நூற்றோட்டம்
நூல்கள் | அறிமுகம் | திறனாய்வு
நூற்றோட்டம் பகுதியில் நூல்கள், அறிமுகம், திறனாய்வு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் நூல்களின் அறிமுகங்கள், திறனாய்வுகள் மாத்திரம் இணைக்கப்படுதல் வேண்டும். ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் நூல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இணைக்கப்படல் வேண்டும்.
801 topics in this forum
-
[size=5]இலக்கியங்களும் வசீகர வரிகளும் - சச்சிதானந்தன் சுகிர்தராஜா[/size] நான் தினமும் வாசிக்கும் த கார்டியன் நாளிதழில் g2 என்ற இணைப்பு வரும். அதில் ஆங்கில நாவல்களில் அதிசிறந்த கடைசி வரிகள் எவை என்று ஒரு வாசகர் கேட்ட கேள்விக்குப் பெரும்பான்மையான த கார்டியன் பிரியர்கள் தேர்ந்தெடுத்தது ஜார்ஜ் ஒர்வெலின் விலங்குப் பண்ணையில் வரும் கடைசி வாசகம். ருசியப் புரட்சியைப் பற்றிப் பரிகாசமாக எழுதப்பட்ட நாவல் தரும் கருத்து அதிகாரம் கைக்கு வந்துவிட்டால் புரட்சியாளர்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் அப்படி எந்தவிதமான வித்தியாசமுமில்லை என்பதுதான். நாவலின் முடிவில் பண்ணை உரிமையாளர்களும் அவர்களை எதிர்த்த பன்றிகளின் தலைமைப்பீடமும் ஒன்றுகூடுகிறார்கள். சிரிப்பும் பாட்டுச் சத்தமும் …
-
- 0 replies
- 488 views
-
-
நீலகண்டம் முக்கியமான தமிழ் நாவல்கள் நான் ஒரு அந்தரங்கமான பட்டியல் போட்டால் அதில் சுனில் கிருஷ்ணனின் “நீலகண்டம்” இருக்கும். தமிழில் ஊனம் குறித்து வந்துள்ள ஒரு சில நாவல்களில் பெற்றோரின் தரப்பில் இருந்து குழந்தையின் ஊனத்தைப் பற்றி பேசும் தனித்துவமான படைப்பு இது. மரபணு கோளாறு கொண்ட குழந்தை ஒன்றை தெரியாமல் தத்தெடுக்கும் ஒரு தம்பதியின் வாழ்வில் வருகிற சிக்கல்களும், அதை இருவரும் தத்தம் வழிகளில் கையாள முயல்வதுமே நாவலின் களம். ஒரு நாவலை வாசிக்கையில் அங்கிங்கே நம் கவனம் பிசகாமல் நமது மொத்த கவனமும், ஏதோ கண்ணுக்கு முன்னால் அது ரத்தமும் சதையுமாக நிகழ்வதைப் போல, அதிலேயே குவிந்திருக்க வேண்டும். நான் அப்படியான ஒரு ஈர்ப்புடன், கொந்தளிப்புடனே “நீலகண்…
-
- 0 replies
- 597 views
- 1 follower
-
-
வனவாசம் - வானதி பதிப்பகம் மூலம் 37 பதிப்புகள் வெளியாகி, பின் 2010 முதல் கண்ணதாசன் பதிப்பகத்தால் தொடர்ந்து வெளியிடப்படும் புத்தகம் !சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் கண்ணதாசன் தி.மு.க மீது ஈர்க்கப்பட்டதில் துவங்கி, அந்த கட்சியில் அவர் இருந்த காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளை அலசி, பின் அவர் கட்சியிலிருந்து வெளிவருவதுடன் முடிகிறது. இதனாலேயே தி.மு.க எதிர்ப்பு நிலைப்பாடு கொண்டோருக்கு பிடித்தமான புத்தகமாக அமைந்து விடுகிறது. கலைஞர் அபிமானிகள் இப்புத்தகத்தை அதிகம் நேசிக்க மாட்டார்கள்!துவக்கத்தில் கண்ணதாசனுக்கு மிக வேண்டியவரான இராம. கண்ணப்பன் கண்ணதாசனின் இளமை காலம் குறித்து எழுதி உள்ளார். கண்ணதாசனின் தந்தை எந்த வேலைக்கும் போகாமல் சீட்டு ஆடக்கூடியவர். இதனால் குடும்பம் மிக வறுமையில் வாடியி…
-
- 0 replies
- 3.3k views
-
-
Manual of Vanni Districts(1985)-J.P.LEWIS. ஜே.பி .லூயிஸ் ஆங்கிலத்தில் எழுதிய கையேடு இப்போது தமிழில் தமிழாக்க குழு வன்னியால் வெளியிடப்பட்டுள்ளது . வன்னியின் அரசியல் ,பொருளியல் ,சமூக வரலாற்றுக்கான விலை மதிக்க முடியாத பொக்கிஷம்.இதற்கு விரிவான முன்னுரையை வரலாற்று பேராசிரியர் சி.பத்மநாதன் எழுதியுள்ளார் .
