Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ரஷ்யாவின் புதிய ஏவுகணைத் தாக்குதல்களால் 10 மில்லியன் உக்ரைனியர்களுக்கு மின்சாரம் தடை! ரஷ்யாவின் புதிய ஏவுகணைத் தாக்குதல்களால் 10 மில்லியன் உக்ரைனியர்கள் மின்சாரம் இல்லாமல் இருப்பதாக ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். சமீபத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்தனர். இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே மின்சாரத்தை மீட்டெடுப்பதற்கான அத்தனை நடவடிக்கைகளுமன் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி தனது இரவு உரையில் கூறினார். உக்ரைனின் வான் பாதுகாப்பு அமைப்பு, 6 கப்பல் ஏவுகணைகள் மற்றும் ஐந்து ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். …

  2. அமெரிக்காவில் சீன ரகசிய காவல் நிலையங்கள் - கவலையில் எஃப்பிஐ பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் சீனாவுடன் தொடர்புடைய ரகசிய "காவல் நிலையங்கள்" அமெரிக்கா முழுவதும் அமைக்கப்பட்டுள்ளன என்ற தகவலால் அந்நாட்டின் புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ கவலை" கொண்டுள்ளது. Safeguard Defenders என்ற அரசு சாரா அமைப்பு கடந்த செப்டம்பர் மாதம் வெளியிட்ட அறிக்கையில், இத்தகைய ரகசிய நிலையங்கள், நியூயார்க் உட்பட உலகம் முழுவதும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எஃப்பிஐ இயக்குநர் கிறிஸ்டோபர் ரே, இது தொடர்பாக அமெரிக்க மூத்த அரசியல்வாதிகளிடம் பேசும்போது, நாடு முழுவதும் இதுபோன்ற மையங்கள் இருப்பதாக கூறப்பட்டும்…

  3. இந்தோனேஷியாவில் பாரிய பூகம்பம்:இலங்கைக்கு பாதிப்பில்லை 18 NOV, 2022 | 08:48 PM இந்து சமுத்திரத்தில், இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவுக்கு அருகில் 6.9 ரிக்டர் அளவிலான பாரிய பூகம்பம் சற்றுமுன் ஏற்பட்டுள்ளது. எனினும், இப்பூகம்பத்தினால் இலங்கை;கக பாதிப்பு எதுவுமில்லை என அனர்த்த முகாமைததவ நிலையம் தெரிவித்துள்ளது. சுமத்திரா தீவின் பேங்குலு நகருக்கு தென்மேற்கு திசையில் 202 கிலோமீற்றர் தொலைவில் 25 கிலோமீற்றர் ஆழத்தில் இப்பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவின் பூகோளவியல் அளவையியல் மையம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/140490

  4. ஈராக்கில் கேஸ் சிலிண்டர் வெடித்ததால் 15 பேர் பலி By DIGITAL DESK 3 18 NOV, 2022 | 06:31 PM ஈராக்கில் எரிபொருள் கேஸ் சிலிண்டர் வெடித்ததையடுத்து கட்டடம் இடிந்ததால் குறைந்தபட்சம் 15 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். சுலைமானியா நகரில் நேற்று மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்களும் சிறார்களும் ஆவர் என மாகாண ஆளுநர் ஹவால் அபு பக்ர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/140488

  5. மெக்ஸிக்கோவில் ஹெலி வீழ்ந்ததால் ஐவர் பலி By DIGITAL DESK 3 18 NOV, 2022 | 01:30 PM மெக்ஸிக்கோவில் ஹெலிகொப்டர் ஒன்று வீழ்ந்ததால் ஐவர் உயிரிழந்துள்ளனர். அகுவாஸ்கலியென்டிஸ் மாநிலத்தில் வியாழக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அம்மாநில ஆளுநர் தெரேசா ஜிமேனெஸ் தெரிவித்துள்ளார். அகுவாஸ்கலியென்டிஸ் மாநில பாதுகாப்புத்துறை தலைமை அதிகாரி போர்பிரியோ சான்செஸ் மென்டோஸாவும் அடங்கியுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு விபத்தாக இருப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாக ஆளுநர் தெரேசா ஜிமேனெஸ் கூறியுள்ளார். https://www.virakesari.lk/article/140444

