Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இலங்கையின் அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள்- இந்திய முப்படைகளின் பிரதானி நேபாளத்திற்கு அறிவுரை நேபாளம் பிராந்தியத்தின் ஏனைய நாடுகளுடன் உடன்படிக்கை செய்துகொண்ட, இலங்கை உட்பட ஏனைய நாடுகளின் அனுபவங்களில் இருந்து பாடம் கற்கவேண்டும் என இந்திய முப்படைகளின் பிரதானி ஜெனரல் பிபின் ராவட் தெரிவித்துள்ளார். நேபாளம் சர்வதேச விவகாரங்களில் சுதந்திரமாக செயற்படலாம் ஆனால் பிராந்தியத்தின் ஏனைய நாடுகளுடன் உடன்படிக்கை செய்துகொண்ட இலங்கை உட்பட ஏனைய நாடுகளின் அனுபவங்களில் இருந்து பாடம் கற்கவேண்டும் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையிலான உறவு இமயமலை போன்று உயர்ந்தது என தெரிவித்துள்ள பி…

  2. ஐ.நா பாதுகாப்பு சபை கூட்டத்திற்கு இந்தியா தலைமையேற்றது! ஐ.நா பாதுகாப்பு சபை கூட்டத்திற்கு இந்தியா தலைமையேற்றுள்ளது. இதனையடுத்து ஐ.நா பாதுகாப்புச் சபைக் கூட்டத்துக்குத் தலைமையேற்கும் முதல் இந்தியப் பிரதமர் என்னும் பெருமையை நரேந்திர மோடி பெறுகிறார். ஐ.நா பாதுகாப்புச் சபையில் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய 5 நிலையான உறுப்பு நாடுகளும் மற்ற 10 உறுப்பு நாடுகளும் உள்ளன. பாதுகாப்பு சபைக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு உறுப்பு நாடு தலைமையேற்கும். இதன்படி ஒகஸ்ட் மாதத்திற்கு இந்தியா தலைமையேற்றுள்ளது. இந்தப் பதவிகாலத்தில் ஐ.நா பாதுகாப்புச் சபைக் கூட்டத்துக்குப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையேற்க உள்ளதாக ஐ.நாவுக்கான முன்னாள் இந்திய தூதர் சையது அக்பருத்தீன் தெ…

  3. கொரோனா அச்சுறுத்தல்- இந்திய விமானங்களுக்கான தடையை மேலும் நீடித்தது கனடா கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் தொடர்ந்து நீடித்து வருகின்றமையினால் இந்திய விமானங்களுக்கான தடையை கனடா மேலும் நீடித்துள்ளது. எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் திகதி வரை இந்திய விமானங்களுக்கான தடையை நீடித்துள்ளதாக அந்நாட்டு போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. இதேபோன்று இங்கிலாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளும் இந்திய விமானங்களுக்கு தடை விதித்துள்ளன. இதேவேளை அமெரிக்காவில் இருந்து இந்தியா செல்பவர்கள் 2 டோஸ் தடுப்பு மருந்து போட்ட பின்னர் செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. மேலும் பிரான்ஸும் இந்தியாவில் இருந்து வருபவர்கள் தங்களை குறிப்பிட்ட நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும…

  4. சைரஸ் மிஸ்திரி மரணம்: சாலை விபத்துகள் பற்றிய புள்ளி விவரங்கள் கூறுவது என்ன? 36 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, சைரஸ் மிஸ்திரி மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட சாலை விபத்தில் டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி உயிரிழந்தார். அவருக்கு வயது 54. அவரது மரணம் சாலை விபத்துகள் பற்றிய விவாதத்தை உருவாக்கியுள்ளது. அவரது கார் சாலை டிவைடர் மீது மோதியதில் விபத்து நடந்ததாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி செய்தி முகமை பிடிஐ தெரிவித்துள்ளது. சைரஸ் மிஸ்திரி தனது மெர்சிடிஸ் காரில் அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கு சென்று கொண்…

