Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நூற்றோட்டம்

நூல்கள் | அறிமுகம் | திறனாய்வு

பதிவாளர் கவனத்திற்கு!

நூற்றோட்டம் பகுதியில் நூல்கள், அறிமுகம், திறனாய்வு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் நூல்களின் அறிமுகங்கள், திறனாய்வுகள் மாத்திரம் இணைக்கப்படுதல் வேண்டும். ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் நூல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இலங்கையிலிருந்து பிரபஞ்சம் முழுமைக்கும்... அசட்டு ஐதிகங்களுக்கு அப்பால் வரலாறு, விஞ்ஞானம், தத்துவம், அரசியல் என பலவித ஞானங்களையும் ஊடுருவி பிரச்சினைகளின் மூலாதாரங்களை உண்மையின் ஒளிகொண்டு தேடியவர் பிரமிள். அதீத விழிப்பு நிலையின் அலைக்கழிப்பே அவர் இருப்பாக இருந்துள்ளது. அவரது பிறப்பு, இளம் பருவம் திரிகோணமலையோடும் படைப்பியக்கம் தமிழகத்தோடும் தொடர்புடையது. இருப்பினும் பிரமிளில் வெளிப்படும் மனிதன் ஒரு குறிப்பிட்ட நிலத்துடனோ பூர்வீகத்தோடோ தொடர்புடையவன் அல்ல. தன்னை உலக மனிதனாக உணரும் புள்ளியில் இருந்தே பிரமிளின் கேள்விகள் தொடங்குகின்றன. எனவே, தமிழீழ அரசியல் உள்ளிட்ட எந்த ஒரு அரசியல் சார்பு நிலைக்கு வெளியிலும் அரசியல் நிலைப்பாடு…

  2. ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் சாஹித்திய அகாடமி விருது பெற்ற அமரர் ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் நாவலை சமிபத்தில் படித்து முடித்தேன்.இதுவே எனக்கு ஜெயகாந்தனின் முதல் வாசிப்பு. இந்த காலகட்டத்தில் (முதல் அச்சு-1970) இது கொஞ்சம் நீண்ண்ண்ண்ட நாவலே. ஆனாலும் தங்குதடை அற்ற அழகிய நடை போர் அடிக்காமல் நாவலை நகர்த்துகிறது.இந்த நாவலில் அறியாத வயதில் கற்பிலந்த பெண்ணாக கங்கா. ஆண் துணையில்லாத கங்காவுக்கும் அவள் உறவு மற்றும் சமுகத்துக்கும் இடையேயான முரண்பட்ட போராட்டமே கதை.அவளே தனது கதையை சொல்வதாக நாவல் எழுதப்பட்டுள்ளது. மிக அருமையான கதை நகரத்தல். சுய விருப்பம்,வெறுப்பு, மகிழச்சி எனகங்காவின் மன ஓட்டத்தை மிக அழகாகச் சினிமா படம் போலக் கோர்வையாக அடு…

    • 1 reply
    • 3.5k views
  3. மறைந்த முன்னாள் தமிழ்ப்போராளியான தமிழினியின் புத்தகமானது சிங்கள சமூகங்களிடையே, சுயபரிசோதனை செய்வதற்கான ஒரு எழுச்சியை அவர்கள் மனங்களில் உருவாக்கியமையே இப்புத்தகத்திற்கு கிடைத்த வெற்றி என நான் நினைக்கின்றேன் என தமிழினியின் கணவன் ம.ஜெயக்குமரன் தெரிவித்துள்ளார். சிங்களத்தில் கிட்டத்தட்ட 6,000 பிரதிகளுக்கு மேல் விற்பனையாகியுள்ளது. இப்புத்தகத்தின் சிங்கள வெளியீட்டாளர் உண்மையிலேயே இப்புத்தகத்தினால் கிடைக்கும் நிதியை மஹரகமை புற்றுநோய் வைத்தியசாலையில் சிறுவர் பிரிவிற்கு வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்கின்றார். தமிழினியின் இறுதி விருப்பமும் இதுவாகவே இருந்தது என அவர் மேலும் தெரிவித்தார். அவர் கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய பேட்டியிலேயே மேற்க…

  4. பிரான்சில் இருந்து புதிய வருகை . காலாண்டு இலக்கிய சஞ்சிகையாக . "நடு" ..வெளிவரத் தொடங்கியுள்ளது http://www.naduweb.net/

