சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
ஆண்களின் உலகம் அண்மை காலமாக ஆண்களின் உலகம் மீதான அன்பும், மதிப்பும் கூடிக்கொண்டே இருக்கிறது. 30 வயதில் ஒரு தியாகியைப் போல குடும்பப் பொறுப்புகள் சுமந்து திரிபவர்களின் முகங்களும், தன்னிடம் இருக்கும் கடைசி சில்லறைக் காசு வரை உடனிருக்கும் நண்பர்களுக்காய் செலவிடும் மனங்களும், ஜவ்வாது மலையின் பழங்குடி சிறுமி படிக்கவியலாமல் போனதற்காய் தி.நகர் பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் கண்ணீர் விட்ட தோழனுமாய்… அன்பு நிறைந்த ஆண்கள் நிறையப்பேரை சமீபமாய் காண்கிறேன்! எழுத்தில், திரையில், பொதுவில்… ஆண்கள் என்றால் பொறுப்பற்ற பொறுக்கிகள் என்ற சித்திரம் பின்னப்பட்டிருக்கிறது. இது முழு பொய் இல்லை, முழு உண்மையும் இல்லை. முப்பதைக் கடந்த வயதில்… தங்கையின் திருமணம், அக்காவின் பேறுகாலம் என நில்ல…
-
- 0 replies
- 1.5k views
-
-
வடக்கு ஆப்ரிக்க நாடான துனிசியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து, ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். துனிஷ் பகுதியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுபவர்களை தண்டிக்கும் சட்டங்களை மேலும் வலிமையாக்க வேண்டும் , குடும்ப சொத்தில் சம உரிமை அளிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டம் நடைபெற்றது. இதில் போராட்டக்காரர்கள் துடப்பம் மற்றும் சமையல் பாத்திரங்களை கையில் ஏந்தியவாறும், கோமாளிகள் போன்று வண்ணபொடிகளை பூசிகொண்டு முழக்கங்களை எழுப்பியவாறும் சாலையில் பேரணியாக சென்றனர். https://www.polimernews.com/dnews/91068/பெண்களுக்கு-எதிரானவன்முறைகளை-கண்டித்துதுடப்பம்,-சமையல்பாத்திரங்களை-கையில்ஏந்தியவாறு-பேரணி
-
- 0 replies
- 422 views
-
-
பெற்றோர் எனும் உயர் பதவி -செல்வி.டிலக்சனி.மோகராசா 26 Views குழந்தைகளை உடல் நலத்துடன் வளர்ப்பதுடன், உளநலத்தை ஊட்டி வளருங்கள். அவர்களின் எதிர்கால உலகம் அழகாகத் தெரியும். “எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே; பின் நல்லவராவதும் தீயவராவதும்…” “தூக்க மருந்தினை போன்றவை பெற்றோர் போற்றும் புகழ் உரைகள்…” ஆகவே இன்றைய இளைஞர்கள் “சிகரட் குடிக்கிறான், தெருவில் நிற்கிறான், குடிக்கின்றான், ஒரே நண்பர்களுடன் திரியுறான், அதிகமாக Phone பாவிக்கின்றான், Game விளையாடுறான்” என நிதம் வசை பாடுகின்றோம். இவை எல்லாவற்றையும் நாம் பிள்ளைகளின் பிழையென கூறுகிறோம். ஆனால் உண்மையில் ஒரு பிள்ளையின் நடத்தையை பெற்றோரின் வ…
-
- 0 replies
- 491 views
-
-
