நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3030 topics in this forum
-
கால நிலையின் மாற்றத்தால் ஏற்படும் மூக்கடைப்பு. நம்முடைய மூக்கின் உட்பகுதி , தொண்டையின் உட்பகுதி, சைனஸ் எனப்படும் முக மற்றும் தலை எழும்புகளின் காற்று நிரம்பிய இடைவெளிகளின் உட்பகுதி என்பவை மிகவும் நுணுக்கமானவை. குறிப்பாக நாம் சுவாசிக்கும் போது காற்றோடு சேர்ந்து செல்லும் சில தூசி துணிக்கைகள் ( கண்ணுக்குத் தெரியாத) இந்த பகுதிகளின் உட்புறத்திலே படும் போது அந்தப் பகுதியில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படலாம். இந்த மாற்றங்கள் உண்மையில் அந்த துணிக்கைகளின் பாதிப்பில் இருந்து நம்மை பாதுகாக்கவே ஏற்படுகிறது. இவ்வாறு நம்மை பாதுகாக்க ஏற்படும் மாற்றங்களே நமக்கு சில அசௌகரியங்களை ஏற்படுத்தலாம். அதுவே அலர்ஜி (allergic reaction)எனப்படுகிறது. சில குறிப்பிட்ட காலப்பகுதியில் காற்றிலே…
-
- 2 replies
- 841 views
-
-
கிராமங்களில் இன்றும் 'கருப்பட்டி' காபி என்றால் எக்ஸ்டிரா ஸ்பெஷல்தான். பதநீரை காய்ச்சி அதிலிருந்து பெறப்படும் கருப்பட்டிக்கு சுவை, மணம், மருத்துவ குணம் அதிகம் இருக்கிறது. அதிலும் இனிப்புக்காக மட்டும் இதைப் பயன்படுத்த வில்லை. இந்த கருப்பட்டியில் கூடுதலான மருத்துவத் தன்மை இருப்பதாலும்தான் அதைப் பயன்படுத்தினார்கள். பனங்கருப்பட்டி யில் சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்து தின்பண்டமாகவும் தயாரிக்கப்பட்டு வருகிறது. இப்படி உடல் நலனுக்கு மிகவும் உகந்தது என்பதால் இப்போது நகர மக்களிடையேயும் கிராக்கி அதிகரித்து வருகிறது. # இப்போது பரவலாகக் காணப்படும் டெங்கு நோயைக் குணப்படுத்த கரும்பு கருப்பட்டியும் சின்னவெங்காயமும் சிறந்த மருந்தாகும். என இலங்கை கரும்பு ஆராய்ச்சி ந…
-
- 0 replies
- 621 views
-
-
இன்றைய உலகில் பலருக்கு தூக்கமின்மை என்பது ஒரு வியாதியாகவே இருந்துவருகிறது. இவ்வியாதிக்கு மருந்தை தேடுபவர்கள், பாட்டி கூறும் வைத்தியம் முதல் நவீன மருத்துவர்கள் கூறும் சிகிச்சை முறைகள் வரை அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் முடிவுக்கு வருகின்றனர். உடலின் ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் ஆணையிட பல்வேறு திரவங்கள் மற்றும் சுரப்பிகள் செயல்பட்டுவருகிறது. இதில் நமக்கு தூங்க கட்டளையிடும் ஒரு வேதியியல் பொருள் மெலடோனின். இதன் குறைபாட்டாலேயே இன்று பலர் தூக்கமின்மை வியாதிகளால் தவித்துவருகின்றனர். மருத்துவத்துறையில் உள்ள தூக்க மாத்திரைகளில் இது கட்டாயம் இருக்கும். ஆனால் யாரோ தயாரித்த வேதியியல் பொருளை சாப்பிட்டு தூங்க முயற்சி செய்யும் நாம், இயற்கை அளித்துள்ள வரப்பிரசாதங்களை பயன்…
-
- 0 replies
- 604 views
-
-
