Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பிரான்ஸூக்குள் குடியேறிகள் நுழைய உதவும் பெல்ஜிய காவல்துறை - பிரான்ஸ் கடும் கண்டனம் பிரான்ஸுக்குள் சட்டவீரோதமாக குடியேறிகள் நுழைவதற்கு பெல்ஜிய காவல்துறை உதவுகிறது என்று பிரான்ஸ் தனது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. பெல்ஜிய எல்லையில் 10க்கும் அதிகமான சட்டவிரோத குடியேறிகளுடன் பயணித்த வாகனமொன்றில் இருந்தவர்களை பெல்ஜிய காவல்துறையின் வாகனத்தில் ஏற்றிய காவல்துறையினர் அவர்களை பிரான்ஸ் எல்லைக்குள் கொண்டு சென்றபோது பிரான்ஸ் காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையின் போது தடுக்கப்பட்டதாக பிரான்ஸின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இரண்டு நாடுகளுக்கும் இடையே நிலவும் சுமுகமான நல்லுறவை மதித்து இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்…

  2. பிரிட்டனை மீண்டும் சுதந்திர நாடாக மாற்ற அடுத்த வருடம் புதிய சட்டம்: தெரீசா மே பிரிட்டனை மீண்டும் "இறையாண்மை மற்றும் சுதந்திரம்" கொண்ட நாடாக மாற்ற அடுத்த ஆண்டு புதிய சட்டங்களை உருவாக்கப்போவதாக பிரிட்டனின் பிரதமர் தெரீசா மே தெரிவித்துள்ளார். தெரீசா மே சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர், பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடாக அனுமதித்த சட்டம் ரத்து செய்யப்படும் எனவும், நாட்டின் தேர்ந்தெடுப்பட்ட நிறுவனங்களுக்கு அந்த வல்லமையும் அதிகாரமும் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார் ஆனால் பிரிட்டன் சட்டபூர்வமாக ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகும் வரை அந்த சட்டம் ரத்து செய்யப்படமாட்டாது எனவும் தெரீசா மே தெரிவித்துள்ளார்…

  3. ஒரே நாளில் 2,400 அகதிகள் மீட்பு இத்தாலிக் கரையோரப் பகுதியில், படகுகளில் தத்தளித்துக் கொண்டிருந்த அகதிகளில் 2,400 பேர், நேற்று முன்தினம் சனிக்கிழமையன்று, பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக, இத்தாலியக் கரையோரப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர். மீட்கப்பட்ட 2,400க்கும் மேலதிகமாக, 14 சடலங்களும் மீட்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந்த அகதிகள், இறப்பர் படகுகளிலும் ஏனைய சிறிய அளவிலான படகுகளிலும் பயணித்துக் கொண்டிருந்ததாகவும், சனிக்கிழமை மாத்திரம், சுமார் 20 மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அறிவிக்கப்படுகிறது. இந்த மீட்பு நடவடிக்கையில், அயர்லாந்து கடற்படைக் கப்பல், எல்லைகளற்ற வைத்தியர்கள் அமைப்பினதும் கடல் கண்காணிப்பு அமைப்பினதும் படகுகளும் பய…

  4. அமெரிக்காவில் 3-வது நாளாக கலவரம்: ட்ரம்ப் எதிர்ப்பு பேரணியில் துப்பாக்கிச்சூடு அமெரிக்காவின் ஒரிகான் மாகாணம் போர்ட்லேண்டில் டொனால்டு ட்ரம்புக்கு எதிராக பேரணி, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அவர்களைக் கலைக்க போலீஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர் | படம்: ஏஎப்பி அமெரிக்காவில் 3-வது நாளாக நேற்றுமுன்தினம் இரவும் கலவரம் நீடித்தது. போர்ட்லேண்ட் நகரில் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் படுகாயம் அடைந்தார். அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றதை எதிர்த்து அந்த நாடு முழுவதும் பொதுமக்கள் பல்வேறு போராட் டங்களை நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு நாள் மாலை, இரவில் முக்கிய நகரங்களின் சாலைகளில் பேரணி,…