ஜூன் மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரை வெளியான தென்னிந்திய தமிழ்த் திரைப்படங்களில் சிறுவர்களை மதுசாரம் மற்றும் சிகரட் உட்பட ஏனைய போதைப் பொருள் பாவனைக்கு தூண்டும் வகையில் ஏமாற்றியிருக்கும் விதம் தொடர்பில் மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் ஆய்வறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. கடந்த புதன்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு நடத்திய விசேட ஊடகவியலாளர் மாநாட்டின் போதே இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. இந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; குறிப்பிட்ட காலப்பகுதியில் வெளியான திரைப்படங்களின் மொத்த நேரம் 2349 நிமிடங்கள். 18 படங்களிலும் மொத்தமாக சிகரட் மற்றும் மதுசார வகைகளை விளம்படுத்திய நேரம் 144.24 நிமிடங்கள். இந்த நேர அளவானது ஒரு தன…
-
- 0 replies
- 318 views
-
-
மதுரை மாவட்டம் தென்னமநல்லூர் கிராமத்தில் உள்ள எங்கள் குலதெய்வம் கோவிலில் எங்களது திருமணம் எளிமையான முறையில் இனிதே நடைபெற்றது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். (அநீதிக்கு எதிரான எங்கள் போராட்டத்துக்கு பல்வேறு வகையில் ஒத்துழைப்பும் ஆதரவும் அளித்துவரும் அனைவருக்கும் மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.நேற்று இரவு சிறையில் இருந்து பிணையில் விடுவிக்கப்பட்டோம்) -நந்தினி ஆனந்தன்-குணா ஜோதிபாசு..
-
- 0 replies
- 1.7k views
-
-
பால் நிலை பாகுபாட்டில் சமூக விடுதலை கிடைக்காமல் பெண்களுக்கு நாட்டில் அரசியல் விடுதலை கிடைத்துவிடப் போவதில்லை-நிலவன். September 15, 2019 உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு பாலினம் இருக்கிறது. தனிமனிதனுக்கு தன்னுடைய பாலினத்தை தேர்வு செய்ய உரிமை உள்ளது, தனி நபரின் அந்தரங்க வாழ்கையில் தலையிட எந்த நபருக்கும் , அரசுக்கும் உரிமையில்லை. மனித இனம் என்பதற்கு அப்பால் பால் நிலை பாகுபாடு இனம் தோன்றிய காலத்திலிருந்தே தோற்றம் பெற்றிருக்கிறது . உலகளவில் பரவலாக பேசப்படும் ஆண், பெண் சமவுரிமை என்ற பாகுபாடு இனம் தோன்றிய காலத்திலிருந்தே பார்க்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கென்ற பண்புகள், குணாதிசயங்கள் இருபாலாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவையாகவே நடைமுற…
-
- 0 replies
- 479 views
-
-