    • 0 replies
    • 525 views
  5. எழுத்தாளர் வெற்றிச்செல்வியின் 'ஆறிப்போன காயங்களின் வலி' நூல் யாழ்ப்பாணத்தில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் ச.ராதேயன் தலைமையில் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு இந்த நூல் அறிமுக நிகழ்வு நடைபெற ஏற்பாடாகியுள்ளது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சமூகவியற்றுறை விரிவுரையாளர் எஸ்.ஜீவசுதன் மற்றும் உரும்பிராய் இந்துக் கல்லூரி ஆசிரியர் தி.செல்வமனோகரன் ஆகியோர் நூல் பற்றிய கருத்துரையாற்றுவர். ஏற்புரையை நூலாசிரியர் வெற்றிச்செல்வி வழங்க உள்ளனர். யுத்தம் முடிவடைந்ததன் பின்னரான பெண் போராளிகளின் பம்பைமடு தடுப்பு முகாம் வாழ்க்கை பற்றிய வரலாற்றுப் பதிவாக இந்த நூல் வெளிவந்துள்ளது. இந்த நூல் அண்மையி…

    • 0 replies
    • 594 views
  6. அகர முதல்வனின் இரண்டாம் லெப்ரினன்ட் சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு விழா தமிழ் நாட்டிலே சிறப்பாக நடை பெற்ற அகர முதல்வனின் நூல் வெளியீடு அந்த நிகழ்வினில் இடம்பெற்ற அகரமுதல்வன் ஏற்புரை http://www.mukadu.com/2016/05/11/அகர-முதல்வனின்-இரண்டாம்/

  7. இந்த நூற்றாண்டில் மேற்கொண்ட மிகப் பெரிய வாதை என்பது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகளின் உள்ளத்தில் உள்ள தேசப் பற்றை அழிக்கும் நோக்கில் மேற்கொண்ட வாதையே என்று கவிஞர் தீபச்செல்வன் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளி வெற்றிச்செல்வியின் பம்பைமடு தடுப்புமுகாம் தொடர்பான ‘ஆறிப்போன காயங்களின் வலி’ நூல் வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ் உரை வருமாறு, ஒடுக்கப்பட்ட ஈழ நிலத்தினுடைய, ஒடுக்குமுறையாளர்களுக்கு எதிராக, 18 ஆண்டுகள் ஓய்வின்றிப் போராடிய, தன் வாழ்வின் பெரும் பகுதியை போராட்டத்துடன் கழித்த முக்கியமான போராளிகளில் ஒருவராக வெற்றிச்செல்வி அக்காவினுடைய ஆறிப்போன காயங்களின் வலி என்ற நூல் வெளியீட்டு …

    • 0 replies
    • 604 views
  8. நீந்திக்கடந்த நெருப்பாறு நாவலின் இரண்டாவது பதிப்பின் வெளியீட்டு நிகழ்வு கிளிநொச்சியில் நாவலின் நூலாசிரியர் தலைமையில் நடைபெற்றது. தமிழ்லீடர் இணையத்தில் தொடராக வெளியிட்டுவைக்கப்பட்ட நாவலின் முதலாவது பதிப்பின் வெளியீட்டு நிகழ்வு ஒஸ்ரேலியாவில் தமிழருவி மணியன் தலைமையிலும் தமிழகத்தில் வைகோ தலைமையிலும் நடைபெற்றிருந்தது. தற்போது இதன் இரண்டாவது பதிப்பின் வெளியீட்டு நிகழ்வு நேற்றைய தினம் 19 – 06 -2016 அன்று கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது. இது நாவலின் முதற் பாகம் எனவும்இ இரண்டாம் பாகம் கிளிநொச்சியிலிருந்து இரணைப்பாலை வரையுமான போரை மையமாகவும், மூன்றாம் பாகம் இரணைப்பாலையிலிருந்து முள்ளிவாய்க்கால் வரையுமான போரை சித்திரிப்பதாக அமையும் எனவும் இந்த நாவ…