  5. போர்க் குற்றங்கள் குறித்து பன்னாட்டு ஆணையம் விசாரணை: தி.மு.க. செயற்குழுவில். பிரிவு: தமிழ் நாடு இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்து பன்னாட்டு ஆணையம் மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் தி.மு.க. செயற்குழுவில் நிறைவேற்றப்பட்டது. தி.மு.க. செயற்குழு கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் கட்சித் தலைவர் கருணாநிதி தலைமையில் இன்று நடந்தது. 10.20 முதல் 11.40 வரை நடந்த கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதன் முக்கிய அம்சங்கள் வருமாறு: ஈழத் தமிழர்களுக்கு எந்த வகையிலும் பயன்படாத சூழ்நிலைகள் உருவாக்கப்பட்ட நிலையில், மத்திய ஆட்சியில் தி.மு.க. நீடிப்பது தமிழினத்துக்கே இழைக்கப்படும் தீமை என்பதால் மத்திய அமைச்சரவையில் இருந்தும், …

    • 0 replies
    • 404 views
  6. அதிர்வலைகளை ஏற்படுத்தும் அமெரிக்க அரசியல் :நிதி முறை கேடு அதிபர் டிரம்பின் மகள் இவான்கா டிரம்பிடம் விசாரணை அதிபர் டிரம்பின் பதவியேற்பு விழாவின் போது திரட்டப்பட்ட நிதி சுமார் ரூ.790 கோடியில் இருந்து குறிப்பிட்ட தொகை தவறாக பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த தொகையானது அதிபர் டிரம்பின் தொழில் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டதாகவும், அதில் இருந்து டிரம்ப் குடும்பம் ஆதாயம் தேடியதாகவும் கூறப்படுகிறது. மேலும், தலைநகர் வாஷிங்டனில் அமைந்துள்ள டிரம்ப் ஓட்டலானது, அரசு தொடர்பான கூட்டங்களுக்கு அதிக கட்டணம் வசூலித்ததாகவும், பெரும்பாலான கூட்டம் நிர்பந்தம் காரணம் டிரம்ப் ஓட்டலில் நடைபெற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இவை அனைத்தையும்…

  7. பிரித்தானியாவில் பரவிவரும் வீரியமிக்க புதிய கொரோனா வைரஸ், இத்தாலிக்கும் பரவியது..! Ilango BharathyDecember 22, 2020 பிரித்தானியாவில் பரவிவரும் வீரியமிக்க புதிய கொரோனா வைரஸ், இத்தாலிக்கும் பரவியது..!2020-12-22T07:44:52+05:30உலகம் FacebookTwitterMore கட்டுப்படுத்த முடியாத நிலையிலுள்ளது என பிரித்தானியா வர்ணித்துள்ள வீரியமிக்க புதிய கொரோனா வைரஸ் தொற்று, இத்தாலிக்கும் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவ் வார ஆரம்பத்தில் பிரித்தானியாவிலிருந்து ரோம் நகரிலுள்ள பியூமிசினோ(Fiumicino) விமான நிலையத்திற்கு திரும்பிய 2 பேரில் ஒரு நபருக்கு இந்த தொற்று ஏற்பட்டுள்ளதாக இத்தாலி சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. …

  8. பாடகர் ஜார்ஜ் மைக்கேல் காலமானார்.! பிரிட்டீஷ் பாப் பாடகர் ஜார்ஜ் மைக்கேல் லண்டன் நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். ஜார்ஜ் மைக்கேலின் செய்தி தொடர்பாளர் இந்த தகவலை உறுதி செய்துள்ளார். பாடகர் ஜார்ஜ் மைக்கேல் தமது இசைக் குழு மூலமாக உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானார். ஜார்ஜ் மைக்கேலின் ஆல்பம்கள் கோடிக்கணக்கில் விற்பனை ஆகியுள்ளது. மறைந்த மைக்கேலுக்கு வயது 53. உலகம் முழுவதும் மக்கள் கிறிஸ்மஸ் தினத்தை கொண்டாடி கொண்டிருந்த நிலையில் அவரது உயிர் பிரிந்துள்ளது. உடல்நலக் குறைவுக் காரணமான நீண்ட காலமாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்த மைக்கேல் நேற்று உயிரிழந்துள்ளார். http://www.virakesari.lk/article/14757

