வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5794 topics in this forum
-
ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் பள்ளிப் பாடத்திட்டத்தில் விருப்பப்பாடமாக தமிழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நியூ சவுத் வேல்ஸ் மாகாணம் வெளியிட்டுள்ள புதிய பாடத்திட்டத்தின்படி அடுத்த கல்வியாண்டு முதல் தமிழ் மொழியும் ஒரு பாடமாக்கப்படுகிறது http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=526935
-
- 1 reply
- 720 views
-
-
கனடா|வெளிநாட்டு மாணவர்களை ஈர்ப்பதற்கு ஐந்தாண்டுத் திட்டம் சிவதாசன் பல மேற்கத்தய நாடுகள் வெளிநாட்டு மாணவர்களின் வரவை ஊக்கப்படுத்த ஆரம்பித்துள்ளன. பிரித்தானியா, கனடா அவற்றில் சில. கனடாவின் சனத்தொகை குறையாமல் வைத்திருக்க வேண்டுமானால் வருடமொன்றுக்கு 350,000 குடிவரவாளர்களை அனுமதிக்க வேண்டும். பிறப்பு வீதம் குறைவதனாலும், அகதிகள் வரவு குறைந்ததனாலும், ஐரோப்பிய நாடுகளிலிருந்து முன்னர் போல் குடிவரவாளர்கள் வருவது ஏறத்தாழ நின்றுபோய் விட்டதாலும் கனடா எப்படியாவது சுமார் மூன்றரை இலட்சம் குடிவரவாளரைக் கொண்டு வந்தேயாக வேண்டும். இதனடிப்படையில் கனடிய குடிவரவமைச்சு வெளிநாட்டு மாணவர்கள் மீது கண்வைக்க ஆரம்பித்திருக்கிறது. அதற்காக அவர்களின் வரவை இலகுவாக்க சில…
-
- 1 reply
- 1k views
-
-
இன்று 13 ஆம் தேதி மற்றும் வெள்ளிக்கிழமை சேர்ந்து வருவதால் இது அபாய நாள் என சிலர் நம்புகின்றனர். குறிப்பாக மேற்குலக நாடுகளில் இதை புலம்பெயர் தமிழர்கள் பார்த்துவருகின்றனர். உலகெங்கும் உள்ள மக்கள் அனைவருக்கும் ஏதாவது ஒரு நம்பிக்கை உள்ளது. உதாரணமாக தென் இந்தியாவில் செவ்வாய்க்கிழமை நல்ல நாள் இல்லை என பலர் கருதுகின்றனர். அதே செவ்வாய்க்கிழமையை வட இந்தியர் மங்கள வாரம் என அழைத்து பல சுப காரியங்களை நிகழ்த்துகின்றனர். இவ்வகையில் மேல் நாட்டினர் 13ஆம் தேதியை கெட்ட நாள் என கருதுகின்றனர். அத்துடன் அதோடு வெள்ளிக்கிழமை அன்று 13ஆம் தேதி வந்தால் அது அபாயமான நாள் என பலரும் பயந்து வருகின்றனர். சிலர் வேலைக்கும் போவதில்லை ஆனால் காலத்தின் சுழற்சியில் இந்த 13ஆம் தேதியுடன்…
-
- 2 replies
- 906 views
-
-
27 வயதான தன் முன்னாள் மனைவியை வாளால் பல முறை வெட்டி ஈழத் தமிழர் ஒருவர் படுகொலை செய்துள்ளார். நேற்று புதன் கிழமை (செப்ரம்பர் 11) 27 வயதான தர்சிகா ஜெகநாதனை 38 வயதான சசிகரன் தனபாலசிங்கம் வீட்டின் நடைப்பாதைக்கு அருகில் வைத்து தள்ளி விழுத்திய பின்னர் வாளால் பல முறை வெட்டி படுகொலை செய்துள்ளார். படுகொலை செய்த பின்னர் காரில் ஏறி தப்பிச் சென்றவர் பின்னர் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இவர் கொல்லப்பட்டவரின் முன்னாள் கணவர் என்று சில செய்திகளும், விவாகரத்து வழக்கு இன்னும் முடியவில்லை என வேறு சில செய்திகளும் சொல்கின்றன. இது ரொரண்டோ மாநகரில் இவ் ஆண்டில் இடம்பெற்ற 45 ஆவது கொலையாகும். ----- Man, 38, charged with 1st-degree murder in fatal Scarbo…
-
- 81 replies
- 11.1k views
-
-
