வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5797 topics in this forum
-
-
http://www.seithy.com/Audio/Rudrakumar_interview091110.mp3 தேசியத் தலைவரின் வார்த்தைகளில் கூறுவதாயின்; மக்களுக்கான பணியே எமது செயற்பாடு என்கின்றார் "பிரதமர் உருத்ரகுமார்" எமது தேசியத் தலைவரின் வார்த்தைகளில் கூறுவதாயின், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கப்பட்டமை தொடர்பாக நாம் பல்வேறு நாடுகளின் வெளிநாட்டமைச்சர்களுக்கு அறிவித்துள்ளோம். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சில உறுப்பினர்கள் தாம் வாழும் நாடுகளின் அரச தலைவர்களையும் அரசாங்க அதிகாரிகளையும் சந்தித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கப்பட்டமை குறித்தும் அதன் அரசியல் கொள்கைகளையும் எடுத்து விளக்கி வருகின்றனர். இதேவேளை, அரசாங்கங்களுடன் காத்திரமான உறவாடல்களை மேற்கொள்வதனை நாம் இன்னும் ஆரம்பிக்கவில்லை…
-
- 1 reply
- 637 views
-
-
பெற்றோரின் வாழ்க்கை முறையும், புரிதலும் பிள்ளைகளின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் பிள்ளைகளின் தராதரத்தை அவர்களின் பெற்றோர், அவர்கள் இணைக்கப்பட்டுள்ள சமுதாய வாழ்வுமுறை என்பன தீர்மானிக்கின்றது. இனத்தின், சமூகத்தின் திறமையின் அளவு பிள்ளை எடுக்கும் பரீட்சைப் பெறுபேற்றில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றும் புதிய ஆய்வுகள் வெளியாகியுள்ளன. டென்மார்க் தலைநகரில் உள்ள பாடசாலை மாணவரில் அரைப்பங்கினர் தமது வகுப்பில் பெற்றிருக்க வேண்டிய அறிவில் அரைப்பங்கையே தொடவில்லை என்று நேற்றைய செய்திகள் தெரிவித்திருந்தன. இது இவ்விதமிருக்க தலைநகர்வாழ் பாடசாலை மாணவர் தொடர்பாக இன்று வெளியான இன்னொரு ஆய்வு பிள்ளைகளின் தரத்தை தீர்மானிப்பதில் சமுதாயத்தின் பங்கு அதிகம் என்று தெரிவித்துள்ளது. …
-
- 5 replies
- 1.1k views
-
-
நோர்வே ஈழத்தமிழர் அவை மற்றும் நாடு கடந்த அரசின் நோர்வே மக்கள் பிரதிநிதிளும் இணைந்து ஏற்பாடு செய்திருக்கும் கருத்தரங்கு வரும் 12ம் திகதி ஒஸ்லோ ரொம்மன் அன்னை பூபதி தமிழ்க கலைக் கூடத்தில் இரவு 20.00 மணிக்கு இடம்பெறும். இக்கருத்தரங்கில் உலகத் தமிழர்பேரவைத் தலைவர் அருட் தந்தை இமானுவெல் அடிகளார் வருகை தரவுள்ளார். அடிகளாருடன் இணைந்து தாயக மற்றும் புலம்பெயர் நாட்டு அரசியல் பிரமுகர்களும் இக் கருத்தரங்கில் பங்கேற்று கருத்துரைக்க உள்ளனர். முள்ளிவாய்க்கால் அழிவுக்கு பிற்பாடு புலம்பெயர் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் வகையிலும், கருத்தரங்கை ஏற்பாடு செய்திருக்கும் கட்டமைப்புக்களின் எதிர்கால அரசியல் திட்டங்கள் பற்றியும் இக் கருத்தரங்கில் விளக்க…
-
- 0 replies
- 522 views
-
-
செங்கதிர் வணக்கம் தமிழகத்தில் இருந்து யாழ் களத்தில் இணைந்திருக்கிறேன். ஈழம் முழுமையும் ராணுவம் நிர்வாகம் செய்ய, தமிழகத்தில் தமிழீழ மக்களின் அரசியல் உரிமை பற்றிப் பேசுவதா அல்லது உறவுகளையும் உடல் உறுப்புகளையும் இழந்து நடமாடிக்கொண்டு இருக்கிற ஈழ மக்களின் மனிதாபிமான, உயிர்வாழும் உரிமை பற்றிப் பேசுவதா, எது இப்போதைய தேவை? காத்திரமான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.
