நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3030 topics in this forum
-
இன்றைய உலகில் பலருக்கு தூக்கமின்மை என்பது ஒரு வியாதியாகவே இருந்துவருகிறது. இவ்வியாதிக்கு மருந்தை தேடுபவர்கள், பாட்டி கூறும் வைத்தியம் முதல் நவீன மருத்துவர்கள் கூறும் சிகிச்சை முறைகள் வரை அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் முடிவுக்கு வருகின்றனர். உடலின் ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் ஆணையிட பல்வேறு திரவங்கள் மற்றும் சுரப்பிகள் செயல்பட்டுவருகிறது. இதில் நமக்கு தூங்க கட்டளையிடும் ஒரு வேதியியல் பொருள் மெலடோனின். இதன் குறைபாட்டாலேயே இன்று பலர் தூக்கமின்மை வியாதிகளால் தவித்துவருகின்றனர். மருத்துவத்துறையில் உள்ள தூக்க மாத்திரைகளில் இது கட்டாயம் இருக்கும். ஆனால் யாரோ தயாரித்த வேதியியல் பொருளை சாப்பிட்டு தூங்க முயற்சி செய்யும் நாம், இயற்கை அளித்துள்ள வரப்பிரசாதங்களை பயன்…
-
- 0 replies
- 602 views
-
-
வாழ்க்கைமுறை மாற்றத்தால் ஏற்படும் உடல்நல கேடுகள்- ஆலோசனைகள்
-
- 0 replies
- 601 views
-
-
ஆசைக்கோ, ஆஸ்திக்கோ.. ஒரு பெண், ஒரு பிள்ளை வேண்டும் என்பது பலருக்கு ஆசை. நினைப்பதெல்லாம் நடக்கிறதா. மாறிப் பிறந்து பல வீடுகளில் சண்டை மண்டை உடைகிறது. இந்த விஷயத்தில் சூப்பர் அட்வைஸ் சொல்லியிருக்கின்றனர் விஞ்ஞானிகள். கர்ப்பிணிகளின் உணவுப் பழக்கத்துக்கும் பிறக்கும் குழந்தையின் பாலினத்துக்கும் இருக்கும் தொடர்புகள் பற்றி ஹாலந்தின் மாஸ்ட்ரிச் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வு நடத்தினர். முதலில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தவர்கள், பெண் குழந்தைகளுக்கு விரும்பம் தெரிவித்தவர்கள் என பல்வேறு தரப்பினர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். 23&42 வயதுக்கு உட்பட்ட 172 பெண்களிடம் விஞ்ஞானிகள் தொடர்ந்து 5 வருடங்கள் கண்காணித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவர்களுக்கு பிரட், காய்கறிகள், பழவ…
-
- 0 replies
- 600 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES உப்பு நமது உணவை சுவையாக்குகிறது. அது மனித வாழ்க்கைக்கும் இன்றியமையாதது. உடலில் உள்ள நீரின் அளவை பராமரிக்க, உப்பில் இருக்கும் சோடியம் மிகவும் அவசியம். சத்துக்களை உடல் உறிஞ்சுவதற்கும் அது உதவுகிறது. பிபிசி உலக சேவையின் 'தி ஃபுட் செயின்' (The Food Chain) என்ற நிகழ்ச்சி, மனித உடலில் உப்பின் முக்கிய பங்கு என்ன என்பது குறித்தும், எவ்வளவு உப்பு உடலுக்கு உகந்தது என்றும் அலசியது. உப்பின் முக்கியத்துவம் “உப்பு வாழ்க்கைக்கு அவசியமானது” என்று ஒரே வாக்கியத்தில் உப்பின் முக்கியத்துவத்தைக் கூறுகிறார், அமெரிக்காவின் ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தின் ஊட்டச்சத்து அறிவியல் துறையின் பேராசிரியராக இருக்கும் பால் ப்ரெஸ்லின்.…
