மெய்யெனப் படுவது
மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு
மெய்யெனப் படுவது பகுதியில் மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.
1238 topics in this forum
-
வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் மக்களை எப்போதும் தடுமாற வைக்கின்றன. நவீனவாழ்க்கை எனச் சொல்லப்படும் தற்ப்போதைய காலகட்டத்தில் ஒவ்வொரு மாற்றத்தின் போதும் மக்கள் துன்பப்படுகின்றனர். பள்ளிப் பருவம் ஒரே பதற்றம், விடலைப்பருவமோ பெரும் பாதிப்பு, நடு வயதோ தாங்கமுடியவில்லை, முதுமைப் பருவம் ஒரே வெறுப்பு, இறப்போ கடும் பயம். வாழ்க்கையின் ஒவ்வொறு கட்டமுமே மக்களுக்கு பிரச்சனையாக இருக்கிறது. ஏனெனில் வாழ்க்கையின் மாற்றத்திற்க்கேற்ப்ப தங்களை மாற்றிக் கொள்ள கஷ்டப்படுகின்றனர். வாழ்க்கையின் இயைபே மாற்றம் தான் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. அசைவின்மையை(stillness) நீங்கள் அனுபவித்திருந்தால், பின் மாற்றம் என்பது உங்களுக்கு மகிழ்ச்சியை தருவதாக இருக்கும். அந்த அசைவின்மையோடு உங்களுக்கு…
-
- 0 replies
- 584 views
-
-
அமைதியை அடைவதற்கான அழைப்பு "அமைதி [சமாதானம்] , உங்கள் உள்ளேயே இருக்கிறது. அதனால் நீங்கள் எங்கு சென்றாலும் அந்த அமைதியும் உங்களுடனேயே வருகிறது. நீங்கள் ஒரு வசுவில் ஏறும்போதும் அந்த அமைதியும் உங்களுடனேயே வருகிறது. நீங்கள் போராடிக்கொண்டிருக்கும்போதும் அந்த அமைதி உங்களுடனேயே இருக்கிறது. நீங்கள் தூங்கிக்கொண்டிருக்கும்போதும் அந்த அமைதி உங்கள் உள்ளேயே இருக்கிறது. கற்பனைக்கு அப்பாற்பட்ட விரக்தியில் நீங்கள் இருக்கும்போதும் அந்த அமைதி உங்கள் உள்ளேயே இருக்கிறது. நீங்கள் செய்வது என்னவாக இருப்பினும், அந்த அமைதி உங்களுடன் வரமுடியாத எந்த இடத்திற்கும் உங்களால் போகமுடியாது. ஏனெனில் அது உங்கள் உள்ளேயே இருந்துகொண்டிருக்கிறது." …
-
- 0 replies
- 1.3k views
-
-
சுவாமி விவேகானந்தர்! உங்கள் பணி என்ன? ''ஏற்கெனவே இருப்பதை அழிப்பதல்ல என் பணி; மாறாக, இருப்பதைப் புனர்நிர்மாணம் செய்வதே! உலக நாடுகளின் சரித்திரங்கள் அனைத்திலும், ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு மகாபுருஷன் அதன் தேசிய வாழ்வின் கேந்திரமாக விளங்குவான். அந்த மகாபுருஷனது கருத்துக்கள் மக்கள் யாவர் மீதும் சக்தியுடன் பாயும். என் சீடர்களாகிய நீங்கள் புத்திசாலிப் பிள்ளைகள்தான். ஆயினும், காரியத்தில் என்ன செய்திருக்கிறீர்கள்? உங்களது ஒரு வாழ்வை மற்றுமுள்ள பலரின் வாழ்வுக்காக நீங்கள் அர்ப்பணிக்க வேண்டும். வேதாந்தம் கற்பது, தியானம் செய்வது முதலானவற்றை அடுத்த பிறவியில் பார்த்துக்கொள்ளலாம்! 'பிறருக்குப் பணி செய்வதிலேயே இந்த உடல் அழியட்டும்’ என்று நீங்க…
