Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. சவுதியின் வான் எல்லை வழியாக விமானம் பறக்க இஸ்ரேலுக்கு அனுமதி! இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரக உறவு தொடர்பான வரலாற்றில் முதல் முறையாக இரு நாடுகளுக்கு இடையேயும் விமான போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், சவுதி தனது வான் எல்லை வழியாக இஸ்ரேல் விமானம் பறக்க அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் இஸ்ரேல் விமானங்கள் இனி சவுதி வான்பரப்பை பயன்படுத்தி நேரடியாக ஐக்கிய அமீரகத்திற்கு செல்லலாம். அதேபோல் அமீரக விமானங்கள் சவுதி வான்பரப்பை பயன்படுத்தி இஸ்ரேல் செல்லலாம். இதன்மூலம் பயண நேரம் பல மணி நேரம் குறையும். இந்த நிகழ்வு சவுதி மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதலை தணித்து அமைதி ஒப்பந்தத்தை மேற்கொள்ள வாய்ப்புகளை ஏற்படுத்தும் என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்…

  2. ஜப்பானில் 43பேர்- ஆயிரக்கணக்கான கால்நடைகளுடன் சரக்குக் கப்பல் மாயம்: ஒருவர் மீட்பு சூறாவளியின் போது மாயமான சரக்குக் கப்பலில் பயணித்த ஒருவரைக், ஜப்பானிய கடலோர காவல்படை மீட்டுள்ளது. 43பேர் மற்றும் 6,000 கால்நடைகளுடன் பயணித்த ‘வளைகுடா கால்நடை 1’ என்ற கப்பல், சூறாவளியில் சிக்கிய பின்னர் கிழக்கு சீனக் கடலில் இருந்து அவசர உதவி கோரி அழைப்பை அனுப்பியது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர், குறித்த கடற் பகுதியில் பாதுகாப்பு அங்கியுடன் கடலில் தத்தளித்த ஒருவரை மீட்டுள்ளது. புயலில் இருந்து அதிக அலைகள் மற்றும் பலத்த காற்றுக்கு மத்தியில், மீட்புக் குழுவினர், கப்பல் மற்றும் விமானங்களின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளனர். குற…

  3. சவுதி அரேபியா எப்போதும் எங்கள் நண்பன்தான்: இம்ரான் கான் சவுதி அரேபியா எப்போதும் பாகிஸ்தானின் நண்பன்தான் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். காஷ்மீர் விவகாரத்தில், இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு (ஓஐசி) சர்வதேச அளவில் குரல் கொடுப்பதில்லையே என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு இம்ரான் கான் பதிலளித்துள்ளார். அதில், “ஆம். காஷ்மீர் விவகாரத்தில் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு முக்கியப் பங்காற்ற வேண்டும் என்று விரும்புகிறோம். இருப்பினும் ஒன்றை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம். சவுதி அரேபியா எப்போதும் எங்கள் நண்பன்தான்” என்று இம்ரான் கான் தெரிவித்தார். முன்னதாக, காஷ்மீர் விவகாரம் தொடர…

  4. தேடலில் இலங்கையை பின்தள்ளியது எத்தியோப்பியா 2020ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் கூகுளில் Sex எனும் வார்தையை தேடிய 10 நாடுகளின் வரிசையில் இலங்கையை பின்தள்ளிய எத்தியோப்பியா முதலாம் இடத்தில் உள்ளது. அடுத்த இடங்களில் இலங்கை, பங்களாதேஷ், நேபாளம், இந்தியா, வியட்நாம், பாகிஸ்தான், மியன்மார், சிம்பாப்வே, உருகுவே ஆகிய நாடுகள் உள்ளன. கடந்த 2012ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரையான 5 வருட காலப்பகுதியில், கூகுளில் ‘செக்ஸ்’ வார்த்தையை தேடிய நாடுகளின் வரிசையில் தொடர்ச்சியாக இலங்கை முதலிடத்தில் இருந்தது. 2012ஆம் ஆண்டி…

  5. கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு – தனித்து இயங்கப் போவதாக அமெரிக்கா அறிவிப்பு கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பில் உலக சுகாதார நிறுவனம் மற்றும் ஏனைய நாடுகளுடன் இணைந்து செயற்படாமல் தனித்து இயங்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் உலக நாடுகளை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வைரஸ் காரணமாக உலகளவில் இதுவரையில் 2 கோடியே 61 இலட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு, 8 இலட்சத்து 67 ஆயிரத்து 347 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், உலக நாடுகள் பல தனியாகவும் ஒன்றாகவும் இணைந்து கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தடுப்பூசி மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. எனினும் இதுவரையில் கொரோ…

