நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3030 topics in this forum
-
நிமோனியா என்றால் என்ன? முதல் அறிகுறி எது? சிகிச்சைகள் என்ன? கட்டுரை தகவல் எழுதியவர்,மயங்க் பகவத் பதவி,பிபிசி மராத்திக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES நவம்பர் 12ஆம் தேதியான இன்று உலக நிமோனியா தினம் கடைபிடிக்கப்படும் நிலையில், நிமோனியா என்றால் என்ன, அதன் அறிகுறிகள் மற்றும் அதற்கான சிகிச்சைகள் என்ன என்பதை விளக்கமாகப் பார்க்கலாம். பூஞ்சை அல்லது பாக்டீரியா, வைரஸ் ஆகியவற்றின் காரணமாக நுரையீரலில் ஏற்படும் தொற்று நிமோனியா என்று அழைக்கப்படுகிறது. பேச்சுவழக்கில் இது ப்ளூரிசி என்றும் அழைக்கப்படுகிறது. நிமோனியா சுவாச நோயாகவும் அறியப்படுகிறது. …
-
- 0 replies
- 260 views
- 1 follower
-
-
தினமும் நாம் பல வகையான உணவுகளை உட்கொள்கிறோம். இவற்றிலுள்ள சத்துகள், புரதம் போன்றவற்றை கணக்கில் எடுத்துக்கொள்ளும் நாம், அவற்றை எந்த எவ்வளவு சாப்பிடவேண்டும் என்பதை கணக்கிடுவதில்லை. நாம் சாப்பிடும் உணவின் அளவை நினைவில் வைத்துக்கொளவது என்பது கடினமான ஒன்று. சத்தான உணவுகளுக்கும் பாஸ்புட்களுக்கு மத்தியில் நாம் பல நேரங்களில் அகப்பட்டுக்கொள்ளக் காரணம், அவற்றிலிருந்து தேர்வுசெய்ய நமக்கு பல வாய்ப்புகள் உள்ளது என்பதே. ஆக, எந்த உணவை எவ்வளவு சாப்பிட வேண்டும்? உணவிற்கான அளவு என்ன? உங்களின்…
-
- 0 replies
- 515 views
-
-
ஒரு நபர் ஒரு வேளை குடிக்கக்கூடிய அளவுக்கு இஞ்சிப்பால் செய்யறது எப்படி? ஆள்காட்டி விரல் பருமனில் சிறிது துண்டு இஞ்சியை எடுத்துத் தோலைச் சீவிக்கணும். தோல் சீவிய இஞ்சித்துண்டை நல்லா நசுக்கிட்டு, பிறகு முக்கால் குவளை தண்ணீர் எடுத்து அதில் நசுக்கிய இஞ்சியை போட்டு நல்லா கொதிக்க விடணும். தண்ணீரில் சாரம் முழுவதும் இறங்கி விடும். பிறகு வடிகட்டி சாரை எடுத்துக் கொள்ளணும். அப்புறம் அரைக் குவளை காய்ச்சிய பால் எடுத்துக்கொண்டு அத்துடன் வடிக்கட்டிய சாரத்தை கலந்து கொள்ளணும். அத்துடன் தேவையான அளவில் தேன் அல்லது பணங்கற்கண்டு அல்லது சர்க்கரை இனிப்புச் சுவைக்காக சேர்த்துக்கணும். அவ்வளவுதான். இஞ்சிப்பால் தயார். இந்த இஞ்சிப் பாலை காலையில வெறும் வயிற்றில் குடிக்கனும். அட. இப…
-
- 0 replies
- 1k views
-
-
பட மூலாதாரம்,PERSONAL FILE 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஒரு முக்கியமான பயணம் செய்வதற்கு ஆயத்தம் ஆகிக் கொண்டிருந்ததால், பயணத்திற்கு முந்தைய நாள் ‘Facial’ எனப்படும் அழகு சிகிச்சை செய்துகொள்வதற்காக பார்லருக்கு சென்றார் டையானே லிமா என்ற 27 வயது பெண். ஆனால் அந்த ‘Facial’ தனக்கு மிகப்பெரும் உதவி செய்யப்போகிறது என்பதை அப்போது அவர் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டார். ஏனெனில் முகப்பொலிவுக்காகச் செய்யப்படும் அந்த அழகு சிகிச்சை, டேயின் லிமாவிற்கு அவர் தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதை அறிந்துகொள்ள உதவியது. எப்படி தெரியுமா? முகப்பொலிவுக்காக அவ்வபோது ‘Facial’ செய்துகொள்ளும் வழக்கம் உடையவர் லிமா. அந்த வகையில் 2022ஆம் ஆண…
-
- 0 replies
- 390 views
- 1 follower
-
-