-
- 0 replies
- 2.3k views
-
-
பெரியானைக்குட்டி சுவாமிகள் (இ. 1911) , கண்டியிலே சிறு வயதில் சலவைத் தொழிலாளி ஒருவரின் பராமரிப்பில் இருந்து வந்தவர். பின்னர் கண்டி கதிரேசன் கோயில் படிகளிலே தங்கிச் சித்த சாதனைகளில் ஈடுபாட்டு வந்தார். அங்கிருந்து புறப்பட்டு இந்தியா சென்று நவநீத சுவாமிகளின் நட்பினைப் பெற்றார். அங்கு சித்தானைக்குட்டி சுவாமிகளைத் தொண்டராக ஏற்றுக்கொண்டார். இருவருடனும் சேர்ந்து பல சாதனைகளைச் செய்துவிட்டு மூவருமாக இலங்கை வந்தனர். இலங்கை மீண்ட சுவாமிகள் பெரும்பாலும் கொழும்பிலேயே தங்கியிருந்தார். கொழும்பு வீதிகளிலே அதிகமாக நடமாடினார். கொழும்பு கப்பித்தாவாத்தை பிள்ளையார் கோயிலில் தங்கியிருந்தார். இவரைப் போற்றியவர்களிலே சேர் பொன்னம்பலம் இராமநாதன் குறிப்பிடத்தக்கவர். இவரின் சீடர்களில் சித்தா…
-
- 0 replies
- 1.2k views
-
-
07 FEB, 2024 | 10:29 PM அமரர் என். சண்முகதாசனின் 31ஆவது நினைவு தினம் (பெப்ரவரி 08) (சமுத்திரன்) 'பல்கலைக்கழகத்தில் எனது இரண்டாவது ஆண்டு 1939 - 40, எனது முழு வாழ்க்கையினதும் திசையை மாற்றிய அந்த ஆண்டில் நான் ஒரு கம்யூனிஸ்ட் ஆனேன். அதன் பின்னர், நான் அதனின்று வழுவவேயில்லை' இந்த வார்த்தைகளுடன் ஆரம்பித்தார் சண்முகதாசன். தனது அரசியல் நினைவுகள் பற்றிய நூலை அரசியலில் ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்த சந்தர்ப்பத்தில் 'Political Memoirs of an Unrepentant Communist' எனும் தலைப்பில் அவர் ஆங்கிலத்தில் எழுதிய நூல் 1989 ஜூலையில் கொழும்பில் வெளியிடப்பட்டது. இன்று அந்த நூலையும் அவருடைய மற்றைய அரசியல் எழுத்துக்களையும் வாசிப்பவர்க…
-
- 0 replies
- 405 views
- 1 follower
-
-
திராவிடமும், தமிழ்த் தேசியமும் வேறு வேறானாவையா? -சாவித்திரி கண்ணன் சமீப காலமாக திராவிடம் என்பதே ஒரு புரட்டு. தமிழர்களை திராவிடர்கள் என்பது பிழையானது. இது இந்த திராவிட கருத்தாக்கத்தை பிரிவினை நோக்கத்தில் ஆங்கிலேயேர்கள் ஊக்குவித்தனர்..என்றெல்லாம் கூறி வருகின்றனர். தமிழ்த் தேசியம், திராவிடம் இரண்டும் ஒன்றுக்கு ஒன்று முரணானதா? உண்மை என்ன…? நம்மை பொறுத்த வரை திராவிட இயக்க ஆதரவோ, தமிழ் தேசிய ஆதரவு நிலைபாடோ எடுக்காமல், உண்மை என்னவென்பதை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு நம் தேடலை தொடங்கினோம். நம் தேடலின்படி, திராவிடம் என்ற சொற்றொடர் ஆறாம், ஏழாம் நூற்றாண்டுகள் தொடங்கியே கணிசமாக காணக் கிடைக்கின்றன. இந்தியாவின் தென் பகுதியை குறிக்கும் ஒரு சொல…
-
- 0 replies
- 469 views
-
-
