சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
குழந்தைக்குத் தேவை அப்பாவின் அரவணைப்பு! .......... குழந்தைப் பருவத்தில் அப்பாவின் அரவணைப்பு தவிர அவசியமான வேறு எந்தத் தேவையும் இருப்பதாக என்னால் நினைக்க முடியவில்லை... - சிக்மண்ட் ஃபிராய்ட் (மனவியலாளர்) சிம்மாசனங்களை விட்டு இறங்காத அப்பாக்களுக்கு குழந்தையின் இனிசியலில் மட்டும்தான் இடம். குழந்தையோடு குழந்தையாக இறங்கி, விளையாடி, தோற்று, அடி வாங்கி, அழுவதுபோல நடித்து, கன்னத்தில் முத்தமிட்டு, தோளில் கட்டிக்கொண்டு பம்பரமாகச் சுற்றும் அப்பாக்களுக்கு மட்டுமே இதயத்தில் இடம். எவ்வளவு பரபரப்பான அப்பாவாக இருந்தாலும் பிள்ளைக்காக சொத்து சேர்ப்பதைவிட முக்கியம் அவர்களுடன் செலவிடும் மதிப்புமிக்க நேரம்தான் என்கிறார் மனநல மருத்துவர் மீனாட்சி. அப்பாவுடன் இருக்கும்போது குழந்தைகளுக்கு நேர…
-
- 1 reply
- 694 views
-
-
ஆண்களின் கண்களை உறுத்தும் பெண்களின் உடல் பாகம் ஆண்களின் கண்களை உறுத்தும் பெண்களின் உடல் பாகம் எத்தனையோ கேள்விகளுக்கு ஏதாவது ஒரு பதில் கிடைத்து விடும். ஆனால் இந்தக் கேள்விக்கு மட்டும் பதில் கிடைப்பது கொஞ்சம் கஷ்டம்தான். பெண்களிடம் ஆண்களுக்குப் பிடித்த விஷயங்களில் முக்கியமானது, முதலாவதானது மார்பகங்கள்தானாம். கண், இதழ் என பல விஷயங்கள் ஆண்களுக்குப் பிடித்தாலும் கூட முதலில் அவர்களது கண்ணை ´உறுத்துவது´ மார்பகங்கள்தானாம். இதற்கு என்ன காரணம் என்பதை உளவியலாளர்கள் கூட இதுவரை சரிவர புரிந்து கொள்ள முடியவில்லையாம். ஒரு பெண்ணை ஆண் பார்க்கும்போது முதலில் எந்த பாகத்தைப் பார்க்கிறான் என்பதையே ஒரு ஆய்வாக நடத்தியுள்ளனர். அதில் கிடைத்த முடிவு, கிட்டத்தட்ட முக்கால்வாசிப் பேர் …
-
- 20 replies
- 21.1k views
-
-
கணவருடன் பள்ளி மாணவர்களுடன் படம்: குட்டி ரேவதி மீரா உதயகுமார், கல்விச் செயற்பாட்டாளர். அமெரிக்காவில் கல்வி பயின்ற இவர் கல்விச் சேவைக்காக வாழ்நாளை அர்ப்பணித்துக்கொண்டவர். நாகர்கோவிலுக்கு அருகில் சாக்கர் (Saccer - South Asian Community Centre For Education And Research) என்னும் பள்ளியை நடத்தி வருகிறார். இவர், அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் தலைவர் சுப. உதயகுமாரின் மனைவி. உங்கள் பின்னணி பற்றிக் கூறுங்கள்... எனக்குச் சொந்த ஊர் நாகர்கோவில்தான். ஆனால் என் பெற்றோரின் வேலையின் பொருட்டு நாங்கள் திருநெல்வேலியில் வசித்தோம். அதனால் என் பள்ளிக் கல்வியையும், இளநிலைக் கல்வியையும் திருநெல்வேலியிலேயே படித்தேன். முதுகலைப் படிப்பைத் திருச்சியில் முடித்தேன். .சமூகப் பணியில…
-
- 0 replies