தற்கொலை செய்துகொண்ட சிறுமியின் கதை இலங்கையில் கடந்த வாரம் (05.02.2014) Facebook கின் காரணமாக தற்கொலை செய்துகொண்டாள் எனச் சொல்லப்பட்டு வரும் சிறுமி வெனுஷா இமந்தியின் புகைப்படங்கள் இவை. Facebook கின் காரணமாகத்தான் தற்கொலை செய்து கொண்டாளா என்பதனை, உண்மையில் என்ன நடந்ததென்பதை வைத்து நீங்களே தீர்மானியுங்கள். 10 ஆம் வகுப்பில் கல்வி கற்றுவந்த வெனுஷா இமந்தியின் Facebook கணக்கின் Wall இல், அவரது நண்பனாக இணைந்துகொண்ட ஒருவன், காதல் ஜோடியொன்றின் புகைப்படத்தை Tag செய்துவிடுகிறான். அதனை வெனுஷாவின் பாடசாலை ஆசிரியை ஒருவர் கண்டு, அதிபரிடம் போய் முறையிடுகிறார். அதிபர், 5000 மாணவர்கள், ஆசிரியர்கள் முன்னிலையில் அந்தச் சிறுமியை மேடைக்கு அழைத்து 'வேசி' எனத் திட்டுகிறார். மற…
-
- 0 replies
- 1.2k views
-
-
-
உறுப்பு தானம் செய்த ஆர். லோகநாதனின் தாயார் ராஜலட்சுமியை கௌரவிக்கும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா. உலக அளவில், உறுப்பு தானத்தில் முதலிடம் வகிக்கும் நாடு ஸ்பெயின் ஒரு வருடத்தில் நம் நாட்டில் மாற்று உறுப்பு கிடைக் காமல் இறப்பவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? வருடத்துக்குச் சுமார் 5 லட்சம் பேர் என்கிறது சமீபத்திய ஆய்வு. வருஷத்துக்குக் கல்லீரல் கிடைக்காமல் இறப்பவர்கள் 2 லட்சம் பேர். இதயம் கிடைக் காமல் இறப்பவர்கள் 50 ஆயிரம் பேர். இது தவிர, உறுப்பு கள் முழுச் செயல்பாட்டில் இல்லாமல் போராடுபவர்களும் ஏராளமானோர் இருக்கிறார்கள். கார்னியா கிடைக்காமல் 10 லட்சம் பேர் பார்வை இல்லாமல் அவதிப்படுகிறார்கள். வருடத்துக்கு 5 லட்சம் பேருக்கு மாற்றுச் …
-
- 0 replies
- 1.4k views
-
-
“தூக்க விவாகரத்து” உங்கள் உறவைப் பாதுகாக்கட்டும் February 20, 2021 — சீவகன் பூபாலரட்ணம் — இந்தக் கட்டுரையை ஆரம்பிப்பதே எனக்கு கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது. பிபிசி ஆங்கிலம் மற்றும் குட்ஹவுஸ்கீப்பிங்.கொம் ஆகிய ஊடகங்களை தழுவி இந்த கட்டுரையை எழுதுகிறேன். ஆனால், இதில் முக்கியமாக விவாதிக்கப்படும் “sleep divorce” என்னும் சொல்லுக்கு என்ன தமிழ் சொல்லை பயன்படுத்துவது என்பதுதான் எனக்கு சிக்கலாகியது. அதாவது இதனை தூக்க விவாகரத்து, நித்திரை விவாகரத்து என்று சொல்லலாம் என்று முடிவு செய்தேன். ஆனால், இதற்கு சரியான விளக்கத்தை தரக்கூடிய ஏதாவது வேறு தமிழ் சொல் இருந்தால் யாரும் பரிந்துரைக்கலாம். இப்போதைக்கு இந்தக் கட்டுரையில்“தூக்க விவாகரத்து” என்ற சொற்தொடரை ந…
-
- 0 replies
- 749 views
-
-
