உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26593 topics in this forum
-
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டனம் அருகே நடுக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி, மீனவர்களை கடுமையாக தாக்கிக் காயப்படுத்தினர். கோட்டைப்பட்டனத்திலிருந்து 16ம் தேதி ஆரோக்கியசாமி, மருத்தி, ராசப்பன் உள்ளிட்ட நான்கு மீனவர்கள் 2 படகுகளில் மீன் பிடிக்கச் சென்றனர். இவர்கள் அய்யன்பட்டி என்ற மீனவ கிராமத்øத் சேர்ந்தவர்கள். கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு இலங்கை கடற்படையினர் வந்து தமிழக மீனவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் மீனவர்களின் ஒரு படகு உடைந்தது. இதையடுத்து நான்கு மீனவர்களும் தாங்கள் வந்த இன்னொரு படகில் ஏறித் தப்பினர். ஆனால் படகில் இருந்த மீனவர்களை இ…
-
- 0 replies
- 712 views
-
-
by Reidar Visser Over the past year, increasing numbers of American commentators have suggested various “territorial” solutions designed to extricate U.S. forces from Iraq. These proposals have come in several guises, involving different degrees of decentralization and compartmentalization: “Soft partition,” “controlled devolution,” and “Dayton-style détente” (a reference to the 1995 Bosnian settlement) are but a few of the concepts that have kept policymakers in Washington busy of late. All these proposals assign a role to foreign hands in drawing up internal federal or confederal border lines that would drastically reshape the administrative map of Iraq. At the …
-
- 4 replies
- 1.2k views
-
-
அமெரிக்க அதிபர் புஷ்ஷுக்கு அறுவை சிகிச்சை வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் புஷ் நெற்றி பொட்டில் இருந்த இரண்டு கரும்புள்ளிகள் சிறு அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன. அந்த கரும்புள்ளிகள், புற்று நோய்க்கான அறிகுறியா என்பது குறித்து அறிய பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் புஷ் தனது இடது நெற்றி பொட்டில் சிறிய கரும்புள்ளி இருப்பதாக கடந்த வாரம் குடும்ப டாக்டரிடம் தெரிவித்தார். அப்போது, அந்த டாக்டர் மற்றொரு கரும்புள்ளி இருப்பதையும் சுட்டிக் காட்டினார். அதையடுத்து, நேற்று முன்தினம் வால்டர் ரீட் மருத்துவ மையத்தின் தோல் நோய் நிபுணர் ஸ்டீவ் கிரிவ்டா, அதிபர் புஷ்ஷுக்கு சிறிய அறுவை சிகிச்சை செய்து அந்த இரண்டு கரும்புள்ளிகளையும் அகற்றினார். முன்னதாக அதிப…
-
- 2 replies
- 1.4k views
-
-
கர்நாடகா தமிழர்கள் தமிழகத்துக்கு படையெடுப்பு மேட்டூர்: காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து, நிலவும் பதட்டம் மற்றும் அச்சம் காரணமாக கர்நாடகா வாழ் தமிழர்கள் தற்போது தமிழகத்துக்கு படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக வாகனங்கள் கர்நாடகா மாநிலத்துக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கர்நாடகா அரசு காவிரி ஆற்றில் கிடைக்கும் நீரில் ஆண்டுதோறும் 270 டி.எம்.சி., நீரை பயன்படுத்த வேண்டும். தமிழகத்துக்கு 419 டி.எம்.சி., நீரை விடுவிக்க வேண்டும் என காவிரி நடுவர் நீதிமன்றம் நேற்று இறுதித்தீர்ப்பு வழங்கியது. தமிழகத்துக்கு சாதகமாக நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியதால், கர்நாடகாவில் கடும் பதட்டம் நிலவுகிறது. கர்நாடகா மாநிலத்தின் தமிழர்கள் அதிகமாக…