  5. பாகிஸ்தானில் மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த பாடசாலை அதிபருக்கு 105 ஆண்டுகள் சிறை : October 31, 2018 1 Min Read பாகிஸ்தானில் பாடசாலையில் 18 வயதுக்குட்பட்ட மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு ஒன்று தொடர்பில் பாடசாலை அதிபருக்கு 105 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் பெஷாவரை சேர்ந்த அத்தாவுல்லா மார்வத் என்பவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.18 வயதுக்குட்பட்ட மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்து அவற்றை ரகசியமாக வீடியோ எடுத்ததாக குற்றம் சுமத்தப்பட்டு அவர் கடந்த 2017-ம் ஆண்டு கைது செய்யப்பட்டிருந்தார். அவர் மீதான வழக்கு நீதிமன்றில் நடைபெற்று வந்தநிலையில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு வழக்…

  6. காந்தியின் குடும்பத்தைத் தவிர வேறு ஒருவரை தலைவராக்க முடியுமா? பிரதமர் மோடி சவால் காங்கிரஸ் கட்சியின் தலைவராக காந்தியின் குடும்பத்தைத் தவிர வேறு ஒருவரை குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு தலைவராக்கும் துணிவு இருக்கின்றதா என பிரதமர் மோடி சவால் விடுத்துள்ளார். சட்டீஸ்கர் சட்டப்பேரவைக்கு இரண்டாம் கட்டத் தேர்தல் நவம்பர் 20 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அங்கு நடைபெற்ற பா.ஜ.க. பேரணியில் கலந்து கொண்டு பிரதமர் மோடி அங்கு உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “குறைந்தது 5 ஆண்டுகளுக்காவது காங்கிரஸ் கட்சியின் தலைவராக காந்தியின் குடும்பத்தைச் சேர்ந்தவரைத் தவிர வேறு ஒருவரை நியமித்தால், ஜவகர்லால் நேரு உருவாக்கியது ஒரு ஜனநாயக அமைப்பு என்பதை நா…

  7. ஜமாத் – இ – இஸ்லாமி இயக்கத்திற்கு தடை March 1, 2019 இந்தியாவில் இருந்த பழைமையான தீவிரவாத இயக்கங்களில் ஒன்றான ஜமாத் – இ – இஸ்லாமி இயக்கத்தினை தடை செய்வதாக, இந்திய மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. புல்வாமாவில் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டதனையயடுத்து காஷ்மீரில் உள்ள தீவிரவாத இயக்கங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்துள்ள மத்திய அரசாங்கம் இவ்வாறு ஜமாத் – இ – இஸ்லாமி இயக்கத்தினை தடை செய்வதாக அறிவித்துள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை, இந்திய அரசாங்கம் நேற்று (28) விடுத்துள்ளது. 1941இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த இயக்கம், அரசியல் சார்ந்த இயக்கமென்றும் அபுல் அலா என்பவர் மூல…

  8. பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் உள்ள அடுக்குமாடிக் கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் இலங்கையர் உட்பட ஏழு பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளனர். டாக்காவில் பனானி பகுதியில் அமைந்துள்ள 22 மாடிகள் கொண்டு அடுக்குமாடி குடியிருப்புபொன்றிலேயே இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது. இதையடுத்து தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் இருந்து தப்பிக்க முயன்ற சிலர் மாடிகளில் இருந்து கீழே குதித்துள்ளனர். இதனால் படுகாயம் அடைந்த 5 பேர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில…

  9. மணிப்பூரில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 6 பேரின் உடல்களை கண்டெடுக்கப்பட்ட சில மணி நேரத்தில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் முதல்வர், எம்எல்ஏக்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். போராட்டக்காரர்கள், மாநில முதல்வர் பிரேன் சிங்கின் மருமகன் உட்பட ஆறு எம்எல்ஏக்களின் மூன்று பேரின் வீடுகளில் சூறையாடினர், சொத்துக்களை தீ வைத்து சேதப்படுத்தினர். இம்பால் நகரின் பல பகுதிகளில் போராட்டக்காரர்களை கண்ணீர் புகை குண்டு வீசி கலைத்ததாக போலீஸார் தெரிவித்தனர். போரட்டத்தைத் தடுக்கும் விதமாக ஐந்து மாவட்டங்களில் அரசு காலவரையற்ற ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. சில இடங்களில் இணையத் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் தலைமைச் செயலர் வினீத் ஜோஷ…