-
- 0 replies
- 628 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் செயற்பட்டு நவம்பர் 1992ல் மரணித்த மலரவன் என்கின்ற போராளியின் நாட்குறிப்பானது தற்போது ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மலரவன் போரில் மரணித்ததன் பின்னர் போர் பற்றிய நாட்குறிப்பானது அவரது சக போராளித் தோழர்களால் கண்டெடுக்கப்பட்டு பின்னர் 'போர் உலா' என்ற பெயரில் தமிழ் மொழியில் வெளியிடப்பட்டது. விஜின்தன் என்கின்ற இயற்பெயரைக் கொண்ட மலரவன், எழுத்தாளர் குடும்பத்தைச் சேர்ந்தவராவார். இவர் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட போர் பற்றிய வரலாற்றுப் பதிவுகளை தனது நாட்குறிப்பில் எழுதியிருந்தார். இதுவே பின்னர் 'போர் உலா' என்ற பெயரில் வெளியிடப்பட்டது. இவர் தனது நாட்குறிப்பில் நிச்சயமற்ற வாழ்க்கை தொடர்பாகவும் அதன் ஏற்ற இறக்கங்கள் தொடர்பாகவும் போர் …
-
- 0 replies
- 684 views
-
-
செந்தியின் ‘தனித்தலையும் செம் போத்து’ தொகுப்பு நகரமய மாதல் என்னும் விஷயத்தைத் தவிர வேறெந்த அரசியலுக்கும் முக்கியத்துவமளிக்காமல் அதைக் கவனமாகத் தவிர்த்து விட்டது. தொகுப்பிலுள்ள கவிதைகளில் சிலவற்றில் மட்டும் இவை வெளிப்படுவதைக் காணமுடிகிறது. உதாரணமாக, செங்குளத்தை இரண்டாகப் பிரித்து/வளர்ந்துகொண்டே போகும் தங்க நாற்கரச்சாலை/குட்டைகள் அரிதான வெளியில்/கான்கிரீட் பாத்திகள் அவைகளுக்குப்/பெரும் களிப்பூட்டியிருக்கலாம் என்ற ‘கான்கிரீட் பாத்தி நீர் குடிக்கவரும் காக்கைகள்’ கவிதையைச் சொல்லலாம். தொகுப்பில் ஆண்களின் வடிகாலற்ற காமம் குறித்த கவிதைகளை நெருக்கமாக உணரமுடிகிறது. அப்படிப்பட்ட உணர்வை இளவயதில் எல்லோரும் அனுபவித்தவர்கள்தான் என்ற முறையில் சரியான வார்த்தைகளால் அவை சொல்லப்பட்டிருக்கின…
-
- 0 replies
- 810 views
-
-
வரலாற்றை அரசியலாகப் பார்க்கக்கூடாது - முன்னாள் வரலாற்றுத்துறை பேராசிரியர் புஸ்பரட்ணம் By VISHNU 19 OCT, 2022 | 09:39 PM (எம்.நியூட்டன்) வரலாற்றை அரசியலாகப் பார்க்கக்கூடாது அதனை வரலாறக பார்க்கப்படவேண்டும் என யாழ்.பல்கலைக்கழக முன்னாள் வரலாற்றுத்துறை பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் தெரிவித்தார். யாழ்.பல்கலைக்கழக வேந்தர் தகைசார் வரலாற்றுத்துறை பேராசிரியர் சி.பத்மநாதனின் திருக்கேதீஸ்வரம் திருக்றுகோணேஸ்வரம் பற்றிய மூன்று ஆய்வு நூல்களின் வெளியீட்டு விழா இன்று (18) புதன்கிழமை யாழ்.பல்கலைக்கழ கையாலபதி கலையரங்கில் யாழ்.பல்கலைக்கழ துணைவேந்தர் பேராசிரியர் சி. சற்குணராஜா தலைமையில் இடம்பெற்றபோது நிகழ்வில் கருத்துரையாற்றுகையிலேயே …