-
- 48 replies
- 7.1k views
-
-
டெல்லி: ஐ.நா. பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிட்டு தோற்ற சசி தரூர், மத்திய வெளியுறவு இணை அமைச்சராக நியமிக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சசி தரூர் ஐ.நா. துணைப் பொதுச் செயலாளராக இருந்தவர். பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் முதல் சுற்றிலேயே தோற்றுவிட்டார். இதனால் கடைசி சுற்றில் இருந்து விலகிக் கொண்டார். புதிய பொதுச் செயலாளராக பான் கி மூன் பதவியேற்ற பின்னர் சமீபத்தில் தனது ஐ.நா. பதவியை விட்டு விலகினார் தரூர். இந்த நிலையில் தரூர், விரைவில் மத்திய வெளியுறவு இணை அமைச்சராக பொறுப்பேற்பார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்ட மலையாளியான சசி தரூருக்கு அமைச்சர் பதவியை வாங்கித் தர கேரள சேர்ந்த லாபி தீவிரமாக களமிறங்கிய…
-
- 0 replies
- 752 views
-
-
சென்னை: காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு குறித்து தமிழக அரசு நடத்தவுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டம், விடுதலைப் புலிகளின் ஆயுதக் கடத்தல் உள்ளிட்டவை குறித்து முதல்வர் கருணாநிதி தலைமையில் இன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. வருகிற 19ம் தேதி காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புதொடர்பாக விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிலையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் கருணாநிதி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், 200708ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை, சட்டம் ஒழுங்கு, விடுதலைப் புலிகளின் ஆயுதக் கடத்தல் உள்ளிட்டவை குறித்தும…
-
- 0 replies
- 677 views
-
-
டெல்லி: கோடியக்கரை அருகே பெருமளவிலான ஆயுதங்கள் பிடிபட்டிருப்பதும், விடுதலைப் புலிகள் கைது செய்யப்பட்டிருப்பதும் கவலை தருவதாக பாஜக கூறியுள்ளது. இதுகுறித்து டெல்லியில் பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் கூறுகையில், தமிழக கடலோரப் பகுதியில் பெருமளவில் ஆயுதங்கள் பிடிபட்டிருப்பதும், விடுதலைப் புலிகள் கைதாகியிருப்பதும் கவலை தரும் விஷயமாகும். இந்த ஆயுதங்கள் ஆந்திர மாநில நக்சலைட்டுகளுக்கு அனுப்பப்பட்டவை என்றும் கூறப்படுகிறது. விடுதலைப் புலிகளால் இந்தியாவுக்கு ஒருபோதும் ஆபத்து ஏற்பட வாய்ப்பில்லை. இருந்தாலும் இந்தியாவுக்குள் இதுபோன்ற செயல்பாடுகள் நடப்பதை அனுமதிக்க முடியாது. இதைத் தடுக்க உரிய நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என்றார் அவர் …
-
- 0 replies
- 704 views
-
-
ஜே.வி.பி ஒரு மணி நேரம் தூங்கினால்- நாட்டின் அரைப்பங்கை அமெரிக்கா சூறையாடிவிடும்: சோமவன்ச அமரசிங்க [சனிக்கிழமை, 17 பெப்ரவரி 2007, 09:22 ஈழம்] [காவலூர் கவிதன்] கொழும்பின் புறநகர்ப் பகுதியான நுகேகொடவில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற ஜே.வி.பி. யின் ஆர்ப்பாட்டப் பேரணியில், சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரத்தில் அமெரிக்கா மூக்கை நுழைப்பதாக வன்மையான கண்டனம் முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்வில் ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க தனதுரையில் தெரிவித்துள்ளதாவது: "தற்போதைய சூழ்நிலையில், ஜே.வி.பி. விழித்திருந்து அவதானத்துடன் நாட்டைப் பாதுகாத்து வருகின்றது. தற்செயலாக ஜே.வி.பி.யினர் ஒரு மணிநேரம் கண்மூடித் தூங்கினால், நாட்டின் அரைவாசிப் பகுதியை அமெரிக்கா களவாடிச் ச…
