Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகச் சாளரம்

சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. ஜெர்மனியர் ஒருவரால் தமிழில் எழுதவும் பேசவும் முடிகிறது. ஆனால் தமிழர்களாக பிறந்த சிலருக்கு தமிழில் எழுதவோ வாசிக்கவோ முடியவில்லை. தமிழில் பேசவும் எழுதவும் தெரிந்த ஒரு ஜெர்மனிய இளைஞனுக்கு தமிழில் எழுதத்தெரியாத/தமிழைப்படிக்க விரும்பாத தமிழ்பெண் ஆங்கிலத்தில் சொல்லும் அறிவுரை!!!

  2. எஸ்.சிதம்பரம், கம்பளை மனித வாழ்க்கையில் சேமிப்பு எவ்வளவு அவசியம் என்பது வாழ்ந்து உயர்ந்தவர்கள் வாழ்ந்து எல்லாவற்றையும் இழந்தவர்கள் மூலம் அறியலாம். விலங்குகளே தமது வாழ்விற்கு உகந்தாற்போல் சேமிக்கின்றது. தேனி தேனை சேமிப்பதும் ஒட்டகம் தனக்கு நீரை சேமித்து வைத்துக் கொள்வதும் மாடு உணவை சேமித்து அசை போடுவதும் நாம் காண்பது. அதுபோல் வாழ்வில் எதிர்கால சிந்தனையுடன் சேமிக்கப்பழக வேண்டும். சேமிப்பு இல்லாமை வாழ்வை இருட்டாக்கிவிடும் என்பதை உணர்த்த உலக சேமிப்பு தினம் கொண்டாடப்படுகிறது. வாழ்க்கை ஓட்டத்தில் வேகமாக ஓடித் திரியும் மனிதர்கள் கிடைக்கும் வருமானத்தில் போக்குவரத்து, உணவு, நகர வாழ்க்கைக்கு உட்செல்வதால் கிடைக்கும் வருமானம் போதுமானதாக இல்லாததால் சேமிப்பில் அக்கறை காட்டுவதில்லை. …

  3. ஒருவருக்குத் தொழில்ரீதியான வளர்ச்சியும் அதற்காக அவர் அவரது பணியைப் பற்றிக் கற்றுக்கொள்ளுவதும் 90 சதவீதம் அவர் செய்கிற வேலையில்தான் நடைபெறுகிறது. வேலையின் அனுபவம் மூலமும், மற்றவர்களின் அனுபவங்களை உள்வாங்குதல் மூலமும் தனது பணிகளின் மீதான கருத்துகளை ஏற்றுக்கொள்வதிலும்தான் ஒருவருக்குப் பணி அனுபவம் கிடைக்கிறது. பொதுவாக, வேலையில்தான் பெரும்பாலும் மனிதர்கள் கற்றுக்கொள்கின்றனர். திறன் வளர்ப்புப் பயிற்சிகளில் சுமார் 10 சதவீதம்தான் கற்றுக்கொள்ளப்படுகிறது. எல்லோருக்கும் ஒரே மதிப்பீடுகள் கிடையாது. சிலருக்கு அவர்களுக்கான தனிப்பட்ட நேரம் மிகவும் முக்கியம். அவர்கள் வார இறுதி நாட்களிலும் வேலைசெய்யும்படி இருக்கிற பணிகளை விரும்ப மாட்டார்க்ள். மன அழுத்தமுள்ள அபாயம் நிரம்பிய வேலைகள் சிலருக்…

  4. Started by கிருபன்,

    பின் தூறல் ஜெயமோகன் திரு. ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். உங்கள் எழுத்துக்களின் வன்மையில் இலக்கியம், தத்துவம், மதம் போன்றவற்றை தெரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறேன். என் மானசீக குருவாக உங்களை மதிக்ககிறேன். ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஐரோப்பாவில் இருந்தபோது நானும் ஒரு பெண்ணும் இரண்டு வருடங்கள் காதலித்தோம். பிரச்சனைகளாலும் கருத்து வேறுபாடுகளாலும் அவளைப் பிரிந்து மூன்று வருடங்கள் ஆகின்றன‌. எனக்கு சமீபத்தில் திருமணம் ஆகிவிட்டது. அவளுக்கு இன்னும் ஆகவில்லை. இந்த மூன்று வருடங்களி்ல் அவள் எனக்கு மாதம் ஒரு முறையாவது மின்னஞ்சல் அனுப்புவாள். ஒன்றிற்குக் கூட நான் பதில் அனுப்பியதில்லை. பல முறை எழுத ஆரம்பித்து பின்பு விட்டு விடுவேன். முடிந்தது முடிந்ததாகவே இருக்கட்டும் என்று. மின…

