சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
-
- 0 replies
- 2.1k views
- 1 follower
-
-
மது, ஹெரோயின், கொகெய்ன் போன்றவை மூளையின் மகிழ்ச்சி மையங்களைத் தூண்டி, மனதின் கவலைகளை மறக்கச் செய்கின்றன என்று கூறப்படுவதையாவது எதிர்ப்புடன் ஏற்றுக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. ஆனால், மனச் செயற்பாடுகளை மாற்றியமைத்து, வண்ணமயமான உருவெளித் தோற்றங்களையும் பொய்யான பிம்பங்களையும் மனதில் தோன்றச் செய்கிறவையும் பிரக்ஞை உணர்வைத் திரித்துப் போடுகிறவையுமான எல்.எஸ்.டி. போன்ற மனத்திரிபு இரசாயனங்களை ஏன் சிலர் பயன்படுத்துகிறார்கள் என்பது விளங்காத புதிராக இருக்கிறது. மனிதனின் பரிணாம வரலாற்றில் மத அனுபவங்களும் "கட' நிலை அனுபவங்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. மதம் என்பது ஒரு சமூகத்தின் உறுப்பினர்களுக்கு இடையில் நட்புணர்வையும் ஒத்துழைப்பையும் சகோதர பாவத்தையும் வளர்ப்பதற்காக ஏற்படு…
-
- 0 replies
- 552 views
-
-
இணையவழி: கற்றலும் கற்பித்தலும் லோகமாதேவி டிசம்பர் 27, 2020 லோகமாதேவி ஆன்லைன் வகுப்புக்கள் துவங்கி பல மாதங்கள் ஆகிவிட்டதென்றாலும் இன்னும் அதில் எனக்கு நல்ல பரிச்சயமும் பிரியமும் ஏற்பட்டுவிடவில்லை. கரும்பலகையில் எழுதி வருஷக்கணக்காகப் பழகிய கையும் மனமும் இதற்குப் பழகாமல், ஒத்துழைக்காமல் சண்டி பண்ணுகின்றது. மாணவர்களை நேரில் சந்தித்து அவர்களின் கண்களைப் பார்த்தபடி கற்பித்தலில் இருக்கும் மகிழ்வையும் நிறைவையும் 1998’லிருந்து அனுபவித்துக் கொண்டிருப்பவளாதலால், இப்படி கணினி முன்பாக அமர்ந்துகொண்டு தட்டச்சிய கட்டுரைகளையும் குறும்படங்களையும் காண்பித்துக் கற்பிப்பதில் இருக்கும் பொருளின்மையையும் நிறைவின்மையையும் ஒவ்வொரு நாளும் உணர்கிறேன். என்னைப் போன்ற ஆசிர…
-
- 0 replies
- 977 views
-
-
இன்றைய அரசியல் சூழலில் தமிழர்களின் அடையாளம் அழிக்கப்படுகிறதா?
-
- 0 replies
- 639 views
-
-
ஏன் மறைக்க வேண்டும்..?! முறைப்போம் தோழிகளே? வைரல் வீடியோ! அவ்வப்போது தன் உடையை சரிசெய்து உடலைக் காப்பாற்றியபடி இருப்பது, சுவாசம்போல பெண்களுக்கு. 'உடையைத் துளைக்கும் பார்வை பற்றி கவலை தேவையில்லை. அவள் அப்படியே இருக்கட்டும்' என்று சொல்லும், 'எல்(Elle)' நிறுவனம் 'விவால்வ்(WEvolve)' என்ற அமைப்புடன் இணைந்து வெளியிட்டுள்ள அந்த வீடியோ இப்போது வைரல். ஹோட்டலில் அமர்ந்திருக்கும் பெண், வெயிட்டர் வந்ததும் கீழிறங்கிய தன் டாப்ஸை மேலேற்றிவிடுகிறார். சாலையில் நடந்து செல்லும் பெண், ஒரு டாக்ஸி கடக்கும்போது ஹேண்ட்பேக்கை அணைத்தபடி தன்னை மறைத்துக்கொள்கிறார். காரில் பின் சீட்டில் அமர்ந்திருக்கும் ஸ்லீவ்லெஸ் உடை அணிந்த பெண், இரு கைகளையும் உயர்த்தி கேசத்தைக் கோதியவர்,…
-
- 0 replies
- 1.2k views
-
-
