நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3014 topics in this forum
-
'அசிடிட்டி' எனப்படும் வயிற்றில் ஏற்படும் அமில சுரப்பு பிரச்சனையால், அவதியுறுவோர் ஏராளம்! குறிப்பாக உறைப்பு அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளை உண்ட பின்னர் இத்தகையோருக்கு நெஞ்செரிச்சல் போன்றவை ஏற்படுவது அதிகம். இவற்றை தடுப்பதற்கும், குணப்படுத்துவதற்கான எளிய வழிகள் இதோ! பாட்டில்களில் அடைக்கப்பட்ட பானங்கள் மற்றும் காஃபின் பொருட்களை அறவே தவிர்த்துவிட்டு, அதற்கு பதிலாக மூலிகை தேனீர் அருந்தலாம். மேலும் தினமும் வெதுவெதுப்பான வெந்நீர் ஒரு டம்ளர் அருந்தலாம். தினசரி உணவில் வாழைப்பழம், தர்பூசணி, வெள்ளரி போன்றவற்றை கட்டாயம் சேர்த்துக்கொள்ளவேண்டும். இளநீர் அருந்தினால் இன்னமும் நல்லது.அது அமிலசுரப்பு பிரச்சனையை தீர்க்கும். தினமும் ஒரு டம்ளர் பால் அருந்துவதும் நல்லதுத…
-
- 0 replies
- 10.8k views
-
-
வைரஸ் பரவும் போதெல்லாம் மக்கள் முகத்துக்கு சர்ஜிக்கல் மாஸ்க் அணிந்து மூடிக் கொள்ளும் படங்களைப் பார்ப்பது வழக்கமாகிவிட்டது. நோய்த் தொற்று பரவாமல் தடுப்பதற்கு அவற்றைப் பயன்படுத்துவது உலகம் முழுக்க பல நாடுகளில் இது வழக்கமாகிவிட்டது. சீனாவில் அதிகமான மாசுபாட்டில் இருந்து காத்துக் கொள்வதற்காக பலர் இதை அணிந்து வந்த சூழ்நிலையில், இப்போது கரோனா வைரஸ் பரவும் ஆபத்தில் இருந்து காத்துக் கொள்வதற்காக அதிகமானோர் இதைப் பயன்படுத்துகின்றனர். காற்றில் வரும் வைரஸ் பரவுவதைத் தடுக்க இது எந்த அளவுக்கு திறன்மிக்கதாக இருக்கும் என்று வைரஸ் ஆராய்ச்சியாளர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். கைகளில் இருந்து வாய் மூலமாக தொற்று பரவாமல் தடுப்பதில் இந்த முகத்திரைகள்…
-
- 0 replies
- 297 views
-
-
இன்றைக்குக் குளிர்பானம் என்ற பெயரில் கலர் கலராகச் செயற்கை பானங்கள் நம் முன்னே தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கின்றன. இவை நம் உடல்நலத்தை வறட்சியாக்குவது மட்டுமன்றி, நாம் வாழும் நிலத்தையும் வறளச் செய்கின்றன. இந்தச் செயற்கை குளிர்பானங்களைத் தவிர்த்தாக வேண்டும். தண்ணீரைவிடவும் சிறப்பாகத் தாகம் தணித்த இயற்கை தந்த கொடையான இளநீர்தான், அக்கால முதன்மைக் குளிர்பானம். வெயில் காலத்துக்கு ஏற்ற, பல நோய்களைப் போக்கும் தன்மை கொண்ட இளநீரையும் நுங்கையும் கோடை முழுவதும் உட்கொள்வது சிறந்தது. சத்துக் களஞ்சியம் கேளி இளநீர், அடுக்கிளநீர், செவ்விளநீர், கருவிளநீர், மஞ்சள் கச்சி, ஆயிரங்கச்சி, குண்டற்கச்சி எனப் பல வகையான இளநீர் பற்றிய பாடல் குறிப்புகள் உள்ளன. ஒவ்வொரு வகையான இளநீருக்கும் …
-
- 0 replies
- 770 views
-
-