-
- 0 replies
- 309 views
- 1 follower
-
-
இந்திய மொழிகளில் தமிழின் சாதனை; வெளிவந்தது மூன்றாவது முறையாக விரிவாக்கப்பட்ட ‘க்ரியா’ அகராதி: கரோனாவுடனான போராட்டத்தின் மத்தியில் வெளியிட்டார் ராமகிருஷ்ணன் வையாபுரிப்பிள்ளை ஆசிரியராகப் பங்கெடுத்து வெளிக்கொண்டுவந்த ‘தமிழ்ப் பேரகராதி’ (Tamil Lexicon) எக்காலத்துக்குமான ஒரு பெரும் சாதனை என்றால், தற்காலத் தமிழுக்கான ‘க்ரியா’ அகராதி நாம் வாழும் காலத்தில் ஒரு முக்கியமான சாதனை. அகராதிக்கான இலக்கணங்களை முழுமையாகக் கொண்டு, கச்சிதமான எழுத்துருக்களோடும் வடிவத்தோடும் அமைந்த ‘க்ரியாவின்’ தற்காலத் தமிழ் அகராதி இப்போது இன்னொரு மைல்கல்லை எட்டியிருக்கிறது; அது மேலும் விரிவாக்கப்பட்டு மூன்றாம் பதிப்பாக வெளிவந்திருக்கிறது. இன்றைய தலைமுறையினரையும் நம்முடைய மொழி முழ…
-
- 0 replies
- 494 views
-
-
ஓராயிரம் சூரியன்கள்! "மரியம் தன் கடைசி இருபது அடிகளை எடுத்து வைத்து நடந்து கொண்டிருந்தாள். அவள் பின்னால் தொடரும் இளம் தலிபான் ஆயுத தாரியின் நிழல் அவளோடு கூடத் தொடர்ந்தது. இவ்வளவு முயன்றும் இப்படித் தான் என் வாழ்வு முடியப் போகிறதா என்ற கேள்வியும் அவளுள் தொடர்ந்து வந்தது. ஆனால், ஒரு சிறு நல்ல காரியமாவது செய்து விட்ட திருப்தியோடு தான் போகிறேன் என்ற எண்ணமும் ஒரு மன மூலையில் இருந்தது!" (வரிக்கு வரி மொழிபெயர்ப்பல்ல) ஏற்கனவே நூற்றோட்டம் பகுதியில் நாம் பார்த்த பட்டமோடியை எழுதிய காலித் ஹொசைனியின் இன்னொரு படைப்பு இந்த "ஓராயிரம் சூரியன்கள்" நாவல். நாவலின் பின்புலம் கம்யூனிச பொம்மை ஆட்சியை ரஷ்யா ஏற்படுத்தி விட்ட பின்னர், தலிபான் உட்பட்ட யுத்தப் பிரபுக்களின் குழுக்கள் மீண்…
-
- 0 replies
- 832 views
-
-
பாக்கியநாதன் அகிலனின் காலத்தின் விளிம்பு (யாழ்ப்பாணத்தின் மரபுரிமைகளும் அவற்றைப் பாதுகாத்ததும்) பாக்கியநாதன் அகிலனின் காலத்தின் விளிம்பு (யாழ்ப்பாணத்தின் மரபுரிமைகளும் அவற்றைப் பாதுகாத்ததும்) நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 27.03.2016 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சபாலிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வின் தலைமையுரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத்துறைத் தலைவர் பேராசிரியர் அ.நோ.கிருஷ்ணவேணியும் வரவேற்புரையினை அருந்தாகரனும், பிரதம விருந்தினர் உரையினை வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனும், வெளியீட்டுரையினை நூலாசிரியர் பாக்கியநாதன் அகிலனும் சிறப்புரையினை நிலாந்தனும் ஆற்றவுள்ளனர். அத்துடன் பாராம்பரி…