அப்பாக்களுக்கு எப்போதுமே தங்கள் மகள் தான் தங்க மீன். ஓர் கட்டத்தில் தனது மனைவி மீதான அன்பை விட பலமடங்கு தனது மகள் மேல் கொண்டிருப்பார்கள் அப்பாக்கள். ஆண்களுக்கு மட்டுமே கிடைத்த ஓர் வரம். ஆண்மகனாகிய ஒருவன் தனது வாழ்வில் மூன்று தாய்களை சந்திக்கிறான். முதலில் பெற்றெடுத்த தாய், இரண்டாவதாக தாய் பெற்றெடுத்து பரிசளித்த சகோதரி உருவிலான தாய். மூன்றாவதாக தனது மனைவி பரிசளித்த மகள் உருவிலான தாய். இதில் நேரடியாக தனது இரத்தத்தின் மூலமாக கிடைத்த முத்தான மகள் தான் அவனது இறப்பு வரை உடன் இருக்கிறாள், பெரும்பாலும். ஓர் ஆண்மகன் தனது மகளை விரும்ப இவ்வளவு காரணங்கள் இருக்க, மகள்கள் தங்களது அப்பாவை, அம்மாவை விட அதிகம் விரும்ப என்ன காரணங்கள் இருக்கிறது. 1) நேர்மையான நண்ப…
-
- 0 replies
- 1.6k views
-
-
தமிழக காவல் துறை அதிகாரிகள் பேசுகிறார்கள் ஒருதலைக் காதலால் சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலை யத்தில் கடந்த ஜூலை 24-ம் தேதி காலையில் ஐடி பெண் ஊழியர் சுவாதி(24) வெட்டி கொலை செய்யப் பட்டார். கடந்த இரு நாட்களுக்கு முன்பு கரூரில் கல்லூரிக்குள் நுழைந்து சோனாலி என்ற மாணவியை, அதே கல்லூரியில் படித்த உதயகுமார் என்ற முன்னாள் மாணவர் கட்டையால் தாக்கி கொலை செய்தார். ஒருதலைக் காதலை ஏற்க சோனாலி மறுத்ததால் ஆத்திரமடைந்த உதயகுமார் இவ்வாறு செய்துள்ளார். இதே ஒருதலைக் காதலால் தூத்துக் குடியில் நேற்று தேவாலயத்தில் பிரார்த் தனை செய்து கொண்டிருந்த ஆசிரியை பிரான்சினா வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அடுத்தடுத்து நடந்த இந்த 3 கொலை களும் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளன. இத…
-
- 0 replies
- 1.1k views
-
-
-
- 0 replies
- 939 views
-
-
இந்த குமிழி வீட்டின் உரிமையாளர் Pierre Cardin ஆவார். Antti Lovag என்பவரால் 1989 ம் ஆண்டு வடிவமைக்கப்பட்ட இந்த குமிழி வீடு Theoule-sur-Mer நகரத்தில் அமைந்துள்ளது. 2.1 ஏக்கர் பரப்பைக்கொண்ட குமிழி வீட்டில் 500 பேர் அமர்ந்து பார்க்கூடிய ampitheatre மற்றும் 8500 சதுர மீற்றர் பரப்பில் பூங்கா மற்றும் குளங்கள் அமைக்கப்பட்டுள்ளது. குமிழி வீட்டில் வட்ட வடிவில் 28 அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறைகளின் சுவர்கள் முழுவதும் carpet களால் மூடப்பட்டுள்ளது. நேரத்திற்கு ஏற்ப அறைகளின் ஒளியை மாற்றும் illuminators களும் பொருத்தப்பட்டுள்ளது.பிரமாண்டமான இரவு நேர விருந்துகள் மற்றும் முக்கியமான நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தப்படும் இந்த வீட…
-
- 0 replies
- 760 views
-
-
செல்லப்பிராணி வளர்க்க ...... வீட்டில் செல்லப்பிராணி வளர்க்க வேண்டும் என்றால் முதலில் வரும் பதில் என்னவாகஇருக்கும். கண்டிப்பாக நாய் அல்லது பூனைகள் தான் பலரின் குரலாக இருக்கும். நம்மில்அநேகமாக பல பேர் நாய்களையும் பூனைகளையும் தான் வீட்டில் செல்லப்பிராணிகளாகவளர்க்க ஆசைப்படுவோம். நீங்களும் அதையே தான் செய்ய வேண்டுமா?தேவையில்லையே! தைரியமாக இந்த வட்டத்தை விட்டு வெளியே வாருங்கள். சரி, பின்என்ன வளர்க்கலாம் என்று தானே கேட்கிறீர்கள்? ஏன் நீங்கள் ஒரு பறவையைசெல்லப்பிராணியாக தேர்ந்தெடுக்க கூடாது? நீங்கள் நினைப்பதைப் போல் இதுகுளறுபடியாக இல்லாமல், உங்களுக்கு பல மடங்கு கேளிக்கையை கொட்டி கொடுக்கும்.ஒரு பறவையை செல்லப்பிராணியாக வளர்க்க நமக்கு தேவையானதெல்லாம்அதனுடைய கூண்டை அமைக்க ஒரு…
