உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26603 topics in this forum
-
உயரப் பறந்த அடையாளம் தெரியாத மற்றொரு பொருளை சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா! அலாஸ்காவில் உயரப் பறந்த அடையாளம் தெரியாத மற்றொரு பொருளை, அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தியுள்ளது. இந்த பொருளை சுட்டு வீழ்த்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், நேற்று (வெள்ளிக்கிழமை) போர் விமானத்திற்கு உத்தரவிட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி, ‘ஆளில்லாப் பொருள் ஒரு சிறிய காரின் அளவு மற்றும் சிவிலியன் விமானப் போக்குவரத்துக்கு நியாயமான அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. பொருளின் நோக்கம் மற்றும் தோற்றம் தெளிவாக இல்லை தென் கரோலினா கடற்கரையில் கடந்த சனிக்கிழமை சுட்டு வீழ்த்தப்பட்ட பலூனை விட வெள்ளியன்று சுட்டு வீழ்த்தப்பட்ட ப…
-
- 4 replies
- 869 views
-
-
சீன கண்காணிப்பு பலூனை சுட்டு வீழ்த்த அமெரிக்க அதிகாரிகள் திட்டம்! சீன கண்காணிப்பு பலூனை கண்காணித்து வரும் அமெரிக்கா, அதன் இடிபாடுகள் விழும் அபாயம் இருப்பதாகக் கருதப்பட்டதால், அதைச் சுட்டு வீழ்த்த திட்டமிட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு நிலைமை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், சீனா இன்னும் இதுகுறித்து கருத்து தெரிவிக்கவில்லை. சீனாவிற்கு சொந்தமான கண்காணிப்பு பலூன், சமீபத்திய நாட்களில் முக்கியமான இடங்களில் பறப்பதைக் கண்டறிந்துள்ளது. இது சமீபத்தில் மேற்கு மாநிலமான மொன்டானாவிற்கு மேலே காணப்பட்டது. கடந்த புதன்கிழமை மொன்டானாவில் உள்ள பில்லிங்ஸ் நகரின் மீது தோன்றுவதற்கு முன், இந்த பொருள் அலாஸ்காவின் அலுடியன் தீவுகள் மற்றும் கனடா வழியாக …
-
- 29 replies
- 2.4k views
- 3 followers
-
-
எம்.எச்.17 விமானத்தை வீழ்த்திய ஏவுகணையை புடின் வழங்கியிருக்கலாம்: சர்வதேச புலனாய்வாளர்கள் தகவல்! கடந்த 2014ஆம் ஆண்டு எம்.எச்.17 விமானத்தை வீழ்த்திய ஏவுகணையை வழங்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் முடிவு செய்ததற்கான வலுவான அறிகுறிகள் இருப்பதாக சர்வதேச புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். போயிங் 777 நெதர்லாந்து தலைநகரில் இருந்து கோலாலம்பூருக்கு பறந்து கொண்டிருந்தபோது, ஜூலை 2014இல் உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் ரஷ்ய சார்பு கிளர்ச்சியாளர்களுக்கும் உக்ரைனியப் படைகளுக்கும் இடையே நடந்த மோதலின் போது ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட தரையிலிருந்து ஏவப்படும் வான்வழி ஏவுகணையால் தாக்கப்பட்டது. இதன்போது, பயணிகள் மற்றும் பணியாளர்கள் அடங்களாக 298 பேர் உயிரிழந்தனர். இவர்களில், 196 ப…
-
- 10 replies
- 920 views
-
-