• காலிஃப்ளவர் பூ வகையைச் சேர்ந்தது. • இது சாதாரணமாக வெள்ளையாகவோ இளம் மஞ்சளாகவோ காணப்படும். இவற்றில் வயலட் கலர் காலிஃப்ளவரும் உண்டு. • காலிஃப்ளவர் பூவைவிட பூவை மூடியிருக்கும் பச்சை இலைகளில் அதிக கால்சியம் சத்து உள்ளது. • காலிஃப்ளவர் உணவு வகைகளில் பூண்டைச் சேர்த்துக்கொண்டால் வாயுத் தொந்தரவும் ஏற்படாமல் தடுக்கலாம். • இதில் வைட்டமின் பி1, 2, 3, 4, 5, 6 மற்றும் பி9 வைட்டமின்கள் காணப்படுகின்றன. • காலிஃப்ளவரை வாரம் இருமுறை உட்கொண்டால் நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்கும். • இதில் சல்போராபேன் மற்றும் இண்டோல்-3- கான்ஃபினோல் போன்ற கலவைகள் இருப்பதால் புற்றுநோயை எதிர்க்கும் சக்தி கொண்டது. • காலிஃப்ளவரை அலுமினியம், இரும்பு பாத்திரத்தில் வ…
-
- 7 replies
- 708 views
-
-
காலிபிளவரில் கால்சியம் சத்து அதிகம் ! சுரைக்காய் வீரிய விருத்தியை உண்டாக்கும்! காலிபிளவரில் கால்சியம் சத்து அதிகம் கொண்டது. நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. அதிக எடை போடாமல் இருக்க உதவுவது. பாஸ்பரஸ் அதிகம் உள்ளதால், வாயுத் தொந்தரவு தரும். காலி பிளவரின் குணங்கள்: வாரத்திற்கு ஒரு நாள் உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. சாலட் செய்து சாப்பிடுவது, கோபி மஞ்சூரி செய்து சாப்பிடுவது, நன்கு வேக வைத்து வெறும் உப்பு, சீரகம், பச்சை மிளகாய் தாளித்துச் சாப்பிடுவது போன்றவை காலி பிளவரில் செய்யக் கூடிய உணவு வகைகள். காலி பிளவரில் பூவை விட, பூவை மூடியிருக்கும் பச்சை இலைகளில் அதிக அளவு கால்சியம்சத்து உள்ளது. பெரியவர்களை விட குழந்தைகள் அதிகம் சாப்பிடலாம். காலி ப…
-
- 1 reply
- 976 views
-
-
04/08/2012 Dr.M.K.Muruganandan ஆல் நாற்றம் மூக்கைப் பிடுங்கியது. குடலைப் பிரட்டிக் குமட்டிக் கொண்டு வந்தது. அவரைப் படுக்கையில் விட்டு அவரது வயிற்றைப் பரிசோதிக்க முனைந்த நான் எனது எண்ணத்தை மாற்றினேன். ‘சொக்சைக் கழற்றுங்கோ’ என்றேன். இப்பொழுது என் முன்னுரிமை வேறாயிற்று. பாதத்தில் கண்கள் மேய்ந்தன. கல்லும் குளியுமான தெருவைப்போல அவரது பாதம் பள்ளமும் திட்டியுமாக அசிங்கமாத் தோற்றமளித்தது. பிற்றட் கெரெட்டோலைசிஸ் (Pitted keratolysis) என்பது பாதத்தைப் பாதிக்கும் சரும நோயாகும். தோலை அரித்து நாற்றத்தை எழுப்பும் பாத நோய் (Pitted keratolysis) நோயாளி பரிசோதனை அறைக்குள் நுழையும் முன்னரே இது என்ன நோயென மோப்ப சக்தி குறைவில்லாத மருத்துவரால் நிர்ணயிக்க முடியும். அறிகுறிகள்…
-
- 0 replies
- 1.7k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 2 ஏப்ரல் 2024, 02:26 GMT “இந்த உலகில் ஒருவர் தவிர்க்கவே கூடாத உணவு என்றால் அது காலை உணவு தான். காலை உணவை ஒரு அரசன் உண்பது போல அதிகமாக உண்ண வேண்டும்”, இது போன்ற வாசகங்களை சில இடங்களில் படித்திருப்போம் அல்லது யாரேனும் சொல்லக் கேட்டிருப்போம். ஆனால் பரபரப்பான அன்றாட வாழ்க்கையில் ஒரு அரசன் உண்பது போல காலை உணவுகளை உண்ண நேரம் இல்லை அல்லது அவ்வாறு உண்டு விட்டு அலுவலகம், பள்ளி மற்றும் கல்லூரி வகுப்புகளில் சென்று அமர்ந்தால் வேலை எங்கே நடக்கிறது, வகுப்பை எங்கே கவனிக்க முடிகிறது, தூக்கம் தான் வருகிறது என்று சொல்லி பலர் காலை உணவை தவிர்ப்பதையு…
