நூற்றோட்டம்
நூல்கள் | அறிமுகம் | திறனாய்வு
நூற்றோட்டம் பகுதியில் நூல்கள், அறிமுகம், திறனாய்வு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் நூல்களின் அறிமுகங்கள், திறனாய்வுகள் மாத்திரம் இணைக்கப்படுதல் வேண்டும். ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் நூல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இணைக்கப்படல் வேண்டும்.
809 topics in this forum
-
இன்றுதான் தீபச்செல்வனின் ‘நடுகல்’ நாவலைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தொடங்கியது முதல் முடியும்வரை எந்த ஒரு தொய்வும் இல்லாமல் கதை நகர்கிறது. நான் வாழ்ந்த மண்ணில், நான் நடந்த வீதியில், நான் சந்தித்த மனிதர்களின் வாழ்க்கையைக் கதையின் ஒவ்வொரு வரியிலும் தரிசிக்க முடிகின்றது. கதையின் பல இடங்களில் நான் பட்ட அனுபவங்கள் கண் முன்னே படமாக விரிகின்றன. போர் தின்ற பூமியில் வாழ்ந்த எல்லோருடைய அனுபவங்களும் இவையாகவே இருந்தன, இருக்கின்றன. கிளிநொச்சியில் தொடங்கும் கதை விரிந்து பரந்து வன்னியின் பெரும்பாலான இடங்களுக்கு நகர்கிறபோது நானும் என்னை அறியாமல் அந்த இடங்களுக்கே சென்று விடும் உணர்வைத் தந்தது. ஒரு தாயின் பாசப் போராட்டமும் மகனின் தாய் மண் பற்றிய ஏக்கமும் கதையெங்கும் இழையோடி நிற்…
-
- 0 replies
- 520 views
-
-
பிரபாகரன் சட்டகம் – நூல் வெளியீடு தமிழர்தரப்பின் பலத்தை மேலோங்கச் செய்ததன் காரணத்தாலும், அறிவியலினூடாகவும் தொலைநோக்கினூடாகவும் தமிழீழ அரசின் பொதுக்கட்டுமானங்களை வேகமாகக் கட்டியெழுப்பியதாலும் உலகத்தமிழர்களுக்கெல்லாம் அச்சாணியாகவும் பாடமாகவும் தமிழீழ விடுதலைப்போர் அடையாளப்படுத்தப்பட்டது. இதன்காரணமாக உளக்கிளர்ச்சியுடன் வாழ்ந்துவந்த உலகத்தமிழர்களை, 2009 இல் உலகஅரசுகளின் கூட்டுச்சதியோடு சிறிலங்கா அரசு நடாத்திய தமிழின அழிப்பானது ஆழ்ந்த வேதனையையும் உளச்சோர்வையும் தந்து படுகுழிக்குள் தள்ளியது. “நாம் தோற்றுப்போய்விட்டோம்” என்ற அவல மனநிலையுடன் தமிழர்கள் பதினொரு ஆண்டுகளைக் கடந்துவிட்டார்கள். இன்னமும் அப்படியேதான் பலர் நகர்ந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் ” நாம் தோற்…
-
- 1 reply
- 2.6k views
-
-
மட்டக்களப்பில் இன்று ஏழு நூல்கள் வெளியீடு… கிழக்கு மாகாணத்தில் உள்ள எழுத்தாளர்களினால் எழுதப்பட்ட ஏழு நூல்களின் வெளியீட்டு நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது. கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் இந்த ஏழு நூல்களும் வெளியிட்டு வைக்கப்பட்டது. கிழக்கு மாகாணத்தில் உள்ள எழுத்தாளர்களின் ஆக்கங்களை