-
- 0 replies
- 688 views
-
-
மரண பலம் -----சுப.சோமசுந்தரம் சமீபத்தில் எனக்கு ஒரு விஷயம் வேடிக்கையாகத்தான் இருந்தது. தமிழிசை சவுந்தரராஜனுக்கு முன் சமூக வலைத்தளங்களின் Memes நாயகனாக சித்தரிக்கப்பட்டவர் திரு. விஜயகாந்த். இன்று இந்திரன், சந்திரன் என்று அதே ஊடகங்களும் அரசியல்வாதிகளும் திருவாளர் வெகுசனமும் கொண்டாடும் நபரானார் அவர். ஒரு வாரத்திற்கு முன் என் ஆச்சி (அப்பாவின் அம்மா) தனது 103 வது அகவையில் இயற்கை எய்தினாள். நான் சிறுவனாய் இருக்கும்போது என் அப்பா அரசுப்பணியில் ஒரு கிராமத்தில் பணியில் இருந்ததால் அங்கேயே ஒரு பள்ளியில் சேர்த்தார்கள். "எங்கிருந்தெல்லாமோ நம் ஊரைத் (பாளையங்கோட்டை) தேடி வந்து பிள்ளைகளப் படிக்க வைக்கிறார்கள். நீ இந்தப் பட…
-
- 0 replies
- 663 views
- 1 follower
-
-
ஆணாதிக்கத்தின் தோற்றுவாய் ப. தியாகராசன் அன்று தொட்டு இன்றுவரை நம் சமுதாய அமைப்பானது ஆணாதிக்க சமுதாயமாக அமைந்து காணப்படுகிறது என்பது உலகறிந்த உண்மை. அறிவியலில் வியக்கத்தக்க வளர்ச்சி கண்டுள்ள இந்நிலையிலும், பெண்ணினத்தைக் குறைத்து மதிப்பிடுகின்ற மனப்போக்குதான் ஆண்வர்க்கத்திடம் மிகுந்துள்ளது என்பது வேதனைக்குறிய செய்தியாகும். ஆணின் உடலமைப்பும் வலிமையும் இயல்புகளும் குமுகாயக் கடமைகளும் உயர்வானவை என்று கூறுவதே, இஃது ஓர் ஆணாதிக்ககுமுகாய அமைப்பு என்பதற்குச் சிறந்ததோர் எடுத்துக்காட்டாகும். ஆணினத்திற்கு மட்டும் இச்சமுதாய அமைப்பில் சிறப்புரிமைக் கொடுக்கப்பட்டுள்ளதே, இஃது ஓர் ஆணாதிக்கக் கட்டமைப்புள்ள குமுகாயம் என்பதையே மேலும் உறுதி செய்கிறது. இந்நிலைக்கு நீண்ட நெடிய வரல…
-
- 0 replies
- 2.2k views
-
-
புண்ணியம் சேர்ப்பதற்காக பணத்தை சேர்ப்பவர்கள் இருக்கிறார்கள். சேர்த்த பணத்தை வைத்து புண்ணியம் சேர்ப்பவர்கள் இருக்கிறார்கள். பணத்தை சேர்ப்பதாலேயே பாவம் சேர்ப்பவர்களும் இருக்கிறார்கள். புண்ணியம் சேர்ப்பதாக நினைத்து பாவம் சேர்ப்பவர்களும் இருக்கிறார்கள். பணம் சேர்ப்பதே புண்ணியத்துக்காக என்பது தேவையில்லை தான், ஆனால் புண்ணியத்துக்காக என்று செலவழிக்கும் பணத்தையாவது புண்ணியத்துக்காக செலவழிக்கலாமே? பணத்தை சேர்க்கும் தொழிலே புண்ணியமும் சேர்ப்பதாக அமைந்துவிடுகிறது சிலருக்கு. பாவம் சேர்க்கும் தொழிலையே பணம் சேர்க்கும் தொழிலாக வைத்திருக்கிறார்கள் சிலர். பாவம் மூலமாகவோ, புண்ணியம் மூலமாகவோ எப்படி சேர்த்த பணத்திலும் நமது சந்தோஷத்துக்காக செலவழித்தது போக, புண்ணியம் சேர்க்க செலவழிக…
-
- 0 replies
- 1.3k views
-
-
