நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3015 topics in this forum
-
வேர் விட்டு வளரும் காய்கறிகளில் ஒன்றான சிவப்பு முள்ளங்கிக்கு பல்வேறு சிறந்த குணங்கள் உள்ளன. அதன் ஆரோக்கிய பலன்கள் பல்வேறு வகையிலும் உடலுக்கு நன்மை தருகின்றன. மாரடைப்பை தடுக்கவும், இதயம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகவும் மற்றும் புற்று நோய் வராமல் தடுக்கவும் என இதன் பலன்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம். நோய் எதிர்ப்பு சக்தியும், கண் பார்வைக்கு உதவியும், எலும்புகள் மற்றும் தோலை நலமுடன் வைத்திருக்கவும் சிவப்பு முள்ளங்கி உதவுகிறது. இதயத்தின் நண்பன் இதயத்தை நலமாக வைத்திருக்க விரும்புபவர்கள் சிவப்பு முள்ளங்கியை அதிகம் உட்கொள்ள வேண்டும். இதில் உள்ள எரிச்சலுக்கு எதிரான தன்மை இதயம் தொடர்பான வியாதிகளை தவிர்க்கிறது. ஃபோலேட் மற்றும் வைட்டமின் பி ஆகியவைகளையும் கொண்டிருப்பதால் இதய…
-
- 3 replies
- 5.3k views
-
-
jdlivi எழுதுற சித்த மருத்துவத்தை வாசிச்சு வாசிச்சு எல்லாத்தையும் முயற்சி செய்து பாக்கிறது இப்ப கொஞ்ச நாளா வழக்கமாப் போச்சு. "காலை இஞ்சி கடும்பகல் சுக்கு மாலை கடுக்காய் மண்டலம் உண்டால் விருத்தனும் பாலனாமே.- 48 நாட்கள் தொடர்ந்து உண்டுவர கிழவனும் குமாரனாகலாம் எண்டு அந்தத் திரியில ஒரு 10 இடத்திலாவது வந்திருக்கும். ஆசை ஆரைத்தான் விட்டுது. வாசிச்சு வாசிச்சு எனக்கும் ஆசை வந்திட்டுது. சரி எத்தனையோ செய்தாச்சு இதையும் செய்து பாப்பம் எண்டு கடையில போய் கடுக்காய் எண்டு கேட்டால் ஒருத்தனுக்கும் தெரியேல்ல. இரண்டாம் தரமும் அதே கடையில போய்க் கேட்க என் கரைச்சல் தாங்காமல் கடையில வேலை செய்யிற பெடியன் நட் மெக் கைத் தூக்கித் தந்தான். ரில்லில காசு குடுக்கேக்குள்ளையும் இது கடுக்காய் தான…
-
- 18 replies
- 5.8k views
-
-
இன்றைய காலகட்டத்தில் நாம் அனைவரும் உடலுக்கு கேடுவிளைவிக்கும் கோலா போன்ற கார்பானிக் குளிர் பானங்களையே அதிகம் அருந்துகிறோம். ஆனால் இளநீர் என்பது இயற்கையிலேயே உருவான உடலியல் இயக்கங்களுக்கு இன்றியமையாத பல தாது உப்புகள் அதிகமாக உள்ள ஒரு பானம் (Isotonic Drink). இது உடலுக்குக் குளிர்ச்சியை அளித்து இரத்தத்தில் சேர வேண்டிய தாது உப்புக்களைச் சேர்த்து உடலின் செயல்திறனை ஊக்குவிக்கிறது. இளநீர் இயற்கை அளித்த இனிய பானம் மட்டுமன்று, பல பிணிகளைத் தீர்க்கும் மாமருந்தாகவும் உள்ளது. இருதயம், கல்லீரல், சிறுநீரகம், கண்கள் மற்றும இரத்த நாளங்களில் உஷ்ணத்தின் ஆதிக்கம் இல்லாமல் இருக்க உறுதுணையாகிறது. மூல நோய், நாட்பட்ட சீதபேதி, ரத்த பேதி, கருப்பை ரணம், குருதிப் போக்குக் காரணமாக வரும் இரத்த சோக…
