சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
உங்களது பிள்ளைகளுக்கு இணையத் தொடர்பினோடு கணனியை வாங்கிக் கொடுத்தாயிற்று, இனி பல்வேறு தகவல்களை அவர்கள் அதனூடாகப் பெற்று அறிவார்ந்தவர்களாக மாறுவார்கள் என நினைக்கும் பெற்றோரா. இணையப் பாவனைக் குறித்தும் அதன் நன்மை தீமைகள் குறித்தும் உங்களுக்குப் போதிய அறிவு இருக்கின்றதா ? அவற்றை உங்களது குழந்தைகளோடு பேசி விட்டீர்களா? அதே போல இன்று பெருமளவு சிறுவர்கள் பேஸ்புக் பயன்படுத்துவது வெகு இயல்பாகி விட்டது. அதனால் அவர்களுக்கு ஏற்படப் போகும் பாதிப்பினை எப்படி நல்ல பெற்றோராக நீங்கள் தடுக்கப் போகின்றீர்கள். பேஸ்புக் பயன்படுத்தப்படும் குழந்தைகளுக்கு ஏற்பட்டு வரும் பேஸ்புக் மன அழுத்தம் குறித்து குழந்தைகள் மனநல மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். பேஸ்புக் போன்ற தளங்களைப் பயன்படுத்தும் க…
-
- 0 replies
- 3.1k views
-
-
மறுமணம் என்பது பெண்களிற்கு ஏன் கானல் நீர்.....? திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்கிறது பழமொழி. அந்த திருமணபந்தத்தில் இணைந்து விட்ட இரு உடல்கள் விதி வசத்தால் இளவயதிலேயே உயிர் பறிக்கப்படுகிற போது அங்கு சமூக நீதி தடம் மாறிப்போகிறது. கற்பு என்பது பெண்ணிற்கு மட்டுமே என்கின்ற வேத வாக்கு இன்னமும் தூக்கியெறியப் படாததால் பெண் பல இம்சைகளிற்கு ஆளாகிறாள். தனித்தே காலத்தை கடத்துபவளாக செத்து மடிகிறாள். உணர்வுகள் ;சமூகம் என்கின்ற பார்வைகளுள் சின்னாபின்னப்பட்டு பல துன்பங்களிற்கு ஆளாகி செத்து மடிய வேண்டிய ரணம் நிறைந்த வாழ்க்கை. இது சமூகத்தின் ஓர வஞ்சக சிந்தனை. ஆண் மனைவியை இழக்கும் போது அந்த ஆணிற்கு மறு திருமணத்தை செய்ய முண்டியடிக்கும் இந்த சமூகம் பெண்ணின் விடயத்…
-
- 69 replies
- 12.9k views
-
-
"சமூக நீதியானது மக்களை அதிக அளவில் கொன்று குவிப்பதே' என்ற பிரகடனத்துடன் உலக சுகாதார நிறுவனம் செயல்படுகிறது. தனது ஆராய்ச்சி குழுவினுடைய அறிக்கை வழியாக நியாயம் மற்றும் சுகாதார பிரச்சினைகளை அனைவரும் அறியும் வண்ணம் தெரியப்படுத்தி வருகிறது. இந்தியாவின் நிலையை ஆராயும் பொழுது உலக சுகாதார நிறுவனத்தின் குறிப்புகளையும், அறிக்கைகளையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். இப்புவியிலே உள்ள அநீதியான, அதிக அநியாயம் நிறைந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதன் அளவினை கணக்கில் கொண்டு பார்க்கும் பொழுது, இப்புவியில் நடக்கும் எத்தனையோ மனித துன்பங்களுக்கும், கொடூரங்களுக்கும் காரணம் நாம் என்பது உறுதியாகிறது. சுகாதார பணியில் ஈடுபடும் எங்களுக்கு தண்டேகார்கள், டெண்டுல்கர்கள் மற்றும் அர்ஜூன் சென்கு…