பூகம்பத்தால் பாதிப்பு : சிரியா செல்லும் உலக சுகாதார ஸ்தாபன தலைவர்...! By T. Saranya 10 Feb, 2023 | 11:35 AM பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட சிரியாவிற்கு இன்று (பெ்ப 10) உலக சுகாதார ஸ்தாபனம் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் செல்கிறார். துருக்கியிலும் சிரியாவிலும் கடந்த திங்கட்கிழமை பாரிய பூகம்பம் ஏற்பட்டது. துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள காசியான்டெப் நகரை மையமாக கொண்டு கடந்த திங்கட்கிழமை அதிகாலை 4.17 மணிக்கு சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. இந்த பூகம்பம் ரிச்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. இந்த பூகம்பம் ஏற்பட்…
-
- 1 reply
- 349 views
-
-
பூகம்பமும் பின்புலமும்: துருக்கியில் பல்லாயிர கட்டிடங்கள் நொறுங்கியது ஏன்? துருக்கி - சிரியா பூகம்ப பலி 19,000-ஐ கடந்துள்ள நிலையில், துருக்கியில் மட்டும் இதுவரை 16,546 பேர் உயிரிழந்ததாகவும், சிரியாவில் 3,162 பலியானதாகவும் அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சூழலில், துருக்கியில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் விழுந்து நொறுங்க நிலநடுக்கம் மட்டுமே காரணமா என்பதை அலசுவோம். கடந்த திங்கள்கிழமை அன்று துருக்கி நாட்டில் ஏற்பட்ட அடுத்தடுத்த சக்திவாய்ந்த பூகம்பத்தால் 10 மாகாணங்களில் சுமார் 6,444 கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு பக்கம் நம்பிக்கையை தளர விடாமல் யாரேனும் உயிர் பிழைத்திருப்பார்கள் என மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரு…
-
- 0 replies
- 871 views
-
-
வடகொரிய இராணுவத்தின் 75ஆவது ஆண்டு விழா – மகளுடன் பங்கேற்றார் கிம் ஜாங் உன் வடகொரிய இராணுவம் நிறுவப்பட்டதன் 75ஆவது ஆண்டை குறிக்கும் வகையில், அந்நாட்டின் தலைநகர் பியாங்யாங்கில் பிரம்மாண்ட அணிவகுப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கலந்து கொண்டு இராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அதிபர் கிம் ஜாங் உன் எந்தப் பொது நிகழ்விலும் தோன்றாமல் இருந்த நிலையில், இராணுவ அணிவகுப்பில் தனது மகளுடன் கலந்து கொண்டு நாட்டு மக்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார். இந்த இராணுவ அணிவகுப்பில் வடகொரியாவின் அணு ஆயுத அலகுகளும் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/…
-
- 0 replies
- 541 views
-
-
பிரான்சும் ஜேர்மனியும் போரின் போக்கை மாற்றக்கூடியவர்கள்: உக்ரைன் ஜனாதிபதி! பிரான்சும் ஜேர்மனியும் போரின் போக்கை மாற்றக்கூடியவர்கள் என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். பிரான்ஸின் இம்மானுவேல் மக்ரோன் மற்றும் ஜேர்மனியின் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ் ஆகியோருடன் நேற்று (புதன்கிழமை) கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைனுக்கு போர் டாங்கிகள், நவீன போர் விமானங்கள் மற்றும் நீண்ட தூர ஏவுகணைகளை வழங்குவதன் மூலம் பிரான்சும் ஜேர்மனியும் போக்கை மாற்றக்கூடியவர்களாக இருக்க முடியும. ஜெட் விமானங்களை வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறிய அவர், ஆயுதங்களை வழங்குவதற்கு மிகக…