-
- 0 replies
- 365 views
-
-
சிரேஷ்ட ஊடகவியலாளர் பி.மாணிக்கவாசகம் எழுதிய ‘மாற்றத்தை நாடும் மாற்றுத்திறனாளிகள்’ நூல் வெளியீடு December 1, 2021 வடமாகாணத்தை சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் பி.மாணிக்கவாசகம் எழுதிய ‘மாற்றத்தை நாடும் மாற்றுத்திறனாளிகள்’ கட்டுரைகளின் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா மன்னாரில் நடை பெறவுள்ளது. சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமான எதிர் வரும் 03 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மன்னார் நகரசபை கலாசார மண்டபத்தில் வெளியீட்டு நிகழ்வு இடம் பெற உள்ளது. மாந்தை மேற்கு மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் ஏற்பாட்டில் இடம் பெற உள்ள குறித்த நூல் வெளியீட்டு விழாவில் முதன்மை விருந்தினராக மன்னார் மாவட்ட விவசாய பணிப்பாளர் திருமதி ஏ.சகிலா பானு கலந்து கொள்ளவுள்ளார். …
-
- 0 replies
- 377 views
-
-
மேற்கத்திய இசையை எளிதாக கற்றுக்கொள்வதற்கும், மேற்கத்திய இசைக்குறிப்புகளைப் படிக்கவும் எழுதவும் கற்றுக்கொள்வதற்கும் தமிழில் பாடங்களே இல்லை என்ற குறையைப் போக்க வந்திருக்கிறது ஒளிப்பதிவாளர் செழியனின் ‘த மியூசிக் ஸ்கூல்’ வெளியீடு. எளிய தமிழில் வந்திருக்கும் இந்தப் புத்தகங்களின் மூலம் வீட்டிலிருந்தே மேற்கத்திய இசையைக் கற்றுக்கொள்ள முடியும். இந்த இசைப்பாடங்கள் பத்து வயதிலிருந்து, பெரியவர்கள் வரை கற்றுக்கொள்வதற்கு உதவுபவை. 15 ஆண்டுகள் உழைப்பில் உருவான நூல் இது. 1,700 பக்கங்கள், 200-க்கும் மேற்பட்ட பாடங்கள், 1,000-க்கும் மேற்பட்ட விளக்கப் படங்கள் போன்றவற்றோடு இந்தப் புத்தகத் தொகுதி உருவாக்கப்பட்டிருக்கிறது. தேவைப்படும் இடங்களில் ஒலி உதாரணங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஒரு வகுப…
-
- 0 replies
- 2.9k views
-
-
கௌரவன் -1 - ஆனந்த் நீலகண்டன் - (தமிழில் நாகலட்சுமி சண்முகம்)இப்போது வாசிப்பில்.. பலவருடங்களிற்கு முன்னர் ஒரு லட்சத்திற்கு அதிகமானோர் கலந்து கொண்டாடும் ஒரு விழா ஒன்றில் கேரள மாநிலத்தின் பொருவழி கிராமத்திலுள்ள மலைநடைக்கோவிலில் பார்த்ததாகவும் அவ்விழா இதிகாசத்தில் மிகக்கெட்டவனாக சித்தரிக்கப்பட்ட துரியோதனனிற்காக கொண்டாடப்படும் விழா எனவும் பெரும்பாலோரினால் கெட்டவனாக சித்தரிக்கப்படும் ஒருவனிற்கு விழா கொண்டாடும் அளவிற்கு அவன் அந்த கிராம மக்களிற்கு செய்தது என்ன என ஆராயும் போது ..அந்த கிராமத்தின் வரலாறு மகாபாரத காலத்தோடு தொடர்பு பட்டதாக காணப்பட்டதாகவும் கூறுகிறார் மகாபாரதத்தில் நாடு கடத்தப்பட்டிருந்த பாண்டவர்களை தேடி துரியோதனன் இக்கிராமத்திற்கு வந்ததாகவும் ..தாகத்த…
