Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இலங்கை 'பதற்றம்': இரவில் தனுஷ்கோடிக்குள் நுழைய தடை மே 04, 2007 ராமேஸ்வரம்: இலங்கையில் நிலவும் அசாதாரண நிலையைக் கருத்தில் கொண்டு தனுஷ்கோடிக்கு இரவில் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் விமானத் தாக்குதலை தீவிரப்படுத்த ஆரம்பித்திருப்பதால் இந்தியாவின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தமிழக கடலோரப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொளப்பட்டுள்ளது. இலங்கைக்கு மிகவும் அருகில் உள்ள பகுதி ராமேஸ்வரம் என்பதால் ராமேஸ்வரம் கடல் பகுதியில் மிக தீவிர கண்காணிப்பு மேற்ெகாள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக ராமேஸ்வரத்தைச் சுற்றிலும் உள்ள 21 தீவுகளிலும் பலத்த கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடற்படை, கடலோரக் காவல் படை…

  2. மண்தோண்டும் போது வைர, நவரத்தின புதையல் பண்ருட்டியில் மண் தோண்டும் போது வைர புதையல் கிடைத்துள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே திருவதிகை பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் செங்கல் சூளையில் வேலைப் பார்த்து வருகிறார். இவர் கட்டி வரும் வீட்டுக்காக மண் தோண்டும் பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது 4 அடி ஆழத்தில் பழங்கால செப்பு பெட்டி கிடைத்தது. அந்த பெட்டியை திறந்து பார்த்தும் அதில் வைர, வைடூரிய, நவரத்தின ஆபரணங்கள் இருந்ததை கண்ட கூலி தொழிலாளர்கள் ஆச்சரியமடைந்தனர். இது குறித்து தாசில்தார் அலுவலகத்திற்கு தகவல் தரப்பட்டது. இதன் மதிப்பை கணக்கிட முடியவில்லை. இந்த பழமையான ஆபரணங்கள் பல கோடி மதிப்புடையவை என அதிகாரிகள் கூறியுள்ளனர். - சூரியன்

    • 6 replies
    • 1.9k views
  3. தமிழகம் முழுவதும் கன மழை: 7 பேர் பலி - இன்று முதல் கத்திரி மே 04, 2007 சென்னை: தமிழகம் முழுவதும் ேநற்று பெய்த கன மழைக்கு 7 பேர் பலியாகியுள்ளனர். பல பகுதிகளில் சூறாவளிக் காற்றுடன் மழை பெய்ததால் இயல்பு நிலை ஸ்தம்பித்தது. தமிழகத்தின் தென் பகுதியைத் தவிர மற்ற பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் அடித்து வருகிறது. இந்த நிலையில் மே 4ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது. இந்தக் கால கட்டத்தில் ெவயில் மிகக் கடுமையாக இருக்கும் என்பதால் மக்கள் கவலையுடன் உள்ளனர். இந்த நிலையில், நேற்று தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. இடி, மின்னல், சூறாவளிக் கா…

  4. பிரான்ஸின் இரு ஜனாதிபதி வேட்பாளர்கள் தொலைக்காட்சியில் கடும் விவாதம். பிரான்ஸின் இரு ஜனாதிபதி வேட்பாளர்களும் நேற்று முன்தினம் புதன்கிழமை காரசாரமான தொலைக்காட்சி விவாதத்தில் ஈடுபட்டனர். சமூகவுடைமை கட்சியின் வேட்பாளர் செகோலெனே ரோயலுக்கும் அவருடைய வலதுசாரி எதிராளியான நிகோலஸ் சார்கோஸிக்குமிடையே இடம்பெற்ற இவ்விவாதமானது எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள தேர்தலில் வெற்றியாளர் யார் என்பதை தீர்மானிப்பதில் செல்வாக்குச் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத் தொலைக்காட்சி நிகழ்ச்சியின்போது இரு வேட்பாளர்களும் வேலைவாய்ப்பு, சுற்றுச் சூழல் மற்றும் சட்ட அமுலாக்கம் போன்ற விடயங்கள் குறித்து விவாதித்தனர். இந்த விவாத நிகழ்ச்சியானது பிரான்ஸின் இரு பெரிய தொலைக்காட்சி ஊட…

