Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. நெல்சன் மண்டேலாவின் புதல்வி ஸின்ட்ஸி மண்டேலா காலமானார் தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியும் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவருமான நெல்சன் மண்டேலாவின் புதல்வி ஸின்ட்ஸி மண்டேலா இன்று திங்கட்கிழமை காலமானார். நெல்சன் மண்டேலா மற்றும் வின்னி மடிகிஸெலா ஆகியோரின் புதல்வியாகிய இவர் டென்மார்க்கிற்கான தென்னாபிரிக்காவின் தூதராக பணியாற்றி வந்தார். 59 வயதான ஸின்ட்ஸி , ஜோகன்னஸ்பேர்க்கில் உள்ள ஒரு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்துள்ளார். இதனை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் தென்னாபிரிக்க அரச ஊடகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் அவரது மரணத்திற்கான காரணம் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. h…

  2. அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக கடற்படையில் முதல் கறுப்பின பெண் விமானி அமெரிக்க கடற்படை விமான பயிற்சிப் பாடசாலையில் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த கறுப்பினத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அமெரிக்க கடற்படையில் போர் விமானத்தை இயக்கும் விமானியாக வரலாற்றில் முதல் முறையாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். மேட்லைன் ஸ்வெகிள் என்ற அந்தபெண் இந்தமாத இறுதியில் “தங்கத்தின் சிறகுகள்“ என்று அழைக்கப்படும் விமான அதிகாரி அடையாளத்தை பெறுவார் என அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது. வேர்ஜீனியா மாகாணம் பர்க் நகரைச் சேர்ந்த மேட்லைன் ஸ்வெகிள் கடந்த 2017 ஆம் ஆண்டு அமெரிக்க கடற்படை அகாடமியில் பட்டம் பெற்றார். அதனை தொடர்ந்து 3 ஆண்டு கால தீவிர பயிற்சிக்குப் பிறகு தற்போது அவர் போர் விமானத்தின் வி…

  3. முதல்முறையாக மாஸ்க் அணிந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் கொரோனா வைரஸ் ஒரு தொற்று நோய் என்பதால் அதில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள ஒவ்வொருவரும் முகக்கவசம் அணிய வேண்டும். அப்போதுதான் மற்றவர்கள் தும்மினால்,அல்லது இருமினால் அவர்களிடம் இருந்து நமக்கு நோய் தாக்காது என்று உலக சுகாதார மையம் தெரிவித்திருந்தது. ஆனால் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடக்கத்தில் இருந்து மாஸ்க் அணிய மறுத்து வந்தார். அவருடன் நெருங்கிய அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று வைரஸ் உறுதி செய்யப்பட்டிருந்த நிலையிலும் மறுத்துவிட்டார். அவரது மனைவி மாஸ்க் அணியும் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். ஆனால் தினந்தோறும் பத்திரிகையாளர்களை சந்திக்கும் போது டிரம்ப் மாஸ் அணிவதில்லை. இ…

  4. கொரோனாவில் இருந்து விரைவில் விடுதலை...! உலகின் முதல் தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி ரஷ்யா வெற்றி மாஸ்கோ நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பதால் சமூக இடைவெளி, ஊரடங்கு மட்டுமே தற்காலிக தீர்வாக உள்ளது. மறுபுறம் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா மற்றும் பெரு ஆகியவை முதல் 5 இடங்களை பிடித்துள்ளன. கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்த உதவும் ஒரு தடுப்பூசியை உருவாக்கும் போட்டியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், ரஷ்யாவின் செச்செனோவ் பல்கலைக்கழகம் மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி பற்றிய உலகின் முதல் மருத்துவ பரிசோதனைகளை வெற்றிகரமாக முடித்துவிட்…

  5. தென்னாபிரிக்காவில் தேவாலயமொன்றில் இடம்பெற்ற மோதல்: 5 பேர் உயிரிழப்பு! தென்னாபிரிக்காவின் ஜோகன்னஸ்பேர்க்கிற்கு அருகிலுள்ள பழங்கால தேவாலயத்தில் இடம்பெற்ற மோதலையடுத்து 5 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த தேவாலயத்தில் இன்று (சனிக்கிழமை) காலை அங்கிருந்தவர்களை ஆயுதம் தாங்கிய குழுவினர் பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த நிலையில் பொலிஸார் அழைக்கப்பட்டதைத் தொடர்ந்து இவ்வாறு தாக்குதல் நடத்தியவர்கள் கொல்லப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த தேவாலயத்தின் தலைமை தொடர்பாக தொடர்ந்துவந்த பிரச்சினையின் ஒரு கட்டமாக ஏற்பட்ட இந்தச் சம்பவத்தில் தாக்குதல் நடத்த முனைந்த ஆண்கள் குழுவொன்றின் 40 பேரை கைதுசெய்துள்ளதாகவும் மேலும் 6 பேர் காயமடை…