  10. ஜம்மு காஷ்மீர் மக்கள் பாதுகாப்பு சட்டத்தில் (J&K Public Safety Act) அம்மாநில முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா கைது செய்யப்பட்டிருப்பதற்கு மனித உரிமைகள் அமைப்பான அம்னஸ்டி கண்டனம் தெரிவித்துள்ளது. ஃபரூக் அப்துல்லா மீது இந்த சட்டத்தை ஏவியிருப்பது, இந்திய அரசு அப்பட்டமாக சட்டத்தை முறைகேடாகப் பயன்படுத்துவதை காட்டுவதாக அம்னஸ்டி தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது. காஷ்மீரில் நடந்துவரும் மனித உரிமை மீறல் நிகழ்வுகளின் தொடர்ச்சியாக இது நடந்துள்ளது என்றும் அது குறிப்பிட்டுள்ளது. "ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் வீட்டுச் சிறையில் உள்ள ஃபரூக் அப்துல்லா பொது ஒழுங்குக்கு குந்தகம் விளைவித்ததாக அவரது கைது ஆணை குறிப்பிடுகிறது. மாற்றம் வரும் என்ற வாக்குறுதிக்கு மாற்றாக, அரசிய…

  11. 28 APR, 2025 | 04:50 PM புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை ‘போராளிகள்’ என பிபிசி தனது கட்டுரையில் குறிப்பிட்டதற்கு கண்டனம் தெரிவித்து மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. “காஷ்மீர் மீதான கொடிய தாக்குதலுக்குப் பிறகு இந்தியர்களுக்கான விசாக்களை பாகிஸ்தான் நிறுத்தி வைத்துள்ளது” என்ற தலைப்பிலான கட்டுரையில் பயங்கரவாதத் தாக்குதலை “போராளித் தாக்குதல்” என்று பிபிசி குறிப்பிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் வெளி விளம்பரம் மற்றும் பொது ராஜதந்திரப் பிரிவு பிபிசியின் இந்தியத் தலைவர் ஜாக்கி மார்டினுக்கு கடிதம் எழுதியுள்ளது. அந்தக் கடிதத்தில் “பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான பிபிசியின் கட்டுரையில் “இந்திய நிர்வாகத்துக்கு உ…

  12. பட மூலாதாரம்,INDIAN NAVY கட்டுரை தகவல் ஜுஹல் ப்ரோஹித் பிபிசி செய்தியாளர், விசாகப்பட்டினத்தில் இருந்து 2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்திய கடற்படையில் ஐ.என்.எஸ். அர்னாலா கப்பல் இணைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்த கப்பல் நீருக்கடியில் செல்லும் நீர்மூழ்கிக் கப்பல்களை தாக்கும் திறன் கொண்டது. இந்திய கடற்படைக்கு மேலும் பலம் சேர்த்துள்ளது இக்கப்பல். இந்த கப்பல் குறித்து செய்தி சேகரிக்க பிபிசி இந்திக்கு அனுமதி கிடைத்தது. இருப்பினும், பாதுகாப்பு காரணங்களுக்காக கப்பலின் சில பகுதிகளுக்குள் எங்களுக்கு அனுமதி வழங்கவில்லை. இந்திய கடற்பாதுகாப்பு அமைப்பில் இந்த கப்பல் எத்தகைய பங்காற்றப் போகிறது என்பதை அறிந்து கொள்ள பிபிசி முயன்றது. இந்தியாவின் சர்வதேச வர்த்தகத்தில் 95% கட…