- 619 views
-
-
கந்தரோடையில் .. யாழ்ப்பாணம்-கைதடிச்சந்தி மேலிருந்து ஒரு நோக்கு. அழகிய யாழ்ப்பாணத்தின் சங்குப்பிட்டி பாலம் .. மன்னார் செல்லும் பாதை யாழ்ப்பாணத்தின் பருத்தித்துறை பிரதேசத்தின் அழகிய வெங்காய பயிர்ச்செய்கை .. அழகிய மணற்காடு பிரதேசம் அழகிய பொன்னாலை பிரதேசம் யாழ்ப்பாணத்தின் அழகிய மந்திரி மனை(கோட்டை) யாழ்ப்பாணம் முற்றவெளிப்பகுதி மேலிருந்து ஒரு நோக்கு... காங்கேசன்துறை அழகான வெளிச்சவீடு..... யாழ்ப்பாணத்தின் அழகான பார்வை - தீவுகளிற்கு செல்லும் பாதை . facebook.com/pages/யாழ்-மண்ணே-வணக்கம்-Welcome-To-Jaffna
-
- 20 replies
- 8.3k views
-
-
சிலாபம் திண்ணனூரான் 'மனிதன் உழைத்துக் கொண்டே இருக்கவேண்டும் என்பதுதான் இயற்கையின் ஆணை. உழைப்பால் தான் உயரமுடியும். உழைப்பில் ஏற்றத்ததாழ்வுகள் இருக்கலாம். படிகளின் ஏறி இறங்குவதுப் போல ஒன்றில் ஈடுபட்டால் தானே உழைக்க முடியும். மனிதனால் முடியாதது எதுவுமே இல்லை.' இவ்வாறு பாம்புகளை சீராட்டி வளர்த்து அதன் மூலமாக உழைக்கும் முனியாண்டி சுனில் கூறுகிறார். முனியாண்டி சுனிலை கொம்பனி வீதி கங்காராம ஏரிக்கறையில் கண்டோம். அவரைக் கடந்து செல்லும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகளை 'ஹலோ சேர் ஸ்நேக்' என பாம்புகளை காட்டி அழைத்தார். சிரித்துக் கொண்டே உல்லாசப் பயணிகள் அவரைக் கடந்துச் சென்றனர். இவரின் பரம்பரையினர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். ஆனால் எப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியாது எ…
-
- 0 replies
- 768 views
-
-
படம்: ஆர்.ரகு சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் என்னை மிகவும் யோசிக்க வைத்தது. கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான கும்பறையூர் என்ற பளியர் கிராமத்துக்குச் சென்றிருந்தேன். நாங்கள் சென்ற நேரம் ஒரு வீட்டில் காலை உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். மலைவாழ் மக்கள் என்ன சாப்பிடுகிறார்கள் என்று பார்க்க வேண்டும் என்ற ஆவலில் எட்டிப் பார்த்தபோது, இரண்டு சிறுவர்கள் ஒரு அலுமினியக் கிண்ணத்தில் நூடுல்ஸ் வைத்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். என்னால் நம்பவே முடியவில்லை. திகைப்புடன் இந்த உணவு எப்படிப் பழக்கமானது என்று கேட்டபோது, “விலை மலிவாக இருக்கிறது, அத்துடன் அடிக்கடி டி.வி-யில் காட்டப்படுவதால் பிள்ளைகள் சாப்பிட ஆசைப்படுகிறார்கள்” என்று அந்த வீட்டுப் பெண் சொன்னாள். “குடிக்கத் தண்ணீர் தாருங்கள…
-
- 0 replies
- 1.4k views
-
-
