நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3015 topics in this forum
-
பட மூலாதாரம்,GETTY IMAGES உப்பு நமது உணவை சுவையாக்குகிறது. அது மனித வாழ்க்கைக்கும் இன்றியமையாதது. உடலில் உள்ள நீரின் அளவை பராமரிக்க, உப்பில் இருக்கும் சோடியம் மிகவும் அவசியம். சத்துக்களை உடல் உறிஞ்சுவதற்கும் அது உதவுகிறது. பிபிசி உலக சேவையின் 'தி ஃபுட் செயின்' (The Food Chain) என்ற நிகழ்ச்சி, மனித உடலில் உப்பின் முக்கிய பங்கு என்ன என்பது குறித்தும், எவ்வளவு உப்பு உடலுக்கு உகந்தது என்றும் அலசியது. உப்பின் முக்கியத்துவம் “உப்பு வாழ்க்கைக்கு அவசியமானது” என்று ஒரே வாக்கியத்தில் உப்பின் முக்கியத்துவத்தைக் கூறுகிறார், அமெரிக்காவின் ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தின் ஊட்டச்சத்து அறிவியல் துறையின் பேராசிரியராக இருக்கும் பால் ப்ரெஸ்லின்.…
-
- 0 replies
- 556 views
- 1 follower
-
-
ஆஸ்திரேலியா முழுக்க கழிவுநீரை ஆய்வு செய்ததில், பணவசதி உள்ளவர்கள் மற்றும் ஏழைகள் எப்படி சாப்பிடுகிறார்கள் என்ற வித்தியாசத்தைக் காண முடிந்தது. குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் உள்ள ஓர் ஆய்வகத்தில், வழக்கத்திற்கு மாறான சில சோதனைப் பொருள்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன: ஆஸ்திரேலிய மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினருக்கு மேற்பட்டோரின் மனிதக் கழிவுகள் அங்கு சேமித்து, பத்திரப்படுத்தப் பட்டுள்ளன. நாடு முழுவதிலும் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள், உறைய வைக்கப்பட்டு இந்தப் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. வேறுபட்ட சமூக வர்க்கத்தினரின் உணவுப் பழக்கங்களைப் பற்றி அறிவதற்கு உதவும், புதையல்க…
-
- 0 replies
- 675 views
-
-
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்” இருளும் ஒளியும் சந்திக்கும் அதிகாலையில் விழிப்பு, தாவரங்களோடு உரையாடிக்கொண்டே பண்ணைத் தோட்டத்தில் ஒரு நடைப்பயிற்சி, கொஞ்சம் யோகாசனம், கொஞ்சம் மூச்சுப்பயிற்சி என்று தன் நாளை ரம்மியமாய் ஆரம்பிக்கிறார் நம்மாழ்வார். 75 வயதிலும் 25 வயது இளைஞர்போல் உற்சாகமாக உழைத்துவரும் நம்மாழ்வாரிடம் ஃபிட்னெஸ் ரகசியம் பேசலாமா… ”எனது ஆரோக்கியத்துக்கான அடிப்படைக் காரணம் என்னுடைய வாழ்க்கைமுறை. இது கிராமத்து வாழ்க்கை கொடுத்த பரிசு. தோட்டத்தில், பண்ணையில், மேடையில் என்று எங்காவது ஓரிடத்தில் உழைத்துக்கொண்டே இருப்பேன். உடல் நாம் சொல்வதைக் கேட்க வேண்டுமானால், நான்கு விஷயங்களில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும். ஒன்று……
-
- 0 replies
- 1.8k views
-
-