ரொறன்ரோவில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய, இரு தமிழ் இளைஞர்கள் கைது! ரொறன்ரோ டவுண்ரவுன் மத்திய பகுதியில் உள்ள துரித உணவகம் ஒன்றில், துப்பாக்கியை காட்டி மிரட்டிய இரு தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் ஒஷாவா பகுதியைச் சேர்ந்த 27 வயதான ஜேய்சன் ஜெயகாந்தன் மற்றும் மிசிசாகாவைச் சேர்நத 26 வயதான ஜோன்சன் ஜெயகாந்தன் என்று அடையாளம் வெளியிடப்பட்டுள்ளது குயிண் வீதி மற்றும் ஸ்பெடினா அவனியூ பகுதியில் அமைந்துள்ள குறித்த அந்த துரித உணவகத்தில் 34 வயது ஆண் ஒருவர் வரிசையில் காத்துக்கொண்டிருந்த போது, உணவகத்தினுள் நுளைந்த இருவர் குறித்த இந்த நபருடனும் வரிசையில் காத்திருந்த பிறிதொருவருடனும் விவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த முரண்பாட்டின் போது, வெளிய…
-
- 1 reply
- 908 views
-
-
‘வேப்பிங்’ (Vaping) புகைத்தலால் அமெரிக்காவில் ஐவர் மரணம்! ‘வேப்பிங்’ எனப்படும் புகைத்தலினால் அமெரிக்காவில் இது வரையில் 5 பேர் மரணமடைந்திருக்கிறார்கள் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சமீப காலங்களில் நூற்றுக்கணக்கானோர் சுவாசப் பை தொடர்பான வியாதிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும் அவர்களது வியாதிகளை சாதாரண தொற்று நோய்கள் எனக் கருதி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததனால் இறந்தவர்களின் எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் எனவே கருதப்படுகிறது. சமீப காலங்களில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில் பலர் இளைய வயதினர் எனவும் இஅவர்கள் எல்லோரிலும் காணப்பட்ட பொது அம்சம் இவர்கள் வபிங் என்ற புகைத்தலைச் செய்தவர்கள் என்றும் தெரிய வந்த போது இப் புகைத்தலின் பின்னணி பற்றி …
-
- 11 replies
- 2k views
-
-
கனடாவில், அபாயகரமான சந்தேக நபர்களில் பட்டியலில்.. தமிழ் இளைஞர்! கனடாவில் அபாயகரமான சந்தேக நபர்களில் பட்டியலில் தமிழ் இளைஞர் ஒருவரின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கனடா பொலிஸார் தெரிவித்துள்ளனர். பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் தேடப்பட்டு வரும் 28 வயதான ஜெய்சன் ஜெயகாந்தன் என்பவரே அபாயகரமான நபராக அறிவிக்கப்பட்டுள்ளார். குறித்த நபரை காணும் பட்சத்தில் பொலிஸாருக்கு தெரியப்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது. சந்தேக நபரான தமிழ் இளைஞர் வன்முறையில் ஈடுபட கூடிய ஆபத்தானவர் என்று நம்பப்படுகிறது. அவரை காணும் பட்சத்தில் அவருக்கு அருகில் செல்ல வேண்டாம் எனவும், உடனடியாக 9-1-1 என்ற இலக்கத்திற்கு தெரியப்படுத்துமாறு பொலிஸார் கோரியுள்ளனர். அவர் மீது ஆயுதங்களை மறைத்…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஈழத் தமிழ் குடும்பத்துக்காக ஆயிரக்கணக்காக அணி திரண்ட அவுஸ்ரேலிய மக்கள்! அவுஸ்ரேலியாவுக்கு அகதியாகச் சென்ற தமிழ் குடும்பத்தை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான அவுஸ்ரேலிய மக்கள் அணிதிரண்டு பேரணி நடத்தியுள்ளனர். ஈழத் தமிழரான நடேசலிங்கம், அவரின் மனைவி பிரியா, அவர்களின் பிள்ளைகளான 4 வயது கோபிகா, 2 வயது தருணிகா ஆகியோரை நாடு கடத்த நீதிமன்றம் தடை விதித்தது. ஆனாலும், அவுஸ்ரேலியாவுக்குள் தங்கவிடாமல் கிறிஸ்மஸ் தீவில் உள்ள அகதிகள் முகாமுக்கு தமிழ் குடும்பத்தினர் அனுப்பி வைக்கப்பட்டனர். எனினும் நடேசலிங்கம் குடும்பத்தினர் தொடர்ந்து அவுஸ்ரேலியாவில் தான் குடியிருக்க வேண்டும். அவர்களை இலங்கைக்கோ அல்லது கிறிஸ்மஸ் தீவுக்கோ அனுப்பக் கூடாது எனக…