  6. ரஷ்ய எதிர்க்கட்சி அரசியல்வாதி அலெக்ஸே நவால்னிக்கு, நோவிசோக் எனப்படும் நச்சு ரசாயனம் கொடுக்கப்பட்டதாக ஜெர்மனி அரசு தெரிவித்துள்ளது. ரஷ்யாவில் இருந்து ஜெர்மனிக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டது, நச்சுயியல் பரிசோதனை முடிவில் நிரூபிக்கப்பட்டுள்ளதாக ஜெர்மனி அரசு கூறியுள்ளது. கடந்த மாதம் ரஷ்யாவின் சைபீரியா பிராந்தியத்தில் விமான பயணத்தின்போது மயங்கிய நிலைக்கு சென்ற நவால்னி, கோமா நிலைக்கு சென்றார். இதையடுத்து, அங்கிருந்து ஜெர்மனிக்கு அவசரகால விமானம் மூலம் அழைத்து வரப்பட்ட அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக ஜெர்மனி அரசு தெரிவித்திருப்பது ரஷ்ய அரச…

  7. 2009 இலி முடித்துவைக்கப்பட்ட இந்தியாவின் தலைமையிலான இனவழிப்புப் போரில் இந்தியப் போர்க்குழுவில் ( இதை நான் எழுதுவதால், ஐயோ, இதுமுறையோ, உங்களில் குற்றம் தேடாமல், மற்றையவர்களிடம் தேடுகிறீர்களே என்று ஒருவர் வருவார். அவர் மேனனின் தெரிவுகள் எனும் புத்தகத்தைப் படித்தால் இந்தக் குழுபற்றிய உண்மைகள் துலங்கும்) முக்கிய பங்காற்றிய அந்நாள் பாதுகாப்புத்துறை மற்றும் வெள்விவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி தனது 84 ஆவது வயதில் மரணித்தார். மூளையில் ஏற்பட்ட நோய் ஒன்றிற்கு (2009 இற்குப்பிறகாக இருக்கலாம்) சத்திர சிகிச்சை ஒன்றிற்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர் கொரோனா தொற்றிற்கு உள்ளாகி கோமா நிலைக்குச் சென்று மரணித்திருக்கிறார் இந்த மனிதர். இந்திரா காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோருடன் மிக …

  8. இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையிலான நேரடி விமான சேவை நேற்று ஆரம்பமாகியுள்ளது. இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகின்றது. இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இடையே தூதரக உறவை ஏற்படுத்தும் விதமாக கடந்த கடந்த 13 ஆம் திகதி இரு நாடுகளுக்கும் இடையில் வரலாற்று சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் இஸ்ரேலுடன் தூதரக உறவை ஏற்படுத்தியுள்ள முதல் வளைகுடா நாடாகவும், 3 ஆவது அரபு நாடாகவும் ஐக்கிய அரபு அமீரகம் தன்னை உறுதிப்படுத்தியுள்ளது. இதனிடையே தொலைத்தொடர்பு, வர்த்தகம், வேலைவாய்ப்பு என அனைத்து துறைகளிலும் இஸ்ரேலை புறக்கணிக்கும் வகையில் இயற்றப்பட்டிருந்த சட்டத்தை ஐக்கிய அரப…

  9. சிறீலங்காவில் இயங்கும் சீனா நிறுவனங்கள் மீதும் அமெரிக்கா தடை சீனாவில் உள்ள 24 நிறுவனங்கள் மீது அமெரிக்கா தனது தடையை அறிவித்துள்ளது. இந்த நிறுவனங்களில் கொழும்பு துறைமுக நகர் அபிவிருத்தியில் ஈடுபட்டுள்ள சீனாவின் நிறுவனங்களும் அடங்கும். தடைசெய்யப்பட்ட நிறுவனங்கள் நிர்மாணிக்கும் துறைமுகங்கள் மற்றும் வானூர்தி நிலையங்கள் ஊடாக பொருட்களை அமெரிக்க நிறுவனங்கள் ஏற்றுமதி செய்வதற்கு அந்த அரசின் அனுமதியை பெறவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகம், மாத்தளை விமான நிலையம் போன்றவற்றை நிர்மானித்த நிறுவனங்கள் மீதும் தடை கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் இது இரு நாடுகளின் இறைமை தொடர்பான விடயம் அதில் அமெரிக்கா தலையிட முடியாது என சீனா தெரிவித்துள்ளது. …