தைராய்ட் சுரப்பியை அகற்றலாமா..? இன்றைய திகதியில் திருமணமாகி ஒன்றோ இரண்டோ குழந்தைப் பெற்றத் தம்பதிகள் தங்களின் மாதவிடாய் சுழற்சி நிற்கவிருக்கும் கடைசி கட்டத்திலோ அல்லது மாதவிடாய் கோளாறின் காரணமாகவோ மருத்துவர்களின் கண்காணிப்பு மற்றும் ஆலோசனையின் பேரில் தங்களின் கர்ப்பப் பையை சத்திர சிகிச்சையின் மூலம் அகற்றிக் கொள்கிறார்கள். இதனால் ஒரு சிலருக்கு ஏற்படும் பக்கவிளைவுகளுக்கு அவர்கள் தொடர்ந்து மருந்துகளையும், மாத்திரைகளையும் எடுத்துக் கொள்ளவேண்டியதிருக்கும். அதே போல் தற்போது தைரொய்ட் பிரச்சினை ஏற்பட்டால் அதனையும் அகற்றிவிடலாமா? என கேட்கிறார்கள். ஆனால் இத்தகைய நிலை, பத்தாண்டுகளுக்கு முன் இருந்த நிலை. தற்போது தைரொய்ட் பிரச்சினை எத்தகையதாக இருந்தா…
-
- 0 replies
- 376 views
-
-
மனிதருக்கு பன்றி சிறுநீரகம்: அமெரிக்க அறுவை சிகிச்சை நிபுணர்கள் சாதனை மிஷெல் ராபர்ட்ஸ் சுகாதார ஆசிரியர், பிபிசி இணைய செய்திகள் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,NYU LANGONE படக்குறிப்பு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அமெரிக்க அறுவை சிகிச்சை வல்லுநர்கள், ஒரு மனிதருக்கு பன்றியின் சிறுநீரகத்தை பொருத்தி சோதித்தனர். இது உடல் உறுப்பு தான பற்றாக்குறையை தீர்க்கும் என அவர்கள் நம்புகின்றனர். மூளைச்சாவு ஏற்பட்டு மருத்துவக் கருவிகளின் உதவியோடு சுவாசித்துவந்த நபருக்கு இந்த பன்றியின் சிறுநீரகத்தைப் பொருத்தி அதை உடல் ஏற்றுக்கொள்கிறதா அல்லது நிராகரிக்…
-
- 0 replies
- 394 views
- 1 follower
-
-
http://lifestyle.ca.msn.com/health-fitness/diet/ee-article.aspx?cp-documentid=24860841
-
- 0 replies
- 743 views
-
-
எந்தப் பூவிலும் இல்லாத புதுமை குங்குமப்பூவில் உண்டு. உடல் நிறத்தை சிவப்பாக மாற்றக் கூடிய அற்புதக் குணம் இதில் நிறைந்து காணப்படுகிறது. குங்குமப்பூக்களின் உள்ளே இருக்கும் நார்களையே ‘குங்குமப்பூ’ என்று அழைக்கப்படுகிறது. இது பசுமை கலந்த சிவப்பு நிறத்தில் காணப்படும். நறுமண முடையதாகவும் சிறிது கசப்பாகவும் இருக்கும். குங்குமப்பூவைத் தண்ணீரில் கரைத்தால் ஆழ்ந்த மஞ்சள் நிறம் உண்டாகும். இத்தாவரம் வடமேற்கு நாடுகளிலும், இந்தியாவில் காஷ்மீரத்திலும் பயிர் செய்யப்படுகின்றது. இது வாசனையுடனும், மினுமினுப்பாகவும் இருக்கும். உணவுப் பொருள்களுக்கு நிறம் உண்டாக்கவும் வாசனை உண்டாக்கவும் சேர்க்கின்றனர். அழகு தரும் குங்குமப்பூ குங்குமப்பூவை பொடியாக்கி வ…
-
- 0 replies
- 579 views
-
-
