நூற்றோட்டம்
நூல்கள் | அறிமுகம் | திறனாய்வு
நூற்றோட்டம் பகுதியில் நூல்கள், அறிமுகம், திறனாய்வு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் நூல்களின் அறிமுகங்கள், திறனாய்வுகள் மாத்திரம் இணைக்கப்படுதல் வேண்டும். ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் நூல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இணைக்கப்படல் வேண்டும்.
809 topics in this forum
-
புத்துயிர் ஊட்டட்டும் 2017 புத்தகக் காட்சி! சென்னை புத்தகக் காட்சி-2017 நேற்று தொடங்கியிருக்கிறது. தென்னிந்தியாவிலேயே பெரிய புத்தகக் கொண்டாட்டம் இது. பதிப்பாளர்கள், புத்தக விற்பனையாளர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள், ஊடகங்கள் என்று ஒருசேரக் கொண்டாடும் பெருநிகழ்வு! பல ஆண்டுகள் சிறிய அளவில் நடந்துகொண்டிருந்த இந்த விழா கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பிரம்மாண்டமாக உருவெடுத்திருப்பது மிகவும் ஆரோக்கியமான சமூக மாற்றம் என்றே கருத வேண்டும். வலைப்பூக்கள், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களின் வருகையும் கூட இந்த மாற்றத்துக்கு முக்கியமான காரணம். ஊடகங்களில் எல்லோருக்கும் வாய்ப்பு கிடைப்பது சாத்தியமில்லை என்னும் நிலையில், …
-
- 13 replies
- 1.7k views
-
-
தமிழர்களின் பிரச்சனைகளை சிங்கள மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். தமிழர்களின் பிரச்சனைகளை, சிங்கள மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளதனாலையே “இப்படி ஒரு காலம்” எனும் நூலினை “மதக வன்னிய” என சிங்களத்தில் மொழிபெயர்ப்பு செய்து அதனை சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க விரும்பினேன் என நூலின் மொழி பெயர்ப்பாளர் அனுஷா சிவலிங்கம் தெரிவித்து உள்ளார். கவிஞரும் எழுத்தாளருமான சிவராசா கருணாகரனின் “இப்படி ஒரு காலம் ” எனும் நூல் சிங்கள மொழியில் “மதக வன்னிய ” எனும் பெயரில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டு உள்ளது. எழுத்தாளரான சிவராசா கருணாகரனின் “இப்படி ஒரு காலம்” எனும் நூல் கிள…
-
- 0 replies
- 458 views
-
-
புலிகளுக்குப் பின்னான தமிழ் அரசியல்:- இந்திய அமைதிப் படையினர் வெளியேறிக்கொண்டிருந்த பின்னணியில் நிலாந்தன் திசை பத்திரிகையில் அரசியல் பத்திகளை எழுதத் தொடங்கினார். அதிலிருந்து தொடக்கி இருபத்தியேழு ஆண்டுகளாக எழுதிவரும் அவர் ஈழநாதம், வீரகேசரி, தினக்குரல் ,உதயன் ஆகிய பத்திரிகைகளில் எழுதியுள்ளார். கடந்த ஆறு ஆண்டுகளாக தினக்குரல் வார பத்திரிகையில் தொடர்ச்சியாக எழுதி வருகிறார். தினக்குரலில் வரும் அவருடைய கட்டுரைகள் பின்னர் குளோபல் தமிழ் செய்திகள், பொங்குதமிழ், மாற்றம் Jds Lanka(Journalist for Democracy in SriLanka)போன்ற பல இணையத் தளங்களிலும் பிரசுரிக்கப்படுகின்றன. போர்க்காலங்களில் அவர் எழுதிய நூற்றுக் கணக்கான கட்டுரைகளை மீளப் பெறமுடியாத ஒ…