-
- 4 replies
- 1.3k views
-
-
புஷ்ஷுக்கு ஹிலாரி எச்சரிக்கை அமெரிக்க பாராளுமன்றத்திடம் அனுமதி பெறாமல், ஈரான் மீது படை எடுக்க வேண்டாம் என்று எச்சரித்தார் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷை ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஹிலாரி கிளிண்டன். முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டனின் மனைவியான ஹிலாரி, நியூயோர்க் நகரிலிருந்து பாராளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். தொழில் ரீதியாக சிறந்த வழக்கறிஞர். அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக போட்டியிடக்கூடியவர். சர்வதேச அரசியல் விவகாரங்களில் அதிக அக்கறை காட்டுகிறவர். அவருடைய எச்சரிக்கை முக்கியத்துவம் வாய்ந்தது. அமெரிக்க பாராளுமன்றத்தில் புதன்கிழமை பேசிய ஹிலாரி இந்த எச்சரிக்கையை விடுத்தார். "ஈரானுக்கு எதிராக போர் தொடுப்பது அவசியம் என்று நிர்…
-
- 0 replies
- 561 views
-
-
இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான யோசனைகள் விரைவில் முன்வைக்கப்படவிருப்பதாக உயர்கல்வி அமைச்சர் பேராசிரியர் விஸ்வ வர்ணபால அமெரிக்கத் தூதுவர் ஓ பிளக்கிடம் உறுதியளித்துள்ளார். நேற்று முன்தினம் வியாழக்கிழமை வாட்பிளேஸில் அமைந்துள்ள உயர்கல்வி அமைச்சில் அமைச்சருக்கும் அமெரிக்கத் தூதுவருக்குமிடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இனநெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் ஒன்றுகூடி ஜனாதிபதி தலைமையில் பலசுற்று மாநாடுகள் நடைபெற்றுள்ளதையும் இங்கு அமைச்சர் அமெரிக்கத் தூதுவரிடம் விளக்கியுள்ளார். அத்துடன், சர்வகட்சிப் பிரதிநிதிகள் ஒன்றுகூடி இனநெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான யோசனைகளை முன்வைத்து அதுகுற…
-
- 0 replies
- 661 views
-
-
அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருக்கும் மங்கள சமரவீரவை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க வியாழக்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக அறிய வருகிறது. முன்னாள் அமைச்சர்கள் இருவர் அரசாங்கத்துடன் முரண்பட்டிருக்கும் சூழ்நிலையில் இவர்களுடன் இணைந்திருந்து பின்னர் ஜனாதிபதியுடன் சமரசத்தை ஏற்படுத்திக் கொண்ட அநுரா பண்டாரநாயக்கவின் 58 ஆவது பிறந்ததினக் கொண்டாட்டம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை (15 ஆம் திகதி) கொழும்பிலுள்ள விசும்பாயாவில் விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொள்வதற்காக இலங்கைக்கு புதன்கிழமை நள்ளிரவு வருகை தந்த முன்னாள் ஜனாதிபதியும் அநுராவின் சகோதரியுமான சந்திரிகா குமாரதுங்கவும் விசும்பாயாவிற்கு சென்று சகோதரனுக்கு வாழ்த்துத் தெரிவித்ததுடன…
-
- 0 replies
- 666 views
-
-
Germany’s Balkan Coup By Gareth Fraser (May 2001) Unrest in Macedonia is the final piece of the puzzle. Here’s how German-led Europe conquered the Balkans in just a decade. “It is our inflexible purpose to destroy German militarism and Nazism and to ensure Germany will never again be able to disturb the peace of the world,” wrote Winston Churchill in a signed document with Franklin Roosevelt after World War ii (emphasis mine here and throughout). The past decade of Balkan destabilization sadly proves this noble three-pronged goal an abject failure. Why? First: German militarism is being encouraged by the involvement of German combat forces in the Balk…