வெளியிட முடியாத நிலையில் உள்ளவர்களுக்கு உதவும் வகையில் அவர்களினால் எழுதப்பட்ட நூல்களை அச்சிட்டு கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வெளியிட்டு வைக்க முன்வந்துள்ளது. இதன் அடிப்படையில் ஏழு எழுத்தாளர்களின் ஏழு நூல்களின் வெளியீட்டு நிகழ்வு இன்று மட்டக்களப்பு,களுதாவளை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. கிழக்கு மாகாண பண்பாட்டலுவல…
-
- 0 replies
- 703 views
-
-
காதுகள்- எம்.வி. வெங்கட்ராம் - வாசிப்பு குறிப்பு சுனீல் கிருஷ்ணன் எம். வி. வியின் வாழ்க்கை சித்திரத்தை பற்றி ஜெயமோகனின் 'அறம்' கதை வழியாக முதன்முறையாக பரிச்சயம் செய்து கொண்டேன். நித்ய கன்னி நாவலை சில ஆண்டுகளுக்கு முன் வாசித்திருக்கிறேன். 'காதுகள்' எழுபது வயதிற்கு மேல் அவர் எழுதிய நாவல். அவருக்கு சாகித்திய அகாதமி விருதை பெற்றுக்கொடுத்த நாவலும் இதுவே. பசித்த மானிடம் முடித்த கையுடன் காதுகள் வாசிக்க தொடங்கினேன். இதுவும் கும்பகோணத்தை களமாக கொண்ட நாவல் தான். இப்போது இதை முடித்துவிட்டு மோக முள் தொடங்கியிருக்கிறேன். 'காதுகள்' குறித்து முன்னர் இரண்டொரு வாசிப்பனுபவங்கள் வாசித்தது நினைவில் இருக்கிறது. அது அளித்த அச்சத்தின் காரணமாகவே வாசிப்பதை தவிர்த்தும் தள்ளிப்போட்டும் …
-
- 0 replies
- 847 views
-
-
தமிழில் ஒரு சர்வதேச நாவல் சென்ற நூற்றாண்டில் தமிழில் பிரதானப் போக்காக இருந்த நவீன நாவல் வடிவம், நவீன எழுத்துகளோடு சேர்த்துப் பார்க்க முடியாத தனித்துவமான எழுத்து ப.சிங்காரத்துடையது. ஆயிரக் கணக்கான ஆண்டுகள் தொன்மை கொண்ட தமிழர் வரலாறு, மெய்யியல், பண்பாடு, வாழ்க்கைப் பார்வை, மொழி மரபின் குணங்கள் சேர்ந்த வெளிப்பாடு ப.சிங்காரம். உலகப் போரின் பின்னணியில் தென்கிழக்காசிய நாடுகளின் ஒரு காலகட்டத்து அரசியல், வெகுஜனப் பண்பாட்டை விரிவாகவும் நுட்பமாகவும் அவர் தனது இரண்டு நாவல்களிலும் படைத்துள்ளார். அதிலும், ‘புயலில் ஒரு தோணி’ நாவலானது லியோ டால்ஸ்டாயின் ‘போரும் வாழ்வும்’ போன்ற பெரும் படைப்பை நோக்கி தமிழ் படைப்பாளி ஒருவர் கண்ட கனவு என்றே சொல்லலாம்! சரித்திரத்தின் கதிய…
-
- 0 replies
- 504 views
-
-
"கள்ளத்தோணி" : வரலாற்றை கற்க முனைபவர்களுக்கு ஓர் சிறந்த உசாத்துணைகளில் ஒன்று - பிரகாஷ் சின்னராஜா ஓர் எழுத்தாளர் ஓர் விடயத்தை தகுந்த மூல ஆதாரங்களுடன் வெளிப்படுத்தும்பொழுதே அது வலிமையான ஆவணமாக உருமாற்றம் பெறும். சமூக, அரசியல், வரலாற்று விடயங்களை எழுதுபவர்கள் கவனத்திற்கொள்ள வேண்டிய மிகமுக்கியமான விடயமாக இது உள்ளது. அவ்வகையில் இலங்கையின் சமூக, அரசியல், வரலாற்றுத் தளங்களை அடிப்படையாகக் கொண்டு பேசாப் பொருளை பேசுபொருளாக்கிப் பல விடயங்களை தகுந்த ஆதாரங்களுடன் வெளிக்கொணரும் சரவணன் அவ்வாறான வலுவான நூல்களை எழுதுபவர்களில் குறிப்பிடத்தக்க இடத்தை வகிக்கின்றார் என்றால் மிகையல்ல. இவரது படைப்புகளில் "கண்டிக் கலவரம் 1915", "தலித்தின் குறிப்புகள்" வரிசையில் இ…