-
-
- 8 replies
- 1.6k views
- 1 follower
-
-
[size=6]காலை உணவை சாப்பிடாமல் இருக்க கூடாதா!!![/size] [size=4][/size] [size=4]எடை குறைக்க வேண்டும் என்று இருப்பவர்கள், காலையில் உணவை சாப்பிட மாட்டார்கள். ஆனால் அப்படி இருப்பது ஆரோக்கியத்தை பாதிக்கும். ஏனெனில் இரவில் உண்ட பிறகு, நீண்ட நேர இடைவேளைக்குப் பின் காலை நேரத்தில் உணவு உண்போம். ஏனெனில் அப்போது உண்டால் தான் அந்த நாளை தொடங்குவதற்கு ஏற்ற சக்தியானது கிடைக்கும். இத்தகைய சக்தியை காலை உணவில் மட்டுமே கிடைக்கும். மதியம் கூட உண்ணாமல் இருந்து விடலாம், ஆனால் காலையில் உண்ணாமல் இருந்தால் எந்த வேலையையும் செய்ய முடியாது. அப்படி உண்ணாமல் இருப்பவர்கள், இப்போது இருந்து உண்ணும் பழக்கத்தை கொள்ளுங்கள். மேலும் அப்படி ஏன் உண்ணாமல் இருக்க வேண்டும் என்று பல காரணமும் இருக்கிறது. அத…
-
- 1 reply
- 763 views
-
-
காலை உணவோடு தினமும் முட்டை சாப்பிட்டால் உடலை கட்டுக்குள் வைத்திருக்கலாம் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கனெக்டிகட் பல்கலைக்கழக உணவுத்துறை, உடல் எடை அதிகம் கொண்டவர்களின் உணவில் முட்டையின் பங்கு என்ன என்பது குறித்து விரிவான ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. உடல் பருமன் கொண்டவர்களுக்கு காலை உணவில் முட்டையை வேக வைத்துக் கொடுக்கப்பட்டது. இதனால் உடலில் தெம்பு அதிகரித்து, சுறுசுறுப்பு ஏற்பட்டதோடு நீண்ட நேரம் வயிறு நிறைந்திருக்கும் உணர்வு ஏற்பட்டது. இதன் மூலம் அவர்களுக்கு மதிய உணவு, மாலை டிபன் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளும் அளவு குறைந்தது. உணவின் அளவு குறைந்ததினால் உடலின் கலோரிகளின் அளவும் குறைந்தது. இதனால் அவர்களின…
-
- 0 replies
- 551 views
-
-
நம் உடல் ஒருநாள் முழுவதும் எப்படி இயங்கப்போகிறது என்பது நாம் காலையில் வெறும் வயிற்றில் முதலில் என்ன சாப்பிடுகிறோம் என்பதை பொறுத்துதான் இருக்கிறது. இந்த உணவானது நம் உடல் நிலையை பொறுத்தும், சூழ்நிலையை பொறுத்தும்தான் இருக்க வேண்டுமே தவிர அட்டவணைப்படி எடுத்து கொள்ள கூடாது. ஒரு நாள் முழுவதும் குடிக்க வேண்டிய தண்ணீரை காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் அரைமணி நேரத்திற்குள் குடிக்க வேண்டும். சிலர் வெந்நீர் அருந்துவார்கள், ஆனால் குளிர்ந்த நீர் குடிப்பதுதான் நல்லது. ஏனெனில் குளிர்ந்த நீருக்கு அசிடிட்டியை குறைக்கும் தன்மை வெந்நீரை காட்டிலும் அதிகம். தண்ணீரானது அமிலத்தின் அதிகப்படியான வீரியத்தை சமன்செய்து, வயிற்றை சீராக இயக்க உதவுகிறது. தொடர்ந்து தண்ணீர் குட…
-
- 0 replies
- 1.2k views