-
- 0 replies
- 424 views
-
-
குளிர்காலம் வந்தாலே நம்மை பல தொற்றுநோய்கள் தாக்க தொடங்கி விடும். அதனால், இந்த குளிர்காலங்களில் நாம் உட்கொள்ளும் உணவுகளை சிறந்த ஊட்டச்சத்து நிரம்பியவைகளாக தெரிவுசெய்து உட்கொள்ள வேண்டும். இதன் மூலம், குளிர்காலங்களில் ஏற்படும் ஜலதோஷம், காய்ச்சல் போன்ற நோய்களிடம் இருந்து நம்மை பாதுகாத்து ஆரோக்கியமாக உடல்வளத்தை பெறலாம். இஞ்சி சிகிச்சை மருத்துவப் பலன்களை பெற்ற இஞ்சி குழந்தைகள் மற்றும் பெரியோர்களால் உட்கொள்ளப்படும் பொதுவான உணவாகும். இது ஜலதோஷத்திற்கும், காய்ச்சலுக்கும் சிறந்த சிகிச்சையை அளிக்கக்கூடியது. இது குளிர்காலத்தில் வெப்பம் தரும் உணவுகளில் ஒன்றாகும். ஒரு கப் இஞ்சி டீ அருந்தினால், அது உங்கள் உடலில் உள்ள கொழுப்பு அமிலங்களை ஜீரணிக்க உதவி புரியும். மேலும், அசிடிட்டியை ப…
-
- 12 replies
- 1.1k views
-
-
அலுவலகத்திற்கு செல்லும் பலருக்கும் அதிகப்படியான வேலைப்பளுவினால் உண்டாகும் டென்ஷனால் மனஅழுத்தம் ஏற்படுகிறது. இத்தகைய மன அழுத்தத்தினால் ஒருவர் பாதிக்கப்பட்டால், அவர்களுக்கு வாழ்க்கையின் மீது வெறுப்பு வருவதோடு, எந்த ஒரு செயலையும் செய்ய முடியாமல் தவிப்பார்கள். வேலைக்கு செல்வது என்று முடிவெடித்துவிட்டால், நிச்சயம் சிலசமயங்களில் அங்கு அதிகப்படியான வேலையை செய்ய வேண்டிவரும். அப்படி அதிகப்படியான வேலையைச் செய்யும் போது, மனமானது சோர்ந்துவிடுவதோடு, உடல்நலத்தையும் பாதிக்கும். அதுமட்டுமின்றி, இந்த மன அழுத்தமானது வேலைப்பளுவினால் மட்டுமின்றி சுவையில்லாத உணவுகள், எரிச்சலூட்டும் வகையில் உடன் பணிபுரிவோர் செய்யும் செயல்கள், எதற்கு எடுத்தாலும் குறை சொல்லும் பாஸ் போன்றவற்றால் மூளையானது அதிக…
-
- 9 replies
- 1.9k views
-
-
இக்காலத்தில் பலரும் மிக ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்பான உடலுடனும் கவர்ச்சியாக வலம்வர விரும்புகின்றனர். இதற்காக உணவு கட்டுப்பாடுகளையும், ஜிம் போன்றவற்றையும் தேர்ந்தெடுக்கின்றனர். இது பலருக்கு பலன்களை தந்தாலும், தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதும், திட்டமிட்டபடி உணவை உண்பதும் கடினமான விடயமே. சரியான முறையிலும், குறைவாகவும், ஆரோக்கியமான உணவுகளையும் சாப்பிட வேண்டும். அதிகமான தண்ணீரை பருக வேண்டும், இது எடையை குறைப்பதற்கும் மற்றும் எடையை அதிகரிப்பதற்கும் உதவும். பாத்திரத்தின் அளவை குறையுங்கள் உங்களுக்கு உணவு பரிமாறும் போது எப்போதும் சிறிய தட்டு அல்லது சிறிய கிண்ணம் ஆகியவற்றை பயன்படுத்தவும், எப்போதும் இதை பின்பற்ற வேண்டும். பாத்திரத்தின் அளவு எப்போதும் தேவையான உணவை தாங்கும் வண…
-