-
- 0 replies
- 757 views
-
-
அமைதியில் ஜெ 'மயான' அமைதியில் வைகோ! பிப்ரவரி 16, 2007 சென்னை: தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கின் பரபரப்பான தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தரப்பிலிருந்து எந்தக் கருத்தும் வெளியாகாமல் ஆழ்ந்த அமைதி நிலவுகிறது. அதேபோல இந்த சம்பவத்தை எல்லா மேடைகளிலும் ஹைபிட்சில் பேசி வந்த ஒரே அரசியல்வாதியான வைகோவும் எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் படு சைலன்ட்டாக இருக்கிறார். இந்தியாவை உலுக்கிய பரபரப்புச் சம்பவங்களின் வரிசையில், இடம் பெற்ற கோர நிகழ்வு தர்மபுரி பேருந்து எரிப்பு. 3 அப்பாவி மாணவிகளை உயிரோடு கருக்கிய கொடூரச் செயலால் நாடே அதிர்ந்தது. தங்களது தலைவி ஜெயலலிதாவுக்கு தண்டனை கொடுத்து விட்டார்கள் என்ற காரணத்துக்காக தமிழ்நாட்டையே வன்முறைக் …
-
- 3 replies
- 1.2k views
-
-
* தூக்கிலிடும் ஒருவர் பேசுகிறார் கொல்கத்தாவின் தென்பகுதியில் ஒரு சிறிய குடிசையில் வாசம் செய்யும் 87 வயதான நாட்ட முல்லிக் பெருமையுடனும் அமைதியாகவும் தூக்குத்தண்டனை நிறைவேற்றும் தனது நடுக்கத்தை ஏற்படுத்தும் தனது வாழ்க்கையையும் 2 வருடங்களுக்கு முன்னர் தனது புகழை சர்வதேச ரீதியில் உயர்த்திய கடைசி கடமையையும் நினைவு கூருகிறார். உலகளாவிய ரீதியில் ஊடகங்கள் தமது கவனத்தை முல்லிக்மீது செலுத்தி அவர் கொலைக்குற்றமும் பாலியல் வல்லுறவும் சாட்டப்பட்ட டனொன் ஜேசட்டர் ஜீயின் தூக்குத்தண்டனையை நிறைவேற்ற அசாதாரண தூக்குத்தண்டனை நிறைவேற்றுபவர் என்ற ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற தூக்குத்தண்டனை சம்பந்தமான உணர்ச்சிபூர்வமான வாதப்பிரதிவாதங்கள் முல்லிக்கை புகழின் உச…
-
- 0 replies
- 901 views
-
-
'விடுதலைப் புலிகளுடன் நேரடியாக பேச பிரித்தானியா விருப்பம்': ஹிம் ஹாவெல் [வெள்ளிக்கிழமை, 16 பெப்ரவரி 2007, 03:11 ஈழம்] [க.திருக்குமார்] "இரு தசாப்தங்களாக இடம்பெற்று வரும் வரும் இனப்போரை முடிவுக்கு கொண்டுவரும் பொருட்டு சிறிலங்காவில் முடங்கிப்போய் உள்ள அமைதிப் பேச்சுக்களில் முக்கிய பங்காற்றவும், விடுதலைப் புலிகளுடன் நேரடியாக பேசுவதற்கும் பிரித்தானியா விருப்பம் கொண்டுள்ளதாக" சிறிலங்காவிற்கு மூன்று நாள் பயணமாக சென்றிருக்கும் பிரித்தானிய வெளிவிவகாரத்துறை மற்றும் கொமன்வெல்த் நாடுகளுக்கான அமைச்சர் கலாநிதி கிம் ஹாவெல் தெரிவித்துள்ளார். நேற்று வியாழக்கிழமை இது தொடர்வில் அவர் தெரிவித்துள்ளதாவது: "சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச பேச்சுக்களுக்கு பச்சைக்…
-
- 2 replies
- 1.1k views
-
-
மேற்குலகில் உள்ள வளர்ந்த நாடுகளில் 5வது பணக்கார நாடக பட்டியலிடப்பட்டுள்ள பிரிட்டன் சிறுவர்கள் கவனிப்பில் இறுதி இடத்தில் உள்ளது. இத்தகவலை யுனிசெவ் வெளியிட்டுள்ளது. மண முறிவுகளால் எற்படும் குடும்பப் பலவீனங்கள் மற்றும் அம்மா அப்பா அடிக்கடி தங்கள் துணைகளை மாற்றிக் கொள்ளுதல் சிங்கிள் மதர் என்று தங்கட பாட்டையே பார்க்க எண்ணும் பெண்கள் என்போரால் குழந்தைகள் பராமரிப்பற்று அன்பற்று விடப்படுவது பிரித்தானியாவில் மிக அதிகரித்துள்ளது. 1. வறுமை 2. 11 - 15 வயதுள்ள சிறுவர்களிடம் பாலியல் போதைப்பொருள் பாவனை வன்முறை மிக அதிகரித்துள்ளமை 3. கல்வியை இடைநடுவில் கைவிடும் தன்மை 4. அன்பற்ற சூழலை எதிர் கொள்ளல் 5. சரியான நிர்ப்பீடணம் வழங்காமல் இறக்கும் குழந்தைகள் நிலை …