  6. கொரோனா பாதிப்பு குறித்து சீனாவிற்கு முன்பே தெரியும் - பெண் விஞ்ஞானி பகீர் தகவல் கொரோனா பாதிப்பு குறித்து சீன அரசுக்கு முன்னரே தெரியும் என சீனாவைச் சேர்ந்த ஒரு பெண் விஞ்ஞானி தெரிவித்துள்ளது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பதிவு: ஜூலை 12, 2020 10:03 AM வாஷிங்டன், சீனாவின் உகான் நகரில் முதன் முதலில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியாமல் அமெரிக்கா போன்ற வல்லரசு நாடே தடுமாறி வருகிறது. கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் பணியில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன. ஐரோப்பிய நாடுகளில் கணிசமாக கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும் அமெரிக்கா, பிரேசில்…

  7. சிங்கப்பூர் தேர்தலில் மீண்டும் வெற்றி: லீ செய்ன் லூங்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து சிங்கப்பூர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றுள்ள லீ செய்ன் லூங்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பதிவு: ஜூலை 11, 2020 16:30 PM புதுடெல்லி, சிங்கப்பூரில் பிரதமர் லீ செய்ன் லூங் தலைமையிலான பீப்பிள் ஆக் ஷன் கட்சியின் ஆட்சி நடக்கிறது. இவரது ஆட்சிக் காலம் முடிய இன்னும் 10 மாதங்கள் இருக்கும் நிலையில் பிரதமர் லீ முன்னதாகவே தேர்தலை அறிவித்தார். தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் கொரோனா அச்சுறுத்தலை மீறி பாராளுமன்ற தேர்தல் நேற்று (ஜூலை 10) நடைபெற்றது. முககவசம், கையுறைகள் அணிந்தபடி மக்கள் பாதுகாப்பாக வாக்களித்தனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வாக்குச் ச…

  8. அமெரிக்கா சினைப்பர் யுத்தத்தில் தோல்வியடைகின்றதா? July 11, 2020 அமெரிக்கா சினைப்பர் யுத்தத்தில் தோல்வியடைகின்றதா என ஏசியன் டைம்ஸ் கேள்வி எழுப்பியுள்ளது. இரண்டாம் உலக யுத்தத்தின் போது சோவியத்தின் சினைப்பர் வீரர்கள் ஸ்டாலின் கிராட் யுத்தத்தில் ஜேர்மனியின் இராணுவத்தினருக்கு பேரிழப்பு ஏற்படுத்தினார்கள்,என தெரிவித்துள்ள ஏசியன் டைம்ஸ் வாசிலி கிரிகோரிவிச் சாய்த்சேவ்32 ஜேர்மனிய படையினரை சுட்டுக்கொன்றதையும் நினைவுபடுத்தியுள்ளது. பல தசாப்தங்களுக்கு பின்னர் ரஸ்ய படையினர் 2020 இல் மீண்டும் அந்த கௌரவத்தை பெற்றுள்ளனர்,இது பென்டகனிற்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது எனஏசியன் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பலவருடங்களாக மத்திய கிழக்கிலும் மத்திய ஆபிரிக்காவ…

  9. சீனாவில் கடும் மழை: வெள்ளத்தில் சிக்கி 140 பேர் பலி July 11, 2020 சீனாவின் தென் பகுதியில், கடந்த சில நாட்களாகக் கடும் மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக யாங்சி நதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கில் சிக்கி 140 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு அரசு தெரிவித்துள்ளது. வெள்ள பாதிப்பு அதிகம் உள்ள அன்ஹுய்( Anhui ) மற்றும் ஜியங்ஷி( Jiangxi) மாகாணத்தில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், வெள்ளம் மற்றும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. http://thinakkural.lk/article/53612