  13. கொரோனா பாதித்த டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றிய டாக்டர் தம்பதிக்கு வைரஸ் பாதிப்பில்லாமல் ஆரோக்கியமுடன் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. பதிவு: ஏப்ரல் 04, 2020 16:12 PM புதுடெல்லி, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வருபவருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனை அடுத்து அவர் புதிய தனி வார்டு ஒன்றுக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில் வைரஸ் பாதிப்பு உறுதியானது. அவசரகால பணிக்காக, அதே மருத்துவமனையில் மருத்துவரின் 9 மாத கர்ப்பிணி மனைவி பணியில் அமர்த்தப்பட்டு உள்ளார். கணவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட சில மணிநேரத்தில், மனைவிக்கும…

  14. 11,000 அடி உயர பகுதி.. முறுக்கிய மீசை, குளிருக்கு ஜாக்கெட்.. ராணுவ கூடாரத்தில் அமர்ந்து மோடி ஆலோசனை .! டெல்லி: லடாக் பகுதிக்கு இன்று காலை எந்தவித முன்னறிவிப்புமின்றி சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்கு ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறார். அது தொடர்பான புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தில் குளிருக்கு அணியும் ஜாக்கெட்டுடன், ராணுவ முகாமில் நடுநாயகமாக மோடி அமர்ந்துள்ளதை பார்க்க முடிகிறது. லடாக் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறும் முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்க கூடிய நிலையில் இன்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அங்கு நேரில் சென்று ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதாக இருந்தது. முன்னறிவிப்பு ஏதும் இல்லை…

  15. இலங்கையிலும் பா.ஜ.க.அரசாங்கத்தை அமைக்க திட்டமுள்ளது. இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு நேபாளத்திலும் இலங்கையிலும் பாரதிஜனதா அரசாங்கத்தினை அமைக்கும் திட்டமுள்ளது என திரிபுரா முதலமைச்சர் பிப்லாப் டெப் தெரிவித்துள்ள கருத்தினால் தற்போது சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு பிப்லாப் டெப் தெரிவித்ததாக ஈஸ்ட் மொஜொ தெரிவித்துள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த சனிக்கிழமை திரிபுராவிற்கு விஜயம் மேற்கொண்ட இந்திய உள்துறை அமைச்சர், இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வெற்றிபெற்ற பின்னர் பா.ஜ.க.விற்கு இலங்கையிலும் நேபாளத்திலும் அரசாங்கத்தை அமைக்கும் எண்ணமுள்ளது என குறிப்பிட்டார் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் இலங்கையிலும் நேபாளத்திலும் எங்களது கட்சி…

  16. உத்தரகண்ட் பனிச்சரிவு: `15 அணுகுண்டின் வேகத்தில் இருந்தது` - ஆய்வில் தகவல் பட மூலாதாரம், Getty Images கடந்த பிப்ரவரி மாதம் உத்தரகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில், இமய மலையில் இருந்து ஒரு பெரிய பனி படர்ந்த பாறை பெயர்ந்து பள்ளத்தாக்கில் விழுந்தது. இந்த பனிச்சரிவால் 200-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர், மேலும் அப்பகுதியில் கட்டுமானத்தில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான நீர் மின் நிலையமும் அடித்துச் செல்லப்பட்டது. இந்த பேரழிவை சில காணொளிகள் மூலம் நீங்கள் கண்டிருக்கலாம். 50 ஆராய்ச்சியாளர்களைக் கொண்ட ஒரு சர்வதேச குழு, இந்த பனிச்சரிவை முழுமையாக மதிப்பீடு செய்து என்ன நடந்தது என விரிவான விவரங்க…

  17. கொரோனா எதிரொலி : குழந்தை திருமணங்கள் அதிகரிப்பு! பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதன் காரணமாக குழந்தை திருமணங்கள் அதிகரித்துள்ளதாக அமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இது குறித்து அறிக்கையை நிலைக்குழு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. குறித்த அறிக்கையில், “பாடசாலைகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளமையால் மாணவர்களுக்கு மனரீதியான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெற்றோர்கள் குழுந்தைகள் உறவில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. சமூக ரீதியாக பெண் குழந்தைகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண் குழந்தைகளுக்கு திருமணம் நடப்பது அதிகரித்துள்ளது. ஆகையால் விரைவாக பாடசாலைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்துடன் அனைத்து மாணவர்களுக்கும் தடுப்பூசிபோடும் திட்டங்களை விரைவாக கொண்டுவர வேண்டும…

