உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26599 topics in this forum
-
கடந்த 2014, மார்ச் 8 ஆம் திகதி கோலாலம்பூரில் இருந்து மலேசியா நோக்கி புறப்பட்ட எம்.எச்.370 என்ற விமானம் ரேடார்களில் இருந்து காணாமல் போனது. ரேடார்களில் இருந்து காணாமல் போனது. ரேடார்களில் இருந்து மாயமான எம்.எச். 370 விமானம் எங்கு சென்றது, அதில் இருந்தவர்கள் நிலை என்ன என்ற கேள்விகளுக்கு இதுவரை பதில் இல்லை. கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக காணாமல் போயிருக்கும் மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் 370-ஐ கண்டுபிடிக்க புது திட்டம் உள்ளதாக ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர். லண்டனில் உள்ள ரோயல் ஏரோனாடிக்கல் சொசைட்டியில் நடைபெற்ற விரிவுரையில் புதிய வகை தேடலின் மூலம் பத்து நாட்களில் காணாமல் போன விமானத்தை கண்டுபிடிக்க முடியும் என வான்வெளி துறை நிபுணர்கள் ஜீன்-லுக் மார்சண்ட் மற்றும் விமானியான பேட்ரிக் ப…
-
- 0 replies
- 558 views
- 1 follower
-
-
'நாடு மோசமான பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது': பிரதமர் ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய நகரமான மெல்பர்னில் ஒரு மாதத்துக்குள் இரண்டாவது தடவையாக நடக்க இருந்த பயங்கரவாதத் தாக்குதலை முறியடித்துள்ளதாக காவல்துறையினர் கூறுகின்றனர். வீடொன்றிலிருந்து உள்ளூரில் தயாரிப்பான மூன்று வெடிகுண்டுகளை மீட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். வெடிகுண்டுகள் அருகிலுள்ள மைதானமொன்றுக்கு கொண்டுசெல்லப்பட்டு பாதுகாப்பாக வெடிக்கவைக்கப்பட்டுள்ளன. பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடத் திட்டமிட்டதாக கைதுசெய்யப்பட்டுள்ள 17-வயது இளைஞர் ஒருவர் திங்களன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். ஆஸ்திரேலியா மிகவும் மோசமான பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதாக பிரதமர் டோனி அப்பொட் கூறியிருக்கிறார். கடந்த …
-
- 0 replies
- 288 views
-
-
-
- 0 replies
- 467 views
-
-
உலக மக்கள் தொகை 700 கோடியை எட்டியது! Published on October 31, 2011-3:45 am உலக மக்கள் தொகை இன்று (31) 700 கோடியை தொட்டுவிட்டது. நேற்று (30) நள்ளிரவுடன் இந்த விசேட மக்கள் தொகை எண்ணிக்கை எட்டப்பட்டுள்ளது. இந்த முக்கிய விடயத்தை கொண்டாடும் நோக்கில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஜனத்தொகை நிதியத்தினால் 07 பில்லியன் பெறுமதியான திட்டங்கள் உலகம் முழுவதும் செயற்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. உலகில் 7 பில்லியன் மக்கள் வசிப்பு மற்றும் அதன் மூலம் ஏற்படும் எதிர்கால சவால்கள், சந்தர்ப்பம், மற்றும் ஏதும் செய்வதற்கு உள்ள திறமை, உலகின் எதிர்காலத்தை திட்டமிடுதல் ஆகிய செயற்பாடுகளின் கீழ் மேற்படி திட்டங்கள் அமையும். 07 பில்லியன் மக்களாக நாம் ஒருவருக் கொருவர் அக்கறையுடன் வசிப்போம் …
-
- 0 replies
- 444 views
-
-
கடும் நிலநடுக்கம்…. சுனாமி எச்சரிக்கை. July 18, 201511:20 pm ஆஸ்திரேலியா அருகே பசிபிக் கடலில் சாலமன் தீவுகள் என்ற குட்டிநாடு உள்ளது. இங்கு இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. லடா மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் அதிர்ந்து குலுங்கின. இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓட்டம் பிடித்தனர். 7.5 ரிக்டரில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. இதனால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நில நடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. http://www.ga.gov.au/earthquakes/ http://www.abc.net.au/news/2015-07-10/quake-measuring-magnitude-65-strikes-off-solomon-islands-usgs/6610828
