நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3015 topics in this forum
-
பெண்களின் உடலில் இருக்கும் உறுப்புகளில் அவர்களின் அதிக கவனிப்பிற்குரிய உறுப்பாக இருப்பவை, மார்பகங்கள். இவை, பலருக்கு கவலைக்குரிய உறுப்பாகவும் இருக்கிறது. டீன்ஏஜ் பெண்கள் என்றால், ”சிறிதாக இருக்கிறது என்றும், ஒன்றுக்கொன்று அளவில் மாறுபாடு இருக்கிறதென்றும்” நினைக்கிறார்கள். திருமணமான பெண்கள் என்றால், 'சரிந்து, தொங்கி காணப்படுகிறது' என்று கவலைப்படுகிறார்கள். பெண்களின் இத்தகைய கவலைகள் நீங்க வேண்டுமானால் அவர்கள் மார்பகங்கள் பற்றிய உடலியல் உண்மைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். மார்பகங்கள் என்பவை கொழுப்பு திசுக்களால் சூழப்பட்ட பால் சுரப்பு நாளங்களை உள்ளடக்கியவை. ஒரு செடியைப் பிடுங்கிப் பார்த்தால், அதன் அடியில் எவ்வாறு பல கிளைகளாக வேர்கள் பரவிச் செல்லுமோ அதைப் போன்றுதான் மார்ப…
-
- 3 replies
- 4.9k views
-
-
ஒரு மனிதன் தந்தையாவதற்கு ஏற்ற வயது என்ன? எனது பாட்டா அப்பாவாகும்போது வயது 18 வயது மட்டுமே. எனது அப்பா 23 வயதில் அப்பாவானார். அப்பாவாகும்போது எனக்கு 32 வயதாகிவிட்டது. இன்றைய இளைஞர்களுக்கு இன்னமும் அதிக காலம் தேவைப்படுகிறது. நல்ல கல்வி, போதிய வருவாயுள்ள வேலை, புதிய மணவாழ்வில் சற்றுக் காலம் தொல்லையின்றி உல்லாச வாழ்வு. இவற்றையெல்லாம் முடித்துக் கொண்டு குழந்தை பெறுவதையிட்டு சிந்திக்கத் தொடங்குவதற்கு காலதாமதமாகி விடுகிறது இன்றைய இளைஞர்களுக்கு. வயது அதிகரிப்பும் அப்பாவாதலும் மேலும் முதிர்ந்த வயதில் அப்பாவாகும் பலர் மேலை நாடுகளில் இருக்கிறார்கள். வேலைப் பளு, இரண்டாவது தரம் மூன்றாவது தரம் என மணம்முடித்தல் போன்ற காரணங்களால் அங்கு தந்தையாவது தாமதமாகிறது பலருக்கு. இருந்போதும…
-
- 0 replies
- 701 views
-
-
கிராமங்களில் இன்றும் 'கருப்பட்டி' காபி என்றால் எக்ஸ்டிரா ஸ்பெஷல்தான். பதநீரை காய்ச்சி அதிலிருந்து பெறப்படும் கருப்பட்டிக்கு சுவை, மணம், மருத்துவ குணம் அதிகம் இருக்கிறது. அதிலும் இனிப்புக்காக மட்டும் இதைப் பயன்படுத்த வில்லை. இந்த கருப்பட்டியில் கூடுதலான மருத்துவத் தன்மை இருப்பதாலும்தான் அதைப் பயன்படுத்தினார்கள். பனங்கருப்பட்டி யில் சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்து தின்பண்டமாகவும் தயாரிக்கப்பட்டு வருகிறது. இப்படி உடல் நலனுக்கு மிகவும் உகந்தது என்பதால் இப்போது நகர மக்களிடையேயும் கிராக்கி அதிகரித்து வருகிறது. # இப்போது பரவலாகக் காணப்படும் டெங்கு நோயைக் குணப்படுத்த கரும்பு கருப்பட்டியும் சின்னவெங்காயமும் சிறந்த மருந்தாகும். என இலங்கை கரும்பு ஆராய்ச்சி ந…
-
- 0 replies
- 617 views
-
-