  6. பலஸ்தீன அகதிகள் முகாமில் தீ! 9 சிறார்கள் உட்பட 21 ‍பேர் பலி By DIGITAL DESK 3 18 NOV, 2022 | 09:17 AM பலஸ்தீனத்தின் காஸா பிராந்தியத்தில் ஏற்பட்ட தீப் பரவலில் குறைந்தபட்சம் 21 பேர் பலியானதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். காஸாவின் வடபகுதியிலுள் ஜபாலியா அகதிகள் முகாமில் நேற்று இச்சம்பவம் இடம்பெற்றது. இறந்தவர்களில் 9 சிறார்களும் அடங்கியுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுவதாக காஸாவிலுள்ள இந்தோனேஷிய வைத்தியசாலையொன்றின் அவசரசேவைப் பிரிவு பணிப்பாளர் டாக்டர் சலேஹ் அபு லைலா தெரிவித்துள்ளார் குறித்த பகுதியில் பெருமளவு எரிபொருள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த நிலையில், தீ விர…

  7. மலேசியன் எயார்லைன்ஸ் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரம்: 2 ரஷ்யர்கள்- ஒரு உக்ரைனியருக்கு ஆயுள் தண்டனை! மலேசியன் எயார்லைன்ஸ் விமான நிறுவனத்தின் எம்.எச்.17 ரக பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரம் தொடர்பாக, 2 ரஷ்யர்கள் மற்றும் 1 உக்ரைன் கிளர்ச்சியாளர் மீதான குற்றச்சாட்டை நீதிமன்றம் உறுதி செய்தது. விசாரணை நடத்திய சர்வதேச விசாரணைக்குழு, தனது விசாரணை அறிக்கையில் மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக 4 பேர் மீது குற்றம் சுமத்தியது. இகோர் கிர்கின், செர்கெய் டுபின்ஸ்கி மற்றும் ஒலெக் புல்டோவ் ஆகிய மூன்று ரஷ்யர்களும், லியோனிட் கார்சென்கோ என்னும் ஓர் உக்ரைன் நாட்டவரும் விமானத்தை சுட்டு வீழ்த்தி 298 பேரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட…

  8. உக்ரைனிலுள்ள எரிவாயு உற்பத்தி நிலையம்- ஏவுகணை தொழிற்சாலை மீது ரஷ்யா தாக்குதல்! உக்ரைனின் டினிப்ரோவில் எரிவாயு உற்பத்தி நிலையம் மற்றும் ஏவுகணை தொழிற்சாலை ஆகியவை மீது ரஷ்யா இராணுவம் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக, சமீபத்திய செய்திகள் தெரிவிக்கின்றன. ஸபோரிஸியா பகுதியில் குடியிருப்பு கட்டடங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களின் விளைவாக நான்கு பேர் இறந்ததாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. சமீபத்திய வாரங்களில், தொடர்ச்சியான போர்க்கள பின்னடைவைத் தொடர்ந்து, ரஷ்யாவின் முக்கிய தாக்குதலாக இது பார்க்கப்படுகின்றது. எனினும், இந்த தாக்குதல்கள் குறித்து ரஷ்யா இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கவில்லை இதற்கிடையில், உக்ரைனின் மிகப்பெரிய நகரங்களி…

  9. எங்களது ஆயுதமே விடுதலைப்புலிகளை இலங்கை தோற்கடிக்க உதவியது - பாக்கிஸ்தானின் ஆயுத உற்பத்தியாளர் By RAJEEBAN 17 NOV, 2022 | 05:25 PM பாக்கிஸ்தானின் ஆயுதஉற்பத்தியாளர் ஒருவர் தனது நிறுவனத்தின் ஆயுதம் விடுதலைப்புலிகளிற்கு எதிரான யுத்தத்தில் இலங்கை இராணுவம் வெற்றி பெறுவதற்கான முக்கிய பங்களிப்பை வழங்கியது என தெரிவித்துள்ளார் டோவ்ன் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது டோவ்ன் மேலும் தெரிவித்துள்ளதாவது பாக்கிஸ்தானில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் மிகவும் சிறப்பானவை பயனுள்ளவை அவை யுத்தத்தின்போக்கை தீர்மானிக்கின்றன. பாக்கிஸ்தானில் இடம்பெற்ற சர்வதேச பாதுகாப்பு கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் கலந்துகொண்ட தனியார் ஆ…