- 0 replies
- 592 views
-
-
இஞ்சி சிகிச்சை: மருத்துவப் பலன்களை பெற்ற இஞ்சி குழந்தைகள் மற்றும் பெரியோர்களால் உட்கொள்ளப்படும் பொதுவான உணவாகும். இது ஜலதோஷத்திற்கும், காய்ச்சலுக்கும் சிறந்த சிகிச்சையை அளிக்கக்கூடியது. இது குளிர்காலத்தில் வெப்பம் தரும் உணவுகளில் ஒன்றாகும். ஒரு கப் இஞ்சி டீ அருந்தினால், அது உங்கள் உடலில் உள்ள கொழுப்பு அமிலங்களை ஜீரணிக்க உதவி புரியும். மேலும், அசிடிட்டியை போக்குவதற்கும் உதவி புரியும். வேர்க்கடலைகள்: குளிர்காலங்களில் பிராணவாயுவின் அளவு குறைவாக இருக்கும். அதனால், இந்த குளிர்காலங்களில் சரியான உணவுமுறையை பெறுவதற்கும் தேவையான பிராண வாயுவை உட்கொள்வதற்கும், இந்த வேர்க்கடலைகளை உங்கள் உணவில் சேர்த்து இவற்றை பெறலாம். இது குளிர்காலத்தில் வெப்பம் தரும் உணவுவகைகளில் ஒன்றாகும். தா…
-
- 0 replies
- 1.4k views
-
-
மாதுளம் பழத்தில் மருத்துவ குணங்கள் அதிகமாக உள்ளன. மதுளையில் சுண்ணாம்பு சத்து, தாது உப்புக்கள், இருப்பு சத்து என நோயை எதிர்க்கும் அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளன. இப்பழம் நோய் கிருமிகளை அறவே அழிக்கவும், இதயத்திற்கும் மூளைக்கும் புத்துணர்ச்சி அளிக்கவும் பயன்படுகிறது. உடலை பித்தத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள மாதுளை பெரும் பங்கு வகிக்கின்றது. வயிற்று வலிக்கு சிறந்த நீவாரணியாகவும், உடலில் உள்ள நீர்ச் சத்துக்களை அதிகரிக்கும் தன்மையும் மதுளம் பழத்திற்கு உண்டு. மாதுளம் பழத்தின் பூ, பழம், அதன் பட்டை என அனைத்திலுமே மருத்துவ குணம் அடங்கியுள்ளது. இது உடல் கடுப்பு மற்றும் சூட்டை தணிக்கும். மூல நோய் உள்ளவர்களுக்கு சிறந்த மருந்து எனலாம். இந்த பழத்தை சாறாக எடுத்து சாப்பிட…
-
- 3 replies
- 1.1k views
-
-
கீரையை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நோய்கள் நம்மை நெருங்காது. எல்லாவித கீரையிலும் பலவகையான மருத்துவ குணங்கள் உள்ளது. மனிதர்களது உடல் உள வளர்ச்சியில் கீரை பெரிதும் முக்கியத்துவம் வகிக்கின்றது. கீரையானது நாட்டுக்கு நாடு காலநிலைகளின் மாறுதல்களிற்கு ஏற்ப்ப பலவகையாக விழைவிக்கப்படுகின்றது. அவை ஒவ்வொன்றும் தனித்தனி தன்மைகளைக் கொண்டுள்ளன. வெந்தயக்கீரை: உடலுக்கு ஊக்கத்தை அளிக்கும். வயிற்றுப் புண்கள், பேதியை குறைக்கும். அதிகமாக இரும்புச்சத்து கொண்டது. முருங்கை கீரை: உடலுக்கு சக்தியையும், வலிமையையும் அளிக்கும். இரும்புச்சத்து அதிகம் உள்ளது. ஆண்மையை அதிகரிக்கச்செய்யும். மலச்சிக்கலை குறைக்கும். ரத்தத்தை சுத்தப்படுத்தும். மாதவிலக்கின் போது ஏற்படும் வ…
-
- 0 replies
- 644 views
-
-