நீரழிவு நோய் என்றால் என்ன? நம் உடலில் உள்ள திசுக்களில் தேவையான சக்தியை, இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் வழங்குகின்றது. குளுக்கோஸில் இருந்து சக்தியைப் பெற்றுக் கொள்ள இன்சுலின் என்ற ஹார்மோன் தேவைப்படுகிறது. வயிற்றின் பின் பகுதியில் கணையம் (pancreas) என்னும் சுரப்பி உள்ளது. இங்குதான் இன்சுலின் உற்பத்தியாகிறது. இன்சுலின் அளவு குறையும் போது, உடலில் உள்ள திசுகளுக்கு தேவையான குளுக்கோஸை இரத்தத்தில் இருந்து பெறமுடிவதில்ல. இதனால் இரத்த ஓட்டத்தில் குளுக்கோஸின் (சீனியின்) அளவு அதிகமாகிறது. இரத்த ஓட்டத்தில் சேரும் அதிகப்படியான குளுக்கோஸ் அல்லது சீனி இதயம், சிறுநீரகங்கள், கண்கள், மற்றும் நரம்பு மண்டலம் மற்றும் இரத்த நாளங்களை பாதிக்கிறது. சரியான முறையில் மருத்துவர் ஆலோசனைகளைக…
-
- 1 reply
- 4.4k views
-
-
40 வயதுகளில் எம்மைத் தேடி வரும் ஆபத்தான நோய்கள் 40முதல் 60 வயது வரையிலான பருவம் மனித வாழ்க்கையில் மிக முக்கியமானது. இந்த காலக் கட்டத்தில்தான் பலவிதமான நோய்கள் மனிதர்களைத் தேடி வரும். அதற்கு இடம் கொடுத்து, உடலில் உட்காரவைத்துவிட்டால், ஆரோக்கியத்தை ஒட்டுமொத்தமாக கெடுத்து ஆளையே வீழ்த்திவிடும். நாம் கவனமாக இருந்தால் நோயை அண்டவிடாமல் தடுத்து, முழு ஆரோக்கியத்துடன் வாழலாம். 40 வயதின் பின் என்னென்ன நோய்கள் வரலாம்? உடல் எடை அதிகரித்தல் மன அழுத்தம் சர்க்கரை நோய் அதிக அளவில் கொழுப்பு சேருதல் உயர் ரத்த அழுத்தம் இதய நோய் எலும்பு மூட்டு நோய்கள் புற்று நோய் வாழ்வியல் முரண்பாடுகளால் ஏற்படும் நோய்கள்: மெட்டோபாலிக் சின்…
-
- 5 replies
- 3.6k views
-
-
ஒன்று : கண்ணாடி டம்ளரில் நிறைய தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் ஒரு சொட்டு தேனை விடவும். அது கரையாமல் கலங்காமல் அப்படியே அடியில் சென்று படிந்தால் ஒரிஜினலாம். இரண்டு : எவ்வளவு நாள் இருந்தாலும் எறும்புமொய்க்காதாம். மூன்று : ஒரு சிறிய துண்டு நியூஸ் பேப்பரை எடுத்து அதன்மேல் இரண்டு சொட்டுத் தேனைவிட்டால் அது பேப்பரின் பின்புறம் ஊறி கசியாமல் இருந்தால் சுத்தமான தேனாம். நான்கு : பார்ப்பதற்கு தூய செந்நிறமாக இல்லாமல் சற்று இளமஞ்சள் நிறத்தில் இருக்கும். சிறிது தொட்டு நக்கினால் தித்திப்பு நாக்கில் நீண்ட நேரம் இருக்காது. கூடவே சுவைத்தபின் மஞ்சள், சிவப்பு என்று எந்தக் கலரும் நாக்கில் ஒட்டியிருக்காது! இந்த நான்கு முறையுமே நல்ல தேனைக் கண்டுபிடிக்க நடைமுறைக்கு ஒ…
-
- 3 replies
- 474 views
-
-