    • 0 replies
    • 776 views
  9. கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வருடா வருடம் வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது (இயல் விருது) இம்முறை தமிழ் விக்கிப்பீடியா என்னும் இணையத்தளக் கலைக்களஞ்சிய கூட்டாக்கத் திட்டத்தை தொடங்கி வெற்றிகரமாக இயக்கிவரும் இ.மயூரநாதன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இது தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 17வது இயல் விருது ஆகும். *”கண்டிவீரன்” என்ற சிறுகதை தொகுப்பிற்காக 2015-ம் ஆண்டின் தமிழ் இலக்கிய தோட்டத்தின் “புனைவுப் பரிசு”ஷோபா சக்திக்கு வழங்கப்படுகிறது. *தமிழ் இலக்கிய உலகின் பிதாமகனான, அசோகமித்ரனின் “குறுக்குவெட்டுக்கள்” என்னும் கட்டுரை தொகுப்பிற்கு, 2015-ம் ஆண்டின் தமிழ் இலக்கிய தோட்டத்தின் “அபுனைவுப் பரிசு” அளிக்கப்படுகிறது. *”மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது” என்…

    • 0 replies
    • 422 views
  10. சென்னை புத்தகக் காட்சி 2016 - அதிகம் விற்ற 5 நூல்கள் முதல் அலப்பறை நாயகன் வரை புதிய தாள்களின் வாசனையுடன் வந்திறங்கிய புத்தகங்களுடன் நடந்த சென்னை புத்தகக் காட்சி திங்கள்கிழமையுடன் நிறைவடைந்தது. அதன் சுவைமிகு பதிவுகள் இவை. | தொகுப்பு: சாரி, சிவசு, வெ.சந்திரமோகன், நீதிராஜன், கே.கே.மகேஷ் | புத்தகக் காட்சி படங்கள்: பிரபு காளிதாஸ் http://tamil.thehindu.com/opinion/blogs/சென்னை-புத்தகக்-காட்சி-2016-அதிகம்-விற்ற-5-நூல்கள்-முதல்-அலப்பறை-நாயகன்-வரை/article8731556.ece?homepage=true&theme=true

  11. மழை vs வெயில், லிச்சி vs காபி, ஜன்னல் மலர் vs இறைவி... சென்னை புத்தகக் கண்காட்சி live! பொறுத்துப்பொறுத்துப்பார்த்து இந்த வருடம் புத்தகங்களை வாங்க புத்தக கண்காட்சிக்கு மழையும் படையெடுத்துவந்துவிட்டது. “ப்பா.. என்னா வெயில்” என்று வாசகர்கள் குரலில் துவங்கிய சென்னை 39வது புத்தகக் கண்காட்சி, துவங்கிய நான்கைந்து நாட்களில்‘ஐயையோ மழை.. மழை’ என்று பதிப்பாளர்கள் அலறியடித்து புத்தகங்களை மழையிலிருந்து காப்பாற்றப் போராடுவது என்று மாறிவிட்டதில் அப்செட்டில் இருக்கிறார்கள் பல பதிப்பாளர்கள். கடும் மழையினால் ஸ்டாலுக்குள் ஷவர் போலப் பொழிந்த மழை, உடைந்து விழுந்த மரப்பாலம் என்று பல தடைகளுக்கிடையே தட்டுத்தடுமாறி நடைபெற்றுக்கொண்டிருக்கும் புத்தகக் கண்காட்சியில் இன்னும் …

  12. புத்தகம் ஏன் சக்களத்தர் ஆகிவிடுகிறது? சென்னைப் புத்தகக் காட்சியில் வழக்கமான ஜனவரி பனிச் சூழல் கோலாகலத்தை இந்தாண்டு ஜூன் வெம்மைச் சூழலில் பார்க்க முடியவில்லை. சனி, ஞாயிறு இரண்டு நாட்களைத் தவிர்த்து வாரத்தின் ஏனைய நாட்களில் கூட்டம் இல்லை. ஊருக்கு மூட்டை கட்டிக்கொண்டிருந்த ஒரு பதிப்பாளர், “டீ செலவை ஈடுகட்டுற விற்பனைகூட இல்லை” என்றார். ஒரு கவிதைப் புத்தகத்தைக் கையில் கொடுத்தார். அட்டையே சாதாரண காகிதத்தில் அச்சடிக்கப்பட்டிருந்தது. “கவிதைப் புஸ்தகம் வாங்க ஆளே இல்லை. இந்தப் புத்தகம் இருபது ரூபாய். ரெண்டு டீ காசு. எறநூத்தம்பது அடிச்சோம். ஒண்ணு விக்கலை” என்றார். பிரபலமான பெரிய, ஏற்கெனவே பலமான வாசகர் வட்டத்தைப் பெற்றிருக்கிற பதிப்பகங்கள், ஊடக நிறுவனங்கள் நீங்கல…