உணவு எவ்வாறு ஆற்றலாக மாற்றப்படுகின்றது என்பதை, அறிவியல் முறைப்படி பார்க்கலாம். இயற்கை சார்ந்த உணவு முறைகள் தலைப்பிற்குள் செல்வதற்கு முன், உணவு எவ்வாறு ஆற்றலாக மாற்றப்படுகின்றது என்பதை, அறிவியல் முறைப்படி பார்க்கலாம். நாம் உண்ணும் உணவில் ஆறு முக்கிய ஊட்ட சத்துக்கள் ( Six Essential Nutrients ) உள்ளன. அவை , 1. புரதங்கள் ( Proteins ) 2. மாவுச்சத்து ( Carbohyrates ) 3. கொழுப்பு ( Fats ) 4. தாதுக்கள் ( Minerals ) 5. உயிர் சத்துக்கள் ( Vitamins ) 6. தண்ணீர் ( Water ) ஆகியன ஆகும். இதில் நம் உடலுக்கு ஆற்றலை கொடுப்பவை புரதங்கள், மாவுச்சத்து மற்றும் கொழுப்பு ஆகும்.எனவே இவை மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. இவற்றுள் மாவுச்சத்து ( சர்க்கரை ) உடனடி ஆற்றலை அளிக்க வல்லது. பு…
-
- 0 replies
- 459 views
-
-
கொழுப்பைக் குறைக்க ஒரு டஜன் டிப்ஸ்! என்ன கொழுப்பு அதிகமாயிடுச்சா?' என்று கேட்டால், எல்லோருக்கும் கோபம்தான் வரும். கொழுப்பு அதிகரிப்பதுதான் இன்றைக்கு பல்வேறு உடல் நலக் குறைபாடுகள் வருவதற்குக் காரணம். குறிப்பாக உடல் பருமன், மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் வருவதற்கு, கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதுதான் முக்கியக் காரணம். கொலஸ்ட்ரால் என்றால் என்ன, அது ஆபத்தானதா, கண்டறிவது எப்படி என்று இதய நோய் சிகிச்சை நிபுணர் ஆர்.ரவிகுமாரிடம் கேட்டோம். 'இன்றைக்கு 'கொலஸ்ட்ரால்’ என்ற பெயரைச் சொன்னாலே, ஏதோ மிகப் பெரிய அபாயகரமான நோயாகத்தான் பார்க்கப்படுகிறது. உண்மையில் கொலஸ்ட்ரால் அதிகமாகும்போதுதான் பிரச்னை. நம் உடல் செல்கள் உற்பத்திய£வதற்கும், சில ஹார்மோன்கள் சுரப்பதற்கும் கொலஸ்ட்ரால் அவ…
-
- 2 replies
- 23.2k views
-
-
தேன்: தேன் கலவைகள் ஆரோக்கிய வாழ்க்கைக்கு உதவும். தேனின் மருத்துவ குணங்கள் அனைவரும் அறிந்ததே. பின்வரும் தேன் கலவைகள் ஆரோக்கிய வாழ்க்கைக்கு உதவும். கண் பார்வைக்கு தேனை கேரட் சாறுடன் கலந்து காலை ஆகாரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் பருகினால் கண் பார்வை விருத்தியடையும். இருமலுக்கு சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறு கலந்து அருந்தினால் இருமல், தொண்டை வலி, மார்பு சளி, மூக்கு ஒழுகுதல் மற்றும் மூக்கடைப்பு போன்ற உபாதைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும் ஆஸ்துமா அரை கிராம் கருப்பு மிளகை பொடி செய்து சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறுடன் கலந்து அருந்த ஆஸ்துமா குணமாகும் இரத்த கொதிப்பு ஒரு தேக்கரண்டி அளவு பூண்டு சாறுடன் இரண்டு டீ கரண்டி தேன் சேர்த்து தினமு…