-
-
காலையில் கண் விழித்ததும் பெட் காபியுடன் தான் பலருக்கு அன்றைய பொழுது விடிகிறது. உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் வெறும் வயிற்றில் லிட்டர் லிட்டராகத் தண்ணீர் குடிப்பது, தேன் கலந்த வெந்நீர் அருந்துவது, காலையில் நடைப்பயிற்சிக்குச் செல்லும் வழியில் மூலிகைச் சாற்றை அருந்துவது, பச்சை முட்டை குடிப்பது என்று அவரவர்களுக்கு என்ன தோன்றுகிறதோ, அதைச் செய்கிறார்கள். உண்மையில் காலையில் வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம், எவற்றைச் சாப்பிடக் கூடாது? உடலின் பல நோய்கள் நம் வயிற்றுப் பகுதியில்தான் ஆரம்பிக்கின்றன. மலச்சிக்கல், வயிறு மற்றும் நெஞ்சுப் பகுதியில் எரிச்சல் எனச் சாதாரணமாகத் தொடங்கும் பிரச்னைகள்கூட பல மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்திவிடும். பொதுவாக, முந்தைய நாள் இரவு நாம் சாப்பிட…
-
- 0 replies
- 6.2k views
-
-
காலை கவனிப்பதுண்டா? காலை கவனிப்பதுண்டா? எல்லா பாரத்தையும் தாங்குதே: உடலின் மொத்த பாரத்தையும் தாங்குவது கால் தான். ஆனால், இதனை பராமரிப்பதில் எத்தனை பேர் அக்கறை காட்டுகின்றனர் என்பது கேள்விக்குறி தான். தினமும் காலை, மாலை வேளையில் குளிக்கும் போது, காலை சுத்தமாக கழுவிக்கொள்வதில் இருந்து, வெளியில் போய் விட்டு வீடு திரும்பினால், காலை சுத்தம் செய்வது வரை மிக முக்கியமானது. ஆனால், காலை சரியாக கூட கழுவத்தெரியாதவர்கள் இல்லாமல் இல்லை. கால் வழியாக பாக்டீரியா கிருமிகள், உடலில் புகுவதற்கு இடமுண்டு; அதுபோல, பூச்சி கடித்து, அதன் மூலம் நோய் வரும் ஆபத்தும் உண்டு. அதனால் , கால் மீது அதிக கவனம் தேவை. *** புறக்கணிப்பதா? : உடலில் மற்ற பாகங்களை போல கால் சுத்தமாக, ஆரோக்…
-
- 4 replies
- 2.6k views
-
-
உங்கள் குழந்தையை சரியான முறையில் எழுப்புங்கள். அப்போதுதான் அவள் நாள் முழுக்க உற்சாகமாக, பாதுகாப்பாக உணர்வாள். குழந்தைகள் இரவு முழுக்க நன்றாகத் தூங்கிய பின் நல்ல மூடில் இருப்பார்கள். 2 முதல் 5 வயதான குழந்தைகளுக்குக் குறைந்தது 8 முதல் 10 மணி நேரம் தடங்கல் இல்லாத தூக்கம் தேவை. சில குழந்தைகள் கொஞ்சம் அதிக நேரம் தூங்குவார்கள். எனவே பெற்றோர்கள் அவர்களை எழுப்ப வேண்டியிருக்கும். தூக்கத்திலிருந்து விழிப்பு நிலைக்கு மாறுவது என்பது யாருக்குமே குழப்பமான ஒரு தருணம்தான். குழந்தைகளுக்கு எப்படி இருக்கும் என்று சொல்லவே தேவையில்லை. இந்தத் தருணம் குழந்தைகளுக்கு நாளெல்லாம் மனதில் நிற்கும் வகையில் பெற்றோர்கள் அவர்களிடம் மிகவும் பாசத்தோடு, இரக்கத்தோடு, பரிவுடன் நடந்துகொள்ள வேண்டும். …
-
- 24 replies
- 6.7k views
-
-