    • 3 replies
    • 940 views
  13. செங்கை ஆழியானின் வாடைக்காற்று சந்திரவதனா வாடை பெயர்ந்துவிட்டது. நெடுந்தீவுத் தெற்குக் கடற்கரையில் செமியோனின் வரவுக்காக பிலோமினா காத்திருக்கிறாள். மூன்று வருடங்களாக, வாடைக்காற்று பெயரத் தொடங்கியதும் தந்தையுடன் ஒரு தொழிலாளியாக வந்து வாடி அமைத்து, மீன் பிடித்துச் சென்ற செமியோன் கடந்த வருடம் தானே சம்மாட்டியாக வந்தபோதுதான் அவனுக்கும் பிலோமினாவுக்கும் இடையில் அழகிய காதல் மலர்ந்தது. வாடை முடிந்து யாழ்ப்பாணத்துக்குத் திரும்பும் போது அவளையும் தன் மனைவியாகத் தன்னோடு அழைத்துச் செல்லும் நினைப்புடன்தான் செமியோன் அவளுடன் பழகினான். ஆனால் பிலோமினாவின் அண்ணன் சூசைமுத்துவுக்கும், செமியோனுக்கும் ஒத்துவரவில்லை. செமியோன் ஒரு சம்மாட்டி. பிலோமினாவின் குடும்பம…

  14. பெண் விடுதலை இன்று ஆசிரியர்: க.வி.இலக்கியா விலை: ரூ.60 விடியல் பதிப்பகம் பெண்களை வீட்டினுள் இருந்து அழைத்து வரவேண்டிய தேவை ஏற்பட்டு, அவர்களையும் உற்பத்தியில் ஈடுபடச் செய்து, அவர்களுக்கான சந்தையையும் நுகர்வியத்தையும் வளர்த்தெடுத்த முதலாளியப் பொருளாதார சமூகக் கட்டமைப்புச் சூழலில், இன்றைய பெண்கள் வெறும் பண்டங்களாக மாற்றப்பட்டுள்ளனர். இந்தப் பண்ட அடிமை நிலையே பெண் விடுதலை என்று நம்பப்படுகிறது என்று பேசும் நூல் இது. ***** எங்கள் ஐயா - பெருமாள்முருகன் பற்றி மாணவர்கள் பதிப்பாசிரியர்கள்: பெ.முத்துசாமி, ஆ.சின்னதுரை, ரெ.மகிந்திரன், ப.குமரேசன், விலையடக்கப் பதிப்பு ரூ. 250 காலச்சுவடு பதிப்பகம் எழுத்தாளர் பெருமாள்முருகனிடம் பயின்ற மாணவர்…

    • 3 replies
    • 2.4k views
  15. 10 நாட்கள், 10 லட்சம் தலைப்புகள், ஒருகோடி புத்தகங்கள்; துவங்கியது சென்னை புத்தக கண்காட்சி! சென்னை; தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் நடத்தும் 39 வது சென்னை புத்தக கண்காட்சி சென்னை தீவுத்திடலில் இன்று துவங்குகிறது. இதில் விகடனின் புதிய இலக்கிய வெளியீடான தடம் இதழுக்கென பிரத்யேக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பபாசி எனப்படும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் ஆண்டுதோறும் சென்னையில் புத்தக கண்காட்சியை நடத்திவருகிறது. ஆண்டுதோறும் வாசகர்களுக்கு இந்த 10 தினங்கள் தீபாவளி கொண்டாட்டமாக இருக்கும். கோடிக்கணக்கான புத்தகங்களில் தங்கள் அறிவுப்பசிக்கு உகந்த புத்தகங்களை ஒரே இடத்தில் தேடி வாங்கிச்செல்வது அவர்களுக்கு பெரும்…