-
- 7 replies
- 3.2k views
-
-
உயிருக்கு ஆபத்து விளைவிக்கும்... நச்சு உணவுகள். உலகில் எத்தனையோ ஆரோக்கியமான உணவுகள் உள்ளன. அந்த உணவுகள் அனைத்தும் நமக்கு நன்மையை மட்டும் தான் விளைவிக்கும் என்று நினைத்தால் அது தவறு. ஏனெனில் அந்த உணவுகள் சில நேரங்களில் தீமையை கூட விளைவிக்கும். அதிலும் உயிர் போகும் அளவிலான தீமையை விளைவிக்கும். எப்படியெனில் நாம் உண்ணும் ஒவ்வொரு உணவிலும் உயிருக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் ஒரு குறிப்பிட்ட கெமிக்கல்கள் இருக்கிறது. ஆனால் அதைப் பற்றி யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே தமிழ் போல்ட் ஸ்கை நச்சுத்தன்மை நிறைந்திருக்கும் சில உணவுகளைப் பட்டியலிட்டுள்ளது. இந்த உணவுகளை சாப்பிட்டால் உடனே உயிர் போகாது. மாறாக, வாழ்நாளின் எண்ணிக்கை குறையும். குறிப்பாக இந்த உணவுகளை தவறான…
-
- 0 replies
- 2.1k views
-
-
-
வேம்பு.! வேம்பு தமிழர்களின் பண்பாட்டோடும், பழக்க வழக்கங்களோடும், வாழ்வோடும், வழிபாட்டோடும் பின்னிப் பிணைந்து விட்ட ஒன்றாகும். சங்க இலக்கியங்களிலேயே “தெய்வம் சார்ந்த பராரை வேம்பு” என்று வேம்பு சிறப்பிக்கப்படுகிறது. இப்படிப்பட்ட வேம்பு மருந்தாகித்த தப்பா மரம் என்பதை சித்தர்கள் அறிந்தனர். அவர்கள் சொன்னவற்றை இன்றைய விஞ்ஞானிகளும் ஏற்றுக் கொள்கின்றனர். இன்று வரை 30-க்கும் மேற்பட்ட தாவர இரசாயனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இலை, பட்டை, விதையிலுள் தைலம் பலவகையான பாக்டீரியாக்களைக் கட்டுப்படுத்தும் திறன் உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.Streptomycinie போன்ற மருந்துக்கும் கட்டுப்படாத காசநோய் கிருமிகள் வேப்ப எண்ணெய்க்கு கட்டுப்படுவதாக ஆய்வு அறிக்கைகள் சொல்லுகின்றன. லக்னோவிலுள்ள …
-
- 1 reply
- 708 views
-
-
”நளினி அம்பாடி சிகிச்சைகள் பலனளிக்காமல் அக்டோபர் 28 2013, அன்று போஸ்டனில் இறந்தார்” என ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. சமூக உளவியல் துறையில் உலகெங்குமுள்ளவர்களை அதிர்ச்சியும் சோகமும் அடைய வைத்த செய்தி இது. இதற்கும் மேல் அதிர்ச்சியும் கோபமும் நமக்கு வரவேண்டும். அவர் இறந்ததற்குக் காரணம் சிகிச்சையில் குறைவோ, புற்றுநோயின் தீவிரமோ இல்லை. இந்தியர்களான நமது பாமரத்தனம். நமது அறிவின்மை, உலக அளவில் ப்ரசித்தி பெற்ற இந்திய வம்சாவளியரான உளவியல் நிபுணரைக் கொன்றிருக்கிறது. யார் இந்த நளினி அம்பாடி? ஏன் அவர் இறந்ததற்கு நாம் குற்ற உணர்வு கொள்ளவேண்டும்? நளினி அம்பாடி, கேரள மாநிலத்தவரானாலும் படித்தது கல்கத்தாவிலும், டெல்லியிலும். பின்னர் அமெரிக்கா சென்று மேற்…
-
- 4 replies