நிறத்தில் வெள்ளையான உப்பும், சீனியும் குணத்தில் நஞ்சாகின்றது: சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், சர்க்கரை என்பதே வெள்ளை நஞ்சாக கருதப்பட்டு வருகிறது. ஆனால் மற்றொரு வெள்ளை அபாயம் இருப்பது நம்மில் பலருக்குத் தெரியாது அது – உப்பு. எவ்வளவு ருசியாகச் சமைத்தாலும் உப்பில்லாவிட்டால் அதை வாயில் வைக்க முடியாது என்பது உண்மைதான். அதே நேரம், உப்பு அளவுக்கு அதிகமாகும்போதும் பல உபத்திரவங்களை அளித்துவிடும். உங்கள் உடம்பில் உப்பு அதிகரித்தால், அதிகமான தண்ணீரை உடம்பு சேர்த்து வைத்துக் கொள்ள ஆரம்பிக்கும். அப்போது உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகப் பிரச்சினைகள், சிறுநீரகக்கற்கள் ஏன் பக்கவாத பாதிப்பு கூட ஏற்படும். அதிகமான உப்பு, ரத்தக் குழாய்களில் படிந்து, சீரான ரத்த…
-
- 1 reply
- 1.7k views
-
-
அனுப்பி வைத்தவர்: டாக்டர் நளினி சிவப்பிரகாசம் நோய்க்கான பொதுக் காரணிகள் ஒருவருடைய வாழ்கையில் எதிர் பாராது நிகழும் சில சம்பவங்கள், இழக்கப் படாததை இழந்ததால் ஏற்படும் துக்கம், எதிர் பார்த்த சில விடயங்கள் நடைபெறாது போவதால் ஏற்படும் ஏமாற்றம் (பரீட்சையில் சித்தியெய்தமுடியாது போவது, காதலில் தோர்வியடைவது) அல்லது சமூகத்திற்கு முகம் கொடுக்க முடியாத சமூக விரோத செயல்களில் ஏடுபட்டதால் ஏற்பட்ட குற்ற உணர்வு, கடன்பட்டு பின் அதனை செலுத்த முடியாது போவதால் ஏற்படும் மானநஷ்டம், பெரிய எதிபார்ப்புடன் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒருவர் திடீரென நோய்வாய்ப்பட்டு முடங்கிப் போவதால் ஏற்படும் திடீர் மாற்றம் என்பனவற்றால் ஒருவர் மனதை துன்புறுத்தும் மன வேதனையும், தாழ்வு உணர்வு (Low Mood) நிலையும…
-
- 2 replies
- 9.1k views
-
-
மதுளையில் சுண்ணாம்பு சத்து, தாது உப்புக்கள், இருப்பு சத்து என நோயை எதிர்க்கும் அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளன. இப்பழம் நோய் கிருமிகளை அறவே அழிக்கவும், இதயத்திற்கும் மூளைக்கும் புத்துணர்ச்சி அளிக்கவும் பயன்படுகிறது. உடலை பித்தத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள மாதுளை பெரும் பங்கு வகிக்கின்றது. வயிற்று வலிக்கு சிறந்த நீவாரணியாகவும், உடலில் உள்ள நீர்ச் சத்துக்களை அதிகரிக்கும் தன்மையும் மதுளம் பழத்திற்கு உண்டு. மாதுளம் பழத்தின் பூ, பழம், அதன் பட்டை என அனைத்திலுமே மருத்துவ குணம் அடங்கியுள்ளது. இது உடல் கடுப்பு மற்றும் சூட்டை தணிக்கும். மூல நோய் உள்ளவர்களுக்கு சிறந்த மருந்து எனலாம். இந்த பழத்தை சாறாக எடுத்து சாப்பிடுவதோடு பழமாகவே சாப்பிடுவதால் அனைத்துவிதமான நார்…
-
- 0 replies
- 765 views
-
-