-
- 0 replies
- 737 views
-
-
வட கொரியா: கிம் அவையில் மசோதாவை எதிர்த்த தலைவருக்கு 'மரண தண்டனை' நிறைவேற்றம் சுட்டுக் கொல்லப்பட்டதாக கருதப்படும் வட கொரிய அமைச்சரவை மூத்த அமைச்சர் சோ யோங் கோன். | கோப்புப் படம்: ஏஎப்பி. வட கொரிய அமைச்சரவையில் மூத்த அமைச்சர் சோ யோங் கோனுக்கு 'மரண தண்டனை' நிறைவேற்றப்பட்டதாக தென் கொரிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் அமைச்சரவையில் கடந்த 2014-ல் சோ யோங் கோன், அதிபருக்கு அடுத்தபடியான பதிவியில் இடம்பெற்றார். அதிபர் கிம் அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்ட காடு வளர்ப்பு கொள்கைகளுக்கு சோ யோங் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இந்த நிலையில், அவருக்கு கடந்த மே மாதம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தென் கொரிய செய்தி ஊடகமான யோன்ஹாப் குறிப்பிட்டுள்ளது. வட கொரிய…
-
- 0 replies
- 764 views
-
-
அவ்வளவு கூறியும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருப்பது பற்றி திமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, போர்க்குற்றங்களைப் புரிந்துள்ள ராஜபக்ச அரசினைக் கண்டிக்கும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பதை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் திமுக தலைவர் பலமுறை வற்புறுத்தியுள்ளார். அதோடு அதன் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நேரில் வற்புறுத்தியுள்ளனர். இன்று காலை நாடாளுமன்ற இரு அவைகளிலும் திமுக, அதிமுக, இடதுசாரிகள், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வற்புறுத்தியுள்ளன…
-
- 0 replies
- 455 views
-
-
முஸ்லீம் அல்லாதவர்களை அழிப்போம் – ஐ.எஸ் பயங்கரவாதிகள் எச்சரிக்கை! முஸ்லீம் அல்லாதவர்களை அழிப்போம் என ஐ.எஸ் பயங்கரவாதிகள் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நியூயோர்க் மற்றும் லண்டனின் சில பகுதிகளில் தாக்குதல் நடத்துவது போன்றும், இஸ்லாமியர் அல்லாதர்களை கொல்வோம் எனவும் குறிப்பிட்டு வெளியிட்டுள்ள ஒளிப்படங்களிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளைக் கண்காணிக்கும் ஆராய்ச்சி நிறுவனமான மெம்ரி ஜேடிடிஎம் மற்றும் சில சர்வதேச ஊடகங்கள் சிலவற்றில் இந்த ஒளிப்படங்கள் வெளியாகியுள்ளன. ‘நீங்கள் நாங்கள் தோற்றுவிட்டதாக நினைத்திருக்கலாம், இஸ்லாமிய ஆதரவாளர்கள் சரணடைந்து விட்டதாக நினைத்திருக்கலாம், ஆனால் கூடிய விரைவில் லண்டன் மற்றும் பல இடங்களில் தாக்குதல…
-
- 0 replies
- 382 views
-
-
பிரிட்டனுக்கு கடத்தப்படும் நூற்றுக்கணக்கான ஆபிரிக்க குழந்தைகள் கொத்தடிமைகளாக வாழும் அவலம் [04 - February - 2008] லண்டன் : ஆண்டுதோறும் நூற்றுக் கணக்கான குழந்தைகள் ஆபிரிக்காவிலிருந்து பிரிட்டனுக்கு கடத்திச் செல்லப்பட்டு அடிமைகளாக பயன்படுத்தப்படுவது விசாரணையொன்றில் தெரியவந்துள்ளது. நைஜீரியா போன்ற நாடுகளில் குழந்தைகளை கடத்துவதற்கென்றே கும்பல்கள் செயற்பட்டு வருகின்றன. மூன்று அல்லது நான்கு வயதுச் சிறுவர்களின் விலை 8 இலட்சம் ரூபாவென புலனாய்வு விசாரணையொன்றில் தெரிய வந்துள்ளது. பணம் கிடைக்கும் என்பதற்காக கர்ப்பமாகவுள்ள இளம் வயது பெண்கள் கூட தங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தைகளை விற்பனை செய்யத் தயாராகவுள்ளனர். ஆட்கடத்தல்களில் ஈடுபடும் கும்பல்களால் இக் குழந்தைகள…