காலை உணவை சாப்பிடாத குழந்தைகளுக்கு நீரழிவு நோய் வரும் அபாயம் அதிகரிப்பதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். இங்கிலாந்தில் உள்ள சிறுவர் பள்ளிகளில் 10 வயதுக்கு உள்ளிட்ட குழந்தைகளை ஆய்வு செய்ததில் காலை உணவை தவிர்க்கும் குழந்தைகளுக்கு இன்சுலின் சுரப்பின் அளவு மிக குறைந்து இருக்கிறது. இதன் காரணமாக இரண்டாம் வகை நீரழிவு வருகிறதாம். குழந்தைகளை அதிகம் தாக்குவது முதல் வகை நீரிழிவு நோய். ஆனால், காலை உணவை தவற விடுவதன் மூலம் இரண்டாம் வகை நீரிழிவு வருகிறது. சிறுவயதிலேயே இந்நோய் வருவதை தடுக்க காலையில் அவசியம் உணவு எடுத்துக் கொள்ளவேண்டும் என இங்கிலாந்தின் நலவாழ்வியல் ஆராய்ச்சி மையம் வலியுறுத்துகிறது. காலையில் அ…
-
- 1 reply
- 1.4k views
-
-
காலையில் சாப்பிடாமல் இருக்கும் இளைஞர்கள் குண்டாகும் வாய்ப்பு உள்ளது. சாம்சங் டயாபடிக் ரிசர்ச் இன்°ட்யூட் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. இவர்கள் 1624 டீனேஜ் பள்ளி மாணவர்களின் உணவுப் பழக்கத்தை ஆராய்ந்ததில் அதிக எடையுள்ள பலரும் காலை உணவு சாப்பிடாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு இம்மாணவர்கள் பல்வேறு காரணங்களைக் கூறினாலும் முக்கியமாக இரண்டு காரணங்களால் தான் குண்டாக அதிக வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். காரணம் 1: காலையில் சாப்பிடாத காரணத்தால் பகலிலும் இரவிலும் அதிக பசி எடுப்பதால் மதிய உணவும் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது. காரணம் 2: முதல் நாள் இரவு சாப்பிட்டுவிட்டு அடுத்த நாள் பகல் 12 மணி வரை கிட்டத்தட்ட 15 முதல் 18 மணி நேரம் வரை சாப்பிடாமல்…
-
- 9 replies
- 2k views
-
-
காலையில் பல் விளக்கிவிட்டுதான் டீ, காபி குடிக்கவேண்டுமா? கட்டுரை தகவல் எழுதியவர்,ஃபெலிப் லாம்பியாஸ் பதவி,BBC News 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES நீங்கள் காலை எழுந்தவுடன் பல் விலக்கிவிட்டு டீ, காபி குடிப்பவராக இருக்கலாம். அல்லது டீ, காபி குடித்துவிட்டு பல் விலக்கும் நபராகவும் இருக்கலாம். நீங்கள் எப்படி இருந்தாலும், இரண்டில் எந்தப் பழக்கம் சிறந்தது என்று எப்போதாவது யோசித்தது உண்டா? அதாவது, பல் விளக்கிவிட்டு, சாப்பிடுவது நல்ல பழக்கமா, சாப்பிட்டுவிட்டு பல் துலக்குவது நல்ல பழக்கமா என்ற கேள்வி எப்போதாவது உங்களுக்கு வந்திருக்கிறதா? ஆம…
-
- 0 replies
- 180 views
- 1 follower
-
-
முடிந்தால் வார இறுதி நாளிலாவது உண்போம். முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் பி6, பி12 ஏராளமாக இருக்கிறது என்கிறார் அமெரிக்காவில் இருக்கும் ஒரு மருத்துவர். தவிரவும் உடலுக்கு, குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் 'ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ்' (Probiotic bacteria) (கவனியுங்கள்: 'மில்லியன்' அல்ல 'ட்ரில்லியன்') பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்! கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன, எந்தக் காய்ச்சலும் நம்மை அணுகாது! பழைய சாதத்தின் மகத்துவத்தைப் பற்றி அமெரிக்காவில் வசிக்கும் நம் இந்திய விஞ்ஞானி ப்ரதீப் கூறியதில் இருந்து…