  10. சீன பொருளாதார உளவாளிக்கு அமெரிக்காவில் 20 வருட சிறைத் தண்டனை By DIGITAL DESK 3 17 NOV, 2022 | 02:38 PM உளவு பார்த்த குற்றச்சாட்டில் சீன புலனாய்வு அதிகாரி ஒருவருக்கு 20 வருட சிறைத்தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றமொன்று தீர்ப்பளித்துள்ளது. ஹு யான்ஜுன் என்பவருக்கே இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க மற்றும் பிரெஞ்சு வான்-விண்வெளி நிறுவனங்களிடமிருந்து தொழில்நுட்பங்களை திருடியதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. சீனாவின் அரச பாதுகாப்பு அமைச்சை சேர்ந்த மேற்படி புலனாய்வு அதிகாரி 2018 ஆம் ஆண்டு பெல்ஜியத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருதார். ஹு யான்ஜுன் உட்பட 11 சீனப் பிரஜைகள் மீது 2018 ஒக்டோப…

  11. குவைத்தில் 2 பெண்கள் உள்ளிட்ட 7 பேருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றம் By DIGITAL DESK 2 17 NOV, 2022 | 04:33 PM குவைத்தில் 2017 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதன்முறையாக 2 பெண்கள் உட்பட 7 பேருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. பல்வேறு அமைப்புகளும் இந்த தண்டனை நிறைவேற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தவந்த நிலையிலும், அரசு தண்டனையை நிறைவேற்றியுள்ளது. இது குறித்து குவைத் அரசுக்குச் சொந்தமான 'குனா' செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின் படி, பல்வேறு குற்றங்களுக்காக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 7 பேர் குவைத் மத்திய சிறைச்சாலையில் நேற்று (16) தூக்கிலிடப்பட்டனா். தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டவா்கள…

  12. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை முகத்துக்கு நேராக குற்றம் சாட்டிய ஷி ஜின்பிங் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஜஸ்டின் ட்ரூடோ - ஷி ஜின்பிங் 3 மணி நேரங்களுக்கு முன்னர் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் சீன அதிபர் ஷி ஜின்பிங் முகத்துக்கு நேராகக் குற்றம் சாட்டிப் பேசும் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த அரிய சம்பவம் இந்தோனீசியாவின் பாலி நகரில் தற்போது நடந்து முடிந்துள்ள ஜி20 அமைப்பின் உச்சி மாநாட்டின்போது நிகழ்ந்தது. மாநாட்டின்போது இரண்டு தலைவர்களும் மூடிய அறைக்குள் பேசிக்கொண்ட விஷயங்கள் ஊடகங்களில் கசிந்தது குறித்து சீன அதிபர் ஷி ஜின்பிங் மொழிபெயர்ப்பாளர் உதவியோடு குற்றம் சாட்டிப் …

  13. ஓமான் கடற்பரப்பில் இஸ்ரேலிய பிரஜைக்கு சொந்தமான எண்ணெய் கப்பல் மீது ஆளில்லா விமான தாக்குதல் By RAJEEBAN 16 NOV, 2022 | 03:54 PM இஸ்ரேலின் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான எண்ணெய் கப்பல் மீது ஓமான் கடற்பரப்பில் ஆளில்லா விமானதாக்குதல் இடம்பெற்றுள்ளது. ஈரான் இஸ்ரேல் உறவுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஓமான் கடலோரத்தில் செவ்வாய்கிழமை இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ்வாறான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது நாங்கள் இதனை விசாரைணை செய்து வருகின்றோம் என குறிப்பிட்ட பகுதியில் கப்பல்களின் நடவடிக்கைகளை கண்காணித்து வரும் பிரிட்டனின் பாதுகாப்பு அமைப்பொன்று தெரிவித்துள்ளது. லைபீரிய …