- 3.5k views
-
-
• காலிஃப்ளவர் பூ வகையைச் சேர்ந்தது. • இது சாதாரணமாக வெள்ளையாகவோ இளம் மஞ்சளாகவோ காணப்படும். இவற்றில் வயலட் கலர் காலிஃப்ளவரும் உண்டு. • காலிஃப்ளவர் பூவைவிட பூவை மூடியிருக்கும் பச்சை இலைகளில் அதிக கால்சியம் சத்து உள்ளது. • காலிஃப்ளவர் உணவு வகைகளில் பூண்டைச் சேர்த்துக்கொண்டால் வாயுத் தொந்தரவும் ஏற்படாமல் தடுக்கலாம். • இதில் வைட்டமின் பி1, 2, 3, 4, 5, 6 மற்றும் பி9 வைட்டமின்கள் காணப்படுகின்றன. • காலிஃப்ளவரை வாரம் இருமுறை உட்கொண்டால் நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்கும். • இதில் சல்போராபேன் மற்றும் இண்டோல்-3- கான்ஃபினோல் போன்ற கலவைகள் இருப்பதால் புற்றுநோயை எதிர்க்கும் சக்தி கொண்டது. • காலிஃப்ளவரை அலுமினியம், இரும்பு பாத்திரத்தில் வ…
-
- 7 replies
- 698 views
-
-
கசக்கும் காய் என்றாலும் பாகற்காயை சமையலில் சேர்த்துக் கொள்வதில் இருந்தே இதன் முக்கியத்துவம் புரியும். அதிலுள்ள சத்துக்களை பட்டியலிடுவோம்… * அறிவியல் பெயர் மொமோர்டிகா சாரன்டியா. தெற்கு ஆசியாவை தாயகமாகக் கொண்டவை. தற்போது ஆசியநாடுகள் முழுமையும் பரவலாக விளைகிறது. ஆண்டு முழுவதும் சந்தையில் விற்பனைக்கு கிடைக்கும். * குறைந்த ஆற்றல் வழங்குபவை பாகற்காய்கள். 100 கிராம் பாகற்காயில் 17 கலோரி ஆற்றலே உடலுக்கு கிடைக்கிறது. * பாகற்காயின் விதைகள் எளிதில் ஜீரணமாகும் நார்ப்பொருட்கள், தாதுஉப்புக்கள், வைட்டமின்கள், நோய் எதிர்ப்பு பொருட்களைக் கொண்டது. * ‘பாலிபெப்டைடு-பி’ எனப்படும் குறிப்பிடத் தக்க சத்துப்பொருள் பாகற்காயில் காணப்படுகிறது. இதனை தாவரங்களின் ‘இன்சுலின்’ என்று கருது…
-
- 11 replies
- 3.1k views
-
-
காலை கவனிப்பதுண்டா? காலை கவனிப்பதுண்டா? எல்லா பாரத்தையும் தாங்குதே: உடலின் மொத்த பாரத்தையும் தாங்குவது கால் தான். ஆனால், இதனை பராமரிப்பதில் எத்தனை பேர் அக்கறை காட்டுகின்றனர் என்பது கேள்விக்குறி தான். தினமும் காலை, மாலை வேளையில் குளிக்கும் போது, காலை சுத்தமாக கழுவிக்கொள்வதில் இருந்து, வெளியில் போய் விட்டு வீடு திரும்பினால், காலை சுத்தம் செய்வது வரை மிக முக்கியமானது. ஆனால், காலை சரியாக கூட கழுவத்தெரியாதவர்கள் இல்லாமல் இல்லை. கால் வழியாக பாக்டீரியா கிருமிகள், உடலில் புகுவதற்கு இடமுண்டு; அதுபோல, பூச்சி கடித்து, அதன் மூலம் நோய் வரும் ஆபத்தும் உண்டு. அதனால் , கால் மீது அதிக கவனம் தேவை. *** புறக்கணிப்பதா? : உடலில் மற்ற பாகங்களை போல கால் சுத்தமாக, ஆரோக்…
-
- 4 replies
- 2.6k views
-
-