  10. டொனால்ட் டிரம்ப் தனது நீண்டகால நண்பரும் ஆலோசகருமான ரோஜர் ஸ்டோனின் தண்டனையை குறைத்தார் டொனால்ட் டிரம்ப் தனது நீண்டகால நண்பரும் ஆலோசகருமான ரோஜர் ஸ்டோனின் தண்டனையை குறைத்து உள்ளார். பதிவு: ஜூலை 11, 2020 09:06 AM வாஷிங்டன் 2016 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் தலையீடு குறித்து நடந்த விசாரணையில் பொய்யான தகவல்களை கூறிய குற்றச்சாட்டில் ஜனாதிபதி டிரம்பின் நீண்ட கால ஆலோசகர் ரோஜர் ஸ்டோன் என்பவருக்கு 3 ஆண்டுகள் 4 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து அமெரிக்க கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இந்த் நிலையில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது நீண்டகால நண்பரும் ஆலோசகருமான ரோஜர் ஸ்டோனின் தண்டனையை வெள்ளிக்கிழமை மாற்றினார். இது குறி…

  11. அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜோர்ஜ் புளோய்ட் என்பவர் பொலிஸாரால் கொல்லப்பட்ட இறுதி நிமிடத்தில் அவர் பேசிய வார்த்தைகள் தற்போது வெளியாகியுள்ளன. கடந்த மே மாதம் 25ஆம் திகதி அமெரிக்காவின் மின்னெபொலிஸ் நகரைச் சேர்ந்த ஜோர்ஜ் புளோய்ட் என்ற கறுப்பினத்தவர் டெரிக்சாவின் என்ற வெள்ளை இனத்தைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரியால் கழுத்து நெரித்து கொல்லப்பட்டார். தனது முட்டியால் புளோய்டின் கழுத்தை பொலிஸ் அதிகாரி நெரித்துக்கு கொண்டிருக்க, தன்னால் மூச்சுவிட முடியவில்லை என்று புளோய்ட் கூறிய இறுதி வார்த்தைகள் உலகத்தின் மனச்சாட்சியை இனவெறிக்கு எதிராக தட்டியெழுப்பியது. அதைத்தொடர்ந்து, Black lives matter என்ற கோசத்தை முன்வைத்து இனவெறிக்கு எதிராக உலகம் முழுவதும் போராட்டங்கள் ந…

  12. அவுஸ்ரேலியாவில் ஐந்து மில்லியன் மக்கள் ஆறு வாரங்களுக்கு வீடுகளை விட்டு வெளியேற தடை! கொரோனா வைரஸுக்கு (கொவிட்-19) எதிரான அவுஸ்ரேலியாவின் போராட்டத்தின் அடுத்த கட்டம், தொடங்கியுள்ளது. ஆம்! மெல்பேர்ன், மார்னிங்டன் தீபகற்பம் மற்றும் மிட்செல் ஷைர் முழுவதும் ஐந்து மில்லியன் மக்கள் அத்தியாவசிய காரணங்களைத் தவிர்த்து, அடுத்த ஆறு வாரங்களுக்கு வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. எப்போது வேண்டுமானாலும் எங்கும் சோதனைச் சாவடிகள் அமைத்து, நகரத்தை சுற்றி பாதுகாப்பு வளையம் அமைக்கப்படுமென பொலிஸார் கூறுகின்றனர். விக்டோரியா மாநிலத்தில் 191 புதிய நோய்த்தொற்றுகள் இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை முடக்கநிலை அறிவிக்கப்பட்டது. இது தொற்றுநோய் தொடங்கியதிலிர…

    • 3 replies
    • 672 views
  13. ஹாங்காங்கில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மீண்டும் மூடப்படுவதாக அறிவிப்பு ஹாங்காங், சீனாவை தொடர்ந்து அதன் அண்டை நாடான ஹாங்காங்கிலும் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா வைரஸ் தொற்று பரவத்தொடங்கியது. இதனையடுத்து சீனாவுடனான எல்லையை மூடிய ஹாங்காங் அரசு, ஊரடங்கு விதிமுறைகளையும் கடுமையாக அமல்படுத்தியது. மேலும் வைரஸ் பரவலால் அரசுக்கு எதிராக நடைபெற்று வந்த போராட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டன. இந்த துரித நடவடிக்கை காரணமாக ஹாங்காங்கில் வைரஸ் பாதிப்பு விரைவில் கட்டுப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக கடந்த மே மாதம் முதல் ஊரடங்கு விதிமுறைகள் படிப்படியாக தளர்த்தப்பட்டன. அத்துடன் ஹாங்காங்கில் பள்ளிகளும் திறக்கப்பட்டன. இந்நிலையில் கடந்த சில தினங்களாக அங்கு வைரஸ் தொற்று மீண…

