சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2253 topics in this forum
-
சமீப காலங்களில் உலகின் சமூக வலைத்தளங்களில் எதுவித ஆதாரமும் அற்ற கட்டுக்கதைகள் சகட்டு மேனிக்கு பரப்பப்பட்டு வருகிறது. அதுவும் தமிழ்ச்சூழலில் தமது தேசிய பக்தியை காட்டுவதற்காக இவ்வாறான கட்டுக்கதைகளை வேண்டுமென்றே தெரிந்தே சிலர் பரப்புகின்றனர். ஆராயாமல் பரப்பப்படும் இவ்வாறான வதந்திகளை நம்பி பாமர மக்கள் ஏமாறுகிறார்கள். விஜய் தொலைக்காட்சியில் நடந்த நீயா நானா நிகழ்ச்சியின் இந்த சிறிய காணொலியில் இவர்களின் இந்த புரட்டுக்கள் அம்பலமாவதைக் காணலாம்.
-
- 0 replies
- 495 views
-
-
எச்சரிக்கை... கூகுள் டாக்டர் அல்ல கூகுளில் நம் உடலில் உள்ள உபாதைகளை தேடி என்ன வியாதி என்ன வைத்தியம் என்று அறிந்து கொள்ள முயல்வதும் யூடியூப்பில் வரும் நம் ராசியின் பலாபலன்கள் அனைத்தும் நமக்கு நிகழப்போவதாக நம்பிக்கொள்வது ஒன்று தான். உதாரணமாக... டாக்டர் எனக்கு கண்ணில் கிளக்கோமானு நினைக்கிறேன். ஏன் அப்படி நினைக்கிறீங்க சார்.. தூரத்துல உள்ளது தெரியுது. காலுக்கு பக்கத்துல கீழ உள்ளது தெரியல டாக்டர். கூகுள்ள அப்படி தான் போட்டிருந்தது. இல்லீங்க, நல்லா டெஸ்ட பண்ணிட்டேன் கிளக்கோமா இல்ல. நார்மலா இருக்கீங்க.. இல்ல டாக்டர் கூகுள்ள... சார் உங்க தொப்பை தரையை மறைக்குது சார்...கூகுளுக்கு தெரியுமா உங்க 4xl size தொப்பை பற்றி... இது …
-
- 1 reply
- 493 views
-
-
கட்டுரை தகவல் எழுதியவர்,சுஷீலா சிங் பதவி,பி பி சி நிருபர் 6 மே 2023 "அவள் ஒரு இந்து, நான் ஒரு முஸ்லீம், ஆனால் அது எங்களுக்கு ஒரு பொருட்டில்லை. எங்களிடையிலான அன்பும் அதற்காக எந்த எதிர்ப்பையும் இணைந்து எதிர்கொள்வோம் என்பதும் மட்டும் உறுதி. எங்களின் மதங்கள் எங்களுக்கு ஒரு பொருட்டில்லை” இது மாலதியும் ருபீனாவும் சொல்லும் வார்த்தைகள். (இருவரின் பெயர்களும் மாற்றப்பட்டு அவர்களின் அடையாளங்கள் மறைக்கப்பட்டுள்ளன.) மாலதியும் ருபீனாவும் மேற்கு வங்கத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் இருந்து கொல்கத்தாவுக்கு தப்பிச் சென்றுள்ளனர். இவர்களின் காதல் கதை, அவர்கள் சந்தித்துக்கொண்ட பள்ளியில் தொடங்கியது. இருவரும…
-
- 0 replies
- 492 views
- 1 follower
-
-