வாழைப்பூவைப் பற்றி அறியாத தமிழர்கள் இருக்க முடியாது. வாழையை இந்தியாவிலும் இலங்கையிலும் வீட்டுத் தோட்டமாகவும், பெரிய தோட்டங்களாகவும் வளர்க்கின்றனர். வாழைத் தடல், வாழைத்தார், வாழை இலை, வாழைக்காய், வாழைப் பழம் என எல்லாமே அன்றாட சாப்பாட்டுப் பொருளாகவும், பூசைப்பொருளாகவும் பாவனையில் உள்ளன. வாழைமரத்தில் மொத்தம் 14 வகைகள் உள்ளன. இது செடி இனத்தைச் சேர்ந்தது. மரம்போல் நெடித்து வளர்வதால் வாழைமரம் என அழைக்கின்றனர். வாழைப்பூவில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க மாட்டோம். பூக்களின் மருத்துவக் குணங்களைக் கொண்டு பல நோய்களைக் சித்தர்கள் குணப்படுத்தியுள்ளனர். வாழைப் பூவின் மருத்துவக் குணங்களை அறிந்து கொண்டால் வையித்தியரிடம் செல்லாமலே சில நோய்களில் இருந்த…
-
- 4 replies
- 5.2k views
-
-
உயிர்க்கொல்லி நோயான பன்றி காய்ச்சல் “சுவைன் fப்ளூ” (Swine Flu) என்பது, H1N1 என்ற ஒரு வகை வைரஸால் பரவுகிறது. இது (Orthomyxoviridae) “ஆர் தோமைசோ வெரிடேட்” என்ற வைரஸ் குடும்பத்தை சேர்ந்தது. “சுவைன் புளூ” வைரசிலேயே 5 வகை உள்ளன. இதில் H1N1; H1N2; H3 N2 போன்ற வைரஸ் உட்பிரிவுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சில பிரதேசங்களில் இன்புளுவென்ஸா நோய் மீண்டும் தலைதூக்கியுள்ளதகவும் மக்களை விளிப்புடன் இருக்குமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. இது உயிர் கொல்லி நோயாகும். இந்நோய் இன்புளுவென்சா- A, இன்புளுவென்சா- B, மற்றும் இன்புளுவென்சா- C என்னும் மூன்று வகையான வைரஸஸினால் ஏற்படுகிறது. இதில் இன்புலியன்சா A யினால் மிக அதிகமான அளவிலும், இன்புலியன்சா C னால் மிக அரிதாகவ…
-
- 0 replies
- 1.2k views
-
-
நினைவாற்றல் அல்லது ஞாபக சக்தி எனப்படுவது. தான் அனுபவித்த, கற்றறிந்த விடயங்களை தேவைப்படும்போது மறுபடியும் நினைவிற்குக் கொண்டு வரும் ஒரு செயல்பாடாகும். நல்ல நினைவாற்றல் பெற்றுள்ள மனிதன் அறிவாற்றல் மிக்கவனாக எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்த இயலும். நினைவாற்றல் குன்றுவதனால் பல விடயங்களில் தோல்வி ஏற்பட்டு பின்தங்கிவிட நேரிடும். அதுவும் பள்ளி மாணவர்களுக்கு பரிட்சை நேரத்தில் அவர்களின் நினைவாற்றல் திறன்தான் கை கொடுக்கும். ஏதாவது ஒரு கேள்விக்கு பதில் மறந்து போனாலே டென்சன் ஆகிவிடுவார்கள். அதன் பின்பு அவர்களுக்கு கையும் ஓடாது, காலும் ஓடாது. அதே போன்றுதான் நேர்முக பரீட்சைக்கு தோன்றும் ஒருவருக்கும் உரிய நேரத்தில் சரியான பதில் தெரிந்திருந்தும் நினைவாற்றல் குறைவினால் பதில் கூற முடியாது தோ…
-
- 1 reply
- 14.9k views
-
-
கணுக்கால் பிரச்னைகள் மற்றும் சிகிச்சைமுறை பற்றி கோவை மனு மருத்துவமனையின் நிர்வாகி மற்றும் பிரபல ஆர்த்ரோஸ்கோபி, விளையாட்டுக்காயங்கள் மற்றும் மூட்டுமாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். பாரி செல்வராஜ் விழிப்புணர்வளிக்கிறார். விளையாட்டின்போதோ, வழுக்கி விழுவதாலோ அல்லது நாம் உபயோகிக்கும் காலணி பெரிதாக இருப்பதா லோ சில சமயங்களில் கணுக்கால் பிறழ நேரிடுகிறது. அவ்வாறு பிறழ நேரிடும்போது கணுக்காலில் வீக்கம் காணப்படும். நடக்கமுடியாமல் வலி ஏற்படும். நாம் காலில், சுளுக்கு விழுந்துவிட்டது என்று எண்ணி எண்ணெய் தேய்த்து நீவி விடுவோம். ஆனால் அது தவறான வழிமுறை. ஏனென்றால் கணுக்கால் பிறழும்போது காலில் உள்ள தசைநார்கள் அல்லது சதைபகுதி கிழிய நேரிடும். அதனால் காலில் வீக்கம் மற்றும் வலி ஏற்படும்.…