-
- 0 replies
- 593 views
-
-
“நாங்கள் இப்படித்தான் சுவாதி...ஜோதிமணிகளை எதிர்கொள்கிறோம்!” பி.ஜே.பியின் சமூக ஊடக அரசியல் பிண்ணனி #IamATroll அந்தப் புத்தகம் இப்படியாகத் தொடங்குகிறது, “அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவோ அல்லது பிரிட்டன் பிரதமர் தெரசா மேவோ அல்லது ஃபிரான்ஸ் அதிபர் ஃப்ரான்சியோஸ் ஹாலாந்தோ சமூக ஊடகங்களில் மிக மோசமான நடவடிக்கைகளில் (பெண்களை இழிசொல்லால் கொச்சைப்படுத்துபவர்கள், கொலை மிரட்டல் விடுபவர்கள்) ஈடுபடுபவர்களைப் பின்தொடர்வார்கள் என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா....? நம் பிரதமர் இந்தத் தலைவர்களுடன் நட்பில் இருப்பதில் பெருமை கொள்கிறார். அதே நேரம்... அவர், பெண்களை இழிசொல்லால் கொச்சைப்படுத்துபவர்களையும், கொலை மிரட்டல் விடுபவர்களையும் பின்தொடர்கிறார்.…
-
- 0 replies
- 391 views
-
-
2016-ல் கவனம் ஈர்த்த 15 புத்தகங்கள்... பரிந்துரைக்கும் 15 பிரபலங்கள்! ”புத்தகங்களை வாசித்துக்கொண்டே இரு, ஆனால் புத்தகம் என்பது வெறும் பக்கங்கள் மட்டுமே. சிந்தித்தல் எனும் அதன் நீட்சியை நீதான் கற்றுணர வேண்டும்”. ரஷ்ய எழுத்தாளர் மாக்சிம் கார்க்கியின் வரிகள் இவை. வான் பார்த்து அல்லாமல் நிலம் நோக்கி சிறகு விரித்திருக்கும் சுதந்திரப் பறவைகள்தான் புத்தகங்கள். 2016-ம் வருடம் நிறைவடைய இருக்கும் நிலையில், தங்களுக்குள் அப்படிப்பட்ட சிந்தனையையும், தாக்கத்தையும் ஏற்படுத்திய புத்தகங்கள் பற்றி குறிப்பிடுகிறார்கள் பிரபலங்கள். பி.சி.ஸ்ரீராம், ஒளிப்பதிவாளர் சக ஒளிப்பதிவாளர் ராஜ்குமார் எழுதிய ‘ஒளி ஓவியம்’ புத்தகத்தைக் குறிப்பிடலாம். கேமிரா தொடர்பான டெக…
-
- 1 reply
- 2.6k views
-
-
துன்பங்களைச் சொல்வதும் எழுதுவதும் அனுபவிப்பதைப் போலவே துயரமானது தான்! ‘எழுதித் தீராப்பக்கங்கள்’ தொகுப்பில் ஒவ்வொரு அனுபவக் கட்டுரையையும் அகதிகளின் உணர்வுகளாகச் செல்வம் அருளானந்தம் எழுதியிருக்கிறார். அவரது பார்வையும் சிந்தனையும் அவற்றிலே நகைச்சுவையைக் காண்பதுமாகத் துயரங்களை எழுதியவற்றைப் பாராட்டும் அதே நேரம், ஒவ்வொரு கட்டுரையின் தலையங்கமும் அதனோடு இணைந்த ஓவியங்களும் அவற்றை மலினப்படுத்தி விடுகின்றன என்பது இத்தொகுப்பின் பலவீனமாய் எனக்குத் தெரிகிறது. சட்டென்று எனக்கு ஞாபகம் வந்தது தமிழ்வாணன் காலத் தலைப்புகள் போலயிருக்கே என்பது தான். தலைப்புகள் ஓவியங்கள் கவர்ச்சியாக வாசகரை வாசிக்கத் தூண்டுவதற்கானவையாக இருக்கவேண்டுமென வைத்தாரா செல்வம் தெரியவில்லை.ஆனால், உள்ளே விட…
