உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26628 topics in this forum
-
அமெரிக்கர்கள் பிறவியிலேயே புத்திசாலிகள் : ஒபாமா பெருமிதம். வாஷிங்டன்: கண்டுபிடிப்புகள் அமெரிக்கா மக்களின் டி.என்.ஏ.வில் கலந்துள்ளதாக ஒபாமா பாராட்டியுள்ளார். அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் ஆண்டு தோறும் அறிவியல் கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கண்காட்சியில், அமெரிக்காவின் பல மாகாணங்களில் இருந்து வந்துள்ள மாணவர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளை பார்வைக்கு வைத்துள்ளனர். இந்த மாணவர்களிடையே உரையாற்றிய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியதாவது:- பொறியியல், அறிவியல் கண்டுபிடிப்புகள், புதிய கண்டறிதல்கள் ஆகியவற்றை மேற்கொள்வதில் அமெரிக்கா அதிக முனைப்பு காட்டியுள்ளது. அதுதான் நாம். அது நமது டி.என்.ஏ.வில் கலந்துள்ளது. இது போன்ற கண்டுபிடிப்புகளால் தான் நமது நாடு உலகி…
-
- 5 replies
- 919 views
-
-
பிரித்தானியாவின் நிலக்கீழ் புகையிரத சேவை பணிப்புறக்கணிப்பால் பாதிப்பு – பலமில்லியன் பயணிகள் அவதி:- பிரித்தானியாவின் பொதுப் போக்குவரத்து தொழிலாளர்கள், பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமையினால், பல மில்லியன் பொது மக்கள், அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர். இன்று காலை குறித்த போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், நாடாளாவிய ரீதியில் போக்குவரத்துளை மேற்கொள்வதில், மக்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்வதனை அவதானிக்க கூடியதாக இருந்தது என, குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் பணிப் புறக்கணிப்புப் போராட்டங்களால் நான்கு மில்லியன் மக்கள் அவதியுறும் நிலை ஏற்பட்டுள்ளது ! …
-
- 0 replies
- 315 views
-
-
ஜெயலலிதா பிரதமரானால் இலங்கை பிரச்சினை முழுமையாக தீரும் - நாஞ்சில் சம்பத் கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் நகர அ.தி.மு.க. சார்பில் தமிழக அரசின் நிதிநிலை விளக்கப்பொதுக் கூட்டம் பேருந்து திடலில் நடந்தது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அ.தி.மு.க. துணை கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசிய போது, ’’இலங்கை பிரச்சினைகளை தீர்க்க தமிழக முதல்வர் தொடர்ந்து முழு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது உள்ளிட்ட துணிச்சலான நடவடிக்கைகளால் உலக முழுவதும் வலுவான அதிர் வலைகளை ஏற்படுத்தியுள்ளார். இந்தியாவிற்கு விரோதமான செயல்களில் ஈடுபட்டு வரும் இலங்கையை இனியும் நட்பு நாடாக கருதக் கூடாது என முதல்வர் தெரிவிப்பதை மத்திய அரசு கேட்க வேண்டும…
-
- 0 replies
- 2.4k views
-
-
சீனா தயாரித்த முதல் பயணியர் விமானத்தின் வெள்ளோட்டம் சீனாவில் தயாரிக்கப்பட்ட முதலாவது பெரிய பயணியர் விமானம், அதனுடைய முதலாவது பயணத்தை மேற்கொண்டுள்ளது. போயிங் மற்றும் ஏர்பஸ் நிறுவனங்களுக்கு மாபெரும் சவாலாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகளாவிய விமானச் சந்தையில் நுழைவதற்கு சீனாவின் அதிகரித்துள்ள அபிலாஷையின் முக்கிய அடையாளமாக சி919 விமானம் பார்க்கப்படுகிறது சர்வதேச விமான சந்தையில் கால்பதிக்க எண்ணியுள்ள சீனாவுக்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது. போயிங் மற்றும் ஏர்…
-
- 2 replies
- 711 views
-
-