-
- 2 replies
- 1.2k views
-
-
பள்ளிக்கூடம் பற்றி தீபச்செல்வன் எழுதப் போகும் புதிய நாவல். பள்ளிக்கூடத்தை மையப்படுத்தி புதிய நாவல் ஒன்றை எழுதப் போவதாக அறிவித்துள்ளார் கவிஞர் தீபச்செல்வன். நடுகல் நாவல் வாயிலாக தமிழர்களின் பரவலான கவனத்தை பெற்றவர் தீபச்செல்வன். மூவாயிரம் பிரதிகளை கடந்து மூன்றாவது பதிப்பை நடுகல் கடந்திருப்பதாக அண்மையில் கூறினார் தீபச்செல்வன். அத்துடன் பயங்கரவாதி என்ற புதிய நாவலை எழுதி வருவதாகவும் அறிவித்திருந்த நிலையில் தற்போது பள்ளிக்கூடத்தை மையப்படுத்தி புதிய நாவல் ஒன்றை எழுதப் போவதாக குறிப்பிட்டுள்ளார். ஒரு எழுத்தாளன் ஆசிரியராக பணியாற்றுவது சிறந்த வாய்ப்புத்தான். எதிர்காலத்தில் பள்ளிக்கூடத்தை மையப்படுத்தி, கிளிநொச்சி மண்ணின் கல்வியை மையப்படுத்தி ஒரு நாவலை எழுதப் …
-
- 0 replies
- 586 views
-
-
சித்தார்த்தனின் விநோதச் சம்பவங்கள் – நூல் விமர்சனம் August 28, 2020 சு.கஜமுகன் லண்டன்காரர் என்னும் குறுநாவலிற்கு பிறகு சேனன் எழுதி இருக்கும் இரண்டாவது நாவலே சித்தார்த்தனின் விநோதச் சம்பவங்கள் ஆகும். இதுவும் ஒரு வகையான யுத்த நாவல்தான் என்றபோதும் யுத்தத்தையும் அதன் துயரத்தையும் மட்டும் பேசாமல் அதன் அரசியல், வரலாற்றுப் பின்னணியை நிகழ்கால சம்பவங்களுடன் சேர்த்துப் பேசுகின்றது. இக்கதையில் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களின் வீரதீர செயல்களோ அல்லது தனிநபர் சாகாசங்களோ பேசப்படவில்லை மாறாக யுத்தம் நிகழ்ந்த இந்த வரலாற்றுத் தருணத்தில் வாழ்ந்த எளிய மக்களின் அன்றாட வாழ்வு, யுத்தத்தில் எதிரொலித்த அவர்களின் அவலக்குரல் மற்றும் யுத்தத்தின் பின்னர் நிர்கதியாக்கப்பட்ட அவர்களின் …
-
- 0 replies
- 567 views
-
-
வாசன் நான் என் வாசிப்பு அனுபவங்களை பல்வேறு வடிவங்களிலும் பகிர்ந்து வருவதுண்டு. அவைகள் யாவும் எத்தனை பேரால் கவனங்கொள்ளப்படுகின்றது என்பது குறித்தெல்லாம் எனக்குப் பெரிதாக கவலை ஏதும் இல்லை. ஆயினும் எந்தவித சர்ச்சைகளிலும் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதில் மட்டும் நான் எப்போதுமே அவதானமாக இருந்து வருகின்றேன். ஏற்கனவே ஈழவிடுதலைப் போரினாலும், அதன் உள்ளக முரண்பாடுகளினாலும், அதன் பகை முரண்பாடுகளினாலும் ஏற்படுகின்ற சர்ச்சைகளினாலும் அதன் குத்து வெட்டுக்களினாலும் ஏற்கனவே பல நட்புக்களினதும் உறவுகளினதும் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் தேவையில்லாத பிரச்சினைகள் எதுவும் எனக்குத் தேவையில்லை என்பதே எனது மனநிலை. இந்த என்னுடைய அவதானத்தையும் மீறி ஒரு தடவை மட்டும் ஒரு சிக்கலில் மாட்டிக…