-
- 1 reply
- 622 views
-
-
நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக இணையத்தில் தொடர்ந்து எழுத வந்தபோது சக இணைய எழுத்தாளர்கள் மட்டுமே வழிகாட்ட இருந்தார்கள். இங்கே அப்போது பெரிய எழுத்தாளர்கள் என்று பார்த்தால் விரல் விட்டு எண்ணிவிடலாம். இணையம் ஒரு மிரட்டலாகவே பார்க்கப்பட்டது. அப்போது முகநூலில் தொடர்ந்து எழுதி வந்தவர்களில் முக்கியமானவர் அய்யா வண்ணதாசன். கவிதையைத் தேடி தொலைதூரம் போகிறவர் அல்ல அவர். அந்நிய மனிதனின் கைக்குட்டையை நுனி விரலால் பற்றி குப்பைத்தொட்டியில் போடுவோர் நிறைந்த உலகில், பார்க்க வந்த ஒருவர் மேசையில் மறந்து வைத்துவிட்ட கைக்குட்டை காற்று வாங்கும் சுதந்திரத்தை கவிதையாக்கி சேமிக்கிறார். குளத்தின் சலன வட்டங்களை சுருட்டிக் கூட்டில் வைத்து நகரும் நத்தையை நான் இன்னும் எத்தனை வருடங்கள் சென்று கற்பனை செய்ய …
-
- 1 reply
- 833 views
-
-
2016- ஆம் ஆண்டின் தமிழுக்கான சாகித்ய அகாதெமி விருது வண்ணதாசனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது ஒரு சிறு இசை நூலுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. வண்ணதாசன் என்ற பெயரில் கதைகளையும் கல்யாண்ஜி என்ற பெயரில் கவிதைகளையும் எழுதி வரும் இவரது இயற்பெயர் சி. கல்யாணசுந்தரம். திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்த இவர், 1962-லிருந்து எழுதி வருகிறார். கலைக்க முடியாத ஒப்பனைகள், ஒளியிலே தெரிவது, உயரப் பறத்தல் கனிவு ஆகியவை இவரது சில சிறுகதைத் தொகுப்புகள். தற்போது விருதை வென்றிருக்கும் ஒரு சிறு இசை நூலை, சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. சின்னு முதல் சின்னு வரை என்ற நாவலையும் புலரி, முன்பின், ஆதி உள்ளிட்ட கவிதைத் தொகுப்புகளையும் வண்ணதாசன் கடிதங்கள் என்ற கடிதத் தொகுப்புகளையும் இ…
-
- 5 replies
- 5k views
-
-
தெணியான் எழுதிய ‘ஏதனம்’ எனும் நாவல் வெளியிட்டுவிழா கொற்றாவத்தை பூமகள் சனசமூகநிலைய பொது நோக்கு மண்டபத்தில் 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மணிக்கு கொற்றை.பி.கிருஷ்ணானந்தன் தலைமையில் நடைபெற்றது. வரவேற்புரையை ந.ஆதவனும் வெளியீட்டுரையை க பரணீதரனும் நிகழ்த்தினர். க.தம்பிமுத்து, வதிரி.சி.ரவீந்திரன், க.நவம் ஆகியோர் கருத்துரை வழங்கினர். க. ஞானசீலன் நன்றியுறை வழங்கினார். http://thuliyam.com/?p=52258
-
- 0 replies
- 487 views
-
-