  18. புற்றுநோயின்... தலைநகராகும் வடக்கு, கிழக்கு மாநிலங்கள்! இந்தியாவின் வடக்கு கிழக்கு மாநிலங்கள் புற்றுநோயின் தலைநகரமாக மாறி வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும், நோய் தொடர்பான தேசிய தகவல் மற்றும் ஆய்வு மையமும் இணைந்து நடத்திய ஆய்வில் மேற்படி கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மருத்துவர் கலிங் ஜிராங், கடந்த 2020 ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு மாநிலங்களில் புற்றுநோயால் 50 ஆயிரத்து 317 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதில் 27 ஆயிரத்து 503 ஆண்களும், 22 ஆயிரத்து 814 பெண்களும் உள்ளடங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த பாதிப்பு 2025 ஆம் ஆண்டுவரை அங்கு தொடரும் எனக் கருதப்படுவதாக தெரிவ…

  19. அக்னி-5 ஏவுகணை பரிசோதனை வெற்றியடைந்துள்ளதாக அறிவிப்பு! கண்டம் விட்டு கண்டம் தாண்டி இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் அக்னி -5 ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை பரிசோதனை ஒடிசா அருகில் உள்ள அப்துல் கலாம் தீவில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது. இந்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பான DRDO வடிவமைத்துள்ள இந்த ஏவுகணை அணு ஆயுதங்களை சுமக்கக் கூடியவையாகும். அருணாச்சல் உள்ளிட்ட கிழக்கு எல்லையில் சீன இராணுவ நடவடிக்கைகளை அதிகரித்துள்ள நிலையில், குறித்த ஏவுகணை பரிசோதனை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1247151

  20. இந்தியாவிற்கு... அழுத்தம் கொடுக்க, உலகில் எந்த சக்தியும்... இல்லை – பியுஷ் கோயல் இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்க உலகில் எந்த சக்தியும் இல்லை என மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்தார். உலக வர்த்தக அமைப்பின் 12வது அமைச்சர்கள் மாநாட்டில் பேசிய அவர், கொரோனா காலத்தில் ஏழை நாடுகளை காக்க உலக வர்த்தக அமைப்பு தவறிவிட்டதாக குற்றம் சாட்டினார். இந்நிலையில் தற்சார்பு இந்தியா திட்டத்திற்கு யாராலும் அழுத்தம் கொடுக்க முடியாது என்றும் இதனால் ஏற்படும் சவாலை எதிர்கொள்ள இந்தியா தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார். இதேவேளை மீனவர்களுக்கான மானியத்தை குறைப்பதற்கான உலக வர்த்தக அமைப்பின் முன்மொழிவுக்கு பியூஷ் கோயல் எதிர்ப்பும் வெளியிட்டார். https://athavannews.…

  21. உலகின் மிகப்பெரிய சுற்றுலா திட்டம் இன்று ஆரம்பம்! உலகின் மிகப்பெரிய சுற்றுலா திட்டமாக கருதப்படும் ‘கங்கா விலாஸ் சொகுசு கப்பல் சுற்றுலா’வை பிரதமர் மோடி இன்று கொடியசைத்து ஆரம்பித்து வைக்கவுள்ளார். அத்துடன் கூடார நகரத்தையும் திறந்துவைக்கவுள்ளார். இந்த நிகழ்ச்சியின்போது, ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, பல்வேறு உள்நாட்டு நீர்வழி திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கிவைத்து, புதிய திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டவுள்ளார். இந்த சொகுசு கப்பல் வாரணாசியில் தொடங்கி 51 நாட்கள் பயணித்து அசாமின் திப்ருகர் வழியாக, பங்களாதேஷ் சென்றடையும். மூன்று தளங்கள், 18 அறைகள் கொண்ட இந்த கப்பலில், 36 சுற்றுலாப் பயணிகள் வரை பயணிக்க முடியும். வாரணாசியின் ரவிதாஸ் படித்துறையில் இர…

