேர்தல் பத்திர நடைமுறை சட்ட விரோதமானது என்று உச்ச நீதிமன்றம் ஒருமித்த முறையில் தீர்ப்பு வழங்கியுள்ளது. தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்தது. தேர்தல் நடைமுறைகள் வெளிப்படையாக இருப்பதற்கு தேர்தல் நிதி தொடர்பான தகவல்கள் அவசியம் என்றும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. அரசியல் சட்டப் பிரிவு 19(1)(a)-இன் கீழ் தகவல் பெறும் உரிமைக்கு எதிரானதாக தேர்தல் பத்திர திட்டம் இருப்பதாகவும் நீதிபதிகள் கூறியுள்ளனர். நிறுவனங்கள் அளிக்கும் நன்கொடைகள் முழுக்க முழுக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.