அதிகாரத்தில் தெறிக்கும் வன்மம் 1. 'Road to Nandikadal' என்பது புலிகளை ஆயுதப்போராட்டத்தின் மூலம் வெற்றிகொண்டதை சிங்கள இராணுவத் தரப்பிலிருக்கும் ஒருவர் கொண்டாடிக் குதூகலிக்கின்ற ஒரு நூலாகும். முகமாலையில் தரித்து நின்ற 53 டிவிசனுக்குத் தலைமை தாங்கிய கமல் குணரட்னே நான்காவது ஈழப்போரில் இறுதியில் புலிகளின் தலைவர் கொல்லப்படுகின்ற தாக்குதலை நிகழ்த்தியதுவரை பலவற்றை எழுதிச் செல்கின்றார். புலிகளின் தலைவரைப் புகழ்ந்திருக்கின்றாரென 2ம் அத்தியாயம் மட்டும் வாசித்துவிட்டு 'புகழ்' பரப்பியவர்கள், இந்நூலை முழுமையாகக் கடைசி அத்தியாயம் வரை வாசித்திருந்தால் அவர்களுக்கு நிச்சயம் கடும் சினம் வந்திருக்கும். ஒரு நாய் தன் காலின் மீது கிடக்கிறது எனவும், நாயின் அடையாள அட்…
-
- 4 replies
- 586 views
- 1 follower
-
-
பத்துக்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகுப்புகள் குறிப்பிடத்தக்க விதத்தில் இந்த ஆண்டு வெளிவந்திருக்கின்றன. இவற்றின் கதைகள் ஆர்வத்தையும் சுவாரசியத்தையும் ஒருசேர அளிக்கின்றன. எஸ்.ராமகிருஷ்ணனின் பதினைந்தாவது தொகுப்பும், சாம்ராஜ், போகன் சங்கர், ஜி.காரல் மார்க்ஸ், கே.ஜே.அசோக்குமார் ஆகியோரின் முதல் தொகுப்பும் வெளி வந்திருக்கின்றன. இக்கதைகள் காட்டும் நிலப்பகுதிகள் வேறுபட்டவை. பிரத்தி யேகப் பேச்சுவழக்குகள், பண்பாட்டுக் கூறுகள், வாழ்நிலைகளை அவை கொண் டிருக்கின்றன. பெயர்களிலும் அடையாளங் களிலும் கதை மாந்தர்களுக்குள் வேறுபாடு இருப்பினும் சில விதிவிலக்குகள் நீங்கலாக இந்தக் கதையுலகுகள் பெரும் பாலும் உணர்ச்சியின் தளத்தில் ஒன்றிணை கின்றன. பல கதைகளில் காமம் வெவ்வேறு வடிவங்களில் கலந்திருக்கிறது. …
-
- 0 replies
- 939 views
-
-
யார் அழுவார் நீ இறந்தபின் புத்தகத்திற்கு கீழை உள்ள இணைப்பை பயன்படுத்தவும் http://4motivi.com/books/sharma/cry.pdf “When you were born, you cried while the world rejoiced. Live your life in such a way that when you die, the world cries while you rejoice.” — Ancient Sanskrit saying Does the gem of wisdom quoted above strike a chord deep within you? Do you feel that life is slipping by so fast that you just might never get the chance to live with the meaning, happiness and joy you know you deserve? If so, then this very special book by leadership guru Robin S. Sharma, the author whose Monk Who Sold His Ferrari series has transformed the lives of thousan…
-
- 0 replies
- 435 views
-
-
