Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. மேற்குக் கரையில்... இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், அல் ஜசீரா செய்தியாளர் கொல்லப்பட்டார் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை நகரமான ஜெனினில் இஸ்ரேலியப் படைகள் நடத்திய சோதனையில் அல் ஜசீராவுக்கு செய்தி அளித்துக்கொண்டிருந்த பாலஸ்தீனிய-அமெரிக்க பத்திரிகையாளர் சுட்டுக் கொல்லப்பட்டார். 51 வயதான ஷெரின் அபு அக்லா, இஸ்ரேலிய துருப்புக்களால் வேண்டுமென்றே சுடப்பட்டதாகவும் அவரது தயாரிப்பாளரும் சுடப்பட்டு காயமடைந்தார் என்றும் அறிவிக்கப்பட்டுட்டள்ளது, துப்பாக்கிச் சூட்டின் போது பாலஸ்தீனிய ஆயுததாரிகளால் அவர்கள் சுடப்பட்டிருக்கலாம் என்று இஸ்ரேல் பிரதமர் கூறினார். இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ள…

  2. உக்ரைன் போர்: பொரிஸ் ஜோன்சன் ஸ்வீடன் மற்றும் பின்லாந்துக்கு விஜயம் உக்ரைனில் நடக்கும் போர் குறித்து விவாதிக்க பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் ஸ்வீடன் மற்றும் பின்லாந்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். நேட்டோ கூட்டணியில் சேரலாமா என்பது குறித்து இரு நாடுகளுக்குள்ளும் விவாதம் நடந்து வரும் நிலையில் அவரது இந்த விஜயம் அமையவுள்ளது. புதன்கிழமை செல்லும் பிரதமர் பொரிஸ் ஜோன்சன், இரு நாட்டு தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். உக்ரைன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு ஐரோப்பாவின் பதில் குறித்து இதன்போது பேசப்படும் என தெரிவிக்கப்படுகின்றது https://athavannews.com/2022/1281434

  3. உக்ரைன் போர்: 44 பொதுமக்களின் உடல்கள், இஸியம் பகுதியில் கண்டெடுக்கப்பட்டன! உக்ரேனிய நகரமான இஸியம் பகுதியில் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கி இருந்த 44 பொதுமக்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கடந்த மார்ச் மாதம் ரஷ்ய ஷெல் தாக்குதலில் இருந்து தப்பிக்க குடியிருப்பாளர்கள் கட்டடத்தின் அடித்தளத்தில் ஒழிந்திருந்த நிலையில் ஐந்து மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. மீட்பு பணியாளர்களினால் கட்டிடத்தை மட்டுமே அடைய முடிந்தது என உள்ளூர் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார். அதே தெருவில் உள்ள மற்றொரு கட்டிடமும் குறிவைக்கப்பட்டதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. ஏப்ரல் 1 ஆம் திகதி இஸியம் பகுதியை கைப்பற்…

  4. உக்ரைனுக்கு... மேலதிகமாக "40 பில்லியன் டொலர்" உதவி – அமெரிக்க பிரதிநிதிகள் சபை ஒப்புதல் உக்ரைனுக்கு மேலதிகமாக 40 பில்லியன் டொலர் உதவியை வழங்க அமெரிக்க பிரதிநிதிகள் சபை ஒப்புதல் அளித்துள்ளது. ரஷ்யாவின் மூன்று மாத காலப் படையெடுப்பை முறியடிக்க கிய்வ் உதவிக்கு அதிக நிதி தேவை என ஜனாதிபதி ஜோ பைடன் அழைப்பு விடுத்ததை அடுத்து இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதன்படி நேற்று இடம்பெற்ற வாக்கெடுப்பில் உக்ரைன் சட்டமூலத்திற்கு ஆதரவாக 368 வாக்குகளும் எதிராக 57 வாக்குகளும் கிடைத்தன இலையில் நிரைவேற்றப்பட்டுள்ளது. அந்தவகையில் ஏப்ரல் மாதத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் விடுத்த கோரிக்கையை விட 7 பில்லியன் டொலர் அதிகமாக வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது. https://at…