  9. தாஜ்மஹால் அருகே குண்டுவெடிப்பு: 2 பேர் பலி, ஒருவர் படுகாயம். ஆக்ரா: தாஜ்மஹால் அருகே குண்டுவெடித்ததில் 2 பேர் பலியாகினர், ஒருவர் படுகாயம் அடைந்தார். உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவின் தாஜ்கஞ்ச் பகுதியில் பழைய பொருட்கள் வைக்கும் கிடங்கு ஒன்று உள்ளது. இந்த கிடங்கில் இன்று திடீர் என்று குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் 2 பேர் பலியாகினர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார். காயம் அடைந்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த குண்டுவெடிப்பு நடந்த இடம் காதல் சின்னமான தாஜ்மஹால் இருக்கும் இடத்தில் இருந்து 1.5 கிமீ தொலைவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நன்றி தற்ஸ்தமிழ்.

  10. மருமகனை முக்கிய பதவியில் நியமித்தார் டிரம்ப் அமெரிக்காவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், தனது மகளின் கணவரான ஜேரட் குஷ்னரை அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகர்களில் ஒருவராக நியமித்துள்ளார். Reuters 35 வயதாகும் ஜேரட் குஷ்னர் அண்மையில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய பங்கு வகித்தார். வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகராக பொறுப்பேற்கவுள்ள இவர், அமெரிக்காவின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கொள்கைகள் தொடர்பான அம்சங்களை கவனிப்பார். டிரம்பின் மகளான இவான்கா டிரம்பை திருமணம் செய்துள்ள குஷ்னர், ஒரு சொத்து மேம்பாட்டாளராக உள்ளார்.…

  11. 2 லட்சத்து 60 ஆயிரம் இந்தியர்கள் உள்ளிட்ட ஒரு கோடியே 10 லட்சம் பேருக்கு அமெரிக்க குடியுரிமை கிடைக்க உள்ளது. இதற்கான முக்கிய மசோதாவுக்கு, செனட் சபை குழு ஒப்புதல் அளித்தது.அமெரிக்க நாட்டில் உரிய ஆவணங்கள் இன்றி ஒரு கோடியே 10 லட்சம் வெளிநாட்டினர் வசித்து வருகின்றனர். இவர்களில் 2 லட்சத்து 60 ஆயிரம் பேர் இந்தியர்கள் ஆவார்கள். இவர்களுக்கு குடியுரிமை அளிக்க வகை செய்து, முழுமையான குடியுரிமை சீர்திருத்தம், எல்லை பாதுகாப்பு, பொருளாதார வாய்ப்பு மற்றும் குடியுரிமை நவீனமய சட்ட மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா, அமெரிக்க செனட் சபையின் நீதித்துறை குழுவின் பரிசீலனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த மசோதாவை நீதித்துறை உறுப்பினர்கள் பரிசீலித்து விவாதித்தனர். முடிவில் மசோதாவ…

  12. ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தின் தலைமை நிர்வாகி எக்கல்ஸ்டோன் நீக்கம் உலகப் பிரசித்தி பெற்ற ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தின் தலைமை நிர்வாகியாக, கடந்த நான்கு தசாப்தங்களாக பதவி வகித்த பெர்னி எக்கல்ஸ்டோன், அப்பதவியிருந்து நீக்கப்பட்டுள்ளார். பெர்னி எக்கல்ஸ்டோன் நீக்கம் எட்டு பில்லியன் டாலர்கள் செலவழித்து ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தின் பொறுப்புகளை தங்களின் உரிமையாக்கியுள்ள லிபர்டி மீடியா என்ற அமெரிக்க நிறுவனம், எக்கல்ஸ்டோனின் நீக்க நடவடிக்கையை அறிவித்துள்ளது. ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தை, உலக அளவில் லாபகரமான வணிகமாக மாற்றிய 86 வயதாகும் பெர்னி எக்கல்ஸ்டோன், தலைமைப் பொறுப்பில் இருந்து தான…