டூத்பிரஷில் வாழும் 12 மில்லியன் நுண்ணுயிர்கள் - கடைசியாக எப்போது மாற்றினீர்கள்? பட மூலாதாரம், Getty Images 7 மணி நேரங்களுக்கு முன்னர் நமது கழிப்பறைகளிலிருந்து வரும் பாக்டீரியாக்கள், வாய்ப்புண்களை ஏற்படுத்தும் வைரஸ் மற்றும் பூஞ்சைக் காளான்களை உருவாவதற்கானவை. இவை நமது பற்தூரிகைகளில் (toothbrush) செழித்து வளரும். ஆனால் உங்கள் பற்தூரிகைகளை சுத்தமாக வைத்திருக்கவும் பல வழிகள் உள்ளன. கிருமிகள் நிறைந்த மினியேச்சர் அமைப்பாக உங்கள் பற்தூரிகை மாறியிருக்கலாம். அதிலுள்ள தூரிகைகள் வறண்ட புதர் நிலம் போன்று மாறிவிடுகின்றன. இவை நாள்தோறும் தற்காலிகமாக தண்ணீரில் மூழ்கி, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஈரநிலமாக மாற்றப்படுகிறது. உயரமான பிளாஸ்டிக் தண்டுகளின் உச்சியில் இருக்கும் புதர்களுக்கு மத்தியில…
-
- 0 replies
- 119 views
- 1 follower
-
-
கொரோனாவைப் பற்றி நிறைய செய்திகள் வந்த வண்ணமாக இருக்கின்றன. இதற்கு அடுத்தபடியாக வரும் செய்தி நோய் எதிர்ப்பு சக்தியைப் பற்றிதான். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களைத் தான் கொரோனா அதிகம் பாதிக்கிறது என்றும், ஆனால் நோய் எதிர்ப்பு சத்தியை எப்படி அதிகப்படுத்துவது என்பது பற்றி கட்டுரைகள் அதிகம் வெளிவரவில்லை. ஆகையால் பலர் இதைப்பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள். எளிய உணவு முறைகளினாலும், உடற்பயிற்சியினாலும் மற்றும் சில வழிமுறைகளினாலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும். கொரோனா குழந்தைகளைக் தாக்குவது மிகவும் குறைவே. அதற்கு முக்கிய காரணம் அப்பருவத்தில் உள்ள அதிகமான நோய் எதிர்ப்பு சக்திதான். பிறந்த குழந்தைகளுக்கு கொட…
-
- 0 replies
- 526 views
-
-
தூரப் பார்வையால் அவதிப்படுபவர்களுக்கு விடிவுகாலம் வந்து விட்டது. கண்ணாடி கான்டாக்ட் லென்ஸ் லேசர் சிகிச்சை எதுவும் வேண்டாம். புதுமையான முறையில் தீர்வுகாண வழி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் கண் ஆராய்ச்சி மையம் இந்த முயற்சியில் வெற்றி கண்டுள்ளது. 551 இளைஞர்களிடம் டி.என்.ஏ. பரிசோதனை செய்யப்பட்டது. இவர்களில் குறிப்பிடத்தக்க அளவில் தூரப்பார்வையால் பாதிக்கப்பட்டவர்களும் அடங்குவர். பாதிக்கப்பட்டவர்களும் இயல்பானவர்களுக்கும் இடையே உள்ள டி.என்.ஏ. வேறுபாடுகளை ஆராய்ந்ததில் தூரப்பார்வைக்கான ஜீன்கள் இனம் காணப்பட்டன. இவற்றுக்கு ஹெபாடோசைட் குரோத் பேக்டர் (எச்.ஜி.எப்) என்று பெயரிடப்பட்டு உள்ளது. இதையடுத்து தூரப் பார்வைக்கு தீர்வு காண முடியும் என்று டாக…
-
- 0 replies
- 668 views
-
-
சர்க்கரை வியாதியை கட்டுக்குள் வைத்திருக்கும் போது சாதாரணமாக கர்ப்பம் பாதிக்கப்படுவதில்லை. கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை வியாதியின் போது சர்க்கரைக்காக கருக்கலைப்பு செய்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லாமலே கருச்சிதைவுகள் அதிகரிக்கின்றன. சர்க்கரை வியாதியால் கண் பார்வை மங்குதல், சிறுநீரக கோளாறு முதலியன ஏற்பட்டாலொழிய கருக்கலைப்பு செய்யத் தேவையில்லை. சர்க்கரையால் கர்ப்பச் சன்னியின் முன் நச்சு மூன்று மடங்கிற்கும் மேலாகக் காணப்படுகிறது. அவற்றை உரிய காலத்தில் பக்குவமாக கவனிக்கத் தவறிவிட்டால் இளஞ்சிசு மரண விகிதம் கூடிவிடலாம். சர்க்கரை வியாதியினர் 20 முதல் 30 விழுக்காடு பேருக்கு பனிநீர்ப் பெருக்கம் எற்படுகிறது. இவர்களுக்கு பிள்ளைப் பேறு கடினமாகலாம். அறுவைகள்…