  5. கிழக்கு ஆசியாவின் கடற்பகுதியில்... சீனாவின், அத்துமீறல் : தாய்வான் வழியாக கப்பலை அனுப்பியது அமெரிக்கா கிழக்கு ஆசியாவின் கடற்பகுதியில் சீனாவுடனான பதட்டங்கள் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் தாய்வான் வழியாக அமெரிக்க கடற்படை தனது இரண்டாவது கப்பலை அனுப்பியது. சர்வதேச சட்டத்தின்படி தாய்வானுக்கு அருகில் யு.எஸ்.எஸ். போர்ட் றோயல், டிகோண்டெரோகா வகுப்பு வழிகாட்டி-ஏவுகணை கப்பல் சென்றதாக அமெரிக்க கடற்படை கூறியது. தனது சுயமாநிலமாக சீனா கருதும் தாய்வானைச் சுற்றி தொடர்ந்தும் ரோந்து பணிகளில் அமெரிக்க கடற்படையும் அதன் நட்பு நாடுகளும் ஈடுபட்டுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை, 18 போர் விமானங்களை தாய்வானின் வான் பரப்பிற்குள் சீனா ரோந்து நடவடிக்கைக்காக அனுப்பியது. ஜ…

  6. நீண்ட போருக்கு... ரஷ்ய ஜனாதிபதி தயாராகி வருகின்றார், என அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை உக்ரைனில் ஒரு நீண்ட போருக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தயாராகி வருகிறார் என அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. கிழக்கில் வெற்றி பெற்றாலும் போரை முடிவுக்குக் கொண்டுவர முடியாது என அமெரிக்க உளவுத்துறை எச்சரித்துள்ளது. உக்ரைனின் கிழக்கு பகுதியில் கடுமையான மோதல் நீடித்து வரும் அதேவேளை ரஷ்யாவும் தனது பகுதியை கைப்பற்ற முயற்சித்து வரும் நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உக்ரைன் அதன் தலைநகரான கீயூவைக் கைப்பற்றும் முயற்சிகளை எதிர்த்ததை அடுத்து, டான்பாஸ் பகுதியைக் கைப்பற்றும் முயற்சியில் ரஷ்யா ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் பணவீக்கம், உணவுப் பற்றாக்கு…

  7. ஐரோப்பிய ஒன்றியத்தில்... உக்ரைன் ஏற்றுக்கொள்ளப் படுவதற்கு, "பல தசாப்தங்கள்" ஆகும்: பிரான்ஸ் ஜனாதிபதி! ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு பல தசாப்தங்கள் ஆகும் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். ஸ்ட்ராஸ்பேர்க்கில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரையின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர், உக்ரைன் ஒரு இணை ஐரோப்பிய சமூகத்தில் இணையலாம் என்று பரிந்துரைத்தார். இது ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத உறுப்பினர்கள் மற்ற வழிகளில் ஐரோப்பாவின் பாதுகாப்பு கட்டமைப்பில் சேர அனுமதிக்கும் என்று ஜனாதிபதி மக்ரோன் கூறினார். ரஷ்யா ஆதாயங்களை அடைய முயற்சிக்கும் கிழக்கு டான்பாஸ் பகுதியில் கடுமையான சண்ட…

  8. பிலிப்பைன்ஸின்... முன்னாள் சர்வாதிகாரியின் மகன், ஜனாதிபதியாக தேர்வு? பிலிப்பைன்ஸின் முன்னாள் சர்வாதிகாரியின் மகன் ஃபெர்டினாண்ட் ‘போங்பாங்’ மார்கோஸ் ஜூனியர், ஜனாதிபதி தேர்தலில் அமோக வெற்றி பெறத் தயாராகிவிட்டதாக, பகுதி மற்றும் அதிகாரப்பூர்வமற்ற முடிவுகள் தெரிவிக்கின்றன. ஃபெர்டினாண்ட் ‘போங்பாங்’ மார்கோஸ் ஜூனியர், இதுவரை 55.8. சதவீத வாக்குகளைப் பெற்று முன்னிலையில் இருப்பதாக அறிய முடிகின்றது. போட்டியாளரான லெனி ராப்ரிடோ 28 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார். போங்பங்கின் வெற்றி 36 ஆண்டுகளுக்குப் பிறகு மார்கோஸ் குடும்பம் மீண்டும் ஆட்சிக்கு வருவதைக் குறிக்கின்றது. கடும் ஊழலில் இருந்த அவரது குடும்பத்தின் ஆட்சிக்காலத்தை பொற்காலம் என அவரது ஆதரவாளர்கள் கூறுகி…