அலெக்ஸி நவால்னிக்கு... விஷம் கொடுக்கப்பட்ட விவகாரம்: ஏழு ரஷ்ய குடிமக்களுக்கு பிரித்தானியா தடை! கிரெம்ளின் விமர்சகர் அலெக்ஸி நவால்னிக்கு விஷம் கொடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, ஏழு ரஷ்ய குடிமக்களுக்கு பிரித்தானியா தடை விதித்துள்ளது. இலக்கு வைக்கப்பட்ட ஏழு நபர்களும் ரஷ்ய கூட்டாட்சி பாதுகாப்பு சேவையின் உறுப்பினர்கள் ஆவர். இவர்களுக்கு சொத்து முடக்கம் மற்றும் பயணத் தடைகளை பிரித்தானியா விதித்துள்ளது. அமெரிக்காவுடன் எடுக்கப்பட்ட தடைகள், தாக்குதலைத் திட்டமிடுவதற்கு அல்லது நடத்துவதற்கு நேரடியாகப் பொறுப்பானவர்களை இலக்காகக் கொண்டது என்று பிரித்தானியா வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் கூறுகையில், ‘ரஷ்ய அரசாங்கத்தின் இரச…
-
- 0 replies
- 326 views
-
-
இந்தியா - பாகிஸ்தான் போட்டியை ஹாயாக கண்டுகளித்த விஜய் மல்லையா இந்திய வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு தற்போது லண்டனில் தஞ்சமடைந்துள்ள தொழிலதிபர் விஜய் மல்லையா, சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் மோதிய போட்டியை மைதானத்திற்கு நேரில் சென்று பார்த்துள்ளார். லண்டன்: இந்திய வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு தற்போது லண்டனில் தஞ்சமடைந்துள்ள தொழிலதிபர் விஜய் மல்லையா, சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் மோதிய போட்டியை மைதானத்திற்கு நேரில் சென்று பார்த்துள்ளார். இந்தியாவில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள…
-
- 5 replies
- 6k views
-
-
ஈரான் அணுசக்தித் தளங்களை கேமரா மூலம் கண்காணிக்க சர்வதேச அணுசக்தி முகமையுடன் உடன்பாடு 12 செப்டெம்பர் 2021 பட மூலாதாரம்,GETTY IMAGES தனது அணுசக்தி தளங்களை கேமராக்கள் மூலம் கண்காணிப்பதற்கு ஐ.நா அணுசக்தி கண்காணிப்புக் குழுவை அனுமதிக்க ஈரான் ஒப்புக் கொண்டுள்ளது. கேமராக்களின் மெமரி கார்டுகளை மாற்றுவதற்கும் சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) கண்காணிப்பாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள், ஆனால் அவை ஈரானிலேயே வைக்கப்பட வேண்டும். அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை நீக்க சம்மதம் தெரிவித்த பிறகே முக்கிய அணுசக்தி தளங்களில் இருந்து கேமராவில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளை ஒப்படைப்பதாக ஈரான் முன்பு கூறியிருந்தது. …
-
- 0 replies
- 166 views
- 1 follower
-
-
கனேடிய பொதுத் தேர்தல் ; மூன்றாவது முறையாகவும் பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ கனடாவின் 44 ஆவது பொதுத் தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி அடுத்த அரசாங்கத்தை உருவாக்க போதுமான இடங்களை வென்றுள்ளதாக அந் நாட்டுச் செய்திச் சேவையான சி.பி.சி. தெரிவித்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் ட்ரூடா மூன்றாவது முறையாகவும் தொடர்ச்சியாக கனடாவின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார். தேர்தல் வெற்றிகள் இன்னும் உறுதிபடுத்தப்படாத நிலையில், அதிகாரிகள் தொடர்ந்தும் வாக்குகளை கணக்கிட்டு வருகின்றனர். சி.பி.சி. செய்திச் சேவை திங்கள்கிழமை தாமதமாக, லிபரல் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்று அறிவித்தது. எனினும் சிறுபான்மை அரசாங்கம் அமைக்கப்படுமா அல்லது பெரும்பான்மை அரச…
-
- 28 replies
- 2k views
- 1 follower
-
-