சில காலமாய் நடக்க ஆரம்பித்திருக்கிறேன். மூன்று வாரத்தில் ஐந்து நாட்கள் தான் என்றாலும் அலுவல் குறிப்பாக சில காலம் என்பது சாலப்பொருத்தமே. நெஞ்சத்தை கிள்ளாதே படம் ரிலீஸ் ஆன போது சில நாட்கள் ஆசைப்பட்டதோடு சரி. வாக்கிங் வாய்க்கவில்லை. வெறும் டாக்கிங்தான் வாழ்க்கை என்றாகி விட்டது. ஜிம்மிற்கு வெட்கமில்லாமல் பதினைந்து முறை சேர்ந்ததுதான் மிச்சம். ஆசான் சஜீவனிடம் ஏரோபிக்ஸ் கற்று சில காலம் (இங்கு சில மாதங்கள் எனக் குறிப்பு கொள்க) பேயாட்டம் போட்டு ஓய்ந்தேன். யோகா புத்தகங்கள் வாங்கிய எண்ணிக்கையில் பாதி எண்ணிக்கை நாட்கள் கூட ஆசனம் செய்யவில்லை. தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனாக நந்தனம் தெருக்களில் நான் நடக்க ஆரம்பித்ததுதான் இங்கு கதைக்களம். மனித விநோதங்களின் தீவிர வ…
-
- 0 replies
- 783 views
-
-
ஒரு இலை உதிர்வது போல் நாம் சாகக் கூடாதா? அபிலாஷ் ஜூலை 16ஆம் தேதி உச்சநீதிமன்றம் கருணைக்கொலையை சட்டபூர்வமாய் ஏற்கும் விதியை கொண்டு வருவது பற்றி பரிசீலிக்க அரசாங்கத்தை கேட்டது. இதை ஒட்டி ஒரு கருணைக்கொலை தேவையா என்கிற விவாதம் மீண்டும் எழுந்துள்ளது. தூக்குத்தண்டனை விவாதத்தை இது மிகவும் நினைவுபடுத்துகிறது. ஏனெனில் கருணைக்கொலை ஆதரவாளர்களின் வாதங்கள் கிட்டத்தட்ட அதே வகையானவை. இன்று நம்மிடம் பரவி வரும் ஒரு எதிர்-வாழ்க்கை, பாஸிச, கேளிக்கை மனநிலை நோயுற்றவர்களையும், குறைபாடனவர்களையும் சகிக்க முடியாத மனநிலைக்கு இவர்களை தள்ளி விட்டது. வாழ்க்கையை ராட்சத ராட்டினத்தில் கூவியபடி பயணிக்கும் ஒன்று மட்டுமேயாக நாம் ஒற்றைபட்டையாய் நம்ப துவங்கி இருக்கிறோம். விளைவாக நிறைய படித்த…
-
- 11 replies
- 1.8k views
-
-
சிலாபம் திண்ணனூரான் ''இலட்சியம் என்பது இருப்பு நிலைக் கணக்கு மாதிரி இருப்பைவைத்து நம்மிடம் இருப்பதைச் சொல்லலாம் அல்லவா? அது போன்ற தான் இலட்சியத்தை வைத்து நமது கொள்கையின் முன்னேற்றம், வெற்றி ஆகியவற்றைச் சொல்லமுடியும் எனவே 'இருப்பை அதிகமாக வைத்திருங்கள் வியாபரம் நன்றாக இருக்கும்" என்கிறார் எழுபது வயதை கடந்த பின்னும் உற்சாகமாக உழைக்கும் எம். நடராஜா. இவர் ஒரு வர்த்தகர். தன் சுய முயற்சியால் சுயதொழிலில் ஈடுபட்டு இன்று வெற்றியை தொட்டு விட்டார். இவரின் சுயதொழில் மூலமாக எட்டுக்கும் மேற்பட்ட தின்பண்டங்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றார். இவர் தயாரிக்கும் தின்பண்டங்களினது விலை என்ன தெரியுமா? ஐந்தே ஐந்து ரூபாய் தான…
-
- 4 replies
- 1.4k views
-
-