  9. உலகப் போர் வெற்றி தினக் கொண்டாட்டத்தில்... கலந்து கொண்ட, ரஷ்ய தூதர் மீது தாக்குதல்! போலந்து தலைநகர் வார்சாவில் நடந்த ரஷ்யாவின் வெற்றிதினக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட ரஷ்ய தூதர் மீது எதிர்பாளர்கள் சிவப்பு சாயம் வீசி தாக்குதல் நடத்தினர். வார்சாவில் உள்ள சோவியத் இராணுவ நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காக சென்ற ரஷ்ய தூதர் செர்கய் ஆன்ட்ரீவ் மீதே அங்கு கூடியிருந்த ரஷ்யாவுக்கு எதிரான உக்ரைன் ஆதரவாளர்கள், எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அங்கு திரண்டிருந்த உக்ரைன் ஆதரவாளர்கள், கைகளில் உக்ரைன் கொடியை ஏந்தியபடி ரஷ்யத் தூதரைப் பார்த்து, ‘பாசிஸ்ட்’, ‘கொலைகாரர்’ என கோஷமிட்டனர். அப்போது சிலர் தூதர் மீது சிவப்பு சாயத்தை வீசினர். இந்த சம்பவம் குறித்து ரஷ்யாவி…

  10. உக்ரைனியர்கள்... அமைதியான- நியாயமான... எதிர்காலத்தை பெற, புடின் விருப்பம்! உக்ரைனில் வசிப்பவர்கள் அனைவரும் அமைதியான மற்றும் நியாயமான எதிர்காலத்தை பெற விரும்புவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் விருப்பம் தெரிவித்துள்ளார். இரண்டாம் உலகப் போரில் ஹிட்லருடைய ஜேர்மனியின் நாசிச படை தோற்கடிக்கப்பட்டதன் 77ஆவது ஆண்டு நினைவு நாளில், முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளுக்கு வாழ்த்து தெரிவித்த போது, அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘நம் நாட்டு வீரர்கள், நாசிச அசுத்தங்களிலிருந்து தங்கள் பூர்வீக நிலத்தை விடுவிக்க, அவர்களுடைய மூதாதையர்களை போல் போராடுகிறார்கள். 1945இல் இருந்ததைப் போல, வெற்றி நமக்கே கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன், அவர்கள் …

  11. ரஷ்யா- பெலராஸ் மீது... பிரித்தானியா, பொருளாதார வர்த்தக தடை! ரஷ்யா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளுக்கு எதிராக புதிய பொருளாதார தடைகளை பிரித்தானியா அறிமுகப்படுத்தியுள்ளது. இது மொத்தம் 1.7 பில்லியன் பவுண்டுகள் (2 பில்லியன் அமெரிக்க டொலர்கள்) மதிப்பிலான வர்த்தகத்தை இலக்காகக் கொண்டு ரஷ்யா மற்றும் பெலாரஸ் மீது புதிய பொருளாதாரத் தடைகளை பிரித்தானியா விதித்துள்ளது. புதிய கட்டுப்பாடுகள் உக்ரைனில் ரஷ்யாவின் சிறப்பு இராணுவ நடவடிக்கையின் தொடக்கத்திலிருந்து முழு அல்லது பகுதி இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தடைகளுக்கு உட்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பை 4 பில்லியன் பவுண்டுகளுக்கு மேல் கொண்டு வரும். புதிய இறக்குமதி வரிகள் பிளாட்டினம் மற்றும் பல்லேடியம் உட்பட 1.4 பில்லி…

  12. கொடூரமான... போர்க் குற்றங்களுக்கு, புடின் தான் பொறுப்பு: ஜஸ்டீன் ட்ரூடோ! கொடூரமான போர்க்குற்றங்களுக்கு விளாடிமிர் புடின் தான் பொறுப்பு என கனேடிய பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கடுமையான சண்டையால் அழிக்கப்பட்ட நகரமான இர்பினை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பார்வையிட்ட பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘உக்ரைனில் அழிக்கப்பட்ட இர்வின் நகரை பார்வையிட்டேன். ரஷ்யாவின் சட்டவிரோதப் போரின் கொடூரத்தை நான் நேரடியாகக் கண்டேன். கொடூரமான போர்க்குற்றங்களுக்கு விளாடிமிர் புடின் தான் பொறுப்பு என்பது தெளிவாகிறது. நமது வெற்றிக்குப் பின், உக்ரைனிய நகரங்களின் புனரமைப்புக்கு எங்கள் நாடுகளுக்…