குடிப்பழக்கத்தால் ஏற்படும் மூளைக்கோளாறுகள்! அதிகமான மதுபானம் அருந்துவதால், மூளையின் அமைப்பிலேயே கோளாறுகள் ஏற்படுகின்றன என்றும், மேலும் நரம்பு - மனோவியல் மண்டலங்கள் பழுதடைவதாகவும் புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது! ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக ஸ்கூல் ஆஃப் மெடிசின் மனோவியல் மற்றும் நடத்தை விஞ்ஞான பேராசிரியை சல்லிவான், நீண்ட நாளைய மதுபான பழக்கத்தால் மூளையில் அமைப்பு ரீதியான மாற்றங்களும், நரம்பு - மனோவியல் மண்டல கோளாறுகளும் ஏற்படுவதாகக் கூறுகிறார். பிரச்சினைகளைத் தீர்க்க முடியாமல் அவதிப்படுவதும், நிகழ்வுகளை வரிசைக்கிரமத்துடன் சொல்வதிலும், செய்வதிலும், ஞாபக மறதியும், ஒரே சமயத்தில் பல வேலைகளைச் செய்யும் திறனையும் மது அடிமைகள் இழக்கின்றனர் என்கிறார் சல்லிவான். நினைத்ததைச் செயல…
-
- 7 replies
- 737 views
-
-
சமூக மட்டத்தில் ஒழிக்கும் தேசிய திட்டம் பூச்சித் தொல்லை "அங்கை பொடியளுக்கு பூச்சி மருந்தே குடுக்கிறாங்கள் இல்லையாம். அதுதான் உங்களிட்டை கூட்டிக் கொண்டு வந்தனான்" பெர்பியூம் வாசனை அறை முழுவதையும் நிறைந்;தது. தாய் மகளையும் இரண்டு பேரப் பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு வந்திருந்தாள். அவர்கள் அமெரிக்காவில் வாழ்பவர்கள். விடுமுறைக்கு தாய்நாடு வந்திருந்தார்கள். பொதுவாகக் பூச்சி என்று சொல்லப்படும் குடற் புழுக்கள் அங்கு தொற்றுவதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு. அதனால் பூச்சி மருந்து வழமையாக கொடுக்க வேண்டிய தேவை அங்கு ஏற்படுவதில்லை. "போன மாதம்தான் பூச்சி மருந்து குடுத்தனீங்கள். இப்ப இரவிலை பல்லை நெறுமுறான் திருப்பி ஒருக்கால் குடுப்பம் " என்றார் மகனோடு வந்த இளம் தந்தை. பல் நொறுமுவதற…
-
- 0 replies
- 1.4k views
-
-
ரத்தத்தை சுத்தமாக வைக்கும் உன்னத உணவு பொருட்கள் உடல் ஆரோக்கியமானது ரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதில் தான் உள்ளன. ஏனெனில் உடலின் அனைத்து செயல்பாடுகளுக்கு ரத்தமா னது மிகவும் இன்றியமையா தது. எனவே அத்தகைய ரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இல்லா விட்டால், உடலில் நச்சுக்களின் அளவு அதிகரித்து, உடலின் உறுப்புக்கள் மெதுவாக பாதிக்கப்படும். இவ்வாறு அதிகப்படியான நச்சுக்கள் ரத்தத்தில் இருந்தால் தான், அலர்ஜி, நோயெதிர்ப்பு சக்தி குறைபாடு, தொடர்ச்சியான தலை வலி, சோர்வு போன்றவை ஏற்படும். அதுமட்டுமின்றி, அசுத்த ரத்தமானது உடலில் இருந் தால், உடலில் மட்டுமின்றி, சருமத்திலும் பல பிரச்சனைகள் ஏற்படும். அதில் பிம்பிள், முகப்பரு, கருமைப்படிதல், பொலிவிழந்த சருமம் மற்று…
-
- 0 replies
- 2.6k views
-
-