-
- 0 replies
- 492 views
-
-
முன்பெல்லாம் முதலில் யாழில் பதிவேற்றிய பின்னரே அதன் இணைப்பை ஏனைய வலைத்தளங்களில் பதிவு செய்வது என் வழக்கம். தற்சமயம் நிழற்படம் அல்லது வீடியோவுடன் பதிவிட வேண்டி சிலவற்றை முகநூலில் ஏற்றி, பின்னர் மீள்பதிவாக யாழில் பதிவேற்றுகிறேன். கீழ்க்காணும் நூல் அறிமுகமும் எனது முகநூல் பதிவு. புத்தக அட்டை இறுதியில் உள்ள இணைப்பில் : என் நண்பரும் குருநாதருமான ஆங்கிலப் பேராசிரியர் முனைவர் ச.தில்லைநாயகம் அவர்கள், தந்தை பெரியாரின் 'பொருள் முதல்வாதம்' எனும் நூலினைத் தமக்கே உரித்தான எளிய, தரமான ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்கள். அஃதாவது பாமரர்க்கான எளிமையும் சான்றோர்க்கான தரமும் என இரு நோக்கு அன்னாரது மொழிச் சிறப்பு. இம்மொழி பெயர்ப்பு 'கலப்பை பதிப்பக'த்தால் வெளியிடப் பட்டுள…
-
- 0 replies
- 583 views
- 1 follower
-
-
தாமரைக்குள ஞாபகங்கள் – ப. தெய்வீகன் சிவபெருமான் வீட்டுச் சிக்கல் கயிலாயத்துக்கு போன வாரம் போய் வந்தது அருமையானதொரு அனுபவமாக அமைந்தது. சிவபெருமான் தனது வீட்டில் நிற்கவேணும் என்று போன தடவை கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்த முறை இரண்டு நாட்கள் அவர் வீட்டிலேயே தங்கிக் கொண்டேன். பயங்கர பிஸியான ஆளென்றாலும் வீட்டுச் சாப்பாடு தான் உடம்புக்கு நல்லது என்று உமாதேவி அக்காவை இருத்தி எழுப்புறார். “லண்டன் – கனடா பக்கமிருக்கிற பெண்ணியவாதிகள் இதையெல்லாம் கண்டால் உங்களை துலைச்சுப்போடுவினம் தெரியுமோ?” – என்று கேட்க அவர் நீலம் பாரித்த கழுத்தின் வழியாக நைக் ரீ சேர்ட்டை போட்டுக்கொண்டு “உந்த விசர் கதையளை விட்டுட்டு கால்ஃப் விளையாட வாரும்” – என்று கூட்டிக்கொண்டு போனார். “உங்களுக்கும் அக…
-
- 0 replies
- 967 views
-
-
வடுக்களின் அடையாளமாக..... இளங்கோவின் ‘சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்’ - -க. நவம் புறநடைகளிருப்பினும், பொதுவாக ஒரு தொகுப்பிலுள்ள கதைகளில், ஒரு கதையின் தலைப்பே புத்தகத்தின் பெயராய் இருப்பது வழக்கம். ‘சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்’ என்ற பெயரை பொருளடக்கத்தில் தேடினேன்; காணவில்லை. கதைகளுக்குள் அதன் அடிமுடி தேடியலைந்தேன்; அகப்படவில்லை. எமது உடலின் Central Nervous System எனப்படும் மைய நரம்புத் தொகுதியின் நடுப்பகுதியில் உள்ள Grey Matter எனப்படும் நரைச் சடலத்திற்கும் இந்தக் கதைகளுக்கும் சம்பந்தமிருக்க வாய்ப்பில்லை. பதிலாக ஒரு தெளிவோ, நிச்சயமோ அற்ற இடைநிலையின் குறியீடாகவே சாம்பல் நிறத்தைக் கருதவேண்டியுள்ளது. ஆனால், வைரவர் எப்படி இங்கு வந்து சேர்ந்தார்? யாழ்ப்பாணத்…