  13. கைப்பற்றப்பட்ட... மரியுபோல் இரும்பு தொழிற்சாலையில் இருந்து, சகல மக்களும் வெளியேற்றம் மரியுபோலில் முற்றுகையிடப்பட்டிருந்த இரும்பு தொழிற்சாலையில் இருந்த சிறுவர்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளதாக உக்ரைனும் ரஷ்யாவும் அறிவித்துள்ளன. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் செஞ்சிலுவை சங்கம் என்பவற்றினால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த மீட்பு நடவடிக்கை ஒரு வாரத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டது. ரஷ்யாவினால் மரியுபோலில் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. குறித்த பகுதியிலுள்ள உக்ரைன் பாதுகாப்பு தரப்பினரை சரணடையக் கோரி, ரஷ்யா அங்குள்ள இரும்பு தொழிற்சாலையை முற்றுகையிட்டிருந்தது. இந்நிலையில் அங்குள்ள மக்களை மீட்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட…

  14. ரஷ்ய போர்க்கப்பலை அழிக்க... அமெரிக்கா உதவி! ரஷ்ய கடற்படை பலத்தின் சின்னமாகத் திகழ்ந்த மாஸ்க்வா கப்பலை, உக்ரைன் இராணுவம் தாக்கி முழ்கடிப்பதற்கு உளவுத் தகவல் மூலம் அமெரிக்கா உதவியதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து அமெரிக்கார தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘மாஸ்க்வா கப்பலின் இருப்பிடத்தை உக்ரைன் ராணுவத்துக்கு அமெரிக்க உளவுத் துihன் தெரியப்படுத்தியது. அந்தத் தகவலின் அடிப்படையில்தான் மாஸ்க்வா கப்பலின் மீது உக்ரைன் ராணுவம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி மூழ்கடித்தது. இதில், கப்பலின் இருப்பிடத்தைத் தெரியப்படுத்தியது மட்டும்தான் அமெரிக்காவின் பங்காகும். கப்பல் மீது தாக்குதல் நடத்தி மூழ்கடிப்பதற்கான முழு முடிவும் உக்ரைனால் மட்டுமே எடுக்கப்பட்டது’ என…

  15. ரஷ்ய, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருமாறு வலியுறுத்தல் -சி.எல்.சிசில்- பல மாதங்களாக நீடித்து வரும் ரஷ்ய – உக்ரைன் போருக்கு முடிவு கட்ட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சீனா, அமெரிக்கா, அயர்லாந்து, பிரான்ஸ் மற்றும் மெக்சிகோ உள்ளிட்ட பெரும்பாலான பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் இதனை வலியுறுத்தி வருகின்றனர். ஐக்கிய நாடுகள் சபையும், பல்வேறு நாடுகளும் உக்ரைனில் ரஷியாவின் போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு அதன் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தை மீறுவதாகும் எ…

  16. மேற்கத்திய பொருளாதாரத் தடைகளிலிருந்து... தப்பிச் செல்லும், பணக்கார ரஷ்யர்களுக்கு... புகலிடம் வழங்கும் டுபாய்! உக்ரைனில் நடந்த போரில் மேற்கத்திய பொருளாதாரத் தடைகளின் தாக்கத்திலிருந்து தப்பிச் செல்லும் பணக்கார ரஷ்யர்களுக்கு டுபாய் புகலிடமாக உருவெடுத்துள்ளது. ரஷ்ய கோடீஸ்வரர்கள் மற்றும் தொழில்முனைவோர் முன்னோடியில்லாத எண்ணிக்கையில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வந்துள்ளனர் என்று வணிகத் தலைவர்கள் தெரிவித்தனர். 2022ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் ரஷ்யர்களால் டுபாயில் சொத்து வாங்குதல் 67 சதவீதம் அதிகரித்துள்ளது என்று ஒரு அறிக்கை கூறுகிறது. ஐக்கிய அரபு அமீரகம் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கவில்லை அல்லது உக்ரைன் மீதான அதன் ஆக்கிரமிப்பை விமர்சிக்…