பேஸ்புக்: நம் மனதின் ஸ்விட்ச் யார் வசம்? அபிலாஷ் சந்திரன் இதுக்கெல்லாம் போய் கோவப்படலாமா என அடிக்கடி நினைப்பேன். அது பெரும்பாலும் முகநூலில் என் நடவடிக்கை சம்மந்தப்பட்டதாக இருக்கும். ஒரு விசயம் பார்த்து கொந்தளித்து மாங்கு மாங்கென்று எழுதி விட்டு கொஞ்ச நேரம் கழித்து இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை என தோன்றும். ஒரு அற்ப விசயம் எப்படி எனக்கு முக்கிய பிரச்சனையாக தோன்றியது? 1) ஏனென்றால் முகநூல் சில செய்திகளை நாம் தவிர்க்கவே முடியாதபடி நம் முகத்தில் அறைகிறது. அல்லது தட்டில் வைத்து நீட்டுகிறது. பரிந்துரைக்கிறது. எப்படியோ பார்க்க வைக்கிறது. நாம் டென்ஷனாகிறோம். அதாவது நமக்கு பிடிக்காத ஒருவர் நமக்கு பிடிக்காத ஒன்றை மின்னஞ்சலில் எழுதியிருக்கிறார். நாம் அதை திறந்த…
-
- 1 reply
- 1.3k views
-
-
மகனுக்கு பரீட்சை மாரியம்மன் கோயிலுக்கு போயிருந்தேன் பரீட்சையில தேர்வாகணும் நானும் கும்பிட்டு மகனையும் கும்பிடவைத்து அர்சனை ஐயருக்கு காசு உண்டியலில் பணம் என வெளியில்வரும் போது ஒரு ஐம்பது ஈரோக்கள் காலி.. வெளியில் வந்ததும் மகன் சொன்னான் உங்களிடம் காசு இருந்ததால் நான் பாசாகிவிடுவேன் காசு இல்லாதவன்.......?
-
- 12 replies
- 1.3k views
-
-
சட்டங்களும் சம்பிரதாயங்களும் தேவா (ஜெர்மனி) சட்டங்கள் பாராளுமன்றங்களில் விவாதிக்கப்பட்டு, பெரும்பான்மைவாக்குகள் பெற்று அமுல்படுத்தப்படுகின்றன. லஞ்சம் புரளும் நாடுகளில் சட்டம் அமுல்படுத்தப்படுகின்றனவா என்ற கேள்வி ஒரு கேள்விக்குறியாகவே இருக்கிறது. ஐனநாயகநாடுகளில் சட்டங்கள் முறைப்படி செயல்படுத்த முடிகின்றது. மதக்கொள்கைகளை அடிப்படையாக கொண்ட அரசுகள், சமயநூல்களின் எழுதப்பட்டுள்ள முடிபுகளை சட்டங்களாக மாற்றி தீவிரமாக செயல்படுத்துகின்றன. எப்படியோ சட்டங்கள் மக்களுக்கு மேலே ஏற்றப்படுகின்றன. ஐனநாயக நாடாய் இருந்தாலும், சர்வாதிகாரமான நாடாய் இருந்தாலும், சட்டங்கள் நடைமுறைப்படுத்த படுகின்றன. ஒரு அரசு வாழ்வதற்கு அதனுடைய முதுகெலும்பாய் சட்டங்கள் தேவைப்படுகின்றன. மக்களுக்கு மேல் …
-
- 0 replies
- 800 views
-
-
கைகளால் உணவருந்துவதற்கான, நல்ல காரணங்கள்!!! ஏன் கைகளால் உண்ணுவதை விரும்புகிறார்கள் என என்றாவது எண்ணியுள்ளீர்களா? அதற்கு காரணம் வெறும் கைகளால் உணவுகளை உண்ணும் போது உணவின் சுவை கூடுதலாக இருக்கும். குழந்தைகளையும் கைகளாலேயே உண்ணுவதற்கு பழக்கப்படுத்துகின்றனர். இதனால் உணவருந்தும் மேஜையில் சிந்தி சிதறமால் உண்ணுவார்கள் அல்லவா? கைகளால் உண்ணும் போது, அவை உணவின் அமைப்பை உணர்ந்து கொள்ளும் வாய்ப்பையும் நமக்கு அளிக்கும். ஸ்பூன் மற்றும் ஃபோர்க் பயன்படுத்தி உண்ணும் போது இந்த அமைப்பை நம்மால் உணர முடிவதில்லை. பல இந்தியர்களுக்கு தங்கள் உள்ளங்கையால் உருளைக்கிழங்கை அல்லது இட்லியை சாம்பார் மற்றும் சட்னியுடன் பிசைந்து சாப்பிட மிகவும் விரும்புவார்கள். வெறும் கைகளால் உணவருந்தினால் மட்ட…