சிங்க்கி சின்ஹா பிபிசி நிருபர், புது தில்லி அந்த பெண் மறுத்துவிட்ட போதும், அந்த இளைஞர், திருமணம் செய்து கொள்ளப் போகும் உறவு தானே, இது தவறல்ல என்று சொன்னதாகக் கூறினார். இந்தச் சம்பவத்தை நினைவு கூர்ந்த இளைஞர், அந்தப் பெண்ணைப் பின்னர் திருமணமும் செய்து கொண்டதால் இது அவரைப் பொருத்தவரையில் ஒரு குற்றமில்லை. அந்த விஷயம் அத்துடன் முடிந்ததாகவே உள்ளது அவரது கருத்து. இந்தப் பெண்ணின் திருமணம் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய அதே இளைஞனுடனே நடந்ததுதான் மிகுந்த வேதனைக்குரிய அம்சம் என்று அந்தப் பெண் கூறுகிறார். "இது ஒரு சாதாரண திருமணமாக இருந்திருக்க முடியாது, நான் அப்படி நினைக்கவுமில்லை" என்று அவர் கூறினார். ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, ந…
-
- 0 replies
- 491 views
-
-
அதிகரிக்கும் ஆயுட் காலத்தால் வீதிக்கு துரத்தப்படும் முதியவர்கள் அண்மையில் கொழும்பு வீதியொன்றை கிறிஸ்மஸ் வீதியாக சில நாட்களுக்கு முன்பு மாற்றியிருந்தார்கள். கொழும்பில் உள்ள வர்கள் நத்தார் கொண்டாட்டத்தில் முழுமையாகப் பங்குபற்றட்டும் என்ற உயர்ந்த நோக்ககோடு இவ்வாறு மாற்றப்பட்டது. இது ஒரு செய்தியென்றால் இப்பொழுது சொல்லப்போகும் செய்தி சொந்த வீடின்றி வீதிகளுக்கு விரட்டப்பட்டுள்ள ஒரு சாராருக்கு இந்தக் கிறிஸ்மஸ் மட்டுமல்ல எல்லாமே வீதியில்தான் என்ற அவலநிலை வந்து சேர்ந்திருக்கின்றது. இந்த நத்தார் மட்டுமல்ல வரப்போகும் பொங்கல், ஈஸ்டர், வெசாக், தீபாவளி என்று எல்லாப் பண்டிகைகளுமே இவர்களுக்குத் தெருவில்தான்... …
-
- 0 replies
- 491 views
-
-
உலகளவில், ஆண்களுக்கு ஏறக்குறைய இணையாக பெண்களும் மது அருந்துகிறார்கள்: ஆய்வு மது அருந்தும் விஷயத்தில், உலகில் ஆண்களுக்கு ஏறக்குறைய இணையாக பெண்களும் மது அருந்துவதாக உலக அளவில் மது அருந்தும் பழக்கம் பற்றி நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று காட்டுகிறது. கடந்த 1891ம் ஆண்டிலிருந்து 2001ம் ஆண்டுக்கிடையேயான கால கட்டத்தில் பிறந்த 40 லட்சம் நபர்களை ஆராய்ந்த இந்த ஆய்வு , ஆண்கள்தான் அதிகம் குடித்து, அதன் காரணமாக உடல் நலப் பிரச்சனைகளில் சிக்கிய சாத்தியக்கூறு இருந்ததாகக் காட்டியது. ஆனால் தற்போதைய தலைமுறை இந்த இடைவெளியை ஏறக்குறையக் குறைத்துவிட்டதாக பிரிட்டிஷ் மருத்துவ சஞ்சிகையின் அறிக்கை கூறுகிறது. சமூகத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆற்றும் பங்கு மாறிவருவது , மது அ…
-
- 0 replies
- 491 views
-
-