தமிழ்நாட்டில் தீபாவளி உருவான வரலாறு! -இலக்குவனார் திருவள்ளுவன் தீபாவளி கொண்டாட்டத்திற்கான சுவையான கதைகள் என்னென்ன? இதன் தொடக்கம், காரணம், நோக்கங்கள் யாவற்றையும் அறிந்தால் பல புதிர்கள் விடுபடும். வரலாறு, இலக்கியம் சார்ந்து இந்தக் கட்டுரை சொல்லும் நுட்பமான அரிய தகவல்கள் தீபாவளியின் வரலாறு குறித்த ஒரு புரிதலைத் தருகிறது; விசய நகரப் பேரரசு தமிழ்நாட்டில் கி.பி. 15ஆம் நூற்றாண்டு நுழைந்தது. அப்பொழுது முதல் தான் தீபாவளி இங்கே கொண்டாடப்படுகிறது. அவ்வாறு தமிழகத்திற்கு வந்த தீபாவளி. நேரடியாக இல்லாமல் இருக்கின்ற விழாவை மாற்றி அமைக்கும் வகையில் புகுந்தது. பரதகண்டம் முழுவதும் இருந்த கார்த்திகை நாளே தீபாவளியாக மாறியுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்க…
-
- 0 replies
- 1.2k views
-
-
குஜராத் மாநிலத்தின் சூரத் நகரத்தில் உள்ள வைர நகை வியாபாரி ஒருவர் தன்னிடம் பணியாற்றும் ஊழியர்களுக்கு கார், வீடு மற்றும் நகை ஆகியவற்றை தீபாவளி போனஸாக அள்ளிக் கொடுத்திருக்கிறார். சூரத் நகரத்தில் வசிப்பவர் சவ்ஜி தோலாக்கியா. குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தைச் சேர்ந்த இவர் 70களில் வேலைதேடி சூரத்துக்கு வந்தார். அங்கு தன் உறவினர் ஒருவரிடம் சென்று வியா பாரம் தொடங்குவதற்குக் கடன் பெற்றார். அதை வைத்துக்கொண்டு அவர் சிறிய அளவில் வைர வியாபாரத்தைத் தொடங்கினார். 1992ம் ஆண்டு ஹரிகிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் எனும் வைர வியாபார நிறுவனத்தைத் தொடங் கினார். கடந்த 20 ஆண்டுகளில் ஓராண்டுக்கு ரூ.6,000 கோடி லாபம் ஈட்டும் நிறுவனமாக அதை மேம்படுத்தினார். தற்போது சூரத், மும்பை மற்றும் வெளிநாடுகளில் இந…
-
- 0 replies
- 677 views
-
-
சட்டங்களும் சம்பிரதாயங்களும் தேவா (ஜெர்மனி) சட்டங்கள் பாராளுமன்றங்களில் விவாதிக்கப்பட்டு, பெரும்பான்மைவாக்குகள் பெற்று அமுல்படுத்தப்படுகின்றன. லஞ்சம் புரளும் நாடுகளில் சட்டம் அமுல்படுத்தப்படுகின்றனவா என்ற கேள்வி ஒரு கேள்விக்குறியாகவே இருக்கிறது. ஐனநாயகநாடுகளில் சட்டங்கள் முறைப்படி செயல்படுத்த முடிகின்றது. மதக்கொள்கைகளை அடிப்படையாக கொண்ட அரசுகள், சமயநூல்களின் எழுதப்பட்டுள்ள முடிபுகளை சட்டங்களாக மாற்றி தீவிரமாக செயல்படுத்துகின்றன. எப்படியோ சட்டங்கள் மக்களுக்கு மேலே ஏற்றப்படுகின்றன. ஐனநாயக நாடாய் இருந்தாலும், சர்வாதிகாரமான நாடாய் இருந்தாலும், சட்டங்கள் நடைமுறைப்படுத்த படுகின்றன. ஒரு அரசு வாழ்வதற்கு அதனுடைய முதுகெலும்பாய் சட்டங்கள் தேவைப்படுகின்றன. மக்களுக்கு மேல் …
-
- 0 replies
- 800 views
-
-