-
- 9 replies
- 3.7k views
-
-
காலையில் வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடக்கூடாது? ஏன் தெரியுமா? வாழைப்பழம் மிகச் சிறந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழ வகைகளில் ஒன்று என அனைவருக்கும் தெரியும். ஆனால், அதற்காக சாப்பிடுவதற்கு மட்டுமல்ல, சாப்பிடும் போது பழத்தைக் கழுவத் தேவையில்லை, கடித்து, அரைத்து விழுங்கத் தேவையில்லை, வெறுமே மென்றாலே தொண்டைக்குள் வழுக்கிக் கொண்டு இறங்கும் என்று காரணம் காட்டி வேறு சத்தான காலை உணவுகளைச் சாப்பிட சோம்பல் பட்டுக் கொண்டு அன்றாடம் காலை உணவாக வெறும் வயிற்றில் வாழைப்பழங்களை மட்டுமே சாப்பிட்டு விட்டு பள்ளிகளுக்கும், அலுவலகங்களுக்கும் செல்வது தவறு. ஏனெனில் வாழைப்பழங்களில் நிறைந்திருக்கும் மைக்ரோ நியூட்ரியன்டுகளா…
-
- 0 replies
- 324 views
-
-
கால் ஆணி. பாதங்களைத் தாக்குவதில் பித்தவெடிப்பிற்கு அடுத்தபடியாக இருப் பது கால் ஆணி. இது பாதத்தைத் தரையில் வைக்க முடியாத அள விற்கு பிரச்சனையை ஏற்படுத்து ம் ஆணி என்பது அதிகமான உடல் அழுத்தம் காரணமாக உரு வாகிறது. அளவு குறைந்த காலணிகளை அணிவது உள்பட பல்வேறு அழு த்தங்களால் கால்களில் ஆணி ஏற்பட்டு, பெரும் துன்பத்தைத் தரு கிறது. இந்தக் கால் ஆணிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்ப டாவிட்டால் அவையே பின்னாளில் அல்சராக மாறுவதற்கும் வாய்ப் பு உண்டு. கால் ஆணி ஏற்படக் காரணம்: பாதத்தில் சிறு கொப்புளங்கள் போல உண்டாவதைத்தான் கால் ஆணி என்று கூறுகிறார்கள். கால் ஆணி உடையவர்களின் செருப்புகளைப் பயன்படுத்தினால் அதைப் பயன்படுத்துபவர்களுக்கு ம் கால் ஆணி வர வாய்ப்புள்ளது. காலுக்குப் பொருந்…
-
- 0 replies
- 6.8k views
-
-
கால் ஆணிக்கு காரணமாகும் காலணி உடலின் மொத்த எடையையும் தாங்கும் கால்களைப் பராமரிப்பதில் எத்தனைபேர் அக்கறை காட்டுகின்றனர் என்பது கேள்விக்குறியே. தினமும் காலை,மாலை வேளையில் குளிக்கும் போது கால்களை சுத்தமாக கழுவிக் கொள்வதுடன்,வெளியில் போய் விட்டு வீடு திரும்பினாலும் சுத்தம் செய்வது அவசியம். கால்களில்தான் அதிகமான வியர்வைச் சுரப்பிகள் உள்ளன.கால் விரல்களின் இடுக்குகளில் வியர்வை தங்கினாலோ,அதிக நீர் கோர்த்தாலே தடித்துப்போய் காளான் குடை போல தோன்றும்.அதிகப் புழுக்கம்,அதிகமான மழைநீர் படுவதால் இப்படி ஏற்படும். சிலருக்கு சொறி,சிரங்கு போன்றவை வரும். இவர்கள் காலுறை அணிவதில் கவனம் செலுத்த வேண்டும். பெரும்பாலும் பருத்தியினால் ஆன காலுறைகளை அணிய வேண்டும். கால் எப்போதும் உராயக்…
-
- 0 replies
- 557 views
-
-