பிராங்பர்ட் தரும் புதிய வாய்ப்புகள் ஜெர்மனியிலுள்ள பிராங்பர்ட்டில் ஆண்டுதோறும் நடக்கும் புத்தகக் காட்சி, உலகில் பல்வேறு மொழிகளில் புத்தகம் வெளியிடுபவர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும், மொழிபெயர்ப்பாளர்களுக்கும் புதிய வாசல்களைத் திறந்துவைக்கிறது. இது புத்தக விற்பனைக்கான சந்தையல்ல. எழுத்தாளர்கள் பதிப்பகங்களைச் சந்திப்பது, ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழியில் வெளியிடுவதற்கான உரிமங்கள் தொடர்பான பரிவர்த்தனைகள், புத்தக வியாபாரிகள் மேற்கொள்ளும் கொள்முதல் போன்றவற்றுக்கான களம் இது. உரிமங்களுக்கான முகவர்கள், அச்சுத் துறை, பதிப்புத் துறைக்குத் தேவையான நவீன தொழில்நுட்பங்கள் அளிப்பவர்கள் எனப் பல விதமானவர்கள் இங்கு வணிகம் செய்ய …
-
- 0 replies
- 431 views
-
-
கிளிநொச்சியில் சிறப்பாக நடைபெற்ற அரசியல் கைதியின் விடியலைத் தேடும் இரவுகள் நூல் வெளியீடு இன்று 14-11-2016 திங்கள் கிளிநொச்சியில் சிறப்பாக நடைபெற்ற அரசியல் கைதி விவேகானதனூர் சதீசின் விடியலைத் தேடும் இரவுகள் நூல் வெளியீடு பிற்பகல் மூன்றுமணியளவில் கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் விருந்தினர்களாக யாழ் போதனா வைத்திய சாலையின் பணிப்பாளர் வைத்தியக்கலாநிதி சத்தியமூர்த்தி ,பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் ,வடமாகாண போக்குவரத்து மீன்பிடித்துறை அமைச்சர் டெனீஸ்வரன் ,வடமாகாண சபை உறுப்பினர்களான பசுபதிப்பிள்ளை ,அரியரத்தினம் ,சயந்தன் ,சுகிர்தன் அஸ்மின் ,கிளிநொச்சி மாவட்ட தமிழ்ச்சங்கத் தலைவர் ,மன்னார் மாவட்…
-
- 0 replies
- 699 views
-
-
தமிழ் கிராமத்தையே அழித்த இலங்கை இராணுவம் தமிழரின் சொத்தையும் கொள்ளையடித்தது தமிழ்க் கிராமம் ஒன்றின் ஊடாக நடந்து செல்லும் இராணுவ வீரர் ஒருவரின் மனநிலை எப்படியிருக்கும் என்பதை நான் இங்குதான் உணர்ந்து கொண்டேன். அவர்கள் பார்க்கின்ற அனைத்தையும் அழித்திருந்தனர். இவ்வாறு விடுதலைப் புலிகளிடம் போர்க்கைதியாகப் பிடிபட்டிருந்து, விடுவிக்கப்பட்ட இலங்கை கடற்படை அதிகாரியான கொமடோர் அஜித் போயகொட, இலங்கைஇராணுவத்தினரின் ஒழுக்க மீறல்களை தனது “A Long Watch: War, Captivity and Return in Sri Lanka” என்று நூலில் விபரித்துள்ளார். “எனது இராணுவப் பணியின் போது மறக்க முடியாத சம்பவங்களில் இதுவும் ஒன்றாகும். 1991ல் எமது இராணுவ நடவடிக்கை முடிவுற்ற கையோடு இலங்கைக்கு வடக்கேயு…
-
- 0 replies
- 551 views
-
-
Road to Nandikadal வாசித்து முடித்துவிட்டேன். முகமாலையில் தரித்து நின்ற 53 டிவிசனுக்குத் தலைமை தாங்கிய கமல் குணரத்தின நான்காவது ஈழப்போரில் இறுதியில் புலிகளின் தலைவர் கொல்லப்படுகின்ற தாக்குதல் வரை சொல்வதே இந்த நூல். புலிகளின் தலைவரைப் புகழ்ந்திருக்கின்றாரென 2ம் அத்தியாயம் மட்டும் வாசித்துவிட்டு 'புகழ்' பரப்பிய புலி ஆதரவாளர்கள் கடைசி அத்தியாயம் வரை வாசித்திருந்தால் கடும் சினம் வந்திருக்கும். ஒரு நாய் தன் கால் மீது கிடக்கிறது எனவும், நாயின் அடையாள சின்னம் எதுவெனவும் புலிகளின் தலைவரை -அவர் ஒரு மனிதர் என்றளவில் கூட- சிறிதும் மரியாதை கொடுக்காமல் இருப்பதை வாசித்திருந்தால், புகழைப் பதிந்தவர்கள் தம் பதிவுகளை மறைத்துவிட்டு ஓடியிருப்பார்கள். புலிகளைத் தீவிரவாதிகளென எல்லா இட…