  14. அபு அக்லே கொலை தொடர்பான அமெரிக்க விசாரணைக்கு இஸ்ரேல் ஒத்துழைக்காது By DIGITAL DESK 3 16 NOV, 2022 | 03:19 PM பலஸ்தீன - அமெரிக்க ஊடகவியலாளர் ஷிரீன் அபு அக்லே கொல்லப்பட்டமை தொடர்பாக அமெரிக்கா நடத்தும் விசாரணைக்கு தான் ஒத்துழைக்கப் போவதில்லை என இஸ்ரேல் அறிவித்துள்ளது. அல்ஜெஸீரா ஊடகவியலாளரான ஷிரீன் அபு அக்லே, கடந்த மே மாதம் 11 ஆம் திகதி, மேற்குக் கரையின் ஜெனின் நகரில் இஸ்ரேலிய இராணுவத்தின் முற்றுகையொன்று தொடர்பாக செய்திசேகரிப்பில் ஈடுபட்டிருந்தபோது கொல்லப்பட்டார். அவர் இஸ்ரேலிய படையினரால் கொல்லப்பட்டார் என பலஸ்தீன அதிகாரிகள் குற்றம் சுமத்தினர். ஆனால், பலஸ்தீன ஆயுதபாணிகளால் அவர் கொல்லப்பட்டிருக்கலாம். அல்லத…

  15. மோசமான வறட்சியில் சோமாலியா : 3 இலட்சம் பேர் உயிரிழக்கலாம் என அச்சம் ! By DIGITAL DESK 2 16 NOV, 2022 | 09:58 AM 2011 ஆம் ஆண்டு சோமாலியாவில் ஏற்பட்ட பஞ்சத்தில் 10 இலட்சம் பேர் வரை உயிரிழந்தனர். அதேபோன்ற வறட்சி நிலையை சோமாலியா இந்த ஆண்டும் எதிர்கொண்டுள்ளது. எதிர்வரும் மாதங்களில் சோமாலியாவின் நிலைமை மேலும் மோசமாகலாம் என ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், இவ்வாண்டு டிசம்பருக்குள் சோமாலியாவில் 3 இலட்சம் பேர் வரை உயிரிழக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. வரலாற்றில் பண்டைய எகிப்து உள்ளிட்ட நாடுகளுடன் ஏற்றுமதி செய்து செல்வ வளமிக்க நாடாகவே சோமாலியா இருந்திருக்கிறது. ரோமானிய அரசுகளுக்கு முந்தைய வர…

  16. டொனால்ட் டிரம்ப் 2024இல் அதிபர் போட்டியில் மீண்டும் களமிறங்குவதாக அறிவிப்பு பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் 2024ஆம் ஆண்டில் அதிபர் பதவிக்கு மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். அமெரிக்கர்கள் அதிபர் பதவிக்குப் போட்டியிடுவதற்குத் தேவையான ஆவணங்களை மத்திய தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்ய வேண்டும். ஃப்ளோரிடாவில் இருக்கும் அவருடைய மார்-அ-லாகோ எஸ்டேட்டில் உரையாற்றுவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பாக டிரம்ப் போட்டியிடுவதை உறுதி செய்யும் ஆவணங்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டன. மத்திய தேர்தல் ஆணையத்திடம் டொனா…

  17. ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை போலந்தில் விழுந்து இருவர் உயிரிழப்பு ! ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை ஒன்று உக்ரைன் எல்லைக்கு அருகில் உள்ள தமது கிராமத்தின் மீது விழுந்ததாக போலந்து வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. கிழக்கு போலந்தில் உள்ள கிராமத்தில் ஏற்பட்ட இந்த குண்டுவெடிப்பில் இருவர் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த தாக்குதல் தானியங்களை உலர்த்தும் தொழிற்சாலையை பாதித்ததாகவும் இந்த சம்பவம் குறித்து ரஷ்ய தூதருக்கு சம்மன் அனுப்பியுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது. எவ்வாறாயினும் ரஷ்ய ஏவுகணைகள் போலந்து பிரதேசத்தை தாக்கியதாக வெளியான குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ளது. மேலும் இது நிலைமையை மேலும் மோசமா…