[size=3][size=4]பல இறை அவதாரங்கள் நிகழ்ந்துள்ளது என்றும் பல இறைதூதர்களை இறைவன் அனுப்பியுள்ளான் என்றும் சில பல மதங்கள் கூறுகின்றன. இந்தஇறைவன்களும் இறைத்தூதர்களும் சாதித்தது என்ன[/size][/size] [size=3][size=4]என்று சற்று திறந்த மனதுடன் சிந்தித்து பார்த்தால் இவர்கள் இறைவன்களும் அல்ல இறைத்தூதர்களும் அல்ல என்ற முடிவிற்கு நம்மால் வரமுடிகிறது. அல்லது அவர்கள் போல நம்மாலும் இறைவனாகவும், இறைத்தூதர்களாகவும் வரமுடியும் என்ற அபரிமிதமான நம்பிக்கையை அளிக்கின்றது. முதலில் இறைவன்கள்,இறைத்தூதர்கள் என்ன செய்தார்கள் என்று பார்ப்போம். ௧.இறைவனின் அவதாரங்கள் என்று கூறப்படுபவர்கள் சிலபல அரக்கர்களை கொன்றதாக நாமறிவோம். அரக்கர்களை கொன்று மக்களுக்கு நன்மை செய்தனர். இன்று இந்த வேலையை…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஈழத் திருநாட்டின் சைவசமயம், தமிழ்ப்பண்பு என்னும் இவற்றின் தொன்மைக்குச் சின்னமாக விளங்குவன திருக்கேதீச்சரம், திருக்கோணேச்சரம் என்னும் இரு சிவத்தலங்களாகும். அது போன்று தேவி வழிபாட்டுக்கு யாழ்ப்பாண நாட்டின் இரு கண்களாக விளங்குவன நயினை, சீரணி என்னுமிடங்களில் விளங்கும் நாகபூஷணியம்மை ஆலயங்களாகும். தம்மை வழிபட்டுப் பூசித்த நாகமொன்றைத் தம்மருமைத் திருமேனியில் ஆபரணமாய் பூண்ட காரணத்தால் இத்தேவியும் நாகபூஷணியம்மை யென்று அழைக்கப்படுகிறாள். அந்த நாகபூஷணியம்மை சண்டிலிப்பாய் பகுதியைச் சார்ந்த சீரணிப்பதியிற் திருக்கோயில் கொண்டெழுந்தருளிய திருவருள் மகிமை மிகவும் பெரியது. அக்காலத்தில் இப்பதியிலே சாத்திரியார் சண்முகம் பொன்னம்பலம் என்ற ஒருவர் இருந்தார். அவர் ஓர் இயந்திரம் வைத்துப் பூசை ச…
-
- 0 replies
- 746 views
-
-
சுவாமிகள் அச்சுவேலியைப் பிறப்பிடாகக் கொண்டவர்கள். அச்சுவேலியிலே சலவைத்தொழிலாளர் வம்சத்திலே சுப்பையா என்றொரு உத்தமர் இருந்தார். நல்ல கடவுட் பக்தர். அடியார் பக்தியிலும் சிறந்து விளங்கியவர். இவருக்கு ஒரு உத்தம புத்திரன், சரவணை எனப்பெயரிட்டு செல்லமாக வளர்த்து வந்தார். சரவணை இளமையிலேயே வசீகரமான தோற்றம் உடையவர். சரவணையின் வசீகரத்தோற்றம் நீராவியடியைச்சேர்ந்த வேளான் வகுப்பு அம்மையார் ஒருவருடைய மனதைக்கவர்ந்தது. சரவணைக் குழந்தையை வளர்க்க ஆசை கொண்டார். சுப்பையாவிடம் தன் கருத்தை அம்மையார் தெரிவித்தார். தனது மகன் ஒரு செல்வந்தர் வீட்டில் வாழ்வதை சுப்பையாவும் விரும்பினார். அதனால் சரவணைக்கு எக்குறையும் தெரியாது வாழும் வாழ்க்கை வசதி இறையருளால் கிட்டியது. இந்தச் சரவணைக் குழந்தை வளர்ந்…
-
- 0 replies
- 711 views
-
-
சனாதனமும், மனுதர்மமும் ஒன்றா..? மன்னர் மன்னன் 22 ஆவது நிமிடத்தில் இருந்து தமிழ்நாட்டில் சாதியம்.. ஆச்சரியமான தகவல்கள். மேலும் தகவல்கள் கிடைத்தால் இப்பதிவில் இடுங்கள்.