-
- 13 replies
- 1.4k views
-
-
காடு நாவல்: ஒரு வாசிப்பு. - சுயாந்தன் நவீன இலக்கியம் பலரது படைப்பின் தொடக்கத்துடன் நம்மிடையே அறிமுகமாகிறது. அந்தப் படைப்புக்களில் ஒரு சிலவே நம்மை அதற்குள் செல்ல அனுமதிக்கிறது, நம்மை அப்படைப்பின் சூழலுடன் ஒன்றிணைய வைக்கிறது, நமக்கான இலக்கியம் இதுதான் என்று உணரவும் தலைப்படுகிறது. ஜெயமோகனின் மகத்தான படைப்புக்களில் ஒன்றாகக் காடு நாவலைக் கூறுவேன். அதனை அவரது படைப்பாக மட்டுமன்றி தமிழின் சிறந்த செவ்வியல் கூறுகள் கொண்ட ஒரு நாவலாகவும் குறிப்பிடலாம். கிரிதரன் மலைக் காட்டுக்குள் சென்று மாமனாரின் கொன்ராக்ட் வேலைகளுக்கு உதவி செய்வதும் அங்கு வேலையாட்களாக உள்ள குட்டப்பன், ரெசாலம், குரிசு மற்றும் எஞ்சினியர் நாகராஜ அய்யர் போன்ற கதாபாத்திரங்களும் கிரிதரன் …
-
- 3 replies
- 809 views
-
-
-
- 1 reply
- 573 views
-
-
I AM CHANGE - புத்தக விமர்சனம் நேற்று மகளுடன் கதைக்கும் போது இந்த புத்த கத்தைப் பற்றி கூறினார், நல்ல புத்தகம் எல்லா பெண்களும் வாசிக்க வேண்டிய புத்தகம் என்றார், அப்ப விமர்சனத்தை எழுதி தருமென்றேன். அவரின் விமர்சனம் This novel is a beautiful story that takes on the perspective of a 15 year old Ugandan girl and powerfully describes the hardships many young girls around the world face. Living in first world countries its easy to forget that not everyone is as privileged and lucky as we are. I think its extremely important to never be ignorant of others suffering or be ungrateful for our own luxuries. We should be grateful to worry about p…
-
- 0 replies
- 665 views
-
-
வெண்முரசை என்ன செய்வது? சுரேஷ் பிரதீப் சென்ற வருட இறுதியில் நிகழ்ந்த 'அயோத்திதாசர் பார்ப்பனர் முதல் பறையர் வரை' நூல் வெளியீட்டு விழாவில் பேராசிரியர் டி.தருமராஜ் 'நாம் வெண்முரசை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறோம்?' என்றொரு கேள்வியை முன்வைத்தார். சங்க இலக்கியத்தை, அயோத்திதாசரை என நம்மிடம் புதிதாக 'கண்டெடுக்கப்பட்டு' கொடுக்கப்படும் எதையுமே நமக்கு - அதாவது தமிழர்களுக்கு - முறையாக எதிர்கொள்ளத் தெரிந்திருக்கவில்லை என்பதன் தொடர்ச்சியாக மேற்சொன்ன கேள்வியை முன்வைத்தார். வெண்முரசின் இறுதி நாவல் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதை முன்னிட்டு இன்று காலையும் மாலையுமாக ஜெயமோகன் வெண்முரசு வாசகர்களுடனான இணையவழி கலந்துரையாடலில் ஈடுபடுகிறார். இதை ஒட்டி தமிழ் அறிவ…