  13. அமெரிக்காவில் 3ஆவது கொரோனா தடுப்பூசிக்கு அங்கீகாரம் ஜோன்சன் அண்ட் ஜோன்சன் (Johnson & Johnson) மருந்து நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசிக்கு அமெரிக்க மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையமான FDA அங்கீகாரம் அளித்துள்ளது. 44 ஆயிரம் பேருக்கு பல்வேறு நாடுகளில் இந்த தடுப்பு மருந்து பரிசோதிக்கப்பட்டதில் எந்தவிதப் பின்விளைவுகளும் ஏற்படாததால் மருந்து பாதுகாப்பானது என்று உறுதி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்ட நிலையில், மூன்றாவது தடுப்பூசியாக ஜோன்சன் அண்ட் ஜோன்சன் தயாரிப்பு மருந்தை அவசர கால சிகிச்சைகளுக்குப் பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மார்ச் இறுதிக்குள் சுமார் 2 கோடி டோஸ்கள் …

  14. பிரித்தானியாவிற்கு பயணம் தடைசெய்யப்பட்ட நாடுகளின் சிவப்பு பட்டியலில் இந்தியா சேர்ப்பு! புதிய கொவிட் மாறுபாட்டின் அச்சத்தினால், பிரித்தானியாவிற்கு பயணம் தடைசெய்யப்பட்ட நாடுகளின் சிவப்பு பட்டியலில் இந்தியா சேர்க்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை பி.எஸ்.டி 04:00 முதல் இந்தியாவில் இருந்து பயணம் செய்யும் மக்களின் வருகை மறுக்கப்படும். பிரித்தானிய அல்லது அயர்லாந்து கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் அல்லது பிரித்தானிய குடியிருப்பு உரிமை உள்ளவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஹோட்டலில் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும். பி .1.617 என அழைக்கப்படும் இந்தியாவின் புதிய கொவிட் மாறுப்பாட்டினால், இதுவரை 103பேர் பாதிக்க…

  15. கொவிட் வைரஸ் குறித்து... அமெரிக்காவை, வெளிப்படையான வகையில் விசாரிக்க வேண்டும்: சீனா வலியுறுத்தல்! கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று குறித்து அமெரிக்காவை வெளிப்படையான வகையில் விசாரிக்க வேண்டும் என சீன வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. பெய்ஜிங்கில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கருத்து தெரிவிக்கையிலேயே பேசிய சீன வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ட்சௌ லிஜியாங் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘கொரோனா வைரஸ் எங்கிருந்து முதலில் தோன்றியது என்ற விவகாரத்தில் சீனாவை குற்றம்சாட்டும் முன்பு முதலில் தமது நாட்டில் அது தொடர்பாக அமெரிக்கா விசாரணை நடத்த வேண்டும் 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13 முதல் 16ஆம் திகதிக்கு இடைப்பட்ட நாட்களில் அமெரிக்காவி…

  16. இளம் வயதினருக்கான ‘மிஸ் யுனிவர்ஸ்’: இந்திய அழகி சிருஷ்டி கவுருக்கு மகுடம் மத்திய அமெரிக்காவில் உள்ள நிகாராகுவா தலைநகர் மனாகுவாவில் நடைபெற்ற இளம் வயதினருக்கான மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த சிருஷ்டி கவுர் முதலிடம் பிடித்து மகுடம் சூடினார். மிஸ் யுனிவர்ஸ் போட்டிகளை நடத்தி வரும் அமைப்பு இளம் வயதினருக்கான (15 முதல் 19 வயது) அழகிப் போட்டியை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் இந்தியா, கனடா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஏராளமான அழகிகள் கலந்து கொண்டனர். பல்வேறு பிரிவுகளில் வெற்றிப் பெற்ற அழகிகள் 25 பேர் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றனர். உடல் அழகு, தனித்திறன் உள்ளிட்ட பிரிவுகளில் முதலிடம் பிடித்து இளம் வயது மி…

    • 0 replies
    • 462 views
  17. அழகுப் போட்டிகளில் ஒல்லியான அழகிகள் பங்கேற்க ஃபிரான்ஸ் தடை படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகோப்புப்படம் அழகுப் போட்டிகளில் ஆரோக்கியமில்லாத உடல் மெலிந்த மாடல்களை ஈடுபடுத்த தடைவிதிக்கும் சட்டம் சனிக்கிழமை முதல் ஃபிரான்ஸில் அமலாகியுள்ளது. உயரத்திற்கு ஏற்ற எடையை குறிக்கும் பாடி மாஸ் இண்டெக்ஸ் (பி எம் ஐ )குறித்தும், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் பற்றியும் மருத்துவர் ஒருவரின் கையொப்பமிட்ட சான்றிதழை மாடல்கள் சமர்பிக்க வேண்டும். உணவு கோளாறுகளை எதிர்த்துப் போராடுவதே இதன் முக்கிய நோக்கம் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகோப்புப்…