  10. 17 ஆண்டுகால மோதல் முடிவுக்கு வந்தது: சூடான் அரசு-கிளர்ச்சிப் படைகள் சமாதான ஒப்பந்தம் சூடானின் அரசாங்கமும் பிரதான கிளர்ச்சிக் கூட்டணியும் 17 ஆண்டுகால மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் இன்று (திங்கட்கிழமை) சமாதான உடன்படிக்கைக்கு உடன்பட்டுள்ளன. மேற்கு பிராந்தியமான டார்பூரிடமிருந்தும், தென் மாநிலங்களான தெற்கு கோர்டோபன் மற்றும் ப்ளூ நைலிலிருந்தும் கிளர்ச்சிக் குழுக்களின் கூட்டணியான சூடான் புரட்சிகர முன்னணி (எஸ்.ஆர்.எஃப்) அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இது அண்டை நாடான தெற்கு சூடானின் தலைநகரான ஜூபாவில் நடைபெற்றது. 2019 இன் பிற்பகுதியில் இருந்து நீண்டகால பேச்சுவார்த்தைக்கு தெற்கு சூடான் மத்தியஸ்தம் வகித்துள்ளது. இறுதி ஒப்பந்தம் பாதுகாப்பு, நில உடைமை…

  11. 4 ஆகஸ்ட் 2020, 16:53 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், AFP லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் இன்று சக்திவாய்ந்த வெடி சம்பவங்கள் நிகழந்தன. 2005ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ரஃபீக் ஹரீரி கொல்லப்பட்ட வழக்கில் தீர்ப்புகள் வர இருக்கும் நிலையில் இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளது. முதல் வெடி சம்பவம் துறைமுக பகுதியில் நிகழ்ந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன. இரண்டாம் வெடிப்பு எங்கு நிகழ்ந்தது என தெரியவில்லை. இந்த வெடிப்பு குறித்த சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் பற்றிய அதிகாரபூர்வ அறிக்கைகள் எதுவும் வெளியாகவில்லை. கொலை வழக்கு 2005ஆம் ஆண்டு முன்னாள் ப…

  12. விமானங்களில் முகக்கவசங்களை அணிய மறுக்கும் பயணிகளுக்கு ஓராண்டுக்கு பயணம் செய்ய தடை: வெஸ்ட் ஜெட் விமானங்களில் முகக்கவசங்களை அணிய மறுக்கும் பயணிகளுக்கு எதிராக, அடுத்த வாரம் முதல் ‘வெஸ்ட் ஜெட்’ கடுமையான புதிய நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது. செப்டம்பர் 1ஆம் முதல் இந்த நடவடிக்கைகள் நடைமுறைக்கு வருகின்றன. விமானத்தில் பயணிப்பவர்கள், ஆரம்பம் முதலே முகக்கவசங்களை அணிந்திருக்க வேண்டும் எனவும், பயணி முகக்கவசம் அணிய மறுத்துவிட்டால், விமானம் திரும்பி அதன் தொடக்க நிலைக்குத் திரும்பும் என வெஸ்ட்ஜெட் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான எட் சிம்ஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெஸ்ட்ஜெட் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான எட் சிம்ஸ் கூறுகையில், “பயணிகள் முதலில் விமான ஊழியர் குழு…

  13. மொரிஷியஸ் தீவுக்கு அருகில் 40 டொல்பின்கள் உயிரிழப்பு சிதைவடைந்த ஜப்பானிய கப்பலிருந்து வெளியேறிய எண்ணெய் கசிவானது கடல் நீரை மாசுபடுத்தியுள்ளது. இதன் காரணமாக கிழக்கு ஆபிரிக்காவின் மொரிஷியஸ் தீவுக்கு அருகில் குறைந்தது 40 டொல்பின்கள் உயிரிழந்து கிடந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது. ஜூலை முதல் கடலில் எண்ணெய் கசிந்து வரும் ஜப்பானிய கப்பல் குறித்து விசாரிக்க சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். அதேநேரம் குறித்த கப்பலும் திங்கட்கிழமை அகற்றப்பட்டது. சுமார் 4000 டொன் எரிபொருளை ஏற்றுக் கொண்ட பயணித்த எம்.வி.வகாஷியோ என்ற ஜப்பானுக்கு சொந்தமான இந்த கப்பலானது ஜூலை 25 அன்று மொரீஷியஸ் பகுதியில் ஒரு ஒரு பவளப்பாறையுடன் மோதி விபத்துக்குள்ளானது. …