    • 2 replies
    • 853 views
  5. ஈராக் போருக்கு காலக்கெடு விதித்து நிதியளிக்கும் சட்டமூலம் ஜனாதிபதி புஷ்ஷினால் நிராகரிப்பு. ஈராக்கிலிருந்து அமெரிக்க படையினரை வாபஸ் பெறுவதற்கான காலக்கெடுவுடன் போருக்கான நிதியளிக்கும் காங்கிரஸின் சட்டமூலத்தை அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ.புஷ் தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி நிராகரித்துள்ளார். இச்சட்டமூலம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை புஷ்ஷிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. ஈராக்கிலிருந்து படையினரை திருப்பி அழைக்க காலக்கெடு விதிப்பதானது ஈராக்கில் தோல்வி காண்பதற்கான தினத்தை நிர்ணயிப்பதற்கு ஒப்பானது என புஷ் தெரிவித்துள்ளார். இது மத்திய கிழக்கின் எல்லைப் பகுதியெங்குமுள்ள போராளிகளை ஊக்குவிப்பதாக அமையும். அவர்கள் இந்த காலக்கெடுவை தமது நாளேடுகளில் குறித்து…

  6. . மே 03, 2007 சென்னை: முதல்வர் கருணாநிதி விடுதலைப் புலிகளுக்கு மறைமுக ஆதரவு தருகிறார் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், திமுக அரசால் தயாரிக்கப்பட்ட காவல்துறை மானியக் கோரிக்கைக்கான கொள்கை விளக்கக் குறிப்பு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படுள்ளது. அதில் தமிழக காவல்துறையினரால் இலங்கை தமிழர்களிடம் இருந்து பணம், எல்க்ட்ரிக் டெட்டனேட்டர்கள், வெடிபொருள் பூஸ்டர்கள், இரும்பு பால்ரஸ்கள், ஏ.கே. 56 ரக துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் கையெறி குண்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்ததாகவும், இது தொடர்பாக இலங்கை தமிழர்கள் கைது செய்யப்படதாகவும் காவல் துறை மானியக் கோரிக்கையில் பல்வேறு இடங்களில் குறிப்பி…

  7. 45 லட்சம் ரூபாய் இருக்கிறதா? கனடா குடியுரிமை வாங்கலாம் புதுடெல்லி, மே 3: உங்களிடம் ரூ.45 லட்சம் இருக்கிறதா? உங்கள் குடும்பத்துக்கே கனடா குடியுரிமை பெற்றுவிடலாம். கொஞ்சம் அதிகம் பணம் வைத்திருந்தால் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் குடியுரிமை பெறலாம். இதற்கு சட்டரீதியாக மிகச் சுலபமான வழி இருக்கிறது. வெளிநாடுகளில் குடியேற வேண்டும் என விரும்பும் பலரும் அறியாத விஷயம் அது. அந்த ரகசியம் இதோ. வெளிநாட்டில் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்யத் தயார் எனத் தெரிவித்தால் போதும். எவ்வளவு தொகை என்பது ஒவ்வொரு நாட்டுக்கும் மாறுபடும். ஆனால் இதன் மூலம் குடும்பத்துக்கே குடியுரிமை கிடைக்கும். முதலீட்டு தொகையை எப்படி திரட்டுவது என்ற கவலையும் தேவையில்…

  8. சுவிஸ் மேதின ஊர்வலத்தின் போது புளொட் உறுப்பினர்கள் மீது தாக்குதல்: நால்வருக்கு கடும் காயம். சுவிஸ்லாந்தில் மேதின ஊர்வலத்தின் போது புளொட் உறுப்பினர்கள் மீது மர்ம நபர்கள் இரும்புக்கம்பிகள் பொல்லுகள் சிறிய கத்திகள் சகிதம் தாக்குதல் நடத்தினர். இதில் நால்வருக்கு கடும் இரத்தகாயங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்த சுவிஸ் பொலிஸார் காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்கு எடுத்து சென்றதுடன் விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர். மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.. -Tamilwin-