  18. சமாதானப் பேச்சுக்கு அழைப்பு விடுத்த உக்ரைன் - ரஷ்யாவின் உடனடி பதில் இந்தோனேசியாவின் பாலித்தீவில் இன்று ஆரம்பித்த உலகின் முக்கிய பொருளாதார வலுக்கொண்ட நாடுகளின் ஜி20 மாநாட்டில் பங்கெடுத்த மேற்குலகத் தலைவர்களால் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போருக்குரிய கண்டனங்கள் வெளிப்பட்டுள்ள அதேநேரம், உலகின் உணவு நெருக்கடிக்கு பாதுகாப்பை வழங்கும் தீர்வுகள் அலசப்பட்டுள்ளன. இதேவேளை, இன்று ஜி20 மாநாட்டில் மெய்நிகர் வழியில் உரையாற்றிய உக்ரைனின் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி ரஷ்யாவுடனான சமாதானப் பேச்சுக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். சமாதானப் பேச்சு இன்று ஆரம்பித்த ஜி20 உச்சிமாநாட்டில் தனது அமைதித் திட்டத்தை முன்வைத்த உக்ரைனிய அதிபர் அதில் அணுசக்தி பாதுகாப்பு, உணவுப் பாதுகாப…

  19. சீனா தனது கண்காணிப்பு பாதுகாப்பு மூலம் டிஜிட்டல் சர்வாதிகாரத்திற்கான திட்டத்தினை உருவாக்குகின்றது By RAJEEBAN 15 NOV, 2022 | 04:28 PM ஸ்மார்ட் நகரங்களிற்கான கண்காணிப்புர் பாதுகாப்பை வழங்கும் நோக்கில் சீனா டிஜிட்டல் சர்வாதிகாரத்திற்கான அடிப்படைகளை உருவாக்குகின்றது என மனிலா டைம்ஸ் தெரிவித்துள்ளது. சீனாவின் ஸ்மார்ட் சிட்டி முயற்சி என்பது சுதந்திரத்திற்கு ஆபத்தானது என தெரிவித்துள்ள மனிலா டைம்ஸ் அரசியல்வாதிகள் அரசியல் வெற்றியை பெறுவதற்காக பெட்டிக்குள் சர்வாதிகாரத்தை எவ்வாறு பயன்படுத்துகின்றனர் என்பதற்கு இது சிறந்த உதாரணம் எனவும் குறிப்பிட்டுள்ளது. 2013 இல் புதிய பட்டுப்பாதை திட்டத்தை அறிவிப்பதற்கு …

  20. உலக கிண்ணத்தின்போது யுக்ரைனில் போர்நிறுத்தம்: பீபா கோரிக்கை By DIGITAL DESK 3 15 NOV, 2022 | 02:27 PM உலகக் கிண்ண கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியின்போது யுக்ரைனில் ஒரு மாத காலம் போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும் என சர்வதேச கால்பந்தாட்டச் சங்கங்களின் சம்மேளனம் (பீபா) கோரியுள்ளது. இந்தோனேஷியாவின் ஜி20 உச்சிமாநாட்டில் பங்குபற்றும் நாடுகளின் தலைவர்களிடம் பீபா தலைவர் ஜியானி இன்ஃபன்டினோ இக்கோரிக்கையை விடுத்துள்ளார். உலகக்கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டி எதிர்வரும் 20 முதல் டிசெம்பர் 18 ஆம் திகதி வரை கத்தாரில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 2018 உலகக் கிண்ண கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியை ரஷ்யா நடத்தியதைய…

  21. அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கிச் சூடு ; இவ் ஆண்டில் 600 சம்பவங்கள் பதிவு By T. SARANYA 15 NOV, 2022 | 10:09 AM விர்ஜீனியா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளார். இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். இருவர் காயமடைந்தனர். அவர்கள் கால்பந்து வீரர்கள் என தெரிய வந்து உள்ளது. காயமடைந்த 2 பேரில் ஒருவரது நிலைமை மோசமடைந்து உள்ளது. துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு பின்னர் பல்கலைக்கழக வளாக பகுதியில் தடையுத்தரவு விதிக்கப்பட்டது. இதில், சந்தேக நபரான கிறிஸ்டோபர் டார்னெல் ஜோன்ஸ் ஜூனியர் என்பவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு உள்ளார். அவர் …