-
- 13 replies
- 1.6k views
-
-
கலாபூஷணம் சிலாபம் திண்ணனூரன் 'நாம் எதைச் செய்தாலும் முழு விருப்பத்துடனும் முழு முயற்சியுடனும் செய்ய வேண்டும். உடலுக்கு உறுதியைத் தருவதும் உள்ளத்துக்கு உறுதியைத் தருவதும் உழைப்புத்தான் தோல்வியில் ஏமாற்றம் பிறக்கலாம். தோள் தட்டும் வெற்றியில் அதை எதிர்பார்க்க இயலாது. ஏமாற்றம் எமது நண்பனாகிவிட்டால் எழுந்திருக்கவே இயலாது'. பல்வேறு தோல்விகளை தொட்டும் தனது முயற்சியை கைவிடாது உழைத்துவரும் கொழும்பு மட்டக்குளியைச் சேர்ந்த இப்னுசலாம் முகம்மது உசைன் இதுவரை தான் கடந்து வந்த பாதையை எம்மோடு பகிர்கின்றார். பழைய கோட் எனப்படும் பயன்படுத்தப்பட்ட ஆடைகளை சேகரித்து விற்பனை செய்வதன் மூலம் தனது வாழ்க்கையை நடத்திவரும் இளைஞர் இவர். 46 வயதைக் கொண்ட இவர் இளம் வயதிலேயே வறுமையை அனுபவித்…
-
- 1 reply
- 1.1k views
-
-
மனைவியிடம் நாலு வார்த்தை மனம் விட்டுப் பேசுங்கள்...தி மு க பாராளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா எம்.பியின் அருமையான பதிவு சற்று நீளம் தான் முடிந்தால் படியிங்கள் ..... இதுநாள் வரை என் வாழ்வில், கடந்த காலத்தில் நான் செய்த, அல்லது செய்யத் தவறிய எதையும் எண்ணி வருந்தியதேயில்லை. காரணம் எல்லாம் தெரிந்தே, தெளிந்தே செய்ததுதான். ஆனால் கடந்த ஒரு வார காலமாக ஒரு குற்ற உணர்ச்சி என்னை வாட்டி வதைக்கிறது. வாழ்வின் எல்லா நிலைகளிலும், வசந்தம் எட்டிப்பார்க்காத ஆரம்ப காலத்திலும், வளம் குறைந்திருந்த நாட்களிலும் மகிழ்ச்சியோடு என்னோடு வாழ்ந்தவள் அவள். 1982 செப் 15 முரசொலியில் ' என் கண்கள் உன்னை தேடுகின்றன ' என்று கலைஞர் எழுதிய கடிதம் உங்களுக்காகவே என சொல்லி நிறைமாத கர்ப்பிணியாக இருந்…
-
- 7 replies
- 1k views
-
-
சிலாபம் திண்ணனூரான் இவ் உலகத்தில் அதிகமாக வேதனைக்கும் சோதனைக்கும் உள்ளாகுபவர்கள் பெண்கள் தான். அவ்வேதனையையும் சோதனையையும் முறியடித்து வாழ்பவர்களையே சமுதாயம் புதுமை பெண் என்கின்றது. அவ்வாறான ஒரு புதுமைப் பெண்ணே கொழும்பு மட்டக்குளியில் வசிக்கும் டி. பரீதா. நான்கு பெண் பிள்ளைகளினதும் ஒரு ஆண் பிள்ளையினதும் தாயான பரீதா, கொழும்பின் வடபகுதியில் பல பிரதேசங்களில் சைக்கிளில் அலைந்து மீன் வியாபாரம் செய்கிறார். 44 வயதான பரீதா, கடந்த ஆறு வருடங்களாக துணிவுடன் மீன் வர்த்தகம் செய்து வருகிறார். தனது இந்த உழைப்பின் மூலமாகவே தனது ஐந்து குழந்தைகளையும் அவர் கல்வி கற்க வைக்கின்றார். 'எனது பிள்ளைகள் வருங்காலத்தில் கல்வி கற்று பெரும் உத்தியோகங்களை பெற்று வளமாக வாழவேண்டும். என்னை…