-
- 0 replies
- 856 views
-
-
இவ்வுலகிலே சீரும், சிறப்பும் வாய்ந்தவர்கள் யாரென்று கேட்டால், அனைவருமே நம்மைப் பெற்றெடுத்த தாய்மார்களைத்தான் கூறுவோம். தாய்மை என்பது பெண்களுக்கே உரிய தனிச்சிறப்பு. மனித குலத்தின் ஆரம்பக் காலக்கட்டத்தில் சமூகத்தை வழிநடத்தியவர்கள் பெண்கள்தான். அந்த பெண்வழி சமூகத்தில்தான் இன்றைய பெண்கடவுள்கள் தோன்றின. கருவறை முதல் கல்லறை வரை ஒவ்வொரு மனிதரின் வெற்றிக்குப் பின்புலத்திலும் பெண்ணின் பங்கு உண்டு என்பது உலகறிந்த உண்மை. சமூகத்திலே பல்வேறு வகையான வளர்ச்சிப் பணிகளில் ஈடுபட்டு ஒட்டுமொத்த சமுதாய வளர்ச்சிக்கு வித்திடுபவர்கள் பெண்கள் என்பதற்கு எவ்வித ஐயமுமில்லை. இவ்வாறு வளர்ச்சிப் பாதையில் சமுதாயத்தை இட்டுச் செல்லும் பெண்கள் பாதுகாப்போடு நடத்தப்பட வேண்டியது மிகவும் அ…
-
- 0 replies
- 4.9k views
-
-
உலகில் உள்ள உயிர் மூன்டெழுத்து உயிரை இயக்கும் சக்தி மூன்டெழுத்து சக்தியின் வடிவம் அன்னை மூன்டெழுத்து அன்னை காட்டும் அன்பு மூன்டெழுத்து அன்பை உயர்த்தும் அறிவு மூன்டெழுத்து அறிவை வளர்க்கும் பள்ளி மூன்டெழுத்து பள்ளியிற் கற்கும் கல்வி மூன்டெழுத்து கல்வியால் கிடைக்கும் பதவி மூன்டெழுத்து பதவியை சிறப்பிக்கும் இளமை மூன்டெழுத்து இளமை தரும் மணம் மூன்டெழுத்து மணத்தால் இணையும் மனைவி மூன்டெழுத்து மனைவியால் உறவாகும் மழலை மூன்டெழுத்து மழலைக்கு செலவாகும் பணம் மூன்டெழுத்து பணத்தினை தேடும் உடல் மூன்டெழுத்து உடல் சோரும் முதுமை மூன்டெழுத்து முதுமையின் பின் முடிவு மூன்டெழுத்து முடிவின் பின் தேவைப்படும் பெட்டி மூன்டெழுத்து பெட்டியில் அடங்கும் பிணம் மூன்டெழுத்த…
-
- 2 replies
- 1.5k views
-
-
ஒவ்வொரு வெற்றிப் பெற்ற மனிதனுக்கும் ஒரு வலியுள்ள கதையிருக்கிறது. ஒவ்வொரு வலி மிகுந்த கதைக்கும் ஒரு வெற்றிகரமான முடிவிருக்கிறது உறக்கம் தொலைத்த "விழிகளில்" கனவுகளின் மிச்சம்... உள்ளத்திலோ தொலைத்த "நேசம்களின்" எச்சம்..... . முட்டாள்கள் விமரிசனங்களுக்கு பதில் சொல்கிறார்கள், புத்திசாலிகள் வென்று காட்டுகிறார்கள் .நல்ல பொண்ணுங்களுக்கும் டைனோசர்களுக்கும் ஒரே ஒரு ஒற்றுமை. ரெண்டுமே இப்ப உலகத்தில இல்லை. காதலித்து பார் உன் கையெழுத்து அழகாகும் "..! -வைரமுத்து . "காதலிப்பதை விட்டு பார் உன் தலைஎழுத்து அழகாகும் "..! -வயிறு எரிஞ்ச முத்து உன்னை நேசிக்கும் பெண்ணை சாகும் வரை மறவாதே... உன்னை மறந்த பெண்ணை வாழும் வரை நினைக்காதே.. காதல் எங்கே பிறந்தது என்று தெர…