-
- 8 replies
- 792 views
-
-
புகையிரதத்துக்குள் வயோதிப ஆண் ஒருவரை தள்ளி படுகொலை செய்தார் என்று இலங்கைத் தமிழ் பெண் மீது பிரிட்டனில் வழக்கு! வியாழன், 28 அக்டோபர் 2010 13:34 63 வயது உடைய வயோதிப ஆண் ஒருவரை கடந்த திங்கட்கிழமை மாலை புகையிரதத்துக்குள் தள்ளி படுகொலை செய்து இருக்கின்றார் என்று 34 வயதுடைய இலங்கைத் தமிழ் பெண் மீது பிரித்தானியாவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவ்வயோதிப ஆண் மத்திய லண்டனைச் சேர்ந்தவர். லண்டனில் உள்ள King’s Cross station இல் புகையிரதத்தால் மோதுண்டு இறந்து விட்டார். இவரை புகையிரதத்துக்குள் தள்ளி கொன்று விட்டார் என்கிற குற்றச்சாட்டில் இலங்கைத் தமிழ் பெண்ணான நைனா கனகசிங்கம் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இன்று Westminster நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராக்கப்படுகின்றார். …
-
- 5 replies
- 1.4k views
-
-
ஊடக அறிக்கை நவம்பர் 03, 2010 நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை! நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட சபையாக அமையும் அமைச்சரவையினை மக்களுக்கு அறியத் தருவதில் நாம் பெரு மகிழ்வடைகிறோம். இவ் அமைச்சரவையானது பிரதமர் தலைமையில் மூன்று துணைப்பிரதமர்களையும், ஏழு அமைச்சர்களையும் உள்ளடக்கிய பதினொரு உறுப்பினர்களைக் கொண்டதாக அமைகிறது. பிராந்திய அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்று துணைப் பிரதமர்களுக்கும் ஏழு அமைச்சர்களுக்கும் ஒவ்வொரு அமைச்சுக்கள்; ஒதுக்கப்பட்டுள்ளன. இதைவிட ஒவ்வொரு அமைச்சுக்குமுரிய துணை அமைச்சர்கள் அந்தந்த அமைச்சர்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். துணைப்பிரதமர்களையும் அமைச்சர்களையும்…
-
- 2 replies
- 687 views
-
-
திரு. மகேஸ்வரன், திரு. பார்த்தீபன், திரு. மனோகரன் ஆகியோரால் ஆறு கோரிக்கைகளை முன்வைத்து 14-10-2010 அன்று கேர்ணிங் நகரின் நகரசபை முன்றலில் ஆரம்பித்த மனிதநேய நடைப்பயணம் 23-10-2010 அன்று டென்மார்க்கின் தலைநகரான கொப்பனேகன் நகரின் நகரசபை முன்றலில் நிறைவடைந்தது. முற்பகல் பதினொரு மணியளவில் நகரசபை முன்றலை வந்தடைந்த இவர்களை டென்மார்க்கின் பல்வேறு பாகங்களிலிருந்து வருகை தந்திருந்த தமிழீழ மக்கள் அன்புடனும் எழுச்சியுடனும் மகிழ்வுடனும் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து அகவணக்கத்துடன் ஒன்றுகூடல் ஆரம்பமாகியது. தமிழர் பேரவை டென்மார்க்கினர் அனைத்து மக்களையும் வரவேற்றனர். தமிழர் பேரவையின் சட்டத்தரணியாகிய திரு. பியோன் (Bjørn Elmquist) அவர்கள் சிறப்புரையாற்றினார். அவர் சிறிலங்காவில் மக்…
-
- 1 reply
- 613 views
-
-
கனேடிய தமிழ் சமூகத்தின் பங்களிப்புக்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பாராட்டு! கனடாவில் வாழும் இலங்கைத் தமிழ் சமூகத்தால் அந்நாட்டின் வளர்ச்சிக்கு ஆற்றப்பட்டு வரும் காத்திரமான பங்களிப்புகள் குறித்து கனேடிய நாடாளுமன்றத்தில் மிகவும் விதந்து பேசப்பட்டுள்ளது. சபை அமர்வு நேற்று முன் தினம் இடம்பெற்றபோது லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான Derak Lee அங்கு வாழும் தமிழ் சமூகத்தினரால் நாட்டின் பங்களிப்புக்கு ஆற்றப்பட்டு வரும் காத்திரமான பங்களிப்புகளுக்கு அங்கிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திப் பேசினார். அவர் அங்கு முக்கியமாகத் தெரிவித்தவை வருமாறு: ”இலங்கைத் தமிழர்கள் 1940 களில் இருந்து கனடாவில் தமிழர்கள் குடியேறி வருகின்றன…