    • 17 replies
    • 3.2k views
  9. தமிழக அரசியலைச் சூடேற்றும் புலிகள் விவகாரம் சாதுர்யமாகக் காய் நகர்த்தும் கலைஞர் தமிழக அரசியல் களத்தில் நீர்க்குமிழி போல, அவ்வப்போது தோன்றிமறையும் விடுதலைப்புலிகள் தொடர்பான சர்ச்சை, கடந்த சில நாட்களாக ஒரு சூறாவளியையே ஏற்படுத்தி விட்டது. அனைத்து அரசியல் கட்சிகளையும் ஆச்சரியத்திற்கும், அதிர்ச்சிக்கும் உள்ளாக்கும் வகையில், தமிழக போலீஸ் டி.ஜி.பி. முகர்ஜி வெளியிட்ட ஓர் அறிக்கைதான் அதற்குக் காரணம்! கடந்த மார்ச் 29_ம் தேதியன்று கடலில் மீன் பிடிக்கச் சென்ற குமரி மாவட்ட மீனவர்கள் ஐந்து பேர் நடுக்கடலில் சுடப்பட்டு இறந்தார்கள். அதே நாளில் தமிழக மீனவர்கள் 11 பேர், கேரள மீனவர் ஒருவர் என மொத்தம் 12 பேர் காணாமலும் போனார்கள். காணாமல் போன மீனவர்களைத் தேடும் பணியைத் தீவிரப்…

  10. தமிழக மீனவர்களை காக்கும் கடல் புலிகள்-திருமா மே 02, 2007 சென்னை: தமிழக மீனவர்களுக்கு கடல் புலிகளால் எந்த மிரட்டலும் இல்லை. உண்மையில், சிங்கள கடற்படையிடமிருந்து கடல் புலிகள்தான் தமிழக மீனவர்களைக் காத்து வருகின்றனர் என்று விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன் கூறியுள்ளார். சென்னையில் மீனவ பாதுகாப்பு மாநாடு நேற்று நடந்தது. இதில் திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், தமிழக மீனவர்களை கடல் புலிகள் சுட்டுக் கொன்று விட்டதாக கூறுகிறார்கள். உண்மையில் தமிழக மீனவர்கள் கடலில் நிம்மதியாகவும், பாதுகாப்பாகவும் மீன் பிடிப்பதற்கு கடல் புலிகள்தான் காரணம். கடல் புலிகள் இல்லாவிட்டால், அமெரிக்க ராணுவம் தனது தளத்தை திரிக…

    • 4 replies
    • 1.2k views
  11. சென்னை தொழிலதிபர்கள் வழங்கிய அருணாசலேஸ்வரர் தங்க கவசம் எங்கே?- பரபரப்பு தகவல்கள் திருவண்ணாமலை, மே. 2- தமிழகத்தின் மிக பிரபலமான கோவில்களின் திருவண்ணாமலை அருணாச லேஸ்வரர்கோவில் பிரதமானமாக விளக்குகிறது. நினைத்த மாத்திரத்திலே முக்தி கிடைக்கும் என்று பேசப்படும் அருணாசலேஸ்வரர் கோவிலில் முக்கிய திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுகிறார்கள். அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு பல லட்சம் செலவில் நடிகர் ரஜினிகாந்த் சோடியம் விளக்கு வசதி செய்து கொடுத்தார். இதுபோல் ஏராளமான தொழில் அதிபர்கள், முன்னணி நிறுவனங்கள் சார்பில் கோவில் திருப்பணிக்கு `உபயம்' செய்து வருகின்றனர். கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையை சேர்ந்த 2 தொழில் அதிபர்கள் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சனி பிரதோ…