-
- 1 reply
- 563 views
-
-
இளம் வயதில் வெதரிங் ஹைட் ஒரே நாவலை தந்துவிட்டு இறந்த எமிலி புரண்டே ஆங்கில இலக்கியத்தில் முக்கியமான இடம் வகிக்கிறார் (Wuthering Heights – Emily Brontë’) அதுபோல் தமிழினியின் சுயசரிதையும் ஈழத் தமிழர்களால் பலகாலம் பேசப்படும். அரசியல் போராட்டத்தை இப்படி எடுத்துக் கொண்டு போகக்கூடாது என்பதோடு நமக்கு தவறுகளைப் புரிந்து கொள்ளும் பாலபாடமாக இருக்கவேண்டும் என விரும்புகிறேன் அரசியல் முப்பது வருடகால தமிழ் விடுதலைப் போராட்டத்தை மகோன்னத போராட்டமாகவும் அதன் தலைவரை கடவுளுக்கு நிகராகவும் வைத்து எதுவித விமர்சனமற்ற போராட்டமாக எடுத்துச் சென்றோம். ஆனால் போராட்டம் 2009 இல் முற்றாக ஆவியான பின்பு இயக்கத்தில் வெவ்வேறுகாலங்களில் இருந்தவர்கள் நாவல்களாக எழுதினார்கள். நமது சமூகத்தில் இலக…
-
- 38 replies
- 9.5k views
- 1 follower
-
-
`மண்ணுக்குள் புதைக்கப்பட்ட மனிதரை எழுப்பும் வல்லமை எனக்கில்லை ஆனால் கொல்லச் சொன்னவரை உயிருடன் உலவும் பிணங்களாக்க என் குரலுக்கு இயலும்` (மலைமகள், பெயரிடப்படாத நட்சத்திரங்கள்) தமிழீழக் கனவோடு போராடச் சென்ற ஒரு போராளியை மையமாக வைத்து ஆக்கப்பட்ட `உயிரணை` எனும் இந்த புனைவு இலக்கியத்தின் ஆசிரியர் சாந்தி நேசக்கரம். 143 பக்கங்கள் கொண்ட இந்நூல் பூவரசி வெளியீடாக வந்துள்ளது. பதின்மூன்று அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்ட கதைப்பகுதியில், முதல் ஐந்தும் மேவுதல் அடுத்த ஐந்தும் கரைதல் இறுதி மூன்றும் அவாவுதல் என்னும் தலைப்புகளில் இடம் பெற்றுள்ளது. இவை விடுதலை புலிகளின் போராட்ட வரலாற்றில், போராட்டம் உச்சம் பெற்ற காலத்தையும் வீழ்ச்சிக் காலத்தையும் கையறு நிலையில…
-
- 1 reply
- 662 views
-
-
கண்ணீரைச் சிரிப்பாக்கிய அகதி கனடாவில் வாழும் இலக்கியச் செயல்பாட்டாளரும், ‘காலம்’ இதழின் ஆசிரியருமான செல்வம் அருளானந்தம், இலங்கையிலி ருந்து பாரீஸுக்குப் போய் வாழ்ந்த ஒன்பது வருட அனுபவங்களை நினைவுத் தீற்றல்களாக எழுதியுள்ள நூல் ‘எழுதித் தீராப் பக்கங்கள்’. பெரும்பாலும் இந்திய, தமிழக வாழ்வையொத்த குடும்பம், ஊர், சாதிசனம் என்ற குண்டான்சட்டி பரப்பளவே கொண்ட ஒரு சம்பிரதாயமான யாழ்ப் பாண வாழ்க்கையிலிருந்து உயிர்பயம் துரத்த எல்லைகளையும் கடல்களையும் கடக்க நேர்ந்த அகதியின் குறிப்புகள் இவை. கவிஞர் பிரமிளின் வார்த்தைகளில் சொல்வதானால் ‘ஒரு சமூகத்தின் உயிரை இருபத்தி நாலு மணிநேரமும் இருள் சூழத் தொடங்கிய காலத்தில்’ யாழ்ப் பாணத்திலிருந்து புறப்பட்ட மு…