  14. அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தேவையில்லை: கிம்மின் சகோதரி திட்டவட்டம் அமெரிக்காவுடன் தற்போது வடகொரியா பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய தேவை இல்லை என்று கிம்மின் சகோதாரியான கிம் யோ ஜாங் தெரிவித்துள்ளார். பதிவு: ஜூலை 10, 2020 17:28 PM சியோல் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ அணுசக்தி சோதனை பேச்சு வார்த்தை தொடர்பாக வடகொரியாவுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பிருப்பதாக தெரிவித்தார். இந்த நிலையில் இதற்கு பதிலளித்திருக்கிறார் வடகொரிய அதிபர் கிம்மின் சகோதரியான கிம் யோ ஜாங். இதுகுறித்து கிம் யோ ஜாங் கூறியதாவது:- அமெரிக்காவுடன் மீண்டும்பேச்சு வார்த்தை நடத்துவதற்கு தேவை இல்லை. ஒருவேளை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டால் அது ஒரு தர…

  15. இந்தியாவில் 2 மாதம் பாலியல் கொடுமைக்கு ஆளான ஆஸ்திரேலிய பெண் எழுதிய அனுபவ கதை ஆஸ்திரேலியரான இளம்பெண் இமயமலை செல்லும் வழியில் கடத்தப்பட்டு, இரண்டு மாத காலம் சித்திரவதைக்கு உள்ளான சம்பவத்தை அவரே தற்போது புத்தகமாக வெளியிட்டுள்ளார். பதிவு: ஜூலை 10, 2020 17:08 PM சிட்னி ஆஸ்திரேலியரான கார்மென் கிரீன்ரீ என்பவர் தமது 22 ஆம் வயதில் தலாய் லாமாவின் கீழ் படிக்க இமயமலைக்குச் செல்ல திட்டமிட்டார்.தற்போது 37 வயதாகும் கார்மென் கிரீன்ரீ கடந்த 2004 ஆம் ஆண்டு தமக்கு ஏற்பட்ட அந்த கொடூர சம்பவத்தை தற்போது ஒரு புத்தகமாக தொகுத்துள்ளார். கார்மென் தமது இளைமை காலத்தில் கடல் அலை மீது சாகசம் செய்யும் ஒரு வீராங்கனையாக பெயர் பெற வேண்டும் என கடும் பயிற்சி மேற்கொண்டு வந்…

  16. சீனாவின் ராஜதந்திர முயற்சி :: ட்ரூடோ அம்பலப்படுத்தியுள்ளார்.! பணயக் கைதிகளைப் பிடித்து வைத்துக் கொண்டு வேண்டியதை அடைய நினைக்கும் சீனாவின் ராஜதந்திர முயற்சியைக் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அம்பலப்படுத்தியுள்ளார். ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகளை மீறியதாகக் கூறி சீனாவின் ஹுவேய் நிறுவனத்தின் முதன்மை நிதி அதிகாரி மெங் வான்சூ மீது அமெரிக்கா குற்றஞ்சாட்டியது. கனடா அரசு மெங் வான்சூவைக் கைது செய்து சிறையில் அடைத்தது. அவரை விசாரணைக்கு நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளை அமெரிக்க அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில் கனடா நாட்டவர்களான மைக்கேல் கோவ்ரி, மைக்கேல் ஸ்பேவர் ஆகிய இருவர் உளவு பார்த்ததாகக் கூறிச் சீன அரசு கைது செய்தது. இவர்கள் இருவரையும் விடுவிக்க வேண்டு…