-
- 0 replies
- 552 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சிஃபிலிஸ் குணப்படுத்த முடியாத ஒன்று என்று மக்கள் தவறாக நினைக்கிறார்கள் கட்டுரை தகவல் எழுதியவர், க்ருபா பதியால் பதவி, பிபிசி நியூஸ் 28 ஜூலை 2023 சிஃபிலிஸ்(syphilis) என்பது மிகவும் பழமையான, பாலுறவின் மூலம் பரவும் நோய்த்தொற்றுகளில் ஒன்றாகும். ஒரு காலத்தில் சரிவைச் சந்தித்ததாகக் கருதப்பட்ட அது, இப்போது அபாயகரமான விகிதத்தில் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. 1490 களில் சிஃபிலிஸ் அதன் முதல் பதிவிலிருந்து பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. அவற்றில் "பிரெஞ்சு நோய், நியோபோலிடன் நோய், போலந்து நோய்" என்ற பெயர்களும் அடக்கம். …
-
- 0 replies
- 379 views
- 1 follower
-
-
ஆறுமணி நேரத்துக்கு மேல் கம்ப்யூட்டரை பார்க்கிறீர்களா? கண்ணீர் சுரப்பி பத்திரம்..! வேலைமேல் கவனம் குவிந்து போய் இருக்கும் நேரத்தில் வேறெதுவும் நம் நினைவுக்கு வராது. கண்கள் கணினி திரையின்மீது பதிந்திருக்கும். மூளை சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருக்கும். இமைக்காமல் உற்றுப் பார்த்து, சாப்பாட்டைக்கூட மறந்து, இருந்த இடத்தை விட்டு எழும்பாமல் போராடி கொண்டிருப்போம். வேலை முடியட்டும்; மேலாளர் பாராட்டட்டும்; சம்பள உயர்வு கிடைக்கட்டும். ஆனால், உடல்நலம்? நாள்தோறும் ஆறு மணி நேரத்துக்குமேல் கணினிதிரையை பார்த்தபடி, வாரத்துக்கு ஐந்து நாள்கள் வேலை செய்யும் மென்பொருள் துறையை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களிடம் ஒரு கணக்கெடுப்பு செய்யப்பட்டது. 22 முதல் 40 வயது வரையிலான அவர்…
-
- 0 replies
- 577 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சுசீலா சிங் பதவி, பிபிசி செய்தியாளர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் மருத்துவ ஆய்விதழான `லான்செட்` சமீபத்தில் வெளியிட்டிருந்த ஓர் அறிக்கைப்படி, உலகம் முழுவதும் ப்ரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்படும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 2020ஆம் ஆண்டில் ப்ரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 லட்சமாக இருந்தது. இது 2040ஆம் ஆண்டில் 29 லட்சமாக அதிகரிக்கும் என்று லான்செட் அறிக்கை கூறுகிறது. மொத்தம் 112 நாடுகளில் உள்ள ஆண்களுக்கு இது பொதுவான பிரச்னை என்றும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 15% பேர் ப்ரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக…
-
- 0 replies
- 629 views
- 1 follower
-
-