-
- 0 replies
- 558 views
-
-
நடந்த இறுதிப் போரில் சிறைபிடிக்கப்பட்ட போராளிகள் அனுபவித்த சித்திரவதைக் கொடுமைகளின் பின்னணியில் ‘விடமேறிய கனவு’ என்ற நாவலை எழுதியிருக்கிறார் குணா கவியழகன். ஈழத்தில் களத்தில் நின்று போராடியவர்கள் கடைசியில் இயக்கத் தலைவர் இறந்துவிட்டார் என்ற செய்திக்குக்கூடக் காது கொடுக்காமல் தங்களது உயிரைக் காத்துக்கொள்வதற்காகச் சோற்றுப் பொட்டலங்களுக்கும் தண்ணீர் பாட்டிலுக்கும் கையேந்தி நிற்கிறார்கள். ஐ.நா.அமைப்போ, செஞ்சிலுவைச் சங்கமோ தங்களைப் பாதுகாக்கும் என்ற நம்பிக்கையும் பொய்த்துப்போனது. எதிரிகளாக இருந்தவர்களிடமே சரணடைந்து அவர்களிடம் உயிரை இரந்து நிற்கும் நிலைக்கு ஆளாகிவிட்டனர். இரவில் விலங்கிடப்பட்டும் பகலில் சித்திரவதைகளுக்கு ஆளாகியும் மரணத்தின் முன்னால் அவர்களது வாழ்…
-
- 2 replies
- 1.5k views
-
-
ஒரு கூர்வாளின் நிழலில் என்ற நூலில் தனக்குத் தெரிந்த தமிழினியைக் காணவில்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி வெற்றிச் செல்வி தெரிவித்துள்ளார். அந்த நூலில் அவரால் கூறப்பட்டவைகள் எனச் குறிப்பிடப்பட்டிருப்பவைகளுக்கும் அவர் வாழ்ந்த நடைமுறை வாழ்க்கைக்கும் வேறுபாடு உள்ளதாகவும் முன்னாள் போராளி வெற்றிச்செல்வி தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் முன்னாள் அரசியல் துறைப் போராளி வெற்றிச்செல்வி எழுதிய பம்பைமடு பெண் போராளிகள் தடுப்பு முகாம் தொடர்பாக எழுதப்பட்ட 'ஆறிப்போன காயங்களின் வலி' புத்தக வெளியீட்டு விழா கொழும்பில் நடைபெற்றது. இங்கு உரையாற்றிய தமிழினி குறித்து நிறையவே தெரியும் என்றும் அவர் சாதாரண போராளியாக இருந்த காலத்திலிருந்தே அவருடன் தான் நெருங்கிப் பழகி…
-
- 2 replies
- 541 views
-
-
"அப்பால் ஒரு நிலம்" நாவலை வாசிக்க தொடங்கும் போது வழமையான போர் பற்றிய வலியை பேசப்போகிறது என்னும் முன் சிந்தனையுடன் தான் தொடங்கியது வாசிப்பு ,ஏனெனில் குணா கவியழகன் அவர்களின் முதல் நாவல்கள் தந்து போன வலியை இது கொஞ்சம் கூடுதால கொடுக்கலாம் என்னும் எண்ணமும் இருந்தது, காரணம் அந்த போரோடு வாழ்த்த ஒவ்வெரு ஜீவனும் அறியும் அதன் உக்கிரம் அதிலும் அதில் தன்னை செலுத்தி நீந்திய இளையவர்களுக்கு அது இப்பொழுது பெரு வலி . வீரன் பற்றி ஆசிரியர் சொல்ல தொடங்கும் போது, எம் அருகில் இருந்த ஒரு வீரன் நினைவில் வருகிறான் ,அவன் தான் இளங்கீரன் இவன் பூநகரி மண்ணில் பிறந்த ஒருவன் அழகிய வெண்மை நிறமான அவனுது தேகம், ஒரு பெண்ணுக்குரிய அவனின்வசீகர முகம் எவரையும் இவன் பெ…