உங்கள் நவீன கைத்தொலைபேசிகளை காற்சட்டை பொக்கட்டுக்குள் பதுக்கி வைக்கிறீர்களா.. பெரும்பாலன ஆண்கள் செய்வது இதையே.. என்பதால்.. இதனை தொடர்ந்து படியுங்கள். மொபைல் போன்களில் இருந்தான கதிர்ப்புக்களின் தாக்கம் காரணமாக விந்தணுக்களின் இயங்கும் ஆற்றல் குறைவடைவதாக ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. இருப்பினும்.. இந்த ஆய்வுகள் இன்னும் கூடிய திருத்தமாக செய்யப்பட்ட வேண்டும் என்று பிற விஞ்ஞானிகள் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களின் தரம் குறைவாக இருப்பதாகக் கூறி மறுதலித்துள்ளனர். It analysed 10 separate studies on sperm quality involving 1,492 men. These included laboratory tests on sperm exposed to mobile phone radiation and questionnaires of men at fertility clinics. Lead res…
-
- 0 replies
- 527 views
-
-
இந்து தமிழ்: 'இன்ஹேலரில் ஆல்கஹால்' இன்ஹேலரில் ஆல்கஹால் இல்லை. வாகன சோதனையின் போது குடித்திருந்ததாக காட்டாது. எனவே, பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர் என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி. "நடிகையும், பாஜக இளைஞரணி நிர்வாகியுமான காயத்ரி ரகுராம் கடந்த வாரம் குடிபோதையில் கார் ஓட்டி வந்ததாக அடையாறு போக்குவரத்து போலீஸார் அபராதம் விதித்தனர். இச்சம்பவம் திரையுலகிலும், அரசியலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் 'காமதேனு' வார இதழுக்கு காயத்ரி ரகுராம் அளித்த பேட்டியில், "எனக்கு இருக்கும் வீஸிங் பிரச்சனைக்காக இன்ஹேலர் அடித்திருந…
-
- 0 replies
- 878 views
-
-
கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 26 ஜூலை 2024 புதுப்பிக்கப்பட்டது 21 நிமிடங்களுக்கு முன்னர் தமிழர் உணவு மரபில் ‘பழைய சோற்றுக்கு’ எப்போதும் தனித்த இடம் உண்டு. சர்வதேச அளவில் பழைய சோறு விளைவிக்கும் நன்மைகள் குறித்த ஆய்வுக் கட்டுரைகள் வந்துள்ளதை அண்மைக் காலமாகக் காண முடிகிறது. பழைய சோறு உள்ளிட்ட நொதித்த உணவுகள் நம் உடலுக்கு வழங்கும் நன்மைகள் என்ன? அவை எப்படி நம் உடலுக்குள் செயலாற்றுகின்றன? நொதித்த உணவுகள் என்பது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES பாக்டீரியா மற்றும் ஈஸ்ட் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஸ்டார்ச் மற்றும் சர்க்கரை …
-
- 0 replies
- 885 views
- 1 follower
-
-
காசநோய் உலகெங்கும் மீண்டும் வேகமாகப் பரவி வருகிறது. கொழும்பு மாவட்டதிலிருந்து மாத்திரம் வருடாவருடம் 2000 புதிய காச நோயாளர்கள் கண்டுபிடிக்கப்படுகிறார்கள். ஏனைய மாவட்டங்களில் இருந்து வருடாவருடம் 10,000 புதிய காச நோயாளர்கள் கண்டுபிடிக்கப்படுவதாக அறியப்படுகிறது. யாழ்ப்பாணத்திலும் குறைவில்லை. போரில் குண்டுத்தாக்குதல்கள் ஏராளமாக நடந்த காரணத்தால் அந்த விசக் காற்றுகளினால் பல விதமான சுவாச நோய்களுக்கு வடக்கு கிழக்கு மாகாண மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். முக்கியமாக வன்னி மக்கள் மோசமாக ஆட்பட்டிருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. இந் நிலையில் காச நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் யாழ் சுகாதாரப் பகுதியின் காசநோய் ஒழிப்புப் பிரிவு மருத்துவ அதிகாரியான டொக்…
-
- 0 replies
- 769 views
-
-