  17. ஆப்கானியர்களுக்கு உதவுவதற்கான... உறுதிமொழியை, பிரித்தானியா வழங்கவில்லை: ஜெனரல் சர் ஜொன் மெக்கால்! நேட்டோவுடன் இணைந்து பணியாற்றிய பிறகு, தலிபான்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளான ஆப்கானியர்களுக்கு உதவுவதற்கான உறுதிமொழியை பிரித்தானியா வழங்கவில்லை என ஆப்கானிஸ்தானில் பணியாற்றிய பிரித்தானிய ஜெனரல் சர் ஜொன் மெக்கால் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவுக்கு வர தகுதியான நூற்றுக்கணக்கானோர் இன்னும் தலைமறைவாக உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘இவர்களைக் கவனித்துக்கொள்வதற்கு நாங்கள் உறுதியளித்தோம், நீங்கள் ஒரு உறுதிமொழியைச் செய்தீர்கள், நீங்கள் அதை வழங்கவில்லை, எனவே அதை வழங்குவதற்கான ஒரு அமைப்பை உருவாக்குங்கள்’ என கூறினார். இத…

  18. ஜப்பான் பிரதமருடனான சந்திப்பின் போது.... ரஷ்யா மீது அழுத்தம் கொடுக்க, பிரதமர் தீர்மானம்! பிரதமர் பொரிஸ் ஜோன்சன், ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா இன்று (வியாழக்கிழமை) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்த முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பு சந்திப்பின் போது, இருதலைவர்களும் இரு நாடுகளுக்கும் இடையே ஒரு புதிய பாதுகாப்பு கூட்டாண்மைக்கு உடன்பட உள்ளனர். பரஸ்பர அணுகல் ஒப்பந்தம், பிரித்தானிய மற்றும் ஜப்பானியப் படைகளின் பயிற்சி, கூட்டுப் பயிற்சிகள் மற்றும் பேரிடர் நிவாரணங்களுக்காக ஒன்றாக ஈடுபடுதல் போன்ற விடயங்கள் குறித்தும் விவாதிக்கவுள்ளனர். இந்த ஒப்பந்தம் இந்தோ-பசிபிக் மீதான பிரித்தானியாவின் உறுதிப்பாட்டை அதிகரிக்கும் என்று டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித…

  19. கருக்கலைப்பு விவகாரம்: அமெரிக்கா முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள்! அமெரிக்காவில் கருக்கலைப்பை சட்டவிரோதமாக அறிவிக்க அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளதாக வெளியான தகவலையடுத்து, நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கருவுற்ற 15 வாரங்களுக்கு மேல் கருக்கலைப்பு செய்வதற்கு தடை விதிக்கும் மிசிஸிப்பி மாகாணச் சட்டத்துக்கு எதிராக கடந்த 2021ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மகளிர் உரிமை அமைப்பினர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதிகளில் பெரும்பாலானவர்கள், 1973ஆண் ஆண்டின் ‘ரோ வர்சஸ் வேட்’ வழக்கின் தீர்ப்பை ரத்து செய்து, கருக்கலைப்பை மீண்டும் சட்டவிரோதமாக அறிவிப்பதற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளத…

  20. ஆயுதங்களைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்படும்.... 6 ரயில் நிலையங்களை, தாக்கியுள்ளதாக ரஷ்யா அறிவிப்பு உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள ஆறு ரயில் நிலையங்களை தாக்கியுள்ளதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. மேற்கத்திய நாடுகள் உக்ரேனியப் படைகளுக்கு ஆயுதங்களை வழங்குவதற்கு குறித்த ரயில் நிலையங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் ரஷ்யா கூறியுள்ளது. மேலும் குறித்த ரயில் நிலையங்களின் மின்சார விநியோகங்களை குண்டுவீசித் தாக்கியதாக அமைச்சு கூறியுள்ளது. இருப்பினும் குறித்த ஆறு ரயில் நிலையங்கள் ஊடாக உக்ரேனியப் படைகளுக்கு எந்த ஆயுதங்கள் வழங்கப்பட்டன என்பதை பாதுகாப்பு அமைச்சு வெளிப்படுத்த தவறிவிட்டது. இதேவேளை வெடி பொருட்கள், பீரங்கிகளை சேமித்து வைத்தி…