-
- 0 replies
- 401 views
-
-
உணவே மருந்து, மருந்தே உணவு என்பது தமிழர்களின் பாடம். நமது முன்னோர் தங்களுக்கு வரும் நோய்களை உணவில் மாற்றங்களை செய்வதன் மூலமே போக்கிக் கொண்டனர். இந்த வரிசையில் தமிழர்கள் உணவில் அடிக்கடி இடம் பெறும் ஒரு தாவரம் புதினா. மடிந்த விளிம்புகளுடன் கூடிய பச்சை பசேலென்ற இலைகளுடன் காணப்படும் புதினா அபாரமான மணமும், ருசியும் கொண்டது. புதினாவில் வயல் புதினா, கார்ன் புதினா, ஜப்பானிய புதினா, கோசி, பெப்பர் மின்ட் என்பன உள்பட 40 வகை புதினாக்கள் இருக்கின்றனவாம். இதில் ஏ.பி.சி வைட்டமின்கள், துத்தநாகம், தாமிரம், மாங்கனீசு, இரும்பு, பொட்டாசியம், சுண்ணாம்புச் சத்து, நார்ச் சத்து, புரதம் என்று பல சத்துக்கள் நிரம்பி காணப்படுகின்றன. இதில் உள்ள ஆண்டி ஆக்சிடன்ட் பொருட்கள் பெருங்குடல் புற்று நோயை…
-
- 0 replies
- 601 views
-
-
நமது உடலுடைய ஒவ்வொரு வெளி உறுப்புக்கும் உள் உறுப்புக்கும் தொடர்பு உண்டு. அந்த உடற்க்கூறியல் உண்மை பலருக்கு தெரிவதில்லை,,,,,,, நமது காதுக்கும் சிறுநீரகத்திற்கும் , கல்லீரலுக்கும் கண்ணிற்கும் , நுரையீரலுக்கும் மூக்கிற்கும் , இதயத்திற்கும் நாக்கிற்கும் , மண்ணீரலுக்கும் உதட்டிற்கும் தொடர்பு உண்டு . இந்த வெளி உறுப்புகளில் ஏதாவது பாதிப்பு இருந்தால், அதை நீங்கள் உணர்ந்தால் அது தொடர்புடைய உள்ளுறுப்பு பாதிக்கப் பட்டிருக்கும் , அந்த பாதிப்பை உங்கள் வெளி உறுப்பு முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும் , உங்கள் உறுப்பு முழுவதும் பழுது ஆவதற்குள் அந்த எச்சரிக்கையை அறிந்து அதற்க்கான சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது . இந்த படத்தில் உள்ள உருவ ஒற்றுமையை பார்த்தாலே உங்களுக்கு புரியும் . …
-
- 2 replies
- 1.3k views
-
-
கற்பூரவள்ளி வீடுகளில் அழகுக்காக வளர்க்கப்படும் மணி பிளானட் போல் , கற்பூரவள்ளியும் தொட்டிகளில் வளர்க்கப்படும் ஒரு கொடிவகை சிறு செடியாகும் .பெரும்பாலும் வீட்டில் வார்க்கப்படும் அது வீட்டுக்கு மட்டும் அழகை தருவதில்லை மனித உடலுக்கும் காசம் எனும் நோய் போன்ற மூச்சு குழாய் நோய்களில் இருந்து காத்து உடம்பிற்கும் அழகை தருகிறது . சும்மா சீந்திகிட்டே இருந்தால் அழகா இது அதில் இருந்து விடுதலை அளிக்கும். கற்பூர வள்ளியின் கழறிலை யைத்தின நற்பாலர் நோயெலா நாசமா யகலுமே இது தேரையர் குணபாடம் கூறுவது. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகுந்த பலனளிக்கக் கூடியது. இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா பகுதிகளில் அதிகம் வளர்கிறது. இதன் இலைகள் காரம் கலந்த சுறு…