-
- 0 replies
- 657 views
-
-
ஓ.வி. விஜயனின் ‘கசாக்கிண்ட இதிகாசம்’ மலையாளத்தின் செவ்வியல் நாவல். 1969-ம் ஆண்டு வெளிவந்த இது இதுவரை 50க்கும் மேற்பட்ட பதிப்புகள் கண்டுள்ளது. தெற்காசியாவில் அதிகம் விற்பனையான நவீன நாவல் என்ற சிறப்பும் இதற்குண்டு. ஓ.வி.விஜயன் எழுத்தாளர், பத்திரிகையாளர் என்ற பன்முக அடையாளம் கொண்டவர். ‘தி இந்து’ வில் கார்டூனிஸ்டாகப் பணியாற்றியவர். பல உலக மொழிகளில் இந்நாவல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. காலச்சுவடு பதிப்பகம், சென்னைப் புத்தகக் காட்சியை ஒட்டி இந்நாவலைத் தமிழில் கொண்டுவரவிருக்கிறது. எழுத்தாளர் யூமா வாசுகி மொழிபெயர்த்துள்ள இந்நாவலில் இருந்து ஒரு பகுதி… அழுதுகொண்டு வீட்டுக்குச் செல்லக் கூடாது. ஆபிதா முகங்கழுவி ஆசுவாசமடைய ஓடைப் பக்கம் நடந்தாள். ஓடையோரத்தில் அப்புக்கிளி தும்பி பிடித…
-
- 0 replies
- 691 views
-
-
ஒரு மூடன் கதை சொன்னால்; கோத்தாவின் ‘சதி’ - ஆதிரன் மார்ச் மாதம் ஆறாம் திகதி புதன்கிழமை முன்னாள் இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சே தனது எக்ஸ் தளத்தில் பின்வருமாறு பதிவிட்டிருந்தார். ‘‘நாளை வியாழன் 07 மார்ச் 2024 முதல் ஜனாதிபதி பதவியிலிருந்து என்னை வெளியேற்றுவதற்கான சதி என்ற எனது புத்தகம் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் முன்னணிப் புத்தகக் கடைகளில் கிடைக்கும். இது சர்வதேச ரீதியில் அனுசரணை வழங்கப்பட்ட ஆட்சிமாற்ற நடவடிக்கையின் ஒரு நேரடி அனுபவம்’’ நூல் வெளியீட்டு விழாவென எந்தக் கொண்டாட்டமுமில்லை. ‘கோத்தா இப்போது ஜனாதிபதியாயிருந்தால் இந்தப் புத்தக வௌியீட்டு விழாவை வெகுவிமரிசையாகக் கோலாகலமாக ஒரு பெருந்திருவிழாவாகக் கொண்டாடிக் கழித்திருப்பார்’ என ஒரு நண்பர் எனக்கு…
-
- 0 replies
- 264 views
-
-
Tuesday, October 15, 2024 காமேச்வரன் தன்னுடைய சிறு வயதிலேயே அன்னையை இழந்து, பின்னர் தந்தை கல்யாணம் செய்துகொண்ட சித்தியின் கொடுமையால் வீட்டை விட்டு வெளியேறுகிறான். ரயிலில் அவனை சந்திக்கும் வத்சன் என்பவர் அவனைக் கூட்டிச்செல்கிறார. அவருக்கு சமையல் கலை தெரியும் என்பதால் ஒரு கோவிலில் சமைக்கும் வேலை அவருக்கு. அவருடனேயே தங்கி கொள்ளும் காமேச்வரன், சமையலைக் கற்றுகொண்டு அவரையே குருவாக எண்ணிக் கொள்கிறான். அவரின் இறப்புக்கு பின்னர் அவனுடைய நினைவுகளில் அவர் எப்பொழுதும் இருந்து கொண்டிருக்கிறார். காமேச்வரன் இப்பொழுது காசி, பத்ரிநாத் எனச் செல்லும் யாத்ரிகர்களுக்கு சமைப்பவனாக தனி ரயிலில் வேலைக்கு இருக்கிறான். அவன் சமையலை அனைவரும் புகழ்கிறார்கள். அப்படி ஒரு பயணத்தில்தான் …