தூக்கமின்மை டாக்டர் ஜி. ஜான்சன் குழந்தைப் பருவத்தைத் தாண்டிய பிறகு நாம் உலகத்துடன் இணைந்து வாழ பழகிக் கொள்கிறோம். இயற்கையில் மாறி மாறி வரும் 24 மணி நேரத்தில் இரவில் 6 முதல் 8 மணி நேரம் தடையில்லாமல் தூங்குகிறோம். இதில் ஒரு சில நாட்கள் தூக்கம் இல்லாமல் போனால் கெடுதி இல்லை. ஆனால் தொடர்ந்து சரியான தூக்கம் இல்லையேல் அது மோசமான விளைவுகளை உண்டாக்கிவிடும். மூவரில் ஒருவருக்கு இதுபோன்ற தூக்கப் பிரச்னை உள்ளது. இதில் பெண்கள் இரு மடங்கினர் அடங்குவர்.நாம் தூங்கும் முறை வயதைப் பொறுத்து அமைவதால் பெரும்பாலும் முதிர் வயதுடையோரிடையே தூக்கப் பிரச்னை அதிகம் காணலாம். தூக்கமின்மையை ( insomnia ) துயிலொழி நோய் என்றும் கூறுவார். நாம் தூக்கமின்மை என்றே அழைப்போம். தூக்கமின்மை மூன்று வ…
-
- 8 replies
- 1.6k views
-
-
சித்த மருத்துவத்தில் பூவரசம் பூக்கள் பூவரசம் மரத்தில் இதய வடிவ இலைகளின் நடுவே மஞ்சள் வர்ணத்தில் பூத்துக்குலுங்கும் பூவரச மரத்தின் பூக்கள் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இந்த மலர்கள் உண்பதற்கு உகந்தவை என்று சித்தமருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாக இந்த இலைகளை விஷத்தை போக்கும் வல்லமை உடையதால் இதனை பூச்சிக்கடி மற்றும் விஷ வண்டுகடிகளுக்கு மருந்தாக இந்த பூக்களை சித்த மருத்துவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். நீர் பாதியாக சுண்டும் போது இறக்கி வடிகட்டி காலை மாலை வேளைக்கு இரண்டு அவுன்ஸ் குடிக்கவேண்டும். தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தினமும் இதுபோல புதிதாக கஷாயம் தயாரித்து குடித்து வரவேண்டும். பின்னர் மூன்று நாட்கள் இடைவெளி விட்டு, மறுபடியில் மூன்று நாட்கள் சா…
-
- 7 replies
- 1.2k views
-
-
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கான உணவுப் பழக்கங்கள் நம் உடம்பிற்குத் தேவையான ஊட்டச் சத்துக்கள் மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து மற்றும் தண்ணீர் என நான்கு வகையென நாம் தெரிந்து கொண்டோம். அடுத்த கட்டமாக இந்த நான்கு ஊட்டச்சத்துகளில் இருந்து என்ன அடிப்படையில் நமக்குத் தேவையான உணவை தேர்வு செய்ய வேண்டும் என இப்பொழுது பார்ப்போம். நம் உடம்பிற்கு முக்கியமாக தேவைப்படுகின்ற ஊட்டங்கள் ஏழு ஆகும். ஆகவே இந்த ஏழு ஊட்டச் சத்துக்களை வழங்கும் உணவு வகைகளைத்தான் நாம் உட்கொள்ள வேண்டும் என்றாகின்றது. அந்த ஏழு ஊட்டச் சத்துக்கள் முறையே விட்டமின்கள், தாதுக்கள், ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ், நார்ச்சத்து, என்சைம்கள் எண்ணெய் மற்றும் தண்ணீராகும். விட்டமின்கள்: நம் உடம்பில் உள்ள செல்கள் மற்றும்…
-
- 0 replies
- 3.5k views
-