-
- 11 replies
- 1.1k views
-
-
சீனத் தயாரிப்பு கண்காணிப்புக் கெமராக்களை அரச கட்டடங்களிலிருந்து அகற்றும் அவுஸ்திரேலியா By SETHU 09 FEB, 2023 | 12:32 PM சீனத் தயாரிப்பு கண்காணிப்பு கெமராக்களை, அவுஸ்திரேலியாவின் அரச கட்டடங்களிலிருந்து அகற்றுவதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகியன நாடுகளும் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அவுஸ்திரேலிய அரசின் 200 இற்கும் அதிகமான கட்டடங்களில் 900 இற்கு அதிகமான சீனத் தயாரிப்பு கண்காணிப்புக் கெமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. குற…
-
- 0 replies
- 625 views
- 1 follower
-
-
வியட்நாம் யுத்தத்தில் தென் கொரிய படையினரின் படுகொலைகளுக்கு தென் கொரிய அரசு பொறுப்பு என தென் கொரிய நீதிமன்றம் தீர்ப்பு! பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடு வழங்கவும் உத்தரவு By SETHU 07 FEB, 2023 | 05:56 PM வியட்நாம் யுத்தத்தின்போது, வியட்நாமில் தென் தென்கொரிய படையினரால் நடத்தப்பட்ட படுகொலைகளுக்கு தென் கொரிய அரசு பொறுப்பேற்க வேண்டும் எனவும், இதனால் பாதிக்கப்பட்ட பெண்ணொருவருக்கு இழப்பீடு செலுத்த வேண்டும் எனவும் தென் கொரிய நீதிமன்றமொன்று தீர்ப்பளித்துள்ளது. 1960கள் மற்றும் 1970களில் கம்யூனிஸ வடக்கு வியட்நாமுக்கு எதிரான யுத்தத்தின்போது, அமெரிக்கப் படையினருக்கு உதவுவதற்காக தென் கொரியா தனது படையினரை வியட்நாமுக்கு அனுப்ப…
-
- 1 reply
- 245 views
- 1 follower
-
-
சீனாவிடமிருந்து பூசலை எதிர்பார்க்கவில்லை; போட்டியை எதிர்பார்க்கிறோம்’ – வருடாந்திர உரையில் அமெரிக்க அதிபர் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாட்டு மக்களுக்கு ஆற்றிய வருடாந்திர உரையில் சீனாவுடனான பதற்றம், உக்ரேன் போர், உள்நாட்டுப் பொருளியல் நிலவரம் ஆகியவை முக்கிய இடம்பிடித்துள்ளன. குடியரசுக் கட்சி அமெரிக்க மக்களவையைக் கைப்பற்றிய பிறகு முதன்முறை திரு. பைடன் உரையாற்றினார். வேறுபாடுகளை மறந்து அமெரிக்கர்களின் நலனுக்காக அனைவரும் இணைந்து செயல்படவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். சீனாவுடனான பதற்றம் மோசமடைவது குறித்தும் திரு. பைடன் பேசினார். சீனாவின் சந்தேகத்துக்குரிய உளவு பலூன் விவகாரத்தில் சீக்கிரமாக நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும் என்று குடியரசுக் கட்சியின…
-
- 0 replies
- 488 views
-
-
அதிக உயிர் சேதத்தை ஏற்படுத்திய , உலக வரைப்படத்தை மாற்றி அமைத்த 10 பூகம்பங்கள் “முற்றுப்பெறாத கிரகமான பூமியின் மேலடுக்கில்தான் நாம் நடக்கிறோம். இதை நினைவூட்டுவதற்குப் பூகம்பம் தேவைப்படுகிறது”. – சார்லஸ் குரால்ட். நிலநடுக்கம் ஏற்படும் போது நடக்கும் இறப்பு எண்ணிக்கையை அப்பகுதி எந்த இடத்தில் இருக்கிறது, நிலநடுக்கம் நடக்கும் பகுதியில் மக்கள் தொகை அடர்த்தி எவ்வளவு இருக்கிறது ஆகிய இரண்டு காரணிகள் தீர்மானிக்கின்றன. பூகம்பங்களில் மிக அதிக உயிர் சேதத்தை ஏற்படுத்திய 10 நிலநடுக்கங்களை இங்கே பார்க்கலாம். இந்த பத்து பூகம்பங்களில் 25 இலட்சம் மக்கள் கொல்லப் பட்டிருக்கின்றனர். மேலும் இந்த பத்து பூகம்பங்களில் 9 ஆசியக் கண்டத்தில் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கத…