  14. சுவீடனில் குரானை எரித்த தீவிர வலதுசாரி அமைப்பு: கலவரமாக மாறிய போராட்டம் EPA சுவீடனில் தீவிர வலதுசாரி அமைப்பு ஒன்று இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை எரித்ததை எதிர்த்து நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. சுவீடனின் தெற்கு பகுதியில் இருக்கும் மால்மோவில் பல மணி நேரங்களாக நடந்த அந்த கலவரத்தில், வாகனங்களுக்கு தீயிடப்பட்டது. கடைகள் சேதப்படுத்தப்பட்டன. பலர் அங்கு கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்கிறது போலீஸ். போலீஸார் மீது போராட்டக்காரர்கள் கல் எரிவதாகவும், கார் டயர்களுக்கு தீ வைப்பதாகவும் போலீஸ் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார் என்கிறது ராய்ட்டர்ஸ் செய்தி முகமை. மேலும் குரான் எரிக்கப்பட்ட அதே…

  15. கிரேக்கம்- சைப்ரஸுடனான பதற்றங்களைக் குறைக்காவிட்டால் துருக்கிக்கு பொருளாதார தடை: ஐரோப்பிய ஒன்றியம் கிழக்கு மத்தியதரைக் கடலில் கிரேக்கம் மற்றும் சைப்ரஸுடனான அதிகரித்துவரும் பதற்றங்களைக் குறைப்பதில் முன்னேற்றம் காணப்படாவிட்டால், துருக்கிக்கு புதிய பொருளாதாரத் தடைகள் மற்றும் கடுமையான பொருளாதார நடவடிக்கைகளை விதிக்கும் என ஐரோப்பிய ஒன்றியம் அச்சுறுத்தியுள்ளது. சைப்ரஸ் தீவுக்கு அருகே கடல் எல்லைகள் மற்றும் எரிவாயு துளையிடும் உரிமைகள் தொடர்பான மோதல் அதிகரித்து வருகின்ற நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட இராஜதந்திரி ஜோசப் பொரெல் இந்த எச்சரிக்கையை விடுத்தார். ஜோசப் பொரெல், உரையாடலுக்கு ஒரு தீவிரமான வாய்ப்பை கொடுக்க விரும்புவதாகக் கூறினார். ஆனால் நெருக்கடியில் உறு…

  16. லண்டனில் வாழ மிகவும் ஆபத்தான பகுதிகள் போலீசார் வெளியிட்ட பட்டியல் லண்டன் போலீசாரின் புள்ளி விவரங்களின் படி குரோய்டோன் வாழ மிகவும் ஆபத்தான இடமாக பார்க்கப்படுகிறது. இங்கிலாந்தில் கடந்த சில ஆண்டுகளாகவே கத்தி குத்து சம்பவம், துப்பாக்கிச் சூடு தாக்குதல் என்பது சர்வசாதரணமாகி வருகிறது.வன்முறை மற்றும் குடும்ப சண்டை போன்றவைகளாலும் இறப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது தலைநகரான லண்டனில் இருக்கும் குரோய்டோனில் வன்முறை குற்றங்கள் பொதுவாக 5,978 பதிவாகியுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு இதுவரை குரோய்டோனில் கிட்டத்தட்ட 19,000 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.இந்த ஆண்டு ஜனவர…

  17. கிறிஸ்ட்சர்ச் மசூதி தாக்குதல்தாரி மூன்றாவது மசூதியிலும் தாக்குதல் நடத்த இருந்தார்: விசாரணையில் தகவல் நியூஸிலாந்தில் இரண்டு மசூதிகளில் 51 பேரைக் கொன்ற தாக்குதல்தாரிக்கு, மூன்றாவது மசூதியைக் குறிவைக்கும் திட்டம் இருந்ததாக அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது. தாக்குதல்தாரியான 29 வயதான ப்ரெண்டன் டாரன்ட், மசூதிகளை எரிக்கவும், முடிந்தவரை பல பேரைக் கொல்லவும் விரும்பியதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவுஸ்ரேலிய குற்றவாளியான ப்ரெண்டன் டாரன்ட் மீது 51 கொலை, 40 கொலை முயற்சிகள் மற்றும் ஒரு பயங்கரவாத குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் 15ஆம் திகதி கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள மசூதியில் நுழைந்த ப்ரெண்டன் ட…