-
- 0 replies
- 600 views
- 1 follower
-
-
உலக நீரிழிவு தினம்: இந்தியாவில் ஏழை நோயாளிகள் இன்சுலின் வாங்குவதில் உள்ள சவால்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் சுமதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது), ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிரியராகப் பணியாற்றியவர். தன் இரு மகள்களும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் தனது வேலையை விட்டு இந்தியா திரும்ப வேண்டியிருந்தது. நீரிழிவு நோய் (வகை 1) இருப்பதால் அவர்களுக்கு இன்சுலினை ஊசி வழியாகச் செலுத்த வேண்டியுள்ளது. ஒவ்வொரு மாதமும் வழக்கமான செலவுகள் போக, இன்சுலின் ஊசிக்கு மட்டுமே ரூ.20 ஆயிரம் செலவிடுகிறார்கள். மத்திய – மாநில அரசுகள் சில உதவிகளை வழங்கி வந்தாலும், இன்சுலின் தேவைப்படும் ஏராள…
-
- 0 replies
- 600 views
- 1 follower
-
-
உடலில் உள்ள உறுப்புகளில் கல்லீரல் மிகவும் முக்கியமான ஒரு உறுப்பு. ஒரு வேளை கல்லீரல் சரியாக இயங்காவிட்டால், உடனே அதற்கு சரியாக சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். சில நேரங்களில் கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால், அதை தெரிந்து கொள்வது என்பது மிகவும் கடினம். ஏனெனில் கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால், அதற்கு சில அறிகுறிகள் உள்ளன. ஆனால் அந்த அறிகுறிகள் சாதாரணமாக உடலில் அவ்வப்போது வரும் என்பதால், சரியாக அதனை கவனிக்கமாட்டோம். இந்த மாதிரி கல்லீரல் பாதிப்படைவதற்கு ஆல்கஹால் அதிகம் குடிப்பது, அதிகமான எண்ணெய் உள்ள உணவுகளை சாப்பிட்டு, அதனால் கல்லீரலில் கொழுப்புக்கள் அதிகம் சேர்ந்து பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மேலும் சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருந்தால், கல்லீரலில் கொழுப்புகள் தங்கிவிடும். இ…
-
- 0 replies
- 600 views
-
-
மெல்லத் தமிழன் இனி...! 18 - ஏழு தலைமுறை தாண்டியும் தாக்கும் ஏவுகணை! கடந்த அத்தியாயத்தில் அந்த இளைஞருக்கு எந்த ஒரு பிரச்சினையும் இல்லை; ஆனால், அவர் ஏன் மது அருந்துகிறார் என்று அவரைப் பரிசோதித்த மருத்துவர்களாலும் சொல்ல இயலவில்லை என்று குறிப்பிட்டிருந்தோம். கட்டுரையைப் படித்துவிட்டு நிறைய பேர் தொடர்புகொண்டு காரணங்களை அடுக்கினார்கள். பெரும்பாலானவர்கள் குறிப்பிட்டது ‘திமிர்’. இதுகுறித்து டாக்டர் மோகன வெங்கடாசலபதியிடம் கேட்டேன். “அப்படிச் சொல்ல வேண்டாம். உண்மையில், மிகவும் பரிதாபத்துக்குரியவர் அவர். அவர் ஏன் மது அருந்துகிறார் என்பது அவருக்கே தெரியாது. அவர் ஒரு குடிநோயாளி என்பது மட்டுமே உண்மை. அந்தரீதியில் மட்டுமே அவரை அணுக வேண்டும். அந்த இளைஞருக்கு மட்டும் இல்லை. பொதுவாகவே …
-
- 0 replies
- 600 views