  5. காதல் - ஆர்- அபிலாஷ் என்னுடைய ஒரு நண்பர் ஊனமுற்றவர். அவர் தன்னை எந்த பெண்ணும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை; அதனால் தான் தனிமையாகவே வாழ்வெல்லாம் இருக்க போவதாயும்; அதுவே சிறந்த தீர்மானம் என்றும் என்னிடம் திரும்ப திரும்ப கூறுவார். அவருடைய தன்னிரக்கம் இதை கூறச் செய்யவில்லை என அறிவேன். ஏனெனில் அவர் துணிச்சலாய் உழைத்து வாழ்வில் முன்னேறியவர். என்னை விட நேர்மறையான சிந்தனை கொண்டவர். ஆனால் காதல் பற்றின அவர் பார்வையில் தான் சிக்கல். நான் அவரிடம் கூறினேன்: “பெண்கள் ஒருவரின் உடம்பை பற்றி பெரிதாய் அலட்டிக் கொள்வதில்லை. அவர்களுக்கு ஒரு ஆணின் ஆளுமை தான் முக்கியம். ஆளுமையற்ற ஆண்களுக்கு அதிகாரம் உண்டென்றால் அவர்களை நோக்கியும் பெண்கள் கவரப்படுவார்கள்.” நான் அவரிடம் என் தனிப்பட்ட அனுபவத்தை ஆத…

  6. உங்களுக்கு உப்புடி திரிஞ்சால்த்தான் சலரி.... எங்களுக்கு.!!!! மிகுதி திரையில்.....

  7. ஏழைக் குழந்தைகளின் படிப்புக்கு விளையாட்டாய் உதவும் 'நிதர்சன' முயற்சி! மாணவர்களுடன் சாய் கிருஷ்ணன் வீட்டிலும் சரி, வெளியிலும் சரி, பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் அடிக்கடி கேட்கும் வார்த்தை 'போய்ப் படி' என்பதுதான். படித்து முடி; பிறகு விளையாடப் போகலாம் என்பதுதான் பெற்றோர்களின் முதல் வார்த்தையாக இருக்கிறது. அதற்கு மாறாக சாய் கிருஷ்ணன் என்பவர், முதலில் விளையாடுங்கள்; பிறகு படிக்கலாம் என்று தன் பகுதி மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகிறார். இந்த ஆச்சரிய தொடக்கத்தின் அடிப்படைக்கு என்ன காரணம்? நிதர்சனம் அறக்கட்டளையின் நிறுவனரான சாய் கிருஷ்ணனிடம் இது குறித்துப் பேசினேன். "என்னுடைய குடும்ப சூழ்நிலையால், பள்ளிப் படிப்பையே தொடர முடியவில்லை. சென்னை, பெரம்பூருக்கு அருகிலுள்ள எங்களின் …

    • 2 replies
    • 448 views
  8. மனசு போல வாழ்க்கை 31: பாராட்டு எனும் மூலதனம் நல்ல வார்த்தைகளுக்கு நாம் எல்லோரும் ஏங்குகிறோம் என்றால் நீங்கள் நம்புவீர்களா? நீங்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி, உங்களுக்கு வந்து சேரும் ஒரு சின்னப் பாராட்டுக் கூட உங்களை ஒரு நொடியாவது சிறு ஆனந்தத்தில் ஆழ்த்துகிறது என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா? ‘முதல் மரியாதை’ படத்தில் “ பா.. ரா.. ட்ட, மடியில் வச்சு தா..லாட்ட, எனக்கொரு தாய்மடி கிடைக்குமா.. ?” என்று நடிகர் சிவாஜி பாடும்போது உங்கள் கண்களும் கலங்கியிருந்தால் நீங்களும் பாராட்டுக்கும் ஆதரவுக்கும் காத்திருக்கிறீர்கள் என்று பொருள். தொடுதலும் உணவே சிசு வளர்வது சுவாசத்தாலும் உணவாலும் மட்டுமா? தாயின் ஸ்பரிசம் தரும் வெப்பத்தினால் தான் அது வளர்கிறது. உளவியல் ஆய்வாளர்கள் ப…