-
- 0 replies
- 592 views
-
-
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் வருகைக்கு எதிராக 200 இற்கு மேற்பட்ட மலேசியா தமிழ் மக்கள் கடந்த புதன்கிழமை (27) கோலாலம்பூரில் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டதாக பிறீ மலேசியா ருடே நாளேடு தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கோலாலம்பூரில் உள்ள “லிட்டில் இந்திய” என்ற வர்த்தகத் தொகுதியை திறந்து வைப்பதற்காக கடந்த புதன்கிழமை மலேசியா வந்த இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எதிராக மலேசியா தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டம் ஓன்றை மேற்கொண்டிருந்தனர். ஆர்ப்பாட்டக்காரர்களையும், முக்கிய தலைவர்களையும் மலேசியா காவல்துறையினர் கைது செய்ததை தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவியது. கடந்த மூன்று நூற்றாண்டுகளாக தமிழ் மக்கள் வர்த்தகம் செய்யும் இடத்தில் இடம்பெறும் விழாவி…
-
- 0 replies
- 579 views
-
-
Oct 28, 2010 / பகுதி: முக்கியச் செய்தி / அன்பான தமிழீழ மக்களே - ஐ நா அழைக்கின்றது உங்களை சர்வதேசத்தின் மௌனத்தினால் சிங்கள தேசம் தமிழர் இனப்படுகொலையை மிக வெற்றி கரமாக நடாத்தி முடித்திருக்கின்றது. கைகளை பின்புறமாகக்கட்டியும், கலால் உதைத்தும், கதறகதற பாலியல் வல்லுறவையும், உயிருடனே கூரிய ஆயுதணங்களால் வெட்டியும், தடைசெய்யப்பட்ட நச்சு ஆயுதங்களால் எம்மவர்கள் கொல்லப்பட்டதும், தொலைக்காட்சியிலும் இணையத்தளங்களிலும் அனைவரும் கண்ட காட்சிகளாகும். வெளியில் வராத இரத்தத்தை உறையவைக்கும் சம்பவங்கள் பல நூற்றுக்கணக்காக உள்ளது என்ற செய்திகள் வெளிவந்திருக்கும் நிலையில் வெளியில் சொல்ல முடியாது மனதுக்குள்ளேயே வைத்து புழுங்கி உளத்தாலும் உடலாலும் மனநிலை பாதிக்கப்பட்டு போய்யுள்ளோர் பலபேர…
-
- 1 reply
- 482 views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் மக்களவைகளும் இணைந்து பிரான்சில் நிகழ்வொன்றை நடத்துவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளமை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இது தொடர்பாக என்னுடன் எவரும் தொடர்பு கொள்ளவுமில்லை. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் அலுவலுகத்திடம் அனுமதி பெறாத நிகழ்வுகளை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பங்கு பற்றும் நிகழ்வுகளாக நாம் பார்க்கமுடியாது. இதனால் நடைபெறுவதாகக்கூறப்படும் நிகழ்வுக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கும் எதுவித தொடர்புகளும் இல்லை. இங்கு ஒரு விடயத்தை நாம் பிரித்துப் பார்க்க வேண்டும். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்கள் வெவ்வேறு நிகழ்வுகளில் பங்கு பற்றக்கூடும். இந் நிகழ்வுகளையெல்லாம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிகழ்வுகளாக நாம…
-
- 0 replies
- 605 views
-
-