-
- 0 replies
- 526 views
-
-
God Is Not a Solution - but a Problem
-
- 0 replies
- 964 views
-
-
தை பூச தினத்தினை முன்னிட்டு நல்லூர் கந்தசுவாமி ஆலய திருமஞ்ச திருவிழா குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தை பூச தினத்தினை முன்னிட்டு இன்று புதன் கிழமை நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் திருமஞ்ச திருவிழா இடம்பெற்றது. மாலை 4.45 மணியளவில் இடம்பெற்ற வசந்தமண்டப பூஜையை அடுத்து முருகபெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் உள்வீதி யுலா வந்து , மாலை 5.30 மணியளவில் திருமஞ்சத்தில் எழுந்தருளி முருகபெருமான் பக்தர்களுக்கு அருள்காட்சி அளித்தார். அதனை தொடர்ந்து திருமஞ்சத்தில் முருக பெருமான் வெளி வீதியுலா வந்தார். …
-
- 0 replies
- 363 views
-
-
உள்ளார்ந்த உடன்படாத் தன்மை முரண்பாடு ஆகும்.அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட தனிநபர் அல்லது குழுக்களுக்கிடையில் அல்லது அவற்றுக்குள்ளே அவை கொண்டுள்ள ஒன்றுக்கொன்று பொருத்தப்பாடற்ற இலக்கு, தேவை, விருப்பு, நம்பிக்கை, விழுமியம் நடத்தை அல்லது புரிந்து கொள்ளலின் அடிப்படையில் எழும் இறுக்கமான இணங்காத்தன்மை முரண்பாடு என வரையறுக்கப்படும். இந்த முரண்பாடுகளின் வகைகளாக, அகமுரண்பாடு: விரக்தி, பைத்தியம், தற்கொலை முயற்சி தனிநபர் முரண்பாடு: குடும்ப முரண்பாடு – உள்ளேயும், இடையேயும் சமூக முரண்பாடு அரசியல் முரண்பாடு சமய /இன / வர்க்க முரண்பாடு மனித – விலங்கு முரண்பாடு சித்தாந்த முரண்பாடு/ கொள்கை முரண்பாடு நிறுவனம் முரண்பாடு போன்றனவற்றைக் குறிப்…
-
- 0 replies
- 1.6k views
-
-
சத்திய சாய் பாபா – 100வது பிறந்தநாள் சிறப்பு ஆய்வு / SATHYA SAI BABA AT 100 — FAITH, POWER, CONTROVERSY AND REASON சத்திய சாய் பாபா – 100வது பிறந்தநாள் சிறப்பு ஆய்வு [பக்தி, அதிகாரம், சர்ச்சை மற்றும் அறிவியல்] சத்திய சாய் பாபா யார்? சத்திய சாய் பாபா (1926–2011) இந்தியாவின் புட்டபர்த்தி என்ற கிராமத்தில் சத்தியநாராயண ராஜு என்ற பெயரில் பிறந்தவர். தன்னை சீரடி சாய் பாபாவின் மறுபிறவி என்று அறிவித்தார். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பக்தர்களை உருவாக்கினார். மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், குடிநீர் திட்டங்கள், பல்கலைக்கழகங்கள் போன்றவை அவர் பெயரில் உருவாக்கப்பட்டன. அவர் போதனை: "அனைவரையும் நேசி. அனைவருக்கும் சேவை செய். எப்போதும் உதவு. ஒரு போதும் காயப்படுத்தாதே" பக்தர்கள் அ…
-
- 0 replies
- 106 views
-
-