-
- 16 replies
- 1.8k views
-
-
ஏடன் தோட்டமும் ஏழாம் வகுப்பு பிள்ளையளும் ப்ரதீப் குணரட்ணம் படம் | AP Photo/Eranga Jayawardena, Groundviews மாலை நேரமொன்றில் ஏழாம் வகுப்பு பிள்ளையளுக்கு E.C.Brewer எழுதிய Little things என்ற ஆங்கில கவிதையை விபரித்துக்கொண்டு இருந்தன். சிறுகச்சிறுக சேர்க்கப்படும் நேசமே பேரன்பை உருவாக்கும் என்பதை சொல்லிச்செல்லும் கவிதையது. அதன் இறுதி வரிகள் இவ்வாறு முடியும். “Little deeds of kindness Little words of love Make our earth an eaden Like the heaven above” என்று அமையும் வரிகளை கடக்கும்போது ஒரு பெடியன் அண்ணை, ஏடன் தோட்டம் எண்டா என்ன? எண்டு கேட்டான். (இருந்த மாணவர்கள் அனைவரும் இந்து சமூகத்தைச் சார்ந்தவர்கள்) கிறிஸ்தவ படி கடவுளின் மூத்த சிருஷ்டிப்புகள் பற்றியும்…
-
- 0 replies
- 616 views
-
-
(கோப்புப் படம்) சமூகத் தொடர்புகளில் முழுமையான நேர்மையை எதிர்பார்ப்பவரா நீங்கள்? ஆம் எனில், நீங்கள் சமூகத் தொடர்புகளில் சுமுகமான முறையில் இயங்குவதற்கான வாய்ப்புகள் குறைவே என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைகழகமும், மெக்சிகோ பல்கலைகழகமும் இணைந்து நடத்திய இந்த ஆய்வில், மிகவும் நேர்மையான சமூகத் தொடர்பு நமது நட்பு வட்டத்தைக் குறைத்துவிடும் என்று தெரிவித்துள்ளது. மேலும், நேர்மையற்ற ஒரு சமூக வட்டத்தில் நாம் இருப்பின், அது மிக மோசமான வட்டாரத்தை உருவாக்கும் என்று கூறும் இந்த ஆய்வு, சமூகச் செயல்பாடுகளில் இடைநிலையாக இருப்பதுதான் உகந்தது என்று தெரிவிக்கின்றது. இதுகுறித்து சமூக உளவியலாளர்கள் கூறுகையில் நாம் பயன்படுத்தும் நான்கு விதமான பொய்கள் குறித்த…
-
- 0 replies
- 414 views
-
-
நேரம் ஒதுக்குங்கள் நம்பினால் நம்புங்கள், கணவன் மனைவியரிடையே உள்ள பிரச்சினைகளின் மையம் இந்த விஷயம் தான். “எனக்காக அவரு டைம் ஸ்பென்ட் பண்ண மாட்டேங்கறாரு” ! ஆண்களுடைய விருப்பங்களும் பெண்களுடைய விருப்பங்களும் தனித்தனியானவை. ஆண்களுக்கு கிரிக்கெட் மோகம் இருக்கும் போது, பெண்களுக்கு சீரியல் மோகம் இருக்கும். ஆண்கள் தூங்கி ஓய்வெடுக்க விரும்பும் போது பெண்கள் பேசிக்கொண்டிருக்க விரும்புவார்கள். ஆண்களுக்கு ஷாப்பிங் அலர்ஜியாய் இருக்கும். பெண்களுக்கோ அது தான் எனர்ஜியாய் இருக்கும். இப்படி மாறி மாறி இருக்கின்ற ரசனைகள் ஒரு கூரையின் கீழ் வந்து சேர்வது தானே குடும்பம் ! இந்த இடத்தில் ரசனைகள் முட்டிக் கொள்ளாமல் எப்படி இணைந்து பயணிக்கின்றன என்பது தான் கவனிக்க வேண்டிய விஷயம். “அவருக்க…