  18. பயங்கரவாதத்துக்கு எதிரான போர்”- மாலியில் பிரான்சு முன்னெடுத்துள்ள நவகாலனீய நடவடிக்கை -தமிழில் ஜெயந்திரன் பிரான்சு நாட்டின் ஆதரவுப் பின்புலத்துடன் ஆபிரிக்காவின் மாலியில் மேற்கொள்ளப்படும் இராணுவமயமாக்கல் பிரான்சு நாட்டின் பொருண்மிய ஈடுபாடுகளைப் பாதுகாப்பதையே இலக்காகக் கொண்டது மட்டுமன்றி, மாலியின் உள்நாட்டுப் பிரச்சினைகளை மேலும் சிக்கலாக்கியிருக்கிறது. ஜோர்ஜ் ஓர்வெல் (George Orwell) 1984 இல் வெளியிட்ட நூலில் “கடந்த காலத்தைக் கட்டுப்படுத்துபவர் எதிர்காலத்தைக் கட்டுப்படுத்துகிறார். நிகழ்காலத்தைக் கட்டுப்படுத்துபவர் கடந்த காலத்தைக் கட்டுப்படுத்துகிறார்;” என்று குறிப்பிடுகிறார். ஆபிரிக்கக் கண்டத்தில் இஸ்லாம் சமயத்தின் வரலாற்றை எந்த ஒரு பக்கமும் சாயாது, …

  19. அமெரிக்காவுக்கு எச்சரிக்கை: தென்சீனக் கடலில் ஏவுகணை செலுத்தி சீண்டும் சீனா தென் சீனக் கடல் பகுதியில் 2 ஏவுகணைகளைச் செலுத்தி போர்ப் பயிற்சி மேற்கொண்டது, சீன ராணுவம், இதனை அமெரிக்காவுக்கான எச்சரிக்கை என்று சீன ஊடகங்கள் வருணித்துள்ளன. சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல்பகுதியில் சீனாவின் ஆதிக்கம் குறித்து பலதரப்புகளிலிருந்தும் கேள்விகள் பிறந்துள்ள நிலையில் இந்த ஏவுகணைச் சோதனையும் அதை அமெரிக்காவுக்கு எதிரான எச்சரிக்கை என்று சீனா வருணித்துள்ளதும் புதிய சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. ஹைனன் பகுதிக்கும் பாராசெல் தீவுகளுக்கும் இடையே தென் சீனக் கடலில் சீனா ஏவுகணைகளைச் செலுத்தியது. சீனாவின் ராணுவப் பயிற்சி இடத்துக்கு மேலே அமெரிக்க உ…

  20. கருப்புப் பட்டியலிருந்து சூடானை நீக்க 330 மில்லியன் டொலர்கள் கோரும் ட்ரம்ப் அரசாங்கம்! பயங்கரவாதத்திற்கு நிதியளிக்கும் நாடுகளின் கருப்புப் பட்டியலிருந்து சூடானை நீக்க 330 மில்லியன் டொலர்களை, டொனால்ட் ட்ரம்ப் அரசாங்கம் கோரியுள்ளது. கார்ட்டூமுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோ, இந்த கோரிக்கையை முன்வைத்தார். 2005ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரு அமெரிக்க வெளியுறவு செயலாளர் சூடானுக்குச் சென்ற முதல் பயணம் இதுவாகும். 1998ஆம் ஆண்டில் கென்யா மற்றும் தான்சானியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் நடந்த அல்-கைதா பயங்கரவாத தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த பணம் இழப்பீடாக வழங்கப்படுமென மைக் பொம்பியோ தெரிவித்தார். 2000ஆம் ஆண்டி…