பெண் ஒடுக்குமுறையின் ஒரு வரலாறு ஆண்களைப்போன்றே பெண்களும் பல வர்க்கங்களினால் பிளவுபட்டு வாழ்கின்றனர். ஒவ்வொரு வர்க்கப் பெண்களுக்கும் தமது வர்க்கத்திற்குரிய தனித்துவமான பிரச்சினைகள் உண்டு. நம்முள் பெரும்பான்மையினரால் விளங்கப்படும் பெண்ணிலைவாதமோ பால்ரீதியான பிரச்சினைகளையே தனது மையக்கருத்தாகக் கொண்டுள்ளது. இதன் விளைவாக, பெண்களை (அ) வர்க்கங்களாக (ஆ) வர்க்க நிலைப்பாடுகளையொட்டி ஸ்தாபனப்படுத்த வேண்டிய அவசியம் உருத்தெரியாமல் மழுங்கடிக்கப்படுகின்றது. இதுவும் காரணமில்லாமலன்று. தமது வர்க்க நலன்களைக் காப்பாற்ற விழையும் புத்திஜீவிகளின் வெளிப்பாடுகள் தாம் இவை. தற்போது, அபிவிருத்தியடைந்துவரும் முதலாளித்துவ நாடுகளிலிருந்து வெளிவரும் கருத்துகளும் இப்போக்கிற்கு தூபம் போடுவனவாகவே இருக…
-
- 0 replies
- 1.1k views
-
-
தோடுடைய செவியர்காள்! உங்கள் இலட்சியம்தான் என்ன? நாளுக்கு நாள் எங்கள் கலாசாரக் கோலங்கள் மாறிவருகின்றன. வெளிநாட்டு கலாசாரம் என்பதற்கு அப்பால் தென்னிலங்கையின் தாக்கமும் எங்கள் மீது மோதிக் கொள்வதை உணர முடியும். எதுவாயினும் எங்கள் தமிழினம் ஒன்று தான் தனது உயர்ந்த கலாசாரத்தை மிக எளிதாக மறந்துவிடக் கூடியது என்பது நிரூபணமாகி விட்டது. எங்கள் இளைஞர்களில் பெரும்பாலானவர்களின் ஆடை அலங்காரங்களை நினைக்கும் போது இலவசக் கல்வியின் பயன்பாடு தமிழர்களுக்கு பெரிதாக இல்லை என்று நினைக்கும் அளவிற்கு நிலைமை உள்ளது. ஒரு இனத்தின் எதிர்காலம் என்பது அந்த இனத்தின் இளம் சமூகத்தின் கையில் உள்ளது என்பது பொதுவான முடிபு. இந்த முடிபு சரியானது என நாம் நினைத்திருந்த காலமும் இருந்தது. ஆனால் அந்த …
-
- 0 replies
- 880 views
-
-
வணக்கம்! நான் தான் முத்தண்ணாவின் வீட்டு முற்றத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் மாமரம், முற்றத்து மாமரம். முத்தண்ணா, முத்து என்பது அவரது பெயர், பெயருக்கு ஏற்றவாறு ஒரு முத்தான மனிதர் என்று அவரது உறவினர்களும் நண்பர்களும் எனது நிழலில் இளைப்பாறிக் கொண்டிருக்கும் போது பல தடவைகள் கூறியிருக்கிறார்கள். முத்து என்றால் என்னவென்று எனக்குத் தெரியாது. ஆனால், கிடைபதற்கு அரிதான ஒன்று என்பது மட்டும் தெரியும். காரணம், ஒருநாள் முத்தக்கா, முத்தண்ணாவின் மனைவி ராணி, முத்தண்ணாவைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் ‘முத்தக்கா’ என்றுதான் அழைப்பார்கள், முற்றத்தில் அமர்ந்து வானொலிப் பெட்டியில் பாட்டுக் கேட்டுக்கொண்டிருந்த போது ‘ஆழ்கடலில் முத்தெடுத்து’ என்ற பாடலைக் கேட்டவுடன் ‘இஞ்சேருங்கோ’ என்று முத்தண்ணா…
-
- 0 replies
- 885 views
-
-