-
- 0 replies
- 1k views
-
-
முட்டாள்கள் தினம் வந்தாலே, யாரையாவது முட்டாளாக்க வேண்டும் என்று மனம் துடிக்கும். அதேவேளை யாரும் என்னை முட்டாளாக்கக் கூடாது என்று மகா மகா விழிப்புடன் இருப்போம். தாய்மார்கள் தினம், தந்தையர் தினம், காதலர் தினம், மகளிர் தினம், உழைப்பாளிகள் தினம் என்று இந்த உலகின் மனிதர்களுக்குப் பலவிதமான தினங்கள் இருப்பது போலவே முட்டாள்களுக்கென்று ஒரு தினம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பிரச்சினை என்னவென்றால் மற்றைய விசேட தினங்களில் தமக்குப் பங்கிருப்பதாகக் காட்டிக் கொள்கின்ற மனிதர்களில் எத்தனை பேர் இந்த முட்டாள்கள் தினத்தில் தமக்கும் பங்கிருப்பதாக சொல்லிக் கொள்ள முன்வருவார்கள் என்பதுதான்! அதனால்தானோ என்னவோ தம்மை அடையாளப்படுத்திக் காட்டாமல் பிறரை மட்டும் முட்டாளாக அடையாளப்படுத்திக்…
-
- 0 replies
- 1.3k views
-
-
குழந்தைகளை வெல்லும் ஆயுதம் மா. ஆறுமுககண்ணன் ஓர் ஊரில் ஒரு ராஜா...'' இப்படித் தொடங்கியதும் கதை கேட்பதற்காகக் குழந்தைகள் ஆயத்தமாகிவிடுவர். அவர்களின் கண்களில் உற்சாகம் கரைபுரண்டோடும். அது ஒரு காலம். இன்றும் அவர்கள் விதவிதமான கதைகள் கேட்பதற்காகத் தயாராகவே இருக்கிறார்கள். ஆனால் கதை சொல்வதற்குத்தான் ஆள்களைக் காணோம். கதைகள் கேட்டு வளரும் குழந்தைகளின் கற்பனை உணர்வு, செயல் திறன் அதிகரிக்கிறது. கதைகளால் அவர்களின் மனதில் தன்னம்பிக்கை, நேர்மை, ஒழுக்கம், அன்பு, சத்தியம் போன்ற நற்பண்புகள் ஆழமாக வேரூன்றுகின்றன. வெறும் ஏட்டுக் கல்வியால் ஆவியாகிப்போகும் குழந்தைகளின் மனம் என்ற நீர்நிலையில், கதைகள் என்ற மேகங்கள் கனமழை பொழிந்து மகிழ்ச்சி அலைகளைப் பரவச் செய்கின்றன.…
-
- 0 replies
- 905 views
-
-
எமது மக்களிடையே தாயகத்திலும் சரி இங்கும் சரி எதெற்கெடுத்தாலும் <நாங்கள் பிஸியாக இருக்கின்றோம்> என்று கூறிக்கொள்கின்ற வியாதியை காணக்கூடியதாக இருக்கின்றது.தாயகத்தில் இதன் வீச்சு கொஞ்சம் தூக்கலாகவே இருக்கின்றது.அவர்களுடன கதைக்கும் பொழுது மிகவும் எரிச்சலாக இருக்கின்றது.நாம் வாழ்கையில் அன்றாடம் செய்ய வேண்டய கடமைகளை இவர்கள் ஏன் ஊதிப்பெரிதாக்குகின்றார்கள்?இது ஒரு ஆரோக்கியமான போக்காக உங்ளுக்குத் தெரிகின்றதா? அல்லது எனது தப்பான புரிதலா? உங்களடைய கருத்துகளை எதிர்பாக்கின்றேன்?.