  9. ஒரு நண்பரைச் சந்திக்க வேண்டியிருந்தது. வடநாட்டுக்காரர். அப்பா மேற்குவங்காளத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். இன்றிலிருந்து முப்பது வருடங்களுக்கு முன்பான காலகட்டம் அது. இவர் தறுதலையாகச் சுற்றியிருக்கிறார். உள்ளூர் அரசியல்வாதி அதுவும் அதிகாரமிக்க அரசியல்வாதி என்றால் தம்மைச் சுற்றி நண்பர்கள் குழாம் சேரும் அல்லவா? அப்படிச் சேர்ந்திருக்கிறது. ஏழெட்டுப் பேர்கள். இந்தக் கதையைச் சொல்வதற்கு ட்வின் பீக்ஸ் என்ற இடத்துக்கு அடைத்துச் சென்றிருந்தார். அது என்ன Twin peaks என்று கேட்கக் கூடாது. அது ஒரு குடிக் கூடம். இத்தினியூண்டு துணியை அணிந்த பெண்கள் ஊற்றிக் கொடுப்பார்கள். Eat, Drink, Scenic views என்று எழுதி வைத்திருந்தார்கள். தின்பதும் குடிப்பதும் இரண்டாம்பட்சம். மூன்றாவது விஷயத்…

  10. தன்முதலில் முத்து நெடுமாறனைச் சந்திக்க வேண்டும் என்ற உந்துதலை உண்டாக்கியது மூத்த பத்திரிகையாளர் மாலன் எழுதியிருந்த ஒரு கட்டுரை. ‘முரசு அஞ்சல்: தமிழின் பெருமிதம்’ எனும் அந்தக் கட்டுரையில், “தினமும் கணினியில் என் பணிகளைத் தொடங்கும்போது நான் மானசீகமாக நன்றி செலுத்தும் ஒரு நபர் முத்து நெடுமாறன்” என்று குறிப்பிட்டிருந்தார் மாலன். புதிதாக வந்திருக்கும் ‘ஐபோன் 6’-ல் தமிழில் தட்டுவது நமக்கு இன்றைக்கெல்லாம் சர்வ சாதாரணமாக இருக்கிறது. ஆனால், 30 வருடங்களுக்கு முன் கணினிக்குள் தமிழைக் கொண்டுவரும் கனவு சாத்தியமாவது அத்தனை எளிதாக நடக்கவில்லை. உலகின் வெவ்வேறு மூலைகளில் இருந்த, விரல் விட்டு எண்ணிவிடக் கூடிய எண்ணிக்கையிலான தமிழ் இளைஞர்கள் சிலர் அதற்கான முயற்சியில் இறங்கியிருந்தனர். அர்ப்…

  11. இந்த கட்டுரைகள் யாவும் பல தளங்களில் படித்து தொகுத்தவை தனி தனியாக குறிப்பிட முடியவில்லை நன்றி மகிழ்ச்சியாக வாழ்வதற்கான ஒரே ஒரு இரகசியம் ஒவ்வொரு நாளும் பிறத்தல் வேண்டும். ஒவ்வொரு நாளும் பிறப்பதற்கு அதற்கு முதல் நாள் இறத்தல் வேண்டும். உறக்கம் இறப்பாகவும் விழிப்பு பிறப்பாகவும் இருத்தல் வேண்டும். புதிதாகப் பிறக்கும் போது அன்று நாம் முகம் கொடுக்கும் ஒவ்வொன்றும் புதுமை. ஒப்பீடுக்கு இடமில்லாத புதிய அனுபவம். ஒவ்வொன்றும் அழகு. ஒவ்வொன்றும் அற்புதம். ஒவ்வொன்றும் தனித்துவம். நேற்றயவைகள் எதுவும் இல்லை. எல்லாமே புதியவை. நேற்றயவர்கள் எவரும் இல்லை. எல்லோரும் புதியவர்கள். இன்றைய அனைத்தும் உறக்கம் வரைதான். நாளைய விழிப்பு புதிய பிறப்பு. மீண்டும் எல்லாமே புதுமை, ஆச்சரியம், அற்புதம். 'வார்த்தை…