  12. உயர் வெப்பத்தால் உருகி நொறுங்கி விழுந்த பாலம் வீரகேசரி நாளேடு அமெரிக்காவின் பிரதான இரட்டை அடுக்குப் பாலமொன்று அதற்கு அண்மையில் எரிவாயு கொள்கலமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் வெளிப்பட்ட பாரிய வெப்பத்தால் பொருத்துக்கள் உருகியதன் காரணமாக நொறுங்கி விழுந்துள்ளது. விபத்துக்குள்ளாகிய எரிவாயு கொள்கலத்திலிருந்து வெளிப்பட்ட வெப்பம் காரணமாக சான் பிரான்சிஸ்கோஒக்லான்ட் பே என்ற மேற்படி பாலத்தின் பொருத்துகளும், உருக்கு கட்டமைப்பும் உருகி சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேற்படி தீ விபத்தின்போது தீச்சுவாலைகள் 200 அடிக்கு மேற்பட்ட உயரத்திற்கு மேலெழுந்ததாகவும், இத்தீயின் காரணமாக 2750 பாகைக்கு அதிகமான வெப்பம் வெளியிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இப்பாலத்தில் தினச…

  13. "தமிழீழம் சிவக்கிறது"- நெடுமாறன் நூல் வழக்கு தள்ளுபடி - நூலைத் திருப்பித் தர அரசு மறுப்பு! "தமிழீழம் சிவக்கிறது" என்னும் தலைப்பில் பழ. நெடுமாறன் எழுதிய நூல் விடுதலைப்புலிகளை ஆதரித்து எழுதப்பட்ட நூல் என்றும் தடைசெய்யப்பட்ட ஒரு இயக்கத்திற்கு ஆதரவாக எழுதுவது சட்டப்படி குற்றம் என்றும் 2002ஆம் ஆண்டில் பழ.நெடுமாறன் மீதும் இந்த நூல்களை வெளிநாட்டுக்கு அனுப்ப ஏற்பாடு செய்ததாக தமிழ் முழக்கம் ஷாகுல் அமீது மீதும் தமிழக அரசு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் பிரிவுகள் 124 (ஏ) இந்திய குற்றவியல் சட்டம் 505 (1பி) மற்றும் 120ஆவது பிரிவு (பி) ஆகியவற்றின் கீழ் வழக்குத்தொடர்ந்தது. நான்கு ஆண்டுகாலமாக நடைபெற்ற இந்த வழக்கு இறுதியில் தீர்ப்புக் கூறப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இ…

  14. விடுதலைப்புலிகள் தாக்குதல்: நடிகை பூஜா வீடு அருகே குண்டு வெடித்தது கொழும்பு,மே.1- பிரபல நடிகை பூஜா இலங்கையில் பிறந்தவர் சென்னை வந்து படங்களில் நடித்து விட்டு இலங்கை திரும்பிவிடுவார். தற்போது அவர் கொழும்பில் உள்ளார். பூஜா வீடு அருகே விடுதலைப்புலிகள் வீசிய குண்டு வெடித்தது. விடுதலைப்புலிகள் விமானத் தில் சென்று பெட்ரோல் சேமிப்பு கிடங்கில் சமீபத்தில் குண்டு வீசினார்கள் இந்த கிடங்கு பூஜா வீட்டில் இருந்து ஒருகிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. குண்டு வெடிப்பு சத்தம் கேட்டு பூஜா அதிர்ச்சி அடைந்தார். ஜன்னல் விழியாக வெளியே எட்டிப்பார்த்தார். குபு குபு வென்று புகை கிளம்பிக் கொண்டிருந்தது. தீயும் எரிந்தது. இதனால் மிகவும் பயந்தார். பூஜா வீட்டில் இருந்து உடனடியாக …

  15. காங்கிரசை ஆயுதமாக்கி என்னை கைது செய்ய துடிக்கிறார்கள்: வைகோ பரபரப்பு பேச்சு ] ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ திருவான்மிïரில் இன்று காலை ம.தி.மு.க. இளைஞர் அணி துணைச் செயலாளர் கழக குமார் இல்ல திறப்பு விழாவில் பங்கேற்றார். விழா முடிந்து வெளியே வந்த அவரை நிருபர்கள் சூழ்ந்து விடுதலைப்புலிகள் ஆதரவு விஷயத்தில் உங்களை கைது செய்ய முயற்சிப்பதாக கூறப்படுகிறதே என்று கேட்டனர்.... ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ திருவான்மிïரில் இன்று காலை ம.தி.மு.க. இளைஞர் அணி துணைச் செயலாளர் கழக குமார் இல்ல திறப்பு விழாவில் பங்கேற்றார். விழா முடிந்து வெளியே வந்த அவரை நிருபர்கள் சூழ்ந்து விடுதலைப்புலிகள் ஆதரவு விஷயத்தில் உங்களை கைது செய்ய முயற்சிப்பதாக கூறப்படுகிறதே என்று கேட்டனர். …