  16. வணக்கம் அனைவருக்கும் யாழில் எழுதும் அதிகமானோர் கதை,அரசியல்,ஆன்மிகப் புத்தகங்கள் வாசிப்பதில் ஈடுபாடு உடையவராக இருப்பீர்கள்...உங்களுக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் யார்...எதனாலே உங்களுக்கு அந்த எழுத்தாளாரைப் பிடிக்கும்...அந்த எழுத்தாளர் எழுதிய எந்த நாவல் உங்களை அதிகம் கவர்ந்தது என எழுதுங்கள்...நான் அநேகமாக எல்லோருடைய நாவல்களையும் விரும்பி வாசிப்பேன்...நான் எங்கு சென்றாலும் என்னுடைய முதல் தெரிவு புத்தகம் வாங்குவதாகத் தான் இருக்கும்... நான் விரும்பும் நாவல்களில் நாவலோட்டம் விரைவாக செல்லக் கூடியதாக இருக்க வேண்டும்...வித்தியாசமாக கதைகளை அதாவது குடும்பக்கதை,க்ரைம்,சமூக,விஞ்ஞானம் எல்லாவற்றையும் எழுத தெரிந்தவர்கள் தான் எனது முதல் தேர்வு...அந்த வகையில் எனக்குப் பிடித்த முதலாவது எழு…

    • 152 replies
    • 25.7k views
  17. அறம் சார்ந்து வாழ விரும்புகிற மனிதர்கள் பெரும்பாலும் குடும்ப வாழ்வில், சமூக வாழ்வில் போராடிக்கொண்டே இருக்கிறார்கள். அறம் குறித்த சிந்தனையே இல்லாத இடத்தில் எனக்கான வாழ்க்கை எது? அறத்துக்கும் அன்புக்கும் சமூக வாழ்விலும் தனிமனித வாழ்விலும் உள்ள இடம் எது? இந்தக் கேள்விகள் உருவாக்கும் வெளி அவற்றின் பதிலைவிட மேலானது. ஜோ டி குருஸின் 'அஸ்தினாபுரம்' நாவல் இப்படியான வெளியில் வாசகர்களைப் பயணிக்க வைக்கிறது. 'அஸ்தினாபுரம்' நவீன வாழ்க்கையின் யுத்த பூமி. இந்த யுத்தம் மறைமுகமானது. ஆகவே சிக்கலானது. எதிரியைத் தனித்து அறிய முடியாத இடத்தில் நடக்கிற வேறு யுத்தம். வெற்றியும் தோல்வியும் யுத்தத்தில் தவிர்க்க முடியாதவை. அதுபோல அழிவும் ஆக்கமும் உண்டு. யாருக்கு வெற்றி, யாருக்கு வாழ்வு? என்ப…

    • 0 replies
    • 776 views
  18. பூக்கள் பறப்பதில்லை – அ.முத்துலிங்கம் அ முத்துலிங்கம் அமெரிக்கப் பெண் ஒருவர் சிறுவயதில் இருந்தே நிறைய வாசிப்பார். எத்தனைப் பெரிய புத்தகமாயிருந்தாலும் ஒரே நாளில் வாசித்து முடித்துவிடுவார். இவர் மணமுடித்த பின்னர் கணவர் இவருக்குத் தினமும் நூலகத்திலிருந்து புத்தகங்கள் கொண்டு வந்து கொடுப்பார். அவர் முடித்து விட்டு அடுத்த நாளே கணவரிடம் கொடுப்பார். கணவர் மாலை திரும்பும்போது புதுப் புத்தகங்கள் கொண்டுவரவேண்டும். மனைவிக்குப் புத்தகங்களில் திருப்தியே கிடையாது. கணவரிடம் தினமும் சொல்வார், ’இந்தப் புத்தகம் சரியில்லை. வேறு நல்ல புத்தகங்கள் கொண்டுவாருங்கள்.’ ஒருநாள் கணவர் வெறுத்துப்போய் சொன்னார், ‘உனக்குத்தான் நான் கொண்டு வரும் புத்தகங்கள் பிடிப்பதில்லையே. நீயே உனக்குப் பிடித்த …

  19. கவிஞரும் சமூக ஆய்வாளரும் மொழி பெயர்ப்பாளருமான சட்டத்தரணி இரா. சடகோபனின் கைவண்ணத்தில் உருவான கோப்பிக்கால வரலாற்று ஆவண நூலான கண்டிச் சீமையிலே நூல் அறிமுக விழா 05.06.2016 ஞாயிற்றுக்கிழமையன்று யாழ்ப்பாணத்தில் இல. 62, கே.கே.எஸ்.வீதி, கொக்குவில் சந்தி, கொக்குவில் என்ற முகவரியில் அமைந்துள்ள தேசிய கலை இலக்கிய பேரவை, கவிஞர் முருகையன் கேட்போர் கூடத்தில் காலை 10 மணிக்கு தே.க.இ.பே. யாழ் பேரவை செயலாளர் மு.இராசநாயகம் அவர்களின் தலைமையில் இடம்பெறும். பாராளுமன்ற உறுப்பினரும் எழுத்தாளருமான கௌரவ எம். திலகராஜ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கும் இந்நிகழ்வில் மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தலைவர் சாஹித்திய ரத்னா தெளிவத்தை ஜோசப் விமர்சன உரையையும், வரவேற்பு மற்றும் அறிமுக உரையை சோ.தேவராஜா (தே…