  12. ப்ரெஸ்ட் அயர்னிங் (மார்பக மெலித்தல்): ஓர் பகீர் ரிப்போர்ட்! உலகில் இன்று பல்வேறு வளர்ந்த, வளரும் நாடுகள் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளில் இருந்து அவர்களை காப்பாற்றி முன்னேற்றே பாதையில் செலுத்துகின்றன. ஆனால் ஆப்ரிக்கா போன்ற வளர்ச்சி அடையாத நாடுகளில் இருக்கும் நிலைமையே வேறு. அதில், நம் மூச்சை ஒரு நிமிடம் நிறுத்தி விடும் வகையில் தீவிரம் கொண்டது இந்த மார்பக மெலித்தல் (ப்ரெஸ்ட் அயர்னிங்). இது மத்திய மற்றும் மேற்கு ஆப்ரிக்காவில் பின்பற்றப்பட்டு வருகிறது. கேமரூன், நைஜீரியா, கினியா ரிபப்ளிக் முதலான நாடுகளும் இதில் அடங்குமாம். சிறுவயது பெண்களின் மார்பகங்களில், சூடான இரும்பு அல்லது கற்களை வைத்து, அவர்களின் மார்பக திசுக்களை அழுத்தி விடுகின்றனர். இதனால், அவள் 2 நாட்களில் …

    • 1 reply
    • 636 views
  13. ஜூன் மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரை வெளியான தென்னிந்திய தமிழ்த் திரைப்படங்களில் சிறுவர்களை மதுசாரம் மற்றும் சிகரட் உட்பட ஏனைய போதைப் பொருள் பாவனைக்கு தூண்டும் வகையில் ஏமாற்றியிருக்கும் விதம் தொடர்பில் மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் ஆய்வறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. கடந்த புதன்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு நடத்திய விசேட ஊடகவியலாளர் மாநாட்டின் போதே இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. இந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; குறிப்பிட்ட காலப்பகுதியில் வெளியான திரைப்படங்களின் மொத்த நேரம் 2349 நிமிடங்கள். 18 படங்களிலும் மொத்தமாக சிகரட் மற்றும் மதுசார வகைகளை விளம்படுத்திய நேரம் 144.24 நிமிடங்கள். இந்த நேர அளவானது ஒரு தன…

  14. ஒழுகு... (சர்வதேச சிறுவர் தினம்) குழல் இனிது யாழ் இனிது என்பர் குழந்தைகளின் மழலை மொழி கேளாதார்... சிறுவர்கள் உலகில் சஞ்சரிப்பது என்பது மிகவும் மகத்தானதொரு செயல். இந்தச் சிறுவர்களுக்கிடையே புரிந்துணர்வையும் பொது நிலைப்பாட்டையும் ஏற்படுத்துவதற்காக சர்வதேச சிறுவர் தினம், 1954ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் யுனிசெப் அமைப்பினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் இன்றைய தினமான ஒக்டோபர், 1ஆம் திகதி சிறுவர் தினம் கொண்டாடப்படுகிறது. (முதியோர் தினமும் இன்றைய நாளிலேயே கொண்டாடப்படுகின்றது) எனினும், இச்சிறுவர்கள் தினமானது ஒவ்வொரு நாடுகளிலும் வௌ;வேறு தினங்களில் கொண்டாடப்படுகிறது. உலகிலுள்ள அனைத்து சிறுவர்களுக்கும் உள்ள அடிப்படை உரிமைகள் இந்நாளில் நினைவுகூறப்படுக…