-
- 0 replies
- 718 views
-
-
அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கை தமிழ் குடும்பத்தினை நாடு கடத்தும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் முயற்சிகளை நீதிமன்றம் இறுதி நிமிடத்தில் தடுத்து நிறுத்தியுள்ளது. நடேஸ் பிரியா தம்பதியினரும் அவர்களது இரு குழந்தைகளும் விசேட விமானத்தில் ஏற்றப்பட்டு விமானம் புறப்பட்ட பின்னர் நீதிமன்றம் அவர்களை வெளியேற்றும் உத்தரவைபிறப்பித்தது என அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. நடேஸ் பிரியா தம்பதியினரை குழந்தைகளுடன் அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு பிரிவினர் இன்று இரவு மெல்பேர்ன் தடுப்பு முகாமிலிருந்து விமானநிலையத்திற்கு இலங்கைக்கு நாடு கடத்துவதற்காக அழைத்து சென்றுள்ளனர். இந்த தகவல் கேள்விப்பட்ட தமிழ் தம்பதிகளிற்கு ஆதரவான மக்களும் மனித உரிமை ஆர்வலர்களும் விமானநிலையத்திற்கு விரைந்து…
-
- 13 replies
- 1.8k views
-
-
அமெரிக்க சீரியல் உலகத்தில் நகைச்சுவையால் தனியிடம் பிடித்த Mindy Kaling தயாரித்து நடிக்கும், அடுத்த நகைச்சுவை தொடரில் கனடாவில் வசிக்கும் இலங்கை தமிழ் யுவதியொருவர் நடித்துள்ளார். மைத்திரேயி ராமகிருஷ்ணன் என்ற தமிழ் யுவதியே நெட்ஃபிக்ஸ் தொடர்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 17 வயதான இந்த யுவதி, பாடசாலையில் நாடகங்களை தயாரித்து நடித்துள்ளார். கவனத்தை ஈர்த்த நாடகங்களில் நடித்ததை தொடர்ந்தே, இந்த மகத்தான வாய்ப்பு அவரை தேடி வந்துள்ளது. இந்திய, அமெரிக்க பின்னணியுடைய ஒரு இளைஞனை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ள தொடரிலேயே மைத்திரேயி நடித்துள்ளார். ஊடகமொன்றிற்கு அளித்த போட்டியில், இலங்கை எனது நாடு அல்லவென குறிப்பிட்டுள்ளார் மைத்திரேயி. ஆனால் நிச்சயமா…
-
- 12 replies
- 2.3k views
-
-
கவனயீர்ப்பு போராட்டம்900 நாட்களாக இரவு பகலாகப் போராடும் எம் உறவுகளுக்கு ஆதரவாக கனடாவில் கவனஈர்ப்பு போராட்டம். திகதி: ஆகஸ்ட் 30, 2019 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 5:00 மணிக்கு இடம்: Markham, Steels சந்திப்பில் (John Daniels Park) கனடா வாழ் அனைத்து தமிழ் உறவுகளும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு தாயகத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு வலுச் சேர்க்க அணி திரளுங்கள்! - முகநூல்
-
- 6 replies
- 1.5k views
-
-
லண்டனில் மிகப்பெரும் ஊழலில் சிக்கிய தமிழ் அமைப்பு! திடுக்கிட வைக்கும் ஆதாரங்கள் August 12, 2019 கடந்த முப்பது வருட கால யுத்தம் தந்த வடுக்கள் இன்னமும் தாயக மற்றும் புலம்பெயர் தேசத்து மக்களிடையே பாரிய ரணமாக இருக்கின்றனது. இந்நிலையில், தனது அன்றாட வாழ்வையே நடத்திச் செல்ல அல்லலுறும் தாயக மக்களுக்கு புலம்பெயர் தேசத்திலிருந்து வழங்கப்படும் நிதியை அபகரித்து பாரிய ஊழல்களை புரிந்துள்ள ஒரு நிதி அமைப்பு தொடர்பில் தற்போது தெரியவந்துள்ளது. லண்டனில் அமைந்துள்ள குறித்த நிதி அமைப்பு தொடர்பான ஒரு தேடலினை சர்வதேச ஊடகமான ஐபிசி தமிழ் தொலைக்காட்சியின் அக்கினிப் பார்வை நிகழ்ச்சி நடத்தியது. இறுதியில், குறித்த அமைப்பு தொடர்பான…
