Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. டிரம்ப்பின் டுவிட்டர் கணக்கை நிரந்தரமாக முடக்கிய டுவிட்டர் நிறுவனம்: ஆதரவாளர்கள் அதிர்ச்சி வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனின் வெற்றியை உறுதிசெய்து, சான்று அளிப்பதற்காக அமெரிக்க நாடாளுமன்ற கூட்டு கூட்டம் 6-ந் தேதியன்று நடைபெற்றது. அப்போது, தோல்வி அடைந்த தற்போதைய ஜனாதிபதி டிரம்பின் ஆதரவாளர்கள் பெருமளவில் திரண்டு, நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு, வன்முறையில் இறங்கினர். துப்பாக்கிச்சூடு நடத்தும் அளவுக்கு நிலைமை விபரீதமானது. துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர். அமெரிக்க வரலாற்றில் முன் எப்போதும் நடந்திராத வகையில் அரங்கேறிய வன்செயல்கள், ஜனநாயக…

  2. வடக்கு மாகாண சபையின் முன்னாள் ஆளுனரும், சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினரும், கல்விமானுமாகிய கலாநிதி சுரேன் ராகவன், சிறிலங்கா நாடாளுமன்றில் அண்மையில் ஆற்றியிருந்த உரை கனடா வாழ் தமிழ் மக்களின் கடுமையான கண்டனத்திற்கு உள்ளாகி வருகின்றது. கலாநிதி ராகவன் தனது நாடாளுமன்ற உரையின் மூலம் கனடா வாழ் தமிழ் மக்களின் முதுகில் குத்தியுள்ளதாகவும், கனடா தமிழ் மக்களை சிறிலங்கா நாடாளுமன்றத்தில் காட்டிக்கொடுத்துவிட்டதாகவும், கனடா மக்கள் ஊடகங்களிலும், சமூகவலைத்தளங்களிலும் பதிவு செய்து வருகின்றார்கள். இலங்கையில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டது இனப் படுகொலையே என்று வலியுத்தி கனடா ஒன்ராரியோ சட்டசபையில் தமிழின அழிப்பு அறிவூட்டல் வாரம்’ தொடர்பான 104 என்ற சட்டமூலம் முன்மொழியப்பட்டிருந்தத…

  3. டொனால்ட் ட்ரம்ப்பை கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பித்தது ஈராக் நீதிமன்றம்! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பித்து ஈராக் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஈரானின் புரட்சிப் படைத்தளபதி காசிம் சோலெய்மனியை ஆள் இல்லா விமானம் மூலம் அமெரிக்க இராணுவம் ரொக்கெட் தாக்குதல் நடத்தி கொலை செய்தமை தொடர்பான வழக்கிலேயே இன்று (வியாழக்கிழமை) இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தளபதி காசிம் சோலெய்மனி, அவரின் மருமகன் முகந்திஸ் உள்ளிட்ட ஒன்பது பேர் கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி மூன்றாம் திகதி ஈராக்கின் பாக்தாத் விமான நிலையத்தில் அமெரிக்கத் தாக்குதலில் கொல்லப்பட்டனர். இந்நிலையில், அமெரிக்கர்களைக் கொல்வதற்கு சோலெய்மனி திட்டமிட்டதால் அவரைக…