-
-
தற்போது நம்மவர்களை பயமுறுத்தும் முதல் கொடிய நோய் சர்க்கரை நோய் தான். சர்க்கரை நோய் வந்துவிட்டால் எண்ணை பண்டங்கள், இனிப்புகள் சாப்பிட முடியாது என்ற கவலை ஒரு புறமிருந்தால், இந்த நோய் மேலும் சில நோய்களுக்கு வாயிற் கதவாக இருப்பது மேலும் நம்மை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. டாக்டரிடம் சென்றால், தினமும் ஒரு மணி நேரம் நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள். டென்சன் ஆகாதீர்கள். இப்படி பல அறிவுரை கூறுவார். ஆனால் கவனமாக இருப்பது நம் கையில் தான் உள்ளது. நம் நாட்டில் சர்க்கரை நோயாளிகள் அதிகமாக இருப்பதற்கான காரணங்கள் ஏராளம் உள்ளது. நம்மவர்களின் மரபணுக்கள்தான் காரணம் என்று ஒரு புறமும். நம்நாட்டின் தட்பவெப்ப சுற்றுச்சூழல்தான் பிரச்னையே என்று மறுபுறமும், உடல் உழைப்பு மிகவும் குறைந்துவிட்டதை மறந்துவிடக் …
-
- 0 replies
- 600 views
-
-
குடல் பகுதி. | பிரதிநிதித்துவ நோக்கத்திற்காக... நாம் உடல் பருமன் குறித்து அதிகம் கவலைப்படுகிறோம். இதனால் சதைபோடும் உணவுகளை எடுக்கக் கூடாது என்று நாம் உறுதியாக இருந்தாலும் தவிர்க்க முடியாமல் அவற்றை சாப்பிடுகிறோம் இது ஏன் என்று பலருக்கு வியப்பாகவே இருக்கும். இதற்கான காரணம் என்னவென்று அமெரிக்க ஆய்வு ஒன்று ஆராய்ந்துள்ளது. குடல் பாக்டீரியாக்களைக் கொண்டு உடல் பருமன் நோயைக் குணப்படுத்தலாம் என்’று சில ஆய்வுகள் தெரிவிக்கையில், இந்த ஆய்வு அதற்கு மாறான ஒரு முடிவைக் கண்டடைந்துள்ளது. அதாவது நம் குடலில் வாழும் பாக்டீரியா மூளையின் செயல்பாட்டை தனக்குச் சாதகமாகத் தூண்டி விடுகிறது என்று இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியா பல்கலைக் கழக ஆய்வாளர்கள் இது குறித்து …
-
- 2 replies
- 599 views
-
-
இதய பாதிப்பு வராமல் தடுக்கும் இசை இதயநோய் பாதிப்புக்குள்ளானவர்கள் வீட்டிலேயே மியூசிக் தெரபியாக இசையை கையாண்டால் இதய பாதிப்பில் இருந்து விடுபடலாம். ஒருமுறை மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு மீண்டும் வராமல் இருக்க சிறந்த வழிமுறையாக இசை விளங்குகிறது. இதய பாதிப்பு வராமல் தடுக்கும் இசை தினமும் குறைந்தபட்சம் அரை மணி நேரமாவது இசையை கேட்பது இதயத்திற்கு நல்லது என்பது, ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக முதல் தடவை மாரடைப்பு பாதிப்பை எதிர்கொண்டவர்கள், தொடர்ந்து இசையை ரசித்து கேட்கும் பட்சத்தில் அவர்களுக்கு மீண்டும் மாரடைப்பு வரும் ஆபத்து குறைவாக உள்ளது என்பதும் அந்த ஆய்வு மூலமாக தெரியவந்துள்ளது. இதுமட்டுமின்றி நெஞ்சு வலி, ப…
-
- 0 replies
- 599 views
-
-