-
- 0 replies
- 799 views
-
-
குழந்தை ஒன்று 7.3 கிலோ எடையுடன் பிரேசிலில் பிறந்துள்ளது – இவ்வளவு எடையில் குழந்தை பிறப்பது ஏன்? 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,DIVULGACIÓN/ SES-AM பிரேசிலில் சில நாட்களுக்கு முன்பு பெண் ஒருவர் 7.3 கிலோ எடையுள்ள குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். ஆன்கர்சன் சான்டோஸ் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த ஆண் குழந்தை அறுவை சிகிச்சை மூலம் பாரிண்டின்ஸ் என்ற பகுதியில் உள்ள பார்ட்ரே கொலம்போ என்னும் மருத்துவமனையில் பிறந்துள்ளது. இதற்கு முன்பு இத்தாலியில் 1955ஆம் ஆண்டு 10.2கிலோ எடையில் பிறந்த குழந்தையே உலகின் அ…
-
- 0 replies
- 490 views
- 1 follower
-
-
உக்ரேன் ஜனாதிபதியை ஒருபோதும் கொலை செய்யமாட்டேன் என புட்டின் உறுதிமொழி வழங்கினார் - இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் By Rajeeban 06 Feb, 2023 | 10:54 AM உக்ரேன் ஜனாதிபதியை ஒருபோதும் கொலை செய்ய மாட்டேன் என ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தன்னிடம் உறுதியளித்தார் என முன்னாள் இஸ்ரேலிய பிரதமர் நவ்டாலி பெனெட் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். ரஸ்யா உக்ரேன் மீதான தனது நடவடிக்கைகளை ஆரம்பித்த சில நாட்களின் பின்னர் ரஸ்யாவிற்கான தனது விஜயத்தின் போது புட்டின் இந்த உறுதிமொழியை வழங்கினார் என முன்னாள் இஸ்ரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். யுத்தத்தின் ஆரம்பநாட்களில் சமாதான முயற்சிக…
-
- 13 replies
- 1.2k views
-
-
இஸ்ரேலிய இராணுவத்தின் தாக்குதலில் பலஸ்தீனர்கள் இருவர் பலி By SETHU 19 JAN, 2023 | 04:51 PM இஸ்ரேலிய இராணுவத்தினரால் பலஸ்தீனியர்கள் இருவர் இன்று சுட்டுக்கொல்லப்பட்டதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பலஸ்தீனத்தின் ஜெனின் நகரில் இன்று அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 62 வயதான ஜவாத் பரீட் பவாக்னா, 28 வயதான அதாம் மொஹம்மத் பசேம் ஜெபறீன் ஆகியோ இஸ்ரேலிய படையினரால் கொல்லப்பட்டனர் என பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, ஜெனின் நகர அகதிகள் முகாமில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின்போது, இஸ்ரேலிய படையினர் மீது பலஸ்தீன ஆயுதபாணிகள் தாக்குதல் நடத்தியதாகவும், இஸ்ரேலியப் படையினர் பதில் தாக்…
-
- 1 reply
- 617 views
- 1 follower
-
-