ஜான்வி மூலே பிபிசி மராத்தி "ஒரு நபர் இடது கை பழக்கமுள்ளவர் என்றால், அவருக்கு ஏதுவாக இல்லாதபோதும், வலது கையைப் பயன்படுத்தும்படி அவரை வற்புறுத்துவீர்களா? அவரால் கட்டாயப்படுத்தப்படுவதை ஏற்றுக் கொண்டு வலது கையை பயன்படுத்த முடியுமா? அதே தர்க்கம் தான் ஓரின ஈர்ப்பாளர்களுக்கும் பொருந்தும்." மும்பையில் வசிக்கும் ஓரின ஈர்ப்பாளரான சுமித் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பாலின மாற்று சிகிச்சை (Conversion therapy) குறித்து பேசுகிறார். அவர் ஓரின ஈர்ப்பு பிரச்சனையை தீர்க்க பாலின மாற்று சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியிருந்தது. "மாற்று பாலின சிகிச்சை" என்ற சொல், ஒரு நபரின் பாலியல் விருப்ப நிலையை (Sexual Orientation) மாற்றும் அல்லது ஒரு நபரின் பாலின அடையாளத்தை (Gende…
-
- 0 replies
- 489 views
-
-
சம்பவத்திலும் ஒரு சம்பாத்தியம். கிளிபோல வளர்த்த ஒரு பெண் கால நேரம் வந்ததும் கோலாகலமாக கல்யாணம் செய்து வைத்தனர் வாழ்வில் முதலடி எடுத்து வைக்கிறாள் கண்ணியமாய் காக்க வேண்டிய கண்வன் காமக் கொடூரன் ஆகிறான். துணைக்கு மாமனார் மாமியார் அவள் பணம் காய்க்கும் மரம் என மீண்டும் மீண்டும் நச்ச்ரிக்கின்றனர் .வீட்டுச்சிறை புறக்கணிப்பது அடக்குமுறை சைக்கோவுடன் வாழ்கை எரிதழலில்வீழ்ந்தபுழுவானாள். "என்னால் முடியலை அப்பா" கார் எடுத்து கோவில் சென்ற பிள்ளை வசதி வாய்ப்பு பணத்துக்குபஞ்சமில்லை ஒரு கண்காணாத இடத்தில யார் கண்ணிலும் படாமல் ஒரு இல்லிடத்தில் வாழ்ந்திருக்கலாம் .சடடத்தை நாடியிருக்கலாம். மேலே படித்து தான் காலில் நிற்க முயன்று இருக்கலாம். பாவம் எல்லோருக்கும் வாழ்க்கை நாம் நினைக்குமாறு நடப்ப தி…
-
- 0 replies
- 489 views
- 1 follower
-
-
திருமணம் செய்யாமலே சேர்ந்து வாழும் பெண்களின் வாழ்க்கை: ருசிகரமான புதிய கருத்துக்கணிப்பு காதல், திருமணம் போன்றவைகளில் பெண்களின் கருத்துக்கள் முந்தைய தலைமுறை போல் இல்லை. முற்றிலும் மாறுபட்ட எண்ணங்கள் அவர்களிடையே உருவாகியிருக்கிறது. அதை வெளிப்படுத்துகிறது இந்த புதிய கருத்துக்கணிப்பு. 18 முதல் 24 வயதுக்கு உட்பட்ட பெண்கள் இதில் கருத்துப் பதிவு செய்திருக்கிறார்கள். ‘நீங்கள் காதல்வசப்பட்டிருந்தால், என்ன ஆனாலும் பரவாயில்லை என்ற தைரியத்தோடு பெற்றோரிடம் காதலை வெளிப்படுத்துவீர்களா?’ என்ற கேள்விக்கு பெண்கள் அளித்திருக்கும் பதில்! எதைப் பற்றியும் கவலைப்படாமல் தைரியமாக காதலை பெற்றோரிடம் வெளிப்படுத்திவிடுவோம் என்று 68 சதவீதத்தினர் தெரிவித்திருக்கிறார்கள். சூழ…
-
- 1 reply
- 489 views
-
-
சாதி உருவாகியது எப்படி ? - சீமான். டாக்டர் எஞ்சினியர் பரம்பரையெல்லாம் ஏன் தங்கடை வட்டத்துக்கையே நிக்கினம் எண்டது இப்பத்தான் விளங்கிச்சு....