இக்காலத்தில் பலரும் மிக ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்பான உடலுடனும் கவர்ச்சியாக வலம்வர விரும்புகின்றனர். இதற்காக உணவு கட்டுப்பாடுகளையும், ஜிம் போன்றவற்றையும் தேர்ந்தெடுக்கின்றனர். இது பலருக்கு பலன்களை தந்தாலும், தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதும், திட்டமிட்டபடி உணவை உண்பதும் கடினமான விடயமே. சரியான முறையிலும், குறைவாகவும், ஆரோக்கியமான உணவுகளையும் சாப்பிட வேண்டும். அதிகமான தண்ணீரை பருக வேண்டும், இது எடையை குறைப்பதற்கும் மற்றும் எடையை அதிகரிப்பதற்கும் உதவும். பாத்திரத்தின் அளவை குறையுங்கள் உங்களுக்கு உணவு பரிமாறும் போது எப்போதும் சிறிய தட்டு அல்லது சிறிய கிண்ணம் ஆகியவற்றை பயன்படுத்தவும், எப்போதும் இதை பின்பற்ற வேண்டும். பாத்திரத்தின் அளவு எப்போதும் தேவையான உணவை தாங்கும் வண…
-
- 0 replies
- 598 views
-
-
வாழைப்பூவை அடிக்கடி சமையலில் சேர்த்துக் கொள்கிறவர்களுக்கு ஆரோக்கிய வாழ்வு கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. வாழைப்பழம் மட்டுமல்ல அதிலுள்ள பூவும், தண்டும் மருத்துவ குணமுள்ளவை. மாதத்தில் இரண்டு மூன்று நாள்களாவது உணவில் இதை சேர்த்துக் கொண்டால் நல்லது. வாழைப்பூ சாப்பிடுவது உடலுக்கு குளிர்ச்சியைத் தரும், இதை உரிய வகையில் சமைத்து சாப்பிடும்போது உஷ்ணத்தால் ஏற்படும் பலவித நோய்களை, அதாவது, சிறுநீர் சார்ந்த நோய்கள், பெண்களுக்கு வெள்ளைப்படுதல் உள்ளிட்டவற்றைக் குணப்படுத்த உதவுகிறது. வாழைப்பூவில் அதிக நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கலைப் போக்க உதவுகிறது. கொழுப்புச் சத்து குறைவாக இருப்பதால் ஆரோக்கியமான உடல் எடை அதிகரிப்புக்கு உதவுகிறது. கெட்டித் தயிருடன் சே…
-
- 0 replies
- 597 views
-
-
வலிநிவாரணிகள் (Pain Killers) - நல்லதும் கெட்டதும் வலி நிவாரணிகள் பற்றி நிறையத் தப்பபிப்பிராயங்கள் இருக்கின்றன. வெளிநாட்டிலிருந்து வந்த நபர் ஒருவர் கடுமையான இடுப்புவலியால் துன்பப் பட்டுக்கொண்டிருந்தார். ஆனால் தனக்கு Pain Killer மருந்து வேண்டவே வேண்டாம் என அடம்பிடித்தார். மிகுதி இங்கு சென்று பாருங்கள் மிக்வும் பயன் உள்ளது...http://hainallama.blogspot.com/
-
- 0 replies
- 597 views
-
-
தலைவலி, முதுகுவலி மாதிரி பரவலாக பலரையும் தாக்கக்கூடிய ஒரு பிரச்னையாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறது கிட்னி ஸ்டோன் எனப்படுகிற சிறுநீரகக்கல். யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வரக்கூடிய சிறுநீரகக் கல் பாதிப்பின் பின்னணி, அறிகுறிகள், சிகிச்சைகள், தவிர்க்கும் முறைகள் பற்றி விரிவாகப் பேசுகிறார் சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் ஆனந்தன். சிறுநீரானது சிறுநீரகத்தில் உற்பத்தியாகி, சிறுநீர் குழாய் வழியே சிறுநீர் பைகளுக்கு வந்து பிறகு வெளியேறுகிறது. சிறுநீரகத்தில்தான் கல்லும் உற்பத்தியாகிறது. அது அங்கேயே தங்கிப் பெரிதாகலாம். குழாய் மூலம் சிறுநீர் பைக்கு வெளியேறலாம். அல்லது அடைப்பு ஏற்படுத்தலாம். சிறுநீரகத்தில், சிறுநீரில் உள்ள கிரிஸ்டல் எனப்படுகிற உப்புகள் (கால்சியம், ஆ…