இருதயம் மனித உறுப்புகளில் மகத்தான பங்கான பங்காற்றுகிறது. 24 மணிநேரமும் உறங்காமல் இயங்குவதால்தான் நம்மால் நிம்மதியாக உறங்கி எழுந்து அன்றாட பணிகளை செய்யமுடிகிறது. நமக்கான அயராது உழைக்கும் இதயத்தின் ஆரோக்கியத்தைப் பற்றி நாம் கவலைப்படுவதில்லை. கண்டதையும் சாப்பிடுகிறோம். தேவையற்ற பாரங்களை மனதில் ஏற்றிக்கொள்கிறோம் விளைவு இருதயம் நோய்க்கு ஆளாகிவிடுகிறது. மாரடைப்பு ஏற்பட்டு இருதயத்திற்கு இடைஞ்சல் என்றால் மட்டுமே நாம் அதைப்பற்றி கவலைப்படுகிறோம். [size=4] [/size] [size=4]உலகில் ஏற்படும் உயிரிழப்புகளில், இருதய நோயால் ஏற்படும் இறப்புகள் தான் அதிகம் என்று உலக சுகாதார நிறுவன ஆய்வு தெரிவிக்கிறது. ஆண்டுதோறும் 1 கோடியே 73 லட்சம் பேர் இறக்கின்றனர். மலேரியா, எச்.ஐ…
-
- 0 replies
- 665 views
-
-
மது குடிப்பதற்கும் ஏழு வகையான புற்றுநோய்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.உடல்கூறியல் ரீதியான காரணங்கள் தெளிவாக இல்லாவிட்டாலும், `அடிக்ஷன்' என்ற மருத்துவ சஞ்சிகையில் வெளியான ஆராய்ச்சி முடிவுகளின்படி, மதுகுடிப்பதற்கும் புற்றநோய் ஏற்படுவதற்கும் நேரடித் தொடர்பு இருப்பதாக முடிவுகள் தெரிவிக்கின்றன.மது குடிப்பதால், வாய், தொண்டை, குரல்வளை, உணவுக்குழாய், கல்லீரல், பெருங்குடல், சிறுகுடல் மற்றும் மார்பகம் ஆகிய பகுதிகளில் புற்றுநோய் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனின் தலைமை மருத்துவ அதிகாரி கடந்த ஜனவரி மாதம் இதுகுறித்து கூறுகையில், எந்த அளவு மது குடித்தாலும், அது தொடர் பழக்கமாக இருக்கும் நிலையில், ஆபத்தில்லா…
-
- 0 replies
- 353 views
-
-
ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் அல்லது எவர்ஸில்வர் என்றழைக்கப்படும் உலோகப் பாத்திரங்கள் இந்தியச் சமையலறைகளில் இன்று பெருமளவு இடம் பிடித்திருக்கின்றன. முப்பது நாற்பதாண்டுகளுக்கு முன்பு அங்கு இருந்தவை செப்பு, பித்தளை, இரும்பு, மண் பாத்திரங்கள். இவற்றில் பழைய சம்பிரதாயங்களை விடாமல் கைப்பிடிக்கும் குடும்பங்களில் குடிநீரை செப்புப் பாத்திரங்களில் (குடங்கள்) வைத்திருப்பார்கள். அவை சுத்தம் செய்யச் சிறிது உழைப்பு தேவைப்படுபவை. ஆற்றுப் படுகையில் நீர் சேந்தி வர வேண்டிய வேலையைச் சிறுமிகளும், சிறுவர்களும் மேற்கொள்ளுவர். ஆனால் கூட வரும் அம்மாக்களும், அத்தைமாரும், புளியைப் போட்டு அந்தக் குடங்களைத் தேய்த்துக் கழுவிப் பொன் போல மின்ன வைத்த பின்னரே அவற்றில் நீர் சேந்தப்படும். அவை ஏன் செப்புப் பாத்திரங்…
-
- 0 replies
- 2k views
-
-
சுஷீலா சிங் பிபிசி செய்தியாளார் அனில் (பெயர் மாற்றப்பட்டது) சுமார் 11-12 வயதாக இருக்கும்போது மிகவும் கோபம் வந்தபோது தனது தாயை அடித்துவிட்டார். அனிலின் இந்த நடத்தையை அவரது தாய் பார்ப்பது இது முதல் முறையல்ல. முன்பும் அவர் கோபத்தில் பொருட்களை எடுத்து வீசுவார், மேலும் தம்பியை தள்ளவோ அல்லது அறையவோ செய்வார். சில நேரங்களில் கட்டுப்படுத்த கடினமாக இருக்கும் அளவுக்கு அவரது நடத்தை கட்டுமீறியதாக மாறியது. நண்பர்களுடன் சண்டை மற்றும் அடிதடிகள் பற்றிய புகார் பள்ளிக்கூடத்திலிருந்தும் வந்து கொண்டேயிருந்தது. அதே நேரத்தில், அவரது மனநிலையின் மற்றொரு தோற்றமும் காணப்பட்டது. அவர் முழுமையாக …
-
- 0 replies
- 460 views
-
-