-
- 11 replies
- 2.2k views
-
-
அரசியல் என்பது ஆண்கள் கோலேச்சும் துறைதான், பெண்களுக்கு அங்கே இடமில்லை என்று பொழுது போக்கு பெண்ணியவாதிகள் சிலர் அவ்வப்போது சலித்துக் கொள்வார்கள். இந்த சலிப்பினாலேயே சோனியா, ஜெயா, குஷ்பு, புவனேஸ்வரி, கனிமொழி போன்ற பெண் தலைவர்களின் அரசியல் வெற்றியை ஆரவாரத்துடன் வரவேற்பார்கள். இந்த பெண் தலைவர்கள் மீது அரசியல் ரீதியான விமரிசனங்கள் இருந்தாலும் ஆணாதிக்கம் மிகுந்த அரசியலில் இவர்கள் பெற்ற வெற்றியை சிலாகிப்பார்கள். முதலில் எந்த ஒரு துறையையும் அதில் ஆதிக்கம் செலுத்தும் சக்திகளையும் இப்படி ஆண், பெண் என்று பாலின வேறுபாட்டால் எளிமையாக பிரிப்பது அபத்தம். இந்த உலகில் அரசியல், பொருளாதாரம், சமூகம் அனைத்தும் பாலின வேறுபாட்டை அடிப்படையாக வைத்து மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை. செயல்படுவ…
-
- 0 replies
- 1.8k views
-
-
கடந்த இரண்டு தசாப்தங்களாக இங்கு புலம்பெயர்ந்த திருமணமான தம்பதிகள் மத்தியில் குழந்தை பேறு தள்ளிப்போதல் அல்லது குழந்தைப் பேற்றிக்கான வாய்புகள் குறைவடைந்து போதல் பாரிய உளவியல் சமூக பிரச்சனகளாக உருவெடுத்துள்ளது. பெரும்பாலும் இந்தப் பிரச்சனைகள் உள்ள தம்பதிகளுக்கு மகப்பேற்று நிபுணர்களால் பெரிதும் சிபார்சு செய்யப்படுவது பரிசோதனைக் குழாய் [(IN VITRO FERTILIZATION ( IVF) ]குழந்தை முறையே ஆகும். முதலில் இந்த தம்பதிகளை பல்வேறு கட்ட பரிசோதனைகழுக்கு உட்படுத்தி இறுதியிலேயே இந்த முறை மகப்பேற்று மருத்துவ நிபுணர்களால் சிபார்சு செய்யப் படுகின்றது.இந்த முறையில் பல நிறைகளும் குறைகளும் காணப்படுகின்றன.நிறைகளாக தம்பதிகள் இரட்டைக் குழந்தைகளாகவோ(TWINS BABY) அல்லது மூன்று குழந்தைகளாகவோ[ (TRIPIL…
-
- 0 replies
- 1.3k views
-
-
பெண்களிடம் கேட்கக் கூடாத 10 விடயங்கள் ! ஆண்களே மறந்து போயும் கேட்காதீர்கள் டேவிட் டி ஏன்ஜலோ என்ற எழுத்தாளர் டேட்டிங் பழக்கமுள்ள ஆண்களுக்கான சில குறிப்புக்களை வெளியிட்டுள்ளார். அதில் பெண்களிடம் கேட்கக் கூடாத 10 விடயங்கள் பற்றி இவர் குறிப்பிட்டுள்ளார். 01. பெண்களிடம் எப்போதுமே முத்தம் ஒன்றைக் கேட்காதீர்கள். முத்தம் கேட்கும் ஆண்களை சிறுவர்களாகவே பெண்கள் நோக்குகின்றனர். இதற்கு அவர்கள் சம்மதித்தாலும் கூட உள்ளூர நல்ல அபிப்பிராயம் ஏற்படாது. 02. உன்னை எங்காவது வெளியில் அழைத்துப் போகவா என்று ஒரு போதும் பெண்களைக் கேட்க வேண்டாம். ஏனெனில் அதை நீங்கள் செய்ய வேண்டும் என்பதுதான் அவர்களின் எதிர்ப்பார்ப்பு. 03. உங்களுடைய வாகனம் பற்றி அல்லது நீங்கள்…
-
- 7 replies
- 3.3k views
-
-
ரகசியம் தற்போது....? எனக்குள் எழுந்த கேள்வியிது...? அணுஆயுதம் அல்லது அணுஆலைகள் என்பன மிகவும் ரகசியமான விடயமாக தற்போதுவரை இருந்தன. அவற்றின் இருப்பும் தன்மைகளும்மிகமிக ரகசியமாக வைக்கப்பட்டிருந்தன. ஆனால் தற்போது ஜப்பானின் பூகம்பத்தின்பின் ஜப்பானின் உலைகள் மாத்திரமன்றி உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளது உலைகளும் பகிரங்கத்துக்கு வந்துவிட்டன. இவை பற்றிய தகவல்கள் எல்லாநாடுகளுக்கும் ஏன் எல்லாவித தனிநபர்களுக்கும் கூட தெரிந்தவிடயமாகிவிட்டது. இதன் விளைவுகள்.....???