-
- 0 replies
- 597 views
-
-
மாடர்ன் ரொட்டி போன்ற கோதுமை ரொட்டியைக காலையில் சாப்பிடுங்கள். இல்லையெனில் கைக்குத்தல் அரிசி, கோதுமை உப்புமா சாப்பிடுங்கள். டிரைப்டோபன் என்ற அமினோ அமிலம் மூளைக்கு படுவேகமாகச் செல்லவும் செய்தி சொல்லவும் தவிடு நீக்காத இந்த தானிய உணவுகள் உதவுகின்றன. இதனால் மூளையும் மனமும் அமைதியடைகின்றன. நோய் தானாகக் குணமாக உடலில்சூழ்நிலைகள் உருவாகின்றன. ஆரஞ்சுப்பழம் தவறாமல் சாப்பிடவும். இதில் உள்ள பொட்டாசியம் உப்பு அடிக்கடி மூளைக்கு கண்ட கண்ட கவலைகளையும் தெரிவிக்கும் மின் ஆற்றல் போன்ற துடிப்புகள் கொண்ட நரம்புகளைக் கட்டுப்படுத்தி மனதை எப்போதும் சாந்தமாக வைத்திருக்கும். இதே நன்மைகளை வாழைப்பழம், சீஸ், பால், ஏப்ரிகாடி, வேர்க்கடலை மற்றும் பருப்பு வகைகளும் செய்கின்றன. குறிப்பாக வாழைப்பழம…
-
- 0 replies
- 597 views
-
-
எந்தப் பூவிலும் இல்லாத புதுமை குங்குமப்பூவில் உண்டு. உடல் நிறத்தை சிவப்பாக மாற்றக் கூடிய அற்புதக் குணம் இதில் நிறைந்து காணப்படுகிறது. குங்குமப்பூக்களின் உள்ளே இருக்கும் நார்களையே ‘குங்குமப்பூ’ என்று அழைக்கப்படுகிறது. இது பசுமை கலந்த சிவப்பு நிறத்தில் காணப்படும். நறுமண முடையதாகவும் சிறிது கசப்பாகவும் இருக்கும். குங்குமப்பூவைத் தண்ணீரில் கரைத்தால் ஆழ்ந்த மஞ்சள் நிறம் உண்டாகும். இத்தாவரம் வடமேற்கு நாடுகளிலும், இந்தியாவில் காஷ்மீரத்திலும் பயிர் செய்யப்படுகின்றது. இது வாசனையுடனும், மினுமினுப்பாகவும் இருக்கும். உணவுப் பொருள்களுக்கு நிறம் உண்டாக்கவும் வாசனை உண்டாக்கவும் சேர்க்கின்றனர். அழகு தரும் குங்குமப்பூ குங்குமப்பூவை பொடியாக்கி வ…
-
- 0 replies
- 596 views
-
-
சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு மாரடைப்பு, இதய நோய்கள், மூளை இரத்தக் குழாய் அடைப்பு (வாத நோய்) ஆகிய நோய்கள் வர 20 மடங்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இவர்கள் தங்கள் இதயத்தை சிறுநீரகங்களை விட அதிக கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். சிறுநீரக வியாதி உள்ளவர்கள் தங்கள் இதயத்தைக் காக்க 25 சிறந்த வழிகள் இதோ. 1. தானியங்கள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவதில் சில கட்டுப்பாடுகள் இருக்கும். உங்கள் சிறுநீரக மருத்துவரைக் கலந்து கொண்டு செய்யுங்கள். 2. எண்ணெய், வெண்ணெய், நெய், கிரீம், மிருகக் கொழுப்பு அதிகம் உள்ள ஆட்டைறைச்சி, மாட்டிறைச்சி, ஈரல் முதலான உறுப்பு இறைச்சிகள் ஆகியவற…
-
- 0 replies
- 596 views
-
-