தோல் புற்றுநோயால் உயிரிழக்கும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு 1985 ஆம் ஆண்டு முதல் அபிவிருத்தியடைந்த நாடுகளில் தோல் புற்றுநோயால் உயிரிழக்கும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் குறைந்துள்ளதாகவும் கிளாஸ்க்கோவில் நடைபெற்ற மருத்துவ மாநாட்டில் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 30 ஆண்டுகளில் அயர்லாந்து மற்றும் குரோஷியாவில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளதுடன் ஸ்பெயினிலும், இங்கிலாந்திலும் 70 சதவிகிதமும், நெதர்லாந்தில் 50 சதவிகிதமும் பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்தில் 60 சதவிகிதமும் அமெரிக்காவில் 25 சதவிகிதமும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரிய ஒளியிலிருந்து ஆண்கள் தம்மை பாதுகாப்பதற்…
-
- 0 replies
- 296 views
-
-
பெண்ணின் இதயத்தில் தோட்டா: ஆறு மாதங்களுக்குப் பிறகு மீட்ட மருத்துவரின் அசராத முயற்சி மொஹம்மத் ஜுபைர் கான் செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TWITTER/PTIOFFICIAL படக்குறிப்பு, மருத்துவமனை ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையை இணைக்கும் மாகாணமான கைபர் பக்தூங்க்வாவில் பெண்ணின் இதயப்பகுதியில் துளைத்த தோட்டாவை பல மாத முயற்சிக்குப் பிறகு மீட்டுள்ளார் அங்குள்ள மருத்துவர் ஒருவர். மிகவும் நுட்பமான அந்த அறுவை சிகிச்சை அனுபவத்தை பிபிசியிடம் விளக்கினார் அம்மருத்துவர். "ஒரு பெண் நோயாளியின் திறந்த நெஞ்சுப்பகுதியில் குண்டு இருக்கும் இடத்தை நாங்க…
-
- 0 replies
- 587 views
- 1 follower
-
-
ஒரு குழந்தையை பெற்றெடுக்க ஒரு தாய் எவ்வளவு பாடுபடுகிறாள் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. குழந்தையை நல்ல படியாக வளர்க்க தன் உயிரை கொடுத்து சிரத்தை எடுக்கிறாள். மகப்பேறு விடுப்பு முடிந்து வேலைக்கு திரும்பும் பாலூட்டும் தாய்களுக்கு ஒரு நடுக்கம் இருந்தே தீரும். ஏனென்றால் பலவற்றை சமாளிக்க வேண்டும். ஆனால் கவனமாக திட்டமிட்டால், இந்த மாற்றங்கள் சீராக இருக்கும். குழந்தை பெற்றப் பின் அலுவலகம் செல்வது பாலூட்டும் தாய்களுக்கு ஒரு சவாலான விஷயமே. குழந்தை பெற்றப் பின் சீக்கிரமே வேலைக்கு செல்வதினால் ஏற்படும் சங்கடங்கள் ஏராளம். அவைகளில் சில, குழந்தையை பிரிய வேண்டிய கவலை, அவர்களுக்கு தேவைப்படும் வேளையில் அவர்களுடன் இருக்க முடியாமல் போவதால் ஏற்படும் குற்ற உணர்வு போன்றவைகள். மகப்பேறு …
-
- 0 replies
- 1.5k views
-
-
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்கும் என்ற நம்பிக்கையில் மக்கள் முகக் கவசங்களை போட்டிபோட்டு வாங்கும் நிலையில், கண்கள் வழியாகக் கூட உடலுக்குள் நுழையக் கூடிய வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இருமல், தும்மல் இருந்தால் மட்டுமே மாஸ்க் அணியுங்கள், மாஸ்க் அணிவது, அடிக்கடி கை கழுவும் பழக்கம் இரண்டையும் சேர்த்து பின்பற்றும்போதுதான் பயன் கிடைக்கும், ஆரோக்கியமான நபர்கள், கொரோனா தொற்று உள்ள நபரை கவனித்துக் கொள்வதாக இருந்தால் மட்டுமே மாஸ்க் அணிந்தால் போதும் என வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர். மாஸ்க்குகள் பாதுகாப்பு கவசமாக செயல்படும் என்றே ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன, ஆனால் மாஸ்க் அணிந்து ஊருக்குள் சுற்றிவருபோது அதனால் பெரிய பயன்கள் ஏதுமில்லை, அதாவது அறைகளில்…