-
- 0 replies
- 1.5k views
-
-
தொல் திருமாவளவன் பங்கேற்ற லண்டன் கூட்டத்தில் சலசலப்பு! விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் கலந்து கொண்ட லண்டன் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. விம்பம் கலை, இலக்கிய, திரைப்பட மற்றும் கலாச்சார அமைப்பின் ஏற்பாட்டில் தொல் திருமாளவனுடன் இரு நாள் நிகழ்வுகள் இன்றைய தினம் லண்டனில் ஆரம்பமாகியிருந்தன. இதன்போது தொல் திருமாவளவனின் அமைப்பாய் திரள்வோம் நூல் வெளியீட்டு நிகழ்வும், கலந்துரையாடலும் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையில் குறித்த நிகழ்வில் சிறு சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. என்றபோதும் குழப்பம் ஏற்பட காரணமானவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதன் பின் நிலைமை …
-
- 0 replies
- 1k views
-
-
ஆஸ்திரேலியாவின் ஆஸ்பத்திரிகள் ……. ஆஸ்பத்திரிகளுக்கு அருமையாகத் தான் போவது. மற்றையோரை நலம் விசாரிக்கவே அநேகம் செல்வது . வித்தியாசமாக சுகயீனம் ஒன்று காரணமாக அண்மையில் செல்ல வேண்டியிருந்தது. வேறொன்றுமில்லை, மகள் வீடு மாறியிருந்தார் , அவருக்கு உதவி செய்யலாம் என இரண்டு மணி வான் பயணத்தில் துணைவியார் , இளைய மகள் சகிதம் இரண்டு கிழமை தங்கி செல்லலாம் என வந்திருந்தோம். எனது அலுவலக கிளைகள் இங்கேயும் இருப்பதால் எனக்கு இங்கேயே வேலை செய்யும் வசதி உண்டு. வந்த இரண்டாம் நாள் துணைவியார் கூப்பிட்டார் இதை ஒருக்கா பாருங்கோப்பா என்று. ஒரு கட்டி மாதிரி இருந்தது சற்றே சீழ் பிடித்துப் போயிருந்த மாதிரி இருந்தது நான் சென்னேன் இதை விடக் கூடாது கொண்டு போய்க் காட்டுவோம் என்ற…
-
- 16 replies
- 2.3k views
-
-
புகழ்பெற்ற லெஸ்ரர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக யாழ்பாணத்தை சேர்ந்த பேராசிரியர் நிஷான் கனகராஜா நியமனம் Aug 21, 20190 பிரித்தானியா லெஸ்ரர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவரான பேராசிரியர் நிஷான் கனகராஜா நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது பிரித்தானியாவின் பிரபல்யம் மிக்க பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மற்றும் நிறுவனங்களுக்கான துணை வேந்தராக பதவி வகிக்கும் பேராசிரியர் நிஷான் கனகராஜா எதிர்வரும் நவம்பர் 04 ஆம் திகதி இந்த பொறுப்பை ஏற்கிறார். பேராசிரியர் கனகராஜா 1…
-
- 7 replies
- 1.5k views
-
-
வணக்கம் யாழ் உறவுகளே / பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் எனது ஊரை சேர்ந்த ஒரு அண்ணா தமிழ் கடையில் வேலை செய்கிறார் , மாசம் 400 மணித்தியால வேலை சம்பளம் 1200 இயுரோ ( மிருக வதை ) என்ர நண்பனுக்கு அந்த அண்ணாவை நல்லா தெரியும் , என்ர நண்பன் அவரின் வேலையையும் மணித்தியாலத்தையும் சம்பளத்தையும் சொல்ல என்னடா கொடுமை இது என்று எனக்கு தோனிச்சு 😓, அந்த 1200 இயுரோவில் தான் பேருந்து கட்டனமும் கட்டனும் , ஊரில் அவரின் மனைவி பிள்ளையலுக்கு மாசம் 400 இயுரோவை அனுப்பி மீதம் உள்ள காசில் தான் சாப்பாடு வீட்டு வாடகை / என்ர மச்சான் அவனும் இங்கை உணவகம் வைச்சு நடத்துறான் , அவனுக்கு சொன்னேன் எங்கட ஊரை சேர்ந்த அண்ணா பிரான்ஸ…