-
- 2 replies
- 1.2k views
-
-
மூளைக்கு யோகாசனம் “தோப்புக் கரணம்” (வீடியோ இணைப்பு) மூளைக்கு என்ன பயிற்சி எனக் கேட்டால், பலரும் தலையை அமுக்கி விடுவது, மனனம் செய்வது அதாவது ஒன்றையே திரும்பத்திரும்ப சொல்லுதல் என்று தான் சொல்வது வழமை. ஆனால், முன்னாளில் நமது ஆசிரியர்கள் அல்லது பெற்றோர் நமக்கு வழங்கிய தண்டனை “தோப்புக்கரணம்” தான் மூளைக்கு சிறந்த யோகாசனம். தோப்புக்கரணம் போடுவதால் மூளை புத்துணர்ச்சி அடைகிறதாம், Autism எனப்படும் மன இறுக்கம் கொண்ட குழந்தைகள் கூட இந்தத் தோப்புக்கரணத்தால் நலன் பெறுகிறார்களாம். யாராவது ஒரு குழந்தை அடங்காமல அடம்பிடித்தால் அல்லது கோபத்தால் கிடைப்பதை எல்லாம் எறிந்து உடைத்தால், "Go to your room and think what you did..." என்பதில்லையே... செய்த பிழைக்…
-
- 0 replies
- 868 views
-
-
சைவ உணவு – பழக்கமா? பண்பாடா? மீனா தேவராஜன் மனிதன் வாழ்வு என்பது இயற்கைச் சூழலுக்கு ஏற்ப அமையும் என்பதை நாம் மறந்து விடக் கூடாது. அக்காலத்திலிருந்தே இந்தியர்கள் சைவ உணவு உண்பார்களா? அசைவ உணவு உண்பார்களா? என்ற விவாதம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. அதேபோல் உடை உடுத்தும் பழக்கங்களும் விவாதத்திற்குட்பட்டவையாக அமைகின்றன. பலஇன மதத்தவர்கள் வாழும் இந்தியாவில் உணவு பற்றி பல்வேறு கருத்துகள் நிலவுவதற்கு முக்கிய காரணங்கள் இந்தியா தொன்று தொட்டு பல நாட்டவர்களின் ஆட்சிக்கும் தாக்குதலுக்கும் உள்ளாகி உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.. மேலும் அப்படி வந்தவர்களில் சிலர் இங்கேயே தங்கி நம் இனத்தவரைத் திருமணம் செய்து கொண்டவர்களுமுண்டு. எனவே உணவுப் பழக்க வழக்கங்கள் பல …
-
- 2 replies
- 1.2k views
-
-
திருவள்ளுவர் வரலாறும் திருக்குறளும். முன்னுரை: தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள். இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மனித வாழ்வின் முக்கிய அங்கங் களாகிய அறம் அல்லது தர்மம், பொருள், இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப் பற்றி விளக்கும் நூல். உலக மக்களின் முன் தமிழர்கள் பெருமிதமாக நெஞ்சம் நிமிர நிற்கும்படி செய்த மாமனிதர் திருவள்ளுவர். அறிவியல் கண்டுபிடிப்புகளாலோ, அரசாண்டதாலோ அவர் அப்பெருமையை உருவாக்கி தரவில்லை. தன் அறிவாலும், சிந்தனையாலும் உருவாக்கித் தந்திருக்கிறார். அவர் எழுதிய திருக்குறள் அப்பெருமையை தமிழர்களுக்கு வழங்கியிருக்குறது. அறிவும் சிந்தனையும் தான் மனித வாழ்க்கைக்கு ஆதாரம் அவற்றிலிருந்தே எல்லாம் தோன்றுகின்றன. திருவள்ளுவர் வர…
-
- 4 replies
- 4.4k views