-
- 0 replies
- 586 views
-
-
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர் | படம்: ராய்ட்டர்ஸ். பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பயங்கரவாதிகள் பல இடங்களில் நடத்திய தாக்குதலில் 140 பேர் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகள் தாக்குதலை அடுத்து பிரான்ஸில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை அந்நாட்டு அதிபர் ஹாலந்தே பிறப்பித்தார். மேலும், பிரான்ஸ் எல்லைகளில் சீல் வைத்து பாதுகாப்பை அதிகரிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். வடக்கு பாரீஸில் உள்ள கால்பந்து மைதனாத்தில் பிரான்ஸ் - ஜெர்மன் அணிகளுக்கு இடையேயான நட்பு ரீதியான கால்பந்து போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது மைதானத்துக்கு வெளியே இரண்டு இடங்களில் குண்டு வெடித்ததாகத் தெரிகிறது. அசோசியேடட் பிரஸ் செய்தியாளர் ஒருவர் இ…
-
- 0 replies
- 594 views
-
-
ஐரோப்பியப் பிரஜைகளின் சுதந்திர நடமாட்டத்தை முடிவுக்கு கொண்டுவரவேண்டாம் : லண்டன் மேயர் ஐரோப்பிய ஒன்றியப் பிரஜைகளின் சுதந்திர நடமாட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் திட்டங்களை ரத்துச்செய்யுமாறு லண்டன் மேயர் சாதிக் கான் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஒக்ரோபர் 31ஆம் திகதி ஒப்பந்தமற்ற பிரெக்ஸிற் ஏற்பட்டால், பிரித்தானியாவில் ஐரோப்பிய ஒன்றியப் பிரஜைகளின் சுதந்திர நடமாட்டம் முடிவுக்குவரும் என்று அரசாங்கம் நேற்று அறிவித்ததைத் தொடர்ந்தே சாதிக் கான் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். உள்துறை அமைச்சர் பிரீத்தி பட்டேலுக்கு, சாதிக் கான் எழுதிய கடிதத்தில் ஒரு புதிய குடியேற்ற முறை நடைமுறைக்கு வருவதற்கு முன்பு உடனடியாக ஐரோப்பிய ஒன்றியப் பிரஜைகளின் சுதந்திர நடமாட்டத்தை மு…
-
- 0 replies
- 594 views
-
-
தெற்கு சீன கடற்பகுதியில் அந்நாடு அமைத்துவரும் செயற்கை தீவு அருகே அமெரிக்காவின் போர்க் கப்பல் ரோந்து செல்வது தொடர்பாக அமெரிக்கவிற்கும் சீனாவிற்கும் கருத்து வேறுபாடுகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.சில வாரங்களுக்கு முன்பு யு.எஸ்.எஸ் லாசன் என்ற போர்க்கப்பல் ஸ்பார்ட்லி தீவு அருகே ரோந்து சென்றது. அந்தப் பகுதி சீனாவுக்கு உட்பட்ட பகுதி இல்லை என்றாலும் அது சீனாவால் அமைக்கப்பட்ட செயற்கை தீவு அந்த பகுதியில் உள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை சீனா கடுமையாக கண்டித்ததுடன், தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டால் போர் ஏற்படலாம் என்றும் எச்சரித்தது. தென் சீன கடல் பகுதியில் அமெரிக்க போர்கப்பல்கள் ரோந்து செல்வது எந்த நாட்டையும் அச்சுறுத்துவதற்கு அல்ல. இந்த நடவடிக்கையானது, சர்வதேச கடல்பகுதி …
-
- 0 replies
- 437 views
-
-
ரஷ்ய விமானத் தாக்குதலில் 2 மாதங்களில் 400 பொதுமக்கள் பலி கடந்த செப்டெம்பரிலிருந்து ரஷ்யா, சிரியாவில் மேற்கொண்டுவரும் விமானத் தாக்குதல்கள் காரணமாக, குறைந்தது 400 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக, மனித உரிமைகள் அமைப்புகள் தெரிவிக்கின்றன. செப்டெம்பர் 30ஆம் திகதியிலிருந்து நவம்பர் 20ஆம் திகதி வரையிலான காலப்பகுதியிலேயே, இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக, ஐக்கிய இராச்சியத்தைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.இதில், 97 பேர் சிறுவர்கள் எனவும் அவ்வமைப்புத் தெரிவித்துள்ளது. அத்தோடு, கடந்தாண்டு ஒக்டோபரிலிருந்து, குறைந்தது 42,234 விமானத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக ஆவணப்படுத்தப்…