-
- 0 replies
- 306 views
-
-
மருத்துவக் கட்டுரை - தற்கொலை முயற்சி டாக்டர் ஜி.ஜான்சன் மன தைரியம் இல்லாதவர்களும் வாழ்கையில் விரக்தியுற்றவர்களும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு தங்களின் உயிரை தேவையில்லாமல் மாய்த்துக் கொள்கின்றனர்.இது மிகவும் பரிதாபமானது.முக்கியமாக காதலில் தோல்வி, தேர்வில் தோல்வி, கணவன் மனைவிக்கிடையே தகராறு போன்ற காரணங்களால் நம் இனத்தில் அதிகமானோர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவது நாம் அறிந்ததே! அதோடு நீங்கள் கேட்டுள்ளது போல் மன நோயும் ஒரு முக்கிய காரணமே. தற்கொலை ஆண்களிடம் 2 சதவிகிதத்தினரிடமும் பெண்களிடம் 1 சதவிகிதத்தினரிடமும் பொதுவாக நிகழ்கிறது . இது வயது அதிகரிக்கும்போது மேலும் அதிகமாகிறது. உதாரணமாக 60 வயதைத் தாண்டிய பெண்களிடையேயும், 70 வயதைத் தாண்டிய ஆண்களிடையேயும் தற்கொலை முயற்சகள் …
-
- 0 replies
- 627 views
-
-
-
தினமும் உடற்பயிற்சி, சாப்பாட்டிலும் கட்டுப்பாடு...ஆனாலும் உடல் பெருக்கிறதே ? டியர் டாக்டர் "தினமும் உடற்பயிற்சி, சாப்பாட்டிலும் கட்டுப்பாடு...ஆனாலும் உடல் பெருக்கிறதே?" ''தற்போது ப்ளஸ் டூ முடித்திருக்கும் மாணவி நான். சமீப காலமாக எனது உடல் எடை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உடல் எடையை கட்டுக்குள் கொண்டுவர, தினமும் ஒரு மணி நேரம் வியர்த்து விறுவிறுக்க விளையாடுகிறேன். மேலும், சாப்பாட்டின் அளவையும் குறைத்துவிட்டேன். இருந்தும் என் உடல் எடை குறையவில்லை. இன்னும் கொஞ்ச நாளில் கல்லூரி வாசலை மிதிக்க இருக்கும் எனக்கு இந்த…
-
- 0 replies
- 1.6k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கர்ப்ப கால நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், தைராய்டு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு மருத்துவ உலகம் முக்கியத்துவம் அளித்து வருகிறது. ஆனால், கர்ப்ப காலத்தில் இதய நோய்களுக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என நிபுணர்கள் முன்பு கூறிவந்தனர். இந்நிலையில், இதய நோய்கள் உள்ள கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் இறப்பதைத் தடுக்கும் வகையில், இதுகுறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும் என, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் கடந்த ஏப்ரல் மாதம் தெரிவித்தது. சில மாதங்களுக்கு முன் தமிழ்நாட்டில் 23 வயதான கர்ப்பிணி ஒருவர் பிரசவத்தின் போது இதய செயலிழப்பால் உயிரிழந்தார். முன் கூட்டியே அவர் இதய குறைபாட்டை கண்டறிந்திருந்தால் இற…
-
- 0 replies
- 1.1k views
- 1 follower
-
-
-
20 ஆண்டுகள் கூடுதலாக உயிர்வாழ வைக்கும் மாத்திரையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மனிதர்களின் ஆயுளை நீடிக்க வகை செய்யும் ஆய்வுகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளனர். பாலூட்டி இனங்களில் உள்ள 'சிர்ட்6' (எஸ்.ஐ.ஆர்.டி.6) என்ற மரபணு நோய்களை உருவாக்காமல் நீண்ட நாட்கள் வாழ வைக்க கூடியது என கண்டுபிடித்துள்ளனர். எனவே அந்த மரபணுவை தூண்டி செயல்பட வைக்க கூடிய புதிய மாத்திரையை கண்டு பிடித்து அதை எலிக்கு செலுத்தினர். அதை தொடர்ந்து அந்த எலி 18 சதவீதம் அதிக நாட்கள் உயிர்வாழ்ந்தது. இதே முறையை மனிதர்களிடமும் பயன்படுத்த முடிவு செய்துள்ளனர். வயதாகும் காலத்துக்கு முன்பு அதாவது இளமையிலோ அல்லது நடுத்தர வயதாகும் போதோ இந்த மாத்திரையை பயன்படுத்துவதன் மூலம் 20 வருடங்கள் கூடுதலாக உய…