இந்தியாவில் விடுதலைப் புலிகளின் தடையை நீக்க கையெழுத்து வேட்டை http://www.petitiononline.com/LiftBAN/petition.html View Current Signatures - Sign the Petition Please include your country as the last entry. Also please tell as many friends and families to sign the petititon. Pass the petition link, keep the HOPE Alive. Nandri/Thanks To: The Honorable Prime Minister of India Petition to the Government of India to Lift the Ban on Non-existing LTTE Since the assassination of Rajiv Gandhi on May 14, 1991 the Government of India (GOI) has banned the LTTE as a terrorist organization. Thereafter, the ban has been extended every 2 yea…
-
- 2 replies
- 635 views
-
-
Oct 27, 2010 / பகுதி: செய்தி / கனடா மார்க்கம் நகரசபைத் தேர்தலில் இரண்டு தமிழர்கள் வெற்றி! கனடாவின் ரொறன்ரோ மாநகரசபைக்கு அண்மித்த பிரதேசமான மார்க்கம் நகரசபைத் தேர்தலில் இரண்டு தமிழர்கள் வெற்றியீட்டியுள்ளனர். இது தமிழர்களிற்கு கனடா தழுவிய ரீதியில் கிடைத்த வெற்றிகளாகும். இதேவேளை இன்னொரு நகரான மிசசாகாவிற்கான மேயராகப் போட்டியிட்ட தமிழரான ராம் செல்வராசா தோல்வியைத் தழுவிக் கொண்டுள்ளார். கனடிய வரலாற்றிலேயே முதன்முதல் உள்ளூராட்சிச் சபைக்கு 2006ம் ஆண்டு தெரிவான தமிழரான திரு.லோகன் கணபதி இம்முறை மார்க்கம் ஏழாம் வட்டாரத்தில் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். திரு. லோகன் கணபதி 3,558 வாக்குகளையும் அவருக்கு அடுத்த இடத்தில் உளளவர் 2,768 வாக்குக்களையும் பெற்றார். இதேவேளை …
-
- 12 replies
- 1.1k views
-
-
Oct 27, 2010 / பகுதி: செய்தி / இலங்கையர் ஒருவரின் பாலியல் வல்லுறவு குற்றம் இரு வருடங்களுக்கு பின் இத்தாலியில் பகிரங்கம்! இத்தாலியின் Ventimiglia நகரத்தில் உள்ள விடுதி ஒன்றில் இரு வருடங்களுக்கு முன் தங்க வந்திருந்த வெளிநாட்டவரான 50 வயது பெண் ஒருவரை அந்த ஹோட்டலின் சிப்பந்திகளில் ஒருவரான இலங்கையர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியமை இன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. விடுதியில் இப்பெண் தங்கி இருந்த அறைக்குள் நுழைந்த இச்சிப்பந்தி இரவு முழுவதும் இப்பெண்ணை கற்பழித்திருக்கின்றார். ஆனால் இப்பெண் சொந்த நாட்டுக்குத் திரும்பிச் சென்று விட்டார். பாலியல் வல்லுறவு இடம்பெற்று இரு மாதங்களுக்குப் பின்னர் இணையத் தளம் மூலமாக இத்தாலிய பொலிஸாருக்கு முறைப்பாடு செய்தார். ஆயினும் …
-
- 0 replies
- 798 views
-
-
இந்த அமைப்பானது சில பலம்மிக்க நபர்களால் முன்னெடுக்கப்படுகின்றது. இதற்கு முடிந்தால் உங்கள் ஆதரவை வழங்குங்கள் http://www.srilankacampaignorg/welcome.htm இன்றைய நிலவரம் என்ன? http://www.srilankacampaign.org/currentsituation.htm இந்த அமைப்பு முன்னெடுக்கும் சில நிகழ்வுகள் ( விரும்பினால் கையெழுத்து போடலாம் ) http://www.srilankacampaign.org/takeaction.htm http://campaigns.ahrchk.net/custodialdeath/ இன்று பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்கள் எமது செய்திகளை முன்னெடுக்க உதவுகின்றன. http://www.facebook.com/pages/Sri-Lanka-Campaign-for-Peace-and-Justice/133183474056 ஆசிய மனித உரிமை அமைப்பு 'கைது செய்து தடுத்து வைப்பதற்கு எதிராக"... http://campaigns.ahrchk.net/…
-
- 0 replies
- 664 views
-
-