  22. ஐ.நா. மனித உரிமைகள் சபையின் புதிய உறுப்பினராக இந்தியா தெரிவு! ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபையின் புதிய உறுப்பினராக இந்தியா இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது. ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்காக நேற்று (வெள்ளிக்கிழமை) நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 188 அதிக வாக்குகளை பெற்று இந்தியா உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியா எதிர்வரும் 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்கு சபையில் அங்கத்துவம் வகிக்கும். 193 அங்கத்துவ நாடுகளை கொண்ட ஐ.நா. சபையில், மனித உரிமைகள் சபைக்கான புதிய அங்கத்தவர்களை தெரிவுசெய்வதற்கான தேர்தல் நடத்தப்பட்டது. இதன்போது 18 புதிய உறுப்பினர்கள் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் தெரிவுசெய்யப்பட்டனர். சபைக்கு தெரிவ…

  23. 31 MAR, 2024 | 10:51 AM ஏப்ரல், மே மாதங்களில் இயல்பை விட அதிக வெப்பநிலை எதிர்பார்க்கப்படுவதாகவும், வெப்ப அலை வீசக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அடுத்த மாதம் முதல் கோடை காலம் தொடங்கும் நிலையில், தற்போதே வெயிலின் தாக்கம் அதிகமாகிக் கொண்டே உள்ளது. இதனால் நீர் நிலைகளில் நீரின் அளவு குறைந்து வருகிறது. வெயிலின் தாக்கத்தால் அருவிகளும் வறண்டே காணப்படுகின்றன. மேலும், பகல் நேரத்தில் அதிகரித்துள்ள வெயிலின் தாக்கம் இரவு நேரங்களிலும் எதிரொலிக்கிறது. இதனால், மின்சாரத்தின் பயன்பாடு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் மின் நுகர்வு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஏப்ரல், மே மாதங்களில் இயல்பை விட அதிக வெப்பநிலை எதிர்பா…

  24. Published By: RAJEEBAN 07 AUG, 2024 | 11:11 AM பங்களாதேஸின் இடைக்கால தலைவராக ஷேக் ஹசீனாவின் நீண்ட கால அரசியல் எதிராளியும் நோபல் பரிசுபெற்றவருமான முகமட் யூனுஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஹசீனா பங்களாதேசிலிருந்து வெளியேறியுள்ள நிலையிலேயே 84 வயது யூனுஸ் நியமிக்கப்பட்டுள்ளார். யூனுஸ் தனது நுண்கடன் திட்டங்களிற்காக சர்வதேச அளவில் வரவேற்பை பெற்றவர் அதற்காக நோபால் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது. எனினும் ஹசீனா அவரை பொதுமக்களின் எதிரி என கருதினார்,யூனுஸ் தற்போது ஆறு மாத பிணையில் விடுதலையாகியுள்ளார். ஹசீனாவை பதவியிலிருந்து வெளியேற்றுவதற்காக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட மாணவர்கள் யூனுசின் பெயரை முன்மொழிந்திருந்தனர். …

  25. 7.4 கிலோ எடை கொண்ட சிறுநீரகத்தினை வெற்றிகரமாக அகற்றி மருத்துவர்கள் சாதனை! டெல்லியைச் சேர்ந்த ஒருவருக்கு 7.4 கிலோ எடையில் இருந்த சிறுநீரகம் அகற்றப்பட்டுள்ளது. டெல்லியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியரின் இடது சிறுநீரகம் வழக்கத்தை விட பெரிதாக இருந்தது பரிசோதனை மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. அதை அகற்ற மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டதில் 7.4 கிலோ எடை கொண்ட சிறுநீரகம் அகற்றப்பட்டது. நாட்டிலேயே முதல்முறையாகவும் உலகிலேயே மூன்றாவது அதிக எடை கொண்ட சிறுநீரகம் என்ற சிறப்பை இது பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://athavannews.com/7-4-கிலோ-எடையில்-சிறுநீரகம்/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.