-
- 22 replies
- 2.9k views
-
-
ரஜினிகாந்த் உண்ணாவிரதம் இருக்க தமிழக பாரதிய ஜனதா அழைப்பு சென்னை: காவிரி பிரச்னையில் நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து ரஜினிகாந்த் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த வேண்டும். நடிகர் விஜயகாந்த் மக்களுக்கு எதுவும் செய்யப் போவதில்லை. அவரது கட்சி வேட்பாளருக்கு வாக்களித்து ஏமாற வேண்டாம், என்று பா.ஜ., மாநில பொதுச் செயலர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது: வேலுõரில் நடந்த பா.ஜ., மாநில செயற்குழுக் கூட்டத்தில் விலைவாசி உயர்வை கண்டித்தும், மக்கள் விரோத அரசின் செயல்பாடுகளை கண்டித்தும் மாநிலம் முழுவதும் ஆயிரம் பொதுக் கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் விலைவாசி உயர்வ…
-
- 4 replies
- 1.1k views
-
-
பிக் பிரதர் நிகழ்ச்சியின்போது கிளம்பிய இனவெறி சர்ச்சை ஒரு நாடகம் என்று கூறப்படுவதற்கு ஷில்பா ஷெட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். லண்டனைச் சேர்ந்த சேனல் 4 நிறுவனத்தின் பிக் பிரதர் நிகழ்ச்சியில் நடிகை ஷில்பா ஷெட்டி கலந்து கொண்டு வெற்றி பெற்றார். நிகழ்ச்சியின்போது இங்கிலாந்து நடிகை ஜேட் கூடி உள்ளிட்ட சில பெண்கள் ஷில்பாவை இனவெறி வார்த்தைகளால் சீண்டி திட்டி ரகளை செய்தனர். இதனால் அவர்கள் போட்டியிலிருந்து நீக்கப்பட்டனர். ஷில்பா வெற்றி பெற்றார். இந்த நிலையில் இந்த இன வெறி சர்ச்சையே ஒரு பெ>ய நாடகம் என புதிய புகார் கிளம்பியுள்ளது. இதுதொடர்பாக பிக் பிரதர் நிகழ்ச்சியை வடிவமைத்தவரான பாரூக் டோண்டி என்பவர், இந்த நிகழ்ச்சியை பிரபலமாக்கவே இதுபோ…
-
- 6 replies
- 1.5k views
-
-
Condoleezza Rice நினைவில் ஏங்குகின்றேன்..வெனிசுலா நாட்டு ஜனாதிபதி Hugo Chavez , அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் Condoleezza Rice க்கு காதலர்தினநாளில் சிறப்பு வாழ்து ஒன்றை அனுப்பியுள்ளார். அமெரிக்காவுக்கும் George Bushக்கும் எதிரான நகர்வுகளை நடைமுறைப்படுத்துவதே Chavez அவரின் முதல்வேலை.. அதன் அடுத்தகட்டமாக காதலர்தின நாளின்போது அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் Condoleezza Rice க்கு "செய்தி" ஒன்றை அனுப்பியுள்ளார். More...
-
- 9 replies
- 1.9k views
-
-
கறுப்பினத்தவர் அமெரிக்க ஜனாதிபதியாக முடியுமா? ஒபாமா வெற்றிபெறுவாரெயானால், அது பயங்கரவாதிகளின் வெற்றியாக அமையும் அவுஸ்திரேலிய - ஒபாமாவின் தந்தையார் ஒரு முஸ்லிம் [Wednesday February 14 2007 07:04:03 AM GMT] [thinakkural.com] அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் போட்டி ஆரம்பமாகிவிட்டது. அதில் உலகின் கவனத்தை இப்போது வெகுவாக ஈர்த்திருப்பது ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் நியமனத்தைப் பெறுவதற்காக முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனின் மனைவியும் நியூயோர்க் மாநில செனட்டருமான ஹிலாரி கிளின்டனுக்கும் கறுப்பினத்தவரான இலினோயிஸ் மாநில செனட்டரான பராக் ஒபாமாவுக்கும் இடையே மூண்டிருக்கும் போட்டியாகும். இந்த இருவரில் எவருக்கென்றாலும் ஜனநாயகக் கட்சியின் நியமனம் கிடைத்து 2008 நவம்பரில் நட…
-
- 8 replies
- 1.7k views
-
-