-
- 10 replies
- 1.7k views
-
-
இந்த பூமியில் நம் வாழ்க்கை வித்தியாசமான ஒரு விஷயம்தான். ஏதோ ஒரு சில காலத்திற்காக இங்கே வருகிறோம்; எதற்கென்று தெரியாது; சில சமயங்களில் ஏதோ ஒரு (Perceive intuitively or through some inexplicable perceptive powers)உள்ளார்ந்த காரணமாகக் கூட இருக்கலாம். ஆனாலும் தினசரி வாழ்க்கையில் நமக்குத் தெளிவாகத் தெரிவது ஒன்றுதான்: மனிதன் இருப்பது இன்னொரு மனிதனுக்காக - அதுவும் யாருடைய சிரிப்பிலும் நலத்திலும் நம் மகிழ்ச்சி அடங்கியுள்ளதோ அவர்களுக்காகவே. அல்பேட் ஐன்ஸ்டீன்
-
- 0 replies
- 1.5k views
-
-
திருமணமான பெண்களுக்கு அந்நிய ஆண்கள் மீது ஈர்ப்பு ஏற்படக் காரணம் என்ன....? .திருமணத்திற்கு அப்பாற்பட்ட தகாத உறவு என்பது ஆண்-பெண் மத்தியில் இன்று சகஜமாகி வருகிறது. திருமணமான பெண்களில் சுமார் ஐம்பது சதவிகிதத்தினர் தன் கணவன் அல்லாத வேறு ஆணுடன் உறவு கொள்வதும், அதற்காகத் தம் திருமண வாழ்க்கையையே இழக்கத் தயாராக இருப்பதும் சர்வ சாதாரணமாகி விட்டது. திருமணமான பெண்களுக்குக் கணவன் அல்லாத அந்நிய ஆண்கள் மீது ஈர்ப்பு ஏற்படக் காரணங்கள் என்னென்ன....? * தம்பதியருக்கிடையேயான தாம்பத்திய உறவில் திருப்தியின்மை ஏற்படுவதே இதற்கான முழு முதல் காரணம். தாம்பத்திய உறவில் தன் கணவனால் திருப்தியடைய முடியாத பட்சத்தில் அந்தப் பெண் தனது உணர்ச்சிகளுக்கு வடிகாலாக இன்னொரு ஆணின் உறவை நாடுகிறாள். அத…
-
- 11 replies
- 10.8k views
-
-
மனைவியுடன் பேசுவது எப்படி என்று குறித்து என் சிறிய பார்வை. "ச்சே, என்ன இழவு இது? சாம்பார்ன்ற பேருல ஏதோ பண்ணி வச்சிருக்கே" என்று மனைவியைத் திட்டத் தெரிந்த நீங்கள் என்றாவது அடுக்களையில் அவர்களுக்கு உதவி செய்த அனுபவம் உண்டா? உங்கள் மீது அன்பு இருக்கும் காரணத்தால் எத்தனையோ தியாகங்களைச் செய்து உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் தன்னையே உருக்கிக் கொள்கிற அந்த ஜீவனுக்கு நீங்கள் உங்கள் தோலையே செருப்பாகத் தைத்துப் போட்டாலும் ஈடாகாது. யோசித்துப் பாருங்கள், யாரோ ஒருவர், உங்கள் நல்லது கெட்டது எதிலும் நாட்டமில்லாதவர் ஆனால் உங்கள் மேனேஜர் என்ற ஒரே காரணத்திற்காக அவர் திட்டும் எல்லா வார்த்தைகளையும் ஜீரணிக்கிற உங்களால் உங்களுக்காக மட்டுமே வாழ்கிற, உங்கள் சுக, துக்கங…
-