  21. ரஷ்யாவிடமிருந்து... கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு, முழு தடை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் பரீசிலணை! ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு, முழு தடை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் பரிசீலித்து வருகிறது. இந்த நிலையில், ரஷ்யா மீது 6 புதிய பொருளாதாரத் தடைகளுக்கான உத்தேச திட்டத்தை ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வொண்டெர் லெயென் வெளியிட்டார். அதில் ஒரு பகுதியாக, சர்வதேச பணப் பரிவர்த்தனை அமைப்பான ‘ஸ்விஃப்ட்’ இணைப்பிலிருந்து ரஷ்யாவின் 3 முக்கிய வங்கிகளைத் துண்டிக்க அவர் பரிந்துரைத்தார். அத்துடன், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை ஐரோப்பிய ஒன்றியம் உறுப்பு நாடுகள் படிப்படியாகக் குறைத்து இந்த ஆண்டு இறுதிக்குள் முழுமையாக நிறுத்த வ…

  22. நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றின் மூலம், உக்ரைனில் தாக்குதல் – ரஷ்யா நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றின் மூலம் உக்ரைனில் உள்ள இலக்குகளை நோக்கி இரண்டு கலிபர் ஏவுகணை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. உக்ரைனில் விசேட இராணுவ நடவடிக்கையின் ஒரு பகுதியாக நீர்மூழ்கிக் கப்பல் மூலம் தாக்குதல் நடத்தப்படும் என ரஷ்யா கடந்த மாத இறுதியில் அறிவித்தது. இந்நிலையில் கருங்கடலில் உள்ள ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றின் மூலம் குறித்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இருப்பினும் தாக்குதல் தொடர்பான மேலதிக விபரங்களை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.…

  23. உக்ரைனில்... விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை, 26 ஆக உயர்வு ரிவ்னே பகுதியில் நெடுஞ்சாலை விபத்தில் 26 பேர் உயிரிழந்ததாக உக்ரைன் உள்துறை அமைச்சு உறுதி செய்துள்ளது. இரண்டு சாரதிகள் உட்பட மொத்தம், 26 பேர் விபத்தில் உயிரிழந்ததோடு 12 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து போலந்து நோக்கிச் சென்று கொண்டிருந்ததாகவும், அதில் 34 பயணிகளும் இருந்ததாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது. https://athavannews.com/2022/1280104

  24. இந்த ஆண்டில்... 14வது சோதனை : பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியது வடகொரியா வட கொரியா அதன் கிழக்கு கடற்கரையை நோக்கி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஏவி சோதனை செய்துள்ளது என தென் கொரியாவின் இராணுவம் தெரிவித்துள்ளது. பியோங்யாங்கின் சுனான் பகுதியில் இருந்து மதியம் 12:03 மணிக்கு (03:03 GMT) ஏவப்பட்டதை சியோலின் கூட்டுப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஏவுகணை 780 கிமீ உயரத்திலும், மாக் 11 வேகத்திலும் 470 கிலோமீட்டர் தூரம் சென்றதாகவும் சியோலின் கூட்டுத் தலைவர்கள் அறிவித்துள்ளனர். இந்த ஏவுகணை சோதனை இந்த ஆண்டு வட கொரியா நடத்திய 14 வது ஆயுத சோதனை என அறிவிக்கப்பட்டுள்ளது. வட கொரியா 2017 ஆம் ஆண்டிலிருந்து கடந்த மாதம் முதல் கண்டம் விட்டு கண்டம் பாயும் …

  25. உக்ரைன் நாடாளுமன்றத்தில்... உரையாற்றும், பிரதமர் பொரிஸ்! உக்ரைன் நாடாளுமன்றத்தில் பிரதமர் பொரிஸ் ஜோன்சன், இன்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றவுள்ளார். கடந்த பெப்ரவரி மாதம் ரஷ்யா, உக்ரைன் மீது படையெடுத்ததற்கு பிறகு உக்ரைன் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் முதல் உலகத் தலைவர் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் ஆவார். பதிவுசெய்யப்பட்ட உரையில், கொடுங்கோன்மைக்கு எதிரான உக்ரைனின் எதிர்ப்பைப் பாராட்டி, ரஷ்யாவிற்கு எதிரான நாட்டின் தற்போதைய பாதுகாப்பிற்கு ஆதரவாக 300 மில்லியன் பவுண்டுகள் இராணுவ உதவியை பிரதமர் அறிவிப்பார். மேலும், பிரதமர் உக்ரைனின் சிறந்த மணிநேரத்தை பாராட்டுவார் என்றும், தங்கள் நண்பர்களிடையே இருப்பதில் பிரித்தானியா பெருமிதம் கொள்கிறது என்றும் வலியுறுத்துவா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.