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, வருகிற 2016ம் ஆண்டில் தனக்கு 70 வயது ஆகும் போது அரசியலில் இருந்து ஓய்வுபெற விரும்புவதாகவும், இதனால்தான் ராகுல் காந்திக்கு கட்சியில் மிகவும் முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும் ஒரு புத்தகத்தில் தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் இந்த கருத்தை காங்கிரஸ் மறுத்து உள்ளது. இதுபற்றி அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பி.சி.சாக்கோ கூறுகையில்; நான் அந்த செய்தியை படிக்கவில்லை. செயல்திறன்மிக்க சோனியா காந்தி தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர். எனவே யாரும் அப்படி எதிர்பார்க்க முடியாது என்று தெரிவித்தார். http://www.seithy.com/breifNews.php?newsID=94625&category=IndianNews&language=tamil
-
- 4 replies
- 566 views
-
-
ஆமதாபாத், குஜராத் மாநிலத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் கூறி வருகிறார் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பனாஸ்காந்தாவில் ராகுல் காந்தியின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை சென்று சந்திப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராகுலுக்கு எதிராக கருப்பு கொடி காட்டப்பட்டு உள்ளது. ராகுல் காந்தியின் கார் மீது கல் வீசப்பட்டு உள்ளது. இதனால் கார் கண்ணாடி உடைந்து உள்ளது. ராகுல் காந்திக்கு அதிர்ஷ்டவசமாக எந்தஒரு காயமும் ஏற்படவில்லை. விரைவில் ராகுல் காந்தி தன்னுடைய பயணத்தை தொடர்வார் எனவும் கூறப்படுகிறது. ராகுல் காந்திக்கு எதிராக கருப்பு கொடி காட்டி…
-
- 3 replies
- 344 views
-
-
டெல்லி: ஜம்மு-காஷ்மீரில் ராணுவத்தை விலக்க பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஆம் ஆத்மியின் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் பூஷண் அதிரடி கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் இது பிரசாந்த் பூஷணின் சொந்த கருத்து என ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் மறுப்பு தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவித்த பிரசாந்த் பூஷண், ஜம்மு காஷ்மீர் மக்கள் விரும்பினால் பொதுவாக்கெடுப்பு நடத்தி ராணுவ பாதுகாப்பை விலக்கி கொள்ளலாம் என்று கூறியிருந்தார். இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இது குறித்து பாஜக மூத்த தலைவர் அருண் ஜெட்லி கூறுகையில், காஷ்மீரில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் ராணுவத்தை திரும்ப பெறுவதற்கு பொதுவாக்கெடுப்ப…
-
- 4 replies
- 630 views
-
-
. பல் துலக்கியபடியே கார் ஓட்டினார் ஒரு பெண். அவரைப் போக்குவரத்துப் பொலிசார் தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தனர். இந்தச் சம்பவம் இங்கிலாந்தில் நடந்தது. இங்கிலாந்தில் போக்குவரத்து விதிகள் கடுமையாகக் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் கால்ட்ரா நியூ போர்ட் பகுதியில் ஒரு பெண் டிரைவர் கார் ஓட்டிச் சென்றார். மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் பறந்து சென்றபோது காரின் ஓரத்தில் உள்ள கண்ணாடியைப் பார்த்தவாறு பல் துலக்கினார். இதைப் பார்த்த போக்குவரத்து பொலிசார் அவரைத் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். காரை ஓட்டியபடி இது போன்ற செயல்களில் ஈடு படக்கூடாது என்று அறிவுரை கூறினர். மேலும் அவரது செயலுக்காக ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து எச்சரிக்கை செய்தனர். இந்தச் சம…
-
- 2 replies
- 623 views
-
-
டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மீது கடந்த ஆண்டு ஷூ வீசி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பத்திரிக்கையாளர் ஜர்னைல் சிங் டெல்லி கோர்ட்டில் தாக்கப்பட்டார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்து ப.சிதம்பரம் பேட்டி அளித்துக் கொண்டிருந்தபோது ஜர்னைல் சிங் என்ற பத்திரிக்கையாளர் ஷூவை வீசி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில் டெல்லியில் இந்திரா காந்தி படுகொலைக்குப் பின்னர் சீக்கியர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை வெறியாட்ட வழக்கில் தொடர்புடைய காங்கிரஸ் கட்சியின் சஜ்ஜன் குமார் உள்ளிட் 10 பேருக்கு டெல்லி கோர்ட் இன்று ஜாமீன் அளித்தது. இதுதொடர்பான வழக்கை பார்வையிட ஜர்னைல் சிங், சிபிஐ தரப்பு சாட்சியான நிர்பிரீத் கவுர் என்பவருடன் …