நம் சமூகத்தில் எத்தனையோ மாற்றங்களும் முன்னேற்றங்களும் ஏற்பட்டிருந்தாலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளின் சதவீதமும் அதிகரித்துக்கொண்டேதான் போகிறது. கருவறையில் தொடங்கும் பாதுகாப்பின்மை பெண்களுக்குக் கல்லறைவரை தொடரவே செய்கிறது. பிணமான பிறகும் வல்லுறவுக் குள்ளாகும் பெண்களைப் பற்றிய செய்திகள் இந்தச் சமூகத்தில் பெண்கள் வெறும் உடல்களாக மட்டுமே பார்க்கப் படுகிறார்கள் என்பதற்கு சாட்சி. இந்தியாவின் தேசிய குற்றப் பதிவு அமைச்சரவை சமீபத்தில் நடத்திய ஆய்வு வெளியீட்டுத் தகவல் நம்மை திடுக்கிட வைக்கிறது. ‘இந்தியாவில் ஒவ்வொரு 26 நிமிடங்களுக்கு ஒரு பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகிறாள். 34 நிமிடங்களுக்கு ஒரு பெண் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகிறாள். மேலும் ஒவ்வொரு 43 நிமிடங்களுக்க…
-
- 0 replies
- 732 views
-
-
நம்முடைய வாழ்க்கையை மீண்டும் தொடங்க முடியுமா? மின்னம்பலம்2021-09-30 முனைவர் சகுப்பன் கோவிட் 19 எனும் நச்சுயிரின் பாதிப்பானது உலகின் அனைத்து நாடுகளிலும் பேரழிவை ஏற்படுத்திவிட்டது, குறிப்பாக இந்தியாவிலும் இந்த தொற்றுநோயின் பாதிப்பினால் அடுத்தடுத்து நெருங்கிய நண்பர்கள் / குடும்ப உறவினர்கள் போன்றவர்களின் உயிரிழப்பு பற்றிய அதிர்ச்சிகரமான செய்தியைப் பெரும்பாலானவர்கள் தொடர்ந்து கேட்டிருப்பார்கள். அதோடு அவ்வாறு இழந்து தவித்திடுபவர்களுக்கு ஆறுதல் கூறுவதற்குக்கூட நேரில் செல்லமுடியாதநிலையில் நம்மில் பெரும்பாலானோர் தொலைபேசியின் வாயிலாக மட்டுமே தொடர்பு கொண்டு ஆறுதல் கூறுகின்ற அவலச் சூழலுக்கு ஆளாகிவிட்டோம். மேலும், இந்த நச்சுயிரானது சூறாவளி போல வந்து, அதன் பாதையில் இர…
-
- 0 replies
- 409 views
-
-
''காது கேளாத, வாய் பேசமுடியாத மகனை பிஹெச்.டி படிக்க வெச்சேன்!" 'சூப்பர் மாம்' விஜயலட்சுமி #CelebrateMotherhood #SuperMom ‘'எங்களுக்குத் திருமணமாகி மூணு வருஷம் கழிச்சுதான் மனீஷ் பிறந்தான். வளர வளர செவித்திறனில் குறைபாடு இருப்பதைக் கண்டுபிடிச்சோம். பேச்சும் வரலை. எல்லோரும் ‘சிறப்புக் குழந்தைகளுக்கான பள்ளியில் சேர்த்துவிட்டால், பிரத்யேகப் பயிற்சி கொடுப்பாங்க’னு சொன்னாங்க. பள்ளியில் அவனோடு நானும் இருந்தால், இன்னும் சிறப்பா செயல்படுவான் என நினைச்சேன்'' என மெல்லியக் குரலில் ஆரம்பிக்கிறார் விஜயலட்சுமி. சென்னை, அடையாறைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர். ''என் வாழ்க்கையில் எத்தனையோ குழந்தைகளுக்கு ட்ரீட்மென்ட் பார்த்திருக்கேன். ஒவ்வொரு குழ…
-
- 0 replies
- 944 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மாதிரிப் படம் கட்டுரை தகவல் எழுதியவர்,தேஜல் பிரஜாபதி பதவி,பிபிசி குஜராத்தி 40 நிமிடங்களுக்கு முன்னர் திருமணத்திற்கு முன்பாக மணமகன், மணமகளின் ஜாதகத்தை கேட்பது இந்திய பெற்றோர்கள் மத்தியில் வழக்கமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஆனால் சிலர் கைரேகையை கேட்பது எதனால் தெரியுமா? ஆம், குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் திருமணத்திற்கு முன்பு மணமகனின் கைரேகையை சிலர் கேட்கின்றனர். இவற்றை வழக்கமான கைரேகை நிபுணர்களிடம் சென்று காட்டாமல் ஒரு கருவி மூலமாக சோதிக்கப்படுகிறது. இந்த சோதனையின் பெயர் DMIT என்று அழைக்கப்படுகிறது. மணமகனி…
-
- 0 replies
- 799 views
- 1 follower
-
-