    • 0 replies
    • 636 views
  20. ஆசியா கண்டத்திலேயே முதலாவது வானொலி ஒலிபரப்பு நிலையம் இலங்கை கொழும்புவில் ‘கொழும்பு வானொலி’ என்ற பெயரில் நிறுவப்பட்டு 1925, டிசம்பர் 25-ல் ஒலிபரப்பு தொடங்கியது. அப்போது இலங்கை ஆங்கிலேயர்கள் ஆளுகைக்கு உட்பட்டிருந்ததால் ஆங்கிலத்திலேயே ஒலிபரப்பு மேற்கொள்ளப்பட்டது. ஆயினும் இடையிடையே தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளிலும் சில நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாயின. வானொலி ஒலிபரப்புகள் கேட்பவர்களை வந்தடைய மூல காரணமாக விளங்குபவர்கள் வானொலி அறிவிப்பாளர்கள். அறிவிப்பாளர் என்பதை விட ஒலிபரப்பாளர் என்ற சொல் இவர்க ளின் பணியை முழுமையாக எடுத்துக் கூறும். ‘இலங்கை வானொலியின் இனிய ஒலிபரப்பாளர்கள்’ என்ற நூல் இலங்கை வானொலியின் பல ஒலிபரப்பாளர்கள் பற்றிய விவரங்களைத் தாங்கி வெளிவந்துள்ளது. இலங்கை வானொலிய…

    • 0 replies
    • 496 views
  21. தொலைவின் இடைவெளிகளை நிரப்பும் கதைகள் தர்மினி முதன்முதலில் ஆக்காட்டி சஞ்சிகையில் தான் அனோஜன் பாலகிருஷ்ணனின் சிறுகதையொன்றைப் படித்தேன். அதைத் போல சதைகள் சிறுகதைத் தொகுப்பிலுள்ள பத்துக்கதைகளில் அரைவாசிக் கதைகளை சஞ்சிகைகளிலோ இணையத்தளங்களிலோ வாசித்திருந்தேன். ஆனாலும் மீளவுமொரு முறை இத்தொகுப்பில் அவற்றை வாசித்தது சலிப்பைத் தரவில்லை. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு களங்களாகக் கதைகளை நிகழ்த்தியிருக்கின்றன. அவை சுவாரசியத்தை ஏற்படுத்துகின்றன. திரும்பத் திரும்ப உள்நாட்டு யுத்தம் அதைத் தொடர்ந்து வரும் பிரச்சினைகள், புலம்பெயர்ந்து அகதிகளாக வாழும் நாடுகளில் வாழ்வு எனக் கதைகளைப் படித்துப் படித்து இந்தக் கதை எங்கே எப்படிப் போகப்போகிறது? எப்படி முடியப்போகிறத…

  22. மறுநாள் வழுக்குப் பனிபெய்யும் அபாயம் இருப்பதாக அன்றிரவு எச்சரிக்கை அறிவிப்பு தொலைக்காட்சியில் விட்டு விட்டு ஓடிக்கொண்டிருந்தது. தொடர்ந்து மேற்கு ரொறன்ரோ பகுதியில் அன்று மாலை ஏற்பட்ட ரொர்நாடோ எனப்படும் உறிஞ்சும் சுழற்காற்றின் உக்கிரம் குறித்த காட்சியும் விரிவான தகவலும் ஒளிபரப்பாயின. சுபத்திரா அப்போது கீழே இருந்துகொண்டிருந்தாள். உறிஞ்சு சுழற்காற்று பற்றிய செய்தி கண்டதும் திடுமென எழுந்து ஒரு விநாடி அப்படியே உறைந்து நின்றாள். மறுகணம் தும்தும்மெனப் படிகளதிர மேலே ஓடினாள். மையம் கொண்ட இடத்தில் அகப்பட்ட யாவற்றையுமே ஒரு பூதம்போல் உள்ளுறிஞ்சிக்கொண்டிருந்தது அது. கார்கள் மோதுண்டன, ஒன்றின் மேலொன்று எற்றுண்டன, சிலது பாலங்களுக்குள் கவிழ்ந்து விழுந்தன. அந்தச் சுழிக்குள் அகப்படாத…