-
- 0 replies
- 488 views
-
-
புதிய கல்வி மறுசீரமைப்பிலேனும் மதிப்பீட்டு அணுகுமுறை மாற்றமுறுமா.? - நிர்மலன் கலைத்திட்டத்திலுள்ள கற்றல் இலக்குகளை அடைவதில் மாணவர்கள் எந்தளவு முன்னேற்றம் அடைந்துள்ளார்கள் என்பதனைத் தொடர்ந்து மதிப்பீடு செய்தல் ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி நிர்வாகிகள் போன்றோரின் முக்கிய பணியாகக் கருதப்படுகின்றது. கற்றல் இலக்குகளை மாணவர்கள் அடைந்துள்ளனரா என மதிப்பிடவும், கற்றல் இடர்பாடுகளைக் கண்டறிந்து அதற்கான பரிகார வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தி அனைத்து மாணவர்களும் குறித்த கற்றல் இலக்கை அடையச் செய்வதற்கு மதிப்பீடு இன்றியமையாதது ஆகும். இதுவே மதிப்பீட்டின் பிரதான நோக்கமாகவும் கருதப்படுகின்றது. அத்துடன் பாடசாலைகளில் மாணவர்களின் கல்வித்தரத்துடன் சமூகப் பண்புகள், ஆளுமைகள், ஒழுக்க…
-
- 0 replies
- 487 views
-
-
ஆஸ்திரேலியாவில் மிகுந்த அடிமைத்தனத்தில் பெண்கள் - ஐ.நா. அறிக்கை. உலகளவில் கட்டாய உழைப்பு, கட்டாய திருமணம், கடனுக்கான கொத்தடிமை உள்ளிட்ட நவீன அடிமைத்தனத்தில் 2.9 கோடி பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என ‘Stacked Odds’ என்ற ஐ.நா.வின் புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘Stacked Odds’ எனும் இந்த அறிக்கை ஐ.நா.வின் அங்க அமைப்புகளான சர்வதேச தொழிலாளர் அமைப்பு, புலம்பெயர்வோருக்கான சர்வதேச அமைப்பு, மற்றும் Walk Free ஆகிய அமைப்புகளின் கூட்டுழைப்பில் வெளியாகியுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில், சராசரியாக 130 பெண்களில் ஒரு பெண் நவீன அடிமைத்தனத்தில் சிக்கியுள்ளதாகவும் இவ்வாறான சிக்கியுள்ள மொத்த பெண்களின் எண்ணிக்கை ஆஸ்திரேலிய மக்கள் தொகையைக் காட்டிலும் கூடுதலான…
-
- 0 replies
- 487 views
-
-
குழந்தைகளின் மனிதவளத் திறனை வளர்ப்பது எப்படி? கரோனா தெருந்தொற்றுப் பேரிடர் காலத்தில் இணையவழியிலும் தொலைக்காட்சிகள் வழியாகவும் மாணவர்களுக்கு கல்வி சென்றுசேர்வதற்கு அரசு, பள்ளி, கல்லூரிகள் வழிகளை ஏற்படுத்தியிருக்கின்றன. ஆனால் மாணவர்களின் மனநலனும் பட்டம் பெற்று வெளியேறும் நாளைய பணியாளர்களான இன்றைய மாணவர்களின் மனிதவளத் திறன் குறைவாக இருப்பதை உலக வங்கியின் மனித முதலீட்டுக் குறியீடு (ஹெச்.சி.ஐ.) வெளிப்படுத்தியிருக்கிறது. இந்த ஹெச்.சி.ஐ.-க்கு அடிப்படையாக இருப்பது மனநலம். மாணவர்களின் மனநலன் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததுடன் ஒப்பிடும்போது, பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது கண்டறியப் பட்டுள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்…
-
- 0 replies
- 486 views
-
-