-
- 7 replies
- 2.5k views
-
-
-
புயலிலே ஒரு தோணி: எக்காலத்துக்குமான படைப்பு. சுயாந்தன் எளிய வாசகனாக இருந்த எனது வாசிப்பின் தொடக்கம் கல்கியில் இருந்து ஆரம்பித்தது. சடுதியாக ஜெயமோகனை வந்தடைந்தேன். பாலையில் இருந்து மருதம் வந்தது போன்ற ஆதூரவுணர்வு என்னுள் ஏற்பட்டது என்றே கூறுவேன். அதன் பின்பு ஒரு காலமும் நான் வணிக எழுத்துக்களின் பக்கம் சென்றதில்லை. அதனை ஒரு பொருட்டாக மதிக்கவும் கூடாது என்ற எண்ணத்தையும் மனதில் கொண்டுள்ளேன். அ.மாதவையாவின் பத்மாவதி சரித்திரத்தில் இந்த வணிக எழுத்துக்கான எதிர்ப்பு விதைகள் உள்ளன என்று அதனை வாசிக்கும் நாம் ஒவ்வொருவரும் உணரமுடியும். அண்மையில் ப.சிங்காரம் அவர்களின் புயலிலே ஒரு தோணி நாவல் வாசித்து முடித்தேன். இதனை வாசித்ததும் என்னுள் ஒரு விபரீ…
-
- 0 replies
- 512 views
-
-
ஈழ தமிழ் நூல்கள் வெளியீடு .! வவுனியா கனகராயன்குளத்தை சேர்ந்த பேராசிரியர் முருகர் குணசிங்கத்தின் 1. இலங்கையில் தமிழர் ஓர் முழுமையான வரலாறு 2.இலங்கை தமிழ் தேசியவாதம் அதன் ஆரம்ப தோற்றம் பற்றிதொரு ஆய்வு 3.புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் ஓர் உலகளாவிய ஆய்வு. என்ற புலமைசார் மூன்று ஆய்வு நூல்கள், இன்று வெளியிட்டு வைக்கப்பட்டன. கனகராயன்குளம் புதுக்குளம் தங்கம்மா முதியோர் இல்ல வளாகத்தில் இடம்பெற்ற இவ்வெளியீட்டு நிகழ்வில், யாழ். வைத்தியசாலையின் பணிப்பாளர் ரி. சத்தியலிங்கம் பிரதம அதிதியாகவும் யாழ் பல்கலைக்கழகத்தின் அரசியல் துறை தலைவர் ரி. கணேசலிங்கமும் வவுனியா ஆசிரியர் நடுவகத்தின் முகாமையாளர் சு. ஜெயச்சந்திரனும் கலந்துகொண்டிருந்தனர் -க. அகரன் …
-
- 0 replies
- 423 views
-
-
கொக்குவில் அ.முத்துலிங்கம் - பலருக்கு நினைவில்லாத, தேசம் கடந்த ஈழத்து எழுத்துலக அடையாளம். (நன்றி- விகடன்)
-
- 5 replies
- 957 views
-
-
ஜெயமோகனின் இந்திய ஞானம் சுயாந்தன் ஜெயமோகனின் இந்திய ஞானம் என்ற இந்நூல் இந்திய ஞானம் பற்றி எனக்கு மேலதிக தேடலையும் புரிதலையும் உண்டாக்கிய ஒன்று என்றே கூறுவேன். அவருடைய "இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்" என்ற நூல் வழங்கிய அறிதலையும் புரிதலையும் வேறு எந்தவொரு நூலும் இந்து ஞான மரபு பற்றி தெளிவாக்கியதில்லை. அந்த நூலில் இடம்பெற்ற ஆறுதரிசனங்கள் பற்றிய பிரக்ஞை இன்றும் என் ஞாபகத்தில் அறையப்பட்டுள்ளது. அதிலிருந்துதான் பல படைப்புக்களை என் பார்வையில் அணுகவும் வழி செய்தது. படைப்புக்களை வாசிப்பதற்கும் புனைவல்லாத கட்டுரைகளைப் படித்து அறிவைத் தெளிவு படுத்திக் கொள்வதற்கும் இடையில் உணர்வு மற்றும் அறிவு இரண்டும்தான் எல்லையாக உள்ளது.