புடின் ஏவுகணை மூலம் தாக்குவதாக மிரட்டினார்: முன்னாள் பிரித்தானிய பிரதமர் குற்றச்சாட்டு! கடந்த ஆண்டு பெப்ரவரியில் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பதற்கு சற்று முன்பு, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தன்னை ஏவுகணை மூலம் தாக்குவதாக மிரட்டியதாக முன்னாள் பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். உலகத் தலைவர்களுடன் புடினின் தொடர்புகளை ஆராயும் பிபிசி ஆவணப்படத்தில் இந்த விடயத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார். பிரித்தானிய பிரதமரின் கூற்றுப்படி, கிரெம்ளினுடனான அசாதாரண தொலைபேசி அழைப்பின் போது இந்த சம்பவம் நடந்தது. அதற்கு ஒரு நிமிடம் மட்டுமே ஆகும் என்று புடின் தன்னிடம் கூறியதாக ஜோன்சன் கூறினார். முன்னாள் பிரித்தானிய பிரதமரின் கூற்றுப்படி, அழைப்பின் போது போர…
-
- 25 replies
- 1.6k views
-
-
மாத இறுதியில் உக்ரைன் தாக்கப்படலாம்: உக்ரைனிய பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை! இந்த மாத இறுதியில் ரஷ்யாவின் புதிய தாக்குதலை நாடு எதிர்பார்ப்பதாக உக்ரைனின் பதவி விலகும் பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் தெரிவித்துள்ளார். அனைத்து மேற்கத்திய ஆயுதங்களும் அதற்குள் வந்திருக்காது, ஆனால் உக்ரைனில் ரஷ்யப் படைகளைத் தடுக்க போதுமான இருப்புக்கள் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். கிழக்கில் உள்ள பக்முட், வுஹ்லேடர் மற்றும் லைமன் ஆகிய இடங்களில் துருப்புக்கள் கடுமையாக சண்டையிட்டு வருவதாக ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ரெஸ்னிகோவின் கருத்துக்கள் அவர் பாதுகாப்பு அமைச்சராக பதவி நீக்கம் செய்யப்படுவார் என அறிவிக்கப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்ப…
-
- 0 replies
- 290 views
-
-
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் காலமானார்! SelvamFeb 05, 2023 உடல்நலக்குறைவின் காரணமாக துபாயில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் இன்று (பிப்ரவரி 5) உயிரிழந்தார். அவருக்கு வயது 79. பாகிஸ்தானில் நடைபெற்று வந்த நவாஸ் ஷெரிப் ஆட்சியை ராணுவ புரட்சியின் மூலம் பர்வேஸ் முஷாரப் 1999-ஆம் ஆண்டு கலைத்தார். பின்னர் 1999-ஆம் ஆண்டு முதல் 2008-ஆம் ஆண்டு வரை முஷாரப், பாகிஸ்தான் அதிபராக இருந்தார். 2008-ஆம் ஆண்டு பாகிஸ்தான் அதிபர் பதவியில் இருந்து அவர் விலகினார். கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் அமிலாய்டோசிஸ் நோயால் பாதிக்கப்பட்ட முஷாரப், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அமில…
-
- 7 replies
- 931 views
- 1 follower
-
-
பெண்ணுக்காக மரக்குதிரையில் ஒளிந்து போரிட்ட கிரேக்க வீரர்கள் - புகழ்பெற்ற ட்ரோஜன் போர் கட்டுக்கதையா? கட்டுரை தகவல் எழுதியவர்,டெய்சி டன் பதவி,பிபிசிக்காக 5 பிப்ரவரி 2023, 05:54 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TRUSTEES OF THE BRITISH MUSEUM கிரேக்க கவிஞர் ஹோமரின் ஒடிசி முதல் அலெக்சாண்டர் போப் வரை பல நூற்றாண்டுகளாகவே ட்ரோஜன் போர் கவர்ச்சிக்குரிய ஒன்றாகவே இருந்திருக்கிறது. ஆனால், இந்த புராதன போர் கசப்பான உண்மையா அல்லது முழுவதும் கட்டுக்கதையா? டெய்சி டன் ஆதாரங்களுடன் அதை விளக்குகிறார். சிறந்த எழுத்தாளர…