-
- 0 replies
- 714 views
-
-
லண்டனில் இந்திய தூதரகத்துக்கு முன்பாக, பாகிஸ்தானியர்கள் வன்முறை போராட்டம்! லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு எதிராக பாகிஸ்தானியர்கள் சிலர் வன்முறைப் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 ஆவது சட்டப்பிரிவை இந்திய மத்திய அரசு கடந்த மாதம் ரத்து செய்தது. அத்துடன் அந்த மாநிலம் ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. இந்தநிலையில், பாகிஸ்தானியர்கள் மற்றும் பாகிஸ்தான் ஆதரவாளர்கள் நேற்று லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பு திடீரென திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய அரசாங்கத்திற்கு …
-
- 0 replies
- 279 views
-
-
இந்தியாவுடன் நிபந்தனையற்ற பேச்சுக்குத் தயார்: பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் அறிவிப்பு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷேரீப் | கோப்புப் படம்: ஏ.பி. எவ்வித நிபந்தனையும் இன்றி இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது என்று அந்த நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். தெற்கு ஐரோப்பாவில் மத்திய தரைகடலில் அமைந்துள்ள மால்டா தீவு நாட்டில் காமன்வெல்த் மாநாடு நடைபெறுகிறது. இதில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பங்கேற்றுள்ளார். இதையொட்டி பாகிஸ்தானின் ஜியோ தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: "இந்தியா, ஆப்கானிஸ்தான் உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் சுமுக உறவைப் பேண பாகிஸ்தான் விரும்புகிறது. தெற்காசியப…
-
- 0 replies
- 438 views
-
-
ஐஎஸ் பிடியில் இருந்த ரமாடி நகரை ஈராக் ராணுவத்தினர் மீட்டது எப்படி? (அதிர வைக்கும் வீடியோ) ஐஎஸ் தீவிரவாதிகளின் பிடியில் இருந்த முக்கிய நகரமான ரமாடி நகரை கடும் சண்டைக்கு பின்னர் ஈராக் ராணுவத்தினர் மீட்டுள்ளனர். இதனிடையே, 2016-ம் ஆண்டில் ஈராக்கிலிருந்து முற்றிலுமாக ஐஎஸ் தீவிரவாதிகள் ஒழிக்கப்படுவார்கள் என அந்நாட்டின் பிரதமர் ஹைதர் அல் அபாடி சபதம் எடுத்துள்ளார். ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐஎஸ் தீவிரவாதிகள் தற்போது தோல்வியை சந்தித்து வருகின்றனர். ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிடியிலிருந்த முக்கிய நகரமான ரமாடியை ஈராக் ராணுவத்தினர் கைப்பற்றினர். பாக்தாத் மேற்கு பகுதியில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில்தான் ரமாடி நகர் இருக்கிறது. இதற்கிடைய…
-
- 0 replies
- 769 views
-
-
பதான்கோட் விமானப் படை தளத்தில் தீவிரவாதிகள் மீண்டும் துப்பாக்கிச் சூடு: ராணுவம் சுற்றிவளைப்பு பதான்கோட் விமானப் படை தளத்தில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளை பிடிக்கும் முயற்சியில் ராணுவ வீரர்கள் | படம்: ஏ.பி. பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப் படை தளத்தில் மீண்டும் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து விமானப் படை தளத்தை சுற்றி கூடுதலாக ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். விமானப் படை தளத்தினுள் மேலும் பல தீவிரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. பதான்கோட் விமானப் படை தளத்தின் மீது தாக்குதல் நடத்திய தற்கொலைப்படை தீவிரவாதிகள் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், பகவல்பூர் நகரைச் சேர்ந்தவ…
-
- 0 replies
- 559 views