-
- 0 replies
- 290 views
- 1 follower
-
-
கோவிந்தனின் புதியதோர் உலகம் :மறு வாசிப்பு - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக யமுனா ராஜேந்திரன் புதியதோர் உலகம் நாவலின் முதல் பதிப்பு 1985 ஆம் ஆண்டு மே மாதம் வெளியானது. அதனது இரண்டாவது பதிப்பு 1997 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியானது. முதலாவது பதிப்பு வெளியானபோது உயிருடன் இருந்த கோவிந்தன் இரண்டாவது பதிப்பு வெளிவரும் முன்பே, கவிஞர் செல்வியைப் போலவே விடுதலைப் புலிகளால் ‘காணாமல்’ போகச் செய்யப்பட்டார். 1985 ஆம் ஆண்டு வெளியான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் உட்கட்சிப் போராட்டம் பற்றிய கோவிந்தனின் புதியதோர் உலகம் நாவலை விடுதலைப்புலிகள் பரவலாக விநியோகித்தார்கள். கோவிந்தனின் நாவல் வெளியான காலத்தின் பின், சில மாதங்களில் 1986 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைக் கழக…
-
- 0 replies
- 2k views
-
-
டாக்டர் நோயல் நடேசன் ஆஸ்திரேலியாவில் கால்நடைமருத்துவராகப் பணியாற்றுகிறார். வண்ணாதிகுளம், அசோகனின் வைத்தியசாலை போன்ற சிறப்பான நாவல்களையும் வாழும் சுவடுகள் என்ற விலங்குகளுக்கான சிகிட்சை அனுபவத் தொகுப்பு நூலையும் எழுதியிருக்கிறார். ஆஸ்ரேலியாவில் 12 ஆண்டுகளாக ‘உதயம்’ என்ற பத்திரிகையை தமிழ் – ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் வெளியிட்டுள்ளார். அவரது சமீபத்திய புத்தகமான நைல் நதிக்கரையோரம் என்ற பயணநூலை வாசித்தேன். சுவாரஸ்யமாக, வரலாற்றுத் துல்லியத்துடன் எழுதப்பட்ட சிறந்த பயணநூலது. ஒரு மருத்துவரின் பார்வையில் வரலாறு அணுகப்படுகிறது என்பதே இதன் தனிச்சிறப்பு. பொதுவாக நான் தமிழில் வெளியாகும் பயணநூல்களைப் படிப்பதில்லை. பெரும்பான்மை பயணநூற்கள் எங்கே என்ன சாப்பிட்டோம். புகைப்படம…
-
- 0 replies
- 755 views
-
-
‘நெகிழ வைக்கும் நட்பு’ - பிரமிளின் படைப்புகளை தொகுத்த வாசகர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைFACEBOOK புலம் பெயர்ந்த தமிழ் எழுத்தாளர் பிரமிளின் வெளிவராத எழுத்துகள் மற்றும் அவரது முழுபடைப்புக்களையும் பத்து ஆண்டுகளாக சேகரித்து அவரது நெருங்கிய நண்பர் கால சுப்ரமணியம் வெளியிட்டுள்ளார். …
-
- 0 replies
- 504 views
-
-