-
- 1 reply
- 659 views
- 1 follower
-
-
வரலாறு மீண்டும் நிகழும்: ஜேர்மனியின் முடிவை மேற்கோள் காட்டி புடின் எச்சரிக்கை! உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை நாஜி ஜேர்மனிக்கு எதிரான போராட்டத்துடன் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் ஒப்பிட்டுள்ளார். ஸ்டாலின்கிராட் போர் முடிவடைந்த 80ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் உரையில், உக்ரைனுக்கு டாங்கிகளை அனுப்பும் ஜேர்மனியின் முடிவை மேற்கோள் காட்டிய ரஷ்ய ஜனாதிபதி, வரலாறு மீண்டும் நிகழும் என எச்சரித்தார். வோல்கோகிராடில் உரையாற்றிய புடின், ‘போர்க்களத்தில் ரஷ்யாவை தோற்கடிப்பார்கள் என்று நம்புபவர்கள் புரிந்து கொள்ளவில்லை, ரஷ்யாவுடனான ஒரு நவீன போர் அவர்களுக்கு மிகவும் வித்தியாசமாக இருக்கும். நாங்கள் எங்கள் டாங்கிகளை அவர்களின் எல்லைகளுக்கு அனுப்பவில்லை, ஆனால் பத…
-
- 8 replies
- 1.1k views
-
-
அவுஸ்திரேலியாவில் சுறா தாக்கி சிறுமி பலி By RAJEEBAN 05 FEB, 2023 | 12:20 PM பேர்த்தில் சுறாதாக்குதலில் சிறுமி உயிரிழந்தாரா என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. மேற்கு அவுஸ்திரேலியாவில் நோர்த் பிரெமென்டல் பகுதியில் ஸ்வான் ஆற்று பகுதியில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளமை குறித்தே விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. கடலில் நண்பிகளுடன் நீச்சலில் ஈடுபட்டிருந்தவேளை சிறுமி உயிரிழந்தமை குறித்து விசாரணைகள் இடம்பெறுகி;ன்றன. டொல்பின்களை பார்த்ததும் அவற்றை நோக்கி நீந்திய சிறுமியை சுறா தாக்கியதை பார்த்ததாக நண்பிகள் தெரிவித்துள்ளனர். நபர் ஒருவர் சிறுமியை காப்பாற்றுவதற்காக கடலில் குதித்தார் ஆனால் …
-
- 0 replies
- 482 views
- 1 follower
-
-
சீனாவை சுற்றி வளைக்க திட்டமிடுகிறதா அமெரிக்கா: மீண்டும் சர்ச்சை பட மூலாதாரம்,GETTY IMAGES 50 நிமிடங்களுக்கு முன்னர் தென் சீன கடல் பகுதியை ஆக்கிரமிப்பதில் சீனாவுக்கும், அமேரிக்காவிற்கும் பல அண்டுகளாக மோதல்கள் நடந்து வரும் சூழலில், தற்போது இந்த விவகாரத்தில் அமெரிக்கா புதிய திட்டங்களை வகுத்து வருகிறது. பிலிப்பைன்ஸில் கூடுதலாக நான்கு ராணுவ தளங்களை அமைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அந்த ராணுவ தளங்கள் அமையவிருக்கும் நிலபரப்பானது, தென்சீன கடல் எல்லையையும், தைவானின் எல்லைகளையும் ஆக்கிரமித்திருக்கும் சீன ராணுவத்தை கண்காணிப்பதற்கு ஏதுவான இடமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தத்…
-
- 2 replies
- 776 views
- 1 follower
-
-