  18. மாஸ்கோ: இந்தியாவுக்கு மேலும் 6 மிக்-29 ரக போர் விமானங்களை ரஷ்யா வழங்க உள்ளது. இது தொடர்பாக ரஷ்யாவின் மிக் விமான தயாரிப்பு நிறுவனத்தின் இயக்குநர் செர்கெய் கரோட்ட்கோவ் கூறுகையில், 2015ம் ஆண்டுக்குள் இந்தியாவுக்கு மேலும் 29 போர் விமானங்கள் வழங்கப்படும். கடந்த ஆண்டு 4 விமானங்களை அனுப்பி வைத்திருக்கிறோம். நடப்பாண்டில் 6 போர் விமானங்களை அனுப்பி வைக்க இருக்கிறோம் என்றார். இந்தியாவுடன் மிக் நிறுனம் 29 போர் விமானங்கள் தயாரிப்புக்காக 2010ம் ஆண்டு 1.5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தது. இதற்கு முன்பு 2004ஆம் ஆண்டு 16 மிக் ரக போர் விமானங்களுக்காக இந்தியாவுடன் மிக் நிறுவனம் ஒப்பந்தம் செய்திருந்தது. http://tamil.oneindia.in/news/2013/08/29/world-russia-del…

  19. அவுஸ்திரேலியாவில் நிலநடுக்கம் September 22, 2021 அவுஸ்திரேலியாவின் கிழக்கு மெல்பர்னின் மென்ஸ்ஃபில்ட் நகருக்கு அருகில், 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டு நேரப்படி புதன்கிழமை காலை 9.15 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் சிட்னி, விக்டோரியா, கன்பெரா, தஸ்மேனியா மற்றும் நியூசவுத்வேல்ஸ் ஆகிய பகுதிகளிலும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் யாருக்கும் பலமான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனத் தொிவித்துள்ள அந்நாட்டுப் பிரதமர் ஸ்கொட் மரிசன் அவுஸ்திரேலியாவில் நில நடுக்கங்கள் அசாதாரணமானவை எனவும் . அது மிகவும் வருத்தமான நிகழ்வு எனவும் கூறியுள்ளார். https://globaltamilnews.net…

  20. பிரிட்டிஷ் எம்.பி டேவிட் அமேஸ் கத்திக்குத்து தாக்குதலில் பலி - என்ன நடந்தது? 15 அக்டோபர் 2021, 14:41 GMT புதுப்பிக்கப்பட்டது 40 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,UK PARLIAMENT கன்சர்வேடிவ் எம்.பி. சர் டேவிட் அமேஸ் கத்திக்குத்து தாக்குதலில் படுகாயம் அடைந்த நிலையில் சில நிமிடங்களுக்கு முன்பு அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார். பிரிட்டன் உள்ளூர் நேரப்படி பகல் 12 மணியளவில் லீ-ஆன்-சீ-யில் எம்.பி சர் டேவிட் அமேஸ் கத்தியால் குத்தப்பட்டதாக தங்களுக்கு தகவல் வந்ததாகவும் அதன் பேரில் ஒருவரை கைது செய்ததாகவும் எஸ்ஸெக்ஸ் காவல்துறையினர் தெரிவித்தனர். பிடிபட்ட நபரிடம் இருந்து கத்தி பறிமுதல் செய்யப்பட்டுள்…