  4. கொறோணாவைரஸின் மூலத்தை அறியச் சென்ற உலக சுகாதார நிறுவன நிபுணர்களுக்கு சீனா அனுமதி மறுப்பு கொறோணாவைரஸின் மூலத்தைத் தேடி ஆராய்ச்சிக்காக வூஹானுக்குப் பயணம் செய்யவிருந்த உலக சுகாதார நிறுவன நிபுணர்களுக்கு சீனா அனுமதி மறுத்துள்ளது. சீனாவின் இந் நடவடிக்கை தனக்கு மிகவும் ஏமாற்றம் தருவதாக அவ்வமைப்பின் தலைவர் ரெட்றோஸ் அடனோம் கெப்றியேசுஸ் தெரிவித்துள்ளார். கொறோணாவைரஸ் எங்கிருந்து உருக்கொண்டது என்பதனை அறிவதற்காக 10 பேர் கொண்ட நிபுணர்கள் குழுவைச் சீனாவின் வூஹான் மாகாணத்திற்கு அனுப்ப உலக சுகாதார அமைப்பு திட்டமிட்டிருந்தது. இதன் முதற்கட்டமாக இக்குழுவிலுள்ள இருவர் முதலில் சீனாவிற்குச் செல்வதற்காக சீனா, உலக சுகாதார நிறுவனம், இடைத் தரிப்பு நாடுகள் ஆகியவற்றிடையே போக்குவர…

  5. டிரம்பின் அடுத்த திட்டம்: அச்சத்தில் அமெரிக்கவாழ் தமிழர்கள் 5 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளிவந்து புதிய அதிபராக ஜோ பைடனின் வெற்றியை அந்நாட்டு நாடாளுமன்றம் அங்கீகரித்துள்ள வேளையில், இந்த சம்பவம் குறித்து அங்கு வாழும் இந்தியர்கள் தங்களின் உணர்வுகளை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டார்கள். வாஷிங்டன் பல்கலைக்கழக முன்னாள் டீன் ஆர்.சி.சரவணபவன், ”மக்கள் மாக்களாக வெகுநேரம் ஆகாது என்பதற்கு அமெரிக்க கேப்பிட்டலில் புதன்கிழமை நிகழ்ந்த காட்சிகளே சாட்சி. டிரம்ப் தனது அரசியல் ஆதாயத்திற்காக மக்களை உணர்ச்சிவயப்படுத்தி, பொய்களைப் புகுத்தி, மக்களாட்சியின் அடிப்படை நாகரிகத்த…

  6. அமெரிக்க கேப்பிட்டல் வன்முறை: 207 வருட பழைய வரலாறு தெரியுமா? 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES அமெரிக்க கேப்பிட்டல் கட்டடத்தில் புதன்கிழமை நடந்த வன்முறை போல 207 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சம்பவம் நடந்துள்ளது. அங்கு ஆளும் குடியரசு கட்சியைச் சேர்ந்தவர்கள் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்களால் அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தில் நிகழ்ந்த வன்முறைதான் உலகம் முழுக்க வியாழக்கிழமை தலைப்புச் செய்திகளாகின. இந்த சம்பவத்தின்போது நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் மூன்று பேர் மருத்துவ அவசரநிலை காரணமாக உயிரிழந்திருக்கலாம் என செய்திகள் வெளியாகியிருக்கின்றன. உ…

  7. மலேசிய காட்டில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி இறந்தது எப்படி? 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,FAMILY HANDOUT மலேசிய காட்டுக்குள் சடலமாக மீட்கப்பட்ட சிறுமியின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில் அவர் உயிரிழந்தது தொடர்பான காரணத்தை, தவறான சாகச பயணத்தின்போது ஏற்பட்ட விபத்து என்று விசாரணை நடத்தியவர் தெரிவித்துள்ளார். தென்மேற்கு லண்டனில் பால்ஹாமை சேர்ந்த 15 வயதான நோரா குவோய்ரின், 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுற்றுச்சூழலுக்கு உகந்த ஈக்கோ-விடுதியில் இருந்து காணாமல் போய் 9 நாட்கள் கழித்து காட்டுக்குள் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது மரணத்துக்கான காரணத்தை அறிய அவரது உடல் பகுதிகளை ஆய்வு செய்ய …