  15. லெக்கின்ஸ் ஆபாச உடையா? முகநூல் முழுவதும் லெக்கின்ஸ் போஸ்ட்... ஆணாதிக்கம் என்று ஒரு பக்கம் கூச்சல், பெண் அடிமை என்று சாடல், தெரியாமல் எடுத்த புகைப்படங்கள் ஒரு வரம்பு மீறல் என்ற குற்றச்சாட்டு... டிவி சேனல்களில் விடாது இது பற்றிய சூடான விவாதங்கள்... இது விவாதத்திற்கு உகந்த பிரச்னையோ இல்லையோ,. இன்று இது ஒரு பிரச்னை என்று ஆகிவிட்டபடியால் இதை ஒரு சரியான கண்ணோட்டத்தில் பார்த்தால் என்ன என்று தோன்றுகிறது. கலாசாரக் கேடு இது ஒரு சிலரின் பார்வை. சரி நம் கலாசாரம்தான் என்ன? 1920– 1960களில் புடவை மட்டுமே நம் பெண்களின் கலாசாரமாக இருந்தது. அந்த புடவையும் முதலில் 9 கஜமாக இருந்தது. 1960க்குப் பிறகு 6 கஜமாக மாறியது. அப்போதும் இந்த மாற்றம் ஒரு கலாசார கேடாகத்தான் பேசப்பட்டது. ஆனால் …

  16. வணக்கம், கொஞ்ச நாளாக எனக்கு ஒரு சந்தேகம்.ஊரில படிக்காத ஆட்கள் இங்கே புலத்தில் சாதரண காசாளாராக வங்கி, சுப்பர் மார்கட்,பெற்றோல் செட்களில் வேலைக்கு சேர்ந்து படிப்படியாக முன்னேறி, மனேஜர் அல்லது அதற்கு மேலான பதவியை அடைகிறார்கள்.இது எங்கட ஆட்கள் மட்டுமல்ல,ஒரு நாட்டில் இருந்து பிழைப்பதற்காக வளர்ச்சி அடைந்த நாடுகளுக்கு வந்து விடா முயற்சியால முன்னுக்கு வரும் சிலரைப் பற்றித் தான் கதைக்கிறேன் இங்கு நான் அவர்களது கல்வித் தகுதியைப் பற்றி கதைக்க வரவில்லை.என்னுடைய கேள்வி என்ன என்டால் இதே இவர்கள் எங்கட[தங்கட] ஊரில் இருந்து இருந்தால் இவர்களால் இந்த நிலைக்கு வந்து இருக்க முடியுமா?...உதாரணத்திற்கு இலங்கையில் ஒரு வங்கியில் மனேஜராக வேண்டுமானால் அதற்கு என கல்வித் தகுதிகள் இருக்க வேண்டும் அல்…

  17. சூது கவ்விய வாழ்வு By சோம. தர்மசேனன் First Published : 24 September 2015 01:22 AM IST அண்மையில் தாய் ஒருத்தி தன் மகளைக் கழுத்தை நெரித்துக் கொன்றார் என்ற செய்தி வெளி வந்தது. அதனை எளிமையான, சிக்கலற்ற வாழ்வை அமைத்துக்கொண்டுள்ள நம்மில் பலரால் கற்பனை செய்யக்கூட இயலவில்லை. அது எப்படிச் சாத்தியமாகும் என்பதே அதிர்ச்சியடைந்தவர்களின் கேள்வி. பெற்ற மகளைக் கொலை செய்தவரின் மனநிலையை, அவரை அதற்கு இட்டுச் சென்ற வாழ்வியல் சிந்தனையைப் புரிந்துகொள்ள முயற்சித்தால் அது எவ்வாறு மனிதனை தன்நிலை இழக்க வைத்துள்ளது என்பதைப் புரிந்துகொள்ளலாம். நம் நாட்டில் நமது வாழ்வின் மூல்யங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை நம்மைக் காப்பாற்றி, வழிகாட்டியாகத் திகழ்கிறது. இந்த நம்பிக்கையை, நமக்குள் பொதிந்தி…