நான் மருத்துவ மாணவனாக இருந்த சமயத்தில் பீடியாற்றிக் வார்ட்டில் அப்பாயிண்ட்மெண்ட் செய்துகொண்டிருந்த பொழுது ஒரு நாள் கிளிநொச்சியை சேர்ந்த தாய் தந்தையை யுத்தத்தால் இழந்த தனது அம்மம்மாவின் பராமரிப்பில் இருக்கும் ஒரு சிறுவன் ஒரு தனி அறையியில் இருப்பதை கண்டேன்..மூச்சுவிட மிகவும் சிரமப்பட்டுக்கொண்டு இருந்தான்..வாயில் இருந்து விழுங்க முடியாமல் உமிழ்நீர் கீழே வடிகிறது……அறையில் தற்செயலாக water tap திறக்கப்பட்ட போது அவன் பட்ட அவஸ்தையை பார்த்த போது தான் ரேபீஸ் நோய்க்கு ஏன் நீர்வெறுப்பு நோய் எனக்கூறுகிறார்கள் எனும் அர்த்தம் புரிந்தது…சுவாச உதவிகள் வழங்கப்படுகிறது..அவனது நோவை குறைக்க மருந்துகள் வழங்கப்படுகிறது..அவன் எம் கண்முன்னே இறக்கப்போறகின்றான் என அவனை பார்க்கும் எமக்கு எல்லாம் தெர…
-
- 0 replies
- 939 views
-
-
யானைகள் சீக்கிரமே எங்க விருந்தாளியாக வரும்; ஆவலுடன் காத்திருக்கிறோம்!"- நடிகர் கிஷோர் "எங்க தோட்டத்துலயும் பலா மரம் நல்லா வளர்ந்துட்டு வருது. அதுல காய்கள் அதிகரிக்க ஆரம்பிச்சதும், யானைகள் தினசரி விருந்தாளியா வர ஆரம்பிச்சுடும்." ‘ஆடுகளம்’, ‘கபாலி’ உட்பட பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருக்கும் கிஷோர், கன்னடம் மற்றும் தெலுங்கிலும் புகழ்பெற்ற நடிகர். இயற்கை விவசாயத்தின்மீது அதீத ஆர்வம் கொண்டவர். நடிப்புக்கு இடையே மனைவி விஷாலாவுடன் இணைந்து இயற்கை விவசாயம் செய்துவருகிறார். பெங்களூருவில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கரியப்பனதொட்டி கிராமத்தில் அமைந்திருக்கிறது இவரின் …
-
- 0 replies
- 642 views
-
-
ரத்தத்தை சுத்தமாக வைக்கும் உன்னத உணவு பொருட்கள் உடல் ஆரோக்கியமானது ரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதில் தான் உள்ளன. ஏனெனில் உடலின் அனைத்து செயல்பாடுகளுக்கு ரத்தமா னது மிகவும் இன்றியமையா தது. எனவே அத்தகைய ரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இல்லா விட்டால், உடலில் நச்சுக்களின் அளவு அதிகரித்து, உடலின் உறுப்புக்கள் மெதுவாக பாதிக்கப்படும். இவ்வாறு அதிகப்படியான நச்சுக்கள் ரத்தத்தில் இருந்தால் தான், அலர்ஜி, நோயெதிர்ப்பு சக்தி குறைபாடு, தொடர்ச்சியான தலை வலி, சோர்வு போன்றவை ஏற்படும். அதுமட்டுமின்றி, அசுத்த ரத்தமானது உடலில் இருந் தால், உடலில் மட்டுமின்றி, சருமத்திலும் பல பிரச்சனைகள் ஏற்படும். அதில் பிம்பிள், முகப்பரு, கருமைப்படிதல், பொலிவிழந்த சருமம் மற்று…
-
- 0 replies
- 2.6k views
-
-
குழந்தை வளர்ப்பு - பிறப்பு முதல் பத்து வயது வரை குழந்தைகளை வளர்ப்பது தாய்மார்களைப் பொறுத்தவரையில் பயம் கலந்த அனுபவமாக இருக்கிறது. ஆனால் அடிப் படையான விஷயங்களைத் தெரிந்து கொண்டால், குழந்தை வளர்ப்பு மகிழ்ச்சி யான பாசம் நிறைந்த கலை என்பதை புரிந்து கொள்ளலாம். குழந்தை வளர்ப்பில் அடிப்படையான விஷயங்கள் இங்கே தரப்படுகின்றன. பிறப்பு முதல் ஒரு வயது வரை: பிறந்த குழந்தைக்கு தினமும் எத்தனை முறை பாலூட்ட வேண்டும் என்ற சந் தேகம் பல தாய்மார்களுக்கும் ஏற்படு கிறது. குழந்தை ஒவ்வொரு முறை அழும் போதும் பசியால்தான் அழுகிறதோ என்று நினைக்கிறார்கள். குழந்தைக்கு தேவையான அளவு உணவு கிடைக்கிறதா என்பதை அறிய பலவழிகள் இருக்கின்றன. அதில் ஒன்று குழந்தையின் எடையை கவனிப்பது.…