- 10 replies
- 3.2k views
-
-
நீங்கள் காதலில் இருப்பவரா அல்லது காதலில் இருந்தவரா? காதலில் இருப்பவர்களின் வாக்கு மூலங்களைக் கேட்கும் போது கொஞ்சம் சிரிப்பாகத் தான் இருக்கு... இதெல்லாம் கொஞ்ச நாளுக்குத் தான், அதுக்குப் பிறகு இந்தப் பக்கம் தான் வரவேணும் என்று சொல்வது காதலால் எவ்வளவு கஷ்டங்களைத் துன்பங்களை அனுபவித்திருப்பார்கள் என்று ஓரளவேனும் மனம் உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது... காதலில் இருப்பவர்களுக்கு அவர்கள் காதல் கைக்கூடி வாழ்கையில் கடைசி வரைக்கும் தொடர வாழ்த்துக்கள்! அதே நேரம் காதலில் இருந்தவர்கள், பழையதையே நினைத்து நினைத்து வாழ்கையில் விரக்தியடைந்து தம்மை அழித்துக் கொள்ளாது, தனிமையில் வாழாது, அவர்களும் தமக்கென ஒரு வாழ்கையை அமைத்துக் கொள்ள வாழ்த்துக்கள்!! http://www.yout…
-
- 0 replies
- 908 views
-
-
பிள்ளைகள் குழந்தைகளாய் இருக்கும் போது, அவர்களைப் பார்த்துக் கொள்வது சுலபமல்ல ; என்றாலும், பசி தூக்கம் பார்த்து கவனித்து விட்டால், விளையாடிக் ö காண்டிருப்பார்கள். ஆனால் குழந்தைகள் வளர வளரத்தான் பிரச்னை ஆரம்பிக்கிறது. பிள்ளைகள் தங்கள் பேச்சைக் கேட்பதில்லை என்று பெற்றோரும், பெற்றோர் தங்களைப் புரிந்து கொள்வதில்லை என்று பிள்ளைகளும் புலம்புகிறார்கள். கரு முதல் இறுதி வரை கூடவே இருக்கும் ஒரே உறவு, இந்தப்பெற்றோர் – பிள்ளை உறவுதானே? அதை பலப்படுத்தும் முயற்சி மிகவும் அவசியம் அல்லவா! * தலைமுறை இடைவெளி என்பது என்ன? புரிந்துகொள்ளுதலில் இடைவெளி என்பது பெற்றோர் பிள்ளைகள் இடையே மட்டும்தான் வருகிறதா? இடைவெளியைக் குறைத்து இந்த உறவுக்குப் பாலம் அமைப்பது எப்படி? தலைமுறை இடைவெளி என்ப…
-
- 0 replies
- 1.1k views
-
-
வலைப்பக்கங்களில் தேடிப் படிக்கிற சில விஷயங்கள், நமக்குக் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களாகவும், வழிகாட்டுவதாகவுமே ஆகிவிடுவதுண்டு. தட்டுங்கள் திறக்கப்படும்! கேளுங்கள் கொடுக்கப்படும் என்று கிறித்தவ வேதாகமம் சொல்வது இணையத்தில் மட்டுமே நூறு சதவிகிதம் சாத்தியம்! ஆம்! நீங்கள், எதைத் தேடுகிறீர்களோ, எதைத் தட்டுகிறீர்களோ அது நிச்சயமாகக் கிடைக்கும் இடம் இந்த இணையம் மட்டும் தான்! டோனி மோர்கன் என்றொரு வலைப் பதிவர்! இவருடைய வலைப் பதிவுகள் பெரும்பாலும் கிறித்தவ சர்ச்சுகளின் நிதி நிர்வாகத்தைப் பற்றியது, கிறித்தவ சர்ச்சுக்களால் ஸ்பான்சர் செய்யப்பட்ட பதிவுகள் என்றாலும் கூட, பதிவுகளில், மனிதவளம், மேலாண்மை, நிர்வாகம் குறித்த சில விஷயங்களைப் பற்றிய கருத்துக்கள் கொஞ்சம் யோசிக்க வைப்பத…