  17. சீனாவின் பெண் தூதர் கையில் நேபாள அரசியல் நெருக்கடி நேபாளத்தின் அரசியல் நெருக்கடியை தீரவிடாமல் கையாளும் சீனாவின் பெண் தூதர். பதிவு: ஜூலை 09, 2020 14:15 PM காட்மாண்டு நேபாளத்தில் பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான நேபாள கம்யூனிஸ்டு கட்சி ஆட்சி நடந்து வருகிறது. அவர் கட்சி தலைவராகவும் இருக்கிறார். ஆனால், கட்சியின் செயல் தலைவராக உள்ள முன்னாள் பிரதமர் பிரசாந்தா தலைமையில் இன்னொரு கோஷ்டி செயல்படுகிறது. மக்களின் எதிர்பார்ப்புகளை சர்மா ஒலி பூர்த்தி செய்யவில்லை என்று கூறி, அவரை பதவி விலகுமாறு பிரசாந்தா ஆதரவாளர்கள் வற்புறுத்தி வருகிறார்கள். குறிப்பாக, இந்தியாவுக்கு சொந்தமான லிபுலேக், காலாபனி, லிம்பியாதுரா ஆகிய பகுதிகளை சேர்த்து நேபாள அரசு புதிய வரைபடம…

  18. பொலிவியா அதிபருக்கு கொரோனா வைரஸ் தொற்று பொலிவியா நாட்டு அதிபர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். பதிவு: ஜூலை 10, 2020 07:19 AM தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பொலிவியாவிலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மே மாதம் நடக்க இருந்த அதிபர் தேர்தல், வரும் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வேர்ல்டோமீட்டர்ஸ் புள்ளி விவரங்களின் படி பொலிவியா நாட்டில் 42,984 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், பொலிவியா நாட்டு அதிபர் ஜினைன் அனேஸ்- க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அனேஸ், நலமுடன் இருப்பதாகவும்…

  19. பாகிஸ்தானில் இந்து கோவிலுக்கு வலுக்கும் எதிர்ப்பு; கட்டுமான பணி நிறுத்தம் பாகிஸ்தானின் தலைநகரில் சகிப்பு தன்மையை அடையாளப்படுத்தும் விதத்தில் அறிவிக்கப்பட்ட முதல் இந்து கோவிலின் கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டு உள்ளன. பதிவு: ஜூலை 09, 2020 16:21 PM இஸ்லாமாபாத், பாகிஸ்தான் நாட்டில் முன்னாள் கிரிக்கெட் வீரரான பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இதற்கு முந்தைய அரசில் கடந்த 2018ம் ஆண்டு பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஸ்ரீ கிருஷ்ணா கோவிலை கட்டுவதற்கு நிலம் ஒதுக்கப்பட்டது. ஆனால் முஸ்லிம் போராட்டக்காரர்கள் உடனடியாக, ஒதுக்கப்பட்ட நில பகுதியில் முகாமிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்து கட்டமை…

  20. வெளியேறுகிறது அமெரிக்கா: உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகும் முறைப்படியான பணியைத் தொடங்கியது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் : கோப்புப்படம் வாஷிங்டன், கரோனா வைரஸ் பரவலை போதுமான கவனத்துடன் தடுக்கவில்லை என்றும், சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் உலக சுகாதார அமைப்பின் மீது குற்றம்சாட்டி வந்த அமெரிக்கா, அந்த அமைப்பிலிருந்து வெளியேறும் முறைப்படியான பணியைத் தொடங்கியுள்ளது உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேறுகிறோம் என்பதற்கான அறிவிக்கை கடிதத்தை ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா சார்பில் அளிக்கப்பட்டுள்ளது. இதை ஐ.நா. சபையும் உறுதி செய்துள்ளது. கரோனா வைரஸை பரவலைத் தடுக்கும் விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பை கடுமையாகச் சாடி வரும் அதிபர் ட்…

  21. லிபியாவில் நிலைமை மோசமடைவதாக ஐ.நா. பொதுச் செயலாளா் எச்சரிக்கை.! லிபியாவில் மோதல் ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைந்துள்ளதுடன், அங்கு வெளிநாடுகளின் தலையீடுகள் முன்னொருபோதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குடரெஸ் நேற்று புதன்கிழமை ஐ.நா. பாதுகாப்புச் சபையை எச்சரித்தார், 2011 ஆம் ஆண்டில் நேட்டோ ஆதரவுடன் முயம்மர் கடாபி ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட பின்னர் லிபியாவில் பெரும் குழப்பங்கள் நிலவி வருகின்றன. 2014 முதல் லிபியா பிளவுபட்டுள்ளது. சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கம் தலைநகரம் திரிபோலி மற்றும் வடமேற்கைக் கட்டுப்படுத்துகிறது, அதே நேரத்தில் இராணுவத் தலைவர் கலீஃபா ஹப்தார் பெங்காசி கிழக்குப் பகுதிகளை ஆ…