-
- 0 replies
- 1.5k views
-
-
புகையிலை ஒரு அமெரிக்கத் தாவரம். கொலம்பஸ் அமெரிக்காவை அடைந்த பின்னர் அங்கே படையெடுத்த ஐரோப்பியர்கள் அங்கே இருந்த பூர்வகுடி இந்தியர்கள் புகையிலை பிடிப்பதைக் கண்டு அதைத் தாமும் பிடிக்கத் தொடங்கினர். அதன்பின் புகையிலை உலகெங்கும் பயிரிடப்பட்டு, பயன்பட்டு வந்தாலும் அதன் தீமைகளை அன்று யாரும் அறியவில்லை. முதல், முதலாக சிகரெட்டின் தீமைகளை அறிந்த நாடு, நாஜி ஜெர்மனிதான். 1939இல் முதல் முதலாக நாஜி ஜெர்மன் விஞ்ஞானி ப்ரான்ஸ் முல்லர் (Franz H. Müller) சிகரெட்டுக்கும் கான்சருக்கும் இருக்கும் தொடர்பைக் கண்டுபிடித்துப் பதிப்பித்தார். அத்துடன் நில்லாமல் வியப்பூட்டும் வகையில் அஸ்பெஸ்டாஸால் புற்றுநோய் வரும், செகண்ட்ஹாண்ட் ஸ்மோக்கிங்காலும் புற்றுநோய் வரும் என்பதை எல்லாம் நாஜி விஞ்ஞானிகள் க…
-
- 0 replies
- 902 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,லாரா லீவிங்டன் பதவி,பிபிசி 48 நிமிடங்களுக்கு முன்னர் மரணத்தை நம்மால் தவிர்க்க முடியாது. ஆனால் முதுமையினால் நம் தோற்றத்தில் ஏற்படும் மாற்றங்களை தவிர்க்க முடியும் என சில வல்லுநர்கள் நம்புகிறார்கள். கடந்த 150 ஆண்டுகளில் மனிதர்களின் வாழ்நாள் இரட்டிப்பாகியிருக்கலாம், ஆனால் நம்மில் பலர் வயதாகும்போது நம் அன்புக்குரியவர்களுக்கு ஏற்படும் மாற்றங்களை கண்டு கலங்கியிருப்போம். அதைத் தவிர்ப்பதற்காக, ஆரோக்கியமான, நீண்ட ஆயுளுக்கு வழிவகுக்கும் என்று கூறப்படும் ஒரு புதிய தொழில்நுட்பம் உருவாகி வருகிறது. பல நவீன சிகிச்சைகள் வழியாக நமது உடலில்…
-
- 0 replies
- 794 views
- 1 follower
-
-
உங்களுக்கு என்ன நோய்? உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து தெரிந்து கொள்ளலாம் கண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி? சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும். டிப்ஸ் : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும். கண் இமைகளில் வலி.. என்ன வியாதி? அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி வரலாம். மேலும் மக்னீசியம் உடலில் குறைவதால் உ…
-
- 0 replies
- 726 views
-
-
-
- 0 replies
- 570 views
- 1 follower
-
-
கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து: இஸ்ரேல் விஞ்ஞானிகளின் முயற்சியில் முன்னேற்றம்! இஸ்ரேலில் உள்ள விஞ்ஞானிகள் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளதாகவும் இது தொடர்பாக விரைவில் அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாதிப்பினால் இதுவரை 4,627 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒரு இலட்சத்து 26 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, கொரோனா வைரஸ் முதலில் கால் பதித்த சீனாவில் தற்போது வைரஸ் பரவுவது குறைந்துள்ள போதிலும் ஏனைய நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆகியும் கொரோனாவுக்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. காய்ச்சல், உடல்வலி போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற…
-
- 0 replies
- 253 views
-
-
சீனி, சர்க்கரை, வெல்லம் (sugar) என இப்படி பல பெயர்களில் நாம் அழைக்கும் சுக்குரோஸ், இனிப்பு சுவைக்காக ஒவ்வொருவராலும் நாளாந்த உணவில், மென் பானங்களில் , பழச்சறுகளில் பயன் படுத்தப்படும் ஒரு பதார்த்தம். புகையிலை, போதை பொருள் போல, சீனியின் இனிப்பு சுவை சிறுவர்களை, பெரியவர்களை அடிமையாக்கும் பொருள். சீனி உடலுக்கு தேவையான, உடலுக்கு சக்தியை கொடுக்கும் குளுகோஸை தரும் மூலமாக இருந்தாலும், இதன் அளவுக்கு அதிகமான பவனை உடல் நலனுக்கு உகந்தது அல்ல. நாம் உண்ணும் பழங்கள், சில மரக்கறிகள் (பீற்றுட்) ஆகியவற்றில் இது இயற்கையாகவே இருக்கிறது. அதே போல மாச்சத்து உள்ள, தானியங்கள், (அரிசி, கோதுமை) கிழங்கு வகை போன்றவற்றை உண்ணும் பொது மனித உடலின் சமிபாட்டின் முலம் எமது உடலுக்கு தேவையான சக்தி…
-
- 0 replies
- 1.5k views
-
-
தேவைக்கேற்ற அளவு அயோடின் சத்து அவசியம் என்கிறது ஆய்வு கர்பகாலத்தில் அயோடின் குறைபாடு இருந்தால், அது பிறக்கப் போகும் குழந்தையின் மன வளர்ச்சியை பாதிக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். பிரிட்டனில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், கர்பகாலத்தில் தாய்மார்கள் அயோடின் சத்து நிறைந்த மீன் மற்றும் பால் பொருட்களை போன்ற உணவுகளை போதுமான அளவில் உட்கொள்ளாவிட்டால் பிறக்கப் போகும் குழந்தையின் அறிவுத்திறன் மற்றும் வாசிப்புத்திறன் ஆகியவை ஒப்பீட்டளவில் மற்ற குழந்தைகளைவிட குறைவாக இருந்ததாக அந்த ஆய்வில் கணடறியப்பட்டுள்ளது. ஆரம்பப் பள்ளி சிறார்களிடையே நடத்தப்பட்ட ஆய்விலேயே இந்த முடிவுகள் தெரிய வந்ததாகவும் இதில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர். அதே போல அயோடின் சத்து அதிக அளவிலுள்ள கடற்பாசியி…
-
- 0 replies
- 451 views
-
-
தக்காளிப் பழமும் சருமப் பாதுகாப்பும் தக்காளி என்பதும் ஏதோ குழம்பு வைப்பதற்குத் தேவையான ஒன்று என்றே அனைவரும் கருதுகின்றனர். தக்காளியும் பழ வகைகளில் ஒன்றுதான் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். பழங்களைச் சாப்பிடுவதைப் போலவே தக்காளிப் பழத்தையும் அப்படியே சாப்பிட்டால் உடலிற்கு வளத்தையும் நல்ல பலத்தையும் கொடுக்கும். தக்காளிப் பழத்தை அப்படியே சாப்பிடுவது என்பது கிட்டத்தட்ட டானிக் குடிப்பதற்கு ஒப்பானது. அதுமட்டுமல்லாமல், தக்காளிப் பழத்தை எந்த வகையில் பக்குவப்படுத்திச் சாப்பிட்டாலும், அதன் சக்தி அப்படியே நமக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தக்காளிப் பழத்தில் அதிகபட்சமாக வைட்டமின் ஏ சத்து 91 மில்லி கிராம் உள்ளது. வைட்டமின் பி1 சத்து 34 மில்லி க…