  8. நாடாளுமன்றத்தை முற்றுகையிட்ட ட்ரம்ப் ஆதரவாளர்கள் – பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் பெண் உயிரிழப்பு அமெரிக்க நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு டொனால்ட் ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து கட்டடத்தினுள் நுழைந்தவர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றாலும் அதனை ட்ரம்பும் அவரது ஆதரவாளர்களும் ஏற்க மறுத்து வருகின்றனர். இந்த நிலையில், ஜோ பைடனின் வெற்றியை உறுதி செய்வதற்காக அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டம் நடைபெற்றது. இதன்போது செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் அவையில் இருந்தனர். அதேநேரத்தில், ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்…

    • 26 replies
    • 2.1k views
  9. இந்தியாவின் சில மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவல்:டெல்லியில் கண்காணிப்பு மையம் அமைப்பு Digital News Team உலகெங்கும் கொரோனா வைரஸை அச்சுறுத்தல் நிலவி வரும் நிலையில், இந்தியாவில் புதிய உயிர் கொல்லி நோய் கிளம்பியுள்ளது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், இமாச்சல பிரதேசம் மற்றும் கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் வைரஸ் பரவி வருகிறது.இதனால் ஏராளமான பறவைகள் இறந்துள்ளதுடன் நோய் பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பல மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவியுள்ள நிலையில் டெல்லியில் கண்காணிப்பு மையத்தை மத்திய அரசு அமைத்துள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் மேற்கொள்ளப்படும் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குற…

  10. அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமில் அகதிகள் கலவரம் – கட்டிடங்களிற்கு தீ மூட்டினர் அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ்தீவு தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அகதிகள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளதுடன் முகாமின் கட்டிடங்களிற்கு தீ மூட்டியுள்ளனர். செவ்வாய்கிழமை இரவு இரண்டு கட்டிடங்கள் தீமூட்டப்பட்டன என தடுப்பு முகாமிற்குள் இருந்து வரும் தகவல்கள் தெரிவித்துள்ளன. தடுப்புமுகாமின் கட்டிடமொன்றின் உச்சியில் இருவர் காணப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முகாமில் தாங்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு அனுமதி கோரினோம் அதற்கு அனுமதி மறுக்…

  11. வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பு: இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்தில் மீண்டும் பொது முடக்கம் 5 ஜனவரி 2021, 07:44 GMT பட மூலாதாரம்,PA MEDIA படக்குறிப்பு, போரிஸ் ஜான்சன் (கோப்புப்படம்) இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்தில் மீண்டும் பொது முடக்க கட்டுப்பாடுகள் தொடங்குவதால், பெரும்பாலான மக்கள் அனுமதிக்கப்பட்ட சில காரணங்களைத் தவிர வீட்டிலேயே இருக்க வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸில் உள்ள பெரும்பாலான பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அதே நேரத்தில் வடக்கு அயர்லாந்தில் இணையவழி கற்றல் தொடர்ந்து அமலில் இருக்கும். இங்கிலாந்தில் இந்த பொது முடக்க க…

  12. இந்திய குடியரசு தினம்: போரிஸ் ஜான்சனின் பயண ரத்தால் தலைமை விருந்தினரின்றி விழா பரணி தரன் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES எதிர்வரும் இந்திய குடியரசு தினத்தின்போது தலைமை விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் திடீரென தனது பயணத்தை ரத்து செய்யும் அறிவிப்பை வெளியிட்டதால், இந்த ஆண்டின் குடியரசு தினம் தலைமை விருந்தினரின்றி நடக்கும் சூழல் உருவாகியிருக்கிறது. உலகை புரட்டிப்போட்டிருக்கும் கொரோனா வைரஸ், தற்போது புதிய திரிபுவாக உருப்பெற்று பிரிட்டனில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அங்கு புதிய கொரோனா வைர…