-
- 31 replies
- 4.5k views
- 1 follower
-
-
அவுஸ்திரேலியாவில் கடந்த பத்தாண்டுகளாக தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் ஐந்துக்கும் மேற்பட்ட தமிழ் அகதிகளை உடனடியாக விடுதலை செய்யும்படி கோரி தொடர்ச்சியான கவனயீர்ப்பு நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதாக தமிழ் ஏதிலிகள் கழகம் அறிவித்துள்ளது. அதன் முதற்கட்டமாக நடைபெறவுள்ள கவனயீர்ப்பு நிகழ்வு பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் வெளியிடப்பட்ட அறிக்கை வருமாறு: ஆஸ்திரேலியாவில் காலவறையின்றி தடுப்பில் வைக்கப்பட்டு இருக்கும் ஈழ தமிழர்களை உடனடியாக விடுதலை செய் ஆஸ்திரேலியா வாழ் தமிழ் மக்களே! நீண்ட காலமாக எந்த காலவரையும் இல்லாமல் தடுப்பில் வைக்கப்பட்டு இருக்கும் இலங்கை அகதிகளின் விடுதலைக்காக குரல் கொடுக்க ஒன்று கூடுங்கள். 2009 போருக்கு பின்னான இந்த …
-
- 4 replies
- 1.5k views
-
-
கனடாவில் Toronto பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஒன்றுக்கான முயற்சி இடம்பெறுகிறது. இதற்காக தேவைப்படும் $3 மில்லியன் பணத்தில் 23% மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வருட காலத்துக்குள் மிகுதிப்பணம் திரட்டப்படவேண்டும். இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து பங்களிப்பு செய்பவர்கள் மிகவும் குறைவானவர்களாகவே உள்ளனர். முதலில் தமிழ் இருக்கை என்றால் என்ன ? ஒரு பேராசிரியருக்கு கீழ் 10 வரையான ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து ஆராய்ச்சிகளை முன்னெடுப்பதற்கு வசதியாக ஒரு பேராசிரியர் நியமிக்கப்படுவது. இதன் மூலம் கருத்தரங்குகளும், மொழி சார்ந்த நிகழ்வுகளும் முன்னெடுக்கப்படலாம். பின்பு இது தமிழ்த் துறையாக விரிவடைய உதவும். தமிழ்த் துறை என்பது தலைவர், பேராசிரியர்கள், துணைப்பேராசிரியர்கள்…
-
- 0 replies
- 1.1k views
-
-
கனடாவில் வரலாற்று சிறப்புமிக்க நகரின் தலைமை பொலிஸ் அதிகாரியாக தமிழர் நியமனம் கனடாவின் ஒன்ராறியோ பகுதியில் உள்ள முக்கிய நகரத்திற்கு தலைமை பொலிஸ் அதிகாரியாக இலங்கை தமிழர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கனடா நாட்டின் ஹோல்டன் பகுதியில் துணை பொலிஸ் அதிகாரியாக நிஷ் துரையப்பா பணிபுரிந்தார். இவர் இலங்கையைச் சேர்ந்தவராவார். பொலிஸ் துறையில் கடந்த 25 ஆண்டுகளாக பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வந்துள்ளார். இவர் தற்போது வரலாற்று சிறப்புமிக்க நகரமாக விளங்கும் பீல் (Peel) நகரத்தின் தலைமை பொலிஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதன்படி அவர் எதிர்வரும் ஒக்டோபர் 1 ஆம் திகதி பதவியேற்கவுள்ளார். இது குறித்து நிஷ் துரையப்பா கூறுகையில், ‘3000 பொலிஸாரை கொண்டுள்ள பீல் நகருக்க…
-
- 2 replies
- 1.3k views
-
-
நெதர்லாந்தில் நீரில் மூழ்கி இலங்கையர் உயிரிழப்பு! நெதர்லாந்தில் நீரில் மூழ்கி இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நெதர்லாந்தில் உள்ள zandvoort கடலில் குளித்துக்கொண்டிருந்த போது, எதிர்பாரத விதமாக வந்த பாரிய அலையில் சிக்கியே அவர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. ஜேர்மனியில் வசிக்கும் 57 வயதான கந்தசாமி சந்திரகுமார் என்ற இலங்கை தமிழரே இதன்போது உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களாக புலம்பெயர் தமிழர்கள் நீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/நெதர்லாந்தில்-நீரில்-மூழ/