காளான் - மருத்துவ பயன்கள் காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது. காளானில் உள்ள லென்ட்டைசின் (lentysine) எரிட்டிடைனின் (eritadenin) என்ற வேதிப் பொருட்கள் இரத்தத்தில் கலந்துள்ள ட்ரை கிளிசஸ்ரைடு பாஸ்போலிட் போன்றவற்றை வெகுவாகக் குறைக்கிறது. இதில் எரிட்டினைன் கொழுப்புப் பொருட்களை எந்தவித பாதிப்பும் இல்லாமல் இரத்தத்திலிருந்து வெளியேற்றி பிற திசுக்களுக்கு அனுப்பி உடலை சமன் செய்கிறது. இவ்வாறு உடலில் அதிகம் தேவையில்லாமல் சேரும் கொழுப்பு கட்டுப்படுகிறது. …
-
- 0 replies
- 864 views
-
-
அண்மையில் மறைந்த கியூப பொதுவுடைமைத் தலைவர் ஃபிடெல் காஸ்ட்ரோவுக்கு முதுமையில் ஏற்பட்ட நோயிலிருந்து விடுபடப் பெரிதும் உதவியது முருங்கை. காஸ்ட்ரோவுக்கு முருங்கை செய்த உதவி தொடர்பாகச் சமூக வலைத்தளங்களில் உலாவரும் செய்திகள், அதன் ஒரு பாகத்தை மட்டுமே சொல்கின்றன. காஸ்ட்ரோவின் கெரில்லா படைத் தளபதி சே குவேரா, மெக்சிகோ நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட முருங்கையைக் கியூபாவில் அறிமுகம் செய்தார். அதன்பிறகு ஃபிடெல் காஸ்ட்ரோ தன் வீட்டின் அருகே முருங்கைத் தோட்டத்தை வளர்த்துவந்தார். முதுமையில் தன்னைக் காப்பாற்றிய முருங்கை தாவரத்தின் அற்புதத் திறன்கள் பற்றி, தன் நாட்டு மக்களிடையே காஸ்ட்ரோ உரையாற்றியுள்ளார். அதை அதிசயமான தாவரம் என்று புகழ்ந்து பேசியது மட்டுமல்லாமல், வீடுதோறும் முருங்கை…
-
- 0 replies
- 342 views
-
-
கிட்டப் பார்வை குறைபாடு: 2050ம் ஆண்டில் உலக மக்களில் பாதி பேர் பாதிக்கப்படுவார்களா? ஜெசிகா முட்டிட் . 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES குழந்தைகள் மத்தியில் கிட்டப்பார்வை குறைபாடு விகிதம் அதிகரித்து வருவது உலகம் முழுவதும் பெற்றோரையும், மருத்துவர்களையும் எச்சரிக்கும் வகையில் உள்ளது. இந்த நிலைமையை நாம் மாற்றமுடியுமா? 1980களின் பிற்பகுதியிலும், 1990களிலும் சிங்கப்பூர் மக்கள் தங்கள் குழந்தைகளிடம் கவலைப்படத்தக்க ஒரு மாற்றம் தென்படுவதை கவனிக்கத் தொடங்கினர். பொதுவாக, சிறிய, வெப்பமண்டல தேசமான அங்கு வசித்து வந்த மக்கள், அந்த சமயத்தில் பெரும் அளவில் முன்னே…
-
- 0 replies
- 371 views
- 1 follower
-
-
கிட்னி அறிந்ததும் அறியாததும்..! கிட்னி அறிந்ததும் அறியாததும்..! டாக்டர். சௌந்தரராஜன் "ஒரு வீட்டின் சுத்தம் எப்படிப்பட்டது என்பது அந்த வீட்டின் ஹால், கிச்சன், பெட்ரூம் போன்றவற்றைப் பார்ப்பதைவிட அந்த வீட்டின் கழிப்பறையைப் பார்த்தால் தெரிந்துவிடும். அதுபோலத்தான் நம் உடலும்... நாம் முழுமையான ஆரோக்கியத்தோடு இருக்கிறோமா என்பதை நம் சிறுநீரகத்தின் செயல்பாட்டை வைத்துச் சொல்லிவிடலாம்..." என்று எளிமையான உதாரணத்தோடு பேசத் தொடங்கினார் டாக்டர் சௌந்தரராஜன். சிறுநீரகத் துறையில் உலகின் மிக முக்கியமான மருத்துவரான டாக்டர் சௌந்தரராஜன்தான் நடிகர் ரஜினி ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்தபோது அவரை மருத்துக் கண்காணிப்பு செய்து வந்தவர். சி…
-
- 3 replies
- 2.2k views
-
-