தாயகத்தில் ஏதிலிகளுக்கு பட்டுப்புடவையை அனுப்புங்கள்!!!!!????? - "ஐ.பி.சி" ரேடியோ கடந்த சனி வீட்டில் இருந்தால் கடி என்று வேலைக்கு சென்றேன், கொஞ்சகாசும் வந்ததாக போகும்! அங்கு வேறொருவரும் இல்லை, நானோ என்னிடன் இருந்த டப் ரேடியோவில் "ஐ.பி.சி" ரேடியோவை ரியூன் பண்ணி விட்டதால் ... அதில் "சமூக சிந்தனையாம்" ... நல்ல அனுபவம்/திறமை வாய்ந்த இரு அறிவிப்பாளர்கள்!! நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார்கள்!! அதுவும், சமூக சிந்தனையில், ஆலயங்களின் செயற்பாடுகள்/அங்கு எழும் பிரட்சனைகள்/.... பலவற்றை தோண்டிக்கொண்டிருந்தார்கள்! நல்ல விடயம்!! கேட்க வேண்டும்/கதைக்க வேண்டும் இல்லையேல் நாம் செய்வது சரி என்று நினைத்து விடுவார்கள்! பலவற்றை விவாதித்து கொண்டிருக்கும் போது இடையில் …
-
- 2 replies
- 1.5k views
-
-
சுவிஸில் உள்ள உணவகத்தில் இலங்கைத் தமிழர்கள் மோதல்! இருவர் காயம், பதினொரு பேர் கைது சனி, 23 அக்டோபர் 2010 05:08 சுவிற்சலாந்தின் பேர்ண் நகரத்தில் உள்ள உணவகம் ஒன்றில் இலங்கைத் தமிழர்கள் ஒரு தொகையினரிடையே இடம்பெற்ற பரஸ்பர மோதலில் அவர்களில் இருவர் காயம் அடைந்துள்ளார்கள். இதைத் தொடர்ந்து வன்முறைகளில் ஈடுபட்டனர் என்கிற குற்றச்சாட்டின் பேரில் அங்கிருந்து இலங்கைத் தமிழர்கள் பதினொரு பேரை பேர்ண் நகரப் பொலிஸார் கைது செய்துகொண்டு போனார்கள். கடந்த வியாழக்கிழமை மாலை மோதல் இடம்பெற்றிருக்கின்றது. இதில் உணவகத்துக்கு பலத்த சேதம் ஏற்பட்டது. ஆரம்ப மோதலின்போதே உணவக உரிமையாளர் பொலிஸாருக்கு தகவல் வழங்கினார். பொலிஸார் வந்து பார்த்தபோது தமிழர் ஒருவர் காயப்பட்டு இருந்தார். பொல…
-
- 0 replies
- 697 views
-
-
நீ யார்? நண்பனா? துரோகியா? நீ எந்தப்பக்கம்? மக்களவையா? நாடு கடந்த தமிழீழ அவையா? 2009 ஆண்டு மேமாதத்தில்; சிங்கள அரசு சில ஆதிக்கசக்திகளை பலமான பின்புலமாகக் கொண்டு செய்த உச்சமான தமிழ் இனப்படுகொலையின் பின்னான நாட்கள் பலரை ஊமையாக்கி, மன ஊனமாக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது. ஏதோவகையில் ஈழத்தமிழர் அனைவரும் பாதிப்புக்கு உள்ளாகியே உள்ளனர். அந்த வகையில் நாமும் விதிவிலக்கல்ல. தொடர்ந்து வந்த நாட்கள் நாங்கள் சிதறவில்லை உறுதியோடே புலம்பெயர்ந்த நாடுகளின் அனைத்து வழிகளிலும் எங்கள் இன்னல்களை சொல்ல முனைந்தோம். இன்று தோற்றுப்போய் நிற்கிறோம். தோல்விகளுக்குக் காரணம் எதிரிகள் அல்ல. புலம்பெயர்ந்த எங்களுக்கு வழிகாட்டியாக இருக்கக்கூடியவர்களின் தலைமைத்துவத் தளம்பலே நாம் இப்போது எதிர்க…
-
- 17 replies
- 1.7k views
-
-
Posted on October 4, 2010 by eelanaaduபாரிஸ் நகரில் நாடு கடந்த தமிழீழ அரசுக்கான அமர்வில் கலந்துகொண்ட பின்னர், அங்கு நடந்த உண்மைகளை அறிக்கையாக வெளியிட்ட அதே தினத்தில் கே.பி. குழுவின் ‘தாய்நிலம்’ பத்திரிகை தன் சக்திக்கு உட்பட்ட ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது. ‘ஓப்பரேசன் இறக்கை வெட்டலை தோற்கடித்து வெற்றிநடைபோடும் நாடுகடந்த தமிழீழ அரசு’ என்ற தலைப்பில் வெளியிட்ட கட்டுரையில் ஒரு உண்மையை மறைக்காமல் ஒப்புக்கொண்டுள்ளது. ’32ஆயிரத்துக்கும் அதிகமான மாவீரர்களும் தங்களது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. ஆபத்து இருக்கிறது என்று செல்லிக் கொண்டு களமுனைக்கு செல்லாமல் இருந்திருந்தால் இன்றைக்கு உயிருடன் இருந்திருப்பார்கள் அல்லவா என்பதை அந்த உறுப்பினர் ஒரு கணம் மனதில் நினைத்துப் பார்…
-
- 1 reply
- 769 views
-
-