நம் உடல் உறுப்புக்களின் காலங்கள்.... உடற்கடிகாரம்!!! இந்த அண்டவெளியில் எல்லாமே கால ஒழுங்கிலேயே இயங்குகின்றன. அவ்வாறே நம் உடலும் இயங்குகின்று. காலம் தவறினால் காலன் நெருங்கிடுவான் என்பார் நம் முன்னோர் (இயற்கையே கடவுள்). நமது உடல், ஒவ்வொரு உடல் பாகத்திற்கென தனித்தனியே கடிகாரத்தின் அலாரத்தைப் போன்று உடற்கடிகாரம் முன்பதிவு செய்து கொண்டு சுழன்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு உறுப்புக்கும் அதன் பணியைச் செய்து முடிக்க இரண்டு மணிநேரம் ஒதுக்கியுள்ளது. இரண்டு மணி நேரம் முடிந்ததும் மீண்டும் அலாரத்தை அடுத்த உறுப்புக்கு மாற்றி விடுகிறது. விடியற்காலை 3.00 மணிமுதல் 5.00 மணிவரை நுரையீரலின் நேரம். இந்த நேரத்தில்சுவாசப் பயிற்சி செய்து காற்றின் மூலம் வரும் பிராண சக்தியை உடலுக்…
-
- 0 replies
- 710 views
-
-
30 வயசுதான் ஆச்சு. அதுக்குள்ள ஹார்ட் அட்டாக்காம்', 'நல்லாத்தான் பேசிட்டிருந்தார். திடீர்னு மைலடு அட்டாக்' இப்போதெல்லாம் இப்படியான உரையாடல்களை அடிக்கடி கேட்க நேரிடுகிறது. ஹார்ட் அட்டாக் என்பது எங்கோ, எப்போதோ, யாருக்கோ என்று இருந்த நிலை மாறிவிட்டது. இதயம் காப்பது என்பது இன்று எல்லோருக்கும் மிக முக்கியம். ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 29ம் தேதி உலக இதய தினமாகக் கொண்டாடப்படுகிறது. உலகின் நம்பர் 1 உயிர்க்கொல்லியாக இருக்கும் இதய நோய் பற்றிய போதிய விழிப்புஉணர்வு இல்லை.ஆண்டுதோறும் 1.73 கோடி பேர், உலகம் முழுவதும் இதய நோயால் உயிர் இழக்கின்றனர். 2030ம் ஆண்டில் இது 2.3 கோடியாக உயரும் என்று எச்சரிக்கின்றனர். இந்த உயிர் இழப்புகளைத் தவிர்க்க முடியும். இதயத்தில் ஏற்படும் பிரச்னைகள், காரணங…
-
- 0 replies
- 4.4k views
-
-
காலை உணவோடு தினமும் முட்டை சாப்பிட்டால் உடலை கட்டுக்குள் வைத்திருக்கலாம் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கனெக்டிகட் பல்கலைக்கழக உணவுத்துறை, உடல் எடை அதிகம் கொண்டவர்களின் உணவில் முட்டையின் பங்கு என்ன என்பது குறித்து விரிவான ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. உடல் பருமன் கொண்டவர்களுக்கு காலை உணவில் முட்டையை வேக வைத்துக் கொடுக்கப்பட்டது. இதனால் உடலில் தெம்பு அதிகரித்து, சுறுசுறுப்பு ஏற்பட்டதோடு நீண்ட நேரம் வயிறு நிறைந்திருக்கும் உணர்வு ஏற்பட்டது. இதன் மூலம் அவர்களுக்கு மதிய உணவு, மாலை டிபன் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளும் அளவு குறைந்தது. உணவின் அளவு குறைந்ததினால் உடலின் கலோரிகளின் அளவும் குறைந்தது. இதனால் அவர்களின…
-
- 0 replies
- 546 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 9 மணி நேரங்களுக்கு முன்னர் சருமத்தை வெளுப்பாக்கும் சில க்ரீம்களில் அதீதமான அளவில் பாதரசம் இருப்பதால், அவை சிறுநீகர பாதிப்புகளை ஏற்படுத்துவதாக தற்போது வெளிவந்துள்ள ஆய்வுக் கட்டுரை ஒன்று தெரிவிக்கிறது. எதனால் இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது? சருமத்தின் நிறத்தை வெளுப்பாக்குவதற்காகப் பயன்படுத்தப்படும் சில க்ரீம்களில் பாதரசம் போன்ற நச்சு உலோகங்கள் இடம்பெற்றிருப்பது சிறுநீரகத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதாக சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. சிறுநீரகம் தொடர்பான ஆய்விதழான Kidney Internationalல் "NELL-1–as…