-
-
பிரபல பிரித்தானிய பாடகர் டேவிட் போவி காலமானார் [ Monday,11 January 2016, 13:46:15 ] பிரித்தானியாவின் புகழ்பெற்ற பாடகரான டேவிட் போவி புற்றுநோய் காரணமாக தனது 69ஆவது வயதில் இயற்கை எய்தியுள்ளார். அறுபதுகளின் பிற்பகுதியிலும் எழுபதுகளின் ஆரம்பத்திலும் இசையில் உலக அளவில் கோலோச்சியிருந்தார். தமது தந்தை உயிரிழந்துள்ளதை அவரது மகனும் திரைப்பட இயக்குநருமான டங்கன் ஜோன்ஸ் உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த 18 மாதங்களாக புற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், குடும்பத்தினர் சூழ்ந்திருக்க அமைதியாக போவீயின் உயிர் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'ஸ்பேஸ் ஆடிட்டி', 'ஸ்டார்மேன்' போன்ற பாரிய வெற்றி பெற்ற பாடல்கள் டேவிட் போவிக்கு உலக…
-
- 0 replies
- 407 views
-
-
Published By: RAJEEBAN 26 FEB, 2025 | 11:38 AM பாலஸ்தீனத்தை சேர்ந்த மருத்துவர்கள் உட்பட 160க்கும் அதிகமான சுகாதார பணியாளர்கள் இஸ்ரேலிய சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் அவர்கள் சித்திரவதை செய்யப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன என கார்டியன் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கார்டியன் மேலும் தெரிவித்துள்ளதாவது. பாலஸ்தீனத்தை சேர்ந்த மருத்துவர்கள் உட்பட 160க்கும் அதிகமான சுகாதார பணியாளர்கள் இஸ்ரேலிய சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என நம்பப்படுகின்றது உலக சுகாதார ஸ்தாபனம் இவர்களின் நலன்கள் பாதுகாப்பு குறித்து கரிசனை வெளியிட்டுள்ளது. 162 மருத்துவ பணியாளர்கள் இஸ்ரேலிய சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என தன்னால் உறுதிப்படுத்த முடிந்துள்ளதாக பாலஸ்தீன மரு…
-
- 0 replies
- 191 views
- 1 follower
-
-
ஐரோப்பிய ஒன்றிய இறக்குமதிகள் மீது 50 சதவீதம் கூடுதல் வரி! எதிர்வரும் ஜூன் 01ஆம் திகதி முதல் ஐரோப்பிய ஒன்றிய இறக்குமதிகள் மீது 50 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். தனது சமூக ஊடக பதவில், அமெரிக்காவிற்கான ஏற்றுமதியை அதிகரிக்கும் ஒரே குறிக்கோளுடன் உருவாக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்துடனான பேச்சுவார்த்தைகள் எந்தப் பலனையும் அளிக்கவில்லை எனவும் டிரம்ப் சுட்டிக்காட்டினார். இதேவேளை, டிரம்பின் 50 சதவீத வரி அச்சுறுத்தலுக்கு ஐரோப்பிய ஒன்றியம் பதிலலிக்காத நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவிற்கு 500 பில்லியன் யூரோ மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1433062
-
- 0 replies
- 213 views
-
-
பட மூலாதாரம்,FAMILY HANDOUT படக்குறிப்பு, மலையேற்றத்தின் போது எரிமலையில் தவறி விழுந்து நான்கு நாட்களுக்குப் பிறகு, இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார் ஜூலியானா மரின்ஸ். கட்டுரை தகவல் ஃப்ளோரா ட்ரூரி & ரேச்சல் ஹேகன் பிபிசி செய்திகள் 3 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தோனீசியாவில் உள்ள எரிமலையின் பள்ளத்துக்கு அருகே மலையேற்றம் செய்தபோது தவறி விழுந்த பிரேசிலிய சுற்றுலாப் பயணி, உயிரிழந்துவிட்டதாக அவரது குடும்பத்தினரும் மீட்புப் பணியாளர்களும் தெரிவித்துள்ளனர். அதிகாலை, ரிஞ்சானி மலையின் ஒரு செங்குத்தான பாதையில் குழுவாக மலையேற்றத்தில் ஈடுபட்டபோது, ஜூலியானா மரின்ஸ் என்பவர் ஒரு குன்றிலிருந்து தவறி விழுந்தார். குன்றில் இருந்து விழுந்தபோது உயிர் தப்பிய அவர், சனிக்கிழமையன்று உதவிக்காக அல…
-
- 0 replies
- 158 views
- 1 follower
-
-