லண்டனில் நேற்று செவ்வாய்க்கிழமை மதியம் 12:30 மணிமுதல் மாலை 3:30 மணிவரை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அவர் கலந்துகொள்ளும் மாநாட்டைக் கண்டித்தும் நூற்றுக்கணக்கான லண்டன் வாழ் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிரித்தானிய தலைநகர் லண்டனில் உள்ள டெம்பிள் (TEMPLE) பகுதியில் அமைந்துள்ள மாநாடு நடைபெறும் அருண்டேல் ஹவுஸ் (ARUNDEL HOUSE) மண்டபத்திற்கு முன்பாகக் கூடிய நூற்றுக்கணக்கான தமிழர்கள், ஜி.எல்.பீரிசின் மாநாட்டை எதிர்த்துக் கோஷமிட்டனர். காலநிலை ஒத்துழைக்காது மழை பொழிந்தபோதும் அங்குகூடிய மக்களில் ஒருவர் கூட விலகிச் செல்லாது அங்கேயே கூடிநின்று தமது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர். அத்தோடு அவ்வழியாக சென்ற வேற்றின மக்கள…
-
- 2 replies
- 743 views
-
-
நகீத் மென்ஷி நேற்று கனடாவின் எண்ணெய் வளம் கூடிய அல்பேட்டா மாநிலத்தில் உள்ள கால்கரி நகர பிதாவாக தெரிவானார். இவர் முதலாவது முஸ்லீம் நகர பிதாவாவார் . http://www.nenshi.ca/new/ கனடாவில் அதிகளவு புலம்பெயர் மக்களை கொண்ட டொராண்டோவில் தான் அண்மையில் புலம்பெயர்ந்தவர்கள் அல்லது அவர்களின் பிள்ளைகள் நகர பிதாவாக வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கால்கரி அதிகளவு பெரும்பான்மையினரை அதுவும் வலது சாரிகளை கொண்ட இந்த நகருள் இவர் வெற்றி பெற்றது பெரும் ஆச்சரியத்தை உருவாக்கியுள்ளது. இவர் "நாவல் (நிறம்) புரட்சி)" [ Purple Revolution] என்ற பெயருடன் தன் கொள்கைகளை பரப்பினார். http://www.purplerevolution.ca/index.php?permalink=true&entry=186 மேலும் பேஸ்புக் (Facebook), ட்…
-
- 2 replies
- 834 views
-
-
“I believe our diversity is our strength!” - George Smitherman Courtesy: Tamil Mirror Get the City books in order; Get the City moving; Create jobs I want to restore Toronto as the Engine of the Canadian economy I have always stood with the Tamil community in its hours of need. I WANT TO BE THE FI RST TAM I L M AYOR OF THE CI TY OF TORONTO The 2010 Toronto Municipal Council election will be held on October 25, 2010 to elect a new Mayor and 44 councillors. Tamil Mirror extended invitation to interview the two front runners, Mr. Rob Ford and Mr. George Smitherman. Mr. Smitherman agreed to be interviewed despite his tight schedule. Mr. Charle…
-
- 1 reply
- 945 views
-
-
மீண்டும் ஒரு அலட்டல்,சிட்னியில் இருந்து ஒரு மணித்தியால கார் ஒட்டத்தில் இருக்கிறது சிவா வெங்கடேஸ் கோவில்.இன்று பிரமோத்சவம் (தேர்திருவிழா)நடைபெற்றது.அடியேனும் கலந்து கொண்டேன்.ஊரில இருக்கும் பொழுது சுத்த சைவனாக இருந்தனான் புலத்துக்கு வந்த பிறகு என்னை அறியாமலயே இந்துவாக மாற்றப்பட்டுவிட்டேன். சைவர்கள் சிவனை வழிபடுவதாகவும் ,வைணவர்கள் விஷ்ணுவை(வெங்கடேஸ்வரர்) வழிபடுவதாகவும் சின்ன வயசில படித்த ஞாபகம்.இப்ப புலத்தில இரண்டு பேரையும்(சிவனையும் ,பெருமாளையும்)வழிபடுவதால் நான் ஒரு இந்து என்று எனக்கு நானே விளக்கம் கொடுத்து போட்டு நிம்மதி அடைந்தேன். சரி கோவிலுக்கு போவம்....சிவனும் விஷ்ணும் மாற்றுகருத்தாளர்கள் போல எனக்கு காட்சியளித்தார்கள். இருவரும் எதிரும் புதிருமாக உட்கார்ந்து இர…
-
- 1 reply
- 1.2k views
-
-