-
- 0 replies
- 732 views
-
-
நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பு இயற்கையாகவே பலவீனமடைகிறதா அல்லது ஏதேனும் சில வழியில் அப்படி நடக்கிறதா? பல நேரங்களில், பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பு இருப்பது இயற்கையே. சிலர் தங்களின் சிறு வயது முதலே பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பை கொண்டுள்ளதாக கூறுவார்கள். ஆனால் சிலருக்கோ அவர்கள் உண்ணும் உணவுகள் மற்றும் வாழும் சுற்றுச் சூழலால் இது ஏற்படுகிறது. ஆம், பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பிற்கு சுற்றுச்சூழல் முக்கிய காரணமாக விளங்குகிறது. அது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பை பாதிக்கக்கூடும். அதே போல் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பை முழுமையாக அழிக்கும் உணவுகளும் கூட இருக்கிறது. அவைகள் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பை பலவீனமடைய செய்வதோடு மட்டும…
-
- 0 replies
- 400 views
-
-
கோடைக்காலம் ஆரம்பித்துவிட்டாலே எல்லோரும் பழமுதிர்ச்சோலைகளை நோக்கி படையெடுப்பார்கள். பழ ஜீஸ், குளிர்பானங்கள், தயிர், மோர் என்று குளிர்ச்சியான உணவுகளை உண்ணும் போது, கோடையில் சாப்பிடக்கூடாத உணவுகளையும் தெரிந்துகொள்ள வேண்டும். உடல் அதிகமாக வெப்படைந்துவிடுகிறது என்பதற்காக, அதிகமான குளிர்ச்சி உணவுகளை எடுத்துக்கொண்டால் உடல் சூட்டை கிளப்பிவிடும். அதனால், கோடையில் சில உணவுகளை தவிர்க்க வேண்டியது அவசியம். தேங்காய் எண்ணெய் குளிர்காலத்தில் உணவில் தேங்காய் எண்ணெயை சேர்த்து சாப்பிடுவது நல்லது. ஆனால் கோடையில் இதனை அதிகம் எடுத்துக் கொள்வதைத் தவிர்ப்பது தான் நல்லது. ஏனெனில் இவை உடலின் வெப்பநிலையை அதிகரிக்கும். தேங்காய் எண்ணெயில் ஆரோக்கியமான சாச்சுரேட்டட் கொழுப்புகள்…
-
- 0 replies
- 433 views
-
-
நீச்சல் பெரும்பாலும் எல்லோருக்கும் பிடித்த விசையம் தான் ஆனால் நீச்சல் தெரிந்தவர்களை பார்த்து நீச்சல் தெரியாதவர்களுக்கு ஒரு விதமான ஏக்கமாகவே இருக்கும் . நாமும் சிறு வயதில் நிச்சல் கற்று இருந்தால் இன்று நாமும் நீச்சல் அடித்து இருக்கலாமே என்று . நீச்சல் என்பது மிக முக்கியமானது நம் வாழ்க்கையில் .ஆபத்தான தருனக்கலில் நம் உயிரையும் பிறர் உயிரையும் காப்பாற்றும் ஒரு கலை என்றால் அது நீச்சல் கலை தான் .கிராம புறங்களில் பெரும்பாலும் உள்ளவர்கள் நீச்சல் கற்று கொண்டவர்களாக இருந்தனர் ஆனால் இரு அது கூட மாறி கொண்டே வருகிறது. குளம் ,குட்டை ,கடல் ,நீச்சல் தொட்டி ஒவ்வொரு கிராமத்து இளைஞனும் அவனது சிறுவயதில் நீச்சல் கற்க தந்தையுடனே இல்லை மாமாவுடனோ இல்ல ஊர்ல இருக்கிற அண்ணன்களுடனோ அ…