ஈரானிலிருந்து ஆயுதங்கள் ஏற்றி வந்த படகை நடுக்கடலில் அமெரிக்க கடற்படை மடக்கிப் பிடித்தது.அந்தப் படகில் இருந்த ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.அமெரிக்க கடற்படை திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் இது குறித்து தெரிவித்திருப்பது:அரபிக் கடலில் வழக்கமான ரோந்துப் பணியில் அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த யு.எஸ்.எஸ். ஸிரோக்கோ ஈடுபட்டிருந்தது.கடந்த மார்ச் 28-ஆம் தேதி அரபிக் கடலில் சந்தேகத்துக்கு இடம் தரும் வகையில் பயணம் செய்து கொண்டிருந்த ஒரு படகை கடற்படையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்தப் படகில் 1,500 ஏ.கே.47 ரக தானியங்கித் துப்பாக்கிகள், வெடிகுண்டுகளை ராக்கெட் மூலம் ஏவும் கருவிகள் 200, கன ரக இயந்திரத் துப்பாக்கிகள்…
-
- 0 replies
- 518 views
-
-
சீனாவில் விலங்குகளின் விற்பனை மற்றும் நுகர்விற்கு தடை! சீனாவில் விலங்குகளின் விற்பனை மற்றும் நுகர்விற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் உயர் சட்டமன்றமான தேசிய மக்கள் காங்கிரஸினால் கொரோனா வைரஸ் காரணமாக குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சீனாவில் கடந்த ஜனவரி மாத ஆரம்ப காலப்பகுதியில் இருந்து விலங்குகளின் விற்பனை மற்றும் நுகர்வு நிறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது சீனாவில் உத்தியோகபூர்வமாக விலங்குகளின் விற்பனை மற்றும் நுகர்விற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 37 நாடுகளைச் சேர்ந்த 80 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் இதுவரையில் இரண்டாயிரத்து 715 பேர் உயிரிழந…
-
- 0 replies
- 227 views
-
-
மாஸ்கோ: சிரியாவின் வடமேற்குப் பகுதிகளில், துருக்கி ஆதரவு பெற்ற சிரியா புரட்சி படைக்கும், சிரியா அரசுக்கும் இட்லிப் பகுதியில் சண்டை நடந்து வருகிறது. இதனால், அங்குள்ள ஐந்து லட்சம் மக்கள், சிரியா - துருக்கி எல்லையில், அடைக்கலம் புகுந்து வருகின்றனர். புரட்சிப் படையை ஒடுக்க, சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத் தலைமையிலான அரசுப் படைகள், ரஷ்யாவின் உதவியுடன் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில், அரசுப் படைகளுக்குப் பல இடங்களில் வெற்றி கிடைத்துள்ளது. இந்நிலையில், இட்லிப் மாகாணத்தில் புரட்சியாளர்கள் மீது, சிரிய அரசுப் படைகள் நடத்திய தாக்குதலில், துருக்கி ராணுவ வீரர்கள், 33 பேர் கொல்லப்பட்டனர். இதனால், துருக்கி - சிரியப் படைகளுக்கு இடையே மோதல் வலுத்துள்ளது. இதில் பொதுமக்கள் பலரும் கொல…
-
- 0 replies
- 399 views
-
-
விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை இந்தியத் தொழிலதிபர் விஜய் மல்லையாவை தங்களிடம் ஒப்படைக்குமாறு பிரிட்டிஷ் அரசுக்கு எழுத்து மூலமான கோரிக்கை ஒன்றை முன்வைப்பதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. பணமோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள மல்லையா தற்போது பிரிட்டனில் உள்ளார். மும்பையில் உள்ள நீதிமன்றம் ஒன்று அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்ததை அடுத்து கடந்த வாரம் அவரது ராஜாங்கக் கடவுச்சீட்டு முடக்கப்பட்டது. மல்லையா கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் மற்றும் கிங்ஃபிஷர் பீர் ஆகிய நிறுவங்களின் முன்னாள் உரிமையாளர். மல்லையாக கிட்டத்தட்ட 1 பில்லியன் டாலர் செலுத்த வேண்டியுள்ளதாக இந்தியாவின் நிதி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. அவரது ஏர்லைன்ஸ…
-
- 0 replies
- 289 views
-