-
- 8 replies
- 2.1k views
-
-
இந்தத் தகவல்களை மீண்டும், மீண்டும் படியுங்கள் வாழ்க்கை வெற்றி பெறும்… 01. அன்டோனியஸ் பயஸ் என்னும் ரோமானிய மன்னன் மரணப்படுக்கையில் இருக்கும்போது வாழ்வின் தத்துவத்தை ஒரேயொரு வார்த்தையில் சொல்லும்படி கேட்டான். அவனுக்கு வாழ்க்கைத் தத்துவம் பற்றிக் கூறப்பட்ட வார்த்தை ஈக்வானிமிடஸ் என்ற ரோமானிய சொல்லாகும். ஈக்வானிமிடஸ் என்றால் : சமத்துவம் ஓர் அமைதியான பொறுமை, வாழ்வின் சோதனைகளை ஏற்றுக் கொண்டு அவற்றுக்கும் மேலாகச் செல்லது என்ற பொருள்தரும். ஆம் வாழ்க்கை என்றால் என்னெவென்று தேடுவோர்க்கு மிக எளிமையான விளக்கமே இதுவாகும். 02. கலங்காதிருக்கும் தன்மை என்றால் என்ன ? எல்லாச் சூழல்களிலும் விழிப்புணர்வுடனும் அமைதியாகவும் இருப்பதுதான். புயல் வரும்போது அமைதி, மரண ஆபத்து வரும்போத…
-
- 4 replies
- 1.9k views
-
-
அண்மை காலமாக ஆண்களின் உலகம் மீதான அன்பும், மதிப்பும் கூடிக்கொண்டே இருக்கிறது. 30 வயதில் ஒரு தியாகியைப் போல குடும்பப் பொறுப்புகள் சுமந்து திரிபவர்களின் முகங்களும், தன்னிடம் இருக்கும் கடைசி சில்லறைக் காசு வரை உடனிருக்கும் நண்பர்களுக்காய் செலவிடும் மனங்களும், ஜவ்வாது மலையின் பழங்குடி சிறுமி படிக்கவியலாமல் போனதற்காய் தி.நகர் பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் கண்ணீர் விட்ட தோழனுமாய்... அன்பு நிறைந்த ஆண்கள் நிறையப்பேரை சமீபமாய் காண்கிறேன்! எழுத்தில், திரையில், பொதுவில்... ஆண்கள் என்றால் பொறுப்பற்ற பொறுக்கிகள் என்ற சித்திரம் பின்னப்பட்டிருக்கிறது. இது முழு பொய் இல்லை, முழு உண்மையும் இல்லை. முப்பதைக் கடந்த வயதில்... தங்கையின் திருமணம், அக்காவின் பேறுகாலம் என நில்லாமல் ஓ…
-
- 0 replies
- 1.7k views
-
-