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான யதார்த்தமான வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் முதல் ஆப்ரிக்க அமெரிக்கர் தான் தேர்தலில் போட்டியிடப் போவது குறித்து அறிவித்துள்ளார் ஆப்ரிக்க இனப் வேட்பாளர் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான யதார்த்தமான வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் முதல் ஆப்ரிக்க அமெரிக்கர் தான் தேர்தலில் போட்டியிடப் போவது குறித்து அறிவித்துள்ளார். ஜனநாயகக் கட்சியை சேர்ந்த செனட்டரான பார்ரக் ஒபாமா தனது பிரச்சாரத்தை இல்லினாய்ஸில் இருந்து உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கின்றார். இணையத்தில் தனது ஆதரவாளர்களுக்கு அவர் விடுத்துள்ள வீடியோ செய்தியில், ஒரு பெரும் பயணத்தை தாங்கள் ஆரம்பிப்பதாகவும், அரசியலில் குற்றம் காணுவதை விட்டுவிட்டு, மக்களின் அன்றாட வ…
-
- 2 replies
- 1.3k views
-
-
உலக முழுவதும் அழிய நேரிட்டு, பின் யாராவது பிழைத்திருந்தால்,அவர்கள் வேளாண் தொழில் செய்ய விதைகள் வேண்டும். ஊழி காலத்தில் பைபிளில் சொல்லப்பட்ட நோஆ கதையை போல், எல்லா உணவு பொருட்களின் வித்துக்களையும்., விதைகளையும் அழிந்து போகாதவாறு ஒரு பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்து காக்க நார்வே அரசு முடிவு செய்துள்ளது. அந்த பெட்டகத்தை வட துருவத்தில் உள்ள ஸவல்பர்ட் தீவுக்கூட்டத்தில் ஸவல்பர்ட் தீவுக்கூட்டம் , வட துருவம் ] உள்ள மலையில் கடல் மட்டத்திலிருந்து 130 மீட்டர் உயரத்தில் 120 மீட்டா குடைந்து , குகை ஏற்படுத்தி அதில் இரண்டு அடுக்கு அறைகட்டி அதனுள் பாதுகாப்பாக வைக்கப்படும்.இப்பெட்டகத்தில
-
- 0 replies
- 841 views
-
-
வண்ணத்துபூச்சிகளின் ஊர்வலம் வண்ணத்துப்பூச்சிகள் டிசம்பர்-ப்பிரவரி ஆகிய மாதத்தில் கூட்டம்கூட்டமாக விசாகப்பட்டணத்திற்கு மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து பறந்து இடம்பெயர்கின்றன. இவைகள் உணவுக்காகவும், தங்களது இனப்பெருக்கத்துக்காகவும் இடம் பெயர்வதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பறவைகள் இடம் பெயர்வதற்கும், வண்ணத்துப்பூச்சிகள் இடம் பெயர்வதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. இடம் பெயர்ந்த பறவைகளும் அதன் குஞ்சுகளும் ஒன்றாக தங்களது தாயகம் செல்லும் .ஆனால் இங்கு திரும்ப செல்வது புதிதாக பிறந்த வண்ணத்துபூச்சிகள். இயற்கை விந்தையே அலாதியானதுதான் -வே .பிச்சுமணி see page 20 Hindu on 11.2.07
-
- 0 replies
- 787 views
-
-
பிரான்ஸின் அதிவேக தொடரூந்து TGV யானது பாரிஸிற்கும் ஸ்ராஸ்பூர்க்கிற்குமிடையாலா
-
- 1 reply
- 1.1k views
-
-
ஆறு கிலோ தலையுடன் 2 வயது குழந்தை * தவியாய் தவிக்கும் ஏழை பெற்றோர் மருத்துவ செலவை அரசு ஏற்குமா? கரூர்: "ஆறு கிலோ எடையுடன் கூடிய தலையுடன் கரூரில் அவதிப்படும் இரண்டு வயது குழந்தையின் மருத்துவ செலவை அரசு ஏற்க முன்வர வேண்டும்' என குழந்தையின் பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கரூரை அடுத்த பாலம்மாள்புரத்தை சேர்ந்தவர் சங்கர்(27). லாட்ஜில் துப்புரவு தொழிலாளியாக உள்ளார். இவருடைய மனைவி பூங்கொடி. 2004ல் இவர்களுக்கு திருமணம் முடிந்து இரண்டு வயதில் ஆண் குழந்தை உண்டு."ராமகிருஷ்ணன்' என பெயர் சூட்டப்பட்ட இந்த குழந்தை பிறந்த மூன்றாவது மாதத்தில் தலை மட்டும் வளர்ச்சியடைய துவங்கியது. சளி பிடித்ததால் தலை வீக்கம் அடைந்துள்ளது என நினைத்து பெற்றோர் அதற்கான சிகிச்சை அளித்தனர்.ஆனால…
-
- 1 reply
- 2.1k views
-