  22. அவுஸ்திரேலியாவில் கடும்மழை, வெள்ளம் : ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்! By DIGITAL DESK 2 15 NOV, 2022 | 10:43 AM அவுஸ்திரேலியாவில் பெய்து வரும் கடும்மழையால் தெற்கு ஆஸ்திரேலியாவின் பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவில் நியு சௌத்வேல்ஸ், வடகிழக்கு விக்டோரியா மாகாணங்களின் பல்வேறு பகுதிகளில் மழை கடும்மழை பெய்துள்ளது. இதனால் பல நகரங்களில் வெள்ளம் சூழ்ந்தது. குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். தெற்கு அவுஸ்திரேலியாவின் புறநகர் பகுதிகளில் மழை வெள்ளத்தால் துண்டிக்கப…

  23. ரஷ்யா உக்ரேனிற்கு இழப்பீடு வழங்கவேண்டும் - தீர்மானம் நிறைவேற்றியது ஐநா - இலங்கை வாக்கெடுப்பை தவிர்த்தது By RAJEEBAN 15 NOV, 2022 | 12:24 PM உக்ரேனிற்கு ரஸ்யா இழப்பீடு செலுத்தவேண்டும் என ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் கொண்டுவரப்பட்;ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இலங்கை தவிர்த்துள்ளது. யுத்தம் தொடர்பில் ரஷ்யா உக்ரைனிற்கு இழப்பீடு செலுத்தவேண்டும் என்ற தீர்மானத்தை ஐக்கியநாடுகள் பொதுச்சபை நிறைவேற்றியுள்ளது. சேதம், இழப்பு காயம் ஆகியவற்றிற்கு இழப்பீடு வழங்குவது குறித்த தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பொதுச்சபை நிறைவேற்றியுளது. ஐம்பது நாடுகள் இந்த தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கியிருந்தன, இலங்கை, இந்தியா…

  24. மலேசிய பொதுத் தேர்தல்: வாக்காளர்களை கவர பணம், தமிழ் சினிமா பாடல்கள் கட்டுரை தகவல் எழுதியவர்,சதீஷ் பார்த்தீபன் பதவி,பிபிசி தமிழுக்காக 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த இரண்டு ஆண்டுகளாக, மலேசிய மக்கள் எதிர்பார்த்த நிகழ்வு எதிர்வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்றுதான் மலேசியாவில் 15ஆவது பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மலேசியா சுதந்திரம் பெற்ற பின்னர், கடந்த 2018ஆம் ஆண்டு வரை 14 பொதுத்தேர்தல்களை மலேசியர்கள் சந்தித்துள்ளனர். கடந்த தேர்தலைத் தவிர, மற்ற தேர்தல்கள் அனைத்துமே பெரும்பாலும் அதிக பரபரப்புகளோ, எதிர்பார்ப்புகளோ இன்றித…

  25. தாய்வான் விவகாரத்தில் சீனாவுடன் புதிய பனிப்போர் ஏற்படத் தேவையில்லை: ஜோ பைடன்! தாய்வான் விவகாரத்தில் சீனாவுடன் புதிய பனிப்போர் ஏற்படத் தேவையில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இந்தோனேசியாவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டுக்கு சென்றுள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், சீன ஜனாதிபதி ஸி ஜிங்பினும் நேற்று (திங்கட்கிழமை) 3 மணித்தியாலங்கள் சந்தித்து பேச்சுவார்தை நடத்தியதற்கு பின்னர், வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது. ‘ஒரே சீனா’ கொள்கைக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு தெரிவிக்கும் அதேநேரத்தில், தாய்வானை கைப்பற்ற அண்மை காலமாக சீனா எடுத்துவரும் நடவடிக்கைகளை இனி சீனா தொடரக் கூடாது எனவும் அந்த அறிக்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.