திராவிடர்-தமிழர் பிரச்சினை: கழகத்தின் நிலைப்பாடு என்ன? கொளத்தூர் மணி (‘உழைக்கும் மக்கள் தமிழகம்’ (அக்-நவ.) இதழுக்கு - கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அளித்துள்ள நேர்காணல் இது. பெரியார் வலியுறுத்திய – தனித் தமிழ்நாடு லட்சியம், தமிழ்ப் பெயர் சூட்டல், பார்ப்பனர்களை இயக்கத்தில் சேர்க்காதிருத்தல் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு - தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் நிலைப்பாடு இதில் விளக்கப்பட்டுள்ளது) கேள்வி : தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் கழகத்திலிருந்து என்ன அளவில் - கோட்பாட்டளவில் வேறுபட்டிருக்கிறது? வேறுபாடு கொண்ட அளவில் த.பெ.தி.க. அந்த இலக்கு நோக்கிச் சென்று கொண்டிருக்கிறதா? பதில் : பெரியார் சாதிய, பாலின, பொருளிய பேதமற்ற, சுரண்டலற்ற பொ…
-
- 0 replies
- 1.5k views
-
-
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை அன்பு செய்கின்ற மக்கள் உத்திரிக்கிற ஸ்தலத்திலுள்ள ஆன்மாக்களுக்காக தங்கள் செபத்தின் வழியாக உதவி செய்வார்கள். ஏனெனில் அவர்கள் இயேசுவின் சகோதரர்கள், சிறையிலிருக்கும் சகோதரர்கள், விண்ணக மாட்சிமை என்னும் ஆடையின்றித் தவிக்கும் சகோதரர்கள். அவர்களுக்கு உதவி செய்யும்பொழுது நாம் இயேசுவுக்கு உதவி செய்கின்றோம். இறந்த விசுவாசிகள் அனைவரையும் இன்று நாம் நினைனக்கும் நாள். திருச்சபைத்தாய் இறந்து விண்ணகத்தில் இருக்கின்றவர்களையும், உத்தரிக்கிற ஸ்தல ஆத்துமாக்களையும் நினைகின்ற புனிதமான நாள். உயிர் வாழ்வோர் செபம், தவம், தானதர்மம் வழியாக இறந்துபோன ஆன்மாக்களுக்கு உதவி செய்யும் புனிதம் மிகுந்த நாள். உத்தரிக்கின்ற ஸ்தல ஆன்மாக்கள் இறைவனை முகமுகமாய் தர்சிக்க …
-
- 0 replies
- 2.8k views
-
-
-
அரசியல்வாதிகள் மேடையேறி விட்டாலே மடை திறந்த வெள்ளம் போல பேசுவார்கள். அவர்கள் பேச்சில் ஈட்டிகள் பறக்கும். வாள்கள் மோதும், பீரங்கிகள் முழங்கும். கேட்பவர்கள் அனைவரும் மெய்சிலிர்த்து விதிர்விதிர்த்து போவார்கள். சிலபேருக்கு உணர்ச்சி என்ற பாம்பு படமெடுத்து ஆடி வீரம் என்ற மாணிக்கத்தை கூட கக்கும். அதே அரசியல்வாதி மேடையை விட்டு இறங்கினால் பழம் வெட்டும் கத்தியை கூட கண்டு படபடத்தும் போவார்கள். மேடையில் வந்த வீரம் எங்கே போனது என்று நமக்கு தோன்றும். அவரிடமே உங்கள் வீரமெல்லாம் வெறும் வார்த்தை தானா? நடைமுறையில் கிடையாதா? என்று கேட்டால் சிரித்து மழுப்பி விடுவார்கள். அதற்கு காரணம் என்ன? மேடை மீது ஏறிவிட்டால் சுற்றிலும் மக்கள் இருக்கிறார்கள். குறைந்தபட்சம் அவர்களை கோபப…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஒரு புரட்டின் வரலாறு ஒரு புரட்டின் வரலாறு உதயசங்கர் வேதகால ஆரியர்கள் மாட்டிறைச்சி தின்றதில்லை. குறிப்பாக பசுவின் இறைச்சியைச் சாப்பிட்டதில்லை. இஸ்லாமியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்த பிறகுதான் மாட்டிறைச்சி உண்ணும் பழக்கம் வந்ததாக