-
- 0 replies
- 1.4k views
-
-
கீரைகளின் ராஜா என்று அழைக்கப்படும் பொன்னாங்கண்ணி கீரையில், எண்ணற்ற மருத்துவகுணங்கள் நிறைந்துள்ளது. சாதாரணமாக கீரையின் காம்புகளை கிள்ளி வைத்தாலே எந்த சூழலிலும் வளரக்கூடிய கீரைதான் பொன்னாங்கண்ணி. இதில் பொன்னாங்கண்ணி கீரையில் ஊட்டச்சத்து, நீர்ச்சத்து, கொழுப்புச்சத்து, மினரல்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், புரதம் போன்ற சத்துகள் அடங்கியுள்ளது. இந்தக் கீரையை தொடர்ந்து 27 நாட்களுக்கு சாப்பிட்டால் பகலிலும் நிலவைப் பார்க்கலாம் என்று ஒரு பழமொழி உண்டு. அந்த அளவிற்கு கண்பார்வைக்கு மிக துல்லியமாக தெரிய உதவும். பயன்கள்! 1. பொன்னாங்கண்ணி கீரையுடன் மிளகும், உப்பும் சேர்த்து சாதத்துடன் சாப்பிட்டு வந்தால்உடல் எடை குறையும். 2. துவரம் பருப்பு, நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டால் உடல…
-
- 0 replies
- 510 views
-
-
மனநல ஆரோக்கியம்: கவலையை எப்படி உங்கள் நன்மைக்காக பயன்படுத்திக் கொள்வது? ட்ரேஸி டென்னிஸ் திவாரி பிபிசி ஃபியூச்சர் 20 அக்டோபர் 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES/JAVIER HIRSCHFELD கவலை மற்றும் நாம் சிறப்பாக வாழவில்லையோ என்ற எண்ணத்தினால் எழும் பயம் உட்பட பல்வேறு காரணங்களால் நவீன வாழ்க்கை மிகவும் சிக்கலானதாக உள்ளது. ஆனால் உளவியலாளர் ட்ரேசி டென்னிஸ்-திவாரி, இந்தக் கவலை நமக்கு நன்மை பயக்கும் என்கிறார். என் மகன் பிறவி இதய நோயுடன் பிறந்தபோது, நான் என்னை இழந்துவிட்டேன். அவனுக்கு இதய அறுவை சிகிச்சை தேவைப்பட்டது. மேலும், எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மையை நான் உணர்ந்தேன். முட…
-
- 0 replies
- 248 views
- 1 follower
-
-
பாதுகாப்பான மது குடிக்கும் அளவு என்ன? குடிப்பதை திடீரென நிறுத்தும்போது என்ன நடக்கும்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மது அருந்துதல் உடலை என்ன செய்யும்? கட்டுரை தகவல் எழுதியவர், சுபாஷ் சந்திர போஸ் பதவி, பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் பிப்ரவரி 1 முதல் டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுவின் விலை உயர்த்தப்பட்டுள்ளது என்ற தமிழக அரசின் சமீபத்திய அறிவிப்பு மதுபிரியர்கள் பலருக்கும் கவலை தரக்கூடியதாக அமைந்திருக்கலாம். ஆனால், அதே மதுவை இவ்வளவு விலைகொடுத்து வாங்கி அருந்துவதன் மூலம் வரக்கூடிய உடல் பாதகங்கள் அதை விட அதிர்ச்சி தரக்கூடியவை. எப்போதாவது மது…
-
- 0 replies
- 340 views
- 1 follower
-