-
- 0 replies
- 469 views
- 1 follower
-
-
அமர்ந்தே இருப்பது ஆபத்து, ஏன்? கு.கணேசன் கொரோனா பெருந்தொற்று எப்போது பரவத் தொடங்கியதோ, அப்போதிருந்தே நம் அன்றாட வாழ்வியலில் பல மாற்றங்களைக் கண்கூடாகக் காண்கிறோம். ஊரடங்கில் வெளியில் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தபோது, ‘இணையவழி வணிக’த்தில் இறங்கினோம். அதை இப்போதும் கைவிட முடியாமல் கஷ்டப்படுகிறோம். இருந்த இடத்தில் இருந்துகொண்டே கைபேசி பொத்தானைத் தட்டி, வீட்டுக்குத் தேவையான ஊறுகாயிலிருந்து ஸ்மார்ட் போன், டிவி வரை எல்லாவற்றையும் வரவழைத்துவிடுகிறோம். கடைக்கு நடந்து செல்வதைக் குறைத்துக்கொண்டோம். மற்ற வேலைகளுக்கும் தெருவில் இறங்க வேண்டிய தேவை குறைந்துபோனது. கொரோனா காலத்தில் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப முடியாமல், கைகளில் கைபேசியைக் கொடுத்து, ‘இணைய…
-
- 0 replies
- 405 views
-
-
'கொலஸ்டிரால் நண்பனா? எதிரியா?' என்னும் இக்கட்டுரை 'அருஞ்சொல்' இதழில் கு. கணேசன் அவர்களால் எழுதப்பட்டிருக்கின்றது. பலருக்கும் பலதும் ஏற்கனவே தெரிந்த தகவல்கள் தான், ஆனால் இலகுவான ஒரு நடையில் இதை எழுதியிருக்கின்றார். நல்ல ஒரு வாசிப்பாக அமையலாம். *********** கொலஸ்டிரால் நண்பனா? எதிரியா? (கு.கணேசன், 07 Jul 2024) -------------------------------------------------------------------------------------------- இன்றைய ‘உடல் பருமன்’ யுகத்தில், நாற்பது வயதைக் கடந்த ஆண், பெண் இருபாலரையும் அதிகம் அச்சுறுத்தும் வார்த்தை இதுதான். கெட்ட கொழுப்பு, நல்ல கொழுப்பு, எல்டிஎல், ஹைச்டிஎல்… என அவரவருக்குத் தெரிந்த பெயர்களில் குழப்புவார்கள். நீங்கள் ‘தேவர் மகன்’ வடிவேலுபோல் ஒ…
-
- 0 replies
- 483 views
-
-
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, Rh பூஜ்ய வகை ரத்தம் உலகில் 50 பேருக்கு மட்டுமே இருப்பதாக அறியப்பட்டுள்ளது. கட்டுரை தகவல் ஜாஸ்மின் ஃபாக்ஸ் ஸ்கெல்லி பிபிசி 14 நவம்பர் 2025, 04:52 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலகில் 60 லட்சம் பேரில் ஒருவருக்கு மட்டுமே ஆர்.எச் பூஜ்ய (Rh null ) ரத்த வகை உள்ளது. இப்போது ஆராய்ச்சியாளர்கள் உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கையில் அதை ஓர் ஆய்வகத்தில் உருவாக்க முயற்சிக்கின்றனர். ரத்தமாற்று சிகிச்சை நவீன மருத்துவத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நாம் எப்போதாவது காயமடைந்தாலோ, அல்லது பெரிய அறுவை சிகிச்சை தேவைப்பட்டாலோ, மற்றவர்களால் தானம் செய்யப்பட்ட ரத்தம் நம் உயிரைக் காப்பாற்றும். ஆனால் அரிய வகை ரத்தம் …
-
- 0 replies
- 177 views
- 1 follower
-
-