ஆரோக்கியமான வாழ்வு ஹார்ட் அட்டாக் வராமல் தடுத்து, அடைந்த இதய தமனிகளை திறக்க ஒரு எளிய வீட்டு மருந்து இரத்தக் குழாய்களை சுத்தம் செய்யும் இந்த சுலப மருந்துக்கு தேவையானவை: 1⃣ 15 எலுமிச்சை பழங்கள் 2⃣ 12 முழு பூண்டு 3⃣ 1kg இயற்கையான தேன் 4⃣ 400gr வால்நட்/அக்ரூட் 5⃣ 400gr முளைத்த கோதுமை (மருந்தடிக்கப்படாத (ஆர்கானிக்) கோதுமை ) எவ்வாறு செய்வது ? 1⃣ கோதுமையை நன்றாக கழுவி ஒரு கண்ணாடி ஜாடியில் இட்டு சுடு தண்ணீரை ஊற்றவும். பிறகு ஒரு சல்லடை துணியால் மூடி 12 மணி நேரம் வைக்கவும். 2⃣ அதற்கு பிறகு, கோதுமையை கழுவி தண்ணீரை வடிக்கவும். ஒரு நாள் கழித்து கோதுமை 1-2mm நீளத்தில் முளைத்திருக்கும். 3⃣ பூண்டை தோலுரித்து கொள்ளவும். ஒரு பொடி செய்யும் மிக்ஸியில் (mincing machine) சுத்தம் …
-
- 0 replies
- 596 views
-
-
காதல் தேடும் அப்பாவிப் பூக்கள் அனுபவம் மிக்க வண்டுகளின் பசிக்கு இரையாகி கருகி வீழ்கின்றன. இவ்வாறே நம் சமூகத்திலும் உரசிக் கொண்ட பாவத்திற்காய் உயிர்விடும் தீக்குச்சிகளாக காதல் என்ற சொல்லில் தொடங்கி தற்கொலைவரை நீழ்கின்ற துன்பியல் சாகரம் ஏன் இதயத்தில் இடம் தேடிய பறவை சிறைப்படவில்லை சிதையில் எரிவதா?. தற்போது பெரிதும் காதல் என்ற உருமறைப்பில் காமம் அரங்கேற்றப்படுவதே நிகழ்வாகிப் போய்விட்ட சூழலில் கருச்சிதைவுகளும் தற்கொலைகளும் சகஜம் என்று கூறும் நிலையை நோக்கி நகர்கின்றன. கருச்சிதைவு மேற்கொள்வது சட்டப்படி தவிர்க்கப்பட்ட விடயமாகும். இதைவிட நாட்டின் சில பாகங்களில் கருக்கலைப்பு அல்லது கருச்சிதைவு உண்டு பண்ணும் மருந்து வகைகள் பெற முடியாத நிலையே காணப்படுகிறது. (யாழ்…
-
- 0 replies
- 596 views
-
-
தரையில் முதலில் மல்லாந்து படுத்துக் கொள்ள வேண்டும். இரண்டு கைகளையும் உடலின் பக்கத்தில் தளர்ந்த நிலையில் வைக்கவும்..தலை,கைகள்,கால்கள் மற்றும் உடல் முழுவதும் மிகவும் தளர்ச்சியான நிலையில் வைக்கவும். பிறகு மூச்சை இழுத்துக் கொண்டே தலையை தூக்காமல் கைகளைக் கொண்டு தரையை அழுத்தாமல் வைக்கவும். கால் கட்டை விரல்களை சேர்த்து வைத்து மேலே தூக்கவும். ரொம்பவும் மேலே தூக்கி விட கூடாது. திருப்பி கால்களை கீழே இறக்கும் போது மூச்சை வெளியே விட்டுக் கொண்டே மெதுவாக இறக்கவும் குதிங்கால்களை எக்காரணத்தைக் கொண்டும் தரையை தொடக் கூடாது. அப்படி தொட்டு விட்டால் பயிற்சி முடிந்துவிடும்.இப்படி ஒரு நாளைக்க…
-
- 0 replies
- 596 views
-
-
ரத்த சோகைக்கு சித்த மருந்து கண்டுபிடித்த இந்திய நிறுவனம். ஆயுஷ் அமைச்சகத்தின் தேசிய சித்த மருத்துவ நிறுவனம் மற்றும் நாட்டின் புகழ்பெற்ற சித்த மருத்துவ நிறுவனங்களின் ஆராய்ச்சியாளர்கள் குழு, தமிழ்நாடு சித்த மருந்து கலவையான அன்னபேதி செந்தூரம், பாவனக் கடுக்காய், மாதுளை மணப்பாகு, நெல்லிக்காய் லேகியம் ஆகியவற்றைக் கொண்ட ‘ஏ.பி.என்.எம்.’ மருந்து, ரத்த சோகை உள்ள வளர் இளம் பருவத்துப் பெண்களுக்கு ஹீமோகுளோபின் மற்றும் அதனுடன் கூடிய சத்துக்களின் அளவை மேம்படுத்தும் என ஆராய்ச்சியில் கண்டறிந்து உள்ளனர். ரத்த சோகையை குறைப்பதில் சித்த மருந்துகளை பிரதானமாக பயன்படுத்தும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் 2 ஆயிரத்து 648 சிறுமிகள் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர். ஆய…