  22. அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு: நோயாளிகளால் நிரம்பும் அமெரிக்க மருத்துவமனைகள் -எச்சரிக்கை அமெரிக்காவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், விரைவில் மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பலாம் என்று சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன. பதிவு: ஜூலை 09, 2020 11:12 AM வாஷிங்டன் கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் 2-வது இடத்திலும் உள்ளன. இந்தியா மூன்றாவது இடத்திலும் ரஷ்யா நான்காவது இடத்திலும் உள்ளது. கொரோனா பரவல் நீடித்து வந்தபோதிலும் கடந்த மாதத்தில் அமெரிக்காவில் உணவு விடுதிகள், மதுபானக் கூடங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், தேவாலயங்கள் ஆகியவை டெக்சாஸ், அரிசோனா உள்ளிட்ட மாகாணங்களில் திறக்கப்பட்டன. இதனால் மக்…

  23. ஒரே நாளில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அமெரிக்காவில் கொரோனா அமெரிக்காவில் ஒரே நாளில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். நேற்றையதினம் 60,020 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை காரணமாக அங்கு பல மாநிலங்களை மீண்டும் மூட வேண்டிய நிலையேற்பட்டுள்ளது. இதன் காரணமாக சில தொழிலாளர்களுக்கு ஊதியம் இல்லாமல் போகும் நிலை ஏற்படும். புளோரிடாவில் கிட்டத்தட்ட 10,000 புதிய நோயாளர்களும், டெக்சாஸில் 9,500 க்கும் மேற்பட்ட நோயாளர்களும், கலிபோர்னியாவில் 8,500 க்கும் மேற்பட்ட புதிய நோயாளர்களும் பதிவாகியுள்ளனர். கலிபோர்னியா மற்றும் டெக்சாஸ் ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று அதி…

  24. அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட சிறிது நேரத்தில் ஐவரி கோஸ்ட்டின் பிரதமர் மரணம் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட சிறிது நேரத்தில் ஐவரி கோஸ்ட்டின் பிரதமர் மரணம் அடைந்தார் என நாட்டின் ஜனாதிபதி அறிவித்துள்ளார் பதிவு: ஜூலை 09, 2020 10:07 AM ஐவரி கோஸ்ட் ஐவரி கோஸ்ட்டின் பிரதமர் அமடோ கோன் கூலிபாலி இறந்துவிட்டார் என்று நாட்டின் ஜனாதிபதி அறிவித்தார். ஜனாதிபதி அலசேன் ஓட்டாரா வெளியிட்டு உள்ள இரங்கல் செய்தியில் கூலிபாலியின் மரணம் குறித்து நாடு துக்கத்தில் உள்ளது, ஜனாதிபதி மாளிகையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட சிறிது நேரத்தில் அவர் மரணம் அடைந்தார். 30 ஆண்டு காலம் தனக்கு நெருங்கிய ஒத்துழைப்பாளராக அவர் இருந்தார் "தாயகத்தின் மீது ம…

  25. எல்லைப் பிரச்சனையில்.. இந்தியாவுக்கு ஆதரவாக களமிறங்கிய அமெரிக்கா! இந்திய – சீன எல்லையான கிழக்கு லடாக்கில் இரு நாட்டு படைகளுக்கும் இடையே முறுகல் நிலவி வரும் நிலையில் இப்பிரச்சனையில் இந்திய இராணுவத்துக்குத் துணை நிற்போம் என அமெரிக்க வெள்ளை மாளிகை தலைமை அதிகாரி மார்க் மீடோஸ் தெரிவித்துள்ளார். சமீபத்தில் தொலைக்காட்;சி ஒன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் மேலும் குறிப்பிடுகையில், ‘தென் சீனக் கடல் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் எந்த நாடும் அத்துமீறலில் ஈடுபடுவதை அமெரிக்கா அனுமதிக்காது. அதன் காரணமாகவே விமானம் தாங்கிக் கப்பல்களை தென் சீனக் கடல் பகுதியில் நிறுத்தியுள்ளோம். லடாக் விவகாரத்திலும் இந்திய இராணுவத்துக்குத் துணையாக நிற்போம். உலக நாடுகளிலே வலிமையான இராணுவப் படை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.