  18. வாசிப்பதற்கான அவகாசம் ஹ்யூ மக்வயர்- தமிழில் :அ. சதானந்தன் ஆறு மாதங்களுக்கு முன் நான் தகவல் சமுத்திரத்தில் என்னைத் தொலைத்துக் கொண்டிருந்தேன். இணையமும் அதிலுள்ள அத்தனை அற்புதங்களும் ஒற்றைத் தொடுகையில் அளிக்கக்கூடிய வாசிப்பு இன்பங்களுக்கு அளவேயில்லை என்றிருந்தேன்- விக்கிப்பீடியா, டிவிட்டர், பாட்காஸ்டுகள், நியூ யார்க்கர், மின்அஞ்சல், டெட் உரைகள், பேஸ்புக், யூட்யூப், அவ்வப்போது பார்க்கக்கூடிய பஸ்ஃபீட், ஏன், ஹார்வர்ட் பிசினெஸ் ரிவ்யூவும்கூட. சொல்லிக்கொண்டே போகலாம். இணையத்தின் ஆனந்தங்களுக்கு அளவில்லை, இப்போதும் தொடர்கின்றன. ஆனால் இது எப்போதும் நமக்கு ஆனந்த அனுபவத்தை மட்டுமே அளித்துக் கொண்டிருக்கிறது என்று சொல்ல முடியாது. இதில் சில கஷ்டங்களும் இருக்கின்றன. வேலைநேரத்தில் கவனம…

  19. பணத்தின் கவர்ச்சி.-------------ஒவ்வொருவரும் பணத்தைப் பற்றிதான் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். சிலர் பணத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறார்கள்.அவர்கள் பரவாயில்லை. இன்னும் சிலர் பேராசை பிடித்தவர்களாக இருக்கிறார்கள்.அவர்கள் அடுத்த உலகத்தைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்து விடுகின்றனர்.நன்னெறியைப் பற்றியும்,அதன் மூலம் சொர்க்கத்தை அடைவதைப் பற்றி சிந்திப்பதும், பணத்தைப் பற்றி சிந்திப்பதற்கு சமமாகத்தான் இருக்கும்.ஒரு மனிதன் நிகழ் காலத்தில் வாழும்போது மட்டும்தான் பணத்தைப் பற்றியோ அடுத்த உலகத்தைப் பற்றியோ சிந்திக்காமல் இருக்க முடியும்.பணம் என்பது எதிர்காலம்.எதிர்காலத்துக்கான பாதுகாப்பு.அதிகாரத்தின் அடையாளம். அதனால்தான் நீ பணத்தை மேலும் மேலும் சேகரிக்கிராய்.ஆனால் இன்னும் சேர்க்க வேண்ட…

  20. நம் மீது யாராவது கோபம்கொண்டால்,நாம் நேரடியாக அவரைக் குற்றம் சொல்லாமல் 'நம் மீது அவன் கோபம் அடைய,நாம் அவனுக்கு என்ன செய்தோம்.அவன் ஏன் நம் மீது மட்டும் கோபப்படுகிறான்?மற்றவர்களிடம் நல்ல முறையில் தானே நடந்து கொள்கிறான்!'என்று எண்ணி அதற்கான காரணத்தை உங்களிடமே கண்டு பிடிக்க முயலுங்கள்.அடுத்து நீங்கள் அவனிடம் நேரடியாக,'நீ என் மீது கோபம் அடையக் காரணம் என்ன?உன் மனதைப் புண்படுத்தும்படி நான் என்ன செய்தேன்?நான் எந்தத் தீங்கும் உனக்கு செய்யவில்லை.உன் கோபத்திற்கு வேறு ஏதேனும் காரணம்இருக்க வேண்டும்.'என்று நட்பாகக் கேட்கவும்.உடனே அவன் கண்களில் நீர் மல்க உங்களிடம் மன்னிப்புக் கேட்கலாம். ஜார்ஜ் குருட்ஜிவ் ஒன்பது வயது சிறுவனாக இருந்தபோது அவருடைய தந்தை ஒரு எளிய அறிவுரையைக் கூறினார்.''யா…

  21. நாம் தினசரி பல்வேறு வகைப்பட்ட மக்களை சந்திக்கிறோம்.அப்போது நம் முகம் வெவ்வேறு பாவங்களைக் காட்டுகிறது.மனித உறவுகளை வளர்ப்பதில் முக பாவங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.நம் முகத்தை எப்போது எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோமா? தனிப்பட்ட மனிதர் பாராட்டும்போது. பாராட்டை உள்ளம் மகிழ்ந்து புன்னகையுடன் ஏற்றுக் கொள்வதைப்போல முகத்தை வைத்துக் கொள்ள வேண்டும். பலர் முன்னிலையில் நாம் பாராட்டப்படும்போது. மலர்ந்த முகத்துடன் காணப்படலாமே தவிர,புன்னகைகூட வரக்கூடாது. வெட்கப்படுவதுபோலக் காண்பித்துக் கொள்ளலாம். மற்றவர்கள் குற்றம் சாட்டும்போது: சிறு குறைகளை சொன்னால் ,தவறுதான் என்பதுபோல முகத்தை வைத்துக் கொள்ளலாம்.பெரிய தவறுகள் என்றால்,''அடடே,இப்படி செய்து விட்டேனே! இனி,இந்த …