  21. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: அதிகாரிகளுக்கு வடகொரிய தலைவர் எச்சரிக்கை! கொரோனா வைரஸ் தொற்று மற்றும் ‘பாவி’ சூறாவளி ஆகியவற்றால் ஏற்படக்கூடும் அபாயங்களை எதிர்கொள்ள தயார்படுத்திக் கொள்ளுமாறு, வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் அந்நாட்டு அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். கிம்மின் உடல்நலம் குறித்த வதந்திகள் மற்றும் அவர் தனது சகோதரியான கிம் யோ ஜோங்கிற்கு அதிகாரத்தை பகிர்ந்தளித்தார் போன்ற செய்திகள் வெளியான நிலையில், கட்சிக்கூட்டத்தில் கிம் ஜோங் உன் நேற்று (செவ்வாய்க்கிழமை) பங்கேற்றுள்ளார். பொலீட்புரோ கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றிய கிம், ‘வைரஸ் தொற்று பரவாமல் இருக்க அதிகாரிகள் எடுத்த முயற்சியில் சில குறைபாடுகள்’ இருப்பதாக தெரிவித்தார் இதுவரை வடகொரியாவ…

  22. பத்தாயிரத்துக்கும் அதிகமான ஐ.எஸ். தீவிரவாதிகள் செயற்பாட்டில் உள்ளனர்: ஐ.நா. தகவல்! ஈராக் மற்றும் சிரியாவில் பத்தாயிரத்துக்கும் அதிகமான ஐ.எஸ். தீவிரவாதிகள் செயற்பாட்டில் உள்ளதாக, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஐ.எஸ். தீவிரவாதிகள் தோற்கடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் சிரியா மற்றும் ஈராக்கில் சிறு குழுக்களாக இயங்கத் தொடங்கிள்ளனர். சுமார் பத்தாயிரத்துக்கும்; அதிகமான தீவிரவாதிகள் இவ்விரு நாடுகளில் செயற்பட்டு வருகின்றனர். கொவிட்-19 தொற்று பரவலால் உலகமே முடங்கி இருக்கும் நேரத்தில் ஆட்கள் சேர்ப்பது, நிதி திரட்டல் போன்ற நடவடிக்கைகளில் எப்படி அவர்கள் ஈடுபடுகிற…

    • 0 replies
    • 336 views
  23. சூறையாடப்படுமா அமெரிக்கத் தேர்தல்? பின்வரும் வாக்கியத்தை நான் எழுதவோ படிக்கவோ செய்வேன் என்று ஒருபோதும் நினைத்துப் பார்த்திருக்கவே மாட்டேன்: இந்த நவம்பர் மாதத்தில் அமெரிக்காவால் முதன்முறையாக சுதந்திரமாகவும் நேர்மையாகவும் தேர்தல் நடத்த முடியாமல் போகலாம். அமெரிக்க அஞ்சல் துறையைத் தற்போதைய ட்ரம்பின் நிர்வாகம் முடக்கக்கூடிய வாய்ப்பிருப்பதால், அமெரிக்காவில் பாதிப் பேர் தங்கள் வாக்குகள் முறையாக எண்ணப்படவில்லை என்று நினைக்கக்கூடும். மீதமுள்ள பாதிப் பேர் அஞ்சல் வழியாக ஜோ பிடனுக்குக் கிடைக்கும் வாக்குகள் போலியானவை என்று அமெரிக்க அதிபரால் நம்ப வைக்கப்படக்கூடும். அது வெறுமனே இதைப் பிரச்சினைக்குரிய தேர்தலாக மட்டும் ஆக்காது. நாமறிந்த அமெரிக்க ஜனநாயகத்தின் அஸ்தமனமாகவும் அம…

  24. உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு: சிவப்பு மண்டலமாக அறிவித்த ஐரோப்பிய நாடு பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஐந்தாயிரத்திற்கும் மேல் தாண்டியுள்ள நிலையில், தலைநகர் பாரிசை ஐரோப்பிய நாடு சிவப்பு மண்டலமாக அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரான்சில் உலக சுகாதார அமைப்பின் தகவல் படி தற்போது வரை 233,293 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 30,411 பேர் உயிரிழந்துள்ளனர்.இதனால் நாட்டில் கொரோனா பரவலை தடுப்பதற்காக மேக்ரான் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முகக்கவசம் கட்டாயம், சமூக இடைவெளி அவசியம் போன்ற பல புதிய விதிகளையும் கொண்டு வந்துள்ளது. இதன் காரணமாக நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்தது போன்று தெர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.