-
- 1 reply
- 410 views
-
-
புட்டினின்... மகள்களுக்கு எதிராக, அமெரிக்கா பொருளாதாரத் தடை! ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் மகள்கள் உட்பட அவருக்கு எதிராக அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இந்தப் பட்டியலில் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் குடும்பம் மற்றும் முக்கிய வங்கிகளும் அடங்கும். உக்ரைனின் புச்சா நகரில் இடம்பெற்றதாக கூறப்படும் படுகொலைகள் தொடர்பாக ரஷ்யா மீது இந்த தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ‘பொறுப்புள்ள நாடுகள் ஒன்றிணைந்து இந்த குற்றவாளிகளை பொறுப்புக்கூற வைக்க வேண்டும்’ என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். புடினின் மகள்களான கேடரினா விளாடிமிரோவ்னா டிகோனோவா மற்றும் மரியா விளாடிமிரோவ்னா வொரொன்ட்சோவா ஆகியோர் புடின…
-
- 11 replies
- 624 views
-
-
உக்ரைன் போர்: பொரிஸ் ஜோன்சன் ஸ்வீடன் மற்றும் பின்லாந்துக்கு விஜயம் உக்ரைனில் நடக்கும் போர் குறித்து விவாதிக்க பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் ஸ்வீடன் மற்றும் பின்லாந்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். நேட்டோ கூட்டணியில் சேரலாமா என்பது குறித்து இரு நாடுகளுக்குள்ளும் விவாதம் நடந்து வரும் நிலையில் அவரது இந்த விஜயம் அமையவுள்ளது. புதன்கிழமை செல்லும் பிரதமர் பொரிஸ் ஜோன்சன், இரு நாட்டு தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். உக்ரைன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு ஐரோப்பாவின் பதில் குறித்து இதன்போது பேசப்படும் என தெரிவிக்கப்படுகின்றது https://athavannews.com/2022/1281434
-
- 0 replies
- 149 views
-
-
200 பயணிகளுடன் சவூதி நோக்கி புறப்பட்டு சென்ற விமானம் விமானியின் தவறால் ஜித்தாவில் தரையிறக்கப்பட்டது! [Monday, 2014-04-14 23:08:49] இன்று காலை பாகிஸ்தான் கராச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து PIA 731 என்ற இலக்கம் கொண்ட பாகிஸ்தானுக்கு சொந்தமான விமானம் 200 பயணிகளுடன் சவூதி நோக்கி புறப்பட்டு வந்து விமானியின் தவறு காரணமாக ரியாத்தில் தரையிரங்குவதர்க்கு பதிலாக ஜித்தாவில் தரையிறக்கப்பட்டுள்ளது. இதனை உடன் விசாரணை செய்த பாகிஸ்தான் அதிகாரிகள் இதில் எந்தவித அடிப்படி நோக்கமும் கிடையாது எனவும் விமானியின் தவறே காரணம் என கூறியுள்ளனர். அதிகமான பயணிகள் இதன்போது சிரமதுக்குள்ளானதாகவும், எரிபொருள் சிக்கனதுக்காகவே விமானி இதனை செய்துள்ளதாகவும் பயணிகள் குறிப்பிட்டன…
-
- 1 reply
- 570 views
-
-
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்க மற்றும் மேற்குலக நாடுகளின் ஆதரவோடு பாகிஸ்தான் தலிபான்களுக்கு எதிராக பாகிஸ்தான் இராணுவத்தைக் கொண்டு மிகப்பெரிய இராணுவ நடவடிக்கையை பாகிஸ்தானின் Swat பள்ளத்தாக்குப் பகுதியில் மேற்கொண்டது. இதன் போது தமிழர் தாயகத்தில் சிங்களப் படைகள் நிகழ்த்திய நீதிக்குப் புறம்பான மனிதப் படுகொலைகளுக்கு ஒப்பான மனிதப் படுகொலைகளை பாகிஸ்தான் படைகள் நிகழ்த்தி கடந்த செப்டம்பர் திங்களில் இருந்து இதுவரை 238 பேரை படுகொலை செய்துள்ளமையை சர்வதேச மனித உரிமைகள் அமைப்பொன்று பகிரங்கப்படுத்தியுள்ளது. பயங்கரவாத ஒழிப்பென்ற பெயரில் அமெரிக்காவும் அதன் கூட்டு நாடுகளும் உலகெங்கும் மனிதப்படுகொலைகளை எந்த அச்சுறுத்தலும் இன்றி குற்றச்சாட்டுக்களுக்கும் இடமின்றி.. நிகழ்த்…