-
- 1 reply
- 1.1k views
-
-
பொன்நகை அணிபவர்களின் உடல் அந்த நகையோடு சேர்ந்து பளபளப்பாக மின்னுவதைப் போல தினம் ஒரு கரட் உண்பவர்களின் உடலும் தகதகவென மின்னும். இதனாலேயே தாவரத் தங்கம் என்ற அடைமொழியோடு கரட் அழைக்கப்படுகிறது. காய்கறிகள் அதிகமான சத்துகளும், விட்டமின்களும் நிறைந்தவை என்பது நமக்கு எல்லோருக்கும் தெரிந்ததே, காய்கறி வகைகளில் ஒன்றான கரட் எல்லோரும் சாப்பிடுவதுண்டு. பச்சையாகவும் சாப்பிடுவர். மஞ்சள், செம்மஞ்சள் நிறங்களில் காணப்படும். எந்த வகை நோயாளர்களுக்கும் உகந்தது இது ஒரு கிழங்கு வகையாகும். மஞ்சள் முள்ளங்கி என்றும் கரட்டை அழைப்பர். தென்மேற்கு ஆசியா, ஐரோப்பாவில் காணப்பட்டக காட்டுக் கரட்டிலிருந்தே மஞ்சள் முள்ளங்கி தோன்றியது என்கிறார்கள் . கரட்டை பச்சையாகவும் உண்ணலாம் . கரட்டை சம்பல் போட்டு…
-
- 2 replies
- 738 views
-
-
மக்களால் தண்ணீருக்கு அடுத்தபடியாக அதிக அளவில் உட்கொள்ளப்படும் பானம் 'டீ' எனப்படும் தேநீர். 'கேமில்லா சினன்சிஸ்' என்ற தாவரவியல் பெயர் கொண்ட ஆண்டுதோறும் விளையும் பசுமையான பயிரான தேயிலையின் வடி சாறே தேநீர் ஆகும். தாவரம் ஒன்றாக இருந்தாலும் அதன் தயாரிப்பு முறையில் மாறுபடும்போது டீ பலவகையாக வகைப் படுத்தப் படுகிறது. ஒய்ட் டீ, மஞ்சள் டீ, கறுப்பு டீ, கிரீன் டீ என வகைப்படுத்தப் படுகிறது. பொதுவாக பறிக்கப்பட்ட தேயிலை உடனடியாக உலர்த்தபடாவிட்டால் வாடி வதங்கி ஆக்ஸிஜனேற்றம் அடந்து அதில் உள்ள குளோரோபில் எனப்படும் பச்சையங்கள் சிதைவுற்று 'டானின்' வெளிவருகிறது. இதுவே டீயின் துவர்ப்பு மற்றும் கசப்புத் தன்மைக்கு காரணமாகிறது. இது ஒருவகையான நொதித்தல் வினை போன்றதாகும். கிரீன் டீ தயாரிப்பில் இ…
-
- 6 replies
- 3.6k views
-
-
‘புத்தி சரியில்லாதவன் வெண்டையை தின்னா வெவரமாயிருவான்...’ என்று சில கிராமப்புறங்களில் சொல்வது உண்டு. இது ஓரளவல்ல... முழுக்க முழுக்க உண்மை. வெண்டைக்காயை அதிகமாக சாப்பிட்டு வரும் பட்சத்தில், அதன் காம்பை போலவே நமது புத்திக்கூர்மையும் நீ.....ளும். எந்த காரியத்தையும் தெளிவாக அணுகும் ஆற்றல் நமக்கு ஏற்படும் என ஆய்வுக்குறிப்புகள் தெரிவிக்கின்றன. வெண்டைக்காயில் உயர்தரமான பாஸ்பரசும், தாவரப்பசையும், நார்ப்பொருளும் உள்ளன. எளிதில் நமது உடலால் ஏற்றுக்கொள்ளப்படும் சிறந்த மாவுச்சத்துப் பொருட்களும் உள்ளன. இதன் பூர்வீகம் எத்தியோப்பியா. பின்னர் அப்படியே தனது ‘வேர் பரப்பி, இலை பரப்பி’ அரேபியா வழியாக மெல்ல...மெல்ல இந்திய மண்ணில் நுழைந்து காய்க்கத் தொடங்கியது. இதுதான் வெண்டையின் வரலாறு. அ…