  13. தென்கொரியாவின் எண்ணெய் கப்பலை கைப்பற்றியது ஈரான் Digital News Team வளைகுடாவில் தென்கொரியாவின் எண்ணெய் கப்பலை ஈரான் கைப்பற்றியுள்ளது. வளைகுடா கடற்பரப்பில் ஈரானின் புரட்சிகர காவல்படையினர் தென்கொரியாவின் எண்ணெய் கப்பலை கைப்பற்றியுள்ளனர் என ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வளைகுடாவை இரசாயனங்களால் அசுத்தப்படுத்திக்கொண்டிருந்த தென்கொரிய எண்ணெய்கப்பலை ஈரானின் புரட்சிகர காவல்படையினர் கைப்பற்றியுள்ளனர் எனஈரானின் தொலைக்காட்சி உட்பட பல ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஹங்குக்செமி என்ற கப்பலை ஈரானின் புரட்சிகர காவல்படையினர் பாதுகாப்பாக அழைத்துவருவதை டஸ்னிம் செய்தி முகவர் அமைப்பு காண்பித்துள்ளது. தென்கொ…

  14. Digital News Team கொரோனா வைரஸ் தாக்கம் கென்யாவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதையடுத்து அந்நாட்டில் பாடசாலைகள் 9 மாதங்களின் பின் திறக்கப்பட்டுள்ளன. உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் ஆபிரிக்க நாடுகளிலும் பரவியுள்ளது. ஆனால், பிற வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஆபிரிக்க நாடுகளில் இது பெருமளவு கட்டுப் படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் 2020 மார்ச் மாதத்தில் தான் வைரஸ் ஆபிரிக்க நாடுகளுக்கு பரவத் தொடங்கியது. குறிப்பாக, ஆபிரிக்க நாடான கென்யாவில் மார்ச் மாதத்துக்குப் பின்னரே கொரோனா பரவியது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்நாட்டில் 2020 மார்ச் மாதம் முதலே பாடசாலைகள் காலவரையறையின…

  15. விக்கிலீக்ஸ்... ஜூலியன் அசாஞ்சை, அமெரிக்காவிடம் ஒப்படைக்க முடியாது – பிரிட்டிஷ் நீதிமன்றம் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சை அமெரிக்காவிடம் ஒப்படைக்க முடியாது என லண்டனில் உள்ள நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மன ஆரோக்கியம் குறித்த கோரிக்கைகளை பரிசீலித்த நீதிபதி குறித்த உத்தரவை இன்று (திங்கட்கிழமை) பிறப்பித்துள்ளார். 49 வயதான ஜூலியன் அசாஞ்ச் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் நடந்த போர்கள் தொடர்பான இரகசிய அமெரிக்க இராணுவ ஆவணங்களை வெளியிட்டதாக உளவு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார். இந்நிலையில் அமெரிக்க அரசியல் பழிவாங்கல் நோக்கத்திற்காக இவ்வாறான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக தெரிவித்து ஒப்படைப்பு கோரிக்கையை எதிர்த்தும் போராடியிருந்தார். http://athavannew…

  16. தேர்தல் முடிவுகளை தனக்கு சாதகமாக மாற்ற மிரட்டல் விடும் ட்ரம்ப்பின் ஒலிப்பதிவு வைரல்! அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஜியார்ஜியாவின் உயர்மட்ட தேர்தல் அதிகாரியை மாநில ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை தனக்கு சாதகமாக மறுபரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தியுள்ள ஒலிப்பதிவு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஒளிப்பதிவு தி வொஷிங்டன் போஸ்ட்டால் பெறப்பட்ட ஒரு மணி நேர தொலைபேசி அழைப்பு, தற்போது வைரலாக பரவிவருகின்றது. ஜார்ஜியா ஏற்கனவே பல தணிக்கைகளையும் முடிவுகளையும் மறுபரிசீலனை செய்திருந்தது. இது பைடனின் வெற்றியை உறுதிப்படுத்தியது. மேலும் அந்த முடிவுகளை அதிகாரப்பூர்வமாக சான்றளித்தது, இது ஜனவரி 6ஆம் திகதி காங்கிரஸால் அங்கீகரிக்கப்படும். இருப்பினும…