-
- 0 replies
- 513 views
-
-
பழங்கள் உடலுக்கு நேரடியாக சத்துக்களைக் கொடுக்கும் தன்மை கொண்டவை. பழங்களில் உள்ள உயிர் சத்துக்களான வைட்டமின்கள், தாதுப் பொருட்கள் உடலுக்கு வலுவூட்டுகின்றன. இதில் உள்ள நார்ச்சத்துகள் குடலுக்கு நல்லது. பழங்காலத்தில் மனிதர்கள் பழங்களையே உணவாக உண்டு வந்தனர். அதனால் நோய்களின் தாக்கம் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்ந்தனர்.இவை மலைப் பகுதிகளில் விளையக் கூடியவை. இது மாதுளம் பழத்தைப் போன்ற தோற்றத்தில் இருக்கும். இந்தப்பழத்தின் தோல் பகுதி தடிமனாக இருக்கும். இப்பழத்தின் தோல் பகுதியை உடைத்தால் மூன்று அல்லது நான்கு சுளைகள் இருக்கும். சுளைகள் இளஞ்சிவப்பு, வெள்ளை நிறத்தில் இருக்கும். மலேசியா, மியான்மர், இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் அதிகம் விளைகிறது. தென்னிந்தியாவ…
-
- 0 replies
- 510 views
-
-
[size=4]இந்தியாவில் கோடிக் கணக்கானோர் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு ஆரம்ப கட்டம் முதல் முற்றிய நிலை வரை உள்ளதாக தெரிய வந்துள்ளது. ஆண்டுக்கு ஆண்டு இது அதிகரித்து வருவதாகவும், வியாதி முற்றிய நிலையில் சிறுநீரகம், செயலிழப்பு ஏற்பட்டு அவர்களுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுவதாகவும் ஒரு தகவல் கூறுகிறது. பெரும்பாலானவர்களுக்கு சிறுநீரக வியாதிகள் இருப்பது நோய் முற்றிய நிலையில்தான் அவர்களுக்கு தெரிய வருகிறது. சிறு நீரக வியாதிகளை பல்வேறு பரிசோதனைகள் மூலம் ஆரம்பத்திலே கண்டுபிடித்தால் அவற்றை குணப்படுத்துவதும் கட்டுப்படுத்துவதும் மிக எளிது என்கிறார் பிரபல சிறுநீரக மருத்துவ நிபுணர் டாக்டர் ஜெயச்சந்திரன். சிறு நீரகம் பற…
-
- 0 replies
- 7.3k views
-
-
மருந்து மாத்திரைகளினால் நீரிழிவு நோயை முழுமையாக கட்டுப்படுத்த முடியாது என பிரித்தானிய மற்றும் அமெரிக்க மருத்துவ விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கம் மற்றும் உடற்பயிற்சி ஆகியனவே நீரிழிவு நோயை கட்டுப்படுத்தக் கூடிய சிறந்த வழிமுறைகள் என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். மருந்து மாத்திரைகளைப் பயன்படுத்துவதன் மூலம் நீரிழிவு நோயிலிருந்து முழுயைமாக விடுபட முடியாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 9000 பேரிடம் இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மருந்துகளை உட்கொள்வதனால் எதிர்காலத்தில் இருதய நோய் ஏற்படுவதனை தடுக்க முடியும் என்ற கருத்திலும் உண்மையில்லை எனக் குறிப்பிடப்படுகிறது. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும் அ…
-
- 0 replies
- 660 views
-
-