-
- 1 reply
- 1.7k views
-
-
பனை, புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம். அறிவியல் வகைப்பாட்டில் இதை போரசசு (Borassus) என்னும் பேரினத்தில் அடக்குவர். இப் பேரினத்தில் பல சிற்றினங்கள் அடங்குகின்றன.நெடிய மரமாக 30 மீட்டர் உயரம் வரை பனைமரம் வளரும். இலைகள் நீட்டமாக விசிறி போல் இருக்கும். இலைகள் 2-3 மீட்டர் நீளம் இருக்கும். பூக்கள் சிறியவை. பழங்கள் (நுங்கு) பெரியதாக, வட்டமாக, பழுப்பு நிறத்துடன் இருக்கும். பொது வழக்கில் மரம் என்று தமிழில் வழங்கப்படினும், இது மர வகையைச் சார்ந்தது அல்ல. தற்காலத் தாவரவியல் அடிப்படையில் மட்டுமன்றித் தமிழ் இலக்கண மரபுகளின்படியும் பனையை மரம் என்பது தவறு. நெடிய மரமாக 30 மீட்டர் உயரம் வரை பனைமரம் வளரும். இலைகள் நீட்டமாக விசிறி போல் இருக்கும். இலைகள் 2-3 மீட்டர் நீளம் இருக்கும்.…
-
- 0 replies
- 493 views
-
-
முக்கனியின் உடல் நல பயன்கள் மாம்பழத்தின் உடல் நல பயன்கள் முக்கனியில் முதல் கனி மா. மாம்பழத்தில் 15% சர்க்கரை, 1% புரதம், பெருமளவு உயிர்ச்சத்துக்கள் ஏ, பி, சி ஆகியவை உள்ளன. பெரும்பாலான மாம்பழ வகைகள் இனிப்பாக இருப்பினும், சில மாம்பழங்கள் சற்றே புளிப்பாக இருக்கும். இந்தரகத்தைப் பொருத்து பழச்சதை மிருதுவாகவோ, கூழாகவோ, உறுதியாகவோ இருக்கும். மாங்காயின் பால் சிலருக்கு தோலில் எரிச்சலும், கொப்புளங்களும் உண்டாக்கலாம். மாம்பாலில் இருக்கும் அமிலப்பொருட்களே இதற்கு காரணமாகும். இந்திய மக்கள் மாம்பழம் உண்பதால் வயிற்றுத் தொல்லைகள் சரியாகும், இரத்த இழப்பு நிற்கும், இதய நலம் உண்டாகும் என நம்புகின்றனர். மனிதர்களுக்கு வைட்டமின் கி தினசரி 5000 யூனிட்டுகள் தேவை . மாம்பழம் அத்தேவையை நிறைவு ச…
-
- 0 replies
- 413 views
-
-
தமிழ் தந்த சித்தர்கள் கைக்குத்தல் அரிசியின் பயன் அரிசியை தவிட்டுடன் சேர்த்து சாப்பிடும் போது உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும். அதுபோல் அரிசியில் அடங்கியுள்ள மாவுப் பொருளை எளிதில் ஜீரணிக்கச் செய்யும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு எனும் பழமொழியை நாம் அறிந்திருப்போம். எந்தவொரு பொருளையும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அது பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதே இதன் பொருள். ஆனால் அதை முறியடிக்கும் மருந்தும் அந்த உணவிலேயே இருக்கிறது என்பதை பலர் அறிந்திருக்க மாட்டார்கள். இதைத்தான் சித்தர்கள் சத்துரு (பகைவன்) மித்துரு (நண்பன்) என்கின்றனர். அதாவது, மாம்பழம் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அது பின்விளைவுகளை ஏற்படுத்தும். ஆனால், அதோடு சிறிதளவு மாம்பருப்பையும் சேர்த்த…