இந்த நாடுகளில் காதலர் தினத்தை கொண்டாட முடியாது பெப்ரவரி மாதம் வந்துவிட்டாலே பலரது நினைவுக்கு முதலில் வருவது காதலர் தினம் தான். கிட்டதட்ட 1500 ஆண்டுகளுக்கும் மேலாக பெப்ரவரி 14, உலகம் முழுவதும் வேலண்ட்டைன்ஸ் டே ஆக கொண்டாடப்படுகிறது. காதலை கொண்டாட ஒரு நாள் போதாது தான். அதனால் தானோ என்னமோ சில நாடுகளில் ஒரு வாரம் கொண்டாடப்படுகிறது. இதே சமயம் வேலண்ட்டைன்ஸ் டே கொண்டாட சில நாடுகளில் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. மேற்கத்திய கலாச்சாரத்தை எதிர்ப்பதாலும், தங்கள் மதத்தின் கொள்கைகளுக்கு எதிரானதாக கருதப்படுவதாலும், இந்ததடை விதிக்கப்பட்டிருக்கிறது அவை எந்தெந்த நாடுகள் என்று இங்கு பார்க்கலாம் ஈரான்: ஈரான் நாட்டில்…
-
- 0 replies
- 740 views
-
-
உக்ரைன் - ரஷ்ய போர் 343 ஆவது நாளாக நீடித்துள்ள நிலையில் ரஷ்யாவை எதிர்கொள்ள நவீன போர் விமானங்கள் தேவை என உக்ரைன் விடுத்த கோரிக்கையை பிரித்தானிய பிரதமர் அலுவலகம் நிராகரித்தமையை உறுதி செய்துள்ளது. தற்போதைய சூழலில், அப்படியான ஒரு முயற்சி நடைமுறைக்கு சாத்தியமல்லை எனவும் பிரித்தானியா குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பில் பிரித்தானிய பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, போர் விமானங்களை வழங்க திட்டமில்லை உக்ரைனுக்கு RAF Typhoon மற்றும் F-35 போர் விமானங்களை வழங்குவது குறித்து தற்போது எந்த திட்டமும் இல்லை.தொடர்புடைய விமானங்களை இயக்க உக்ரைன் விமானிகளுக்கு பயிற்சி அளிக்க கால தாமதமாகலாம். மேலும், பிரித்தானியாவின் R…
-
- 6 replies
- 977 views
-
-
பாரிஸ் 2024 ஒலிம்பிக்கில் ரஷ்யர்கள் பங்குபற்றுவதை 40 நாடுகள் எதிர்க்கலாம் என போலந்து எதிர்வுகூறல் By DIGITAL DESK 5 03 FEB, 2023 | 01:32 PM (என்.வீ.ஏ.) பாரிஸ் 2024 ஓலிம்பிக் விளையாட்டு விழாவில் ரஷ்யர்களுக்கு பங்குபற்ற அனுமதி வழங்கப்படுமாயின் அதனை 40 நாடுகள் எதிர்ப்பதுடன் அவை ஒலிம்பிக் விளையாட்டு விழாவை பகிஷ்கரிக்கக்கூடும் என போலந்து எதிர்பார்க்கிறது. ரஷ்யா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளின் விளையாட்டு வீரர்களை பாரிஸ் 2024 ஓலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்குபற்றச் செய்தால் பல நாடுகள் அதனை எதிர்க்கும் என எதிர்பார்ப்பதாக போலந்து விளையாட்டுத்துறை அமைச்சர் காமில் போர்ட்னிக்ஸுக் தெரிவித்தார். …
-
- 0 replies
- 438 views
- 1 follower
-
-
தென் கொரியாவின் முன்னாள் நீதியமைச்சருக்கு 2 வருட சிறைத்தண்டனை By SETHU 03 FEB, 2023 | 02:45 PM தென் கொரியாவின் முன்னாள் நீதியமைச்சருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 2 வருட சிறைத்தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளது. தனது பிள்ளைகளுக்காக மோசடியான கல்வித் தகைமைகள் தொடர்பில் மோசடியான ஆவணங்களை சமர்ப்பித்தமைக்காக முன்னாள் நீதியமைச்சர் சோ குக்கு இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சட்டத்துறை விரிவுரையாளராக பணியாற்றிய சோ குக், 2019 செப்டெம்பர் முதல் 2019 ஒக்டோபர் வரை நீதியமைச்சராக பதவி வகித்தார். எதிர்காலத்தில், தென் கொரியாவின் ஜனாதிபதியாக அவர் தெரிவு செய்யப்படுவார் என அப்போது எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், …
-
- 0 replies
- 396 views
- 1 follower
-