இந்தியாவின் ஆந்திர மாநில கவர்னருக்கு தாய் ஒருவர் ‘மனநலம் குன்றிய தனது மகளை கருணை கொலை செய்ய அனுமதி வழங்க வேண்டும்’ என, கடிதம் எழுதியுள்ள சம்பவம் ஒட்டுமொத்த மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து குறித்து மேலும் தெரியவருகையில், இந்தியாவின் ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த ஸ்வர்னலதா. என்பருக்கு, ஜான்வி எனும் ஒரு மகள் உள்ளார். ஜான்விக்கு 4 வயது முதல் உளவியல் பிரச்சினையும், 8 வயது முதல் ஜினிக் கோளாறும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஜான்வியின் தந்தை உதவியாளராக பணிபுரிந்து வரும் வைத்தியசாலையில் ஜான்விக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 2010 ஆம் ஆண்டு குறித்த வைத்தியசாலையின் உளவியல் துறை புதிய தலைமை வைத்தியராக ராஜ்ய லட்…
-
- 1 reply
- 484 views
-
-
மதுசாரம் எவ்வாறு பெண்களின் உரிமைகளை மீறுகின்றன? மதுசாரம், புகைப்பொருட்கள் மற்றும் போதைப்பொருட்களின் பாவனைகளால் எமது நாடு பல்வேறு வழிகளிலும் பாதிப்படைகின்றது. குறிப்பாக பொருளாதாரம், சுகாதாரம், சமூக சீர்கேடுகள் என பல பிரச்சினைகள் இவற்றினால் ஏற்படுகின்றமைக் குறிப்பிடத்தக்கது. எமது நாட்டில் பெண்களின் மதுசார பாவனை மற்றும் புகைத்தல் பாவனை ஆகியன புறக்கணிக்கத்தக்க சதவீதத்திலேயே காணப்படுகின்றன. ஆகவே பெண்களை பாவனையாளர்களாக மாற்றுவதற்கும் பெண்கள் மத்தியில் மதுசாரத்தையும், புகைப்பொருட்களையும் சாதாரணமாக்க வேண்டும் என்பதற்காகவும் மதுசார நிறுவனங்களும் புகையிலை நிறுவனமும் பல நுணுக்க்களில் முயற்சித்து வருகின்றன. மேலும் பெண்களின் மதுசார பாவனை மிகவும் குறைவான விகிதாசாரத்தில் காணப்பட்டாலும் …
-
- 0 replies
- 482 views
- 1 follower
-
-
மாயக் கட்டம் வா. மணிகண்டன் திருமணம் என்பது மாயக்கட்டம். வெளியில் இருப்பவர்கள் உள்ளே நுழையவும் உள்ளே இருப்பவர்கள் வெளியே சென்றுவிடவும் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றொரு வாசகம் உண்டு. யார் இதைச் சொல்லியிருப்பார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இது என்ன கம்பசூத்திரமா? திருமணம் செய்து கொண்ட பெரும்பாலானவர்கள் சொல்லிவிடுவார்கள். அதுதான் மாயக்கட்டம் அல்லவா? பிறகு ஏன் எல்லோரும் திருமணத்தை வற்புறுத்துகிறார்கள் என்று கேட்கலாம்தான். ஆனால் தனிமனிதர்களை இழுத்துப் பிடிக்கும் மூக்கணாங்கயிறாக இந்த பிணைப்பு இல்லாமல் இருந்தால் மனிதர்களின் பக்குவம், சமூக ஒழுங்கமைவு என்பதெல்லாம் தாறுமாக சிதறிவிடக் கூடும். இல்லையா? தறிகெட்டு ஓடும் மனதை இழுத்துப் பிடிக்க ஒரு ஆள் அ…
-
- 0 replies
- 482 views
-
-