-
- 0 replies
- 616 views
-
-
அனேகமானோரின், உடலில் உள்ள இரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதனால், அனீமியா என்னும் மறதி நோயால் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். அதில் இருந்து நிவாரணம் பெறுவதற்காக இரத்தத்தில் உள்ள இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதெற்கென கடைகளில் நிறைய மருந்துகள் விற்பனையாகின்றன. ஆனால் அவற்றை மட்டும் சாப்பிடுவதால் உடலில் இரத்தம் அதிகரிக்காது. ஒரு சில இயற்கையான வழிகளையும் தினமும் செய்ய வேண்டும். இதனால் உடலில் இரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, இரத்தம் சுத்தமாகவும், உடலும் ஆரோக்கியமாகவும் இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால், உடலில் இருக்கும் இரத்த அணுக்களின் எண்ணிக்கை செறிவாக இருக்க வேண்டும். இல்லையென்றால் உடலில் நோய்கள் அதிகம் ஏற்படும் வாய்ப்ப…
-
- 0 replies
- 660 views
-
-
வல்லாரை செயலில் "வல்லாரை அறிவில் "வல்லாரை ஆற்றலில் "வல்லாரை அதுவே மூலிகையில் ஒரு "வல்லாரை "வல்லார உண்டோரிடம் மல்லாடாதே' என்பது பழமொழி. சரஸ்வதியின் சாராம்சம் பொருந்திய மூலிகை . பிரம்மி என்று அழைக்கப்படும் இத்தாவரம் தரையில் படர்ந்து பரவும். படரும் தண்டிலுள்ள கணுக்களிலிருந்து வேர்கள் புறப்படுகின்றன. இந்தியா முழுவதும் ஈரப்பசை நிறைந்த இடங்களிலும், பெரும்பாலும் ஆறுகள், ஓடைகள் போன்ற நீர்ப்பாசனம் மிகுந்த வயல் வெளிகளிலும் காணப்படுகின்றன. இலைகள் வட்ட வடிவமாக தவளையின் பாதம் போன்ற அமைப்பில் உள்ள கீரை வகையைச் சேர்ந்தது. இதில் இலை பெரிதாக உள்ள இனம், இலை சிறிதாகவும் வேர் மிகுதியாக உள்ள இனம் என இருவகை உண்டு. வேர் மிகுந்து இலை சிறியதாக உள்ள இனம் மருத்துவ குணம்…
-
- 7 replies
- 1.7k views
-
-
நாம் ஒவ்வொருவருமே முதுமை என்ற ஒன்றை நோக்கி அன்றாடம் பயணம் செய்துகொண்டு இருக்கிறோம். முதுமை வந்துவிட்டால் அதில் கூன் விழுதல் நிகழ்வு இயல்பான ஒன்று. முதுமையில் கூன் விழுதலுக்கு பல காரணங்கள் உள்ளது. அவற்றில் மிக முக்கியமான ஒன்று முதுகெலும்பு பாதிப்படைதல் (Degeneration of vertebrae) லாகும். மனித உடலின் பின்புறத்தில், கழுத்துப் பகுதியில் ஆரம்பித்து, அடிப்பகுதியிலுள்ள `பிருஷ்டம்’ வரை உள்ள தண்டுவடத்தில், அடுக்கடுக்காக, ஒன்றன் கீழ் ஒன்றாக, வரிசையாக, 33 முதுகெலும்புகள் அமைந்துள்ளன. இதற்கு `வெர்டிப்ரே’ என்று பெயர். மனிதன் முதற்கொண்டு, பாலூட்டி விலங்குகள் அனைத்திற்கும் இந்தமுதுகெலும்புகள் உள்ளன. ஒவ்வொரு முதுகெலும்புக்கும் இடையில், `இன்டர் வெர்டிப்ரல் டிஸ்க்’ என்று சொல்லக்கூடிய …
-
- 2 replies
- 1.8k views
-