`லாக்டௌனில் அஜீரணமா? இந்த உணவுகள் எல்லாம் வேண்டாம்!' - டயட்டீஷியன் வழிகாட்டல் முட்டை, மீன், இறால், நண்டு உள்ளிட்ட அசைவ உணவுகளை நன்றாகச் சுத்தம் செய்து, முழுமையாக வேகவைத்து, சமைத்துச் சாப்பிடலாம். இவை நம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் உணவுகள். லாக்டௌனில் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நாம் உடல்நலம் மற்றும் மனநலம் சார்ந்த எத்தனையோ புதுப்புது பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறோம். குறிப்பாக இந்த லாக்டௌனில் நம் உணவு முறை முற்றிலும் மாறிவிட்டது. பீட்ஸா, பர்கரை மறந்து வீட்டிலேயே சமைக்கும் ஆரோக்கியமான உணவுகளின் பக்கம் பெரும்பாலானோர் திரும்பிக்கொண்டிருக்கிறோம். என்றாலும் சிலர், அவசர சமையலுக்காக நூடுல்…
-
- 0 replies
- 569 views
-
-
ரசித்து… ருசித்து சாப்பிட வேண்டும் ஏன்? தினமும் நாம் சாப்பிடுகிறோம். வாழ்நாள் முழுவதும் சாப்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். சாப்பிடாமல் நாம் உயிர்வாழ முடியாது என்பது நமக்கு மறப்பதில்லை. ஆனால் சாப்பிடும்போது செய்ய வேண்டிய சில விஷயங்களைத்தான் நாம் மறந்து விடுகிறாம். சிலர் மிக வேகமாக சாப்பிடுவார்கள். சிலர் மிக மெதுவாக சாப்பிடுவார்கள். எப்படி சாப்பிட்டாலும் சரி, வாயில் போடப்பட்ட உணவு நன்றாக கடிக்கப்பட்டு மெல்லப்பட்டு, சுவைக்கப்பட்டு, கூழாக்கப்பட்டு, அதன்பின் வயிற்றுக்குள் போக வேண்டும். அதுதான் முக்கியம். அப்படி அப்படியே விழுங்கக் கூடாது. துபாயிலிருக்கும் ஒரு நண்பர் இரண்டே நிமிடத்தில் சாப்பிட்டு முடித்துவிடுவார். கள்ளக்குறிச்சியில் இருக்கும் இன்னொரு நண்பர் ஒவ்வ…
-
- 0 replies
- 694 views
-
-
உணவும் உடல்நலமும்: ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமா? - 3 முக்கிய டிப்ஸ் கட்டுரை தகவல் எழுதியவர்,அனாலியா லோரென்டே பதவி,பிபிசி 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES நமது உடலுக்குத் தேவையான முக்கியமான ஆற்றல் மூலமாக குளுக்கோஸ் இருக்கிறது. ஏனெனில் அதிலிருந்து கிடைக்கும் சக்தியே நாம் இயங்குவதற்கும் சிந்திப்பதற்கும் நம் இதயம் துடிப்பதற்கும் துணைபுரிகிறது. உடலின் முக்கிய உள்ளுறுப்புகளின் செயல்பாடுகளுக்கு குளுக்கோஸ் அத்தியாவசியம். ஆனால், ரத்தத்தில் குளுக்கோஸ் (சர்க்கரை) தேவையான அளவு இல்லையென்றால், பல்வேறு தீவிர உடல்நல…
-
- 0 replies
- 706 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பாக்டீரியா, வைரஸ்கள் போன்ற நுண்ணுயிரிகள் மனிதர்களின் வயிற்றிலும் காணப்படுகின்றன. அவை மனிதர்களின் வயிற்றிலும் வளர்கின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், அஞ்சலி தாஸ் பதவி, பிபிசி இந்திக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் பாக்டீரியா, வைரஸ்கள் போன்ற நுண்ணுயிரிகள் மனிதர்களின் வயிற்றிலும் காணப்படுகின்றன. அவை மனிதர்களின் வயிற்றிலும் வளர்கின்றன. அவற்றில் சில, மனிதர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். பாலில் இருந்து தயிர் தயாரிக்கும் செயல்முறைக்கு பாக்டீரியா உதவுவது இதற்கு ஒரு சிறந்த உதாரணம். நம் உடலில் கோடிக்கணக்கான பாக்டீரியா…
-
- 0 replies
- 400 views
- 1 follower
-