இந்திய ஞானம் என்ற ஜெமோவின் இந்த நூல் அறிமுக…
-
- 36 replies
- 5.1k views
-
-
நன்றி கலாபூஷணம் .திருமதி கோகிலா மகேந்திரன் நிவேதா உதயராயனின் ,''உணர்வுகள் கொன்றுவிடு '' சிறுகதைத்தொகுதி -ஒரு விமர்சனம் சிறுகதை எழுதுவது ஒரு கலை .ஒரு உணர்வினை அல்லது பெறுமானத்தினை வெளிப்படுத்துவதிலும் ,தொடர்புறுத்துவதிலும் மனிதத்திறன் வெளிப்படும் ஒரு முறை என்று கூறலாம் .சிறு கதை வாழ்வின் ஒரு வெட்டுமுகமாக அமைய வேண்டும் என்பது அன்டன் செக்கோவின் கருத்து . நிவேதா உதயராயன் ''உணர்வுகள் கொன்றுவிடு ''என்ற தனது இரண்டாவது சிறுகதைத் தொகுதியை புலம்பெயர் எழுத்தாளர் என்ற வகையில் பிரித்தானியாவில் இருந்து தந்துள்ளார் ''.உணர்வுகள் ''உடன் வந்திருக்க வேண்டிய ,''ஐ ''வேற்றுமை உருபை த் தவிர்த்து வித்தியாசமாய் ஒரு தலைப்புடன் வந்திருக்கும் இந்த நூல…
-
- 0 replies
- 563 views
-
-
பேராசிரியர் அ.ராமசாமி அவர்களுக்கு நன்றி நிவேதா உதயன்: நினைவுகளில் அலைதல் ஒருவரின் கவிதைகளை அவ்வப்போது வரும் பருவ இதழ்களிலோ,இணைய இதழ்களிலோ வாசித்து நினைத்துக்கொள்ளும் அனுபவமும்,மொத்தமாக அவரின் கவிதைகளைத் தொகுப்பாக வாசிக்கும் அனுபவமும் ஒன்றாக இருக்க முடியாது. அவ்வப்போது வாசிக்கும்போது வாசிக்கப்பட்ட சூழலிலிருந்து கவிதைதரும் அர்த்தம் சுவாரசியமானது. அந்த அர்த்தம் மொத்தமாக வாசிக்கும்போது கிடைக்காமல்கூடப் போகலாம். காரணம் சூழல். இலக்கியப்பிரதிகள் சூழலில் தனக்கான அர்த்தங்களை உருவ…
-
- 0 replies
- 476 views
-
-
-
- 0 replies
- 670 views
-
-
துயிலாத ஊழ்: சமகால ஈழச் சிறுகதைகள் தீட்டும் கோட்டுச் சித்திரம் – கார்த்திக் பாலசுப்ரமணியன் இன்றைய தமிழ் இலக்கியப் பரப்பில் தமிழகத்திலிருந்து வெளிவரும் படைப்புகளுக்கு நிகராக தமிழகத்துக்கு வெளியேயிருந்தும் படைப்புகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதுவரை இல்லாத அளவுக்கு அப்படைப்புகளின் மீது வாசக கவனமும் குவிய ஆரம்பித்துள்ளது. இதற்கு அச்சு நூல்களின் நவீனமயமாக்கம், இணையப் பரவலாக்கம், சமூக ஊடகங்கள் மற்றும் அமேசான் கிண்டில் வழி மின்நூல்களின் வருகை எனப் பல்வேறு காரணங்களைக் கூறவியலும். இவ்வாறு தமிழகத்துக்கு வெளியேயிருந்து வரும் படைப்புகளில் மற்ற நாடுகளிலிருந்து வெளிவரும் படைப்புகளை ஒப்ப…