ஆரோக்கியமான உணவு பட்டியலில் அவகேடோவும் ஒன்று. 25க்கும் மேற்பட்ட ஊட்டச்சத்துக்கள் அவகேடோவில் அடங்கியுள்ளன. இதில் உள்ள சத்துக்கள் நோயின் பிடியிலிருந்து நம்மைக் காக்கின்றன. ஹெல்தி ஹார்ட் வைட்டமின் பி6, ஃபோலிக் ஆசிட் மற்றும் ஒலியிக் அமிலம் (oleic acid) ஆகியவை இதயத் தொடர்பான நோய்கள் வருவதைத் தடுக்கின்றன. மேலும், இந்தச் சத்துக்கள் இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. குறையும் கொழுப்பின் அளவு பீட்டா சிடோஸ்டெரால் (beta sitosterol) அதிகளவில் உள்ளதால் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை இந்தப் பழம் வெகுவாகக் குறைக்கும். ஹைபர்கொலஸ்ட்ரொலெமியா (Hypercholesterolemia) என்ற நோயின் ஆரம்பக் கட்டத்தில் இருக்கும் ஒருவர், 7 நாட்கள் தொடர்ந்து அவகேடோவை சாப்பிட்டு வந்தால், அ…
-
- 0 replies
- 667 views
-
-
கொவிட் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தொடர்பான ஒரு சிறப்பு கண்டுபிடிப்பை அமெரிக்க ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. அந்த நோயாளிகளில் மூளை அல்லது நுரையீரலில் இரத்தக் கட்டிகள் மற்றும் சோர்வு உள்ளிட்ட அறிகுறிகளைக் காட்டலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொவிட் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 1,837 பேரைப் பயன்படுத்தி இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த நோயாளிகளில் 16% பேர் குறைந்தது ஆறு மாதங்களுக்கு சிந்திக்கவோ, கவனம் செலுத்தவோ அல்லது நினைவில் வைத்துக் கொள்ளவோ சிரமப்பட்டுள்ளனர் என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/271560
-
- 0 replies
- 393 views
- 1 follower
-
-
கொசுவர்த்தி சுருள் மற்றும் திரவ வடிவிலான மருந்து ஆகியவை உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை என்று மருத்துவ நிபுணர்கள் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தபோதிலும், ஒரு கொசுவர்த்தி சுருளிலிருந்து வரும் புகையை சுவாசிப்பது 100 சிகரெட்டு புகையை சுவாசிப்பதற்கு சமமானது என்று தற்போது நடத்தப்பட்டுள்ள புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. மலேசியாவில் உள்ள இருதய ஆராய்ச்சி அறக்கட்டளை ஒன்று நடத்திய ஆய்விலேயே இந்த அதிர்ச்சியான தகவல் தெரியவந்துள்ளது. "கொசுவர்த்தி சுருளின் ஆபத்தை மக்களில் ஏராளானமானோர் உணராமலேயே உள்ளனர். ஆனால் இந்த கொசுவர்த்தி சுருளிலிலிருந்து வரும் புகை நுரையீரலை வெகுவாக பாதிக்கிறது. அதாவது ஒரு கொசுவர்த்தி சுருளின் புகை, 100 சிகரெட்டை புகைப்பதினால் ஏற்படும் பாதிப…
-
- 0 replies
- 902 views
-
-
முறையற்ற உணவுப்பழக்கம், உடல் பருமன் போன்றவற்றினால் பெண்களுக்கு இதயநோய் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. அவர்கள் மீன் உணவுகளை உண்பதன் மூலம் இதயநோயில் இருந்து தப்பிக்கலாம் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. 15 முதல் 49 வயதுவரை உடைய 49000 பெண்களிடம் இது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் இதயநோய் பாதிக்கப்பட்டவர்களும் பங்கேற்றனர். அவர்களுக்கு வாரம் 3 நாட்களுக்கு மீன் உணவு கொடுக்கப்பட்டது. அவர்களின் உடல்நிலை குறித்து பின்னர் கேள்வி கேட்கப்பட்டது. அதில் மீன் உணவு உட்கொண்டவர்களுக்கு இதயநோய் பாதிப்பு குறைந்தது தெரியவந்தது. ஒமேகா கொழுப்பு அமிலம் மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது ரத்தத்தில் உள்ள கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. கெட்ட கொழுப்பு ரத்தநாள…
-
- 0 replies
- 551 views
-