இந்துத்துவவாதிகள் பிரச்சாரம் செய்கிறார்கள். கிட்டத்தட்ட முஸ்லீம் சமூகத்தின் அடையாளமாகவே மாட்டிறைச்சியைச் சொல்கிறார்கள். அதோடு மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள் கீழானவர்கள் அசைவம் சாப்பிடுபவர்கள் ஒருபடி தாழ்ந்தவர்கள் என்ற மதிப்பீட்டையும் உருவாக்குகிறார்கள். இதன் தொடர்ச்சியாக கோசாலை, பசு பாதுகாப்பு இயக்கம், என்று என்னென்னவோ செய்துகொண்டிருக்கிறார்கள். செத்த மாட்டின்…
-
- 0 replies
- 505 views
-
-
வியாழ பகவான் துதி பெருநிறை செல்வம் மேன்மை பெற்றிடுஞ் சுகங்கல்யானம் வருநிறை மரபு நீடி வாய்க்குஞ்சந் ததித ழைக்கத் தருநிறை ஆடை ரத்னந் தான்பெற அருளும் தேவ குருநிறை வியாழன் பெற்றாள் குரைகழல் தலைக்கொள்வோமே. அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த பூர்த்தியாய், அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கப்பாலாய், பிரமம்மமாய், ஜோதிப் பிளம்பான இறைவன் படைப்பிலடங்கிய ஜீவராசிகள் அனைத்தும் தத்தமது முன் வினைகளுக்கேற்ப சுகங்களையும் துக்கங்களையும் அனுபவித்து வருவது கண்கூடு. ஜீவராசிகளின் முன்வினைகளுக்கேற்ப சுக, துக்கங்களை அதன் பலாபலன்களை இறைவன் ஆகர்ஷண சக்தியினால் பூமியுடன் தொடர்புகொண்டுள்ள கிரகங்களின் மூலமாக நமக்கு அளித்து வருகிறார் என்பதனை ஜோதிட சாஸ்திரமூலம் நாம் அறிகின்றோம். பூமியில் பிற…
-
- 0 replies
- 5.5k views
-
-
ஒரு அம்மாக் குருவி நெல் வயலில் கூடு கட்டியிருந்தது. கூட்டில் அது முட்டையிட்டு அடைகாத்தது. அப்பாக் குருவி துணையாக இருந்தது. முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவந்தன. அப்பாக் குருவியும், அம்மாக் குருவியும் குஞ்சுகளைப் போற்றி வளர்த்தன.நாட்கள் கடந்தன. நெற்பயிர் நன்றாக விளைந்துவிட்டது. அறுவடை செய்வதற்கு விவசாயி எப்போது வேண்டுமானாலும் வரலாம். ஆனால் பெரிய குருவிகள் இரண்டும், குஞ்சுகளுக்கு இரை தேடிப் போகவேண்டும். இருவரும் இல்லாத நேரத்தில் அறுவடை செய்வதற்கு ஆட்கள் வந்து, கூட்டைக் கலைத்து குஞ்சுகளைக் கொன்றுவிட்டால் என்ன செய்வது? இதுதான் பெரிய குருவிகளின் கவலை.ஒரு நாள் அம்மாக் குருவி தன் குஞ்சுகளிடம் சொன்னது: “பிள்ளைகளே, விவசாயி வயலுக்கு வந்தால், அவர் என்ன சொல்கிறார் என்று …
-
- 0 replies
- 853 views
-
-
நடராஜருடைய கூத்தில் பொதிந்துகிடக்கும் தத்துவங்கள் நடராஜர் நடனமாடத் தொடங்குமுன் 14 முறை தன் கையிலுள்ள ‘டக்கா’ எனப்படும் உடுக்கையை ஒலிக்கிறார். அதனின்றும் வெவ்வேறு சப்தங்கள் எழுகின்றன. அவருடைய ஆட்டத்தைக் காணக் குழுமியிருக்கும் தேவர்கள், முனிவர்கள் ஆகியோரிடையே இருந்த பரதமுனி, நாரதமுனி, பாணினிமுனி, பதஞ்சலிமுனி, முதலானோருக்கு வெவ்வேறு வகையாக இந்த சப்தங்கள் ஒலிக்கின்றன; பொருளாகின்றன. *பரதமுனிக்கு அவை நாட்டியசாஸ்திர சூத்ரங்களாகவும் *நாரதமுனிக்கு சங்கீதசாஸ்திர சூத்ரங்களாகவும் *பாணினிமுனிக்கு வியாகரணசாஸ்திர சூத்ரங்களாகவும் *பதஞ்சலிமுனிக்கு யோக சாஸ்திர சூத்ரங்களாகவும் அவை ஒலிக்கின்றன. அவரவர் துறையில் அவரவர் சிறப்பான நூல்களை உலகம் உய்ய அளிக்க அவை வழிசெய்கின்றன. *பிரபஞ்ச இ…