  17. சீன அதிகாரிகளுக்கும் அலிபாபா நிறுவனத்திற்கும் மோதல் ; கோடீஸ்வரர் ஜாக் மா மாயம் புதுடெல்லி சீன கோடீஸ்வரரும், பெலிமோத் அலிபாபா குரூப் ஹோல்டிங்ஸ் லிமிடெட்டின் நிறுவனருமான ஜாக் மா . சீன அரசுடனான மோதலில் கடந்த 2 மாதங்களாக காணவில்லை என கூறப்படுகிறது. கோடீசுவரர் ஜாக் மாவின் நிறுவனங்களின் மீதான ஒடுக்குமுறையை சீனா தீவிரப்படுத்தியதால், அவரை காணவில்லை என்ற ஊகங்கள் பரவலாக எழுந்து உள்ளன. ஜாக் மா கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக பொது வெளியில் தோன்றவில்லை என்று கூறப்படுகிறது. …

    • 3 replies
    • 757 views
  18. ஜோர்ஜியாவின் உயர்மட்ட அதிகாரியுடனான உரையாடலில் ட்ரம்ப் போட்ட திட்டம் அம்பலம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஜோர்ஜியாவின் உயர்மட்ட தேர்தல் அதிகாரியிடம் மாநில ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை தனக்கு சாதகமாக மறுபரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில் அவர் இணங்கவில்லை என்றால் "ஒரு பெரிய ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும்" என்று எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது. ஜோர்ஜியாவின் வெளியுறவு அமைச்சர் பிராட் ராஃபென்ஸ்பெர்கருடன் ட்ரம்ப் ஒரு மணிநேரம் தொலைபேசியில் மேற்கொண்ட உரையாடல் ஒன்று கசிந்த நிலையில் அதனை ஆதாரம் காட்டி வொஷிங்டன் போஸ்ட் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. வெளியான தேர்தல் முடிவுகளினால் ஜோர்ஜியா மக்கள் கோபத்தில் உள்ளதாகவும், தேர்தல் ம…

  19. மது அருந்த வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரிப்பதேன்? அனந்த் பிரகாஷ் பிபிசி பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லி உட்பட வட இந்தியாவின் பல பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு குளிர் அலை நிலவும் எனவும் வெப்ப நிலை மிகவும் குறையக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் பகுதிகளில் டெல்லி என்.சி.ஆர், ஹரியாணா, பஞ்சாப் மற்றும் சண்டிகர் ஆகியவையும் அடங்கும். இந்தப் பகுதிகளில், கடந்த சில நாட்களாக பூஜ்ஜியம் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. காலை வேளைகளில் திறந்தவெளி இடங்களுக்குச் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்…

  20. ‍நைஜரின் இரு கிராமங்களில் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 70 க்கும் மேற்பட்டோர் பலி Published by J Anojan on 2021-01-03 12:26:27 மாலியுடன் எல்லை மண்டலத்திற்கு அருகிலுள்ள நைஜரின் இரு கிராமங்களில் ஒரே நேரத்தில் சனிக்கிழமையன்று தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 70 க்கும் மேற்பட்ட பொது மக்கள் உயிரிழந்துள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி டொம்பாங்கோ கிராமத்தில் சுமார் 49 கிராம மக்கள் கொல்லப்பட்டதுடன் பேர் காயமடைந்தனர் என்று பாதுகாப்பு வட்டாரங்களில் ஒருவர் தெரிவித்தார். மேலும் ஸாரூம்தரேய் கிராமத்தில் சுமார் 30 கிராமவாசிகள் கொல்லப்பட்டதாக நைஜரின் உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் உறுப்படுத்தியுள்ளார். சனி…