-
- 0 replies
- 534 views
-
-
மரண தண்டனையை ஒழித்த மலேசியா! மரண தண்டையை ஒழிக்க வேண்டும் என்ற குரல்கள் உலகம் முழுவதும் எழுந்து வருகின்றன. ஆனால், தூக்கு தண்டனை ஒழிக்கப்பட்டால் அதன்பின்னர் கொடிய குற்றங்களைச் செய்பவர்களுக்கு அச்சம் இல்லாமல் போய்விடும்; அதனால் குற்றங்கள் அதிகரித்து விடும் என தூக்கு தண்டனைக்கு ஆதரவாக வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. இருந்தாலும், தூக்கு தண்டனை அமலில் இருக்கும் நாடுகளில் குற்றங்கள் குறைந்தபாடில்லை. மரண தண்டனை இல்லாத உலகை அமைக்க வேண்டும் என்பது தான் ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலட்சியமாக உள்ளது. உலகிலுள்ள 195 நாடுகளில் 102 நாடுகளில் மரண தண்டனை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது. 39 நாடுகளில் மரண தண்டனை நடைமு…
-
- 0 replies
- 235 views
-
-
பதிவர் “சவுக்கு” சங்கர் கைது ! 2008ஆம் ஆண்டில் அப்போதைய தலைமைச் செயலாளர் திரிபாதியும், லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக இருந்த உபாத்யாயாவும், இவரோடு அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணாவும் பேசிய தொலைபேசி பேச்சுக்கள் ஊடகங்களில் வெளிவந்தன. தெரிந்தவர்களை ஊழல் புகாரில் காப்பாற்றும் முயற்சிகள் இதன் மூலம் வெளிவந்தன. வழக்கமாக அரசுக்கு எதிரானவர்களின் தொலைபேசி பேச்சுக்கள் வரும்போது அரசுக்கு ஆதரவானர்களின் பேச்சுக்கள் வெளிவந்தது கருணாநிதி அரசுக்கு கடும் எரிச்சலை தந்தது. இது தொடர்பாக தமிழக அரசு அமைத்த ஒரு நபர் விசாரணை குழுவின் அறிக்கை அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறையில் சிறப்பு உதவியாளராக இருந்த ஏ.சங்கர் என்பவர் சி.பி.சி.ஐ.டி போலீசாரால் கைது செய்யப்பட்டு சித்திரவதையும்…
-
- 1 reply
- 1.3k views
-
-
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றியை பெற்றிருப்பதுடன், அதன் நேச அணியான ஜே.வி.பி. படுதோல்வியையும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி பெரும் பின்னடைவையும் சந்தித்துள்ளன. வியாழக்கிழமை இடம் பெற்ற 266 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் இச் செய்தி எழுதுகையில் வெளியான 250 சபைகளுக்கான முடிவுகளில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 212 சபைகளின் நிர்வாகத்தை கைப்பற்றியிருந்தது. இவற்றில் 8 மாநகர சபைகளும் 17 நகர சபைகளும் 187 பிரதேச சபைகளும் அடங்கும். ஐக்கிய தேசியக் கட்சி 3 மாநகர சபைகளையும் 13 நகர சபைகளையும் தன்வசமாக்கியுள்ளது. ஜே.வி.பி. திசமகராமை பிரதேச சபையில் மட்டுமே நிர்வாகத்தை பொறுப்பேற்றுள்ளது. இதேவேளை வட, …
-
- 0 replies
- 741 views
-
-
புதிய நாடு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சிரியாவின் ராக்கா நகரில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் கொடியை ஏந்தி ஆர்பரிக்கும் கிளர்ச்சிப் படை வீரர் | படம்: ராயட்டர்ஸ் இராக்கில் கிளாபத் தனி நாடு அறிவிக்கப்பட்டுவிட்டதாக தங்கள் கொடியுடன் கோஷமிட்டு வந்த ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளர்கள்.|படம்: ராய்ட்டர்ஸ். இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் இராக் அண்ட் லெவன்ட் கிளர்ச்சிப்படை, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் மீது ஜிகாத் நடத்த வேண்டும் என்று தனது ரமலான் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளது. இராக், சிரியா நாடுகளின் நகரங்களை இணைத்து இஸ்லாமிய சட்டத்தின் அடிபபடையிலான தனி நாடை அமைக்க ஐ.எஸ்.ஐ.எஸ் கிளர்ச்சி அமைப்பு கடந்த சில வாரங்களாக இராக்கில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ்.அமைப்பின் தளபதி …