இமையத்தின் 'செல்லாத பணம்' இளங்கோ-டிசே வாழ்க்கை நாம் நினைத்த எந்த ஒழுங்கிலும் போவதில்லை. எவையெல்லாம்அடுத்து நிகழும் என்பதும் நமக்குத் தெரிவதில்லை. சம்பவங்கள் ஒவ்வொன்றும்நடந்தபின்னும் இப்படி நடந்திருந்தால் அல்லது நடக்காதிருந்தால்என்னவாகியிருக்குமென பின்னோக்கிப் பார்க்க மட்டுமே மனிதர்களாகிய நம்மால்முடியும். 'செல்லாத பணத்திலும்' ரேவதி தீக்குளித்து வைத்தியசாலைக்குக்கொண்டுவரப்படும்போதுதான் நமக்குத் தெரிகிறது. அவ்வாறு ரேவதி தீக்குளிப்புடன்போராடும்போது அவரோடு சம்பந்தப்பட்ட மனிதர்கள் தீக்குளிப்பு நடக்க முன்னர்நடந்த நிகழ்வுகளை ஒவ்வொரு திசைகளிலிருந்து அசைபோடுகின்றனர், உரையாடுகின்றனர். ரேவதியின் இந்த நிலைக்காகக் கோபப்படுகின்றனர், பரிதாபப்படுகின்றனர், இரக்கம் கொள்கின்றனர், இற…
-
- 0 replies
- 682 views
-
-
காற்றில் துளிர்க்கும் யாழ் சோழகக்கொண்டல் அ. முத்துலிங்கம் எழுத்தில் கனவென தூரத்தில் மிதக்கும் பால்யத்தின் நிலம் எங்கள் ஊர் கொள்ளிடக்கரையில் வானுக்குள் தலை நுழைத்து அரைநூற்றாண்டு வயதுடைய ஆலமரம் நிற்குமிடமே பிரதான நீர்த்துறை. அக்கரை கண்ணுக்கெட்டாத தூரம்வரை நீலம்பாரித்து நெடும்புனல் பாய்ந்த காலம் முதல், திசையின் தொடுப்புள்ளி வரை வெற்று மணலாகி கிடக்கும் இந்நாள் வரையிலும் அதுதான் நீர்த்துறை. எம் தகப்பனாருடைய காலத்திற்கு பிறகே இவ்விடம் துறையாக இருக்கிறது. எங்கள் தாத்தாவுக்கோ குளிக்கவும் துவைக்கவும் தோதுவான இடமென்பது இலவமரத்துத் துறைதான். பள்ளிநாட்களில் பார்வையில்லாத என் பெரியதாத்தாவை கைத்தடியைப் பிடித்துக்கொண்டு ஆற்றுக்கு கூட்டிப்போனால், இளவமரத்து துறைக்குத்த…
-
- 0 replies
- 495 views
-
-
ன்பானவர்களே! “பகிரப்படாதபக்கங்கள்” என்ற நூல் தமிழீழ மண்ணின் பல லட்சம் தியாகங்களின் உச்சங்களில் ஒரு சில உச்சங்களை தன் உள்ளத்தில் சுமந்து வெளி வருகிறது. இது மாவீரங்களின் அதி உச்ச தியாகம் என்பதில் எக்கருத்து வேறுபாடுகளும் இருக்க முடியாது. கண்ணீர்களை வர வைக்கும் வரலாற்று வலிகளை சுமந்து கார்த்திகை வேங்கைகளுக்காக அவர்களுக்குச் சொந்தமான கார்த்திகை மாதத்திலையே காந்தள் பூவாக பூக்க இருக்கிறது. வரும் கார்த்திகை மாதம் இப்புத்தக வெளியீட்டு நிகழ்வை நடாத்த மாவீரர் நினைவுகளைச் சுமந்து பயணிக்கும் ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டுள்ளார்கள். விரைவில் இது தொடர்பான மேலதிக செய்திகளை உங்களுடன் பகிர்வேன். என்றும் எம் தியாகச் செம்மல்களின் பாதம் பணிந்து அவர்களின் நினைவுகளோடு நிமிர்ந்து நிற்கும் அ…
-
- 0 replies
- 264 views
-