-
- 0 replies
- 986 views
-
-
நுண்ணறிவுக் கூர்மை தேர்வில் ஐன்ஸ்டீனையும் விஞ்சிய தமிழ்ச் சிறுமி! ஒருவரது நுண்ணறிவுக்கூர்மையை (IQ – Intelligence Quotient) அளவிடுவதற்காக நடத்தப்படும் தேர்வில் மிக அதிகபட்ச மதிப்பீட்டை பெற்று பிரித்தானியாவில் வாழும் 11 வயதான ஹரிப்பிரியா எனும் தமிழ்ச் சிறுமி சாதனைப் படைத்துள்ளார். இதன் மூலம், உலகின் தலைசிறந்த அறிவியலாளர்களாக அறியப்படும் அல்பேர்ட் ஐன்ஸ்டீன், ஸ்டீஃபன் வில்லியம் ஹோக்கிங்ஸ் உள்ளிட்டவர்களை விட மிகுந்த அறிவுக்கூர்மை பெற்றவர் எனும் பெருமையை ஹரிப்பிரியா பெற்றுள்ளார். கல்வி மட்டுமின்றி, பன்மொழித்திறன், ஆடல், பாடல், இசை, விளையாட்டு போன்ற பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கிவரும் பதினோரு வயதே ஆகும் ஹரிப்பிரியாவிடம் செய்தியாளர்கள் நேர்காணல் மேற்கொண்டபோது…
-
- 2 replies
- 1.7k views
-
-
அறிவுக்கூர்மையில் ஐன்ஸ்டீனை விஞ்சிய 11 வயது தமிழ்ச் சிறுமி சாய்ராம் ஜெயராமன்பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைRADHAKRISHNAN Image captionஹரிப்பிரியா ஒருவரது நுண்ணறிவுக்கூர்மையை (IQ - Intelligence Quotient) அளவிட நடத்தப்படும் தேர்வில் மிக அதிகபட்ச மதிப்பீட்டை பெற்று பிரிட்டனில் வ…
-
- 3 replies
- 1.6k views
- 1 follower
-
-
யாழ் இளைஞர் சுவிற்சலாந்தில் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு July 29, 2019 யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் சுவிற்சலாந்து சொலத்தூண் பகுதியில் உள்ள ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார். திருநெல்வேலி பாற்பண்ணை பகுதியை சேர்ந்த எஸ்.சயந்தன் எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சொலத்தூண் பகுதியில் உள்ள ஆறு ஒன்றின் பாலத்திற்கு மேலாக நண்பர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்த வேளை கால் இடறி ஆற்றில் வீழ்ந்து உயிரிழந்தார் என தெரிவிக்கப்படுகின்றது. #யாழ் #இளைஞர் #சுவிற்சலாந்து #ஆற்றில் மூழ்கி #உயிரிழப்பு http://globaltamilnews.net/2019/127508/
-
- 2 replies
- 1.1k views
- 1 follower
-
-
கடந்த ஆண்டு குடும்பத்தோடு மொரோக்கோ ( Morocco ) போய்வந்தது. ஆனால் அதை பயனாக கட்டுரையாக எழுதும் மனநிலை இல்லை ஆதலால் அங்கு நடந்த ஒருசில விடயங்களை மட்டும் எழுதுகிறேன். அங்கு மூன்று நகரங்களுக்குச் சென்றிருந்தோம். முதலில் சென்றது ( Rabat ) ராபற் என்னும் நகருக்கு. அங்கு நாம் தங்கி இருந் இடம் மெதீனா (medina ) என்று அழைக்கப்பட்டது. சுற்றிவர பிரமாண்டமான கோட்டைச் சுவர்கள் போன்ற மதில்களின் உள்ளே வீடுகள் தொடராக அமைக்கப்பட்டிருந்தன. முற்காலத்தில் படையெடுப்புக்களுக்குப் பயந்து,தம் பெண்கள் பிள்ளைகளைக் காப்பதற்காக இப்படியான அமைப்புக்களையே மொறோக்கோ இன மக்கள் கட்டியிருந்தார்கள். வீடுகள் நாற்சார் வீடுகள் போல் தொடராகக் கட்டப்பட்டிருந்ததால் அவற்றுக்கான வெளிச்சம் மற்றும் காற்று வருவதற்கு …
-
- 2 replies
- 1.3k views
-
-