    • 0 replies
    • 397 views
  23. 90களின் முற்பகுதியில் எழுத்து தமிழ் ஊடகங்களின் வளர்ச்சி ஐரோப்பாவில் கோலோச்சிய காலம். செய்திகளை அறிந்து கொள்வதற்கான ஒரே வழியாக எழுத்து ஊடகங்களும் அந்தந்த நாடுகளில் இயங்கிய புலிகளின் கிளைகளினால் இயக்கப்பட்டு வந்த தொலைபேசி வாயிலான செய்திச் சேவையுமே இருந்து வந்தன. அத்தகைய காலத்தில் பல வார, மாத சஞ்சிகைகளும் பத்திரிகைகளும் வெளிவந்த போதிலும் பரிசிலிருந்து வெளிவந்த 'ஈழநாடு' 'ஈழமுரசு' ஆகிய பத்திரிகைகள் அதிகளவு வாசகர்களைக் கொண்ட செய்தித்தாள்களாக இருந்து வந்தன. ஒவ்வொரு பதன் கிழமையும் இவ்விரு செய்தித்தாள்களும் அனைத்துக் கடைகளிலும் கிடைக்கும். பெரும்பாலும் மாலைக்குள் செய்தித்தாள் விற்றுத் தீர்ந்து விடும். நேரம் தவறிப்போனால் செய்தித்தாள் கிடைக்காது ஏ…

  24. புத்தகப்பண்பாடு அருகி வருகிறதா? இன்று உலக புத்தக தினம்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக பார்த்தீபன் நல்ல புத்தகங்கள் நல்ல நண்பர்கள் என்றும் நல்ல புத்தகங்களே சிறந்த வழிகாட்டிகள் என்றும் வாசிப்பே மனிதனைப் பூரணப்படுத்துகின்றது என்றும் பேசப்பட்ட கால கட்டம் மெல்ல மெல்ல நழுவிச் செல்வதைப் போல இருக்கிறது. ஒரு கால கட்டத்தில் புத்தகங்களை பதிப்பிப்பதும் புத்தகங்களைப் பெறுவதும் மிகவும் அரிதாக இருந்தது. அப்போது வாசிப்பும் புத்தக தேடலும் புத்தக பாதுகாப்பும் மிகவும் ஆரோக்கியமாக இருந்தது. ஆனால் தொடர்பாடலில், பதிப்புத்துறையில் பல்வேறு வளர்ச்சிகளும் பாய்ச்சல்களும் ஏற்பட்டுள்ள இந்தக் காலத்தில் புத்தக வாசிப்பு மிகவும் கவலைக்கிடமாகவல்லவா இருக்கிறது? இன்று உலக புத்தக தினமாகும். இதனை பத…

  25. தமிழின் முக்கியமான எழுத்தாளர்கள், வாசகர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் ஆகியோரைச் சிறந்த மொழிபெயர்ப்பு நூல்களைப் பரிந்துரைக்கும்படிக் கேட்டு, அவர்களுடைய பட்டியல்களிலிருந்து இறுதிசெய்யப்பட்ட பட்டியல்கள் இங்கே கொடுக்கப்பட்டிருக்கின்றன. உலக இலக்கியம் * அந்நியன்-ஆல்பெர் காம்யு; (பிரெஞ்சிலிருந்து) வெ.ஸ்ரீராம், க்ரியா பதிப்பகம். * அன்னா கரீனினா- டால்ஸ்டாய்; (ஆங்கிலம் வழி) நா. தர்மராஜன், பாரதி புத்தக நிலையம். * கடலும் கிழவனும் - எர்னஸ்ட் ஹெமிங்வே; (தமிழில்) ச.து.சு. யோகியார், எஸ்.எஸ். பப்ளிகேஷன். * கரமசோவ் சகோதரர்கள் - பியோதர் தாஸ்தாயெவ்ஸ்கி; (ரஷ்ய மொழியிலிருந்து), அரும்பு சுப்பிரமணியம், காலச்சுவடு பதிப்பகம். * நம் காலத்து நாயகன்- லெர்ம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.