  21. பனியில் உறைந்த புராதன காண்டாமிருகம்: 20,000 ஆண்டுகள் முன்பு இறந்த விலங்கு உறுப்புகள் சிதையாமல் கண்டெடுப்பு 1 ஜனவரி 2021, 05:29 GMT பட மூலாதாரம்,REUTERS 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறந்ததாக கருதப்படும் காண்டாமிருகம் ஒன்றின் உடல் பெருமளவில் சிதையாமல் மீட்கப்பட்டுள்ளது. காரணம் அதன் உடல் பெர்மாஃப்ராஸ்ட் எனப்படும் நிரந்தர உறைபனிப் பரப்பில் புதைந்து கிடந்ததுதான். ரஷ்யாவின் கிழக்கு சைபீரியாவில் அந்த நிரந்தரப் பனிப் பரப்பு உருகியதால் வெளியில் தெரிந்த இந்த உடலை உள்ளூர் மக்கள் மீட்டனர். கெட்டுப் போகாமல், அற்புதமாகப் பதப்படுத்தப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட இந்த உடல் பனி ஊழி (ஐஸ் ஏஜ்) காலத்தை …

  22. பப்புவா நியு கினியாவில் நிலச்சரிவு! 15 பேர் பலி பப்புவா நியூ கினியாவிலுள்ள கோய்லாலா மாவட்டம் சாகி பகுதியில் அண்மைக்காலமாக பெய்துவரும் தொடர் மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அங்குள்ள தங்க சுரங்கத்தையொட்டியுள்ள மலையிலிருந்து மண் சரிந்து விழுந்ததில் அருகிலுள்ள வீட்டில் தூங்கி கொண்டிருந்த 15 பேர் பரிதாபமாக பலியாகினர். நிலச்சரிவில் சிக்கி பலியானோரில் 2 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதோடு . எஞ்சியோரை தேடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. நிலச்சரிவு நேரிட்ட பகுதி பொதுமக்கள் அதிக நடமாட்டமில்லாத பகுதியாகும். ஹெலிகொப்டரில் 2 மணி நேர பயணம் மேற்கொண்டால்தான் அங்கு செல்ல …

  23. சுவிட்சர்லாந்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர் திடீர் மரணம்? உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகளை தற்போது பல்வேறு நாடுகள் ஆரம்பித்துள்ளன. அந்தவகையில் சுவிட்சர்லாந்தின் லூசரன் மண்டலத்திலுள்ள முதியோர் காப்பகத்தில் இருப்பவர்களுக்கு பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஒரு முதியவர், ஊசி போட்ட சிலமணி நேரத்தில் மரணம் அடைந்தார். தடுப்பூசி போட்ட பிறகு அடிவயிற்றிலும், சிறுநீர் குழாய் பகுதியிலும் வலி இருப்பதாக கூறியுள்ளார். இந் நிலையில் திடீரென்று மரணம் அடைந்தார். இது பெரும்…

  24. மத்திய கிழக்கில்... அமெரிக்க இலக்குகளுக்கு, எதிரான தாக்குதல்களை ஈரான் திட்டமிடுகிறதா? மத்திய கிழக்கில் அமெரிக்க இலக்குகளுக்கு எதிரான தாக்குதல்களை ஈரான் திட்டமிடலாம் என்பதற்கான அறிகுறிகளை அமெரிக்கா கண்டறிந்துள்ளதாக மூத்த அமெரிக்க இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவும் ஈரானும் பாரசீக வளைகுடாவில் பதற்றங்களைத் தூண்டுவதாக ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டி வருகின்றநிலையில், பெயர் வெளியிடாத நிலையில் பேசிய மூத்த அமெரிக்க இராணுவ அதிகாரி இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘ஈரானில் இருந்து மிகவும் கணிசமான அச்சுறுத்தல்களின் சமீபத்திய அறிகுறிகளை அமெரிக்க உளவுத்துறை கண்டறிந்துள்ளது. ஈராக்கில் அமெரிக்க நலன்களுக்கு எதிராக ரொக்கெ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.