-
-
'முயன்றால் முடியாதது இல்லை!' செலவை குறைத்து சேமிப்பை அதிகரிப்பதற்கான வழிமுறைகளை கூறும் நிதி ஆலோசகர் பத்மநாபன்: பெரும்பாலான வீடுகளில், வரவை விட செலவு அதிகமாக உள்ளது. இந்த செலவுகளை குறைப்பதற்கு, சின்னச் சின்ன விஷயங்களைச் செய்தாலே போதும்; அதைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.சம்பளம் வந்தவுடன் சேமிப்பு தொகையை முதலில் தனியாக எடுத்து வைத்துவிட வேண்டும். சேமிப்புக்கு போக, மீதமுள்ள தொகையில், செலவுகளைத் திட்டமிடுவது நல்லது.உங்கள் மொத்த வருமானத்தில், வாடகை, மளிகை மற்றும் குழந்தைகள் பள்ளி, கல்லூரி கட்டணத்துக்கு இத்தனை சதவீதம் என, நீங்கள் திட்டமிடுகிற மாதிரி, எத்தனை சதவீத பணத்தை சேமிக்கப் போகிறீர்கள் என்பதை முடிவு செய்து, அந்தப் பணத்தை முதலிலேயே எடுத்து வைத்து விடுவது அவசியம…
-
- 3 replies
- 4.7k views
-
-
இன்று இலங்கையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பிரச்சினை பாலியல் பிரச்சினை காலையில் பத்திரிகைகளை புரட்டினால் வன்முறைகள்,கொலைகள்,பாலியல் வல்லுறவுகள் சிறுவர்துஸ்பிரயோகங்கள் பற்றிய செய்திகளை அதிகம் காணலாம் சாதரண குடிமகன் தொடக்கம் ,அரசியல் வாதிகள்,கல்லூரி அதிபர்கள் ஆசிரியர்கள் ,அலுவலகர்கள் ,மதகுருமார்கள் இவற்றில் சம்மந்தப்பட்டிருப்பார்கள் பெண்கள் ,சிறுவர்கள் , ,முதியவர்கள் என இப்பிரச்சினை பாதித்து கொண்டே வருகிறது. காரணம் பாலியல் பற்றிய அறிவு இல்லாததும், தொழிநுட்ப வளர்ச்சியும். தொழிநுட்ப வளர்ச்சி என்னும் போது படிக்கும் மாணவர்கள் கைகளில் இன்று புதிய புதிய கைதொலைபேசிகள் ,மடிக்கணணிகள்,இருப்பதனால் இதனை பயன் படுத்தி சில பாலியல் சார்ந்த இணையத்தளங்களுக்கு சென்று பலானா பலானா படங்களை பார்த…
-
- 2 replies
- 1.4k views
-
-
மனைவி மட்டும்….. தந்தை பெரியார் காங்கிரஸ் மகா இயக்கத்தில் தீவிரமாகப் பணியாற்றிவந்த காலம் அது. தீவிர காந்தியவாதியாகத் திகழ்ந்த பெரியார், தானும் கதராடை உடுத்தி தன்னைச் சார்ந்தவர்களும் கதராடையை உடுத்த வேண்டும் என விரும்பினார். அது மட்டுமல்லாது கதர் துணிகளைத் தோளில் சுமந்து கொண்டு ஊர் ஊராகச் சென்று கூவி விற்று அனைவரும் கதராடை உடுத்தவேண்டிய அவசியத்தையும் உணர்த்தி வந்தார், ஆண்கள் மட்டும் அல்லாது பெண்களும் கதராடை உடுத்த வேண்டும் என்று கூறிவந்தார். இந்த சமயத்தில் பெரியாருக்கு ஒரு பிரச்சினை எழ ஆரம்பித்தது, ஊர் மக்கள் எல்லாரும் பெரியாரின் சொல் கேட்டு கதராடைகளை உடுத்த தொடங்கியபோது அவரது மனைவி திருமதி, நாகம்மை மட்டும் கதர் புடைவையை உடுத்த மறுத்துவிட்டார்.’ தன் மனைவியே கதர…
-
- 10 replies
- 1.7k views
-