  16. பைக் தராததால் ஓடிய மணமகன் நின்றது கல்யாணம்-3 பேர் கைது திருவண்ணாமலை: வரதட்சணையாக தர வேண்டிய மோட்டார் சைக்கிள் வராததால், கோபமடைந்த மணமகன் தாலி கட்ட வேண்டிய நேரத்தில் வீட்டை விட்டு வெளியேறி விட்டார். இதனால் கல்யாணம் நின்று போனது. இதுகுறித்து மணமகள் வீட்டார் கொடுத்த புகாரின் பேரில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் என்ற ஊரைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் மகேஸ்வரி. இவர் சென்னையில் நர்சாகப் பணியாற்றி வருகிறார். இவருக்கும் சிறுபாக்கம் என்ற ஊரைச் சேர்ந்த ரிசர்வ் போலீஸ்காரர் ரவிக்கும் திருமணம் நிச்சயமானது. 30ம் தேதி திருமணம் நடப்பதாக இருந்தது. திருமணத்தன்று மோட்டார் சைக்கிள் தருவதாக மணமகள் வீட்டார் வாக்களித்திருந்தினர்.…

  17. ராமர் பாலம் உள்ளதா?: சரஸ்வதி மஹால் நூலகத்தில் ஆதாரம் தேடிய டி.ஆர்.பாலு தஞ்சாவூர்: ராமர் பாலம் தொடர்பான ஆதாரங்கள் உள்ளதா என்று தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் கிட்டத்தட்ட 4 மணி நேரம் ஆய்வு செய்து குறிப்புகளையும், நகலையும் எடுத்துச் சென்றார் மத்திய கப்பல் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு. ராமர் பாலம் தொடர்பாக சர்ச்சை வலுத்து வருகிறது. சமீபத்தில் இது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த சுவாமி தயானந்த சரஸ்வதி கூறுகையில், ராமர் பாலம் உள்ளது தொடர்பாக தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் ஆதாரப்பூர்வமான தகவல்கள் உள்ளன, வரைபடமும் உள்ளது என்றார். இந்த நிலையில் நேற்று திடீரென டி.ஆர்.பாலு சரஸ்வதி மஹால் நூலகத்திற்கு வந்தார். காலை 10.30 மணிக்கு வந்த பாலு, சுமார் 4 மணி நேரம் அங்க…

  18. ரிசர்வ் செய்தும் பயனில்லை: ரயிலில் சீட் இல்லாமல் நெல்லை மாணவிகள் பரிதவிப்பு திருநெல்வேலி: ரிசர்வ் செய்தும் பயனில்லை ரயிலில் சீட் இல்லாமல் நெல்லை மாணவிகள் 150 பேர் கடும் சிரமப்பட்டனர். நெல்லை ரஹ்மத்நகரில் உள்ள தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் கேரளா மாநிலத்திற்கு சுற்றுலா சென்றனர். பின்னர் நேற்று இரவில் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் நெல்லை வர டிக்கெட் ரிசர்வ் செய்தனர். கொச்சியில் ரயிலில் ஏறியதும் ரிசர்வ் செய்யப்பட்ட பெட்டிகளில் கேரள பயணிகள் அமர்ந்து கொண்டு இடம் கொடுக்க மறுத்து விட்டனர். இது குறித்து டி. டி. ஆரிடம் புகார் தெரிவிக்கப்பட்டும் பயனில்லை. மாணவ, மாணவிகள் அமர இடம் இல்லாமல் பெரும் அவதிக்குள்ளாயினர். தமிழக பயணிகள் என்றால் கேரள பயணிகள் அவ்வப்போது இப்படி இடையூறு ச…