லாக்டௌனில் மொபைலுடனேயே கணவர், வளரும் கசப்பு... நிபுணர் தீர்வு உங்களின் இத்தனை ஆண்டுகால திருமண வாழ்வில், உங்களுக்கு ஏற்பட்ட வருத்தங்களை உங்கள் கணவரிடம் சொல்லியிருக்கிறீர்களா? இல்லையென்றால், அதை இந்த லாக்டெளன் நேரத்தில் செய்யுங்கள். ``நான் 45 வயது இல்லத்தரசி. இந்த லாக்டௌன் முடிவதற்குள் எனக்கும் என் கணவருக்கும் இடையே மிகப் பெரிய இடைவெளி வந்துவிடுமோ, அவர் மேல் இருக்கும் காதல் குறைந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது. நான், என் கணவர் மற்றும் பன்னிரண்டாம் வகுப்புப் படிக்கும் எங்கள் மகன் என மூன்று நபர்களைக் கொண்டது எங்கள் குடும்பம். காலையில் எழுந்ததும் என் மகன் மொபைலை எடுத்துக்கொண்டு ஆன்லைன் க்ளாஸ் என உட்கார்ந்துவிடுவான். என் கணவரோ…
-
- 0 replies
- 477 views
-
-
நவீன சாதனங்களின் வருகையால் வாசிப்புப் பழக்கம் அருகி வருகிறது - பழைய புத்தக நிலைய உரிமையாளர் கோவை கணேஷ் (சிலாபம் திண்ணனூரான்) “முயற்சியும் துணிவும் உழைப்பும் தான் ஒரு மனிதனுக்கு எப்போதும் இன்பத்தைத் தந்து கொண்டிருக்கின்றன. சிறு வயது முதல் புத்தக வாசிப்பில் பெரும் ஈடுபாடுகளைக் கொண்டிருந்தேன். இதன் வளர்ச்சி எனக்குள் வேர்விட்டு மரமாகி படர்ந்து நல்ல கனிகளைக் கொடுத்தது. அதன் அறுவடையாக என் இருபத்தி மூன்றாவது வயதில் கோவை புத்தக நிலையம் என்ற நாமத்தில் பழைய இலக்கிய புத்தகங்களை விற்பனை செய்யும் வியாபாரத்தை ஆரம்பித்தேன். விளையாட்டுப் பருவ க…
-
- 0 replies
- 475 views
-
-
பெண்களுக்கு எதிரான வன்முறையின் களமாகும் சமூக வலைத்தளங்கள் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2020 ஒக்டோபர் 04 “உலகம் மாறிவிட்டது” என்ற கோஷத்தை, நாம் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கிறோம். “தொழில்நுட்ப ரீதியில் உலகம் வளர்ச்சி அடைந்துள்ளது”, “மனிதன் இன்னும் நாகரிகமுள்ளவனாக மாறிவிட்டான்” போன்றவையும் நாம் அடிக்கடி கேட்பவை! ஆனால், பெண்களுக்கு எதிரான வன்முறை, தொடர்ச்சியானதாகவும் நிறுவனமயப்பட்டதாகவும் இருக்கிறது. இதில் மிகவும் கவலைக்குரிய விடயம் யாதெனில், பெண்களின் கருத்துரிமைகளுக்கான புதிய களங்களாகக் கருதப்பட்ட சமூக வலைத்தளங்களில், மிகப்பயங்கரமான வன்முறை அரங்கேறுகிறது. இது, பாலியல் தாக்குதல்களாகப் பெண்களைக் குறிவைக்கிறது. வன்முறையாளர்கள் பாதுகாப்பாகவும…
-
- 1 reply
- 475 views
-
-
நவீன அடிமைத்தனத்தில் சிக்கியுள்ள சுமார் 3 கோடி பெண்கள்-மேலும் பல முக்கிய செய்திகள் October 12, 2020 Share 41 Views உலகளவில் கட்டாய உழைப்பு, கட்டாய திருமணம், கடனுக்கான கொத்தடிமை உள்ளிட்ட நவீன அடிமைத்தனத்தில் 2.9 கோடி பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ‘Stacked Odds’ என்ற புதிய அறிக்கையில் இத்தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலிய மக்கள் தொகையைக் காட்டிலும் அதிகமான பெண்கள் நவீன அடிமைத்தன சூழலுக்குள் சிக்கியுள்ளனர் என்றும் இந்த ஆய்வு அறிக்கை கூறியுள்ளது. ரோஹிங்கியா அகதிகளுக்கு மொழிக் கல்வி மலேசியாவில் உள்ள ரோஹிங்கியா அகதிக…
-
- 0 replies
- 475 views
-
-