இலங்கையின் மேல்மாகாணத்தில் இருந்து, சில குடும்பங்கள் ஒன்றாக வானில், தல யாத்திரை கிளம்பி போயிருக்கிறார்கள். நீண்ட தூர பயணம், வெயில் வேற வாட்டி எடுக்க, வழியில் ரோட்டு ஓரமாக ஒரு சிறிய கடை ஒன்றில் பொருட்கள் வாங்க நிறுத்தி இருக்கிறார்கள். அந்த யாத்திரைக் கூட்டத்தில், ஒரு இளைஞர்.... வாலிப வயது....மன்மதன்... கடையில், அப்பா, அம்மா ... அவர்களுக்கு உதவியாக ஒரு அழகான இளம் சிட்டு. ஓடி, ஓடி தேநீர் போடுவதிலும், சிறு பலகாரங்கள் செய்வதிலும் அம்மாவுக்கு, மிகவும் ஒத்தாசையாக இருந்தார். எல்லோருக்கும் பிடித்து விட்டது... அழகிய சிட்டு என்றால் சும்மாவா? முதல் பார்வையிலேயே காதல் கொண்ட, நமது மன்மதன், யாரும் அறியாத வகையில், தனது பெயர், முகவரி, போன் நம்பரை, சீட்டில் எழுத…
-
- 0 replies
- 1.3k views
-
-
-
- 0 replies
- 641 views
-
-
நண்பன் சொன்ன காதல் கதைகளை நம்பி, ஒரு தலையாக காதலித்த பெண்ணை கடத்திவர சேலத்தில் இருந்து நாமக்கல்லுக்கு சேர் ஆட்டோவில் சென்ற நாடக காதல் கும்பலை சேர்ந்த கூட்டாளியை பிடித்து பொதுமக்கள் நையப்புடைத்தனர். மனம் கொத்திப்பறவை சினிமாவில் நாயகனின் ஒரு தலை காதலுக்கு உதவி செய்ய போன கூட்டாளிகளை பெண்ணின் உறவினர்கள் நையப்புடைப்பார்கள்..! இதே பாணியிலான ஒரு சம்பவம் நாமக்கல்லில் அரங்கேறி உள்ளது. நாமக்கல் அடுத்த தூசூரை சேர்ந்த இளம் பெண் ஒருவர் நாமக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள ஜவுளிக்கடையில் பணிபுரிந்துவருகிறார். இவர் வாரம் ஒருமுறை சேலம் அம்மா பேட்டையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று வந்துள்ளார். அங்கு பக்கத்து வீட்டில் வசித்து வரும் பூவராகவன் என்ற ஷேர் ஆட்டோ ஓட்டுனர் அந்த …
-
- 0 replies
- 407 views
-
-
ஆஸ்திரேலியாவில் மிகுந்த அடிமைத்தனத்தில் பெண்கள் - ஐ.நா. அறிக்கை. உலகளவில் கட்டாய உழைப்பு, கட்டாய திருமணம், கடனுக்கான கொத்தடிமை உள்ளிட்ட நவீன அடிமைத்தனத்தில் 2.9 கோடி பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என ‘Stacked Odds’ என்ற ஐ.நா.வின் புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘Stacked Odds’ எனும் இந்த அறிக்கை ஐ.நா.வின் அங்க அமைப்புகளான சர்வதேச தொழிலாளர் அமைப்பு, புலம்பெயர்வோருக்கான சர்வதேச அமைப்பு, மற்றும் Walk Free ஆகிய அமைப்புகளின் கூட்டுழைப்பில் வெளியாகியுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில், சராசரியாக 130 பெண்களில் ஒரு பெண் நவீன அடிமைத்தனத்தில் சிக்கியுள்ளதாகவும் இவ்வாறான சிக்கியுள்ள மொத்த பெண்களின் எண்ணிக்கை ஆஸ்திரேலிய மக்கள் தொகையைக் காட்டிலும் கூடுதலான…
-
- 0 replies
- 475 views
-
-
தன்னம்பிக்கையே மிகப்பெரிய சொத்து யாழ் கனகரத்தினம் மகாவித்தியாலய முன்னாள் மாணவி தர்மினி அவர்களின் செவ்வி.