  19. சென்னை நிலையத்திற்கு மனித வெடிகுண்டு மிரட்டல் மே 01, 2007 சென்னை: சென்னை விமான நிலையத்திற்கு மனித வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடக மாநிலம் மங்களூர் விமான நிலையக் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று காலை ஒரு போன் அழைப்பு வந்தது. அந்த அழைப்பை எடுத்து சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் பேசியுள்ளார். அதில் பேசிய நபர், தோஹாவிலிருந்து சென்னைக்கு வரும் கத்தார் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஒரு மனித வெடிகுண்டு பயணிப்பதாகவும், விமான நிலையத்திற்கு வந்ததும் அந்த மனித வெடிகுண்டு வெடிக்கும் எனவும் மறு முனையில் பேசியவர் கூறியுள்ளார். இதையடுத்து இத்தகவலை கர்நாடக டிஜிபிக்கு அந்த சப் இன்ஸ்பெக்டர் தெரிவித்தார். அவர் தமிழக டிஜிபிக்கு தகவல் தெரிவ…

  20. இந்திய பெண்களை மணந்த வெளிநாட்டினர் கொடைக்கானல்: கொடைக்கானலில் இந்திய கலாசார முறைப்படி, வெளிநாட்டினர் இருவர் இந்திய பெண்களை திருமணம் செய்து கொண்டனர். கொடைக்கானல் இந்திரா நகரைச் சேர்ந்தவர் காமு. இவரது மகள்கள் செல்வி, சாந்தகுமாரி. கிரீசிலுள்ள ஏதென்ஸ் நகரைச் சேர்ந்தவர்கள் வாசிலியோஸ், மெலியோஸ். சுற்றுலா வந்த இவர்கள் இந்திய கலாசாரம் மீது பற்றுதல் ஏற்பட்டதால் தாங்கள் கொடைக்கானல் பெருமாள் மலை அருகே உள்ள அடுக்கம் பகுதியில் நான்கு ஏக்கர் நிலம் வாங்கி வசித்து வருவதாகவும், இந்திய பெண்களை திருமணம் செய்ய வேண்டும் என்று பாம்பார்புரம் ஆல்பர்ட் என்பவரிடம் தெரிவித்துள்ளனர். பின்னர் அவர்களை பற்றி ஆல்பர்ட், காமுவிடம் தெரிவித்துள்ளார். காமுவின் மகள்கள் செல்வி, சாந்தகுமாரி ஆகிய…

  21. பிரதமர் பதவிக்கு ஏங்கும் ஜெயலலிதா; மூன்றாவது அணிக்கனவு நனவாகுமா? தமிழக முதல்வர் கதிரையில் அனாயாசமாக உட்கார்ந்த ஜெயலலிதா, அத்துடன் திருப்தி அடையத் தயாரில்லை. நெடுகாலமாகவே அவர் மனதிலுள்ள கனவு நாட்டின் பிரதமராவது என்பதாகும். அவரது முக்கிய குணாம்சங்களில் ஒன்றான பழி தீர்க்கும் பழக்கத்துடன் தொடர்புடையதே அவரது பிரதமர் கனவும். அதாவது மாநில மட்டத்தில் தன்னை சிறை அனுப்பிய கருணாநிதியை பழி தீர்க்க நள்ளிரவில் அவரை கைது செய்து நடுத்தெருவில் இழுத்துச் சென்றார். அவ்வாறே தேசிய அளவில் தன்னை எடுத்தெறியும் பி.ஜே.பி. யையும் காங்கிரஸையும் பழி தீர்க்க இந்த இரு தரப்பையும் சாராத மூன்றாவது அணியை உருவாக்கி அதன் மூலம் பிரதமராக நெடுநாட்களாக கனவு காண்கிறார். தி.மு.க.வும் காங்கிரஸ் க…

  22. அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு; 3 பேர் சாவு-மர்ம நபர் சுட்டுக் கொலை! கான்சாஸ் சிட்டி: அமெரிக்காவின் கான்சாஸ் சிட்டி நகரில் ஒரு மர்ம நபர் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 3 பேர் இறந்தனர். கடைசியில் அந்த நபரை போலீஸார் சுட்டுக் கொன்றனர். விர்ஜீனியா டெக் பல்கலைக்கழகத்தில் நடந்த வெறித்னமான துப்பாக்கிச் சூடு சம்பவமே இன்னும் உலக மக்களின் நினைவிலிருந்து மறையவில்லை. இந்த நிலையில் அதேபோன்ற ஒரு சம்பவம், கான்சாஸ் சிட்டி நகரில் உள்ள வணிக வளாகத்தின் கார் பார்க்கிங்கில் நடந்துள்ளது. இதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து கான்சாஸ் சிட்டி காவல் அதிகாரி டோனி சாண்டர்ஸ் கூறுகையில், ஒரு மர்ம நபர் நேற்று இரவு கான்சாஸ் சிட்டியில் உள்ள முக…