-
- 0 replies
- 596 views
-
-
உலகிலேயே இருதயத்தில் நுண் கணினி உபகரணம் பொருத்தப்பட்ட முதலாவது நோயாளி என்ற பெயரை பிரித்தானியாவைச் சேர்ந்த 75 வயது பெண்மணி பெறுகிறார். பர்மிங்காமைச் சேர்ந்த மார்க்ரெட் மக்டெர்மோதி என்ற மேற்படி பெண் இருதய இயக்கம் செயலிழந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு கடந்த ஜூலை மாதத்தில் இருதய அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. எனினும் அவரது இருதய தசைகள் குருதியை உடல் எங்கும் செலுத்துவதற்கு போதிய சக்தி இல்லாது பலவீனமாகக் காணப்பட்டதால் அவர் உயிராபத்தான நிலையை தொடர்ந்து எதிர்கொண்டுள்ளார். இந்நிலையில் அவரது இருதயத்தில் திடீரென ஏற்படக்கூடிய செயலிழப்பை உடனுக்குடன…
-
- 0 replies
- 596 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், அமண்டா ருகேரி பதவி, பிபிசி நியூஸ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் இரவு தூக்கத்திற்குப் பிறகு சுறுசுறுப்பாக உணர்வதற்கான ரகசியம், உங்களது பகல் நேரப் பழக்க வழக்கங்களில் இருந்து தொடங்குகிறது. உங்கள் தூக்கத்தை மேம்படுத்தவும், சோர்வைக் குறைக்கவும் சில குறிப்புகள் இங்கே அளிக்கப்பட்டுள்ளன. சோர்வாக உணர்கிறீர்களா? நீங்கள் மட்டுமே அவ்வாறு உணர்வதில்லை. அதோடு, உங்களது தூக்கப் பழக்கத்தை எப்படி மாற்றுவது என்பது குறித்தும் நீங்கள் யோசித்துக் கொண்டிருக்கலாம். இதுகுறித்து அடிக்கடி நமக்குச் சொல்லப்படும் உத்திகள் பெரும்பாலும், இரவுநேரப் பழக்கங்களைக் குறித்தானதாகவே இருக்கும். அதாவது வழக்கமாக உறங்கும் நேரம், படுக்கையில் கைப்பேசியை உபயோகப்படுத்தாமல…
-
- 0 replies
- 596 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,MAYANK MAKHIJA/NURPHOTO VIA GETTY IMAGES 4 மணி நேரங்களுக்கு முன்னர் பிரிட்டனில் ஒருவர் தும்மல் ஏற்பட்டபோது அதனை அடக்கியதால், அவருடைய தொண்டையில் உள்காயங்கள் ஏற்பட்டுள்ளது. தும்மலை அடக்குவது இத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். பிரிட்டனில் உள்ள டண்டீ நகரில் 30 வயதுடைய நபர் ஒருவர் கடுமையான கழுத்து வலியால் அவதிப்பட்டு நைன்வெல்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தனக்கு தும்மல் ஏற்பட்டபோது அதனை அடக்குவதற்காக, மூக்கையும் வாயையும் தன் கைகளால் மூடியுள்ளார். அவ்வாறு தும்மலை அடக்கியதால் அவரது மூச்சுக்குழாயில் 2 மி.மீ. வரை காயம் ஏற்பட்டிருப்பது ஸ்கேன் மூலம் தெரியவந்தது. ஒருவர் தும்மும்போத…
-
- 0 replies
- 595 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 595 views
- 1 follower
-