-
- 6 replies
- 687 views
-
-
பாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சிறுமி உயிரிழப்பு – 11 பேர் காயம் பாகிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 11 பேர் காயமடைந்துள்ளனர். பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள இந்துகுஷ் மலைப்பகுதியில் இன்று மதியம் ஏற்பட்ட இந்தநிலநடுக்கம் 6.1 ரிக்டர் அலகாக பதிவாகியுள்ளது. குறித்த நிலநடுக்கத்தின் தாக்கம் பாகிஸ்தானின் லாகூர், இஸ்லாமாபாத் மற்றும் பெஷாவர் உள்ளிட்ட நகரங்களிலும உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2005ம் ஆண்டு பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 74000 பேர் உயிரிழந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது http://globaltami…
-
- 0 replies
- 188 views
-
-
உக்ரைன் வான் பரப்பில் சுட்டு வீழ்த்தப் பட்ட மலேசிய ஜெட் பற்றிய முக்கிய தகவல்கள்! [Friday 2014-07-18 23:00] மலேசியன் ஏர்லைன்ஸின் MH 17 விமானம் அம்ஸ்டெர்டாமில் இருந்து கோலாலம்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது நேற்று வியாழக்கிழமை மாலை உக்ரைன் ரஷ்ய எல்லையில் இருந்து 40 Km தொலைவில் டொனெட்ஸ்க் மாவட்டத்திலுள்ள ஹ்ராபோவே வான் பரப்பில் ஏவுகணையால் தாக்கி அழிக்கப் பட்டது. இதன்போது விமானத்தில் பயணித்த அனைத்து 283 பயணிகளும் 15 விமானப் பணியாளர்களும் உட்பட 298 பேர் கொல்லப் பட்டனர். கிழக்கு உக்ரைனின் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் தரையில் இருந்து விமானம் தாக்கும் ஏவுகணையால் இவ்விமானம் தாக்கி அழிக்கப் பட்டதாக அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செ…
-
- 2 replies
- 614 views
-
-
சிரியாவில் 30 நாள் போர் நிறுத்தம் கொண்டுவர தடுமாறும் ஐ.நா. சிரியாவில் 30 நாள் போர் நிறுத்தத்தைக் கொண்டு வர ஐக்கிய நாடுகள் சபை தடுமாறி வருகிறது. சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதியான கவுடாவில் கடந்த ஐந்து நாட்களாக சிரிய - ரஷ்ய கூட்டுப் படைகள் வான்வழித் தாக்குதலை நடத்தி வருகின்றன. இதில் இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். அவர்களில் 90க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள். தொடர்ந்து வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டு வருவதால் சிரியாவில் 30 நாட்கள் போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும், மருத்துவ உதவிக் குழுக்களை அங்கு அனுமதிக்கக் கூறியும் குவைத்தும், சுவீடனும் ஐக்கிய நாட…
-
- 0 replies
- 535 views
-
-
ஜப்பானின் முன்னாள் பிரதமர், ஷின்சோ அபேக்கு... அஞ்சலி செலுத்த, அலைமோதும் மக்கள்! ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேக்கு அஞ்சலி செலுத்த, மக்கள் கூட்டம் திரண்டு வருகின்றனர். படுகொலை செய்யப்பட்ட ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கு இன்று (செவ்வாய்க்கிழமை) மத்திய டோக்கியோவில் உள்ள புகழ்பெற்ற விளையாட்டு மற்றும் கச்சேரி அரங்கான நிப்பான் புடோகானில் நடைபெறுகின்றது. இந்த நிகழ்வில் கலந்துக்கொள்வதற்காக உலகெங்கிலும் உள்ள சுமார் 4,300 சிறப்பு விருந்தினர்கள் கலந்துக் கொள்கின்றனர். அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங், அவுஸ்ரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ், உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் க…
-
- 7 replies
- 463 views
-