'மனித நேயம்' என்ற வார்த்தை மரித்துக்கொண்டிருக்கும் இன்றைய அவசர உலகில், தன்னலமற்ற ஒருசில மனிதர்கள் தங்களின் செயல்களால் அதை உயிர்ப்பித்துக் கொண்டிருக்கின்றனர். அப்படியான ஒருவர்தான், புதுச்சேரியைச் சேர்ந்த ஜோசப். மாற்றுத்திறனாளியான இவர், புதுச்சேரி சாரம் பகுதியில் சிறிய அளவில் பிரின்டிங், பைண்டிங் மற்றும் ரப்பர் ஸ்டாம்ப் செய்யும் கடை வைத்திருக்கிறார். சமூகத்தின்மீது மிகுந்த அக்கறை கொண்டிருக்கும் இவர், தனது சொற்ப வருவாயில் பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொண்டு வருவதோடு, விளிம்புநிலையில் இருப்பவர்களுக்குத் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்துவருகிறார். ஒப்பீட்டளவில், சராசரி மனிதர்களைவிட உயரம் குறைந்து காணப்படும் இவரின் சட்டைப் பையில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் ஸ்மைலிகள், ர…
-
- 0 replies
- 904 views
-
-
போர்ப்ஸ் வெளியிட்டுள்ள உலகின் சக்திவாய்ந்த 100 பெண்களின் பட்டியலில் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முதல் முறையாக இடம்பிடித்துள்ளார். உலகின் சக்திவாய்ந்த 100 பெண்களின் பட்டியலை போர்ப்ஸ் நிறுவனம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2019 ம் ஆண்டில் அரசு தலைமை பொறுப்பு, தொழில்துறை, மீடியா உள்ளிட்ட துறைகளில் தலைசிறந்து விளங்கும் 100 சக்தி வாய்ந்த பெண்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் முதலிடத்தில் உள்ளார். இவரைத் தொடர்ந்து ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் கிறிஸ்டைன் லகர்டி 2வது இடத்திலும், அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் தலைவர் நான்சி பெலோசி 3வது இடத்திலும் உள்ளனர். இந்த பட்டியலில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா…
-
- 0 replies
- 537 views
-
-
சிங்க்கி சின்ஹா பிபிசி நிருபர், புது தில்லி அந்த பெண் மறுத்துவிட்ட போதும், அந்த இளைஞர், திருமணம் செய்து கொள்ளப் போகும் உறவு தானே, இது தவறல்ல என்று சொன்னதாகக் கூறினார். இந்தச் சம்பவத்தை நினைவு கூர்ந்த இளைஞர், அந்தப் பெண்ணைப் பின்னர் திருமணமும் செய்து கொண்டதால் இது அவரைப் பொருத்தவரையில் ஒரு குற்றமில்லை. அந்த விஷயம் அத்துடன் முடிந்ததாகவே உள்ளது அவரது கருத்து. இந்தப் பெண்ணின் திருமணம் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய அதே இளைஞனுடனே நடந்ததுதான் மிகுந்த வேதனைக்குரிய அம்சம் என்று அந்தப் பெண் கூறுகிறார். "இது ஒரு சாதாரண திருமணமாக இருந்திருக்க முடியாது, நான் அப்படி நினைக்கவுமில்லை" என்று அவர் கூறினார். ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, ந…
-
- 0 replies
- 484 views
-
-