-
- 0 replies
- 1.8k views
-
-
கார்ல் மார்க்ஸ் – சமூகநனவிலியாகிவிட்ட சிந்தனையாளன் கார்ல் மார்க்ஸ் உலகை மாற்றிய நான்கு முக்கிய சிந்தனையாளர்களில் ஒருவர். உயிரின வரலாற்றை அறிந்துகொள்ள பரிணாமக் கோட்பாட்டை அறிவித்த சார்ல்ஸ் டார்வின், மனதின் நுட்பத்தை கண்டறிவித்த உளவியல் அறிஞர் சிக்மண்ட் பிராய்ட், பிரபஞ்ச ரகசியத்தின் புதிரை விடுவிப்பதற்கான சார்பியல் தத்துவத்தை அறிவித்த ஆல்பர்ட் ஐன்ஸ்டின், இவர்களுக்கு நிகராக உலகின் சமூகவரலாறு பற்றிய அறிவியலை அறிவித்தவர் கார்ல் மார்க்ஸ். பிரபஞ்சம் அதில் வாழும் உயிர்கள், அதன் உயிரின வரலாறு, சமூகவரலாறு என ஒவ்வொரு தனிமனிதனின் உலகப்பார்வையை மாற்றியமைத்த முக்கிய சிந்தனையாளர்கள் இவர்கள். கார்ல் மார்க்ஸ் உலகின் அனைத்து ஒடுக்கப்பட்ட பாட்டாளிகள், ஏழைகள் குறித்து தீவிரமாக சிந்…
-
- 0 replies
- 685 views
-
-
யோகசுவாமிகளின் மகாவாக்கியப் பொருள் சைவநன்மணி நா. செல்லப்பா இங்கு கொடுக்கப் படுவது மனவாசக விளக்கமாகும். இது மெய்யுணர்தற் தெளிவு ஆகமாட்டாது. மனவாசக விளக்கமுலம் நாம் சாதனர் நெறிகளை அறியலாமே யன்றி மெய்யுணர்தலோ அல்லது சத்திய தரிசனமோ பெறுதல் இயலாது. சத்திய தரிசனத்தை ஒவ்வொரு சாதகனும் சுயமாகவே உரிய சாதனை செய்து கண்டு பிடித்தல் வேண்டும். சத்திய தரிசனத்தை மாசறு காட்சி என்றும், நிருவிகற்பக்காட்சி என்றும், சிவக் காட்சி என்றும், கடவுள் தரிசனம் என்றும் பலவாறு வர்ணிப்பார்கள். யோகசுவாமிகள் அருளிய நான்கு மகாவாக்கியங்களும் மற்றும் நற்சிந்தனைகளும் மனவாசக விளக்கமாக உள்ளன. அவற்றைக் கற்பதனாலோ அல்லது பாராயணம் செய்வதனாலோ நேரடியாக எவராலும் முழுமையான சத்திய தரிசனம் பெறுதல் அரி…
-
- 0 replies
- 1.2k views
-
-
• ஒரு கோயிலுக்குள் நுழையும் முன் முதலில் நமது பாதத்தை கழுவ வேண்டும் .. • பின் கால், கை ஆகியவைகளை கழுவிய பின் சில துளிகளை எடுத்து தலையை சுற்றி வட்டமிட்டு தெளித்து கொள்ள வேண்டும் ... • இதன் மூலம் நம் உடலை தயார் படுத்திகொண்டு முதலில் கோபுரத்தையும் அதில் உள்ள கலசங்களையும் பார்த்து வணங்க வேண்டும் ... • பின்னர் வாயிற்காப்போர்கள் ஆன துவாரபாலகர்களின் அனுமதியை வாங்கிகொண்டு உள்ளே செல்ல வேண்டும் • உள்ளே செல்லும் முன் அங்குள்ள வாயிற்படியை கடந்து செல்ல வேண்டும் .. • அந்த படியை தாண்டும் போது, " நான் கொண்டு வந்த எதிர்மறை வினைகள், எதிர்மறை எண்ணங்கள், கெட்ட செயல்கள், கவலைகள் எல்லாவற்றையும் இ…
-
- 0 replies
- 391 views
-