-
- 0 replies
- 607 views
-
-
நூல் விமர்சனம்: தமிழக மக்கள் வரலாறு - காலனிய வளர்ச்சிக் காலம் - புலம்பெயர்ந்தவர்களின் வாழ்க்கை! மின்னம்பலம் முனைவர் க.சுபாஷிணி, ஜெர்மனி தமிழக வரலாற்றை ஆராய முற்படுபவர்களுக்கு ஐரோப்பிய ஆவணக் குறிப்புகள் தமிழக குறிப்புகளில் கிடைக்காத பல சான்றுகளை அளிக்கின்றன. மிக நீண்ட காலமாகவே ஐரோப்பியர்களது நாட்குறிப்பு எழுதும் பழக்கமும், தாங்கள் செல்கின்ற இடங்களைப் பற்றிய குறிப்புகளை எழுதிவைக்கும் பழக்கமும் வரலாற்று ஆய்வாளர்களுக்குப் பண்டைய செய்திகளை அறிந்துகொள்ள நல்வாய்ப்புகளை வழங்குகின்றன. தமிழக ஆய்வுச் சூழலில் பொதுவாகவே வரலாற்றை ஆராய முற்படுபவர்கள் மிகப் பெரும்பாலும் ஐரோப்பியரது ஆய்வு குறிப்புகளில் கவனம் செலுத்துவது மிகக் குறைவாகவே இருக்கிறது. இதற்குக் காரணம், ஆய்வில…
-
- 1 reply
- 1.1k views
-
-
இயற்கையுடன் ஒன்றிணைந்து வாழும் உலகம் செய்வோர் குரல்: இலங்கையின் தொல்குடிகளான வேடர் சமூக வழக்காறுகள். இன்றைய காலகட்டத்தின் அதிக பேசுபொருளாக இருப்பவர்கள் பழங்குடி மக்கள். பழங்குடி மக்களை ஆதிக்குடிகள், தொல்குடிகள் என்று பொதுவாக அழைப்பர். ஆயினும் பிரதேசத்திற்குப் பிரதேசம் வேறு வேறு பெயர்களைக் கொண்டவர்களாக இவர்கள் காணப்படுகின்றனர். அவுஸ்ரேலிய அபொறிஜின்கள், நியுசிலாந்தின் மயோரிகள் என பல்லாயிரக்கணக்கான தனித்துவமான பெயர்களைக் கொண்டவர்களாக பழங்குடிகள் வாழ்ந்து வருகின்றனர். இலங்கையின் பழங்குடிகள் அல்லது தொல்குடிகள் ‘வேடுவர்’ என அழைக்கப்படுவர். பழங்குடி மக்கள் தேசத்தின் முதல் மக்கள் (People of First Nation) எனவும் உலகம் முழுவதும் அழைக்கப்படுகின்றனர். இந்த மக்களி…
-
- 0 replies
- 734 views
-
-
‘பயங்கரவாதி’ தீபச்செல்வன் எழுதும் புதிய நாவல். ஈழத்தைப் பொறுத்தவரையில் ஊரடங்கு என்பது புதிய விஷமல்ல. தனிமைப்படுத்தலும் புதிய விஷமல்ல. முப்பது வருஷங்களாய் ஊரடங்கில் வாழ்ந்தவர்கள் நாம். காரணமின்றி சிறை வைப்புக்களுக்கு உள்ளானவர்கள் நாம். இந்த ஊரடங்கில் வெறித்துப்போன நகரத்தில் ஊடகப் பணிக்காக செல்லும்போது போர்க்காலம்தான் நினைவுக்கு வருகிறது. கடுமையாக சண்டை நடந்த சமயத்தில், யாழ்ப்பாணத் தெருக்களில் நாயை சுடுவதைப் போல மனிதர்களை சுட்டுப் போட்டிருக்கும் பொழுதுகளிலும், நான் உலாவியிருக்கிறேன். ஊடரங்கு வாழ்வில் இராணுவ துப்பாக்கிகளின் குறிகளுக்குள் ஒரு கிண்ணம் தேநீருக்கு அலைந்திருக்கிறேன். அந்த நாட்கள் நினைவுக்கு வருகின்றது. ஈழத்தவர் எவருக்கும் வரக்கூடிய நினைவுதான். …
-
- 0 replies
- 476 views
-