தமிழர் பகுதியில் சீரழியும் கலாச்சாரம்..! Vhg நவம்பர் 06, 2025 அண்மைய காலங்களில் தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெறு கலாசார சீரழிவுகள் , குற்ற செயல்கள், ஈழத் தமிழினத்தை அழிவு பாதைக்கு செல்லும் அவலம் தொடர்பில் சமூக வலைத்தங்கள் பலரும் கவலை வெளியிட்டுள்ளனர். போதைபொருள் விற்பனையில் கொடிகட்டி பறக்கும் இளம் குடும்ப தலைவிகள் ஒருபுறமும் , மறுபுறம் போதையாலும் குற்றசெயல்களாகும் கெட்டு சீரழியும் இளம் சமுதாயம் ஒரு புறமுமாக ஈழத தமிழர் கலாச்சாரம் வழி மாறி போய்கொண்டிருக்கின்றது. போதைபொருள் விற்பனை - கள்ள உறவுகள் ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்ந்த காலங்கள் மலையேறி கொண்டிருக்கின்றது. குடும்ப வன்முறைகள் கொலைகளில் வந்து முடிகின்றது. சுகபோக வாழ்க்கை மற்றும் பணத்தின் மீ…
-
-
- 2 replies
- 474 views
-
-
ஆண்கள் தினம்: பெண்கள் கூறும் இந்த அறிவுரைகளைக் கேளுங்கள்! காணொளிக் குறிப்பு, ஆண்கள் தினம்: பெண்கள் கூறும் இந்த அறிவுரைகளைக் கேளுங்கள்! 53 நிமிடங்களுக்கு முன்னர் நவம்பர் 11-ஆம் தேதி ஆண்கள் தினமாகக் கொண்டாடப்படும் நிலையில், அதுபற்றி பெண்கள் கூறுவது என்ன? - இந்தக் காணொளியில் பார்க்கலாம். https://www.bbc.com/tamil/articles/c51ege32z9po
-
- 1 reply
- 474 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 473 views
-
-
அதோ! குப்பி விளக்கில் படித்த சிறுமி மரணமாகிறாள் இதோ! கடவுளர்களுக்காக கலவைகள் தயாராகின்றன [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-04-14 09:46:05| யாழ்ப்பாணம்] சுன்னாகத்தில் குப்பி விளக்கில் படித்துக் கொண்டிருந்த சிறுமி ஒருவர் அந்த விளக்கு தட்டுப்பட்டதில், அதில் எரிந்து பலியாகிப் போன சம்பவம் எங்களால் வெறும் செய்தியாகவே வாசிக்கப்பட்டிருக்கும். ஆனால் அந்த செய்திக்குள் இரு க்கக் கூடிய சோகம், துன்பம் பற்றி சிந்திப்பதற்கு யாருமில்லை. படிப்பதற்கு அவாக்கொண்ட ஒரு பிள்ளைக்கு மின்சார வசதி கிடைக்கவில்லை. அந்தப் பிள்ளை படிப்பதற்கு மின்சார வசதி கிடைத்திருந்தால் அந்தப்பிள்ளை கல்வியில் சாதனை படைத்திருக்கும் என்பது மட்டுமல்ல, அதன் உயிரும் பாதுகாக்கப்பட்டிருக்கும். என்ன செய்வது! ஏழைகளின…
-
- 0 replies
- 473 views
-
-
மரபு ரீதியான குறைபாட்டுடன் விந்து தானம் செய்த நபருக்கு பிறந்த 15 குழந்தைகள் வில் ஜெஃபார்ட் பிபிசி செய்திகள் 13 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு, ஜேம்ஸ் மேக்டூகல் இங்கிலாந்தில் மரபியல் ரீதியான குறைபாடு கொண்ட நபர் ஒருவர் தனது விந்தணுவை தானம் செய்து, அதன்மூலம் 15 குழந்தைகள் பிறந்துள்ளன. இதுதொடர்பான வழக்கு விசாரணையில் இது தெரியவந்துள்ளது. மேலும், தான் விந்து தானம் செய்வதாக அந்நபர் ஃபேஸ்புக்கில் விளம்பரம் கொடுத்து இவ்வாறு செய்துள்ளார். ஜேம்ஸ் மேக்டூகல் என்ற அந்த நபருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு கற்றல் குறைபாடு ஏற்படும் மரபியல் ர…
-
- 0 replies
- 473 views
- 1 follower
-