  21. ஐரோப்பிய ஒன்றியத்தில் அகதிகள் தஞ்சம் கோரும் உரிமை குறித்த முக்கிய தீர்ப்பு! ஆயிரக்கணக்கான அகதிகள் பாதிக்கப்படுவார்கள் என மனித உரிமை அமைப்புகள் அச்சம் ; ஐஎஸ் அமைப்பில் இணைந்த வெளிநாட்டுப்பெண்களின் எதிர்காலம் என்ன? சொந்தநாடு திரும்பமுடியுமா? இழந்த வாழ்வை மீட்க முடியுமா? பிபிசியின் பிரத்யேக புலனாய்வு! மற்றும் நோயை கண்டறியும் நாய்கள்! புற்றுநோய்க்கு அடுத்து பார்கின்ஸைன்ஸ் நோயை கண்டுபிடிக்கவும் நாய்களுக்கு வழங்கப்படும் பயிற்சி குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  22. பெங்களூரு: ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்ற வங்கி பெண் அதிகாரியை ஒருவன் அரிவாளால் வெட்டி பணத்தை பறித்துச் சென்ற சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெஞ்சை பதற வைக்கும் இந்த காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரை சேர்ந்த ஜோதி உதய் (37) தனியார் வங்கி ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறார். நேற்று காலை 7.10 மணி அளவில் இவர் மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள எல்.ஐ.சி. கட்டிடத்தில் இருக்கும் வங்கியின் ஏ.டி.எம். மையத்துக்கு பணம் எடுக்க சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து உள்ளே சென்ற மர்ம நபர், ஏ.டி.எம். மையத்தின் ஷட்டரை கீழே இறக்கி பூட்டினார். அவரை பார்த்ததும் ஜோதி பயந்துபோய் வெளியே செல்ல முயன்றார். அவரை …

  23. அமெரிக்க விமான நிலையங்களில் முழு உடல் சோதனை வாஷிங்டன், திங்கள், 28 டிசம்பர் 2009( 17:53 IST ) அமெரிக்க விமானத்தை தகர்க்க முயன்ற குற்றத்திற்காக நைஜீரியாவைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பயணிகள் அனைவரையும் முழு உடல் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து சி.பி.எஸ். செய்தி தொலைக்காட்சிக்கு பீட்டர் கிங் அளித்துள்ள பேட்டியில், “நைஜீரியா போன்ற நாடுகளில் உரிய பாதுகாப்பு முறை பின்பற்றப்படாத காரணத்தால், அமெரிக்க விமான நிலையங்களில் பயணிகளுக்கு முழு உடை சோதனை (full body scan) நடத்த வேண்டியது தற்போதைய சூழலில் அவசியமானதாகிறது” எனக் கூறியுள்ளார். முழு உடல் சோதனையால் பயணிகளின் தனி நபர் சுதந்த…

    • 12 replies
    • 1.7k views
  24. கொரிய தீபகற்பத்தில் அமெரிக்காவுக்கு போட்டியாக போர் விமானங்களை அனுப்பியது ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் - REUTERS அமெரிக்க, தென்கொரிய ராணுவங்கள் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அந்த நாடுகளுக்கு சவால் விடும் வகையில் கொரிய தீபகற்பத்தில் ரஷ்ய போர் விமானங்கள் பறந்துச் சென்றன. இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் மோதல் முற்றி வருகிறது என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். ரஷ்யா மீது அமெரிக்கா அடுத்ததடுத்து பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. மேலும் அமெரிக்காவில் பணியாற்றும் ரஷ்ய தூதரக ஊழியர்களையும் வெளியேற்றி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு சான்பிரான்சிஸ்கோவி…

  25. ரஷ்ய அதிபர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோஃப், மின்ஸ்க் நகரத்தில் யுக்ரேனுடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஆனால், யுக்ரேன் “ராணுவமயமாக்கல் இல்லாமை உட்பட “சார்பற்ற நிலையை” அறிவிப்பதாக இருந்தால் மட்டுமே பேச்சுவார்த்தை நடக்கும் என்று தெரிவித்துள்ளது. எப்போதும் யுக்ரேன் நேட்டோவில் சேரக்கூடாது என்பதே ரஷ்யாவின் நோக்கமாக இருந்து வருகிறது. யுக்ரேன் அதிபர், விளாதிமிர் புதினுடன் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், இந்த அடிப்படையில் அவர் பேச்சுவார்த்தைக்கு உடன்படுவார் என்பதற்குரிய அறிகுறிகள் எதுவும் இல்லை. மின்ஸ்க் நகரம் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பகுதி. ஏனெனில், 2014-ல் கிழக்கு யுக்ரேனில் வெடித்த மோதலை மு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.