நான் ஒரு நண்பனுடன் நேற்று கதைக்கும்போது சொன்னான், அவனது நண்பன் ஒருவனது தகப்பனார் சில வாரங்களுக்கு முதல் இயற்கை மரணம் அடைந்து விட்டார். அவரது மரண சடங்கிற்கு அவனும் போயிருந்தான். ஆனால் அந்த ஊர் மக்கள் ஒருவரும் அந்த மரண வீட்டுக்கு போகவில்லை, ஒரு சிலரை தவிர. அவன் சொன்னான் (இனி அவன் சொல்வது போல எழுதுகிறேன்) “அந்த ஊரில் அண்ணளவாக 400 குடும்பம் வரையில் வாழ்கிறார்கள், எனக்கு அவர்களில் பெரும்பாலானவர்களை தெரியும். ஆனால் அந்த மரண வீட்டில், அந்த ஊரை சேர்ந்த ஒரு சிலரைத்தான் (10 ம் குறைவாக) காணமுடிந்தது. மேலும் நண்பனின் நட்பு வட்டாரத்தை சேர்ந்த சிலரும் அவனது நெருங்கிய உறவினர்கள் சிலைரயும்தான் காண முடிந்தது. அந்த மரணவீடுக்கு மொத்தமே 50 - 60 பேர்தான் வந்திருப்பார்கள். நானும் எல்லா ச…
-
- 0 replies
- 1.1k views
-
-
-
தொலைக்காட்சி, இணையம், கணினி விளையாட்டு : மாணவர்களின் தேர்ச்சி விகிதம் பாதிப்பதாக ஆய்வு ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் கூடுதலாக தொலைக்காட்சியில் அல்லது இணையத்தில் நேரத்தை செலவிடுதல் அல்லது கணினி விளையாட்டுக்களில் ஈடுபடுதல் மாணவர்களின் தேர்ச்சி முடிவுகளை பாதிப்பதாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வு கூறுகின்றது. ஆய்வு முடிவுகளின் படி, தினசரி ஒரு மணி நேரம் கூடுதலாக கணினி அல்லது தொலைக்காட்சித் திரைகளை பார்க்கும் மாணவர்கள் அவர்களது தேர்வுகளில் குறைவான புள்ளிகள் பெறுவதாக அந்த ஆய்வு கூறுகிறது. ஒரு மணி நேரம் படிப்பு தொடர்பான வீட்டுவேலை (ஹோம்வேர்க்) அல்லது வாசித்தலில் ஈடுபட்ட மாணவர்களின் தேர்ச்சி அதை செய்யாத அவர்களது சக மாணவர்களின் தேர்ச்சியைவிட அதிகமாக இருக்கின்றது. விளையாட்டு போன்…
-
- 0 replies
- 283 views
-
-
கோவையில் எம்.பி.ஏ. படித்துவிட்டு, சர்வதேச நிறுவனத்தில் மனித வள மேம்பாட்டு அதிகாரியாக பணியாற்றிய பட்டதாரி ஒருவர் மாநகராட்சி துப்புரவு பணியாளராக பணியில் சேர்ந்துள்ளார். கோவை மாநகராட்சியில் 549 நிரந்தர துப்புரவு பணியாளர் காலி பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடந்தது. தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதும் என அறிவிக்கப்பட்ட நிலையில் பி.இ., எம்.எஸ்.சி., எம்.பி.ஏ., பட்டதாரிகள் உட்பட 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். நேர்காணல் நடத்தப்பட்டு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் சமீபத்தில் 321 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இதில் பணி நியமனம் பெற்ற பட்டதாரிகளில், எம்.பி.ஏ. படித்த சையத் முக்தார் அகமது என்பவரும் ஒருவர். கோவையை சேர்ந்த இவர் ஹைதராபாத்தில் எம…
-
- 0 replies
- 549 views
-
-
"Happy Birthday" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன்படுத்துவோம். நீண்ட நீண்ட காலம் நீ நீடு வாழ வேண்டும் நீண்ட நீண்ட காலம் நீ நீடு வாழ வேண்டும் வானம் தீண்டும் தூரம் வளர்ந்து வாழ வேண்டும் அன்பு வேண்டும் அறிவு வேண்டும் பண்பு வேண்டும் பணிவு வேண்டும் எட்டுத்துக்கும் புகழ வேண்டும் எடுத்துக்காட்டு ஆக வேண்டும் உலகம் பார்க்க உனது பெயரை நிலவுத் தாளில் எழத வேண்டும் சர்க்கரை தமிழள்ளி தாலாட்டு நாள்சொல்லி வாழ்த்துக்கிறோம் ... பிறந்தநாள் வாழ்த்துகள் ... பிறந்தநாள் வாழ்த்துகள் ... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் …
-
- 0 replies
- 673 views
-