  22. நீங்கள் பிறருடன் பழகக் கூச்சப்படுபவரா?இதோ,கூச்சத்தை விரட்ட உங்களுக்கு ஒன்பது வழிகள். 1.நம்மைப் பற்றி பிறர் என்ன நினைப்பார்களோ என்ற நினைப்பைக் கை விடுங்கள். 2.எப்போதும் யாரோ ஒருவர் நம்மைக் கவனித்துக் கொண்டிருக்கிறார் என்று நீங்களாகவே நினைத்து வேதனைப் படாதீர்கள்.அவரவர்களுக்கு அவரவர் வேலைகள்.உங்களைத்தானா கவனித்துக் கொண்டிருக்கப் போகிறார்கள்? 3.எப்போதும் பிறர் உங்களுக்கு ராஜ மரியாதை தர வேண்டும் என்று எதிர் பார்க்காதீர்கள். 4.தர்ம சங்கடமான நிலைமைகளை தைரியமாக எதிர் கொள்ளுங்கள். 5.மற்றவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது எவ்வளவோ இருக்கலாம்.அதனால் மற்றவர்களின் நட்பில் உங்களது கூச்சத்தை மறக்க முயற்சி செய்யுங்கள். 6.உண்மையில் ஒரு நண்பனுக்கு நீங்கள் ஏங்கும் போது ,'நமக்கு நாமே நண…

  23. முட்டாளை நண்பனாக்கிக் கொள்ளாதே,அவன் உனக்கு நல்லது செய்வதாக நினைத்து கெடுதல் செய்வான். கஞ்சனை நண்பனாக்கிக் கொள்ளாதே, உனக்குக் கடுமையான பண நெருக்கடியின் போது ஓடிவிடுவான். போக்கிரியை நண்பனாக்கிக் கொள்ளாதே, உன்னையும்,உன் நட்பையும் மலிவுச்சரக்காக விற்று விடுவான். பொய்யனை நண்பனாக்கிக் கொள்ளாதே, தொலைவில் இருப்பதைப் பக்கத்தில் இருப்பது போலவும், பக்கத்தில் இருப்பதைத் தொலைவில் இருப்பது போலவும் தோற்றமளிக்கும்படி, கானல் நீர் பிரமையை ஏற்படுத்தி விடுவான். நன்றி; தென்றல்

  24. அன்பு மகனுக்கு, அன்பு மகளுக்கு, *ஒவ்வொரு நாளும் குறைந்தது மூன்றுபேரையாவது பாராட்டு. *மாதம் ஒரு முறையாவது சூரிய உதயத்தைப்பார். *'நன்றி','தயவுசெய்து'-இந்த வார்த்தைகளை முடிந்தவரை அதிகம் உபயோகி. *உன் வசதிக்கும் தகுதிக்கும் உட்பட்டு வாழக் கற்றுக்கொள். *உன்னை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புகிறாயோ, அப்படியே நீயும் மற்றவர்களை நடத்து. *ரகசியங்களைக் காப்பாற்று. *புதிய நண்பர்களைத் தேடிக்கொள்:பழைய நண்பர்களை மறந்துவிடாதே. *தொழில் ரகசியங்களைக் கற்பதில் நேரத்தை வீணடிக்காமல் தொழிலைக் கற்றுக் கொள். *உன் தவற்றை தயங்காமல் ஒத்துக்கொள். *தைரியமாக இரு.உண்மையில் அவ்வாறு இருக்க முடியாவிட்டாலும், அப்படித் தோற்றம் அளி *ஒரு போது மற்றவரை ஏமாற்றாதே. *கவனிக்கக் கற்றுக்கொள்.சந்தர்ப்ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.