-
- 7 replies
- 2.3k views
-
-
ஈழத்து மூத்த அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு அவர்கள் எழுதிய " இலங்கை அரசியல் யாப்பு" (டொனமூர் முதல் சிறிசேன வரை) நூல் வெளியீடு நேற்று பிரித்தானியாவில் நடைபெற்றது. கிழக்கு லண்டன் - ஈஸ்ட்ஹாம் பகுதியில் அமைந்துள்ள Trinity Community Centre நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு ஆரம்பமான இந்த நிகழ்வு இரவு 10:00 மணி வரை இடம்பெற்றது. தமிழ் ஆய்வு மையத்தின் வெளியீடாக இடம்பெற்ற இந்த நூல் வெளியீட்டு நிகழ்வை ஊடகவியலாளர் சு.பா.ஈஸ்வரதாஸ் அவர்கள் தலைமை தாங்கி நடாத்தினார். மங்கள விழக்கை முன்னாள் மாணவர் பேரவைத் தலைவர் பொன்.சத்தியசீலன் அவர்கள் ஏற்றிவைக்க அகவணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது. அதன் பின்னர் நூலின் அறிமுக உரையினை நூலகவியலாள…
-
- 1 reply
- 1.3k views
-
-
எதிர்வரும் 5 ஆம் திகதி ஓய்வுபெறவுள்ள மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன எழுதிய ஆங்கிலம் மற்றும் சிங்களத்தில் வெளியிட உள்ள நந்திக் கடலுக்கான வழி - தமிழ் புலிகளை தோற்கடித்த உண்மையான கதை என்ற நூல் குறித்து பாதுகாப்பு ஆய்வாளர்கள் கூடிய கவனம் செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நூல் எதிர்வரும் 6 ஆம் திகதி அதாவது கமல் குணரட்ன ஓய்வுபெறும் தினத்திற்கு மறுநாள் வெளியிடப்படுகிறது. இந்த நூலில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டதாக கூறப்படும் விடயங்கள் உட்பட சில முக்கிய விடயங்கள் அடங்கியிருக்கும் எனக் கூறப்படுகிறது. புலிகளின் தலைவர் பிரபாகரனை சுட்டுக்கொன்றதாக இலங்கை இராணுவத்தினர் கூறும் 53 வது படைப்பிரிவின் கட்டளை தளபதியாக 2…
-
- 0 replies
- 401 views
-
-
நூல் அறிமுகம்: விடியலைத் தேடி’ ஊடாக, செங்கை ஆழியானை நினைவுகூர்தல் ‘‘போரில் நீ வென்றால், அதை நீ விபரிக்க வேண்டியதில்லை; தோற்றால், அதை விபரிக்க நீ அங்கிருக்கக்கூடாது!’ இரண்டாம் உலகப் போருக்குத் தீ மூட்டியவரும், ஜேர்மன் சர்வாதிகாரியுமான அடொல்ஃப் ஹிற்லர்தான் இதைச் சொன்னவர். ‘2009 மே 18இல் முடிவுக்கு வந்த தமிழீழப் போரில் விடுதலைப் புலிகள் எப்படித் தோற்றுப் போயினர்?’ என்ற வினாவுக்கு விடையளிக்கக்கூடாது என்பதற்காகவே அவ்வமைப்பின் மூலவர்கள் பலரும் கூட்டாக உயிரிழந்தார்களோ என இக்கூற்று எண்ணத் தூண்டுகின்றதல்லவா? இதேவேளை, விடுதலைப் புலிகளின் தோல்வி குறித்து, போரியல் வல்லுனர்களும் அரசியல் ஆய்வாளர்களும் புதிய புதிய எடுகோள்களையும் அனுமானங்களையும் ஊகங்…
-
- 0 replies
- 832 views
-