-
- 0 replies
- 435 views
-
-
பர்சனாலிட்டி டெவலப்மென்ட் என்றால் தோற்றம் சம்பந்தப் பட்டது என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். சிலர், “நல்லா பேசத் தெரிஞ்சா, இடத்துக்கு ஏத்த மாதிரி நடந்துக்க தெரிஞ்சா போதும், சூப்பர் பர்சனலாட்டி ஆகிட லாம்” என்று நம்புகிறார்கள். “நான் சொல்லிகிட்டே இருக் கேன். நீ வேறு எங்கோயோ பார்த்து கிட்டு இருக்கிறாய். நான் சொ ல்றத நீ கேட்கறியா! இல்லையா!” ‘சொல்புத்தி வேண்டும் இல்லையென்றால் சுயபுத்தி வேண்டும். இவை இரண்டும் இல்லையென்றால், வாழ்க்கையில் முன்னேற முடியாது..’ இப்படிப்பட்ட விமர்சனங்களெல் லாம் ஒருவரைப்பார்த்து மற்ற வர் சொல்கிறார் என்றால் கேட்ப வர் கவனக்குறைவு உள்ளவர் என்று அர்த்தம் கொள்ளலாம். இந்தச் சூழல்களை மாற்றி ‘பெர்ச னாலிட்டி’யை வளர்த்துக் கொள் வது தற்கான எளிய வழி முறை கள் …
-
- 0 replies
- 2.5k views
-
-
இன்றைய பெற்றோர்களுக்கு தேவையான பதிவு. நாமும் இதைச் செய்கிறோமா?
-
- 0 replies
- 396 views
-
-
வன்முறையை அறிதல்: காட்சியும் கருத்தியலும் மனித உணர்வுகள், செயல்பாடுகள், உள்ளழுத்தங்கள் என்பவற்றில் மிக வலிமையானது வன்முறை, மற்ற உணர்ச்சிகளையும் வெளிப்பாடுகளையும் தன் அழுத்தத்தின் வழியாக உருமாற்றவும் நிலைமாற்றவும் கூடிய ஆற்றல் உடையது இது. வன்முறையைப் பொது வடிவில் வரையறை செய்யவோ அளவிட்டுக் காட்டவோ தேவையில்லை என்றாலும் வன்முறையின் வகைமைகளை அதன் உருவ வேறுபாடுகளை அடையாளப்படுத்திக் கொண்டு பிறகு கலை-இலக்கியங்களில் அதன் இடம் மற்றும் வடிவம் பற்றிப் பேசுவது இலகுவாக இருக்கும். மனித உள்ளுணர்வுகள், அடிப்படை உணர்ச்சி நிலைகள் மற்றும் உணர்வு வழியான வெளிப்பாடுகளை நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்ற எட்டு மெய்ப்பாடுகளாகப் பகுத்து அறிந்தாலும் (தொல்…
-
- 0 replies
- 1k views
-
-
தன்முதலில் முத்து நெடுமாறனைச் சந்திக்க வேண்டும் என்ற உந்துதலை உண்டாக்கியது மூத்த பத்திரிகையாளர் மாலன் எழுதியிருந்த ஒரு கட்டுரை. ‘முரசு அஞ்சல்: தமிழின் பெருமிதம்’ எனும் அந்தக் கட்டுரையில், “தினமும் கணினியில் என் பணிகளைத் தொடங்கும்போது நான் மானசீகமாக நன்றி செலுத்தும் ஒரு நபர் முத்து நெடுமாறன்” என்று குறிப்பிட்டிருந்தார் மாலன். புதிதாக வந்திருக்கும் ‘ஐபோன் 6’-ல் தமிழில் தட்டுவது நமக்கு இன்றைக்கெல்லாம் சர்வ சாதாரணமாக இருக்கிறது. ஆனால், 30 வருடங்களுக்கு முன் கணினிக்குள் தமிழைக் கொண்டுவரும் கனவு சாத்தியமாவது அத்தனை எளிதாக நடக்கவில்லை. உலகின் வெவ்வேறு மூலைகளில் இருந்த, விரல் விட்டு எண்ணிவிடக் கூடிய எண்ணிக்கையிலான தமிழ் இளைஞர்கள் சிலர் அதற்கான முயற்சியில் இறங்கியிருந்தனர். அர்ப்…
-
- 0 replies
- 1.2k views
-