    • 2 replies
    • 1.1k views
  23. நீ...ண்ட சாதனை! சமஷ்டிபூர்: பீகார் மாநிலம், சமஷ்டிபூர் மாவட்டத்தில் உள்ளது மாணிக்கா கிராமம். அதைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் லகான். கயிறு திரிப்பதுபோல இரண்டு பேர் இரண்டு பக்கம் இழுத்துப் பிடிப்பது, லகானின் தலைமுடி, தாடியைத்தான். அவரது தலைமுடி நீளம் 13 அடி. தாடியின் நீளமோ 19 அடி 7 அங்குலம். இத்தனை நீளத்தையும் இவ்வளவுநாள் சுருட்டி வைத்துப் பராமரித்துப் பாதுகாத்து வருகிறார் லகான். இதைவிட சிறிய விஷயங்கள் எல்லாம் வெளியே பெரிதாகிக் கொண்டிருப்பதாக கிராமத்தினர் சொல்லவே, தனது சாதனை முடி வளர்ப்பை வெளி உலகுக்கு காட்டப் புறப்பட்டு விட்டாராம் லகான். விரைவில் சாதனைப் புத்தகங்களின் கதவை அவர் தட்டப் போகிறார். தினகரன்

    • 3 replies
    • 1.3k views
  24. வெடித்துச் சிதறும் குளோரின் நிரப்பரப்பட்ட வாகனங்கள் ஈராக்கில் குளோரின் வாயு நிரப்பப்பட்ட வாகனங்களை வெடிக்க வைப்பதன் மூலம் பாரிய உயிரிழப்புகளை ஏற்படுத்தி வரும் தீவிரவாதிகள், இரசாயன போர் முறையில் புதிய பரிணாமத்தை உருவாக்கி வருகின்றனர். ஈராக்கின் இஸ்லாமிய தீவிரவாதிகள் இரசாயன குண்டுகளை உருவாக்கும் திறன் படைத்தவர்களாக மாறியுள்ளனரா என்ற அச்சத்தை மேற்குலகில் இருந்து ஏற்படுத்தியுள்ளது. ஜனவரி 28 இற்கு பின்னர், ஈராக்கில் தீவிரமாகியுள்ள குளோரின் வாயு தாக்குதல்களில் இதுவரை 500 இற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஈராக்கின் அன்பர் பிராந்தியத்திலேயே முதன் முதலில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் ரமாடி, பலுஜா என முக்கிய நகரங்கள் அனைத்தும் குளோரின…

  25. ஆயுத உதவி விவகாரத்திலும் கருணாநிதி நழுவல் போக்கு -(கலைஞன்) [29 - April - 2007] * ஈழப்பிரச்சினையும் இந்தியாவும்... இலங்கை இராணுவத்திற்கு இந்திய அரசு மீண்டும் ஆயுத தளபாட உதவிகளை வழங்கியிருப்பது தமிழக மக்களிடையேயும் அரசியல் கட்சிகளிடையேயும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை இராணுவத்திற்கு இந்தியா வழங்கும் ஆயுதங்களினால் அப்பாவி ஈழத் தமிழர்களே கொன்று குவிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டும் தமிழகக் கட்சிகள் இலங்கைக்கு இந்தியா ஆயுத உதவிகள் வழங்குவதை கடுமையாக எதிர்த்து வருகின்றன. ஆனாலும் தமிழகக் கட்சிகளின் எதிர்ப்பையும் ஈழத் தமிழர்கள் இலங்கை இராணுவத்தால் கொன்றொழிக்கப்படுவதையும் ஒரு பொருட்டாகவே மதிக்காத இந்திய அரசு, இலங்கை அரசு இராணுவ உதவி கோரும் போ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.