இது அண்மையில் லண்டனில் நடந்த சம்பவம்.உங்களில் சில பேர் இதைக் கேள்விப்பட்டு இருக்க கூடும். லண்டனைச் சேர்ந்த தமிழ் பெற்றோர் அவர்களுக்கு ஒரு மகனும்,மகளும்.அவர்களுடன் அவர்களது தாத்தாவும் ஒரே வீட்டில் வசிக்கிறார்...அண்மையில் அந்த சிறுமி பதினொரு வயது தான் இருக்கும் பெரிய பிள்ளை ஆகி விட்டார்.பெற்றோர் அச் சிறுமியை அவரது தாத்தாவுடன் விட்டு விட்டு வேலைக்கு சென்று விட்டனர்.அந்த காமகன் 75 வயது கிழவன் அச் சிறுமியை தன் பாலியல் இச்சைக்காக பயன்படுத்தி விட்டான்.இச் சிறுமி பயத்தில் இது பற்றி தனது பெற்றோருக்கு சொல்லவில்லை. இந் நேரத்தில் நான்கு மாதங்களுக்குப் பின் அச் சிறுமிக்கு சாமர்த்திய வீடு செய்ய வெளிக்கிட அக் கிழவன் வெளிக்கிட்டு ஊருக்கு ப…
-
- 57 replies
- 5.3k views
-
-
-
- 28 replies
- 4.4k views
-
-
காதலர் தின சிறப்புக் கட்டுரையும் சிறப்பு கீதை உபதேசமும் 2011-02-13 02:37:11 கீதை சொன்ன கண்ணன் இன்று இருந்திருந்தால் யாழப்பாணக் காதலருக்கு இவ்வாறு சொல்லியிருப்பான் என பலராலும் கூறப்படுகின்றது. காதலர் கீதையுபதேசம் ஓடல் நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது கூடல் நடக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கிறது வயிறு நிறம்பியதோ, அதுவும் நன்றாகவே நிறம்பியது கருவைக் கலைக்கப் போகிறியோ, அதுவும் நன்றாகவே கலைக்கப்படும் உன்னுடைய கற்பை நீ இழந்தாயோ? எதற்காக நீ அழுகிறாய்? உன்னை மட்டுமா இவ்வாறு செய்தான், நீ அழுவதற்கு? நீயும் அவனை மட்டுமா நம்பியிருந்தாய் இவ்வாறு கவலைப்படுவதற்கு நேற்று அவனுக்கு கொடுத்த கடிதத்தை நாளை இன்னொருவனுக்கு கொடு இன்று அவளுடன் இருப்பவன் நா…
-
- 0 replies
- 1.2k views
-
-
கேர்ள் பிரண்ட் என்றால்.. சும்மா வாங்கிக் கொடுக்கிறதை திண்டு கொண்டு.. தான் நினைக்கிற நேரத்துக்கு மட்டும் கோல் பண்ணிக் கொண்டு.. ஏதோ கடமைக்கு நாலு கதை கதைச்சுக் கொண்டு.. கவிதை கதை எழுதிக் கொண்டு.. வாங்கிக் கொடுக்கிற கிப்டை தடவிக் கொண்டு.. இருக்கிறதெல்லாம்.. செம போர். கேர்ள் பிரண்ட் என்றால் நம்மள விட புத்திசாலியா.. திறமைசாலியான.. செயல்வீரியா.. வழிகாட்டியா.. நிரந்தரமான நித்தியமான அன்பு காட்டிறவாவா இருக்கனும். குழந்தைகளை படிப்பிக்கிறதுக்கு ரீச்சரா ஒரு கேர்ள் பிரண்டை எதிர்பார்க்கக் கூடாது. அதில நீங்க சிலர் தப்புப் பண்ணுறீங்க என்று நினைக்கிறன். குழந்தைகளுக்கு தாயாகவும்.. ரீச்சராகவும் அவா இருக்கிறான்னா.. நீங்கள் தந்தையாகவும் அந்த ரீச்சருக்கு associate (not assistant)ஆகவ…
-
- 34 replies
- 4.4k views
-